KVK-5

கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களை ப்ராஜெக்ட் வொர்க் செய்வதற்காக அவர்களின் போக்கில் விடிருந்தார்கள். அதனால் வகுப்பறையில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சக்திப்ரியா ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து அன்று நடந்த சம்பவத்தை நினைத்துக்கொண்டிருந்தாள். அந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆனபோதிலும் அவளால் அதிலிருந்து வெளி வர இயலவில்லை. வெளி வரவும் அவளுக்குத் தோன்றவில்லை. சித்துவின் அருகாமை அவளை ஒரு மாய வலைக்குள் தள்ளி இருந்தது. இத்தனை நாள் இது வெறும் ஈர்ப்பு என்று நினைத்தவளால் இப்பொழுதும் அப்படியே நினைக்க முடியவில்லை.
அவனைப் பார்க்கும்போது தன் மனம் ஏன் குதூகலம் கொள்ள வேண்டும் ?. கண்கள் ஏன் அவன் பார்வைக்காக ஏங்க வேண்டும்?. அவனின் வாசம் இன்னும் அவள் நினைவை விட்டு அகலவில்லை. ‘இது காதலா? ஆனால் அவன் தன்னை காதலிக்கிறானா? அதுபற்றி ஒன்றும் தெரியாதே! இதுவரை அவ்வாறு அவன் எதுவும் சொல்லவில்லையே ! அவனே சொல்லாதவரை நான் எப்படி சொல்ல முடியும்?’
தன் மனதுடன் ஒரு பட்டிமன்றமே நடத்தினாள்.
சுஜா விடம் கூட இதைப் பற்றிச் சொல்ல அவள் விரும்பவில்லை. காதல் வந்தால் பெண்கள் யாரிடமும் சொல்வதில்லை. இதைச் சித்துவாகவே உணர்ந்ததால் தான் உண்டு.
ஒரு வாரம் சென்ற நிலையில் சித்தார்த் கம்பெனியில் வேலையில் மூழ்கிவிட்டான். மனோகர் ஒரு புது ப்ராஜெக்ட் அவன் பொறுப்பில் செய்யச்சொல்லி இருந்தார். அதற்கான வேலையில் இறங்கியிருந்தான்.
விளம்பரத்தில் நடிப்பதர்க்கான ஆட்கள் முதற்கொண்டு அவனே தெரிவு செய்தான். மறுநாள் ஷூட்டிங் வைத்திருந்தார்கள். அதற்கு முன் அந்த விளமபரத்தில் நடிக்க இருக்கும் ஹீரோ ஹீரோயின் இருவரையும் கான்ட்ராக்ட் சைன் செய்ய அழைத்திருந்தான்.
பொதுவாக அவர்களின் மேனேஜர் தான் சைன் செய்த பேப்பரை கம்பெனியில் கொடுப்பது. இவனைப் பார்க்கவே அந்த ஹீரோயின் நேரிலேயே சைன் செய்ய வந்தாள்.
“ப்ளீஸ் கம் இன் ” இருவரையும் அழைத்தான்.
“பெஸ்ட் விஷஸ் சித்தார்த் இது உங்க ஃபர்ஸ்ட் ப்ராஜெக்ட்ன்னு சொன்னாங்க ” அந்த ஹீரோ கை குலுக்கினான்.
அந்த ஹீரோயின் அவனைப் பார்த்ததும் அவனை மயக்க நினைத்தாள். அழகு அறிவு பணம் மூன்றும் இருக்கும் ஒருவனை விட அவளுக்கு மனம் வரவில்லை. அவன் அருகில் சென்று அவனைக் கட்டிப்பிடித்து வாழ்த்துச் சொல்ல நினைத்து அவனை நெருங்கினாள். அவனோ “மேடம் ப்ளீஸ் ஹவ் யுவர் சீட் ”  அங்குப் போடப் பட்டு இருந்த சோஃபாவை காட்டினான்.
சிறு எரிச்சலுடனே அவள் சென்று அமர்ந்தாள். இருப்பினும் முதல் சந்திப்பில் அதைக் காட்ட முடியவில்லை.
“நாளைக்கு மார்னிங் பதினோரு மணிக்கு ஷூட்டிங். உங்களுக்குப் பத்து மணிக்கே கார் வந்துடும். உங்க காஸ்டியும்ஸ் பத்தி எல்லாம் டைரக்டர் சொல்வர். உங்க பேமென்ட் எண்டு ஆஃப் டே கிரெடிட் ஆயிடும் அண்ட் தட்ஸ் ஆல் ஃபிரம் மை சைட்” என்று முடித்தான்.
