கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
அத்தியாயம் 6B
சிரித்தபடியே ஃபோனை கட் செய்தான் இளமாறன். குழப்பம் தெளிந்திருந்தது அவனுக்கு…. மனம் லேசாக…. நமக்கு ஆராவதான் பிடிச்சிருக்கா…? எப்படி கண்டுபிடிக்கறது…?
கிளிக்,
நம்ம வேதா டார்லிங் செம்ம ஐடியா கொடுத்திருக்கு, இப்பவே மனசுக்குள்ள ஒரு சுயம்வரம் வச்சிடுவோம்…..
கண்ணை மூடியவன், மனதிற்குள் கற்பனை காட்சியாக விரிந்தது….
இளா,
சுயம்வரம்.., பீச்சில் … ஒரு ஈஸிசேரில் உட்காருவோம்….இளா அமர்ந்ததும், ஒன்றிரண்டு தூறல்கள் மேலே விழுந்தது. அய்யோ இப்ப லைட்டா மழைதூர்ரது போல இருக்கே…
இந்த கிருஷ் பையன் கையில குடைய கொடுத்திடுவோம்.. மழையில் நனைந்தபடியே குடைய பிடித்திருந்த கிருஷின் முகம் கோபத்தில் குடைமிளகாயா சிவந்திருந்தது..
“நான் எங்க போனாலும் நீ என் கூடவே இருக்கணும்… ஏன்னா நீ என் நண்பேண்டா…..” கிருஷுடம்..
சரி அவன்கிட்ட என்ன வெட்டி பேச்சு நமக்கு..?நமக்கு சின்ன வயசுல இருந்து நெருக்கமான பொண்ணுங்கள வரிசையா வரவைப்போம்……இளாவின் கற்பனையிலும் அவன் மனசாட்சி ஆர்டர் போட்டது..
முதல்ல பொற்கொடி அத்தை….. அழகான பூசின உடல்வாகோட…உருண்டை முகம், ஆழமான கண்களோட , கூர்மூக்கு, எப்போதும் நாமதொட்டு பார்க்கும் புஸ்புஸ் கன்னம்.. … உம்…ம்…ம்மா…… அத்தை…………
“வெயிட்…! வெயிட்…! டேய் இந்த முகத்தை எங்கயோ பார்த்தது போல இருக்கே…..?
யுரேகா…! இவங்க.. ஆராதான…? இல்லையோ.
அடேய் அது ஆராவோட அம்மா…அடப்பாவி ஆராவ கல்யாணம் பண்ண சுயம்வரம் வச்சா அவ அம்மாவை கூட்டிட்டு வந்திருக்க முதல்ல, ராஸ்கல் அச்சுபிச்சு…” கிருஷ் எதிர்ப்பைகாட்ட
இளா கண்டுகொள்ளாமல்,
“நீங்க ஏன் இந்த முட்டை கண்ணு மாமவ கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அத்தை?…நான் பெரியவனாகுறவரை வெயிட் பண்ணியிருக்கிலாம் இல்ல…? “
அதற்கு பொற்கொடி சிரிப்புடன் இளாவின் நெற்றியில் முத்தம் கொடுக்க…….
இடையில் ,
“ஹலோ..!”
நம்ம கிருஷுதான் குறுக்கிட்டான்…
“ஏண்டா ஆவியவே சைட் அடிக்கிற பாவியா இருக்க…?எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு. அவங்களை போக சொல்லுடா…இல்லைன்னா நான் உன் சுயம்வரத்தில் இருந்து வெளிநடப்பு செஞ்சிடுவேன்…”
அவனை முறைத்த இளா,
“நீங்க போங்க அத்தை, நீங்க எனக்கு முத்தம் கொடுத்தத பார்த்து இவன் காண்டாகிட்டான்… நாம அப்புறமா மீட் பண்ணிப்போம்…” (அப்புறமாவா…..?)
அடுத்தது, நம்ம பக்கத்து வீட்டு நித்யா அக்கா,
அழகாய் பாவாடை தாவணியில், அவனை தூக்கிமடியில் வைத்து கொண்டு…..,. ‘ அ‘போடுங்க செல்லம்….. , ஐந்து வயது இளாவிர்க்கு ட்யூஷன் எடுத்து கொண்டிருந்தாள்…
அவளிடமிருந்து வந்த கோகுல் சாண்டல் பவுடர் மணம் … இளாவை இழுக்க…அவனை போகவிடாமல் கிருஷின் கை இழுத்தது…
“ என்னடா வேணும் உனக்கு…?” கிருஷ்ஷிடம் கடுப்பாக கேட்டான்.
