KVM-4

KVM-4

கதம்பவனம் – 4

 
அழகான வாழை தோப்பு,பறவைகள் பாசுரம் பாட ,சூரிய பகவான் அதில் மகிழ்ச்சி கொண்டு இன்னும் பிரகாசமாக எரிந்தாலும் குளுமையாகத் தான் இருந்தது அந்தத் தோப்பு,அழகுக்கு அழகு சேர்ப்பது போல நான்கு பெண்களின் கும்மாளம்,ஓரகத்திகள் அனைவரும் அந்தப் பம்பு செட்டில் விளையாடி கொண்டு இருந்தனர்,ஒருவரை ஒருவர் அடித்தும்,தண்ணீரை தெளித்தும்,பாவாடைகளைப் பிடித்து இழுத்தும் லூட்டி அடித்தனர்.

 

ராஜனுக்கும்,விமலாவிற்கும் நிச்சியம் முடிந்து ஒரு மாதம் ஆகிய நிலையில் சீதா,அமுதா,தாமரை,விமலா அனைவரும் இதோ இங்கு மீன்களாகத் துள்ளி விளையாடி கொண்டு இருந்தனர்,அக்கா தங்கைகளைப் போல.(இன்று சாத்தியமா என்ன,கூட்டுக் குடும்பம் பிளவு கண்டது இந்தக் காலத்திற்குப் பின்பு தான்)

 

பிள்ளைகளுக்கு விடுமுறை என்பதால் சுந்தரம் மற்றும் பங்கஜத்தின் பொறுப்பில் விட்டுவிட்டு இங்கு வந்தனர்,மாதங்கிக்கு தாய் வீடு தான் வசதி இது போல ஓய்வுகளையும், மனுஷாளையும் ஏனோ அவள் தேடுவதில்லை,அதனால் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தாய் வீடு சென்று ஆயிற்று ,எஞ்சி இருப்பது இவர்கள் தான்,நிச்சியம் முடிந்து விமலாவின் கலக்கணமான முகத்தை பார்த்த  மூவராலும் தாங்கி கொள்ள முடியவில்லை,அதிலும் தாமரை சற்று நடுங்கி தான் போனாள்,தன் நிலையை விட விமலாவின் நிலை தான் அவளை உறுத்தியது,ராஜன் ஒரு முறை தான் அவளைப் பார்த்தான்,

 

உள்ளுக்குள் அத்தனை கடுப்பு அதுவும் விமலாவின் பெற்றோர்களைப் பார்க்க பார்க்க அவனது ரெத்தம் அழுத்தம் ஏறி கொண்டு  தான் இருந்தது,என்னுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்க இவர்கள் யார் ?அக்காவை போலத் தான் இவளும் இருப்பாள் என்ற கோபம்,அவனது முகத்தைப் பார்த்த மூவருக்கும் பயம் வந்தது,அதனால் தான் இந்த மங்கையர் மாநாடு.

 

தன்னை மறந்து மீன் குஞ்சாக நீந்தி கொண்டு இருந்த விமலாவிடம் மெதுவாக பேச்சு கொடுத்தார் சீதா,”விமலா,உனக்கு தம்பிய பிடித்து  இருக்கு தானே”,அவளது சிரிப்பு இந்த கேள்வியில் மறைந்து போனது,அவளது அமைதி இன்னும் கலக்கத்தை கொடுத்தது,தாமரை அவளது தோள் மீது கை வைக்க,ஆதரவாக அவளது கையை பற்றி கொண்டாள்.

 

விமலாவை அனைவருக்கும் பிடிக்கும்  திருமண ஆகி வந்த புதிதில் அவள் தான் சிறு பிள்ளை ,அவர்கள் வட்டாரத்தில் அனைவரிடமும் பாசமாக இருப்பாள்,விடுமுறை நாட்களில் சுந்தரம் வீட்டில் தான் அவளது ஜாகை,எனவே தான் இந்த ஒட்டுதல்,அதை விட குணத்தில் தங்கம்.

