KS 28

KS 28

காதல் சன்யாசி 28

உயிர் உறவில் திளைத்திருந்த இளம் ஜோடி புறாக்களின் நாட்கள் இன்பத்தேன் தெளிப்போடு இனிமையாய் உருண்டோடிக் கொண்டிருந்தன.

என்றுமே தன்னால் மறக்கவே முடியாது என்று எண்ணியிருந்த அவளின் கடந்தகால வலிகள் அனைத்தும் அந்த மாயக்காரனின் அருகாமையிலும் அன்பிலும் ஒன்றுமில்லாமல் விலகி போனதை அதிசயமாய் உணர்ந்தாள் அவள். தமிழ்ச்செல்வியின் மனக்காயங்கள் எல்லாம் தடம் தெரியாமல் மறைத்து போயிருந்தன.

வாழ்க்கையை வாழ்வது என்பதற்கான முழுமையான அர்த்தத்தை காதல்காரன் தன் மனையாளுக்கு சலிக்காமல் கற்பித்துக் கொண்டிருந்தான்.

இப்போதெல்லாம் ராகுல் கிருஷ்ணனின் பார்வையிலும் செயல்களிலும் அத்தனை மிதப்பும் உற்சாகமும் மிகுந்து இருந்தது.

வேண்டாமல் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலை பெருத்த சேதமின்றி நிதானமாக மீட்டெடுத்த சந்தோச களிப்பு அவனிடம் தொற்றிக் கொண்டது.

அதோடு தன் நிழல் தீண்டவும் அனுமதிக்காமல் விலகி நின்றவள், இப்போதெல்லாம் தன் நுனிவிரல் தீண்டலில் உருகி கைச்சேரும்போது, ஏதோ மூன்று உலகங்களையும் தனித்து வென்று விட்ட அத்தனை உற்சாகம் அவனுக்குள் ஆர்ப்பரித்தது.

தன்னவளோடு திளைக்க திளைக்க காதல் செய்து சலிப்பு தட்டவில்லை இந்த காதல்காரனுக்கு.

ராகுல், தமிழிடையேயான அன்பை தெளிந்த பிறகு நிவேதாவின் மனக்கலக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி இருந்தது.

பழைய நினைவுகளை மறந்து தன் கம்பெனி வளர்ச்சியில் முழு மூச்சாக செயல்படலானாள். அவளின் உழைப்பிற்கும் சிறந்த பலன்கள் கிடைக்கப் பெற்றன.

அன்றைய நிகழ்விற்கு பிறகு தமிழ்ச்செல்வி நிவேதாவை சந்திப்பதை தவிர்த்திருந்தாள். ஏதோ விவரிக்க இயலாத குற்றவுணர்வு அவளுக்குள் நெருடிக் கொண்டிருக்க, ஒரு வாரம் முழுவதும் வேலைக்கும் செல்லவில்லை.

அடுத்த வாரம் பொறுமை இழந்து நிவேதா அலைப்பேசியில் தமிழிடம் தற்போதைய தன் மனநிலையை உரைத்ததோடு எந்தவித சங்கடமும் இன்றி வேலைக்கு வருமாறு கட்டளையும் பிறப்பித்தாள்.

சங்கடங்கள் விலகி போக தெளிந்த மனநிலையில் நாட்கள் நகர, ஒரு பெரிய கம்பெனியுடன் தொழில்முறை ஒப்பந்தம் இட நிவேதாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.
இவளை பொருத்தவரை இந்த வாய்ப்பு அவளின் தொழில் வளர்ச்சியில் மைல்கல் எனலாம்.

இருமடங்கு உற்சாகத்தோடு நிவேதா தொழிலில் ஈடுபாடு செலுத்தினாள். அவள் எட்டப்போகும் உயரம் அவளின் உத்வேகத்தை கூட்டி இருந்தது.

# # #

அவளின் தளிர் முகம் முழுவதும் பூரிப்பும் புன்னகையும் நிறைந்து வழிய, அவன் முன் வந்தாள் நிவேதா.

“ஹாய் ஈஸ்வர், உங்களை நேர்ல சந்திச்சதுல ரொம்ப சந்தோசம்” என்று உற்சாகமாய் அவனிடம் கைகுலுக்கினாள்.

