Konjam vanjam kondenadi – 20

Konjam vanjam kondenadi – 20

வியப்பின் விளிம்பில்

ஷிவானி பசியின் கொடுமையில் தரையை ஏதோ பெயருக்கென்று  துடைக்க,

“மெல்ல மெல்ல… தரைக்கு வலிக்க போகுது” என்று அவளை பார்த்து கேலி செய்தான் குரு.

அவள் கோபமாக நிமிர்ந்து, “என்ன கிண்டலா?” என்று முறைக்க,

“இல்ல நக்கலு”  என்று சொல்லி எகத்தாளமாய் சிரித்தான்.

அவள் அவனை கோபமாய் நிமிர்ந்து பார்க்க அவன் இறுக்கமான பார்வையோடு, “என்னல பார்க்குதே… தரையை சுத்தமா துடைக்கனும்… உங்க  போஃனை துடைச்சிகளே… அப்படி” என்க,

அவனை கூர்ந்து பார்த்து, “என்ன பழிவாங்கிறிங்களா?!” என்றவள் கேட்கவும் அவன் வஞ்சம் இழையோடிய புன்னகையோடு அவளை பார்த்து கண்ணடித்தான்.

துணியை உதறிவிட்டு எழுந்து நின்றவள்,

“திஸ் இஸ் டூ மச்” என்று இடுப்பில் கை வைத்து கொண்டு மூச்சிறைக்க முறைத்து பார்க்க அவன் வேலை செய்தபடியே அவளை பார்வையாலயே அளவெடுத்தான்.

அவள் அணிந்திருந்த ஸ்லீவ்ஸ் டாப்ஸும் கணுக்கால் தெரியுமளவுக்காய் தூக்கியிருந்த அவள் ஸ்கெர்டும் கொஞ்சம் அவளின் தேகத்தின் நெளிவு சுளிவை பளிச்சென்று காட்ட,

அவன் பார்வையாலேயே தீண்டிய விதத்தில் அவள் உள்ளமெல்லாம் படபடத்தது.

சட்டென்று இடுப்பிலிருந்த தன் கரத்தை இறக்கிவிட்டு மேலாடையை இறுக்கத்தை தளர்த்தி கொண்டு, 

“எதுக்கு என்னை அப்படி பார்க்கிறீங்க?” என்றவள் கேட்க,

“இப்போதைக்கு பார்க்கத்தானே முடியும்” என்றவன் ஏக்கமாய் மூச்சை வெளிவிட்டபடி சொல்ல, அவன் சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை அவள் புரிந்தும் புரியாமல்

“என்ன சொன்னிங்க?” என்று சந்தேகித்து வினவினாள்.

“இல்ல… தோசையை பார்க்கலன்னா தீஞ்சிரும்னு சொல்லுதேன்” என்றவன் சிரித்து கொண்டே சமாளிக்க,

“பொய்” என்று சொல்லி அவனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தாள்.

“சரில… பொய்ன்னு வைச்சுப்போம்… நான் சொன்னதோட அர்த்தம் உனக்கு புரிஞ்சிதுன்னா என்னன்னு நீதான் சொல்றது” என்று கேட்க அந்த நொடி தட்டுத்தடுமாறியவள்,

“அதை விடுங்க… எனக்கு ரொம்ப பசிக்குது மாம்ஸ்… தோசை ரெடியா” என்று பேச்சை தடலாடியாய் மாற்றினாள்.

“ஹ்ம்ம்… ஹ்ம்ம்… ரெடிதான்… வாங்க… வெளியே  போய் சாப்பிடுவோம்… இங்கன ஒரே வெட்கயா இருக்கு” என்றவன் சொல்லவும்

அவளும் ஆர்வமாய் தன் கரத்தை அலம்பி கொண்டு வெளியே சென்றாள்.

