ஸ்ரீ ராம ஜெயம்
காதல் வைத்துக் காத்திருந்தேன் 1
கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா
சந்த்யா ப்ரவர்த்ததே
உத்ஹிஷ்ட நரஷாத்துலகர்தவ்வ்யம் தய்வமாந்திகம் ||
கோவில் ஒலிநாடாவில் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. அதைக் கேட்ட படியே கல்லூரிக்குக் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி சக்திப்ரியா.
பெயருக்கு ஏற்றார் போல் சொல்லிலும் செயலிலும் சக்தி இருப்பவள். வீட்டிலும் மற்ற நண்பர்களிடமும் கேலி கிண்டலுக்குக் குறைவே இல்லை.
தன்னைச் சுற்றி உள்ள இடத்தை எப்பொழுதும் கலகலப்பாக ஆக்கிவிடுவாள்.
தங்க நிறம். நடுத்தர உயரம். அதற்கேற்ற அழகு. ஒரு முறைப் பார்த்தல் யாருமே இன்னொரு முறை திரும்பிப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.
(வழக்கமா எல்லா ஹீரோயினயும் சொல்ற மாறி இருக்கா .. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க. )
படிப்பில் சுமார் தான் ஆனால் கொஞ்சம் கஷ்டப்பட்டுப் படித்து நல்ல மதிப்பெண்களே வாங்குவாள்.
(போதும் இன்ட்ரோன்னு கதைக்குப் போ ன்னு சொல்றது கேக்குது .. சரி சரி)
தன் பையில் எதையோ தேடியபடியே தன் அறையில் இருந்து குரல் கொடுத்தாள்.
“அம்மா நேத்து பால் கணக்கு குறிச்சு வைக்கப் பேனா வாங்கினியே எங்க மா அது.. எனக்கு டைம் ஆயிடுச்சு.”
அதைத் தொடர்ந்து சமையல் அறையில் இருந்து இன்னொரு குரல் வந்தது.
“நேத்தே உன்கிட்ட குடுத்துப் பையில வைன்னு சொன்னேனே! உன் காது அப்போ எங்கே போச்சு சக்தி. அந்த ஒரு பேனா தான் இருக்கா உங்கிட்ட. இந்தா இதையாவது பத்திரமா வை”எனத் தான் கொண்டு வந்த லஞ்ச் பாக்சை நீட்ட அதை வாங்கி பையில் வைத்தாள்.
“அந்தப் பேனா என்னோட ராசியான பேனா அதான் அதை தேடறேன்” சொல்லும்போது தான் நேற்று அம்மா கொடுத்தவுடன் தன் இரவு உடையின் பாக்கெட்டில்வைத்தது நினைவு வர பாத்ரூமிருக்கு அவசரமாகச் சென்று எடுத்து வந்தாள். பின் தன் தாயின் முறைப்பைப் பெற்றுக்கொண்டு அசடு வழிந்துவிட்டுக் கிளம்பினாள்.
“சரி ஜான் நான் கிளம்பறேன். சி யு இன் தி ஈவினிங்” என்று கூறிச்சென்று தன் ஆக்டிவா வை கிளப்பினாள்.
“ஹே வாலு! உங்க அப்பாவ மாதிரிக் கூப்பிடாத ன்னு எத்தன தடவ சொல்றது. கொழுப்பு ஜாஸ்தி ஆயிடுச்சு உனக்கு” எனச் சிரித்துக்கொண்டே வழி அனுப்பி வைத்தார் செல்ல மகளை.
பின் தன் கணவரின் தேவைகளைக் கவனிக்கச் சென்றார்.
ஜானகி , ஸ்ரீனிவாசனின் ஒரே மகள் சக்திப்ரியா. ஸ்ரீனிவாசன் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜர் ஆகப் பணிபுரிகிறார். தன் மகளின் திருமணதிற்கும், தங்களின் பிற்கால வாழ்வுக்கும் பணத்தைச் சேர்த்து வைத்து மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். குடும்பத்தில் எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் அனைத்தையும் பகிர்ந்துகொள்வர்கள். எந்தக் குறையும் இதுவரை சக்திக்கு அவர்கள் வைத்ததில்லை.
சக்தி ஒரு கலைக்கல்லூரியில் முதுகலை கணிதம் கடைசி ஆண்டு படித்துகொண்டிருந்தாள். அவளது உயிர் தோழி சுஜா. இருவரும் ‘வால் ஒன்னு தான் இல்ல’ என்று பெயர் பெற்றவர்கள். இறுதி ஆண்டு! கேட்கவா வேண்டும்?