அதற்கு கிருஷ்,”முதல்ல ஆவி அடுத்தது ஆன்டியா…?,”
“ஆண்டியா…? டேய் நித்யா அக்காடா.. “
“அஞ்சு வயசுலதான் உனக்கு அக்கா.. இப்ப அவங்க நாற்பத்தி இரண்டு வயசு ஆன்டிடா..”
“நீங்க போங்க ஆன்டி அவன்தான் கூப்பிட்டான்னா , நீங்களும் வந்துட்டீங்க.” நித்யாவை அனுப்பி வைத்தான் கிருஷ்.
அடுத்தது ஜெயந்தி டீச்சர்….
“நிறுத்து…! ஏண்டா ஆவி, ஆன்டி, அடுத்து ஆயாவாடா…? உனக்கு ஈக்வலா,உன் வயசுல, உன்னை விட கொஞ்சம் வயசு கம்மியா யாரையும் தெரியாதா…?ஸ்கூல்ல விட்டுட்டு வெளியே வாடா…”ஆரம்பத்திலேயே ஜெயந்தி டீச்சர்க்கு எண்டு கார்டு போட்டுட்டான் கிருஷ்.
அதற்கு இளா.., “ஏன் தெரியாது…? அடுத்ததா வர்றா பாரு… நம்ம காலேஜ் கனவுக்கன்னி ரம்யா.”
ஒயிட்சுடியில் , தேவதையாய் அவள்வர, சுற்றி பத்து பசங்க லவ்லெட்டர் கொடுக்க டிரை பண்ண… அவள் பார்வை இருந்ததோ நம்ம இளமாறன்மீது…அவள் ஏக்கமாக பார்க்க…..
“டேய் போதும்டா… உன்னை சைட் அடிச்சதினாலதான் என்னை ரிஜெக்ட் பண்ணினாளா ரம்யா… அப்பவிட்டுட்டு இப்ப எதுக்குடா கூப்பிட்ட அவளை…அவ புருசனுக்கு யார் பதில் சொல்றது…?”
“ரம்யாவுக்கு கல்யாணம் ஆயிட்டா..? என்னைய புரோப்போஸ் பண்ணினாடா. பாரு கல்யாணத்துக்குகூட என்னை கூப்பிடல அவளை….”
“போடா… இப்பதான் தெரியுது.. அவளே காதல் தோல்வியில்தான்.. காக்காபோல இருந்த ஒருத்தனை அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டாபோல… இதுல உங்களை வேற கூப்பிடனுமா…?அடுத்த ஆளை சட்டுபுட்டுன்னு கூப்பிடு…” கிருஷ் கத்த…,
இளா,
சரி அவ போய் தொலையுறா… அடுத்து வர்ற போறது என் டார்லிங் வேதாஜி……கனிவோடு வேதா வர, அவரை அழைத்து வந்தாள் ரோஜா….
“வேதாஜியா…! செருப்பு பிஞ்சிடும்…! அது என் மாத்தாஜி” உச்சகட்ட கொலைவெறியில் கிருஷ்.
வேதாவிடம் திரும்பி… ,
“இங்க பார்.., தாய் கிழவி, அவன்தான் கூப்பிட்டன்னா, கூச்சமே இல்லாமல் நீயும் ஃபேர் அண்ட் லவ்லி அப்பிளை பண்ணிட்டு ,வந்திருக்க,”
ரோஜாவை பார்த்து ,”இதுல துணைக்கு ஒரு வினை… ரெண்டு பேரையும் கோதண்டதுக்கிட்ட பார்சல் பண்ணிடுவேன் ….ஓலா புக் பண்ணி ஓடுங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு…. இவன் பார்வையே சரியில்லை”
என்றபடி, அவர்களை விரட்டிவிட்டு இளாவை முறைக்க…
இளா அவனை கண்டு கொள்ளாமல், ஃபோனில் ,
“வந்துட்டியா பேபி…. ஐ அம் வெயிட்டிங்….. “
ஃபோனை வைத்துவிட்டு,
கிருஷிடம், விடு மச்சான்.., அடுத்த வர்ற ஆளை பார்த்தா, நீ அப்படியே ஆஃப் ஆயிடுவ…
பேபின்னு சொல்றான், ஒரு வேளை நம்ம ஆயாவ கூப்பிட்டு இருக்கானா…. பதற்றத்துடன் பார்த்தவன், உள்ளே வந்தவளை பார்த்ததும் உண்மையில் கிருஷ் ஆஃப் ஆகிவிட்டான்…
வந்தது , சன்னிலியோன்..,!!!!!!!