அவன் தோசை தட்டை எடுத்து கொண்டு வெளியே சென்று முற்றத்தில் அமர,

நிலவின் வெளிச்சம் தங்குதடையின்றி அந்த இடத்தை பிரகாசிக்க செய்தது.

ஷிவானியோ ஆவல் ததும்ப அந்த தட்டை கரத்தில் ஏந்தி கொண்டவள்

அதனை ஆராய்ந்து பார்க்க,

“சாப்பிடுல” என்றான் குரு.

ஷிவானி அந்த தோசையை பிட்டு ஒரு வாய் வைத்தவள் கொஞ்ச நேரம் அதன் ரூசியில் ஆழ்ந்து மூழ்கிவிட்டு,

“வாவ் வாவ்… எக்ஸ்டிரா ஆர்டினரி டேஸ்ட்… பின்னிட்டீங்க மாம்ஸ்” என்று  புகழ்ந்தாள்.

அவன் புன்னகை ததும்ப, “நிஜமாவால… உனக்கு பிடிச்சிருக்கா?” என்க,

“ரொம்ப நல்லா இருக்கு… ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்லியபடி அவசரமாய் இரண்டொரு உள்ளே தள்ளியவள்,

“நீங்களும் எடுத்துக்கோங்க மாம்ஸ்” என்று அவள் தட்டை அவன் புறம் நீட்டினாள்.

“நீதான்ல பசியாயிருக்க… நீ சாப்பிடு” என்றான்.

“ஆர் யூ ஷுவர்… அப்புறம் நான் தட்டை காலி பண்ணிட்ட பிறகு என்னை கேட்க கூடாது” என்க, அவன் சிரித்த மேனிக்கு,

“நான் உனக்கு மட்டும்தால செஞ்சேன்… நீ சாப்பிடு” என்றதும் அவள் அந்த தோசையை ரசித்து உண்டபடி,

“ஆமா… இதுல என்னலாம் போட்டீங்க?” என்றவள் கேட்க,

“என்னன்ன போட்டிருக்கேன்னு நீயே சொல்லு… அதுவும் நீ வேற சமையல் படிப்பெல்லாம் படிக்கிறவகளாச்சே” என்றதும் அவள் அதனை சுவை பார்த்து ஆழ்ந்த யோசனைக்குள் சென்று,

“ஆ..ன்.. எஸ்… கிரௌன்ட் நட்(வேர்கடலை) போட்டிருக்கீங்க ரைட்” என்றவள் கேட்க,

“ஹ்ம்ம்… அப்புறம்” என்று தலையசைத்தான்.

அவள் மேலும் யோசித்துவிட்டு ஏமாற்றத்தோடு,

“உம்ஹும்…  தெரியல… பட் நல்லா இருக்கு… ஐ லவ் இட்… நீங்க இந்த ரெசிப்பி எப்படினு சொல்லுங்க.. என் காலேஜ் மெட்ஸுக்கெல்லாம் செஞ்சி தரனும்” என்றவள் ஆர்வம் மிகுந்திட கேட்க,

“என்னல… இது போய் பெரிய இந்த ரெசிப்பியா !… கேப்பை, வெல்லம், வேர்கடலை, தேங்காய் அம்புட்டுதான்” என்க,

“கேப்பை?!” என்றவள் குழப்பமாய் அவனை பார்த்தாள்.

“அதான்ல கேழ்வரகு, ராகின்னு சொல்லுவாங்களே… அந்த மாவு எடுத்துக்கிடனும்… வெல்லத்தை தண்ணில போட்டு கரைச்சி மாவில தோசை பதத்துக்கு ரொம்ப கெட்டியாவும் இல்லாம தண்ணியாவும் இல்லாம கலந்துக்கிடனும்… பிறவு… வறுத்த வேர்கடலை எடுத்து அதை உடைச்சி மாவு அளவுக்கேத்த மாறி போட்டுக்கிடனும்… அப்புறம் தேங்காய் உடைச்சி தேவைக்கேத்த மாறி துருவி போட்டுக்கிடனும்… அம்புட்டுதான்…

