KUKN-17

KUKN-17

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்சாரா

 

அத்தியாயம் 17

 

கெஸ்ட் ரூமில் இருந்த சீமாவும் , விக்ரமும் ….. கடுப்பில் இருந்தனர்….

 

விக்ரம் சீமாவிடம்,

என்ன சீம்ஸ்…..?  நான் பாட்டுக்கு  பார்ட்டியில என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன்…. எனக்கு ஒரு ஷோ காட்டறன்னு , இங்க கூட்டிட்டு வந்து……….., என்னை வச்சி ஷோ காட்டிட்ட..?”

ஆனா ஒன்னு….., உன்னை கம்பேர் பண்ணும்போது…, எனக்கு பரவாயில்ல போலயே…..அந்த இளா , உன்னை கிழி கிழின்னு கிழிச்சு தொங்க விட்டுட்டு போயிட்டான்…..”

 

இப்பவும் ஒன்னும் கெட்டு போகல….. ஜஸ்ட் நவ் ஐ கால்ட் வினீத்ஸ்டில் பார்ட்டி ஈஸ் கோயிங் ஆன் பேபி ……. லெட்ஸ் ஜாயின்……..”

 

பேசி முடிக்கும் முன் ……’சப்‘……………… அறை விழுந்திருந்தது விக்ரமின் கன்னத்தில்….. கொதித்து போன சிலுக்கு…,

ஆரா யாரு, இளா யாருன்னு சொல்லித்தானே கூட்டிட்டு வந்தேன்…, ஞாபகம் இருக்காஇல்லையா……? அதுக்குள்ள அவங்க சொத்து மதிப்பையும் மறந்துட்டியா..? கோடிக்கணக்கில் சொத்தை வச்சிக்கிட்டு அதோட மதிப்பு தெரியாமல் ,ரெண்டும் பஞ்ச பராரி மாதிரி இங்க வந்து சோத்தை அமுக்குறதை பார்த்ததும் அதுங்க மேல இருந்த ஆர்வம் குறைஞ்சு போயிட்டுதா…?”

 

மத்தவங்க இருக்கிறாங்கன்னு அறிவு இல்ல…? ஆராவ பார்த்து  செக்ஸி புக்ஸ்சின்னு அவங்க முன்னாடியே உளறி வச்சி என் மரியாதையையும் வந்த உடனே டேமேஜ் பண்ணிட்ட..கொஞ்சம் விட்டிருந்தாலும் அவளை அப்படியே முழுசா  முழுங்கியிருப்ப….., இதையெல்லாம் பார்த்திட்டுதான் அவன் கடுப்பு ஆகி ரவுண்ட் கட்டிட்டான். ஒரு பொண்ணை சைலண்ட்டா பிக் அப் பண்ண துப்பு இல்லஇப்ப எதுவுமே நடக்கல, நான் மட்டுமேதான் அசிங்கப்பட்டென்னு சீன் போடற. தொலைச்சிடுவேன் ராஸ்கல்..என்ன இளாவைப் பார்த்து மிரண்டு போயிட்டியா?”

விக்கியின் கலாய்ப்பிர்க்கு , நெற்றிக்கண்ணை திறந்துவிட்டிருந்தாள் சீமா.

 ( இந்த விக்கு மண்டையன்  யார் அசிங்கப்படுத்தினாலும், வெக்கப் படாம அசிங்கப்படுவான் போலவே…. கவரி மான் ராஜா பரம்பரை..!)

 

 

அப்படியில்லை சீம்ஸ்நீ கிளம்பி வந்த வேகத்தை பார்த்ததும், அவங்கள ஏதோ சிறப்பா செய்யப் போறேன்னு நினைச்சி வந்தேன். ரொம்ப டம்மி பண்ணிட்டாங்க உன்னை.”

 

 “திரும்பவும் அதையே பேசாத விக்கி கொலை பண்ணிடுவேன் உன்னை….”