“எங்களுக்கும் ஓகே தான் மிஸ்டர் சித்தார்த்”  அந்த ஹீரோ சொல்ல,
இருவரையும் பார்த்து “தென் யு கேன் சைன்”  டாக்குமென்ட்சை கொடுத்தான்.
“ஷூட்டிங்க்கு நீங்க வரீங்களா சித்து?”  அந்த ஹீரோயின் கேட்க,
“எஸ் அஃப்கோர்ஸ்! இட்ஸ் மை ஃபர்ஸ்ட் ப்ராஜெக்ட். சோ ஐ வில் ”  அவளைப் பார்த்துக் கூறினான்.
அவள் சிரித்துக் கொண்டே “தென் மீட் யு ”  அவனை மர்மப் புன்னைகை ஒன்றை வீசிவிட்டே கிளம்பினாள்.அவள் முகத்தை வைத்தே அவள் சரி இல்லை என்று புரிந்துகொண்டான்.
அதே நேரத்தில் சுஜா சக்திக்குப் போன் செய்தாள். ” சக்தி கொஞ்சம் ஸ்டடீஸ் டிஸ்கஸ் பண்ணனும்.நான் உங்க வீட்டுக்கு வரேன்”.
“வாயேன், நானும் போர் அடிச்சுட்டு தான் இருக்கேன். வா கொஞ்சம் படிக்கலாம்” என்றாள் சக்தி.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் சக்தயின் வீட்டில் இருந்தாள் சுஜா.
“வா சுஜா எப்படி இருக்க ?” ஹாலில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த ஜானகி அவளை வரவேற்றார்.

“நல்லா இருக்கேன் ஆண்ட்டி, நீங்க அங்கிள் எல்லாரும் நல்லா இருக்கீங்களா? அம்மா உங்கள கேட்டதாசொல்ல சொன்னாங்க”  நலம்  விசாரித்தாள்.
“நாங்க நல்லா இருக்கோம். வந்து இங்க உட்காரு. உங்க படிப்பு இன்னும் கொஞ்ச நாள்ல முடிஞ்சிடும் அப்பறம் என்ன பண்ண போற ?” அவளைப் பக்கத்தில் அமர வைத்து விசாரித்தார்.
“கல்யாணம் தான் ”  வெடுக்கென்று கூறிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.
” அட! உங்க வீட்ல மாப்பிளை பாக்க ஆரம்பிசுடாங்களா? சக்திக்கும் ஆரம்பிகனும்ம்மா. இப்போ தான் ஜாதகம் குடுத்து இருக்கோம் ”  வாய் தவறி கூறி விட்டார்.
தூக்கி வாரிப் போட்டது சுஜாவிற்கு.
“என்ன ஆண்ட்டி சொல்றீங்க ? சக்தி என்கிட்டே சொல்லவே இல்லையே?”  படபத்தாள்.
“அவளுக்கு இன்னும் தெரியாது சுஜா. அவ படிப்பு முடிஞ்சப்றம் தான் கல்யாணம். இப்போ பாக்க ஆரம்பிச்சா தான உங்க படிப்பு முடிய சரியா இருக்கும். அவ கிட்ட எதுவும் சொல்லிடாத சுஜா. அவ ரூம்ல தான் இருக்கா. நீ போ நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன் ” என்று சென்றார்.
சுஜாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரே சக்தியிடம் சென்று சித்துவின் காதலைப் பற்றிச் சொல்ல நினைத்தாள். ‘லேட் பண்ணா அப்புறம் எல்லாருக்கும் கஷ்டம் ‘ என நினைத்துச் சக்தியின் அறைக்குச் சென்றாள்.
சக்தி தன் படுக்கையில் அமர்ந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். சுஜா கதவை திறந்து உள்ளே நுழைந்ததும், சட்டெனத் தன் கையை முதுகின் பின்னே மறைத்தாள். அதைக் கவனித்த சுஜா அவள் அருகே வந்து அவள் கையை பிடித்து இழுத்தாள். அவள் கையில் அவள் அன்று எழுதிய நோட்பேட் இருந்தது.