வகுப்பில் இருந்ததை விட மரத்தடியும் காண்டீனும் தான் அவர்கள் அதிகமாக இருந்த இடம்.
இன்றும் அதே போல எதாவது கொறிக்கலாம் எனக் கான்டீன் சென்றவர்கள் சமோசா ஆர்டர் செய்துவிட்டு ஒரு டேபிளில் அமர்ந்தார்கள்.
“என்னடி சுஜா ரொம்ப சந்தோசமா இருக்க? இன்னிக்கு சுந்தர் அண்ணா போன் பண்ணிட்டாரா?” என ஆரம்பித்தாள்.
“ஆமா சக்தி. அவருக்கு இப்போ கம்பெனில ப்ரோமோஷன் கெடச்சு இருக்காம். சம்பளமும் ஜாஸ்தி. சோ இப்போ இருந்த ரூம்ஐ காலி பண்ணிட்டு வேற வீட்டுக்குப் போய்டாங்கலாம். அடிக்கடிப் பேசலாம். ஒரு பக்கம் சந்தோஷமா இருக்கு அதே சமயம் நல்லா படி, நல்லா படின்னு உயிரை வாங்குமே ன்னு கடுப்பாவும் இருக்கு”.
கல கல வென சிரித்தாள் சக்தி. “ஆமா! உன்ன கேம்பஸ் இன்டர்வியூக்கு படிக்கச் சொன்னாரே ஆரம்பிச்சுட்டியா ?” என நக்கலாக கேட்க,
“ம்ம்.. ம்ம்.. அப்பப்ப.. இதுக்கு தான் இந்த மாதிரிப் படிப்புங்க கிட்டலாம் வெச்சுக்கக் கூடாதுன்னு நினைப்பேன் ஆனா என் விதி இவன் கிட்ட மாட்டிகிட்டேன்”, சுஜா அலுதுக்கொண்டாள்.
“ஹே! அண்ணனா வந்து உன்கிட்ட ப்ரோபோஸ் பண்ணாரு? நீ தான அவரு கிளாஸ் எடுக்கறப்ப என்ன நடக்குதுன்னு கூட தெரியாம அவரையே பாத்துட்டு இருந்த. அப்புறம் ரொம்ப முத்தி போய் ஒரு நாள் ப்ரொபோஸ் பண்ண. இப்போ அவர சொல்ற..?! ”, சக்தி திருப்பிகேட்டாள்.
“சரி சரி.. உங்க அண்ணனைச் சொன்னால் உனக்குப் பொறுக்காதே! பெரிய பாசமலர்! நாளைக்கு நீயும் என்கூட வர அவர பார்க்க.” முடித்தாள் சுஜா.
“கண்டிப்பா வரேன்”, சம்மதம் தந்தாள் சக்தி.
ஆமாம்! சுஜா வீட்டில் செல்லம். ‘படி’ என்று யாரும் வற்புறுத்த மாட்டார்கள். நிறையப் பணம். இவர்கள் கல்லூரியில் இளநிலை இறுதி ஆண்டு படிக்கும் பொழுது கெஸ்ட் லெட்சராக வந்தான் சுந்தர். அப்பொழுது தான் சுஜா அவனைப்பார்த்துக் காதலித்தாள். அவன் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன், அதனால் படிப்பின் அருமை தெரியும். சுஜாவைப் பிடித்து இருந்தாலும் ‘நீ ஒழுங்காகப் படித்தால் மட்டுமே காதலை ஏற்பேன்’ என்று கூறிவிட்டான். அவள் இறுதி ஆண்டு முடித்த பின் தான் காதலை ஏற்றுக்கொண்டான். அந்த ஆண்டே அவனுக்கு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்ததால் இந்த லெட்சரர் வேலையை ரிசைன் செய்துவிட்டான். சுஜாவும் சக்தியும் சேர்ந்தே இருப்பதால் இருவரைப் பற்றியும் நன்றாகத் தெரியும் அவனுக்கு. சக்தி அவனைச் ‘சார்’என்றே அழைப்பாள். ‘இப்போ நான் சார் இல்ல என்னை அண்ணன்னே கூப்பிடு!’ எனக் கூறிவிட்டான்.
தனியாகவே வளர்ந்த சக்தி ஒரு அண்ணன் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் சேர்ந்து சுஜாவைக் கிண்டல் செய்து கொண்டே இருப்பார்கள். சுஜாவும் சகஜமாகவே ஏற்றுகொள்வாள். இதுவே அவர்களது நட்பை மேலும் வலுவாக்கியது.