ஓர் அழுத்தமான புன்னகையை உதிர்த்தவன், “நைஸ் டூ மீட் யூ மிஸ் நிவேதா” என்று அவள் இறுக்கையை கைகாட்டி விட்டு அவளெதிரில் அமர்ந்து கொண்டான் விபீஸ்வர்.

நிவேதாவின் பார்வை அந்த இடத்தை ஒருமுறை சுற்றி வந்தது.

பனிவிழும் இரவில் அவர்கள் இருவர் மட்டும் அமர திறந்த சிறு குடிசை போன்ற அமைப்பு புது ரசனையாக தோன்றியது அவளுக்கு.

ஆனாலும் ஒரு வியாபார ஒப்பந்தத்திற்கு இது போன்ற இடத்தில் சந்திப்பை வைத்தது ஒருவேளை அவன் பாணியாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டாள்.

அவன் முகம் பார்க்க, ஈஸ்வரின் பார்வை இவளை தான் அளவெடுத்து கொண்டிருந்தது.

‘இவன் ரொம்ப அழுத்தமான ஆளா இருப்பான் போல, இருக்கலாம், இல்லன்னா இவ்வளவு சின்ன வயசுல தொழில்ல இவ்வளவு முன்னேறி இருக்க முடியாது’ என்று அவனை கணிக்க முயன்றவள்,

“உங்களை பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கேன். ஆனா இப்ப தான் உங்களை நேர்ல சந்திக்கிறேன்” என்றாள்.

ஈஸ்வர் என்ற பெயரே அவர்களின் தொழில் வட்டத்தில் தனித்துவமான இடத்தை பிடித்திருந்தது. அதோடு தன் துறையில் சாதனைகள் புரிந்து வெற்றி வாகை சூடியவன் என்ற வகையில் அவன் மீது இவளுக்கு ஈர்ப்பும் இருந்தது.

இப்போது அவனுடனே தொழிலில் கைக்கோர்க்கும் வாய்ப்பு தானாய் தேடி வந்ததில் மிகுந்த உற்சாகத்தில் இருந்தாள்.

“ம்ம் நான் உன்ன பல இடத்தில பார்த்திருக்கேன். பட் பேசறது இது தான் முதல் முறை இல்லையா” என்றான் அவன் நேர் பார்வையாய்.

முதல் சந்திப்பில் எடுத்தவுடன் அவனின் ஒருமை அழைப்பு, நிவேதாவை சற்று துணுக்குறச் செய்தது.

மெலிதாய் புன்னகை சிந்தியவள், “உங்க கம்பெனி பிஸ்னஸ் டீலிங் கிடைச்சது எனக்கு பெருமையான விசயம்” என்று தன் கையிலிருந்த கோப்பினை அவனிடம் நீட்ட, அதை வாங்கியவன், தனது கோப்பினை அவளிடம் தந்தான்.

இருவரும் சற்று நேரம் காகிதங்களை புரட்டி பார்த்தனர்.

அவளிடம் மெச்சலான பார்வையை தந்தவன் அதில் உடனே கையெழுத்திட்டான்.

நிவேதாவிற்கு ஆச்சரியம் தான் எந்த வித விளக்கமும் கேட்காமல் அவன் கையெழுத்திட்டது.

அவன் தந்த காகிதங்களும் தெளிவாக இருந்தன மறு கேள்விக்கு வாய்ப்பின்றி. அவளும் மெல்லிய புன்னகையுடன் கையெழுத்திட்டாள்.

“நம்ம புதிய தொடக்கம் வெற்றி ஆகட்டும்” என்று ஈஸ்வர் சொல்ல, இருவரும் பழச்சாற்றை பரிமாறிக் கொண்டனர்.

நிறைவான மனதுடன் அவர்கள் விருந்து முடிய, “லெட்’ஸ் டான்ஸ்…” ஈஸ்வர் இயல்பாய் கேட்கவும் அவளும் தயக்கமாய் சம்மதம் தந்தாள்.

மிதமான இசையை கசிய விட்டவன், அவள் மென்கரம் கோர்த்து இலகுவான அசைவுகளில் நடனமாட தொடங்கினான்.

இது போன்றவை வழக்கமானவை தான் என்றாலும், தனிமையில் ஓர் ஆணுடன் சேர்ந்து ஆடுவது அவளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

அவள் அசைவுகள் தாளம் தப்பி போக, அவள் மெல்லிடை பற்றி அவளை நேர் நிறுத்தியவன், “சிம்பிள் டான்ஸ், இதுலயே என்கூட உன்னால ஒத்து போக முடியல. லைஃப் லாங் எப்படி என்னோட அட்ஜஸ்ட் ஆக போறியோ?”