“என்னடி இது? இதை எதுக்கு மறைக்கற? அதுல என்ன இருக்குன்னு இப்போ நீ காட்டனும் ” வெளியே சக்தியின் தாய் சொன்ன விஷயத்தை கேட்டதிலிருந்து உள்ளே கோபமும் வருத்தமும் இருந்தது. அதனால் அந்தக் கோபத்தோடு கேட்டாள்.
சக்திக்கும் அப்போது மறைக்கும் எண்ணம் இல்லை. ஆகவே அவளிடம் அதைக் கொடுத்தாள். சுஜா அதை வாங்கி பிரித்துப் பார்த்தாள்.
அதில் அவள் சித்து என்று ஒவ்வொரு பக்கத்திலும் எழுதி இருந்தாள். ஆனந்ததில் அவள் கண்ணில் நீர் வந்தது. உடனே சக்தியை கட்டிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ஹே! சுஜா என்னடி ஆச்சு ஏன் அழற ? சொல்லிட்டு அழு டி” புரியாமல் அவளப் பார்த்தாள்.
சுஜா தன்னை சுதாரித்துக் கொண்டு பின்பு சக்தியைப் பார்த்துக் ” எத்தனை நாளா இது நடக்குது ? அதுவும் எனக்குத் தெரியாம ”  இடுப்பில் கை வைத்துக் கொண்டு மிரட்டினாள்.
சக்தி சிரித்து விட்டு ” உங்களுக்குத் தெரியாம இது ஒரு வாரமா நடக்குது “என்றாள்.
“என்னடி சொல்ற ஒரு வாரமா ?”  வாயை பிளந்தால் சுஜா.
“ஆமா சுஜா, ஐ லவ் சித்து. எவ்ளோவோ யோசித்துப் பாத்தேன், இது அட்ட்ராக்ஷன் இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன். ஆனா கொஞ்சம் தயக்கமாவும் இருக்கு”  வெட்கப் பட்டும் சினிங்கியும் சொல்ல,
“அப்படி போடு, இது மிஸ்டர் சித்தார்த்துக்கு தெரியுமா?? ஆர்வமாகக் கேட்க
“ஐயையோ ! இல்லை. அவரும் என்னை லவ் பண்றாரா இல்லையான்னு தெரியாம எப்படி டி?” எனப் பதறினாள்.
சுந்தர், அவர்களே அவர்ளின் காதலை சொல்லிகொள்ளட்டும் என்று சொன்னதால், சுஜா சித்துவின் காதலைப் பற்றி இப்பொழுது சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தாள்.
“இப்படி சொல்லாம இருந்த காதல் எல்லாம் கடைசில பிரச்சனைல தான் முடியும். அதுனால உடனே சித்து கிட்ட பேசு.. அது தான் லவ் ல ஒரு சீனியரா நான் உனக்குக் குடுக்கற அட்வைஸ் ” என ஆசிர்வதிப்பது போலக் கையை வைத்துக் கொண்டு சொல்ல,
கதவு தட்டும் சப்தம் கேட்டது,
ஜானகி தான் கையில் டீ கப் உடன் வந்தார்.
அப்பொழுது தான் அவர் சொன்ன விஷயம் ஞாபகம் வர ‘ எந்தப் பிரச்னையும் இவங்க காதல்ல வந்துடக் கூடாது’ என மனதில் வேண்டினாள்.
மூவரும் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டு டீ அருந்தினர். ஆனால் சுஜா அந்த நேரம் தன் மொபைலிலிருந்து சுந்தருக்கு ‘ சக்தி லவ்ஸ் சித்து ‘ என ஆரம்பித்து அனைத்தையும் செய்தியாக அனுப்பினாள்.
அந்தபுறம் சுந்தர் ஆனந்தத்தில் மிதந்தான். உடனே சித்துவிற்கு போன் செய்தான்.
“டேய் ! மச்சான்..”
“என்ன டா இவ்ளோ ஹாப்பியா இருக்க ? என்ன ஆச்சு உனக்கும் சுஜாகும் சண்டையா ? பிரேக் அப் பண்ணிட்டாளா?”  அதே ஆர்வத்துடன் சிரித்துகொண்டு கேட்க,
“அடப்பாவி ! உனக்குப் போய் ஒரு நல்ல விஷயம் சொல்லலாம்ன்னு நினச்சேன் பாரு, உன் வாய்ல ஆசிட் ஊத்தி கழுவு. நான் கோவமா கெளம்பறேன். பை”  பொய்க் கோவத்துடன் சொன்னான்.
