Kumizhi-12

நேசம்-12

புதிதாய் வாங்கிய செல்போஃனின் தொடுதிரையை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சிவனியா. விடாப்பிடியாக பாண்டியன் அவளை இழுத்து எடுத்துக்கொண்ட செல்ஃபியில் இருவரும் பொருத்தமான ஜோடியாய் சிரித்துக் கொண்டிருந்தனர்.

‘என்ன ஆச்சு எனக்கு? லவ் வந்தது உங்களுக்கு தானே வருமாமா? என்னென்னோவோ பேசி என் மனசை மாத்திடீங்க! நானும் எதையும் யோசிக்காம அம்மா ஓகே சொன்னா சரின்னு சொல்லி வச்சுருக்கேன். அவங்க கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாம முழிக்கப் போறேன். இப்போவும் உங்களால எனக்கு சிக்கல் தான்’ என சந்தோஷ புலம்பலில், தன் அன்னையிடம் என்ன பதில் சொல்வதென்று மனதோடு ஒத்திகை பார்க்கத் தொடங்கினாள்.

மதுரையில் ரவியையும், ராமலிங்கத்தையும் தன் வீட்டிற்கு அழைத்த செங்கமலம், கனிமொழியையும் உடன் நிறுத்தி தன் கோபத்தையெல்லாம் ஆதங்கமாய் கொட்டித் தீர்த்து விட்டார். பாண்டியன் தன் மகளை பார்க்கச் சென்றதை வன்மையாக ஆட்சேபித்தார். அதற்கு உடந்தையாய் இருந்த அனைவரையும் தன் சுடு சொற்களால் வதக்கி எடுத்தார்.

சென்னையில் இருந்து வந்த பாண்டியன், தன் அன்னையிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்க, அவரும், அவன் நினைத்ததைப் போல் சொல்லி வைத்தார்.

“எனக்கு வேண்டியது உன்னோட கல்யாணம். வாழப் போறது நீ, உனக்கு அவ ஒத்து வருவாளான்னு பார்த்துக்கோ!, அவசரப்பட்டு முடிவெடுத்து அப்பறம் கைய கடிக்குதுன்னு சொல்ல கூடாது. செங்கமலம் பேச்சு கூட முன்ன மாதிரி இல்ல! அதையும் மனசுல வச்சுக்கோ வருணா!”

“பாப்பா சம்மதம் சொல்லிட்டாம்மா… அத்தை கிட்ட மட்டும் தான் கேக்கணும்” மகனின் பேச்சு கோதைக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

‘நாம தான் சின்னஞ்சிறுசுக மனச புரியாம இருந்திருக்கோம் போல? எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி’ என மனதோடு நினைத்து செங்கமலத்திடம் பெண் கேட்க மகனுடன் சென்றார்.

செங்கமலம் லேசில் ஒத்துக் கொள்ளவில்லை. திருமணம் நடப்பது சாத்தியமில்லை என்றும், தன் மகள் ஒத்துக் கொள்ள மாட்டாள் என்றும் சொல்ல, உடனே பாண்டியன் சிவனியை அழைத்து பேச வைத்தான்.

“அவகிட்ட செல்போஃன் இல்ல, எப்படி இந்த நேரத்துல பேச முடியும்?”

“நான்தான் வாங்கி குடுத்துட்டு வந்தேன், நீங்க திட்டுவீங்கன்னு பயந்தே சொல்லாம விட்டுட்டா” தனக்கு தெரியாமல் இன்னும் என்னென்ன நடந்திருக்கிறதோ என்ற நினைவே மனதை சுருக்கென தைக்க, மேற்கொண்டு எதுவும் பேசாமல் சிவனியா பேசுவதை கேட்க மட்டுமே செய்தார்.

லவுட்ஸ்பீக்கரில் அனைவருக்கும் கேட்கும் படி தான் பேச்சே நடந்தது.