 

ஓக்கே பேபி.., டேக் இட் ஈஸி…… கூல்அடுத்து நான் என்ன பண்ணனும் ? என் மாமா ஜம்புலிங்கம் பத்தி எடுத்து விடட்டா…?.. அப்படியே அந்த கிருஷும் இளாவும் ஆடி போய்டுவாங்க பாரு சீம்ஸ்…”

 

உன் மாமா திருச்சியில் தான எம் எல் ….. என்னவோ திருச்சியே அவரதுங்கரது போல பேசுற…. இவனுங்களுக்கும் நிறைய பொலிட்டிசியன்களை தெரியும்……லாஸ்ட் ஃபோர்  இயர்ஸ்ல இளாவோட வளர்ச்சி என்னன்னு தெரியாமல் ரொம்ப லோக்கலா பிளான் போடுற…. இவனுங்களை மிரட்டறதோ,  பயமுறுத்தரதோ முடியாத விஷயம்இவங்க அத்தனை பேரையும் நல்லா கதற வைக்கணும் ,பதற வைக்கனும்…. அதுக்கு நம்மளோட டிரம்ப் கார்டு ஆரா..”

 

இருவரும் சதி வேலையில் பிஸியாக இருந்த அதே நேரத்தில், ஆராவிற்கு பால் காய்த்து கொடுத்துவிட்டு ஸ்டவ்வுடன் , ஆராவின் அடங்கா வயிறையும் ஆஃப் செய்த பின் , வேதாவுக்குள் ஒரே யோசனை….  ஏதோ பொறி தட்ட , நேராக போயி கிருஷிடம்,

 

கிருஷ் உன் ஃபோனை  கொடுடா…”

 

இருந்த பப்ஜிய  ஆல்ரெடி டெலீட் பண்ணிட்டேன்  புஜ்ஜிமா….  “

 

அந்த கேம் என் மொபைலிலேயே இருக்கு

 முன்னாடி உன் ஃபோனை கொடுடா….”

வேதா கிரிஷிடம் இருந்து பிடுங்க,

 

பின்ன வேற எதுக்கு என் போன் ? சீக்ரெட் பேட்டர்ன் கோட் போட்டு லாக் பண்ணியிருக்கேன் மை டியர் மம்மி. இப்ப என்ன பண்ணுவ…….. ,இப்ப என்ன பண்ணுவ…………..?” பழிப்பு காட்டியவனிடம் ,

 

தெரியும் , தெரியும் இருக்குற புள்ளியில  மேல இருந்து ஒரு பெரிய ஜி போடணும் அதான….? இதுக்கு இம்புட்டு பில்ட் அப் ஆகாதுடா …! தினம் நைட் என் மொபைல் டேட்டா  டாட்டா காட்டுனதும் , உன்னொடதுலதான் ஹாட்ஸ்பாட் ஆன் பண்ணிக்கிறேன் பேட்டா….. நான் உனக்கு  அம்மாடா …… அது ஞாபகம் இருக்கட்டும் வரட்டா….”

என்று வலுக்கட்டாயமாக கிருஷின் ஃபோனை வாங்கி சென்ற வேதாவை , என்ன நடக்கிறது என்று தெரியாத மற்ற மூவரும் கேள்வியாய் நோக்க கிருஷ் கொலைவெறியுடன் பார்த்திருந்தான்.

 

உள்ளே போன வேதா நேராக கெஸ்ட் ரூமிற்க்கு போய்,

உனக்கும் அந்த விக்குற தம்பிக்கும் பால் எடுத்துட்டு வரட்டுமாடி சீமா…?”

 என்றபடி உள்ளே நுழைய உள்ளே இருந்த கருப்பு ஆடுகளுக்கு வயிறு கலங்கியது.( மே……மே….)