“கோவமா டா?..ஸாரி… சொல்லு சொல்லு என்ன விஷயம்”?
“போய்த் தொல மன்னிச்சுட்டேன். சக்தி மேடம் இருக்காங்கல்ல…..”
” என்ன டா சக்திக்கு .. என்ன ஆச்சு?” என்று பதற
“அவங்க யாரோ சித்துன்னு ஒரு பையன லவ் பண்றாங்களாம் ப்பா…” என இழுத்து இழுத்து சொன்னான்.
“டேய்ய்ய்ய்ய்…… என்ன டா சொல்ற நிஜமாவா ”  முகம் எல்லாம் மலர மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான்.

“ஆமா டா .. லைவ் அப்டேட் ஃபரம் மை ஸ்வீட்ஹார்ட் சுஜா ”  பெருமை பட்டுக்கொண்டான்.
“எப்படி டா எப்படி சொன்ன?… ஓ மை காட்! ஐ கான்ட் பிலீவ் மேன்..” வார்த்தைகள் வராமல் தவித்தான் சித்து.
“ஆமா! அவ உன் பேர நோட் புல்லா எழுதி வச்சிருக்காளாம்.. ஷி இஸ் மேட் அபௌட் யு டா.. என்ன டா பண்ண அன்னிக்கு ஒழுங்கா சொல்லிடு” கிண்டல் செய்ய ஆரம்பித்தான்.
“என் பேர எழுதி வெச்சிருக்காளா .. சோ ஸ்வீட் .. அன்னிக்கு நான் பிளான் பண்ணி எதுவும் பண்ணல , இட் ஹாபென்ட்” எனச் சிரித்துக்கொண்டு குரல் கம்மிய படியே பேசினான்.
“என்ன டா வாய்ஸ் மாறுது… நான் சக்தி இல்லை. சுந்தர்.”
“டேய் ! சீ! எனக்குத் தெரியாதா… ஐ தாட் ஆஃப் மை கேர்ள் ” எனச் சொல்ல
” இது தான் டா நீ அவகிட்ட பேசவேண்டிய நேரம். சோ பேசு, நான் அப்பறம் உனக்குப் போன் பண்றேன். ஆல் தி பெஸ்ட் மச்சான் ” என இணைப்பை துண்டித்தான்.
அவ்வளவு நேரம் இருந்த வேலைப் பளு இப்பொழுது அவனுக்கு இல்லை. காற்றில் மிதப்பதைப் போல உணர்ந்தான்.அவளைத் தன் உள்ளங்கையில் வைத்துத் தாங்கப் போகும் நாட்களை நினைத்துப் பூரித்துப் போனான். இரவு அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
அங்கே சக்தி சுஜாவிடம், “சுஜா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா ”  வெட்கப்பட்டுக் கொண்டே கேட்க
“அட பாருடா… மேடம் கன்னம் எல்லாம் ப்ளஷ் அடிக்குது” என்று சொல்ல
அவளோ தன் கன்னத்தை கை வைத்து மூடிக்கொண்டு “குளிர் காலம் ல அதான் அடிக்கடி இப்படி ஆயிடுது ” என்று வழிந்தாள்.
“ஹ்ம்ம் வழியாத, இதெல்லாம் அங்க வெச்சிக்கோ. என்ன ஹெல்ப் வேணும் சொல்லு “
“எனக்கு சித்து நம்பர் வேணும் ” என எங்கோ பார்த்துக்கொண்டு கேட்க..
“ஹா ஹா ஹா”  சிரித்தாள்சுஜா.

“ஹே சிரிக்காத டி இப்போ தரப்போறியா இல்லையா?” சற்று கோபமாகக் கேட்க அதைக் கொடுத்துவிட்டே சென்றாள் சுஜா.
இரவு அனைவரும் உறங்கியபின் சித்துவிற்கு பேசலாமா என யோசித்துக்கொண்டே கையில் போனை வைத்துகொண்டு தன் படுக்கையில் அமர்ந்திருந்தாள்.
அவன் நம்பரை டயல் செய்வதும் கட் செய்வதுமாக இருந்தாள்.
கூச்சம் ஒரு புறம், என்ன பேசுவது என்ற தயக்கம் ஒரு புறம், அவளுக்கு உயிர்வதையாக இருந்தது.