 

“என்ன?விமலா “,அமுதா கொஞ்சம்  பதட்டமாக கேட்க ,”அவர்க்கு தான் எங்க குடும்பத்தை  கண்டாலே பிடிக்காதே அக்கா,அப்பாவும் மாமாவும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க,அக்காவை மனசுல வச்சுட்டு அவர் ஒதுங்கி போறாரு”,தாமரைக்கு இப்போது பயம் அதிகமாகியது.

 

“இன்னொரு தாமரை வேண்டாம் விமலா நாங்க வேணா தம்பிகிட்ட பேசவா”,தலையை வேகமாக ஆட்டியவள்”நானே பார்த்துக்குறேன் அக்கா,முடியலைன்னா உங்ககிட்ட சொல்லுறேன்”,அவளது தைரியமும்,பக்குவமும் நிம்மதியை அளித்தது,சூழ்நிலை இறுக்கத்தை குறைக்க அமுதா,”கல்யாணம் முடியட்டும் அப்புறம் வச்சுக்கலாம் ,அண்ணனும்,தம்பியும் ரொம்ப தான் பண்ணுறாங்க,தாமரை உன் புருசனுக்கு தினமும் முருங்காக்கையா செஞ்சு கொடுக்குற”,அவர் சொல்லவே அழகாக வெட்க பட்டாள் தாமரை.

 

விமலா தான் நொடித்து கொண்டாள் “அக்கா, மாமாக்கும்,அவருக்கும் முருங்கை மரத்தையே வெட்டுனாலும் ஒன்னும் நடக்காது,”ஏய் ” என்று அவளை பிடித்து கொண்டனர் மூவரும் அதன் பின் கேலி,சீண்டலாக குளித்து முடித்து வீடு திரும்பினார்.

 

விமலா அவள் வீட்டை நோக்கி செல்ல,இவர்கள் தங்கள் இல்லத்தை நோக்கி வந்தனர்,இன்று தான் செல்வத்திற்கு ஓய்வு கிடைத்தது தொடர்ந்து ஒரு வாரம்  வேலை என்பதால் இரு தினங்கள் விடுமுறை,வீட்டில் நுழைந்ததும் அவன் தேடியது தாமரையை  தான்,அவள் இல்லாமல் போகவே கோபம் உச்சம் தொட்டது,( ஏன் கோபம் கொண்டான் சற்று யூகித்துப் பார்த்திருக்கலாம்).

 

நேராக அவர் அவர் அறைக்கு சென்று துணியை மாற்றி கொண்டு சமையல் அறைக்கு வந்தனர்,பங்கஜத்திடம் பேச்சு கொடுத்து கொண்டே சமைக்க,பிள்ளைகளை சுந்தரம் பார்த்து கொண்டு இருந்தார்,தாமரை மட்டும் இன்னும் அறையில் இருந்து வராததை கண்டு சீதா பார்க்க போக,”எங்க போற சீதா”,அவளை தடுத்தவரே கேட்டார் பங்கஜம்.

 

“தாமரையை இன்னும் காணோம்  அத்தை,என்ன பண்ணுறான்னு பார்த்துட்டு வரேன்”,மீண்டும் அவளை தடுத்தவர்,”செல்வம் வந்து இருக்கான் சீதா”,அந்த ஒரு சொல்லே அவளை தடுத்தது.

 

அங்கோ ….

 

சட்டமாகக் கட்டிலில் படுத்துக் கொண்டு தனது மனையாளை பார்த்துக் கொண்டு இருந்தான் செல்வம்,ஈரம் சொட்ட சொட்ட அவள் நிற்க,அவளுடைய புடவையில் படுத்துக் கொண்டு அலுச்சாட்டியம் செய்தான்,எப்போதும் இது போல் நடப்பவன் அல்ல இன்று மட்டும் ஏன்? விடை தெரியாமல் அவனுடன் பேச பயம் கொண்டு நின்று கொண்டு இருந்தாள்,ஒரு அறை அதில் தான் எல்லாம்,இப்போது துணியை எடுத்தாலும் எங்குச் சென்று மாற்றுவது.

