KSE-3

KSE-3

                    அத்தியாயம் – 3

அவனின் பார்வையைக் கண்டு முகத்தை சுளித்தாள் மிது.

“இப்படி முகத்தை சுழிக்கும் போது கூட ரொம்ப அழகா இருக்க” மீண்டும் சிலாகித்துக் கூறினான்.

“உனக்கு இப்போ என்ன தான் ஆச்சு” கடுப்பாக வினவினாள்.

“உன்னை பார்த்ததும் பரணியில் வரும் சோழப் பெண்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள்? உனக்கு சொல்லுறேன் கேளு… நீ எப்படி இருக்கன்னு என்னை மாதிரி அழகான பையன் சொன்னா தானே உனக்கு தெரியும்”

‘திடீரென இவன் இலக்கியத்தை பற்றி பேசுவதைக் கண்டு கண்களை விரித்துப் பார்த்தாள். ஆனாலும், அவன் அழகன் என்று கூறியதைக் கேட்டு தன்னை தானே தலையில் அடித்துக் கொண்டாள்.

“சோழ காலத்து பெண்கள் மிக அழகாம். உன்னை போலவே… கயல் விழி பார்வை! அந்த விழி பார்வையால் ஆண்களை சிறை எடுப்பார்களாம்… அதில் ஆண்கள் உடல் பெரிதாய் காயம் பட்டு போகுமாம்.

அவர்களின் காயத்தை ஆற்ற பொற்கொடி போன்ற அவர்களின் வதனத்தால் இறுக்க அணைத்துக் கொள்வார்களாம், அந்த அணைப்பில் அவர்கள் காயம் ஆறிப் போகுமாம்? உன்னை உன் அபார அழகை காணவும் எனக்கு அந்த எண்ணம் தோன்றுகிறது… அவர்கள் எப்படி அணைப்பார்கள் என்று யோசித்து பார்த்திருக்கியா?”

அவன் இப்படி கூறுவதைக் கேட்டு புருவத்தை உயர்த்தி, முகத்தை சுழித்தாள் மிதுனா.

அவளின் இந்த செய்கையை பார்த்த அரவிந்த் “இந்த பிறை நெற்றியில் வில்லாக வளைந்திருக்கும் இந்த அழகு முகத்தை கூட ஒரு இலக்கியம் அழகாக கூறும்” என்றவன்,

“புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்

கயலே மணந்த கமலம் மலர்ந்து ஒரு கற்பகத்தின்

அயலே பசும்பொற் கொடி நின்றதால் வெள்ளை அன்னம் செந்நெல்

வயலே தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே”

உன்னை பார்க்கவும் எனக்கு இது தான் தோணுது?” மீண்டும் அதே சிரிப்பு.

அவனை கையெடுத்து வணங்கினாள் மிது “தெய்வமே நீ பெரிய இலக்கியவாதி தான் ஒத்துகிறேன், என்னை மன்னித்து விடு”

அவளுக்கு ஆத்திரமாக வந்தது. ‘இவர் பெரிய கவி மகாராஜா பரணியோடு ஒப்பிட்டு பார்க்கிறாராம்’ கடுப்பானவள்,

“இப்படி பேசிக் கொண்டிருந்தால், உடம்பு மட்டும் இல்ல முகமும் காயம்பட்டுப் போகும்” கை நீட்டி எச்சரித்தாள் மிது.

அதற்கும் சிரித்தான் அரவிந்த்.

“ஆகட்டுமே! அதற்கு தானே ஆசைபடுகிறேன்? அப்படி காயமானால் தானே, நீயும் சோழ அழகிகளைப் போல் நெஞ்சார இறுக்க அணைத்துக் கொள்வாய்” கண்சிமிட்டி சிரித்தான் அவன்.

“ச்சீ” என அருவருப்புடன் முகத்தை சுழித்தாள் மிது.