———————————————————————————————————-
“ராஜா கையவெச்சா அது ராங்கா போனதில்ல
நான் தாஜா பண்ணி வெச்சா வண்டி பேஜார் பண்ணதில்ல
பெரிசு என்றாலும் சிறிசு என்றாலும் சொகுசு என் வேலைதான்..”
பாட்டுப் பாடிக்கொண்டே லேப்டாப்பை மூடிவிட்டு, அவன் இருந்த ரோல்லிங் சேரில் ஒரு முறை சுற்றினான் நம் கதையின் நாயகன் சித்தார்த்.
அவனும் சுந்தரும் இப்பொழுது ஒரே ப்ரொஜெக்டில் வேலை செய்துகொண்டிருந்தனர். சுந்தர் இரண்டு நாட்களாக தன் தலையை உடைத்துக் கொண்டிருந்த அந்தப் பிரச்சனையை பத்து நிமிடத்தில் தீர்த்து வைத்தான் சித்தார்த்.
“எப்படி நண்பா முடிச்ச? நான் ரெண்டு நாளா முடிக்க ட்ரை பண்ணேன் முடியல” சுந்தர் ஆர்ச்சரியமாகப் பார்க்க,
“எதையும் ஓவரா திங்க் பண்ணாம ரிலாக்ஸா யோசிச்சு பாரு எல்லாம் உனக்கும் தெரியும். எப்பபாரு காதலிய பத்தி யோசிச்சுட்டு இருந்தா இப்படி தான் கண் மண் தெரியாது” சிரித்துக் கிண்டல் செய்தான் சித்தார்த்.
“டேய் இருடா! உனக்கும் ஒரு நாள் காதல் வராமலா போகும் அப்போ உனக்கு என் நிலைமை புரியும். அப்போ பாக்கறேன் நீ என்ன பண்றன்னு! ” சாபம் கொடுத்தான் சுந்தர்.
“எனக்கு இந்த டென்ஷன் வரவும் வராது. வர விடவும் மாட்டேன். வா இப்போ உன் டென்ஷன் கம்மி பண்ண காபி பிரேக் போலாம் “ என்று உறுதியாக கூறினான், அந்த உறுதி இன்னும் சில நாட்களில் இறுதியாகப் போவது தெரியாமல்.
சித்தர்த்தின் தந்தை மனோகர் ஒரு பெரிய விளம்பர நிறுவனத்தினை வெகுச் சிறப்பாக நடத்தி வந்தார். தன் மகனையும் அதில் ஈடுபட சொன்னார். அவன் சிறிது காலம் சாப்ட்வேரில் வேலை செய்ய நினைத்தான். பி இ முடித்த பின் இங்கு வந்து சேர்ந்தான். இப்பொழுது எம் பி ஏ வும் முடித்து விட்டான். இன்னும் ஆறு மாதத்தில் தன் சொந்த நிறுவனத்திலே சென்றுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் போகிறான். அவன் தந்தை தான் அவனுடைய இன்ஸ்பிரேஷன், எல்லா வகையிலும்.
அவரைப் போலவே உடற்பயிற்சி செய்வான்.யாரிடமும் கோபப்படமாட்டான். பொறுமையாக எல்லா விஷயத்தையும் யோசித்துச் செய்வான். ஒருவரின் முகம் பார்த்தே அவர்களின் மனதைப் புரிந்து கொள்வான். தந்தையின் கம்பீரமும், தாயின் அழகும் ஒருங்கேப் பெற்ற வசீகரன். நண்பர்கள் வெளிப்படையாக, ‘நீ அழகன் டா’ என்று சொன்னாலும் சிரித்துவிட்டு, கர்வம் சிறிதும் இல்லாமல் பழகுவான்.
சொல்ல மறந்துட்டேனே! நம்ம ஹீரோப் பல விஷயங்கள் தெரிந்தவன் தான். அதில் முக்கியமான ஒன்று அவன் ஒரு அருமையான பாடகன்.
தாய் பார்வதியின் விருப்பத்திற்காக அவனும் அவன் அக்காவும் சங்கீதம் கற்றார்கள்.
அவ்வப்போது நண்பர்கள் கேட்டால் தயங்காமல் பாடுவான். மொத்ததுல குட் பாய் அவ்ளோதாங்க.
“அம்மா நான் ஆபீஸ் கிளம்பறேன்”, என்று சொல்லிக்கொண்டே மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான். வெள்ளை நிற ட் ஷர்டும் நீல நிற ஜீன்சும் அணிந்து வரும் தன் மகனைப் பார்த்து,
“இன்னிக்கு வெள்ளிகிழமையா அதான் ஐயா கேஷுவல் டிரஸ் ல கலக்கறாரு”, அவன் கன்னத்தை தொட்டு நெட்டி முறித்தார்.