 

அவளது தவிப்பை பார்த்தவன் சுவரை பார்த்து படுத்துக் கொள்ள,வேகமாகப் புடையவை எடுத்து  கட்டினாள்,அதே வேகத்துடன் கதைவை திறக்க போக செல்வத்தின் குரல் தடை செய்தது,”தாமரை, எனக்கு  உடம்பெல்லாம் வலிக்குது கொஞ்சம் தூங்கனும்”,

 

“சரிங்க,தூங்கி முழிங்க சுடு தண்ணீர் வச்சு தரேன் என்று நகர போக”.

 

“கதவத் திறக்க வேண்டாம், இங்க வா”,திரும்பி படுத்த வாரே அவளை ஏவி கொண்டு இருந்தான்.

 

பயத்துடன் அவனை நெருங்கிவளை இழுத்து படுக்க வைத்து இறுக்கமாகக் கட்டி கொண்டான்,அவனுடைய உடல் வலியை அவளிடம் கிடத்த எண்ணினான் போல,தாமரைக்கு வலி உயிர் போனது,எந்த விதமான  அத்து மீறல்களும் இல்லாமல் தூங்கி போனான், இறுக்கம் மட்டும் குறையவே இல்லை,அவனது நிலை உணர்ந்து கண்ணில் நீர் வழிய வழிய தாங்கி கொண்டாள்.

 

உடல் உழைப்பு தந்த களைப்பு அதனைத் தாங்க முடியாமல் தன்னை நாடியது அவளுக்கு மகிழ்ச்சியே,அதிலும் அவன் கட்டுப்பாடோடு இருப்பது எண்ணி,விமலா சொன்ன முருங்கை மரம் தான் நியாபகம் வந்தது,

 

சிரித்துவிட்டாள்,அவன் உடல் அசையவே கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள்,சுமார் மூன்று மணி நேரம் கழித்து அவனது பிடி சற்று இளக அவன் தூக்கம் கலையாத வாரு,மெல்ல எழுந்து வந்தாள்.

 

அவளைப் பார்த்த ஓரகத்திகள் மர்மாகச் சிரிக்க,பங்கஜம் முகத்தில் ஆர்வம் மின்ன கண்டும் காணாதது போலச் செவியை இவர்களிடம் கொடுத்து விட்டுக் கை மட்டும் தனது காதல் கணவனுக்குக் காபியை ஆற்றியது.

 

“தாமரை”, அமுதாவும்,சீதாவும் அவளை இருபுறம் கட்டிக்கொள்ள,அதில் மிரண்டவள் ,”என்ன அக்கா?”,

 

“ஏய்,கள்ளி எங்களுக்கு எல்லாம் தெரியும் அமுதா அவளது கன்னத்தைக் கிள்ள,அப்போது தான் அவளுக்குப் புரிந்தது

 

“ஐயோ அக்கா அதெல்லாம் ஒண்ணுமில்லை”,அவளது மறுப்பைக் கண்டு கொள்ளாமல் அவர்கள் கற்பனை குதிரையை ஓடவிட,”அய்யோ அக்கா என்று கத்திய தாமரை நடந்தை சொல்ல…………….

 

அமுதாவும்,சீதாவும் தலையில் அடித்துக் கொண்டனர், மேலும்” தத்தி தத்தி “என்று அவளை வசை படியே சென்றனர்.

 

பங்கஜமும் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கணவனை நோக்கி சென்றார்,என்று தான் காலம் கனியுமோ? ……….

 

திண்ணையில் உட்காந்து இருந்த தனது கணவனைக் காணாமல் எங்கே என்று தேட வீட்டுக்கு சற்று தள்ளி தண்ணீர் குழாய் அடியில் வருங்கால மருமகளும்,மாமனாரும் முறைத்துக் கொண்டு இருந்தனர்.

 

அதனைப் பார்த்த பங்கஜத்துக்குச் சற்று முன் மனதை அழுத்திய பாரம் உடனே மறைந்து கொள்ள,வாய் கொள்ளா சிரிப்புடன் அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தார்,

 

சற்று தள்ளி வேலையை முடித்து விட்டு வந்த ராஜனும் அவர்களைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றான் கோபமாக………………. இனி அடிக்கடி அவன் தலை அடிபடும் பாவம்.

 

 

error: Content is protected !!