அவள் முகத்தைக் கண்டு என்ன நினைத்தானோ, அதன் பிறகு கொஞ்ச நேரம் அவன் அவளை சீண்டவும் இல்லை, அவளை ஏறெடுத்தும் பார்க்கவுமில்லை.

அரவிந்த் கை கடிகாரத்தை திருப்பிப் பார்த்தான் “இன்னும் அரை நாளில் நாம பாட்னாவை அடைந்து விடலாம்”

அவள் காதில் விழுந்தாலும், விழாததுப் போல் வெளியில் வேடிக்கைப் பார்த்திருந்தாள்.

எத்தனையோ மனிதர்கள்! எத்தனை பாஷைகள்! வித விதமான முகங்கள் ஆச்சரியமாகப் பார்த்திருந்தாள்.

மறுபடியும் நினைவு பலவாறாவாக சிந்திக்க உடனே உதறி தள்ளினாள். ஆறு மாசம் இங்கிருந்து விட்டு உடனே வீட்டை பார்த்துக் கிளம்பவேண்டும்.

எல்லாம் சரியாகி விடும்…

தாய், சரியாகி விடுவார். மீண்டும் அதே வேலையில் சேர்ந்துக் கொள்ளலாம். வாழ்க்கை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் செல்லும். தங்கை, தம்பியை நல்ல நிலைமைக்கு வளர்க்க வேண்டும்.

பலவகையாக எண்ணியவள், பாட்னாவின் தன் வேலை எப்படி இருக்கும் என சிந்திக்க ஆரம்பித்தாள்.

மறுநாள் காலையில் பாட்னாவை வந்திறங்கினர் இருவரும். உடைமைகளை ரயில்வே ஊழியர்கள் எடுத்து செல்ல பின்னால் மெதுவாக நடந்து சென்ற மிதுனாவின் இடையை திடீரென இழுத்து, அவனை தன்னோடு அணைத்து பிடித்தபடி நடக்க ஆரம்பித்தான் அரவிந்த்.

அவனின் செயலில் வெகுண்டெழுந்த மிது, அவளை தள்ளி விலக போக,

அவளை விடாமல் அடக்கியவன், ”சும்மா சீன் போடாதே பொண்டாட்டி. இனி ஆறு மாதம் நீ எனக்கு பொண்டாட்டி… எனக்கு எல்லாம் செய்யவேண்டியது உன் பொறுப்பு… இது தான் உன்னுடைய முதல் வேலை” அசராமல் குண்டை தூக்கிப் போட்டான் அரவிந்த்.

அவன் போட்ட குண்டு அவளை அப்படியே பூமிக்கு கீழே இழுத்து செல்வதுப் போல் இருந்தது.

“என்ன உளறுற நீ?” கடுமையாக வினவினாள்.

“நான் உளறுகிறேனா?சரி தான் போ” பெரிதாக சிரித்தான்.

அவன் அப்படி சிரித்தது முதல் முறையாக அவள் மனதில் பயத்தை விதைத்தது.

“நான் ஆறு மாதம் உங்கள் பாட்டியை கவனிக்க வந்திருக்கிறேன்?” என்றாள் மெதுவாக.

“பாட்டியா…? யார் பாட்டி…?” மறுபடியும் இடியாய் சிரித்தான்.

பயத்துடன் அவனைப் பார்க்க,

“நீ சரியான முட்டாள்” என்றான்.

இப்பொழுது அவன், அவளை திட்டியது கூட பெரிதாக தெரியவில்லை. திகைப்புடன் அவன் விழிகளை நோக்கினாள்.

“இங்கு பாட்னாவின் என் பாட்டியை பார்க்க ஆள் இல்லை என்றா உன்னை சென்னையில் இருந்து கூட்டிவருகிறேனாக்கும்… அவ்வளவு பெரிய ஆளா நீ? இல்லை மருத்துவத்தை கரைத்து குடித்திருக்கும் டாக்டரா என்ன?”

