KVI-4

முழுதாய் இரண்டு, ஒரு நாட்களுக்குப் பின்னர்,

 

உடலெங்கும் வியர்வை வழிய வழிய ‘சிட்அப்’ எடுத்துக் கொண்டிருந்தாள் சயனா.

 

ஒவ்வொரு முறையும் பின் நோக்கி விழும் போதும், முன்னோக்கி எழும் போதும்,  அத்தனை இலகு தன்மை அந்த உடலில். மற்றும் உடல் முழுவதும், ஒரு இறுகு தன்மையும் தெரிந்தது.  

 

சற்றென்று அவள் அருகில் வந்து, உட்கார்ந்து கொண்டாள், ரேவ். இன்னும் சயனா விட்டபாடில்லை.

 

அவளைப் பிடித்து நிறுத்தினாள் ரேவ்.

 

“என்ன வேணும்?” – சயனா.

 

“நீ ஏன் இப்படி இருக்க, சொல்லு”

 

“கேஸப்பத்தி நினைக்கிறேன், ரேவ்.  இத நினைச்சசா, இப்படித்தான் இருக்க முடியும்”

 

“அதான் சொன்னேல, யோசிச்சு கண்டுபிடிக்கலாம்னு. அப்புறம் என்ன சயனா”

 

“ம்ம்ம். யோசிச்சேன். ஸோ, நான் கொரியர் ஆபீஸ் போயிருந்தேன்.”

 

“சைதாபேட்?”

 

“ம்ம்ம் “

 

“கிராஸ் பண்ண பிறகு, ஏன் போன சயனா?”

 

“எனக்கு தோணுச்சு ரேவ். கொரியர் ஆபீஸ்ல போயி அட்ரஸ் ஏதாவது கிடைக்குதான்னு பார்த்தேன்”

 

ரேவ் முகத்தில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன, கோபத்தின் ரேகைகள்.

 

“ப்ளீஸ், நான் சொல்றதை புரிஞ்சுக்கோ. எனக்கு என்னமோ,  சைதாபேட்டைக்கும் கேஸுக்கும் ஏதோ கனைக்ஸன் இருக்குனு தோணுது”

 

“கொரியர் ஆபீஸ்ல போயி என்ன செக் பண்ண “

 

” அட்ரஸ்”

 

“ஒரிஜினல் அட்ரஸ் கொடுக்கிற அளவுக்கு அவன் முட்டாளா? இல்லை அவன் அட்ரஸ் கிடைக்கும்னு போன நீ முட்டாளா?” – அறிவான கேள்வி.

 

“…. “

 

“அட்ரஸ் கிடைச்சதா?”

 

“பேக் (fake) அட்ரஸ்”

 

“நீ சொன்ன ஒரு வார்த்தைக்காக, நான் போலீஸ் ஸ்டேஷன்ல ஹேக்கர் லிஸ்ட் கூட வாங்கல தெரியுமா”

 

“அதனால ஒரு யூஸூம் கிடையாது. அவன் ஒன்னும் பணத்தை திருடல. அவங்கள பழி வாங்கிருக்கான் “

 

“எது, டேக்ஸ் பே பண்றது, உனக்கு பழி வாங்கிறதா? “

 

இருவரும்  யோசித்தனர்.

 

“இமெயில் ஐடி ஹேக் பண்றது ஓகே.  பேங்க் அக்கவுண்ட்ல யூசர் நேம், பாஸ்வேர்ட் கூட ஓகே. டேக்ஸ் பே பண்றது அவ்வளவு ஈஸியில்ல சயனா “

 

சயனாவின் நாடி நரம்பெல்லாம் ‘சிஐடி ‘ இரத்தம் பாய்ந்து யோசிக்க ஆரம்பித்தது.

 

“நல்லா யோசிச்சு பாரு, வரி கட்ட எவ்வளவு டாக்குமெண்ட்ஸ் தேவை. ஒருத்தரோட ஐடி ப்ரூப் எத்தனை தேவைப்படும். அதெல்லாம் எப்படி சயனா கிடைச்சது “

 

சயனாவின் யோசனை…

 

” அதுவும் இல்லீகலா “

 

திரும்பவும் சயனாவின் யோசனை..