சித்துவும் அவன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவள் கூப்பிடடும் என்று  காத்திருந்தான். பிறகு, ‘ அவளுக்கு அந்தத் தயக்கத்தை கூட நான் ஏற்ப்படுத்தக் கூடாது’ என்று எண்ணி தானே அவளைக் கூப்பிட்டான்.
அவள் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே அவள் மொபைல் சினுங்கியது.
சித்து தான் அழைத்துக்கொண்டிருந்தான்.
யோசிக்காமல் உடனே எடுத்தாள்.
“………………………”
“………………………..”
இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனம் காத்தனர். அவன் மூச்சு விடும் சத்தம் அவளுக்குக் கேட்க, அவள் மூச்சு விடுவதை இவனும், ரசித்துக் கொண்டிருந்தார்கள். கண்ணை மூடி இருவரும் தன் பக்கத்தில் இருப்பதைப் போல உணர்ந்தனர்.
சிறிது நேரம் கழித்து, கண்ணைத் திறக்காமலே அவள் பேசினான். அப்பொழுது தான் அவள் அருகில் இருப்பதைப் போன்று தோன்றும் என்று.
“சகி” மெதுவாக அவன் அழைத்தான்.

அவனது குரல் அவள் உயிரை சென்று அடைந்ததது. உடல் சிலிர்த்தது.அவளும் கண்களைத் திறக்கவில்லை. பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.
“சகி ”  மறுபடி அழைக்கக் கண்ணைத் திறந்து அவள் நிலையை உணர்ந்தாள். அவனைப் பொறுத்தவரை இன்னும் நாம் சுந்தர் சுஜாவின் தோழி தானே. அவனது நம்பர் தன்னிடம் இருப்பதாகக் காட்டிக்கொண்டால் என்ன நினைப்பான். தன் தலையில் குட்டிக்கொண்டு, குரலை சரி செய்து பின் பேசினாள்.
“ஹலோ உங்களுக்கு எப்படி என் நம்பர் கிடைத்தது.? சுந்தர் அண்ணா கிட்ட வாங்கினீங்களா ” அவளுக்கே சிரிப்பு வரத்தான் செய்தது.
அங்கே சித்துவும் அவளின் குழந்தைத் தனத்தை நினைத்துச் சிரித்தான்.
“சகி, பரவால்லையே, யார் பேசறதுன்னு கேட்பன்னு நினைச்சேன், உன்கிட்டயும் என் நம்பர் இருக்கா?” சிரிப்பின் நடுவே அவளை வார,
அவள் உதட்டை கடித்துக்கொண்டு , தலையில் கை வைத்துக் கொண்டாள்.
“எதுக்கு இப்போ போன் பண்ணீங்க?”  குரலில் கடுமையை வரவைத்துக் கேட்டாள்.
“ஒன்னும் இல்ல உன் நம்பர் வொர்க் ஆகுதான்னு செக் பண்ணேன் அவ்ளோ தான், பை ” என்றான்
வைத்துவிடப் போகிறானோ என்று அவசரமாக “ஹலோ ஹலோ ” என்று கத்த
“ஹா ஹா ”  சத்தமாகச் சிரித்தான்.
அவளுக்கு அவமானமாக இருந்தது. ‘இப்படி குழந்தைத்தனமா நடந்துகரரோமே’ என்று.
” நாம மீட் பண்ணனும் சகி , நிறையா பேசணும். எனக்காக ஒரு ஆஃப் டே ஸ்பென்ட் பண்ணுவியா ” என்று பணிவாகக் கேட்கவும்
அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. மௌனமாகவே இருந்தாள்.

“ஐ நோ அபௌட் யு. ப்ளீஸ் டோன்ட் சே நோ. உன் சேஃப்டீக்கு நான் காரண்டி” என்று மனதிலிருந்து சொல்ல
அந்த வார்த்தைகள் அவளை மறுக்க விடவில்லை.
“சரி ” என்றாள்.
” ஓகே நீயே எப்போ பாக்கலாம் ன்னு சொல்லு , ஐ வில் வெயிட். இப்போ நல்லா தூங்கு.. குட் நைட் சகி ” என்று கட் செய்தான்.
அவளுக்குத் தான் தூக்கம் போய்விட்டது. எப்போது பார்க்கலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்தாள்.