அவன் பேசப் பேச ‘ஏன் நான் அந்த கோணத்தில் யோசிக்கவே இல்லை’ தன்னை தானே தலையில் தட்டிக் கொண்டாள். ஆனாலும் அதை அவனுக்கு காட்டாமல், கேலியாக அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“என்னோட முட்டாள்தனம் இருக்கட்டும். பெரும் புத்திசாலியான தாங்கள் மூளையில் என்னை பற்றி என்ன நினைப்பிருகிறது? அதை கொஞ்சம் செப்பலாமே?” கிண்டலாகவே வினவினாள்.

அவளின் கேலியை கொஞ்சமும் கண்டுக்காமல் “கண்டிப்பா நீ தெரிஞ்சுக்கணுமா என்ன?” தோளை குலுக்கியவன், கண்களை மெதுவாக சிமிட்டி புருவம் உயர்த்தி அவளை மேலிருந்து கீழாக ரசனையாக ஒரு பார்வை பார்த்தான்.

“பியூட்டி ஃபுல் பிகர் நீ! அழகான தேகம்! வேறு என்ன பாட்னாவில் ஆறு மாதம் என்னுடன் மனைவியாக வாழ போகிறாய் நினைத்தாலே சும்மா ஜிவ்வுன்னு ஏறுது… அதை நினைத்தாலே…”

அவன் வார்த்தைகளை முடிக்க கூட இல்லை,

“செருப்பு பிஞ்சிரும்” ஆத்திரமாக உரைத்தாள் மிது.

“செருப்பா…? ஹா… ஹா…”

“ரொம்பவும் வார்த்தையை விடாதே பேபி… ரொம்ப வருத்த படுவ,  என்னை, உன்னால் எதுவும் செய்ய முடியாது பேபி… உன்னை பற்றி எல்லாம் தெரிந்து தான் உனக்கு வலை விரித்திருக்கிறேன் பேபி… கா…” ஏதோ சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்திக் கொண்டான்.

‘வலை விரித்திருக்கிறானா? என்ன சொல்கிறான் இவன்… என்னை பற்றி எல்லாம் தெரிந்து தான் இங்கு வரவைத்திருக்கிறானா?’ அரண்டுப் போய் பார்த்திருந்தாள் மிது.

நிதானமாக அவளைப் பார்த்தவன் “ரொம்ப யோசிக்காதே பேபி… உன்னை பற்றி எல்லாம் தெரிந்து தான் உன்னை இங்கு வரவைத்திருக்கிறேன். அதிலும் உன் முக்கிய பலகீனம்” அவளை பார்த்து வேகமாக சிரித்தான்.

ஏனோ அவளை டென்ஷன் பண்ண அத்தனை பிடித்திருந்தது அவனுக்கு.

இப்பொழுது அவனை நேராக பார்த்திருந்தாள் அவள். “என்ன சொல்கிறாய் நீ?”

“அட… உன் பலஹீனம் உனக்கே தெரியவில்லையா? இல்லை புரியவில்லையா? உன் அம்மா… நோய் வாய் பட்ட உன் அம்மா,   இப்பொழுது புரிகிறதா?”

இப்பொழுது அவளுக்கு எல்லாம் புரிந்தது. “பெரிய தியாகி போல் இரண்டு லட்சம் தருகிறாரே? பெரிய தியாகி என்று எண்ணினேன் ஆக எல்லாம் திட்டம் தானா?” கோபமாக வினவினாள்.

அவள் கூறுவதைக் கவனிக்காமல், அவனே தொடர்ந்தான். “ரெண்டு லட்சத்தை நீ கேட்டதும் தூக்கி தந்தேனே? அது ஏன்னு யோசிக்கவே மாட்டியா?”