ஈஸ்வர் அமர்த்தலாய் அலுத்து கொள்ள, நிவேதா அவன் சொல்வது புரியாமல் விழித்தாள்.

“லைஃப் லாங்னா? புரியல!”

“உனக்கு புரியணும்னு அவசியம் இல்ல விடு” அவன் விட்டத்தியாக சொல்ல, அவனிடமிருந்து விலகி நின்றவள்,

“மிஸ்டர் ஈஸ்வர், நாம பிஸ்னஸ் கான்ட்ராக்ட்காக வந்திருக்கோம். ஞாபகத்தில வச்சு பேசுங்க.”

” யூ நோ டியர், எனக்கு பொண்ணுங்கன்னா சுத்தமா பிடிக்காது. என்ன பொறுத்தவரைக்கும் உங்க மனசெல்லாம் பச்சோந்தி இனத்தை சேர்ந்தது. மாறிட்டே இருக்கும்” ஈஸ்வர் அலட்டிக்கொள்ளாமல் பேச,

“மிஸ்டர் மைன்ட் யுவர் வேர்ட்ஸ்” நிவேதா காட்டமாக எச்சரித்தாள்.

“கூல் டியர், கொஞ்ச நாளா இந்த எண்ணத்தில இருந்து ஒருத்தி என்னை வெளியே இழுத்துட்டு வர டிரை பண்ணிட்டு இருக்கா, அவ யாருன்னு சொல்லவா?”

அவன் அவளிடம் வார்த்தைகளில் விளையாடி கொண்டிருக்க, நிவேதா அவனை ஆழமாய் பார்த்து நின்றாள்.

“மிஸஸ் நிவேதா விபீஸ்வரன்…! நீ தான் டியர்.”

“என்ன உளறீங்க?” நிவேதா ஆத்திரமாக கேட்டாள். இதுவரை யாரும் அவளிடம் இவ்வாறு வாய் கொழுப்பு காட்டியதில்லை.

“இந்த உளறல், திணறல் எல்லாம் என் அகராதியிலேயே இல்ல ஸ்வீட் ஹார்ட், யோசிக்காம முடிவு எடுக்க மாட்டேன். எடுத்த முடிவுல இருந்து எப்பவும் மாற மாட்டேன்.”

“…”

“இனிமே என் பிஸ்னஸ் பார்ட்னர் மட்டும் இல்ல. என் லைஃப் பார்டனரும் நீ தான் குலாபி” அவன் உறுதியாக சொல்ல,

“ஹலோ, இதுல நானும் என் முடிவை சொல்லணும்” நிவேதா இடைமறித்தாள்.

“ம்ம் சொல்லு”

“என்னால உங்க ப்ரொபோசலை ஏத்துக்க முடியாது சாரி” நிவேதா சாதாரணமாய் மொழிந்து தோள் குலுக்கினாள்.

“ம்ம் நிறைய பேரோட ப்ரொபோசலை ரிஜைக்ட் பண்ணி இருப்ப போல, இவ்வளோ கூலா சொல்ற. ரொம்ப அழகா இருந்தா இதுவொரு இரிடேட்டிங் வேலை இல்ல.”

“…”

“பட் என்கிட்ட உனக்கு ஒரேயொரு ஆஃப்சன் தான் கிடைக்கும் குலாபி, அது எஸ் மட்டும் தான். ஓகே” அவன் தன் தரப்பில் உடும்பு பிடியாக பேச,

“டோன்’ட் கால் மீ குலாபி, ஷிட்” நிவேதாவின் பொறுமை பறந்தது விட எரிச்சலாக சொன்னாள்.

“ம்ம் எனக்கு இந்த செல்ல பேர் எல்லாம் வச்சு கூப்பிட தெரியாது டியர். உன்ன முதல் முதலா பார்க்கும் போது அழகான ரெட் ரோஸ் மாதிரி தெரிஞ்ச, அதான் குலாபி.”

அவன் அலட்டிக்கொள்ளாமல் அவளிடம் வம்பு வளர்த்து கொண்டிருக்க, “என்னை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?” நிவேதா அவனை கண்டித்தாள்.