“அம்மாகிட்ட பேசு சிவனி! நம்ம கல்யாணத்தை பத்தி சொல்லிருக்கேன், நீ என்கிட்டே சொன்னத அத்தை கிட்ட சொல்லு”

“என்னடி இது? உன்னை வேலை பாக்க சொன்னா, என்ன செஞ்சு வைக்கிற?”

“இல்லம்மா… நீ சம்மதிச்சா மட்டுமே தான் ஒகேன்னு சொல்லிருக்கேன், உனக்கு பிடிக்கலன்னா வேணாம்”

மகளின் இந்த பேச்சிற்கு என்ன அர்த்தம்? அவளும் இந்த திருமணத்தை விரும்பித்தானே தன் ஆதரவை எதிர் பார்க்கிறாள். அனைவரும் இவர்களின் திருமணத்தை வரவேற்கும் போது, தன் எதிர்ப்பு ஒன்றே தடையாக தெரிந்தது.

பாண்டியனை எதிர்த்தவருக்கு, கோதைநாயகி பெண் கேட்டு வரும் போது மறுக்க தோன்றவில்லை. பல வருடங்கள் அவர் நிழலில் இருந்தது அந்த சமயத்தில் நினைவிற்கு வந்து, மனதை நெருடச் செய்தது.

“உனக்கு வேண்டியது நீதான் சொல்லணும் சிவா! இன்னும் நீ சின்ன பொண்ணு இல்ல”

“உனக்கு பிடிக்காத எதுவும் எனக்கு வேணாம்மா”

“அம்மாவும் பொண்ணும் இப்டியே மாத்தி பேசினா எப்டி? பொண்ணுக்கு பிடிக்க போய் தானே உன்கிட்ட பேச சொல்லியிருக்கா? சரின்னு சொல்லி ரெண்டு பேரையும் சேர்த்து வை செங்கமலம்! இந்த அப்பா பேச்ச இப்போவாவது கேளு” என ராமலிங்கம் தன் போக்கில் சூழ்நிலையை கையில் எடுத்து, செங்கமலத்தின் சம்மதத்தை பெற்று விட்டார்.

சரியென்று சொன்னாலும், மனப்பூர்வமான ஒப்புதல் இல்லை, அவருக்கு ஏனோ தன் மகள் தன்னை விட்டு வெகு தூரம் சென்று விட்ட எண்ணம் நெருஞ்சி முள்ளாய் குத்த ஆரம்பிக்க, அன்றிலிருந்து தினமும் மகளிடம் பேசுவதை கூட குறைத்துக் கொண்டார். தன் மனதின் நெருடல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் அமைதியாய் இருக்க, திருமண வேலைகள் யாரையும் எதிர்பார்க்காமல் தங்கு தடையின்றி நடந்தது.

பாண்டியனும் தன் திருமண வேலைகளுக்கு யாரையும் முன்னிறுத்தவில்லை. அனைத்தையும் தானே பொறுப்பெடுத்து உற்சாகமாய் செய்தான். செங்கமலத்திடம் பேசும் பேச்சு குறைந்து போனதையும் மறக்கடிக்கும் வண்ணம், பாண்டியனின் அழைப்பு சிவனியாவை கபளீகரம் செய்து கொண்டிருந்தன.

“இப்டி அடிக்கடி போஃன் பேசினா எனக்கு மெமோ குடுத்துருவாங்க மாமா… நைட் பேசுவோம்”

“இப்போ சேலை கடையில இருக்கேன், டிசைன் பாக்கணும்ன்னா வீடியோ காலுக்கு(call) வா”

“இப்போ முடியாது… உங்களுக்கு எது பிடிக்குதோ, அத எடுத்து வைங்க, அதுல ஒண்ணு செலக்ட் பண்றேன்”

“பத்திரிக்கை டிசைன் செலக்ட் பண்ணியாச்சா சிவு?”