 

“ரேவ், ஏன் இதெல்லாம் இல்லீகலா கிடைக்கனும்னு நினைக்கிற. லீகலா கிடைச்சிருந்தா? “

 

” என்ன சொல்ற சயனா? இதெல்லாம் லீகலா எப்படி கிடைக்கும்? “

 

“கிடைக்கும்னு நினைக்காத. யார்கிட்ட கொடுப்போம்னு யோசி”

 

“யார்கிட்ட? நிறைய இடத்தில கொடுப்போம். ஈவன் செராக்ஸ் எடுக்கிற இடத்தில கூட கொடுப்போம்… அங்கருந்த திருடிருப்பாங்களோ”

 

” ஐ செட் லீகலா “

 

“ஓகே.. ஓகே.. பாஸ்போர்ட் ஆபிஸ், கவர்மென்ட் டிபார்ட்மென்ட்ல, லைசென்ஸ் வாங்கிறப்ப… இட் கோஸ் ஆன் “

 

“நவ், கவர்மென்ட் டிபார்ட்மென்டையும் வரியையும் கனெக்ட் பண்ணு”

 

“இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்டா?? “

 

“எ பிக் யெஸ்!!!”

 

“எப்படி சொல்ற? “

 

“டேக்ஸ் பே பண்ணிருக்கான்ல. ஸோ தேட். “

 

“இதுல பழி வாங்கிறத எப்படி லிங்க் பண்ணுவ? “

 

“கம்ப்ளைன்ட் வந்த ஆளுங்கள வச்சி. ஸீ பிஸினஸ் மேன டேக்ஸ் பே பண்ணச் சொல்லி, இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட்ல கேட்டிருக்கனும். அவரு பே பண்ண மாட்டேனு சொல்லிருக்கனும்”

 

” ஓகே “

 

“அந்த பிஸினஸ் மேன், அமைச்சர இன்புளுயன்ஸ் பண்ணி, ப்ராப்ளம ஸால்வ் பண்ணச் சொல்லிருக்கனும். அமைச்சர் அவரோட அதிகாரத்தை யூஸ் பண்ணி, போலீஸயும் இந்த கேஸ்ல கொண்டு வந்திருக்கனும்”

 

“சரி. போலீஸ் எதுக்கு? நீயூஸ் பேப்பர் எதுக்கு? “

 

“அந்த பர்ட்டிகுலர் இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட் எம்பிளாய் மேல, பொய்யா கம்ப்ளைன்ட் எடுக்க வைக்க. அன்ட் நீயூஸ் பேப்பர், அந்த பேக் கம்ப்ளைன்ட பப்ளிக்கிட்ட கொண்டு போக”

 

“அந்த நாலு பேர்கிட்டயும் போய்க் கேட்டா, அந்த இன்கம்டாக்ஸ் ஆபிஸர் பேரைச் சொல்லுவாங்கல”

 

“ஏற்கனவே என்ன பண்ணாங்களோ? இப்ப நம்ம போய் கேட்டு, அவனுக்கு வேற ஏதாவது பிரச்சனை வந்தா” – ஹேக்கரின் நலனுக்காக யோசிக்கத் தொடங்கியது, சயனாவின் நாடி நரம்புகள்.

 

“இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட்ல கேட்கலாமா? “

 

“சிரிப்பாங்க. நாமதான, அந்த நாலு பேரையும் பிரஸ்மீட் வச்சி டேக்ஸ் நாங்களே பே பண்ணோம்னு சொல்ல வச்சாச்சு. இப்ப போய், இதைப் பத்தி கேட்டா, என்ன நினைப்பாங்க? “

 

“அய்யோ… ச்ச்சே ” – இரண்டு நிமிடங்களின் கிண்டி இறக்கப்படும் ‘நூடுல்ஸாய்’ ரேவ்.