அவள் பயந்துப் போய் அவனைப் பார்க்க, அவளை நோக்கி சுட்டு விரலை நீட்டியவன்,

“எனது நோக்கம்… திட்டம்… எல்லாமே நீ தான். நீ மட்டும் தான். உன்னோட அபார அழகு. உன்னை பார்த்த ரெண்டே நாளில் முடிவு பண்ணிட்டேன் நீ தான் பொண்டாடிட்டு, அது தான் நீ கேட்ட பணத்தை உடனே தந்துட்டேன்”

“இதற்கு உன் தந்தையும், ரகுநாதன் சாரும் உடந்தையா?”

“தெரியாது… ஆனா நீ தான் சொல்ல போகிறாயே?”

“என்ன உளறுற?”

“உனக்கு தான் வேறு வழியில்லையே? அப்போ நீ சொல்ல தானே வேண்டும்” ரகசிய சிரிப்பில் விரிந்தது அவன் இதழ்கள்.

அப்படியே அதிர்ந்து நின்றவளை, மேலும் சிந்திக்க விடாமல் அவளை அணைத்து பிடித்தபடியே “இங்க இனி எதுவும் பேசவேண்டாம், நம் பங்களாவில் போய் பேசிக் கொள்ளலாம்” என்றவன் அவர்களுகென்று நின்ற காரில் ஏறி கொண்டான்.

அவளுக்கு ஆத்திரமாக வந்தது, “நான் வரமாட்டேன்” என்றாள் அவனின் கையை விலக்கியபடியே.

“பிடிவாதமா? ஓகே. தாராளமாக கிளம்பலாம்? ஆனால், போய் என்ன செய்ய போகிறாய்?”

“அடுத்த ரயிலில் சென்னைக்கு கிளம்ப போகிறேன்”

“தாரளாமாக” அவன் தோள்களை குலுக்கியவன் அவள் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து “நீ அங்கு போனால், நான் என்ன செய்வேன் தெரியுமா? அதையும் தெரிந்துக் கொண்டு அங்கு செல்”

அவள் அவனை பார்த்தாள். ஆனால் அவனோ மிகவும் சாதாரணமாக அவள் கண்களையே பார்திருந்தான்.

“உடனே ஆபிஸ்க்கு போன் போட்டு உன் அம்மாவின் மருத்துவ சிகிச்சையை நிறுத்த சொல்லுவேன், கட்டிய பணம் அத்தனையும் திருப்ப வாங்கிவிடுவேன்… இதுக்கு மேல எனக்கு என்ன தோணுதோ அதை நான் செய்வேன்” அவளையே கூர்மையாக பார்த்தபடியே கூறினான் அரவிந்த்.

‘என்னமா பிளான் போட்டுருக்கான் ராஸ்கல். திட்டம் தீட்டி என்ன இங்க வரவச்சிருக்கல்ல கவனிச்சுகிறேன்டா’ மனதில் எண்ணியவள் பேசாமல் அமந்திருந்தாள்.

“ஒன்றும் அவசரமில்லை… நிறுத்தி நிதானமா யோசனை பண்ணு. இன்னைக்கு என் பங்களாவிற்கு அழைத்து செல்கிறேன். நன்றாக யோசித்து உன் முடிவை சொல்லு… அதற்கு முன் இந்த கருகுமணி தாலியை உன் கழுத்தில் கட்டி ரெடியாக இரு” எனக் கூறியபடி அவள் கையில் ஒரு கருகுமணியை திணித்தான்.

பின்னால் வந்த காரில் இருந்து அவளது உடைமைகள் வந்திறங்க, அவனிடம் ஏதோ ஹிந்தியில் உரைத்தவன் அவளைப் பார்த்துக் கொண்டே மாடி ஏறினான்.

கையில் இருந்த கருகுமணியை வெறுமையாக பார்த்திருந்தாள் மிது. ‘இவன் எப்படி பட்டவன்… இத்தனை நேரம் பேசிய பேச்சென்ன… இப்பொழுது நல்லவன் போல் கையில் கருகுமணி தாலியை கொடுத்து செல்வதென்ன? இவன் திட்டம் தான் என்ன?’ யோசனையாக அவன் முதுகையே வெறித்தாள் மிது.

 

error: Content is protected !!