“உங்களுக்கு பிடிச்சதே இருக்கட்டும், இங்கே எனக்கு நேரம் இல்ல மாமா… இந்த புராஜெக்ட் முடிக்கிற வரை என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க”

இப்படியாக ஒவ்வொன்றையும் தாயிடம் கேட்காமல் பாண்டியனின் மேற்பார்வையில் அவளும் விட, முற்றிலும் அவன் ராஜ்ஜியம் ஆகிப் போனது. சூழ்நிலைகளோ அல்லது அவனது காதல் கொண்ட மனமோ சிவனியாவை தவிர்த்து வேறு யாருடனும் பேச முயலவில்லை. அதன் பலனாய் செங்கமலத்திடம் பேசுவதை அறவே மறந்தான். பெண் வீட்டாரின் வேலைகளையும் தனதாக்கி கொள்ள, கமலம் ஓரமாய் ஒதுங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. கோதை நாயகியும் வேலை மிகுதியால் அவரின் ஒதுக்கத்தை அறியவில்லை.

பாண்டியன் சென்னை சென்று வந்த ஒரு மாத இடைவெளியில் ஊரின் பெரிய திருமண மண்டபம் ஒன்றில், வெகு விமரிசையாய், சிறப்பாய் திருமணம் நடைபெற்றது. அயராமால் உழைத்தவனுக்கு, கையிருப்பும் தளராமல் தாராளமாய் இருக்க, தன் திருமணத்தின் மூலம் தன் தகுதி இன்னதென்று நிரூபித்திருந்தான் பாண்டியன்.

ரவியின் திருமணமும் இடைப்பட்ட நாட்களில் முடிந்திருக்க அவனும் புது மாப்பிளையாய், தன் நண்பனை கிண்டலடித்த படியே, வேலைகளை தன் பொறுப்பில் எடுத்துச் செய்தான். மனமெங்கும் அவனுக்குதான் சந்தோசம் பொங்கி வழிந்தது. தன் நண்பன் பழையபடி மீண்ட சந்தோசமும், ஒரு அண்ணனாய், தங்கைக்கு செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் பொறுப்பாய் செய்த மகிழ்ச்சியும் அவனை உற்சாகத்துடன் வேலைகளை செய்ய வைத்தன.

திருமணத்திற்கு இரண்டு தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் உத்தங்குடிக்கு வந்த சிவனிக்கும் அடுத்தடுத்த வேலைகள் ஆக்கிரமித்துக் கொள்ள, தாயின் ஒதுக்கத்தை கவனிக்க மறந்தாள். அழகு நிலையம் சென்று தனக்கு வேண்டியதை செய்து கொள்வதற்கும், மற்ற தேவைகளை கவனித்துக் கொள்வதற்குமே நேரம் சரியாய் அமைந்தது.

மணமேடையில் வெண்பட்டில் மாப்பிள்ளை மிடுக்குடன், புன்னகை பூத்த முகமாய் அனனைவரையும் அமர்ந்த இடத்தில் இருந்தே வரவேற்றவனை பார்த்தவர்கள் ‘இவனுக்கு இப்படியும் கூட சிரிக்க தெரியுமா?’ என்றே தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.

அமைதியான அழகில் இருப்பவளும், அழகு நிலையத்தாரின் கைவண்ணத்தால் மேலும் பாந்தமாய் மிளிர, தன் சிவந்த நிறத்தையும் தோற்கடித்தவாறே இருந்த அரக்கு நிற பட்டில், வெள்ளை கற்கள் பதித்து, தங்க சரிகைகள் மின்ன, எழிலோடு வந்தமர்ந்தவளை கண்கொட்டாமல் பார்த்து வைத்தான் பாண்டியன்.

சலிப்பில்லாமல் தங்கள் வீட்டில் வளர்ந்த பெண் என்று சொல்லிக்கொண்டே திரியும் அவனது கண்கள், அவளது வளர்ச்சியை முதன் முதலாய் அங்குலம் அங்குலமாய் ரசித்து பார்த்து வைத்தது.