அவரின் கன்னத்தைப் பதிலுக்குப் பற்றி முத்தமிட்டான். “அம்மா இன்னிக்கு சுந்தர் கூட வெளில போறேன் கொஞ்சம் லேட்டா வருவேன்”என்றான். “சரிப்பா பாத்து போயிட்டு வா”, வழி அனுப்பி வைத்தார்.
சுந்தர் இன்று சுஜாவை அறிமுகபடுத்துவதாக அவனை அழைத்து இருந்தான். மாலை ஐந்து மணி ஆனதும் சுஜா சுந்தருக்குப் போன் செய்தாள். “ஹலோ சுந்தர்! நானும் சுஜாவும் இன்னும் அரை மணி நேரத்துல பீச் ரெஸ்டாரென்ட்ல இருப்போம். நீங்க கெளம்பிட்டீங்களா?” என கேட்க,
“எஸ் யுவர் ஆனார். நாங்களும் கெளம்பிடோம்”, சொல்லிவிட்டு உடனே சித்துவை அவசரப்படுத்தினான்.
“கெளம்பு டா மச்சான் ப்ளீஸ்!”, சுந்தர் கெஞ்ச,
“அவசரப் படாத டா..என் கார்லையே போய்டலாம். பத்து நிமிஷத்துல அங்க இருப்போம்.” கூலாகச் சொல்லிக் கிளம்பினான்.
“ஏற்கனவே ஒரு மாசமா பாக்க வரலன்னு செம காண்டா இருக்கா இனிக்கு லேட் ஆச்சுனா என்னைப் பேசியே கொன்னுடுவா”என பயந்துகொண்டே சொன்னான்.
“உனக்கு வேணும் டா! நீ ஏன் பாக்கல ..? ”
“அவளுக்கு எக்ஸாம்ஸ் டா, அதான் முடிச்சுட்டு பாக்கலாம்ன்னு சொன்னேன்.”
சித்து சிரித்துகொண்டே ‘இதெல்லாம் தேவையா ‘ என நல்லலாக ஒருப் பார்வைப் பார்க்க, சுந்தர் அவனைக் கும்பிட்டு “காரை ஓட்டுங்க தெய்வமே” என்று சலித்துக்கொண்டன்.
சக்தியும் சுஜாவும் வருவதற்கு முன்பே அவர்கள் இருவரும் வந்து உணவை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தார்கள். அடுத்தப் பத்து நிமிடத்தில் அவர்களும் வந்துவிட,
“ஹாய் சுஜா! ஹாய் சக்தி!” வரவேற்றான் சுந்தர்.
“ எப்படி இருக்கீங்க அண்ணா?” சக்தி கேட்டாள்.
“ ஐ அம் குட் “ என்றான். சுஜா அவனைப் பார்த்து “இன்னிக்கு மட்டும் நீங்க வரலைனா நாளைக்கு இவளையும் கூட்டிட்டு உங்க வீட்டுக்கே வரலாம்ன்னு இருந்தேன் “ எனச் சொல்ல ,
“ நீ செஞ்சாலும் செய்வ தாயே. அப்டி ஏதும் நடக்காம போனது என் அதிர்ஷ்டம் “ என பயந்தவாறு நடித்தான்.
பின்பு “இவன் தான் என்னை இங்கே சீக்கிரம் கூட்டிட்டு வந்த புண்ணியவான், மை க்ளோஸ் பிரண்ட் , சித்தார்த் ” என அறிமுகம் செய்து வைத்தான்.
அதுவரை சக்தியையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவன், சுந்தர் கூறியது காதில் விழாமல் அமர்ந்திருந்தான்.
“ஹாய் நான் தான் சுஜா “ சுஜா கை நீட்ட , அப்பொழுது தான் சுயநினைவு வந்தவனாகப் பதிலுக்குக் கை குலுக்கினான். பின் சக்தியை நோக்கி அவன் “ஹாய்” சொல்லி கை நீட்ட , அவளோ தமிழ் பெண்களின் அடையாளமாக இரு கையை குவித்து “வணக்கம். நான் சக்திபிரியா” என்றாள். அந்த நொடியே அவனுக்குள் ஏதோ செய்தது.
“பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே”
அவன் உள்ளம் அவனையும் அறியாமல் பாடத்தொடங்கியது.