“உன்ன நான் முதல் முறை பார்த்தது மேரேஜ் பங்க்ஷன்ல தான். ஐ மீன்ட் மிஸ்டர் அன் மிஸஸ் ராகுல் கிருஷ்ணன் மேரேஜ்ல…!”

“…?”

அவன் பதிலில் நிவேதாவை திகைக்க செய்தவன், “நான் உள்ள வரும் போதே காரசாரமா பிரச்சனை போயிட்டு இருந்தது. சும்மா வேடிக்கை பார்த்த எனக்கே புரிஞ்சது. அங்க நடக்கறது யாரோ பிளே பண்ற சீப்பான டிராமான்னு. அதை கூட புரிஞ்சிக்காம நீ பேசனதை பார்த்ததும் இந்த உலகத்தில முதல் முட்டாள் நீதான்னு தோணுச்சு அப்ப எனக்கு.”

“…”

“ராகுல் கிருஷ்ணனோட தைரியம், அந்த கெத்து, அப்பவே கைதட்டணும்னு தோணுச்சு ஆனா, உன் கண்ணுல உயிர் வலியோட நீ கலங்கி உக்கார்ந்துட்ட பாரு. ப்ச் எனக்கு பாவமா இருந்தது. அப்பவே அங்கிருந்து கிளம்பிட்டேன்!”

“…!”

“அப்ப அப்ப உன்னோட கலங்கின முகம் என் கண்முன்ன வந்து இம்சை பண்ணும், ஏன்னு எனக்கு புரியல, வேறவழி தெரியாம உன்னபத்தின எல்லா தகவல்களையும் கலெக்ட் பண்ண சொன்னேன். அப்ப தான் மிஸஸ் சாருமதி, ராகுல், தமிழ்ச்செல்வி மேல போலீஸ் கம்ப்ளைட் மூவ் செஞ்சு இருந்தாங்க… ப்ச் நான் தான் அதை கிளியர் பண்ணி விட்டேன். அவங்க மேல தப்பு இருக்கும்னு எனக்கு தோணல” அவளிடம் விளக்கமாகவே சொன்னான் அவன் எந்த ஒளிவுமறைவின்றி.

“…!”

“உண்மை தெரிஞ்சதும் ராகுல், தமிழ்ச்செல்விய நேர்ல பார்த்து மன்னிப்பு கேட்ட இல்ல. உன்னோட அந்த குணத்துல தான் விழுந்துட்டேன் குலாபி! அப்பவே ஃபிக்ஸ் பண்ணிட்டேன் நீ தான் என் பெட்டர் ஹாஃப்னு!” என்று சொன்ன, அவன் முகம் முழுவதும் மென்மை பரவியது.

“…!”

“மிஸஸ் தமிழ்ச்செல்வி மறுபடியும் உங்க ஆஃபீஸ்ல வேலைக்கு வந்தது. எனக்கு சரியா படல. அதான், உன் ஆஃபிஸ்ல ஒரு ஸ்பை வச்சேன்” அவன் சாதாரணமாய் சொல்ல,

“வாட்?” நிவேதா அதிர்ந்து கேட்டாள்.

“உன் பிஸ்னஸ் சீக்ரெட்ஸ் தெரிஞ்சிக்க இல்ல, என் குலாபிய நான் சேவ் பண்ணனும் இல்ல. அதுக்காக” இளநகையோடு பதில் தந்தவன்,
சற்று முகம் மாற, “நான் சந்தேகப்பட்ட மாதிரி, நீ ராகுல் கிட்ட பேசுன, அந்த பார்க்ல நானும் இருந்தேன்… உங்க ரெண்டு பேரையும் கவனிச்சிட்டு…” அவன் சொல்ல நிவேதாவின் கண்கள் விரிந்தன.

“எனக்கு நீ முழுசா வேணும் நிவேதா. உன் மனசுல ஓட்டிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச பிசிரையும் ராகுல் அன்னிக்கு ஃபுல்லா கிளியர் பண்ணிட்டாரு. ராகுல் இஸ் அ கிரேட் மேன். அந்த இடத்தில வேற யாரா இருந்தாலும் தடம்மாறி இருப்பாங்க” விபீஸ்வரன் பெருமையாக மொழிய,

“உண்மை தான், ராகுல இப்ப நினைக்கவும் எனக்கு பெருமையா இருக்கு. என் அவசர புத்தியால எங்க மூணு பேரோட வாழ்க்கையும் பாழாகி இருக்கும்” நிவேதா தன் கருத்தையும் தயங்காமல் தெரிவிக்க,

“நாலு பேரோட வாழ்க்கை நிவிம்மா, என்னையும் சேர்த்து!” என்றான்.