 

“இனிமே, அவங்களப்பத்தி நாம கம்ப்ளைன்ட் பண்ண முடியாது. அது நம்மளோட பெரிய வீக் பாய்ண்ட்”

 

“அப்போ என்னதான் வழி”

 

“நியூஸ் பேப்பர்”

 

“என்ன சொல்ற? “

 

“கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஏதாவது இன்கம்டாக்ஸ் ஆபிஸர் சஸ்பெண்டு இல்லன்னா டிஸ்மிஸ் ஆகியிருக்காங்களானு பாரு. “

 

“ம்ம்ம் சரி, தென்”

 

“அந்தக் கேஸ விசாரிச்சது, இந்து போலீஸானு பாரு. நியூஸ் வந்த பேப்பர், இந்தப் பத்திரிகைகாரனோட தான் பாரு. அவ்வளவுதான்”

 

” தென் “

 

“என்ன தென்? அவங்கதான் ஹேக்கர். சீக்கிரம் கண்டுபிடிச்சி, பேர் என்கிட்ட சொல்லு” – பெயர் தெரியாதவனை, எப்படி காதலிப்பது? மன்னிக்கவும் எப்படி கண்டுபிடிப்பது?

 

“எதுக்கு?”

 

“எத்தனை நாள்தான் பேர் தெரியாம ஹேக்கருனு சொல்றது. பேர் சொல்லிக் கூப்பிட வேண்டாமா” – கண்ணடித்துச் சொல்லி, ரேவைக் கலங்க வைத்தாள், சயனா.

 

இப்படி ரேவைச் சிந்திக்க வைத்துவிட்டு, சயனா ‘சிட்அப்’ செய்ய போய் விட்டாள்.

 

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

 

காதல் சொல்வதற்கென, காதலாய் கைப்பேசி கூவியது.

 

சயனா, கையில் வழிந்து வருகின்ற வியர்வையைத் துடைத்துக் கொண்டே, கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.

 

ஆறுதல் அதிர்ச்சியாய், அதில் தெரிந்த ஆப்பிரிக்கா இலக்கங்கள். அந்த அதிர்ச்சியை ஆச்சரியத்துடன், ரேவிடம் காட்டினாள்.

 

உடனே “எடுத்துப் பேசு, எடுத்துப் பேசு” என்று நர்த்தனம் புரிந்தாள்.

 

“வெயிட்… வெயிட்” என்று  காதலைக் காக்க வைத்தாள், சயனா.

 

“சீக்கிரம் சயனா”

 

காதலைக் காக்க வைத்தால், காதல் கிரகத்திற்குச் சென்ற பின்னர், கனகாம்பர பூஞ்சாட்டைக் கொண்டு, சாட்டையடி தண்டனையாகத் தரப்படும்.

 

“என்ன பேச?” – சயனா.

 

“கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லு”

காதல் கேட்கும் கேள்விக்கு காதலே பதிலாய் சொல்.

 

ஒரு காதல் பெருமூச்சு எடுத்துக் கொண்டு, மெதுவாக தொடுதிரை பச்சை பொத்தான் அழுத்தப்பட்டது.

 

இது அழைப்பிற்கான் ‘கீரின் சிக்னலா’  இல்லை, அழைப்பை ஏற்படுத்தியவனுக்குமா?

“ஹலோ” – அழைத்தவன்.

 

“ஹாய், ஓகே ஹலோ.” – காதல் தடுமாற்றம்.

 

“ஹாய், மைசெல்ஃப் மனோகர், வொயில்டு லைஃப் போட்டோகிராபர் அன்ட கேமராமேன். காலிங் பிரம் ஆப்பிரிக்கா”

 

“ஓ, ஓக்கேஏ” – தொண்டையிலிருந்து வந்தன வார்த்தை.

 

“உங்களப் பத்தி சொல்லுங்க “

 

“மைசெல்ஃப் சயனா, சிஐடி ஆபிஸர்” – நாணேற்றிய வில்லாக சொல்லப்பட்ட வார்த்தைகள், நாணம் கொண்ட சொல்லாக வந்தது.

 

“உங்க ரிலேட்டிவ் சொன்னாங்க. நீங்க போஃன் பண்ணச் சொன்னீங்கனு” – வார்த்தைகள் விட்டுவிட்டு வந்து விழுந்து, அவளைத் தொட்டு தொட்டு சென்றது.