——————————————————————————————————

யுவராஜ் ஆரம்பிக்கப் போகும் புதிய கம்பெனியின் பூஜை அன்று தான் நடக்கவிருந்தது. கதிரும் ஆரதனாவும் பூஜை வேலைகளைச் செய்துகொண்டிருந்தனர். அன்பரசனும் மலர்மொழியும் முக்கியமானவர்களை மட்டும் அழைத்திருந்தார்கள்.
மலர்மொழியின் பெயரிலேயே கம்பெனியை ஆரம்பித்திருந்தான் யுவராஜ். ‘மலர் அட்ஸ்’ எனப் பெயர் வைத்திருந்தான்.
பூஜை நல்லபடியாகத் துவங்கியது. மலர்மொழி பூஜையில் அமர்ந்த்திருந்தார். ஐயர் கேட்கும் பொருட்களைச் சரியான நேரத்தில் கொடுத்து உதவிக்கொண்டிருந்த ஆராதனாவை அப்பொழுது தான் கவனித்தார்.
“இது யார் ?” என்று கதிரை அழைத்துக் கேட்க,
அவனோ மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு “உங்க மகனோட பி ஏ ம்மா, புதுசா அப்பாயின்ட் பண்ணிருக்கோம் “என்று சொல்ல
“ரொம்ப லட்ச்சனமா இருக்கா ” என்றார்.
ஆமா, காலேஜ் டைம் ல கொஞ்சம் குண்டா , பேன்ட் ஷர்ட் போட்டுச் சுத்தின ஆராதனா இல்லை . இப்பொழுது வொர்க்அவுட் செய்து ஸ்லிம் ஆகி இருந்தாள்(“2.௦ இல்லையா ?”). அழகாகப் புடவை கட்டி நீளமாக முடி வளர்த்துப் பின்னலிட்டு பூ வைத்து ஓவியம்போல இருந்தாள்.பூஜைக்கென்று இவ்வாறு தயாராகி வந்தாள்.
அங்குமிங்கும் ஓடியாடி வேலை செய்தவளை யாருக்குத் தான் பிடிக்காது.

பூஜை முடிந்ததும் மலர் அவளை அழைத்தார். அவரின் அருகே சென்றாள் அவள்.
“உன் பெயர் என்னம்மா ?” என்று அவள் தோளைப் தொட்டுக் கேட்க
“ஆராதனா. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க ஆண்ட்டி ”  வருங்கால மாமியார் காலில் விழப் போனாள்.
அவளைத் தடுத்து “நல்லா இரும்மா ” ‘இந்தக் காலத்தில் இப்படியொரு பெண்ணா’ என்று ஆச்சரியப் பட்டர்.பின் அவளைப் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். அவளும் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அந்த நேரம் அன்பரசு யுவராஜுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே வந்தார். பூஜை நடந்த இடங்களையும் அலங்காரத்தையும் காட்டிக்கொண்டு வந்தார். அப்பொழுது தான், தன் தாயிடம் பேசிக்கொண்டிருக்கும் பெண்ணைக் கண்டான்.
அவள் முதுகைக் காட்டி நின்றுக்கொண்டிருந்தாள். அவள் இடுப்பின் வளைவுகள் அழகாகத் தெரிந்தது. லோ நெக் வைத்துத் தைத்திருந்ததால் அவளின் முதுகும் சேர்ந்து மேலும் அழகாக் காட்ட, யுவா ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டான்.
அவன் மாமாவிடம் அவனுக்கு எந்தப் பயமும் இல்லை. அதனால் அவரிடம் தைரியமாகக் கேட்டான்,
“மாமா , அம்மா பக்கத்துல நிக்கற பொண்ணு யாரு?”
“அவ தான் டா உன்னோட புது பி ஏ , கதிர் சொல்லலையா?” யதார்த்தமாகவே சொன்னார்.
” என் பி ஏ வா , கொஞ்சம் அங்க போய்க் காட்டுங்க, கதிர் சொன்னான், ஆனா நான் இன்னும் அவங்க முகத்தைப் பார்கல ” என்று ஆர்வமானான்.
இவர் செல்வதற்குள் ஆராதனா சென்று விட்டாள். அன்பரசு மலரிடம் சென்று போனைக் கொடுக்க

அம்மாவிடம் ஒரு பெண்ணைப் பற்றி நேரடியாகக் கேட்க முடியாமல், ” என்னம்மா என் பி ஏ கூடப் பேசிட்டு இருந்தீங்களா ?” என்றான் போட்டு வாங்கும் விதமாக.