உங்க ஆச்சி பேத்தி பேரனுங்கெல்லாம் வந்தா இதைதான் செஞ்சி கொடுப்பாக… அவங்க எல்லோரும் இதை சாக்லேட் தோசைன்னு ரொம்ப விரும்பி சாப்பிடுவாக” என்க,  அவள் வியப்பாய் கேட்டபடி

“செம ஐடியா லா… ஆனா இது இவ்வளவு பார்ஸ்ட்டா எப்படி செஞ்சீங்க?” என்று ஆச்சர்யமான பாவனையோடு கேட்டாள்.

“என்னல இது பெரிய வேலையா… மாவு, வெல்லம், வறுத்து கடலை எல்லாம் அடுக்களையில இருந்துச்சு… கல்லு காயிறதுக்குள்ள தேங்காய உடைச்சி மாவில துருவி போட்டு கலந்துப்புட்டேன்” என்ற போது அவள் சாப்பிட்டு முடித்து தண்ணீரை அருந்தியவள்,

“உங்களுக்கு செம டேலன்ட் மாம்ஸ்…  இதை செஞ்சி தந்துக்காக உங்களுக்கு பெரிய ஹக் கொடுக்கனும்” என்றாள்.

“கொடுங்க… நான் என்ன வேணான்னா சொல்லுதேன்” என்று சொல்லி அவளை கூர்மையாய் பார்த்தான்.

அவள் திருதிருவென்று விழித்துவிட்டு, “நான் சும்மா பேச்சுக்கு சொன்னேன்” என்றவள் திணற,

“அதென்ன பேச்சுக்கு… சொன்னா  செய்யனுமாக்கும்” என்றான் அழுத்தமாக!

“ஒய் நாட்… கை கொடுத்து கூடதான் பாராட்டலாம்” என்றவள் தன் கரத்தை நீட்ட அவன் முகம் சுணங்க,

“இப்படி பாராட்டிறதுக்கு நீ என்னைய  பாராட்டாமலே இருக்கலாம்” என்றபடி
  கோபமாய் முகத்தை திருப்பினான்.

“போங்க மாம்ஸ்… எல்லோரும் என்னை டார்ச்சர் பன்றது பத்தாதுன்னு நீங்க வேற” என்று அவளும் முகத்தை கோபமாய் மாற்றி கொள்ள,

“யாருல உன்னை டார்ச்சர் பன்றது?” என்று அதிர்ச்சியாய் வினவினான்.

“அது… நான் உங்ககிட்ட பேசிறதையும் பழகிறதையும் பார்த்து ஐஸ், ராகினி அவங்க சிஸ்டர்ஸ் எல்லோரும் என்கிட்ட முறைச்சிட்டு நிற்கிறாங்க…

ஏன்?  மீ கூட நான் உங்ககிட்ட வரைமுறையில்லாம பழகிறேன்னு என்னை போட்டு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க… அதெல்லாம் புரியாம நீங்க வேற நான் சும்மா வார்த்தைக்கு சொன்னதை பிடிச்சிக்கிட்டு” என்றவள் சலித்து கொள்ள,

“ஓ!! அதான் அக்காவுக்கும் உனக்கும் பிரச்சனையா?!” என்றவன் ஆவல் ததும்ப கேட்க, “ஹ்ம்ம்” என்றாள் ஷிவானி.

அவன் மௌனமாக யோசனையில் ஆழ்ந்துவிட அவள்  வருத்தத்தோடு,

“மீ என்னை பார்த்து நான் உங்ககிட்ட வரைமுறையில்லாம பழகிறேன்னு சொன்னதுதான் எனக்கு ரொம்ப கோபம்… நான் என்ன உங்ககிட்ட அப்படியா பழகிறேன்” என்றவள் கேள்வியாய் பார்க்க,

“சேச்சே” என்றவன் மறுதலித்தான்.