 

வேணாம்ஆன்டி…”. சீமா தயங்கிய படி வாயிலே டைப் அடித்தாள்

 

விக்கிற தம்பி ஒன்னுமே சொல்ல மாட்டேங்குது..”

 

நோ ஆன்டி…. டோண்ட் வாண்ட் மில்க்.”

 

நோ எம்டி மிலுக்கு …., விக்கிற தம்பி….. ஃபுல் பாதாம், பிஸ்தா மிக்சிங் எனர்ஜி மிலுக்கு …. யூ டிரிங் இம்பார்ட்டன்ட் விக்கிற தம்பி……”

 ( அது வெறும் பாலில்லை, விக்கிற தம்பிநிறைய பாதாம், பிஸ்தா சேர்த்த புத்துணர்வு பால்.. நீங்க கண்டிப்பா குடிச்சே ஆகணும்  விக்கிற தம்பி)

 

இட்ஸ் ஓகே ஆன்டி…….” வேதாவின் ஆங்கிலப் புலமை, விக்கிக்கு இன்னும் பதட்டத்தை கூட்டியது…..

 

சரிடி சீமா , இந்த கப்போர்டுல  தான் மூஞ்சி தொடைக்குற துண்டு , புது பெட்ஷீட் எல்லாம் இருக்கு ,எடுத்து படுக்கை மேல பரத்திவிட்டு ,விக்கிற தம்பிய தூங்க சொல்லிட்டு என் ரூமில வந்து நீ படுத்துக்க..…. நாங்க எல்லாம் பதினோரு மணிக்கு மொட்டை மாடிக்கு போகப் போறோம்ஆராவுக்கு மாடியில தூங்கணுமாம்.” என்றபடி பெட்ஷீட்டை எடுத்து காட்டி விட்டு வெளியே வந்தார் வேதா… 

 

வெளியில அனைத்து கூட்டமும்  வேதாவிற்கு காத்திருக்க… , வேதாவோ..,

ஏண்டி ரோ, அந்த வெள்ளை கலரு ஹெட் செட் வச்சிருந்தியே ,அதை எடுத்திட்டு வா….”

ரோஜா கொண்டு வந்து கொடுத்ததும், வேதா அவரது ஃபோனில் இணைத்து , காது மாட்டியை, காதில் மாட்டிக்கொண்டு உட்கார,

 

இந்த தாய் கிழவிக்கு என்னா லொள்ளு பார்த்தியா இளா…?”

இங்க ஓடிச்சு, அங்க ஓடிச்சு,……. கடைசியா என் ஃபோனை புடிங்கிட்டு போய் நேரா.., நம்ம எதிரி கூடாரத்துக்குள்ள நுழைஞ்சது….. இப்ப இத்தனை பேரும் என்ன விஷயம்னு அந்தம்மா மூஞ்சை பார்த்துட்டு இருக்கோம்…. கூலா போயி, ஹெட் செட் போட்டு பாட்டு கேட்க்குது பாரு..”

கிருஷ் தான் இளாவிடம் கொந்தளித்தான்

 

அடேய் கம்முனு இரேண்டா…. சதி திட்டத்தை லைவ்வா கேட்டுட்டு இருக்கேன்….”

 

என்னா சதி திட்டம்…? என்னை போட்டு தள்ள  ஏதாவது  கூலிபடைக்கிட்ட ஆலோசனை நடத்திட்டு இருக்கியா தாய்க்குலமே….?”

 

ஆமாண்டா நீ பெரிய இவன் பாரு , கூலிப்படை கேட்குது இந்த முகர கட்டைக்கு……ஆன் தி வேல எறும்ப பார்த்தோமா என்ஜாய் பண்ணி நசுக்குநோமான்னு இல்லாம…, எறும்ப கொல்றதுக்கு, எமதர்மன  ஃபிக்ஸ் பண்ணுவாங்களாம் … … ஆனாலும் உனக்கு ஏத்தம் ரொம்ப அதிகம் டா…..”