“சிவும்மா நெஜமாவே நீதானா? இல்ல ரூம்ல இருந்து வரும்போது ஆள் மாறாட்டம் ஏதும் நடந்துச்சா? இவ்ளோ பெரிய பொண்ணா தெரியுற? கல்யாண சேலையில பாக்குறது, அவ்ளோ அழகா இருக்க… எனக்கு மட்டுந்தான் இப்படி தெரியுதா? இல்ல எல்லோர் கண்ணுக்கும் இப்படி தெரியுறியா?”

“ஒரு மைக் பிடிச்சி கேக்க வேண்டியது தானே மாமா? சந்தேகம் தீர்ந்துரும் உங்களுக்கு…”

“இன்னைக்கு கல்யாணம் சியாபாப்பா… கொஞ்சம் பேச்சைக் குறைக்க பாரு”

“அதே தான் வருமாமா… உங்க வாய்க்கும் ஜிப் போட்டு வைங்க”

“ரெண்டு பேரும் பேசுறத நிறுத்திட்டு மந்திரத்த கவனிங்கோ, அப்புறம் காலம் பூரா பேசிண்டே இருக்கலாம்” என புரோகிதர் சொல்ல, பேச்சைக் குறைத்தனர்.

மணப்பெண்ணுக்குரிய நாணம், அச்சம் என எதுவுமே சிவனியாவை ஆட்கொள்ளவில்லை. தெரிந்த மனிதர்கள், வளர்த்த உறவுகள் என அனைவரும் பழகிய மனிதர்களாய் இருக்க, திருமதிக்கு அளிக்கும் வெகுமதியாய் வருணபாண்டியனின் கைகளால் அணிவித்த திருமாங்கல்யத்தை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள்.

கணவனின் கரம் பிடித்து அக்னியை வலம் வந்த காரிகைக்கு அந்த நிமிடத்து சந்தோஷம், ஆனந்தக் கண்ணீராய் தன்னையும் அறியாமல் வெளி வர, இந்த திருமணத்தின் மீதான தனது எதிர்பார்ப்பை அவளுக்கு அழகாய் எடுத்துக் காட்டியது.

“இந்த சந்தோஷத்தை வாழ்க்கை முழுவதும் எனக்கு கிடைக்க செய் ஆண்டவா!” என மனதிற்குள் இறைவனை வேண்டவும் செய்தாள் அந்த அடாவடிப் பெண்.

காலில் மெட்டியை இறுக்கி மாட்டிவிட்டு “வலிக்குதா பாப்பா?” என்ற கணவனின் பேச்சைக் கேட்டு, மனது குதூகலித்ததின் காரணம் காதல் மயக்கமா இல்லை திருமணத்தின் தித்தித்திப்பா அவளுக்கே புரியவில்லை. மொத்தத்தில் பாண்டியனுக்கு எதிர்பார்த்த சந்தோசத்தை தந்த திருமணம் சிவனியாவிற்கு எதிர்பாராத ஆனந்தத்தை அளித்தது.

திருமண விருந்திற்கு இருபத்தியோரு வகையான தென்னிந்திய உணவு வகைகள் இடம் பிடிக்க, வரவேற்பிற்க்கு அதே அளவிலான வடஇந்திய உணவு வகைகள் அமர்களப்படுத்தி, அனைவரின் மனதையும், வயிற்றையும்  திருப்திப் படுத்தின.

வரவேற்பில் மயில்நிற காஞ்சிப் பட்டுத்தி, வெள்ளி சரிகையில் பாந்தமாய் இருந்தவளைப் பார்க்க, பாண்டியனுக்கு தன் கண்கள் போதவில்லை எனலாம். ‘எப்போவும் இப்படி தான் இருக்குறாளா? நாம தான் கவனிக்காம இருந்திருக்கோமா?’ மனதிற்குள் விசிலடித்தபடியே

“அசத்துற சிவும்மா… இன்னைக்கு என்ன சோப்பு போட்டு குளிச்ச? அவ்ளோ ப்ரைட்டா தெரியுற?”