பின் அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்வன்,  “வேதா க்கா அப்படி சொல்லி இருக்க மாட்டாக சிவானி… கனகா க்காதான் உன்னைய பத்தி அப்படியெல்லாம் ஆவலாதி சொல்லி இருப்பாக” என்றான்.

“வாட் ஆவலாதியா?”

“ப்ச்… குறை சொல்லியிருப்பாகன்னு சொன்னேன்”

“ஏன் சித்தி என்னை பத்தி குறை சொல்லனும்?”

“எனக்கு ராகினியை கட்டி வைக்க ஆசைப்படிறாகல… அதான் நீ என்கிட்ட பழகிறதை பத்தி குறை சொல்லியிருப்பாக”

சற்று நேரம் யோசித்தவள், “ராகினியை உங்களுக்கு கட்டி வைக்கனும்னு ஆசைப்படிறது நல்ல விஷயம்தானே” என்றவள் புன்னகையோடு சொல்ல அவனுக்கு ஏகபோகமாய் கோபம் ஏறியது.

“விடிய விடிய ராமாயாணம் கேட்டிட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம்”

என்று சொல்லி குரு அலுத்தபடி தலையிலடித்து கொள்ள,

“இப்ப என்ன சொல்ல வர்றீங்க ? எனக்கு புரியல” என்றாள் அவள்.

“அப்படியே புரிஞ்சிட்டாலும்… உனக்கு நேரடியா சொன்னாலே விளங்கல… இதுல இப்படி எல்லாம் சொன்னா எங்கிட்டு புரியும்”

“என்னைய ட்யூப் லைட்னு சொல்றீங்களா?”

“சேச்சே… அது மினுக் மினுக்கின்னு கொஞ்ச நேரங் கழிச்சாவது எரிஞ்சிடும்ல” என்று குரு சொல்ல

“போங்க மாம்ஸ்… என்னை நீங்க ரொம்ப டீஸ் பன்றீங்க… நான் ரூமுக்கு போறேன்” என்றவள் கோபித்து கொண்டு எழுந்து செல்ல,

“உனக்கு எது வருதோ இல்லையோ கோபம் நல்லா வருதுல” என்றான் குரு.

அவள் அந்த நொடி கோபமாய் அவன் புறம் திரும்பி நின்றவள், “உங்களுக்கு மட்டும் கோபம் வரலியோ… என் டேட் கூட என்னை அடிக்க கை ஓங்கினதில்ல.. ஆனா நீங்க”  என்றவள் சொல்ல,

“நீ செஞ்சது தப்பில்லையா ஷிவானி?” என்று அமர்த்தலாகவே கேட்டான்.

“தப்புதான்… நான் அதுக்காக மீ கிட்ட எவ்வளவு சாரி கேட்டேன் தெரியுமா?”

“நான் கூட உன்கிட்ட மன்னிப்பு கேட்டேன்ல”

“எப்போ?!”

“உங்க ரூம்ல டேபிள் பேஃன் மாட்டிவிட்டேனே அப்போ” என்றாள்.

“அதெப்போ”

“நீ காத்து வராம புரண்டு புரண்டு படிததீயே அப்போ” என்க,

“போதும் மாம்ஸ்… நான் தூங்கிட்டிருக்கும் போது மன்னிப்பு கேட்டீங்க… அப்படிதானே”

“பரவாயில்லையே… சரியா பிடிச்சிக்கிட்டீக” என்றதும் அவனை விழிஇடுங்க பார்த்தவள்,

“உங்ககிட்ட எல்லாம் பேசி ஜெயிக்க முடியாது… அன் ரூம்ல பேஃன் போட்டதா சொன்னிங்க இல்ல… தேங்க்ஸ்” என்று சொல்ல,

“நாளைக்கு ஏர் கூலர் எடுத்துட்டு வர சொல்லியிருக்கேன்… அப்புறம் ஒண்ணும் பிரச்சனையில்லை” என்றான்.