 

அதானே பார்த்தேன்…. என்னடா ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்னை ஓரண்டை இழுக்கலன்னா உனக்கு தூக்கம் வராதே , ரெண்டு மணி நேரம் ஆகப் போகுது, இன்னும்  ஒரு எஃபெக்டும் இல்லையேன்னு நினைச்சேன் இழுத்துட்ட….. சரி என் ஃபோன் எங்க…?”

 

அட …, இவன் ஒருத்தன்.., வாட்ஸ்அப்புல வாய் உடுறதும் இல்ல மூஞ்சி புக்குல மூஞ்ச காட்டுறதும் இல்ல, எவனும்  காலும் பண்ணாம, எவனுக்கும் நீயா ஃபோனும் பண்ணாம , மெஸேஜும் அனுப்பாம  அதெல்லாம் ஒரு ஃபோன்…     ஃபோட்டோ மட்டும் எடுக்கரத்துக்கு ஒரு கேமரா போதுமேடா எதுக்கு உனக்கு அண்ட்ராய்டு….?”

 

அம்மா…, நான் ஃபோட்டோ பிடிக்கிறேன் இல்ல,  என் ஃபோனை வச்சி பொறி உருண்டை விக்கிறேன்…..  அது  இல்லாம கை ஒடிஞ்சது போல இருக்கு…… கொடு சீக்கிரம்……”

 

“  2.0 படத்துல என் ஆளு அக்ஷய்குமார்  என்ன சொன்னார்..? ஒவ்வொரு மொபைல் வச்சிருக்கவனும் ஒரு கொலைகாரன்….. புல்லினங்காளை கொல்லுற பாவம் நமக்கு எதுக்குடா…? ஃபோன்லாம் உனக்கு வேணாம் டா ராசா…..”

 

சரி ,அப்ப உன் ஆளு சொன்னதுக்கு உன் ஆன்டிராய்டு ஃபோனை தொலைச்சு தலை முழுக  வேண்டியது தானே……. நானாவது நிம்மதியா இருப்பேன் உன் டிக்  டோக் டப் மாஷை  பார்க்காம….”

 

காடு வா வாங்குது…..வீடு போ போங்குது……. இந்த வயசுக்கு மேலே  சிட்டுக்குருவியோ ,சிங்கமோ எதை கொன்னாலும் ஒரே கணக்கு தானடாஅதான் அந்த  பாவத்தை  இந்த குடும்பத்திற்காக நான் ஏத்துகிடறதுன்னு  முடிவு பண்ணிட்டேன் ……(அய்யோ ராமா…..,  முடியலையே…., )

 

 

கிருஷ் , #…………#?…!?????#…

குறு குறுவென பார்த்து கொண்டிருந்தான்….. ‘ தம்பி இன்னும் டீ வரல ‘  அதே மாடுலேஷன்……..

( பேசியே டயர்ட் ஆக்கிவிட்டுட்டு அந்த அம்மா, பாவம் புள்ள அதிர்ச்சியில் ஊமை ஆயிட்டு போலகிருஷ் உன்னோட கன்னா பின்னா கவுன்டர்ல குதிக்க ,காடு மலை தாண்டி ஓடி வந்தேன் . கவுண்ட் கண்ணா கவுண்ட்….)

கிரிஷின் ரியாக்ஷனை  பார்த்த வேதாவே இரக்கப்பட்டு, இறங்கி வந்து,

சரி ,சரிமூஞ்ச மூஞ்சுறு மாதிரி வச்சிக்காத…..அதை ஸ்பை வேலைக்கு வச்சிருக்கேன்.. முடிஞ்சதும் தரேன்சீமா இருக்கிற ரூமுக்குள்ள என் ஃபோன் கூட உன் ஃபோன் கால் ஆன்ல இருக்கிற மாதிரி வச்சிட்டு வந்திருக்கேன்…”

 