“இப்படி கிண்டலச்சு உங்க வழிசலை மறைக்க பாக்காதீங்க மாமா! அப்படியே கொட்டுது, யாரையாவது கூப்பிடவா பிடிச்சு வைக்க?”

“சரி சரி ஒத்துக்குறேன், நான் எப்டி இருக்கேன் சொல்லு?”

“உங்களுக்கு என்ன? சுப்பர் ஹாண்ட்சம் ஹீரோ, டெரரா இருந்தா எப்டி இருப்பாங்களோ அப்டி இருக்கீங்க வருமாமா!”

“தெரியாம கேட்டுட்டேன்… கமெண்ட்ஸ் போதும்”

“சும்மா சொன்னேன்… இன்னைக்கு சிரிச்சுட்டே அழகா தெரியுறீங்க, எனக்குமே டவுட் தான், என் வருமாமா தானான்னு?”

அந்த சமயம் அங்கே எட்டி பார்த்த ரவியும் சேகரும் தங்கள் போக்கில் சிவனியுடன் சேர்ந்து பாண்டியனை கலாய்க்க ஆரம்பித்தனர்.

“ஏன் சிவாம்மா  உனக்கு வேற மாப்பிள்ளை கிடைக்கலையா?” – ரவி

“தேடி இருந்தா கிடைச்சிருக்கும், அத செய்ய விடலண்ணே” – சிவனி

“இன்னும் கொஞ்சம் யோசனை பண்ணி இருக்கலாம் தங்கச்சி” சேகர் கிண்டலாய் சொல்ல

“தெரியாத பூசாரிய விட, தெரிஞ்ச பேய் நல்லது தானே அண்ணே!, அதான் யோசனை பண்ணறத தள்ளி வச்சுட்டேன்” – சிவனி

“அப்படி என்ன குறை கண்டுட்டே சிவனி!” பாண்டியன் கேட்க

“அத நான் சொல்றேன், கண்ணு இப்போவே மூட்டை பூச்சிய நசுக்கி போட்டது மாதிரி இருக்கு” – ரவி

“மூக்கு முறைச்சிட்டு நிக்குது” – சேகர்

“தலைமுடி முன்னாடி ரொம்ப ஏறிப் போய் பாதி வழுக்கை காமிக்குது” – ரவி

“அரை ஏக்கர் தெரியுது எனக்கு” என பின்னோடு வந்து சேர்ந்தான் கதிர்.

“கரெக்டா சொன்னடா கதிர், அப்புறம் உயரம் கூட அவ்ளோவா பொருந்தி வரல” – சேகர்

“ஆமாண்ணே! அக்கா கொட்டு போடறதுக்கு எம்பி எம்பி கஷ்டப்படனும்” – கதிர்

“குனிய வச்சு குமுறவும் செய்யலாம் கதிர்” இது சிவனியா

“கூடிய விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் சிவாக்கா!” – கதிர்

“இது நல்லா இல்லடா… உங்க எல்லோருக்கும் குளிர் விட்டு போச்சு” – பாண்டியன்

“நீ சிவனியானந்தா சுவாமிகளா ப்ரமோட் ஆனதுல இருந்து குளிர் இல்லண்ணே, பஜனை மட்டும் தான் களை கட்டுது” – கதிர்

“அடிவாங்கப் போற கதிர், நான் அக்கா, என் வீட்டுக்காரர் அண்ணனாடா?” – சிவனி

“அப்படி கேளு பாப்பா, இப்போ என்ன சொல்றீங்கடா? என் பொண்டாட்டிக்கு பதில் சொல்லு” – பாண்டியன்

“நீ எப்போவும் எனக்கு அண்ணனாவே இருண்ணே! அக்கா, அண்ணியா ப்ரோமோசன் வாங்கிக்கட்டும்”

“ஏண்டா மாமான்னு கூப்பிட்டு பாரேன்”