(சன்னியுமா உன்ஃபேவரிட் பொண்ணுங்க லிஸ்ட்ல இருக்கா….பேட் பாய்….! வெரிவெரி பேட்பாய்…!)
“எப்படி என் டேஸ்ட்…?.?“ இளா காலரை தூக்கிவிட்டு கேட்க..
“நல்லாத்தான் இருக்கு… ஆனால் அவங்க பாட்டுக்கு புருஷன், குழந்தைகுட்டின்னு நிம்மதியா இருக்காங்க.. அவங்களை எதுக்குடா கூப்பிட்ட..”
“ஆமாம் இல்ல.. சரி நீங்க போங்க மேடம்… “ இளா அனுப்ப,
கிருஷ் அவனிடம்,”இருடா… நான் போய் மேடம்ம வழி அனுப்பிட்டு வந்துடறேன்.” ஜொள்ளின்னான்…,
“ஒண்ணும் தேவை இல்லை, அவங்களே போயிப்பாங்க…. சுயம்வரம் முடியிறவர எங்கேயும் போககூடாது நீ.. என்கூடதான் இருக்கணும்..“
இளா கண்டீஷனில் கிருஷ்,. கிர்….… கிர்…..
“சரிடா, இதுவரை உன் சாய்ஸ்… இனிமே நான் செலக்ட் பண்றவங்கதான் வருவாங்க….” கடுப்பான குரலில் கிருஷ் கூற…
“சரி அனுப்பு , பார்ப்போம்”…. – இளா
“வாம்மா மின்னல்….!”
கிருஷ் கூப்பிட,
சரக்……………………!
மின்னலாய் வந்தவள் சிலுக்கு சீமா…
இளா,
“எதுக்குடா இவளை வர சொன்ன…?”
“நீ மட்டும் ரம்யாவையும், சன்னிலியோனையும் கூப்பிட்டு என்னை காண்டாக்குல….…?அதான் இப்ப என்டர்ன். , டிட் ஃபார் டாட்.”
அவனை முறைத்தவன்,
“போடி…வெளியிலே … வந்த கடல்ல தள்ளி கொன்னுடுவேன் உன்னை…” இளா மிரட்டி சீமாவை துரத்திவிட்டான்.
சிரித்தபடி கிருஷ்,
“நெக்ஸ்ட்…”
சொன்னதும் வந்ததது, ஆராதனா….
இளாவின் கண்கள் விரிந்தது….
குண்டு கன்னங்களும், கோலி குண்டு கண்ணுமாய் குட்டி பாப்பாவாக, இளா….. என்று கூவியபடி ஆராதனா ஓடிவர…. இளா இரண்டு கையையும் விரித்து என்னிடம்வா என்று அழைத்தான்….
…………………………………… அவனிடம்ஓடிவந்த
குட்டி ஆராதனா அருகில்வரும் போது குமரி ஆராதனா ஆகியிருந்தாள்…
ஒரு நிமிடம் புகைகிளம்பியது இளமாறன் மனதில்….ஆராவா….யோசிப்பதற்குள்….
பப்ப்……………………பப்…!
இறுக்கி அணைத்து கொண்டாள் இளாவை…. ஆராவின் பஞ்சுதேகம் …,. அவனைஉரச …,. இளாவின் மனதிற்குள் பரபரவென நெருப்பு பற்றியது …நெருப்பில் இளாவின் தேகமும் எரிய… பஞ்சும் நெருப்பும்மாய் பற்றி எரிந்தது காதல் தீ…..
ஜுவாலையில் இளாவின் குழப்பங்களுடன் சேர்ந்து கிருஷ் காணாமலே போனான்..