அதன் பின்னர் அதை அவன் வெளிக்காட்டவில்லை. சுஜாவிடம் தங்களின் ஆபீஸ் கதைகளைப் பேசிகொண்டிருன்தனர். எதையோ சுந்தர் கூற அதற்குச் சிரித்தவனைக் கண்டு ஒரு நிமிடம் தன்னையே மறந்துவிட்டாள்.
‘ஒரு ஆணுக்குக் கூட இத்தனை அழகாய் அடுத்தவரை மயக்கும் சிரிப்பு இருக்குமா?!’ என நினைத்தாள். ‘சே! என்ன இது பார்த்து பத்து நிமிடம் கூட ஆகவில்லை அவனைப் போய் இவ்வளவு ரசிக்கிறோமே’ என்று தன் நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டே மனதை அடக்கினாள்.
இவளின் பார்வையைக் கவனிக்காமல் இருப்பானா நம்ம ஆளு! பார்த்துட்டான்…
அப்பொழுது அவன் மனதில் ஏற்பட்ட உணர்ச்சிகளை இது வரை அவன் அனுபவித்ததே இல்லை. ‘அவனும் ஒரு பெண்ணை இவ்வளவு ரசிப்பான்’ என்று ஒரு அரை மணி நேரம் முன்னால் யாராவது சொல்லியிருந்தால், கண்டிப்பாக அவரை ஏளனம் செய்து சிரித்திருப்பான். ஆனால் இப்போது! அது நடந்துவிட்டது. அவனுக்கும் ஒரு பெண்ணை பிடித்து இருக்கிறது!
‘டேய் சுந்தர் ! உன்னோட சாபம் இவ்ளோ சீக்கிரம் பலிக்கும்ன்னு நினைக்கவே இல்ல டா ‘ எனத் தனக்குதானேச் சொல்லிகொண்டான். ஒரு புறம் ‘யார் என்று கூட சரியாகத் தெரியாத ஒரு பெண்ணைப் பற்றி இப்படி நினைக்கிறாயே!’ என்று மூளை சொன்னாலும் , ‘அவ தான உன் மனசை முதல் பார்வையிலேயே கலச்சவன்னு’ மனம் சண்டை போட்டது.
அப்புறம் என்னப்பா. மனசுக்கு ஒன்னு புடிச்சுட்டா அது யார் பேச்சையும் கேட்காதே! அவளின் ஒவ்வொரு அசைவையும் தன் மனதில் ஒரு வீடியோவைப்போல் சேவ் செய்ய ஆரம்பித்தான். அவள் பேசும்பொழுது கூடவே பேசும் கண்களும், இயல்பாகவே சிவந்து குவிந்த இதழ்களும் , அவ்வப்போது தன்னை பார்க்கும்போது லேசாக சிவக்கும் கன்னமும், அவள் நீண்ட கூந்தலும் , ஸ்பூனை அழகாகப் பிடித்திருக்கும் அவள் நீண்ட விரல்களும் காண்டிட் பிக்ச்சராக மனதில் சேவ் ஆனது.
நேரம் ஆகவே அனைவரும் கிளம்பினர்.
“நைஸ் மீட்டிங் யு சித்தார்த்” , சுஜா கூற ,
“மை ப்ளஷர் “ என சக்தியைப் பார்த்துச் சொன்னான்.
“சொன்னது நானு, பதில் அவளுக்கா ?“ என நக்கல் செய்ய ,
“என்ன்னடா நடக்க்குது இங்ங்கக .. ” என வடிவேல் பாணியில் கேட்டான் சுந்தர்.
‘தன்னை இவர்கள் கவனித்திருப்பர்களோ’ என்று ஒரு நொடி பயந்த சக்தி, “காஷுவலா நடந்தத ஏன் ரெண்டு பெரும் பெரிசு பண்றீங்க”, என இடையே உளற,
“இத்தோடா!” , சுஜா அதிசயமாய் பார்த்தாள் சக்தியை.
‘இவ இப்டி பேசரவ இல்லையே எப்பவும் கூட சேர்ந்து கலாயக்கரவ இன்னிக்கு ஏன் இப்டி பேசரா… சும்திங் ராங்’ என சுந்தர் நினைத்தான்.
“சக்தி உனக்கு இந்த தவளை ய பத்தி தெரியுமா” என சுந்தர் கேட்க
சித்தார்த் சிரித்து விட்டான். உடனே சக்திக்குக் கோபம் வந்துவிட்டது. சுஜாவை பார்த்து “நான் கிளம்பறேன். நீ வரியா இல்லையா?” என எரிந்துவிழ , ஆக்டிவ்வாவில் ஏறினர் இருவரும்.
“சுந்தர் பை சித்தார்த் பை” என்றாள் சுஜா.