“எதுக்கு மாம்ஸ்?… நான்தான் ஒன் வீக்ல போயிட போறேனே… அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்” என்று இயல்பாகவே உரைக்க அந்த வார்த்தை அவனை ரொம்பவும் காயப்படுத்தியது.

‘நீ என்னைய விட்டு போக்கூடாது சிவாணி… உன்னைய நான் எங்கயும் அனுப்ப மாட்டேன்’ என்றவன் எண்ணமிட்டு கொள்ள ஷிவானி அவன் சிந்தனை ஓட்டத்தை அறியாமல்,

“அப்புறம் ஒரு சின்ன சஜஷன்… இந்த வீட்டை நீங்க ஆல்டிரேஷன் பண்ண கூடாதா?… ரொம்ப ஓல்ட் ஸ்டைலா இருக்கே” என்றாள்.

“இப்போதைக்கு அதை மட்டும் முடியாது” என்க,

அவள் குழப்பமான பார்வையோடு, “ஏன் பிஃனேஸ்ஸியலா ஏதாச்சும் பிராப்ளமா?” என்றவள் கேட்க,

“காசு பத்தியெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல… இந்த வீட்டை அந்த காலத்தில எங்க தாத்தா ரொம்ப சிரமப்பட்டு  பார்த்து பார்த்து கட்டினாகளாம்… அவக வீட்டுக்காரு நியாபகம்னு ஓயாம சொல்லிட்டு கிடப்பாக…  அவக இந்த வீட்டு மேல உசிரையே வைச்சிருக்காங்க சிவாணி…  அவக உயிரோட இருக்கிற வரைக்கும் நான் இந்த வீட்டில இருந்து ஒரு செங்கல்லை கூட பிரிச்சி எடுக்க  மாட்டேன்” என்றவன் தீர்க்கமாக சொல்ல ஷிவானி அவனை பார்த்து வியப்பின் விளிம்பிற்கே போனாள். 

அவள் மௌனமாய் அவனை மூழ்கடிப்பது போல் ஓரு பார்வையை பார்க்க, “ஷிவானி” என்று குரு அழைக்க அவள் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு அவனை பார்த்து புன்னகையித்தாள்.

“என்னல” என்றவன் கேட்க,

“உம்ஹும்” என்று வார்த்தைகள் வராமல் திகைப்புற்றாள்.

அவள் மனம் காந்தமாய்  அவன் புறம் ஈர்க்கப்பட குரு அவளை சிந்தனை ஓட்டத்தை தடையிட்டு,

“ஆமா… உன்கிட்ட கேட்கனும்னு நினைச்சேன்…வந்தனைக்கு அதை சமைக்கிறேன் இதை சமைக்கிறேன்னு ஜம்பமா  பேசினவ… இப்ப என்னல…  மறந்திட்டீகளா?” என்றவன் வினவ,

“யார் மறந்தா? நான் சமைக்க ரெடியாதான் இருக்கேன்… ஆனா நான் சமைக்கிற ரெசிப்பிக்கு சில முக்கியமான ஐட்டம்ஸெல்லாம் வேணும்… அதெல்லாம் இங்க கிடைக்குமா?”

“ஏன்? இந்த திருநெல்வேலி ஜில்லால கிடைக்காதா என்ன? நீ காலையில லிஸ்ட்டை மட்டும் போட்டு கொடுல… மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிடுதேன்” என்க,

“சூப்பர்… அப்போ நாளைக்கே நான் குக் பன்றேன்” என்றவள் ஆர்வமாய் சொல்ல,

“நல்லா சமைப்பீக இல்ல” என்று சந்தேகமாய் கேட்டான்.

