KP 10

KP 10

கதம்பவனம் – 10

அழகு சோலையில் இன்று நானும் ஓர் அங்கம் என்பது போல் அந்தக் காலை வேளையில் தலைக்குக் குளித்துப் புத்தம் புது மலராக வந்தாள் விமலா,பங்கஜத்தின் கண்கள் எதிர்பார்ப்பில் மின்னுவதைப் பார்த்தாலும் கண்டு கொள்ளாமல் பூஜை அறை சென்று வணங்கியவள் அடுக்கலைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் வருகைக்காகவே காத்திருந்த நால்வரும் அவளைச் சூழ்ந்து கொண்டனர்,அதில் மாதங்கியும் அடக்கம்,”ஏய்,விமலா நல்ல தூங்கினியாடி”,ஆவலுடன் கேட்ட தன் தமக்கைக்கு ஒரு புன்னகை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.

“என்னடி சிரிக்குற”,மாதங்கி கடிந்து கொள்ள,சீதா ,”விடுங்க அக்கா சின்னப் பொண்ணு வெட்க படுறா “,

சீதாவை நோக்கி,’நானு வெட்கம்’ என்பது போலப் பார்த்து வைத்தாள் விமலா.

சீதாவோ,’இவ அக்கா கிட்ட இருந்து இவள காப்பாத்த நாம சொன்னா,என்ன எகத்தாளம்மா பாக்குற பாரு’விமலாவை பார்த்து முறைக்க ,கண் சிமிட்டி சிரித்தாள் விமலா.

இவர்கள் கூடி இருப்பதை ரசனையாகப் பார்த்துக் கொண்டு இருந்தார் சுந்தரம்,பின்பு தெளிந்தவராக,”ஏம்மா,மாட்டு பொண்ணுங்கள இந்த மாமனாருக்குக் கொஞ்சம் காப்பிக் கிடைக்குமா”,பேச்சு அவர்களிடம் இருந்தாலும் பார்வை சின்ன மருமகளிடம் இருந்தது,விமலாவின் கையில் காப்பிக் குடிக்கத் தான் அவள் எழும் வரை அமைதி காத்தார்.

விமலாவோ அவரைக் கண்டு கொள்ளாது காப்பியை கலந்து அவரிடம் செல்லுவது போலச் சென்று,அவர் வாய்க் கொள்ளப் புன்னகையுடன் கையை நீட்ட,அவரை தாண்டி தனது கணவனுக்கு எடுத்துச் சென்றாள்,கையில் உள்ள மிட்டாயை களவாடி சென்றது போல முகத்தை வைத்துக் கொண்டு அமுதாவை பார்க்க,சிரித்தவாறே அவர் கையில் காப்பியை திணித்தாள்.

“என்னதான் இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு ஆகாது மாமா”,அமுதாவின் கூற்றில் நிமிர்ந்து பார்த்தவர் ஏதும் அறியா பிள்ளை போல,”ஏன்ம்மா,அப்புடி சொல்லுற”.
“கல்யாணம் ஆகி இத்தனை வருசத்துல நீங்க அடுப்பங்கரைக்கு வந்து நான் பார்த்ததே இல்லை,ஏன் சீதாக்கா உங்களுக்குப் பார்த்த மாதிரி நியாபகம் இருக்கு “.

“இல்லையே அமுதா,திண்ணையும்,கொள்ளையும் தான் மாமாக்கு தெரியும் நெனச்சேன்”,ஏன் தாமரை உனக்கு ?………..

ஹ்ம்ம்………….இடமும்,வலமுமாக மண்டையை ஆட்டியவள்,”மாமாக்கு அத்தை காப்பிப் போட்ட தான் புடிக்கும்,அதுவும் ஆறு மணிக்குக் காப்பிக் குடிக்காட்டி தெய்வ குத்தம் ஆகிடுமுன்னு நெனச்சேன்,ஆனா பாருங்க விடிஞ்சு எட்டு மணி ஆகியும் மாமா காப்பிக் கேட்கலைன்னு யோசுச்சுகிட்டு இருந்தேன்”,தாமரையின் பங்குக்கு அவளும் சுந்தரத்தை வார,

நீயுமா! என்பது போல் தாமரையைப் பார்த்தார் சுந்தரம்,தனது கணவனைக் கேலி செய்யும் மருமகளையும்,அவர்களிடம் வசமாக மாட்டி கொண்டு முழிக்கும் தனது கணவனையும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தார் பங்கஜம்.