காதல் தீ இருவரையும் இன்னும் இறுக்க, பின்னி பிணைந்த இருவரும் தகிப்புடன் இன்னும்.., இன்னும்…, அவர்களுக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தனர். ஆராவின் உதடுகளை ஆசையுடன் கவ்விக் கொண்டான். உடல் முழுவதும் இனம்புரியாத உணர்வு ஓட, கைகள் முழுபெண்ணாய் மாறியிருந்த ஆராவை அளவிட்டு கொண்டிருந்தது. ஆராவும் ஒத்துழைக்க, இருவரும் முத்தகடலுக்குள் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தனர்…உதடுகள் ஒன்றின் உள்ளே ஒன்றாக காணாமல் போயிருந்தது… அவர்களின் காதல் தீ .. மோகத்தீயாய் மாறி வெகுநேரம் ஆகியிருந்தது…
இளா, ஆராதனா உடலிலிருந்து பரவிய ஜூவாலை , கடற்கரையிலிருந்து, கடல் நீரிலும் பரவியது…. தூரத்தில் ஒருக ப்பல் , அதை நோக்கி தீ வேகமாக பரவ……. கப்பலில் இருந்து அபாய ஒலி , ஒலிக்கிறதோ…..?
பாம்…,…………பாம்…………..பாம்…………..
விருக்கென்று ,கண்ணைத் திறந்தான் இளமாறன்….
அவன் காரைத் தாண்டி மற்றொரு கார் அதிவேமாக ஹாரன் ஒலியுடன் சென்றுகொண்டிருந்தது…
நல்ல வேளை இந்த கார் நம்ம கனவை கலைச்சது….இல்லன்னா……அய்யோ நம்ம காதல்த்தீயில கடலேஎ ரிஞ்சிடுச்சே இளா….? ( அதுகாதல் தீயில்ல அப்பு……., காமத்தீ )
அவனுகுள்ளாகவே கேள்வி கேட்டு கொண்டவன், மழைகுளிரிலும் வேர்த்திருந்த முகத்தை டிஷ்யூவால் துடைத்து கொண்டான்….’டேய்இளா…, காதல் உனக்கு ஸ்டீம்பாத் கொடுத்திடுச்சா….?’என்றபடி சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்…..
உடலெங்கும் இனம் புரியாத அவஸ்தை… உடலுக்கு உள்ளிருந்து யாரோ கிச்சுகிச்சு மூட்டுவதுபோல இருந்தது…….. வைரமுத்து சார் இப்படி புழுகிட்டீங்களே…?, அடிவயிற்றில் பந்து உருளல …, பாறாங்கல்லே உருளுது சார்….…. வைரமுத்துவிடம் நியாயம் கேட்டவனுக்கு , இந்த விஷயத்தை யார்கிட்டயாவது சொல்லியே ஆகணுமே ….என்று யோசித்தவன்….,
வேதாவிற்குஅழைத்தான்..
“இப்பதானடா பேசிட்டு வச்ச…..?” வேதா குரலில் ஆச்சர்யம்.
“ஆமா டார்லிங்… உன்கூட போட்டிபோட ஆளு ஃபிக்ஸ் பண்ணிட்டேன்…” – இளா.
“அடேய் , அதுக்குள்ள எப்படிடா….?
“ஆமா, எல்லாம் சுயம்வரம் வச்சுதான். கடைசியா அவ கிடைச்சுட்டா…”
ஆராதான…?”
“எப்படி டாலி…? அதான் என் வேதாஜி ,ஐ லவ் யூசெல்லகுட்டி”
“ம்க்கும்….. கையிலேயே இருக்குதாம் கொழுக்கட்டை, அதை தேடிக்கிட்டு போகணுமாக்கும் பட்டுக்கோட்டை… ….. “
“கொழுக்கட்டை பஞ்ச்..,விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஆஹ் டாலி….”
“ஆமாண்டா…, துப்புகெட்ட துடப்பகட்டை….. இப்ப என்னத்துக்கு எனக்கு ஃபோன் பண்ணின….?”