“இல்லண்ணே… என்னாலே மச்சான் முறை, சீர் எல்லாம் செய்ய முடியாது, இந்த அக்காவுக்கு விருந்து வைக்க என் ஜோல்னா பை தாங்காது. சோ நோ அக்கா…. அண்ணி… அண்ணி… நம்ம சிவாண்ணி” – கதிர்

“அடேய்! வீட்டுக்கு வா, அண்ணியோட பவர் என்னான்னு காமிக்கிறேன். இன்னையில இருந்து என்னோட கைப்புள்ள நீதாண்டா” – ரோசத்துடன் சிவனி சொல்ல,

“குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் ஒரு டன் ஆர்டர் போட்டுட்டு வந்துறேண்ணி, ஒரு வாரத்துக்கு தாங்குமா? இல்ல ஒரு நாளுக்கே காலி பண்ணிடுவீங்களா?”- கதிர்

“போடா… போடா… எத்தன டன் வேணும்னாலும், என் வருமாமா வாங்கி குடுப்பாரு, உன்னோட பிசாத்து ஒரு டன் நீயே வச்சுக்கோ” – சிவனி

“கதிர்! இப்போ நீ இடத்த காலி பண்ணல, இவளுக்கு ரொட்டி வாங்கியே என் சொத்த காலி பண்ணிடுவா! கொஞ்சம் பெரிய மனசு பண்ணி, வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்கடா” சந்தோஷ கிண்டல்களும், ஆர்பாட்டங்களும் மணமக்களை வளைத்துக் கொள்ள, அந்த இனிமையுடனே திருமண இரவை இருவரும் எதிர் கொண்டனர்.

வருணபாண்டியனின் பூர்வீக வீடு. மூன்று அறைகளும், சிறிய சமையலறையும் கொண்ட முற்றத்துடன் கூடிய அந்த கால கான்கிரிட் வீடு. வர்ணங்கள் பூசி, வண்ணக் கோலம் கொண்டிருந்தது. சிவனியா இங்கு வந்து சேர்ந்த ஆரம்ப நாட்களில் இங்கே தங்கி இருந்ததால், புதிய இடம் என்ற தயக்கம் இல்லை.

திருமண இரவின் தயக்கமும், படபடப்பும் இல்லாமல் தான் பாண்டியனின் அறைக்குள் நுழைந்தவள், மிகச் சாதாரணமாய் தான் கணவனை எதிர் கொண்டாள். பாண்டியனுக்கோ இவளது இந்த நிலை கண்டு சற்று ஆச்சரியம் தான்.

“வெட்கம்னு ஒண்ணு சொல்வாங்களே சிவனி! அது உனக்கு வராதா?”

“நமக்கு தேவை இல்லாதத நான் வச்சுக்குறதில்ல மாமா”

“இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் அதாவது தெரியுமா?”

“இப்ப தலை குனிஞ்சி வந்து, உங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கனுமா நான்?”

“வேணாம் தாயே! சொன்னாலும் கேக்குற ஆளாடி நீ?, கல்யாணப் பொண்ணா இல்லாம, ஆல் ரவுண்டர் அல்லிராணியா இருக்கியே அதான் கேட்டேன்.”

“ம்ப்ச்… ஜோக்ஸ் அபார்ட்! உங்க கிட்ட பேச வேண்டியது நிறைய இருக்கு, லிஸ்ட் போட்டு வச்சுருக்கேன். அமைதியா நான் சொல்றத கேளுங்க”

“சரிங்க பொண்டாட்டி… சொல்லுங்க” சிரித்துக் கொண்டே வாய் பொத்தி அமர

“எனக்குப் பிடிச்சத செஞ்சுக்கோன்னு சொல்லியிருக்கீங்க… அத எப்போவும் நீங்க… நீங்க… மறக்க கூடாது” தயங்கியே சொல்ல

“சரி மறக்கல” அவளை இழுத்து பக்கத்தில் உட்கார வைக்க

“இதோ இதுக்கு தான் அடுத்து வர்றேன்… கோபப்படக்கூடாது… சரியா?”