 

“ய்யேஸ், நான்தான் சொன்னேன். “

 

“என்ன தீடிர் மாற்றம்? “

 

“அது அப்போ இருந்த சிச்சுவேஷன். எப்படி கரெக்ட்டா? எக்ஸாக்டா? ரீசன் சொல்லனு தெரியல”

 

“ஓகே.. ஓகே.. ஓகே.. லீவ் இட்”

 

‘தனக்காகவும், இந்த சொந்தங்கள் உதவுமா?’ என்று அவளிடம் பெரிய அதிர்ச்சிதான்.

 

“என்ன பேச மாட்டேங்கறீங்க”

 

“இல்ல. ரிலேட்டிவ்ஸ், அந்த அளவுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணதில்ல. ஸோ, இப்ப பண்ணவுடனே… ” – முடிக்காமல் வார்த்தைகள் விழுங்கப் பட்டன.

 

“ஓகோ. அன்ட் அவங்க சொன்னாங்க, அபௌட் யுவர் மதர். ரியலி ஸாரி பார் தேட்”

 

“பரவாயில்ல” – வாய்தான் இப்படிச் சொன்னது, வாழ்க்கை பரிதவித்தது.

 

“பீல் பண்றீங்களா”

 

” ம்குன் “

 

“இல்ல, அம்மாவோட ஸடன் டெத் கஷ்டமா இருக்கானு கேட்டேன்? “

 

“இப்ப, வேற ஒரு கேஸ்ல லாக் ஆகியிருக்கேன். அது… அதனால.. அதனால… “

 

“ஓகே, எப்பவாது பீல் பண்ணா போஃன் பண்ணுங்க” – நானிருக்கிறேன், நீ தோள் சாய்ந்து அழுதிட, என்று சொல்லாமல் சொல்லப்பட்டது.

 

“ம்ம்ம்” – இதுவரை அழவேண்டும் என்று தோன்றியதில்லை. இப்பொழுது அந்த தோளில் சாய்ந்து அழுதிடலாமோ என்று தோன்றியது.

 

காதல் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டது.

 

“ஓகே.  கொஞ்சம் ரிலாக்ஸா பேசலாமா? “

 

“அப்படின்னா “

 

“அப்படின்னா.. அப்படின்னா.. எப்படி சொல்றது. ஆங் எனக்கு ஒரு சிஐடி ஆபிஸர்கிட்ட என்கொயரி வந்த பீல்”

 

“சரி , பேசுங்க” – கொஞ்சம் சிரிப்புடன் கலந்து வந்தது இந்த பதில் .

 

“இதான், இந்த மரியாததான் சுத்தமா பிடிக்கல “

 

“சரி சொல்லு ” – பொசுக்கென்று காதலுக்குத் தரப்படும் மரியாதை தரப்பட்டது.

 

“சூப்பர் ட்டேபீ”

 

“இது என்ன ட்டேபீ?”

 

“உன்ன செல்ல்லமா கூப்பிடறதுக்கு, இது ஓகேதான ட்டேபீ” – அந்த ‘ல’கரத்தில், அவன் கொடுத்த அழுத்தத்தில், இவள் வழுக்கி விழுந்தாள்.

 

“ட்டேபீனா என்னன்னு சொல்லு?” – சிஐடி ஆபிஸரின் ‘ஆர் & டி’ வேலை.

 

“டார்லிங்ல இருக்குற டிஏ-வ எடுத்துக்கோ, பேபில இருக்கிற பிஐஈ-வ எடுத்துக்கோ. “

 

” ம்ம்ம் “

 

“இப்ப ரெண்டையும் சேர்த்துக்கோ”

 

“ஓ ட்டேபீ… ட்டேபீ(dabie) “

 

“பிடிச்சிருக்கா? “

 

“ம்ம்ம், நல்லாருக்கு”

 

இலவசமாக காதல் காட்சிகள், ரேவின் கண்களுக்கு.

 

“உனக்கு ஏதாவுது எஸ்பெக்டேஷன், கண்டிஷன் இருக்கா ட்டேபீ?  “

 

“ம்ம்ம், நிறைய இருக்கு மனோகர்”

 

“ஹலோ, இதென்ன அநியாயம். உனக்கு மட்டும் செல்ல்லப் பேரு வேனும். எனக்கு வேண்டாமா?  கம் ஆன் சொல்லு…” – அநியாயத்தைக் கண்டால் பொங்கி எழுந்துவிடும் கூட்டம் போல.