ஆஆ………. அப்படின்னு ஒபன்ல இருந்தது எல்லாருடைய வாயும்

 

 

(இன்னைக்கு திகில் ஸ்டோரி எஃபெக்ட் எனக்கு…..என்னோட இந்த எப்பிசொட் க்கு பேரு வேதாஜி 007)

 

அட கேடி ஆத்தா….. உனக்கு என்ன ஜேம்ஸ் பாண்டுண்ணு நினைப்பா…? சரி எங்க வச்சிட்டு வந்த..?” ( அதிர்ச்சில டோர் ஓபன் ஆயிட்டு கிருஷ்க்கு)

 

சீமாக்கிட்ட அந்த விக்கிறவனுக்கு பெட்ஷீட் போடுன்னு சொல்லிட்டு , அந்த பெட்ஷீட்க்கு கீழ வச்சிட்டு வந்திருக்கேன்டா.”

 

அந்த பெட்ஷீட்டை போட சொல்லிட்டு , அதுக்கு கீழேயே வச்சிட்டயா….? ரொம்பதான் அறிவு உனக்குஇன்னும் கொஞ்ச நேரத்துல என்  ஃபோனை எடுத்துகிட்டு அந்த காட்டேரி கத்திகிட்டே ஓடி வரும்ரெடியா இரு…”

 

யாருடா இவன்நான் அந்த சீம சிங்காரியோட அம்மாவையே பாத்தவடா…. இவளுக என்னைக்கு பெட்டுக்கு ஷீட் போட்டாளுக…. தலகாணி உறை தவறி விழுந்தாலே குனிஞ்சி எடுக்க மாட்டாளுகஅவதான் செய்யப்போறா சேவை…. முன்னாடி என்ன பேசுதுங்கன்னு என்னை கேக்க விடு. அதுங்க ரெண்டும் சரியா பதினொரு மணிக்கு, மாடிக்கு  பக்கா பிளான் போட்டுட்டு வருங்க பாரு…”. பதில் சொல்லிய வேதா கிரிஷிடம் நிற்காமல் ஃபோனை நோக்கி போனவர்….

கால் ரெக்கார்டு போட்டுட்டு வந்தேன்.. … முக்கியமான கட்டத்துல தான் இவனுக்கு டவுட் வரும்இவனுக்கு விளக்கம் சொல்லியே எனக்கு  ஓய்ஞ்சு போகுது…..’ புலம்பியபடியே ஹெட் செட் டை மீண்டும் காதுக்கு கொடுத்தார்

 

அனைவரும் மீண்டும் அவரையே பார்த்திருக்க…, “அண்ணி நான் இன்னும் கொஞ்சம் பால்கோவா சாப்பிட்டுக்கவா…?” வேற யாரு நம்ம ஆராதான்……

 

லேட் நைட் ஆயிட்டு லட்டுஒரு பவுல் தான் தருவேன்….”

போயி எடுத்திட்டு வந்து பால்கோவாவை  கொடுத்த ரோஜா ,மீண்டும் வேதாவிடம் செல்ல….

 

ஏன்டி கையேந்தி பவன்….நீ என்ன வயிறு வச்சிருக்கியா இல்ல வன்னாஞ்சாலு வச்சிருக்கியாடி…?  எவ்வளவு போட்டாலும் கொள்ளுதுஇங்க உனக்கு கல்யாணத்தை பண்றதுக்கு நாங்க எல்லாரும் களவாணித்தனம் பண்ணிட்டு இருக்கோம்.. ஆனா நீ யாருக்கோ கல்யாணமுன்னு உன் கல்லாப்பெட்டிய நிரப்புறதிலயே குறியா இருக்க….? ஈவ்னிங் சரியா சாப்பிடல , எனக்கும் கொஞ்சம் கொடேண்டி…”

கிருஷ்  கேட்டுவிட்டு நிமிர்ந்து பார்க்க ….., அனைவரது முகத்திலயும் ரெட் லைட் எரிந்தது

 

ரோஜா, “ஏன் கிருஷ்… ….. எப்ப பார்த்தாலும் லட்டுகிட்ட மல்லு கட்டுறஉன்னை விட அவ வயசுல சின்னவன்னு நினைப்பு இருக்கா உனக்குஅவளே எப்பவாவது வர்றாபிடிக்கறதை கேட்டு சாப்பிடுறா…. அது பொறுக்காதோ உனக்கு…..?”