“அம்மா தாயே! சொல்லு… ஓவர் பில்டப்புல உடைஞ்சி போய்ருவேன் போல”

“அது… அது… நீங்க தான் என்னை லவ் பண்றேன், பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கீங்க, நான் இன்னும் சொல்லல! அதனால நான் சொல்ற வரைக்கும் சாதாரணமா இருப்போமே,” என தயங்கிய படியே சொல்ல

“உனக்கு எப்போ லவ் வந்து, எனக்கு சொல்வ?” அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டே கேட்க,

“சீக்கிரம் சொல்லிருவேன்னு நினைக்கிறேன், இன்னைக்கு இருந்த பீல் எப்போவும் இருந்தா லவ் மூட் தானவே வந்துரும் மாமா…”

“அடிப்பாவி! அதுக்காக டெய்லி கல்யாணம் பண்ணிக்க முடியுமா?”

“அப்டி சொல்லல மாமா… இந்த ஹாப்பி மூட் சொல்றேன், ப்ளீஸ் சரினு சொல்லுங்க” என கொஞ்சிக்கொண்டே அவள் கைகளை உருவிக்கொள்ள,

“ஒண்ணு சொல்லவா சிவும்மா…. நீயே சரின்னு சொன்னாலும் எனக்கு இப்போ நோ தான். நீ இன்னும் வளரனும் சியாபாப்பா… நீ சொன்னீயே உனக்கு லவ் மூட் வரும் போதுன்னு, அத நான் எப்போவோ முடிவெடுத்துட்டேன். சோ டோன்ட் வொர்ரி. நீ எப்போவும் போல சந்தோஷமா இரு சரியா?”

“வாவ்… தாங்க்ஸ் வருமாமா! யூ ஆர் மை எவர் டைம் பெஸ்டி…., இதே மாதிரி எல்லா விசயத்துலயும் ஒத்துப் போனா கூடிய சீக்கிரம் லவ் சொல்லிருவேன்”

“உன் ஆசை சீக்கிரம் நிறைவேட்டும், அடுத்து என்ன சொல்லு?”

“அடுத்து… அ…து… அது… கோபம் வந்தா எவ்ளோ நாளும் திட்டுங்க, அடிக்க மட்டும் செய்யாதீங்க மாமா…” தயங்கி முகத்தை சுருக்கிய படியே கூற

பாண்டியனின் இன்ப மனநிலை அடியோடு மாறி, மனமெங்கும் கவலை சூழ ஆரம்பித்தது.

“அது வந்து மாமா… ரொம்ப வலிச்சது, பாக்கவே அசிங்கமா போச்சு மொகமெல்லாம்…. இப்போ வேலைக்கும் போறதால இந்த மாதிரி முகத்தை வச்சுட்டு போனா, எல்லோரும் கேள்வி கேட்டு, உங்கள தான் அசிங்கப்படுத்துவாங்க… அதான் சொல்றேன், பிளீஸ்…”

இதற்கு என்ன பதில் சொல்வான் அவன்? அதட்டி ஆர்ப்பாட்டம் செய்யாமல், பிடித்தம் இல்லை என்றும் சொல்லாமல், தனக்கு அவமானம் ஏற்படும் என்று கெஞ்சலாய் சொல்லும், இந்த அவலநிலைக்கு தனது அவசரமும் கோபமும் தானே காரணம் என்று நினைக்க, சிறிது நாளாய் உறங்கிக் கிடந்த குற்ற உணர்வு மீண்டும் விளித்துக் கொண்டது.