 

“தீடிர்னு கேட்டா, நான் எங்க போவேன்? ” – இது காதல் கிரகங்கள் தாண்டிய நடிப்பு!!

 

“இது கடைல கிடைக்கிறதில்ல ட்டேபீ. காதல், கொஞ்சம் யோசி”

 

“யோசிச்சி நெக்ஸ்ட் டைம் சொல்லவா “

 

” ஓகே. இப்ப கன்டிஷன் சொல்லு”

 

“கண்டிஷன் நம்பர் ஒன், எனக்கு  மார்னிங் வொர்க்அவுட் ரொம்ப முக்கியம். ஸோ அத டிஸ்டர்ப் பண்ணகூடாது “

 

“ஓகே.. குட் பார் ஹெல்த்.. பிட்நெஸ் மஸ்ட்… நெக்ஸ்ட் சொல்லு “

 

“செகன்ட், எனக்கு கஞ்சிதான் போடத்  தெரியும். அதை தவிர வேற எதுவும் சமைக்க தெரியாது “

 

“ஓகே, குட் பார் கிட்ச்சென். பிசுபிசுப்பு நோ… நெக்ஸ்ட்”

 

“தேர்ட் அன்ட் லாஸ்ட், டெய்லி நைட், கண்டிப்பா என்கூட பேசணும். அந்த டேல என்னென்ன ஆக்டிவிட்டீஸ் பண்ணேனோ, அதெல்லாம் உன்கிட்ட சொல்லுவேன். அத கேட்கணும்”

 

” வாவ்! குட் பார் அஸ் ட்டேபீ. நெக்ஸ்ட்”

 

“தேட்ஸ் இட்.. லாஸ்ட்னு சொன்னேன்ல”

 

“இவ்வளவுதானா? ஸோ சிம்பிள் “

 

“உனக்கு இந்த மாதிரி கண்டிஷன் இருந்தா சொல்லு “

 

“எனக்கு எந்த ஒரு கண்டிஷனும்   கிடையாது ட்டேபீ”

 

“ஆங், இது பொய்” – வாலன்டியராகச் சென்று வம்பை வாங்கினாள்.

 

“நிஜமா ட்டேபீ, எனக்கு கண்டிஷன் எதுவும் கிடையாது. வேணா கபுள் கோல்ஸ் பத்தி பேசலாமா? ”

 

“கபுள் கோல்ஸா? அப்படின்னா? ”

 

ரேவின் ஆச்சரியங்கள் – பேசிய கால் மணி நேரத்திலேயே, கபுள் கோல்ஸ் பற்றிய பேச்சு!!? ராயல் என்ஃபீல்டை விட வேகமாகப் போகிறதே!!

 

“நான் வேணா சொல்லவா? “

 

“அப்கோர்ஸ், தெரியாததை தெரிஞ்சுக்கலாம்ல”

 

“குட், காலையில எந்திரிச்ச உடனே உன்னோட பர்ஸ்ட் வேல என்ன? “

 

“இப்பதான சொன்னேன். ஜிம்ல வொர்க் அவுட் பண்ணுவேன். ” – ‘மறவாதே என்னை’ என்ற அர்த்தத்தில் கூறப்படுகிறது.

 

“ஓகே என்ன வொர்க் அவுட் ரொம்ப பிடிக்கும்.

 

“சிட்அப்ஸ். இப்பதான் பண்ணிக்கிட்டு இருந்தேன். “

 

“ம்ம்ம்… எனக்கு புஸ் அப்”

 

“வாவ், சேர்ந்து வொர்க்அவுட் பண்ணனுமா? “

 

“என்னய சொல்ல விடு ட்டேபீ”

 

“ஓகே.. ஓகே”

 

“புஸ்அப் பொஸிஸன்ல நான். எனக்கு எதிர்ல, ஸிட்அப் பொஸிஸன்ல நீ.”