“சாரி ஈஸ்வர், என்னால உங்களை ஏத்துக்க முடியாது”

“பின்ன, மெய் காதல் தோல்வியில தாடி வளர்க்காம சன்னியாச வாழ்க்கை வாழ போறதா முடிவோ?” கிண்டலும் கடுப்புமாக கேட்டான் அவன்.

“இல்ல, என் கல்யாணத்துக்கு நான் எதிர்பார்க்கிற தகுதி ஒண்ணு உங்ககிட்ட இல்ல!”

“வாட்? அப்படி என்ன தகுதி சொல்லு பார்க்கலாம்?”

“நான்… ஒரு மிடில்கிளாஸ்ல இருக்க ஒருத்தரை தான் என் கணவரா தேர்ந்தெடுக்கணும்னு முடிவு எடுத்துருக்கேன்.”

கண்களை சுருக்கி அவளை பார்த்தவன், “உன் முடிவை எல்லாம் தூக்கி குப்பைல போடு. நான் தான் உன் புருசன் உன் மைண்ட்ல பிஃஸ் பண்ணிக்கோ” ஈஸ்வர் கட்டளை பிறப்பித்தான்.

“சாரி” அதற்கு மேல் அவனிடம் பேசி பயனில்லை என்று நிவேதா திரும்பி நடக்க, ஈஸ்வர் அவள் கைபற்றி தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.

“என் முழு பேர் விபீஸ்வர்! அர்த்தம் தெரியுமா? கடவுளுக்கெல்லாம் கடவுள்! நான் நினச்சதை எதையும் மாத்திக்கிட்டது கிடையாது! யூ ஆர் மைன்!”

அவன் தீர்க்கமாய் சொல்ல, நிவேதா அவனை காரமாக பார்த்தாள். “நீங்க யாரா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல. என் பதில் இதுதான்” அவளும் உறுதியாகவே இருந்தாள்.

சத்தமின்றி சிரித்தவன், “பாவம் டியர் நீ என்னை பத்தி தெரியாம பேசற. என் அப்பா, அம்மா கிட்ட நீ தான் அவங்க மருமகள்னு சொல்லியாச்சு. உன் அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கியாச்சு. நீயும் சீக்கிரமே சம்மதம் சொல்லிடுவ. எனக்கு தெரியும்.”

“…!”

“எனக்கு புரியுது நிவிம்மா, இப்ப உனக்கு கொஞ்சம் டைம் தேவை. என்னை மனசார ஏத்துக்க, ஒரு வருசம் எடுத்துக்க. அதுக்கு முன்னாலேயே சம்மதம் சொல்லிடு டியர். அதுக்கு மேல நான் வெய்ட் பண்ண மாட்டேன். உன்ன அப்படியே தூக்கிட்டு போயிடுவேன்” என்று காதலாய் சொல்லி அவள் கையை விடுவித்தான்.

“வீணா முயற்சி செஞ்சு மூக்கொடிஞ்சி போகாதிங்க ஈஸ்வர். அவ்ளோதான் என்னால சொல்ல முடியும்” என்ற நிவேதா அங்கிருந்து வேகமாக செல்ல,

“ஹேய் குலாபி, என்னை ‘விபு’ன்னு கூப்பிடு, எங்க வீட்ல அப்படி தான் கூப்பிடுவாங்க” அவன் கம்பீர குரல் குதூகலமாய் அவளை பின் தொடர்ந்து வந்தது.

தன் காரில் ஏறி பயணமானவளின் இதழ்கள், “விபுவாம் விபு…” என்று அவன் பெயரை இருமுறை உச்சரித்து பார்க்க, ‘ச்சே’ என்று வேகமாக தலையை குலுக்கி கொண்டாள் நிவேதா.

# # #

“ப்ளீஸ்… ப்ளீஸ்… ராகுல்” தமிழ் அவள் அன்பனிடம் கெஞ்சிக் கொண்டிருக்க, அவனோ அவளை கண்டுக்கொள்ளாது தொலைக்காட்சியில் சேனல்களை மாற்றியபடி இருந்தான்.