“வரேன் அண்ணா வரேன் சித் .. மிஸ்டர் சித்தார்த்” என சக்தி சொல்ல அவளைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான் சித்து. ஒரு நொடி அவள் இதயத் துடிப்பே நின்று விட்டது. முகத்தைத் திருப்பிக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.
வண்டியில் செல்லும்போது ஏதோ வளவளத்துக் கொண்டே வந்த சுஜாவின் பேச்சு அவளுக்குக் கேட்கவே இல்லை. வண்டி போனப் போக்கிலே சென்று கொண்டிருந்தாள்.அவள் மனம் அவனிடமே நின்று விட்டது . எப்படியோ சுஜா வை இறக்கி விட்டுத் தன் வீடு வந்து சேர்ந்தாள்.
சுந்தரை இறுக்கிவிட்டு தன் வீடு வந்த சித்துவுக்கும் மனம் அவளிடமே நின்றது.
இருவரது மனமும் இப்போது ஒரு பாதையில் இருப்பது போல் உணர்ந்தனர்.
—————————————————————————————————————————————————————————————
“ஹலோ அன்பு மாமா எப்படி இருக்கீங்க?…. அம்மா எப்படி இருக்காங்க? எங்க இருக்கீங்க இப்போ? அம்மா பக்கத்துல இருக்காங்களா..?”
“நாங்க நம்ம கடைல தான் இருக்கோம். அவ இங்க இல்ல யுவராஜ். அவ ரூமல எம்பராயடரி டிசைன் செஞ்சுட்டு இருக்கா. நீ எப்படி இருக்க? சான் பிரான்சிஸ்கோ எப்படி இருக்கு?”
“எஸ் எஃப் ஓ நல்லா தான் இருக்கு. நான் தான் உங்கள அப்புறம் அம்மாவை, நம்ம ஊரை ரொம்ப மிஸ் பண்றேன். இப்போ தான் நான் நல்லா சம்பாதிக்கறேனே அப்புறம் ஏன் அம்மா இன்னும் கஷ்ட படனும். இந்த டிசைனிங் வேலை எல்லாம் பாத்து ஏன் உடம்ப கெடுதுக்கராங்க. நான் சொன்னா கேட்க மாட்டாங்க. நீங்களாவது கொஞ்சம் சொல்ல கூடாதா மாமா?”
“அவளுக்கு ஆறுதல் தர்ற ஒரே விஷயம் அது தானப் பா. அவ சந்தோசம் தான் எனக்கு முக்கியம். அவளுக்கு எப்போ போதும்ன்னு தோணுதோ அப்போ விடட்டும். சரி விடு நீ எப்போ வர்ற. இங்க இருந்து போய் அஞ்சு வரிஷம்மாச்சு. உன்னோட கம்பெனி ஆரம்பிக்க போதுமான பணம் நம்ம கிட்டயே இருக்கு நீ இன்னும் சம்பாதிக்க வேணாம். இங்க வா நாம சேர்ந்து இருந்தா அதுவே உங்க அம்மாவுக்கு பெரிய ஆறுதல்”.
“இல்ல மாமா.. நான் வெறும் கம்பெனி மட்டும் ஆரம்பிக்கல ஒரு நாசக்காரனோட சாம்ராஜ்ஜியத்த அழிக்கனும். அடிச்சா எந்திரிக்க முடியாத மாதிரி அடிக்கணும். உங்களையும் அம்மாவையும் ஏமாத்தினவங்க நல்லா இருக்க கூடாது. பணத்தப் பணத்தால தான் சமாளிக்க முடியும். அதான் என்னோட இந்த அஞ்சு வருஷ தவ வாழ்க்கைல ஒரு நிமிஷத்த கூட வீணடிக்காம உழைச்சேன். இப்போ நான் இந்தியா வந்தா எல்லா விளம்பரக் கம்பனியும் நம்ம கூட சேர்ந்துடுவாங்க.இன்னும் ஆறு மாசம் டைம் குடுங்க அப்புறம் அங்க தான் இருப்பேன்.அப்போதான் அந்த ஆளை ஈசியா கவுக்க முடியும்.” பொருமினான் யுவராஜ்.
“வேணாம் ராஜ் ! உங்க அம்மா இதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டா. நீ நல்ல நிலமைக்கு வந்து அவங்க அளவு உயரனும்னு நினைச்சாளேத் தவிர அவங்கள துன்புறுத்த ஒரு நாளும் விட மாட்டா” கெஞ்சலாகச் சொன்னார்.