 

வேதா…, “முன்னாடி இவன் காலடி மண்ணெடுத்து அவளுக்கு சுத்தி போடணும்இவனுக்கு முன்னாடி லட்டுக்கு எதுவும் சாப்பிட கொடுக்காத ரோவயித்தெரிச்சல் படிச்சவன்…..”

 

இளா, “ஏண்டா அவகிட்ட புடுங்கி திங்குற…? வேணுமின்னா வேற கேட்டு வாங்கி திங்க வேண்டியது தானே..?”

 

இப்படி அனைவரும் ஆர்டர் படி கிருஷை தாளித்து முடிக்க, பாவமாக மூஞ்சை வச்சிக்கிட்டு அவனையே பார்த்திருந்த ஆராவைப் பார்த்து…..

அரிசிமூட்டை இந்த மூஞ்ச எங்கடி வாங்கிட்டு வந்த, எனக்கே பாவமா இருக்கு…..நீ மட்டும் எதுக்குடி சும்மா இருக்குற…? உன் பங்குக்கு நீயும் ஏதாவது கேளு….”  கிருஷ்  கடிச்சு துப்ப

 

ஆரா அவனிடம்,

அண்ணா குடிக்க கொஞ்சம் தண்ணி எடுத்திட்டு வந்து தாயேன் …”

என கெட்டதும் கிருஷ், “ஏண்டி பண்ணி ,உனக்கு நான் எடுத்துட்டு வந்து கொடுக்கணுமா தண்ணி…..”

அடுக்கு மொழியோடு அடிக்க துரத்தினான்…, ஓடிப் போய் இளாவின் கையணைப்பில் பதுங்கி கொண்டாள்…. இன்னும் கடுப்ஸ் ஆன கிருஷ்…,

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, பெருசா லவ் பண்ணி கிழிக்கிறது  மாதிரி  பொசுக்கு பொசுக்குண்ணு அவனை கட்டி பிடிச்சிக்கிறது…. கொடூரமான முறையில் கடுபேத்துறாங்க மை லாட்என்றபடி வேதாவை வேடிக்கை பார்க்கும் பணியில் சேர்ந்துவிட்டான்.

 

சதிகாரர்களின் கூடாரம் :

அங்கே வேதா வந்து சென்றதும் , பெருமூச்சுடன் சென்று கதவை தாழ் போட்ட சீமா,

இந்த கிழவி வேறஇம்சை, பெரிய இதுன்னு நினைப்பு இதுக்கு…”

 

அவங்களுக்கு நம்ம மேல ஒரு டவுட்டோஹ்…? நம்மள ரொம்ப வித்தியாசமா பார்த்தது போல இருந்தது….” விக்ரம்

 

அதெல்லாம் ஒன்னும் இல்லஅவ்வளவு அறிவு கிடையாது அதுக்கு..”

 

சரி நம்ம விஷயத்துக்கு வா சீம்ஸ்ஆராவை எப்படி டிரம்ப் கார்டா யூஸ் பண்றது..?”