 

“ஓகே”

 

“வொர்க் அவுட் பண்றப்ப, எப்ப நம்ம ரெண்டு பேரோட பேஸும் மீட் பண்ணுதோ, அப்ப ஒரு தரமான வாய் பூட்டிடும் முத்தம்! ”

 

“அடச்சீ! வாயமூடு”

 

“எக்ஸாக்டிலி. அதேதான்… ட்டேபீ, யூ காட் இட் “

 

“ஏய்! சீ! நான் அத சொல்லல. இனிமே நான் வொர்க் அவுட் பண்றப்ப, இந்த கண்றாவிதான ஞாபகத்துக்கு வரும்” – சொன்னது தப்பா? இல்லை, ஞாபகம் வருவது தப்பா? – காதல் கிரகத்தில் ‘தீபாவளி பட்டிமன்ற’ தலைப்பிற்கு உதவும்.

 

“இது கண்றாவி இல்ல ட்டேபீ , காதல்”

 

“அய்யோ, வேற பேசிறியா? வெட்கமே இல்லையா உனக்கு?” – வெட்கத்தைப் பற்றி பேசி, சிஐடி ஆபிஸர் கோபப்பட்டது .

 

“நீ ரொம்ப வெட்கப்பட்டுற ட்டேபீ. மார்னிங் எந்தரிச்சதுலருந்து, நைட் தூங்கிற வரைக்கும் எத்தனை கபுள் கோல்ஸ் இருக்கு தெரியுமா” – ஓ, அது கோபம் இல்லை. சிஐடி ஆபிஸரின் வெட்கம்தான்!!

 

“ச்சேய், போதும்”

 

“இல்ல ட்டேபீ, இன்னும் இருக்கு. கிஸ் வித் மார்னிங் காஃபி… கிஸ் வித் ப்ரேக்பாஸ்ட் அன்ட் …”

 

“இப்ப நீ நிறுத்தலனா, நான் போஃன கட் பண்ணிருவேன்” – இதை சொல்வதற்கு பதில், அழைப்பைத் துண்டித்துத்திருக்கலாமே!

 

” ட்டேபீ “

 

“பஸ்ட் டைம் பேசற பொண்ணுக்கிட்ட, நீ இப்படிதான் பேசுவீயா? கொஞ்சம் கூட அறிவில்லயா? “

 

“ஹேய் ,கல்யாணம் பண்ணபோற பொண்ணுகிட்ட வேற எப்படி பேசுவாங்க “

 

” யாரு கல்யாணம் பண்ணப்போறா “

 

” நாமதான் “

 

” நான் சொன்னனா “

 

” அப்புறம் “

 

“கல்யாணம் பண்றப்ப, உன்னய கன்சிடர் பன்னுவேன் “

 

“ஓ, கன்சிடர் பண்ணறவன்கிட்ட, இத்தனை கண்டிஷன் போடுவியா? “

 

“ஆமா “

 

“அப்ப நானும் கல்யாணம் பண்ணப் போற பொண்ணுகிட்ட, இப்படிதான் பேசுவேன்”  என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

அழகான காதல் காட்சியில் ‘அன்வான்டடாய்’ வந்து போன ‘என்னவோ ஒன்று’.

 

அவனிடம், என்ன பேசவென்று தெரியாமல் பேச ஆரம்பித்து, என்னவெல்லாமோ பேசிவிட்டு இப்பொழுது எண்ணமெல்லாம் அவனாய்!

 

நிமிர்ந்து பார்த்த பின்னர்தான் தெரிந்தது, அந்த அறையில் இன்னொரு ஜீவனும் இருக்கிறது என்று!

 

“ரேவ், பாரு இப்படி பேசுறான்னு ”

 

“அவன் பேசறது இருக்கட்டும். நீ ஏன்  இப்படி பேசுற?”

 

“நான் என்ன பேசுறேன்?”

 

“நீ எத மனசுல வெச்சுட்டு இப்படி பேசுறேன்னு எனக்கு தெரியும்”

 

“நீயேன் கன்சிடர் பண்றேன்னு சொன்ன. அம்மாவோட ஆசையே, உனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கிறதுதான. ”

 

“பேசிப் பார்க்க வேண்டாமா, ரேவ். அதுக்கு முன்னாடி எப்படி கல்யாணம் பண்ண முடியும் “

 

“நீ கன்சிடர்ங்கிற வார்த்தையை, வேற எதையோ மனசுல வச்சுகிட்டு சொல்றீயா? ” – எத்தனை வாய்தா வந்தாலும், என் வாதம் இதுதான், ரேவ்.