அவன் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கி தொலைக்காட்சியை அணைத்தவள், “நீ ரொம்ப பண்ற டா” அவள் இடுப்பில் கைவத்தபடி தன்னவனை முறைத்து நின்றாள்.

பின்னே இரண்டு நாட்களாக அவளை கெஞ்ச விட்டு கொண்டிருக்கிறான் அவன்.

இவனும் அவள் முறைப்புக்கு எதிர் முறைத்து நின்றான்.

“நீ தான்டீ ரொம்ப பண்ற” என்று அவளின் இடையை வளைத்து இழுத்து, அவளிடம் இருந்த ரிமோட்டை போராடி பிடிங்கி, மறுபடி தொலைக்காட்சியில் கவனம் பதித்தான்.

இவளுக்கு அந்த டிவியைத் தூக்கி உடைத்தால் தான் என்ன? என்று ஆத்திரம் வந்தது. ஆனாலும் இனி இவனிடம் சண்டையிட்டு பயனில்லை. இப்போதே அவன் அழுத்தி பிடித்த இடத்தில் அவளின் மெல்லிடை கண்ணிப்போயிருந்தது.

உம்மென்ற முகத்தோடு அவனை ஒட்டி அமர்ந்து கொண்டாள். ராகுல் அவளை கண்டு கொள்ளாது சற்று விலகி அமர, “ப்ளீஸ் ராகுல் என்னை படுத்தாதீங்க, நான் பாவம் இல்லையா?” என்று சிணுங்கினாள். இப்போதெல்லாம் மாமியார் முன்பு கணவனிடம் மரியாதையாக பேச பழகி இருந்தாள்.

அவன் சலிப்பாக அவள் பக்கம் திரும்பி உட்கார்ந்து, “ஏன் தமிழ் சின்ன குழந்தை மாதிரி அடம்பிடிக்கிற? வேணான்னா விட்டுடேன்” கேட்க,

“அம்மா ரொம்ப கஷ்டபடுறாங்க டா, அம்மாவுக்காக தான கேட்கிறேன்”

“அம்மா புரிஞ்சிப்பாங்க, இப்ப நீ தான் புரிஞ்சுக்காம அடம்பிடிக்கற”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நீ கோபபடுவன்னு தான். அவங்க அமைதியா இருக்காங்க. தன் அண்ணன் பொண்ணு கல்யாணத்துக்கு போக முடியாதேன்னு வருத்தபடுறாங்க தெரியுமா?” அவனுக்கு சரியாய் வாதாடினாள்.

“இப்ப என்ன செய்ய சொல்ற?”

“உங்க தாய்மாமாவுக்கு கோவம் இருந்தாலும், உங்க அத்தை வந்து அவங்க பொண்ணு கல்யாணத்துக்கு பத்திரிகை வச்சு அழைச்சாங்க தான, இப்ப நாம கல்யாணத்துக்கு போகலைன்னா, குடும்பத்துக்குள்ள இன்னும் பிரச்சனை பெரிசாகிடும்” அவள் விளக்கம் தர,

“இந்த காரணம் சொல்லி தான் நீயும் அம்மாவும் என்னை சம்மதிக்க வச்சு குல தெய்வத்துக்கு பொங்கல் வைக்கணும்னு ஊர் திருவிழாவுக்கு கூட்டிட்டு போனீங்க. என்னாச்சு, சித்தப்பாவும் பெரியப்பாவும் முறைச்சிட்டு தான நின்னாங்க” என்று கடுகடுக்க, அவன் முகத்தை கைகளில் ஏந்தி கொண்டவள், “அவங்க முறைச்சாலும் மத்தவங்க எல்லாரும் நம்மகிட்ட நல்லபடியா தான நடந்துகிட்டாங்க, சொந்தத்துக்குள்ள பிரச்சனைனா நாம தான் கொஞ்சம் இறங்கி போகணும், இல்ல விரிசல் பெரிசாயிடும்” என்றவள் அவன் ஒற்றைக் கன்னத்தில் முத்தமிட்டு, “நாம கல்யாணத்துக்கு போகலாம் ராகுல்” என்று கொஞ்சி கெஞ்ச, “ம்ஹூம், இது‌ என்ன பாவம் பண்ணுச்சாம்” என்று தன் மறுக்கன்னத்தை அவளிடம் காட்டினான். இவள் மென்னகை விரிய அழுத்தமாய் முத்தமிட்டு விலகினாள்.