“எனக்கும் லவ் வந்திட்டுன்னு யார்கிட்ட சொல்றது…? அதான் உன்கிட்ட சொல்லனும்னு பண்ணினேன் டாலி…. ஐ லவ் யூ டாலி… எனக்குள்ள பொங்குற காதல் வெள்ளத்தை கட்டுபடுத்த முடியல டாலி”
“புதுசா ஆறு உருவான அப்படி தான் பாதை தெரியாமல் வெள்ளம் பாயும்.நான் வேணும்னா பென்னிகுவிக்க்கு ஈமெயில்அனுப்பி பார்க்கவா.. வந்து பெரியாறவிட பெரிய டாம்மா கட்டுவாரு.பெரிசா காதல் சொல்ல வந்துட்டான்…..ஆராகிட்ட சொல்லாம ல்என்கிட்ட எதுக்குடா சொல்ற….?”
(அதானே செக்குமாட்டுக்கு வடக்கு எது தெற்கு எதுன்னு தெரியாதாம்…. அதுபோல இல்ல இருக்கு…)
“எனக்கு தெரியாது , அந்த கிக்கைக் விக்கா அனுப்பு டாலி…நான் ஐ லவ் யூ உன்னையும்தான்…. ….”
வம்பு வளர்த்து கொண்டிருந்தான்….
“போடா போக்கிரி.., இன்னைக்கு ஷாப்பிங் கேன்சல், சரி உடனே கிளம்பி வீட்டுக்குவா.. அந்தத்தடியன் , பாங்கோவா பஜ்ஜின்னு ஜொள்ளு உட்டுகிட்டே சாப்பிட்டான்..
அதான் அவனுக்காக, வாழைக்காய் பஜ்ஜி போடலாமுண்னு இருக்கேன்..சட்டினி எல்லாம் அரைச்சுரெடி ஆகஇருக்கு. இனிப்பு செய்தி சொன்ன சக்கரைகட்டிக்கு, பால்கோவா செஞ்சு வைக்கிறேன் சீக்கிரம் வாடா…”
“இனிப்புன்னா கிச்சனைவிட்டு நகராமல் உட்கார்ந்திருப்பாளே லட்டு…, அவகிட்ட செஞ்சுகொடு டாலி…”
“காலையில நீங்க ரெண்டு பேரும் ,போன உடனே குலாப்ஜாமூன் செஞ்சா ரோ.., செஞ்சு முடிச்சதிலேயிருந்து, பாகுல ஜாமூன் ஊறிடுச்சான்னு பார்க்குறேன்னு, பாதிய காலிபண்ணிடுச்சு லட்டு… ஜாமுனை ஊறவிடல, உள்ள லட்டுதான் ஊறிகிட்டு இருக்கு.”
“அடடா… ஒரு குலாப்ஜாமுனே ,ஜாமுன் சாப்பிடுகிறதே……! ஆச்சரியக்குறி…. “
“இப்ப அங்க நான் வந்தேன்னா………உன் நெஞ்சிலெயே ஏறி ஒரு மிதி………..சரி.. உடனே கிளம்பி வர்ற…”
“ உன் பாதம்பட காத்திருக்கிறது என் நெஞ்சம்…” என்று கவிதைபாட
“அப்பாசாமி.., ஆளை விடுடா…உன் காலில வேணும்னா விழரேன்…” வேதா கதற….
“காலுல விழறியா அதெல்லாம் , மேரேஜ்க்கு அப்புறம் பார்த்துக்கலாம்டார்லிங்….”
“வேணாண்டா நான்அழுதுடுவென்… உனக்கு பால்கோவா வேணுமா வேணாமா….? இப்படியே என்னை கடுப்பாக்குன…, அப்புறம் சுகர் இருக்கும்ன்னுகூட பார்க்காமல் மொத்ததையும் சுவாகா பண்ணிடுவேன்…..”
“நான் கண்டிப்பா வர்றேன்… என்னை நேர்ல பார்க்கணும்னு சொன்னா உடனே ஓடிவருவேன் டாலி …இப்ப எதுக்கு பால்கோவாவ காரணம் காட்டி கூப்பிடற..? ஐ லவ் யூ டார்லிங்…”
“அய்யோ பைத்தியமாயிட்டியாடா பாவி…! உன் லவ் எல்லாத்தையும் வந்து ஆராகிட்ட காட்டு.. நான் இப்போ ஃபோனை வைக்கிறேன்.. “ சிரித்து கொண்டே ஃபோனை வைத்தார் வேதா.