“மாமா நான் அப்புறம் உங்க கிட்ட பேசறேன். அம்மா கிட்ட எப்போ ப்ரீ ஆகறேனோ அப்போ பேசறேன்னு சொலுங்க. பை.”வைத்துவிட்டான்.
‘இவன் அடுத்தவர் சொல்லி கேட்கும் ரகம் இல்லை. பாசத்திற்காக எந்த அளவும் இறங்குவான். அனால் ஒருவரைப் பகையாக நினைத்துவிட்டால் அவர்கள் காலில் வந்து விழுந்தாலும் திரும்ப நண்பனாவது கடினமே!’, மனதில் நினைத்துப் பெருமூச்சு விட்டார் அன்பு மாமா என்கிற அன்பரசு.பின்பு தன் தங்கையைப் பார்க்கச் சென்றார்.
மலர்மொழி தான் யுவராஜின் தாய். அன்பரசுவின் ஒரே தங்கை. இருவருக்கும் மலர்மொழியின் மேல் கொள்ளை பிரியம். ஒரு சின்னக் கஷ்டம் கூட வராத அளவு அவர்களைப் பார்துகொள்வர்கள். மலரும் அப்படியே. இவர்கள் இருவர் தான் அவரின் உலகமே. அவர்களுக்காக தன் மனதில் இருக்கும் ஆற்ற முடியாத துயரை சிரித்த முகத்துள் மறைத்தவர். தான் சிறு வயதில் கற்றத் தைய்யல் மற்றும் எம்பராய்டரி இப்போது அவரை ஒரு சிறந்த உடை வடிவமைப்பாளராக மாற்றியது. நிறைய விளம்பர மற்றும் கல்யாணப் பெண்களுக்கு ஆடை வடிவமைத்துத் தைத்துக் கொடுப்பார்.
அன்பரசு ஒரு சாதாரண மளிகைக் கடையில் தொடங்கியவர் இப்பொழுது சென்னையில் ஒரு பெரிய சூப்பர் மார்கெட் வைத்து நடத்துகிறார். அங்கேயே தான் ஒரு தனி அறையில் தன் டிசைநிங் ஆபீசை வைத்திருந்தார் மலர். அவருடன் ஒரு நான்கு ஐந்து பெண்களை வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தன் தங்கைக்காகவும் தங்கை மகனுக்காகவும் தான் ஒரு திருமணம் கூடச் செய்து கொள்ளாமல் தன் வாழ்கையே அவர்களுக்காக வாழ்பவர். யுவராஜை வளர்த்து ஆளாக்கியவர்.
தன் தங்கையைப் பார்க்கச் சென்றவர் அந்த அரையை ஒரு முறைப் பார்த்து ரசித்தார். அங்கு வேலை செய்யும் பெண் ஒருத்தி, பெயர் மீனா அவள் தான் தாங்கள் அமைக்கும் புது டிசைன்களை கம்ப்யூட்டர்ரில் வடிவமைத்து அதை என்லார்ஜ் செய்து ஆங்கங்கே அழகாக மாட்டி அதற்கு ஏற்ற வர்ண துணிகளால் அலங்காரம் செய்து வைத்திருந்தாள். மாதம் ஒரு முறை அந்த அரையைத் தங்களின் புதுப்புது டிசைன்களால் மாற்றி அமைப்பார்கள். ஒவ்வொரு முறை வரும்போதும் அதில் உள்ள டிசைன்களைப் பார்த்து தங்கள் உடைகளில் அம்மாதிரி அமைக்கசொல்லி வரும் வாடிகையளர்கள் கேட்பார்கள்.
“ரொம்ப நல்ல இருக்கும்மா” பாராட்டினார் அன்பரசு.
“ரொம்ப தேங்க்ஸ் சார் “ பவ்யமாகக் கூறினாள் அந்தப் பெண். அண்ணனின் குரல் கேட்ட மலர் அன்று தைத்த புதுவித சல்வாரை மற்றொரு பெண்ணிடம் கொடுத்து ,
“இதை அயன் பண்ணி வச்சுடு மா, ஈவனிங் டெலிவரி” எனக் கூறிவிட்டு எழுந்தார்.
“என்ன அண்ணா? யுவா போன் பண்ணான எனக் கேட்க ,
“எப்படி மா தெரியும்” ஆச்சரியமாக பார்த்தார்.
“அதச் சொல்லத் தான நீங்க வருவீங்க. இல்லனா எப்போ பாரு ஸ்டாக் வந்துச்சா வேலை நடக்குதான்னு அங்கேயே இருப்பீங்களே! ” சிரித்தார் மலர்மொழி.