“ப்ச்… நீங்க நாளைக்கு பாருங்களேன்” என்றவள் சொல்லிவிட்டு தன் அறை நோக்கி சென்றுவிட, குருவும் மனமெல்லாம் அவள் நினைவில் ஆழ்ந்தபடி படுக்கையில் வந்து தலைசாய்த்து கொண்டான்.

இவர்களின் உரையாடலில் கடைசி சில வாக்கியங்களை தூக்ககலக்கத்தில் கேட்ட ராகினி கடுப்பானாள்.

‘சமைச்சி என் மாமனை வளைச்சி போட பார்க்கிறீங்களா? இருக்கட்டும்… எப்படி நீங்க நல்லா சமைச்சிடுவீங்கன்னு நானும் பார்க்கிறேன்”

*******

ஷிவானியிடம் குரு வீம்பாய் சொல்லிவிட்டானே ஒழிய அவள் சொன்ன பொருட்களை எல்லாம் வாங்குவதற்கு பெரும்பாடாய் போனது. மெஸ்ஸிற்கு கூட அவன் இந்தளவுக்கு அலைந்து திரிந்து வாங்கியது கிடையாது.

அந்தளவுக்கு புதுவகையான சாஸ், மசாலா என்று பைஃவ் ஸ்டார் ஹோட்டல் உபயோக பொருட்களை எல்லாம் எழுதி அவனை திணறடித்திருந்தாள்.

இவன் பட்டது போதாது என்று சுப்புவும் குருவோடு சேர்ந்து அலைந்து திரிந்தான். இதற்கெல்லாம் பிரதி உபகாரமாய் அவன் கேட்டது, “எனக்கும் சேர்த்து சமைக்க சொல்லுவே… நானும் சாப்பிட வருவேனாக்கும்… இந்த பொருளை எல்லாம் நானும் எம்புட்டு சிரமப்பட்டு வாங்கி கொடுத்திருக்கேன்” என்று சொல்ல,

“உன்னைய யாருல வர வேணாம்னு சொன்னா…  வால…  ஆனா சாப்பிடிறதை தவிர வேறெதாச்சும் கோக்குமாக்கு வேலை பண்ணியோ… வகுந்துபுடிவுனாக்கும்” என்று எச்சரித்து அனுமதி வழங்கினான்.

சுப்புவும் பூம்பூம் மாடு போல தலையை அசைத்து வைத்தாலும் அவன் ஆழ் மனதில் ஐஸ்ஸை பார்க்கும் ஆசைதான் அதீதமாய் இருந்தது. ஆனால் இந்த ஆசைக்காக அவன் கடந்து வர போகும் பெரும் சோதனையை குறித்து அறிவானா?

அன்று ஷிவானியின் சமையல் என்று எல்லோரும் எதிர்பார்ப்போடு காத்திருக்க வேதா மட்டும் பதைபதைப்போடு இருந்தார்.

அவள் போட்டு வைத்திருந்த மெனு லிஸ்ட்டை பார்த்து வேதாவிற்கு உலகம் தலைகீழாய் திரும்பியது. அவள் ஒரு டிஷ் செய்தாலே உலகம் தாங்காது. இதில் இத்தனையா?

சபரி போல எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் யார் இருக்க முடியும்? மகளுக்காக அவர் எதையும் சகித்து கொள்வார். ஆனால் மற்றவர்கள் அப்படி இருப்பார்களா?

இப்படி ஒரு மோசமான சூழலில் ராகினியோ ஷிவானியுடன் வெகு ஆர்வமாய் கை கோர்த்து உதவி செய்வதாக களத்தில் இறங்கினாள். கூட ஐஸ்ஸும் துணைக்கு.

அவள் சமையல் ருசியை எப்படியாவது கெடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வகோளாறின் காரணமாக  ஷிவானிக்கு ஐஸ்ஸும் ராகினியும் உதவி புரிய, இந்த விபரீதமான விளையாட்டின் முடிவை யார் கணிக்க முடியும் ?

error: Content is protected !!