 

இப்ப வந்துட்டு போச்சே என் சொத்தை, அதுக்கு அது பெத்ததை விட அந்த ஆராதனா தான் உயிரு. அதுக்கு மட்டுமில்ல, ஆராவுக்கு ஒன்னுன்னா உள்ள இருக்குற அத்தனை கூமூட்டைகளும் செத்துருங்க……  அவளை எப்படியாவது உன்னை லவ் பண்ணவை.. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்…”

 

அட நீ வேற சீம்ஸ்நான் ஆராவை பார்க்கிறத இந்த வீட்டுல இருக்கிற கதவு ,ஜன்னல் முதல் கொண்டு  பார்த்திருக்கும், ஆனா அவ என்னை ஏறெடுத்தும் பார்க்கல…. பொண்ணா அவ…? யூ நோ சீம்ஸ் ,  திஸ் இஸ் ஃபர்ஸ்ட் டைம்  ஒரு கேர்ள் என்னை  பார்க்கவே இல்லை…, என்னோட பிரசன்ஸ் அவளுக்கு தெரிஞ்சுதான்னே தெரியலஅவ என்ன லவ் பண்ணுவான்னு நீ நம்பற..?”

 

விக்கி ஆர் யூ ஸ்டுபிட்..? அவ உன் லுக்ல இம்ப்ரஸ் ஆகலன்னா, செயல்ல இம்ப்ரஸ் பண்ணு.. ஒரு பொண்ணை ஒர்கவுட் பண்ண முடியாதா உன்னால?”

 

ம்……கும் நீ கூட இளாவை லவ் பண்ண வைக்கிறேன்னு தலை கீழா நின்னு பார்த்த ஒன்னும் நடக்கலையே…!”

 

அவனை முறைத்து வாயை மூட வைத்த சீமா…. “நீ தயவு செஞ்சி என்னை கடுப்பெத்தறத விட்டுட்டு, ஆராவா எப்படி மடக்குறதுன்னு யோசி….”

 

ஆனால் ஒன்னு விக்கி, ஓவரா என்னை டென்ஷன் பண்ணின இதுங்கள ஒரு வழி பண்ணாமல், இந்த வீட்டை விட்டு கிளம்ப மாட்டேன். அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்டஇரு என் மம்மிய  கூப்பிடுறேன்…. ஷீ ஈஸ் ரைட் பெர்சன் டூ ஹேண்டில் தெம்..”

சீமா அவளின் தாய் கற்பகத்தை உடனே ஃபோனில் அழைத்தவள்

 

மம்மி நீட் யூ……”

…………….

எனக்கு  கல்யாணம் பண்ணி பார்க்க ஆசை பட்டீன்னா உடனே கிளம்பி கிருஷ் வீட்டுக்கு வா…”

…………..

எல்லாமே நமக்கு எதிரா தான் இருக்குஅப்பா வேணாம்.. நீ மட்டும் வா மம்மி. உன்னால தான் அவங்கள சமாளிக்க முடியும்….”

……….

ஓகே மம்மி தாங்க்ஸ்.. நாளைக்கு காலையிலேயே எதிர்பார்க்கிறேன் உன்னைபை….”

 

பேசி முடித்ததும் விக்ரமிடம்,

 “மம்மி காலையிலேயே இங்க இருப்பாங்க.. மிச்சத்தை அவங்க பார்த்துப்பாங்கவிக்கி இப்ப நம்ம வேலைய மொட்ட மாடிக்கு போயி பார்ப்போம்நீ ஆராவ மட்டும் டார்கெட் பண்ணு.. மத்தவங்களை நான் பார்த்துக்கிறேன்…”. நம்பியார் வேலைய நாசுக்காக செய்ய பிளான் போட்டபடி சீமாவும் ,விக்ரமும் தயார் ஆகினர்..

 

எல்லாவற்றையும் ஒட்டு கேட்டிருந்த வேதாவின் நெற்றி சுருங்கியது….

 

என்ன ஆச்சு, எதுவும் பிரச்சனையா..? எதையும் மறைக்காம சொல்லு டாலிஅவளை  ஒரு அறை விட்டு, கூட வந்த அந்த கரப்பான் பூச்சியயும் சேர்த்து நசுக்கி வீட்டுக்கு வெளியே தள்ளிட்டு வந்துடுறேன்….