“சாரிடா பாப்பா… ரொம்ப சாரிடா… மாமா ஏதோ அறிவுகெட்ட தனமா ஒருதடவை அப்டி செஞ்சுட்டேன், இனிமே நான் செத்தாலும் உன் மேல கோபப்பட மாட்டேன், ஒரு தடவை கோபப்பட்டு, நான் அனுபவிச்ச கஷ்டம் போதும்டி. இனி இந்த மாதிரி கேள்வி கேட்டு என்னை அழ வைக்காதே சிவும்மா… ரொம்ப வலிச்சதாடா?” கரகரத்த குரலில் கேட்டவாறே, அடித்த கன்னத்தை தடவி கொடுக்க, “ஆம்” என்று தலை அசைத்தவளை, உச்சி முகர்ந்து முத்தமிட்டவன் அவளது இரு கன்னத்திற்கும் தன் இதழால் ஒத்தடம் கொடுத்து, அவளது மென்மையான ஸ்பரிசத்தை அறிந்து கொண்டான்.

“இவ்ளோ சாஃப்ட்டா இருக்கேடி, உள்ளேயும் அடி பட்டுதா?”

“அந்த பக்கம் ஒரு வாரம் சாப்பிட முடியல, பல்லும் சேர்ந்து வலிச்சுட்டே இருந்துச்சு, டாக்டர் கூட திட்டிட்டாரு, யார் இப்டி அடிச்சதுனு, ரொம்ப சங்கடமாப் போச்சு மாமா”

செங்கமலம் தன்னை நிராகரித்ததில் தவறேதும் இல்லையோ? என்று அந்த நேரத்திலும் அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. இவனும் அவரிடம் இதுவரை முகம் கொடுத்து பேசாமால் தானே இருந்து வருகிறான். அந்த நினைவும் சேர்ந்து அவனை தடுமாற வைத்தது.

“இனிமே நான் அந்த மாதிரி செஞ்சா என்னை கொன்னு போட்ருடி! நீ சொல்றதே எனக்கு வலிக்குது, எப்டி இவ்ளோவும் தாங்கிட்டு இருந்தியோ பாப்பா…” என தன் போக்கில் புலம்ப ஆரம்பிக்க,

“ஐயோ மாமா விடுங்க … இப்போ அத பத்தி பேச வேணாம், நான் சொன்ன மாதிரி அதெல்லாம் மறந்து போறதுக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும். அது வரைக்கும் என்னை எதுக்கும் கம்பல் பண்ணாம இருந்தா அதுவே போதும்”

“உனக்கு என்ன பிடிக்குதோ அத செய்ய சொல்லிருக்கேன் சிவும்மா… உன் மனசுக்கு என்ன தோணுதோ அத என்கிட்டே பயமில்லாம சொல்லணும். நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த ஈகோவும் இருக்க கூடாது. இதுக்கெல்லாம் நீ என்கிட்ட பெர்மிஷன் வாங்கணும்ன்னு அவசியம் இல்ல”

“தாங்க்ஸ் மாமா… சிம்ப்ளி நீங்க க்ரேட்ன்னு ப்ரூவ் பண்ணிட்டிங்க, ரொம்ப சந்தோசம், லவ் யு ஷோ மச் மாமா…”

“லவ் சொல்லிட்டே சிவு” என கண்ணடிக்க

“அது…. இந்த டைம் பீல் அவ்ளோ தான், மத்தபடி அந்த லவ் ப்ரபோசல் கிடையாது. இதுக்கு மேல பேச எனக்கு தெம்பு இல்ல, குட்நைட் மாமா”

“நீ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டி இருக்கேன், அட்லீஸ்ட் ஒரு சின்ன ஹக்(அணைப்பு) இல்லையா எனக்கு? நான் ரொம்ப பாவம்டி”

“நான் இன்னும் வளரணும்னு நீங்க தானே சொன்னீங்க! இப்போ இந்த பேச்சு பேசி வைச்சா என்ன அர்த்தம்?”

“நல்லாவே சமாளிக்கிற… நெஜமாவே இன்னும் நீ நிறையவே வளரனும் பாப்பா.” என இரண்டாம் முறையாய் அவளை உச்சிமுகர்ந்து அந்த இரவின் ஏகாந்தத்தை ரசித்தான்.

error: Content is protected !!