 

” ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்ல “

 

அந்தக்கணம்

ஆழ்மனதைச் ஆண்டுகொண்டிருந்த ஹேக்கரின் அலப்பறைகள், ‘ஆற்றிலே அலையாய்’

அவளுள் ஆர்ப்பரித்தது!

 

மறுபடியும் அழைப்பு வந்தது. அதே, அதே ஆப்பிரிக்கா இலக்கங்கள்.

 

” ஹலோ “

 

” ம்ம்ம் ” – இதன் பொருள் ‘சொல்லித் தொலை’ என்று அறிக.

 

“சாரி ட்டேபீ, நான் கொஞ்சும் ஓவரா போய்ட்டேன் “

 

” ம்ம்ம்”

 

“ரீயல்லி சாரி ட்டேபீ ”

 

“சரி உனக்கு என்னோட போட்டோ பார்க்கணும்னு தோணலையா?”

 

“தோணல” – முந்தைய கேள்விக்குள் என்ன விஷமம் ஒளிந்து கொண்டிருக்கிறதோ என்ற பயத்தில், இந்த பதில்.

 

“ட்டேபீ, தோனிச்சுன்னா என்னோட பிளாக்ஸ்பாட்ல இருக்கு. பாரு. பார்த்துட்டு சொல்லு”

 

“சரி “

 

“சரி, உன்னோட போட்டோ அனுப்பு” – ‘ம்கும்’ இதுக்குத்தான இவ்வளவும்.

 

“ஒரு நிமிஷம்”

 

கைப்பேசி ஹோல்டானில்,

ரேவிடம் கைப்பேசி…

 

“ரேவ், என்னய ஒரு போட்டோ எடு”

 

“வொர்க் அவுட் முடிச்சிட்டு இருக்க சயனா… அதோடவா”

 

“ஆமா இப்படித்தான், போட்டோ எடு”

 

போட்டோ எடுக்கப்பட்டது. உடனே அனுப்பவும் பட்டது.

 

மறுபடியும் ஹலோ…

 

“போட்டோ வந்திச்சா? “

 

“ம்ம்ம்.. அன்ட் நீ எப்படி இருக்கனா? “

 

“வேண்டாம் ” – அனுபவம் பேசுகிறது.

 

“சரி, ட்டேபீ உன் இஷ்டம்”

 

“தேங்க்ஸ் ”

 

“லவ்ல தேங்க்ஸ், ஸாரி சொல்லக்கூடாது “

 

” லவ்லதான, இது லவ் இல்ல”

 

“சயனா” – முதன் முறையாக பெயரைச் சொல்லி அழைத்தான்.

 

“….” – மூளைக்கு வேலை கொடுப்பவனை விட, மனதிற்கு வேலை கொடுப்பவனே, மனவாளன்.

 

“ஸாரி சயனா”

 

“நீ, ஸாரி சொல்ற” – சக்கைப்போடு போட்ட, சயனாவின் சாம்ராஜ்யம் காதலால் கைப்பற்றப்பட்டது.

 

“இதெல்லாம் சொல்லு, ஆனா கன்சிடர்தான் பண்ணுவியா “

 

“ம்ம்ம்”

 

“ட்டேபீ, நீ வேணா என்னய கன்சிடர் பண்ணிக்கோ. நான் உன்ன கல்யாணமே பண்ணிக்கிறேன். ” –

 

“ஏய், திருந்தவே மாட்டியா” – காதலைத் திருந்தச் சொல்வது நியாயமே இல்லை சயனா!!

 

“பை  ட்டேபீ, லவ் யூ ஸோ மச்” – காதல் திருந்தவில்லை.

 

அழைப்பை துண்டித்த உடன், சயனா ‘அர்ச்சனையை’ ஆரம்பித்தாள்.

 

ரேவின் மனக்குரல் – ஹேக்கருக்கு ‘டஃப்’ கொடுக்க ஒருத்தன் வந்து விட்டான் என்றே!!

 

சயனா – ஓசையாய் வந்த அவனது ஆசைக்கு, சயனா ‘பூசை’ செய்து கொண்டிருந்தாள்.

 

இதழ்கள் திட்டித் தீர்த்தன – ஆனால்

இதயம் என்னவோ தித்தித்தது.

 

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️