 

அதெல்லாம் பிரச்சினை ஒன்னும் இல்ல இளா.. அவளை நான் பார்த்துக்கிறேன்.” ஆராவிடம்,

லட்டு நீ போயி அண்ணனோட டிரஸ் எதாவது எடுத்து இளாவுக்கு கொடுமாத்தினதும் அவனை அழைச்சிட்டு மொட்ட மாடிக்கு வா..”

 

 ரெண்டு பேரையும் அனுப்பியவர், சீமா விக்ரம் பேச்சை ரோஜாவுக்கும் ,கிருஷிர்க்கும் போட்டு காண்பித்தார்….  ரெண்டு பேரும் அதிர்ச்சியாக,

 

கிருஷ், “அம்மா இவ ஒரு ஆளுண்ணு வீட்டுக்குள்ள விட்டது தப்புஇளா சொன்னதை நான் போயி செஞ்சிட்டு வரேன்..”

 

நமக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் இல்லையா கிருஷ். இளாவுக்கும், ஆராவுக்கும்  இதெல்லாம் எதுவும் தெரிய வேணாம்.. தேவை இல்லாமல் சீம சிங்காரிய சண்டை போட்டு  பெரிய ஆள் ஆக்கிவிட கூடாதுஎக்காரணத்தைக் கொண்டும் ஆராவ அவங்க நெருங்க விடக்கூடாது அவ்வளவு தான்…. கற்பகம் அண்ணி மேட்டரை நாளைக்கு பார்த்துக்கலாம்..”

 

வாங்க மாடிக்கு போகலாம்ரெண்டு பேரும் போயி படுக்கையை விரிச்சி விடுங்க மொட்டை மாடியிலநான் பழம் தண்ணி எல்லாம் எடுத்திட்டு வரேன்…”. நிலைமையை சுலபமாக கையாண்ட வேதா  ரோஜாவையும் ,கிருஷையும் அனுப்பி வைத்தார்

 

எல்லாரும் மொட்ட மாடிக்கு வர…., நம்ம ஹீரோயின் ஹீரோவுக்கு சட்டை எடுத்து கொடுத்திட்டு இருந்தாள்……. இளா ,ஆராவிடம்

 

இது வேணாம், அந்த டீ ஷர்ட்ட கொடு லட்டு…..”

 

இதையே போட்டுக்கோ நல்லாயிருக்கு இளா…..”

இளா அவள் கொடுத்த டிராக் பாண்ட், டீ ஷர்ட் சகிதம் டிரெஸ்ஸிங் ரூமிற்குள் புகுந்தான்……

சீமா அண்ட் கோ முதல் மாடிய கிராஸ்  பண்ணும்போது  ஆராவின் குரல்   காதில் விழ….., ப்ரேக் போட்ட சீமா …, வா உள்ள போவோம்…. உன் குருவி உள்ள தான் இருக்கு என்று விக்ரமிடம் கிசு கிசுத்து  கிருஷ் ரூமிற்குள் அழைத்து சென்றாள்..

 

மொட்ட மாடிக்கு போன கிரிஷும் , ரோஜாவும் ரெடி ஆக ரூமுக்கு திரும்பவேதா வகுத்து கொடுத்த திட்டபடிஎது நடக்க கூடாதுன்னு  பிளான் போட்டார்களோ…. அது தானாகவே நிகழ்ந்ததை பார்த்து உறைந்து போனார்கள் இருவரும்…….

ஆரா தாமாக முன்வந்து விக்ரமிடம் பேசிக் கொண்டிருந்தாள்…….

 

(நாடகம் விடும் வேளை தான் உச்ச காட்சி நடக்குதம்மா…….

சும்மா உள்ளு லுவாய்க்கு பாடினேன்…..)

 

 

  • சாரா….

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!