கள்ளம்கபடம் சிறிதும் இல்லாத மலர், “ஆமா யுவா. ரொம்ப புத்திசாலிப் பொண்ணு. எதைக் கேட்டாலும் டக்குனு பதில் சொல்றா. இன்னிக்கு பூஜை வேலை எல்லாம் அவ தான் கூட இருந்து பாத்துகிட்டா. உன் பி ஏ வை கரெக்டா செலக்ட் பண்ணி இருக்க.” கூடுதல் மார்க் கொடுக்க, அவளைப் பார்க்கும் எண்ணம் அதிகமானது யுவாவிற்கு.
பின் தாயிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தான். உடனே கதிருக்கு அழைத்தான். எடுத்ததும்
“யாருடா அவ? ” என்றான்.
“எவ டா? இப்படி மொட்டையா கேட்டா என்ன சொல்றது.?” அனைத்தையும் பார்த்துகொண்டிருந்தவன் வேண்டும் என்றே வம்பிழுத்தான்.
நண்பனிடம் கூடத் தன்னை காட்டிக் கொள்ள விரும்பவில்லை யுவராஜ் . “அதான் டா , புதுசா ஆபாயின்ட் பன்னிருக்கற பி ஏ, அம்மா நல்ல வேலை செஞ்சான்னு சொனாங்க” அவனுக்கே உரிய கெத்துடன் கேட்க,
“இங்க வந்து பாத்துக்கோன்னு அன்னிக்கே சொன்னேனே” அவனும் விடாப்படியாகச் சொல்ல.
அதற்க்கு மேல் கேட்க அவனின் ஈகோ இடம் தரவில்லை. ” ஓகே மேன் கெட் லாஸ்ட்” என்று எரிச்சலாகக் கட் செய்தான்.
மனதிற்குள் சிரித்தான் கதிர். ஆராதனாவும் அங்கே வர,
“என்ன கதிர், முகமெல்லாம் ஒரே சிரிப்பா இருக்கு?” என அவளும் ஆவலாகக் கேட்க,

“யுவா போன் பண்ணி , உன்ன பாக்கணும்ன்னு சொல்றான் , நான் முடியாதுன்னு சொல்லிட்டேன், சார் தான் கெஞ்ச மாட்டாரே! ‘போடான்னு’ கோவம்மா கட் பண்றான் , அத நினைச்சு சிரிச்சுட்டு இருக்கேன் “
அவளுக்கும் சிரிப்பு வந்தது. ” படட்டும் என்னை எவ்ளோ அலைய விட்டான் , இதெல்லாம் சாதாரணம் தான். அவன் இங்க வந்தப்பறம் வச்சுக்கறேன் ” என்றாள்.
“நீ போற ஸ்பீட பாத்தா எனக்கே பயமா இருக்கு ”  கதிர் சொல்ல
“அவன் வேகத்துக்கு இதெல்லாம் ஒண்ணுமே இல்லை கதிர். “
“அதுவும் சரிதான் , சரியான கல்லுளி மங்கன், எப்பவுமே ஐயன் பண்ண சட்டை மாதிரி விரப்பா இருக்க வேண்டியது. நீ தான் அவனுக்குச் சரி ” அவளுக்குப் பரிந்து பேசினான்.
அங்கு யுவா தானும் ஒரு பெண்ணைப் பார்க்க ஆசைப் பட்டதை நினைத்துத் தன்னையே நொந்துகொண்டான். எங்குப் பார்த்தாலும் அவளின் முதுகும் அழகிய அந்த இடுப்பும் அவன் கண்முன்னே வந்தது.
‘யுவா இஸ் நாட் தட் டைப்’ என்று தனக்குத் தானே சொல்லிகொண்டான். முயன்று வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.
அதுவும் முடியாமல் போக உடையை மாற்றிக்கொண்டு ஷார்ட்சுடன் வந்தான். கவனம் மாறாமல் இருக்க அவன் நீச்சல் குளத்தில் விழுந்தான். வெகுநேரம் தண்ணீரில் உள்நீச்சல் அடித்தான். தன் நோக்கத்தை மனதில் நிறுத்தி மற்ற எண்ணங்களிலிருந்து வெளியே வந்தான்.