இவர்கள் பேசுவதைக் காதில் வாங்காது தனி உலகில் சஞ்சரிப்பது போலக் கணவனுக்கும்,குழந்தைகளுக்கும் தேவையான காப்பியை கலந்து கொண்டு இருந்தாள் மாதங்கி,அவளுக்கு மனதுக்குள் அத்தனை மகிழ்ச்சி தனது தங்கையும் தன்னைப் போலத் தான் என்று எண்ணி கொண்டாள்,சுந்தரத்திடம் அவள் அலட்சியம் காட்டுவது போல் தனது தங்கையும் நடந்து கொண்டது,காபியை தனது அறைக்கே எடுத்துச் சென்றது எல்லாவற்றையும் எண்ணி அவள் மனது வேகமாகத் தப்பு கணக்கு போட்டது.

அங்கு ராஜாவின் அறையில் அவனையே பார்த்தவாறு நின்று கொண்டு இருந்தாள் விமலா,அவன் தன்னை அனைத்துக் கொண்டு உரிமையாகத் தூங்கியது பிடித்தம் என்றாலும்,அதற்கு முன் அவன் பேசியதெல்லாம் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,அதுவும் தன் மீது நம்பிகை இல்லை,நம்பிக்கை வந்தவுடன் உன்னுடன் என் வாழ்க்கையின் தொடக்கம் என்று பேசியதை எண்ணி இப்போதும் கோபம் உச்சம் தொட்டது.

‘நம்பிக்கை இல்லாதவர் பின் எந்த நம்பிக்கையில் தன்னைத் திருமணம் செய்து கொண்டாராம்’,மனம் முரண்டியது நேரம் செல்வதை உணர்ந்தவள்,”என்னங்க எழுந்திரிங்க காப்பி”,

கனவில் இருந்து முழிப்பவன் போல் எழுந்தவன்,தன் முன் நிற்கும் விமலாவை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு பின்பு தான் அந்தக் கோப்பையை வாங்கினான்,பொறுமையாக அதனை குடித்தவன் ,”இனிமே ரூமுக்கு எடுத்துட்டு வராத,வெளில எல்லாரும் ஒன்னாதான் உட்காந்து குடிப்போம்”,அடுத்து அவன் பேசவதற்குள்.

“ஐயாவுக்கு ரொம்ப ஆசைதான்,முதல் நாளே வெளில வர சங்கடமா இருக்கும் கொண்டு வந்தேன்,நாளைல இருந்து அங்க தான்”.

“சங்கட படுற அளவுக்கு எதுவும் நடக்கலையே”,குறும்பாக அவள் முகம் பார்த்து வினவ.

அவனைப் பார்த்து பல்லை கடித்தாள்,அதற்கெல்லாம் அசரூபவன என்ன அவளைத் தனது தோளால் இடித்துக் கொண்டு குளிக்கச் சென்றான்.

அவன் இடித்த இடம் வலி கொடுக்க,ஹா……..கத்தியவள் எரும மாடு எரும மாடு தீட்டி கொண்டே வெளியில் வந்தாள்.

அதன் பின் இருவருக்கும் சண்டை போட கூட நேரம் கிட்டவில்லை பாவம்,திருமணத்திற்கு வர முடியாத சொந்தங்கள் சிலர் வீட்டில் வந்து பார்த்துவிட்டு சென்றனர்,ராஜன் அலுவலகத்தில் இருந்தும் ஆண்கள் பெண்கள் எனச் சுமார் பத்து பேருக்கு மேல் இருந்தனர்,அதில் மேனகா என்னும் பெணின் பார்வை அவ்வப்போது ராஜனை ஏக்கமாகத் தொட்டு மீண்டது.