“ஆமாம்மா. நாம இல்லனா ஒன்னும் ஒழுங்கா நடக்கறது இல்ல.. அதான்.. ராஜ் சீக்கரம் வந்துடுவேன்னு சொன்னான் மலர். கம்பெனி சீக்கரம் ஆரம்பிச்சுடுவான். நீ நினைச்ச மாதிரி அவன் ரொம்ப உயரத்துக்கு போகபோறான் பாரு” தன் மருமகனைப் புகழ ,
“அவன் நல்லா வருவான்னு எனக்கு தெரியும் அண்ணா. உங்க வளர்ப்பாச்சே, ஆனால் ..”என இழுக்க ,
“என்னம்மா ஆனால் ?!”
“இந்தக் கல்யாணம் மட்டும் வேணாமன்னு சொல்றான்.. அது தான் ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஒரு பேரனோ பேத்தியோ வந்தா இந்த வேலையெல்லாம் விட்டுட்டு அவங்களப் பாத்துக்கலாம் “ எனச் சொல்ல ,
அங்கு வேலை செய்த பெண் ஒருத்தி “ஐயோ மேம்! அப்போ எங்க வேலை” எனப் பதற ,
உடனே அவர் , “உங்களை சும்மா விடமாட்டேன், என் மருமகளை விட்டு உங்களை எல்லாம் வேலை வாங்குவேன்”என கூறிச் சிரித்தார்.
தன் தங்கையின் இந்த சிரிப்பே அன்பரசுவை நெகிழ்த்தியது. ‘இந்தபய வரட்டும் முதல் வேலை கல்யாணம் தான்’ என நினைத்துக்கொண்டார்.
ஆனால் அங்கு யுவராஜோ அசுரத்னமாய் உழைதுக்கொண்டிருந்தான். எம் பி ஏ முடித்தவுடன் அவனுக்கு அமெரிக்காவில் ஒரு பெரிய விளம்பர நிறுவனம் வேலை கொடுத்துவிட்டது. சிறு வயது முதலே அதிபுதிசாலி. எட்டாம் வகுப்பில் இருக்கும்போதே டபுள் ப்ரோமோஷன் பெற்று பத்தாம் வகுப்புக்குச் சென்றான். வகுப்பில் அவனை விட மூத்த மாணவர்கள் கூட அவனுடன் போட்டி போடமுடியாமல் போராடினர்.
ஆசிரியர்கள் கண்ணை மூடிக்கொண்டு அவன் விடைத்தாளை திருத்தலாம். அவ்வளவு கச்சிதமான விடைகளை எப்படிதான் எப்பொழுதும் எழுதுகிறானோ என அவர்களே ஆச்சரிய படுவார்கள். எம் பி ஏ படிக்கும் போதே நிறைய நிறுவனங்கள் வந்தது. அவன் அதிலே மிகச்சிறந்ததை தேர்ந்தெடுத்தான். இப்பொழுது அந்த நிறுவனமே அவனை இந்தியாவில் உள்ளத் தங்கள் நிறுவனத்தை ஏற்று நடத்துமாறு கூறியது. அந்தத் துறையில் சிறப்பாக அதை நடத்த என்னெனச் செய்யவேண்டும் என்பதைத் தலை முதல் கால் வரைத் தெரிந்து வைத்திருந்தான்.அதனாலேயே அவனை விட்டுவிட அவர்கள் விரும்பவில்லை.
இருப்பினும் அவன் தன் சொந்த நிறுவனம் தொடங்க யு எஸ் இருந்துகொண்டே வேலைகளை ஆரம்பித்து விட்டான். இன்னும் ஆறே மாதத்தில் அதை இந்தியாவில் தொடங்கிவிடுவான். யுவராஜ் ஆரம்பிக்கப் போகும் விளம்பர நிறுவனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் முன்கூட்டியே நிறையப் ப்ராஜெக்ட்கள் வந்து குவிந்து விட்டன. மற்றக் கம்பெனிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவன் இப்பொழுது அனைத்துச் சக்திகளும் ஒன்று சேர்ந்த சூரனாக இருந்தான். வேலை பார்த்தது போக மற்ற நேரங்களில் நீச்சல் குளத்தில் உள்நீச்சல் அடிப்பான். பல இரவுகள் தூக்கம் வராமல் நள்ளிரவு ஒரு மணிக்குகூட அவன் இவ்வாறு நீந்துவதுண்டு. அப்படி அவன் மனதை ரணமாகும் விஷயம் அதே நேரத்தில் மற்றொருவர் மனதையும் குத்திக் குதரிக்கொண்டு தான் இருந்தது.
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்