“நீங்க கல்யாணத்துக்கு போக சரி சொல்லிட்டிங்கன்னு அம்மாட்ட சொல்லிறேன்” என்று விரைந்தவளை, “நான் சரி சொல்லவே இல்லையே, கிஸ் மட்டும் தான கேட்டேன்” என்று அவன் ஒற்றை புருவம் உயர்த்தி சொல்ல இவள் முகம் சுருங்கி போனது.

“வேண்டா வெறுப்பா அழைப்பு தந்த கல்யாணத்துக்கு போகணும்னு நமக்கு என்ன அவசியம் தமிழ்?” ராகுல் சலிப்பாக கேட்க,

“என்னை காரணங்காட்டி தான அவங்கெல்லாம் உங்ககிட்ட சண்ட போட்டு விலகி போனாங்க, அவங்க எல்லாரும் கோபம் தீர்ந்து மறுபடி நம்மோட சகஜமா இருக்கணும் ராகுல், என் பக்கம் தான் சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லாம போய்ட்டாங்க, என்னால உங்க சொந்தமும் விலகி போக வேணாம் ப்ளீஸ்” தமிழ் சொல்ல, இவனுக்கும் அவளின் மனநெருடல் புரியத் தான் செய்தது.

“ம்ம் சரி தமிழ் போலாம், இப்படி பொண்டாட்டி சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுறேனே, இந்த அப்பாவி புருசனுக்கு ஏதாவது பார்த்து செய்யேன்” என்று ராகுல் பாவமாய் வம்பு வளர்க்க, தமிழ் வாய்விட்டு சிரித்து விட்டாள்.

“ச்சு என் அப்பாவி புருசனுக்கு என்ன வேணுமா” என்று கேலியாக அவளும் கேட்க, தன் உதட்டின் மேல் விரல் தட்டி காட்டியவன் தன்னவளையும் அருகிழுத்து கொண்டான்.

அவளவன் கைகளுக்குள் வாகாய் பொருந்தியவள், அவன் காதல் முகம் நோக்கி நெருங்கி, சட்டென விலகி தூர நின்றாள். “ஆச தோச, இதையும் வாங்கிட்டு நான் கிஸ் மட்டும் தான் கேட்டேன்னு சொல்லுவ, நீ மொதல்ல எங்கள கல்யாணத்துக்கு கூட்டிட்டு போ, அப்புறம் தான் நீ கேட்டது கிடைக்கும்” என்று அழகுகாட்டி விட்டு ஓடினாள்.

“ரொம்ப தேறிட்ட டீ நீ, உன்ன…” என்று அவனும் அவளை துரத்தலானான் முகம் கொள்ளா சிரிப்புடன். மனம் நிறைந்த காதலுடன்.

உண்மையில் பார்வதிக்கு மனநிறைவாக இருந்தது தன் அண்ணன் மகனின் திருமணத்திற்கு சென்று வந்தது. சிலசில சலசலப்புகள் சங்கடங்கள் தோன்றினாலும் அதனை பெரிதுபடுத்தாமல் பொறுத்து போக வேண்டியதாக தான் இருந்தது. அதோடு தமிழ், ராகுல் ஒற்றுமையைப் பார்த்து, இவரிடம் வந்து மேம்போக்காக பொறாமைப்பட்டு கொண்டனர் சிலர். எது எப்படியோ சொந்தங்களுக்கிடையே விரிசல் பெரிதாகாமல் குறைந்தது பார்வதிக்கு சந்தோசமே.

இங்கு தினம் தினம் விபீஸ்வரனை பார்வையால் சாம்பலாக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் நிவேதா. தொழில் வர்த்தகத்தின் முதல்கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதால், அவனும் கொடைக்கானலில் தங்கி, தினமும் அவளுடன் இணைந்து தொழில் வளர்ச்சி நிலைகளை ஆராய்ந்து கொண்டிருந்தான். உடன் காதல் பிடிவாதங்களையும்.

விபீஸ்வர் இத்தனை தொந்தரவு கொடுத்தும், நிவேதா அவன் தொழில் முறை ஒப்பந்தத்தை ரத்து செய்ய எண்ணவும் இல்லை. அவனின் காதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் இல்லை.

# # #

காதல்காரன் தொடர்வான்…

error: Content is protected !!