பெண்களின் கண்கள் ஸ்கேனர் போன்றது அல்லவா,அவர்கள் ஊடுருவும் பார்வை யாரும் அறியாத வண்ணம் கவனித்துக் கொண்டு தான் இருந்தது,விமலா,யாரையோ முறைத்து பார்ப்பதை கண்ட ராஜன்,புருவ முடுச்சுடன் அவள் பார்வை சென்ற தீக்கை பார்க்க அங்கே மேனாக அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்,இவ வேற என்று மனதுக்குள் சலித்தாலும் விமலாவை சீண்டும் பொருட்டு அவளிடம் கொஞ்சம் அதிகமாகத் தான் பேசினான்.

இவர்கள் விளையாடும் நீயா நானா போட்டியில் பயந்து சாவது என்னமோ சீதா,அமுதா,தாமரை தான்,எங்கே மாதங்கிக்கு தெரிந்தாள் ஈரை பேனாக்கி பேனை பெருச்சாளி ஆகிவிடுவாள் என்ற பயம்.

தாமரை மெதுவாகச் சீதாவின் காதில்,”அக்கா இதுங்க இரண்டும் பண்ணுறதா பார்த்த சரியா படல”.

“எனக்கும் அதாண்டி தோணுது,கல்யாணத்துக்கு முன்னாடி கரடியா கத்துனோம்,மண்டைய மண்டைய இரண்டும் நல்ல புள்ள மாதிரி உருட்டிட்டு ,இப்போ என்னடானா மல்லுக்கு நிக்குதுங்க”.

“அக்கா வந்துவுங்க போகட்டும்,விமலாவை தனியா கூப்டு கேட்போம்”,அமுதா கலவரமாகச் சொல்ல.

“நீ வேற அமுதா,மாதங்கி அக்கா கண் கொத்தி பாம்பாட்டம் பார்த்துகிட்டே இருக்காங்க,மறு வீட்டு விருந்து முடியட்டும்,கண்ணா அத்தானும்,மாதங்கி அக்காவும் ஊருக்கு போறாங்க அப்போ பேசலாம்.

அதுவும் சரிதான்,மூவர் குழுவும் ஒன்றாகச் சேர்ந்து முடிவு செய்தனர்,திருமணம் உறுதி செய்த நாள் முதல் படப் படப்பாக இருப்பது இவர்கள் மூவரும் தான்,இன்னும் இரு ஜீவன்களும் உண்டு ஆனால் வெளிப்படுத்தாமல் மனதுக்குள் போட்டுக் கொண்டு மருகினர்.
வெளியில் மூவரும் தங்கள் வாழ்க்கைக்காகப் போராட,அதன் பாதிப்பு எதுவும் இல்லாதது போல விமலா ஒரு புறம் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்க,ராஜன் ஒரு புறம் நோட்டை வைத்து எழுதி கொண்டு இருந்தான்,அவன் வேலை முடியும் வரை அந்த அறையின் விளக்கு எரிந்தது,அவன் வேலை முடிந்தவுடன் அனைத்து விட்டான்,அதில் கோபம் கொண்ட விமலா,”படுச்சுக்கிட்டு இருக்கேன்ல கண்ணு தெரியல”,கோபமாகக் கத்த.

அமைதியாக விடி விளக்கை போட்டவன் “என்ன தேர்வுக்கு அம்மையார் படிக்கிறிங்க”எகத்தாளமாகக் கேட்க வாய்யை இறுக்க மூடிக்கொண்டாள்,பின்ன அவள் படித்தது ராணி மாத இதழ் புத்தகம் அல்லவா,அவனை முறைத்த வாரே விடியட்டும் இதுக்கு வச்சுக்குறேன் எண்ணியவள் சமத்தாகத் தூங்கி போனாள்..

துயில் கொண்டு இருக்கும் இருவரின் வாழ்வை எண்ணி தூக்கம் கேட்டு தவித்தவர் அங்கு ஐவர் …………

error: Content is protected !!