காலம் யாவும் அன்பே 26

 

“அத்தான் நீங்கள் என்னிடம் செல்வதற்கு முன்பு எதாவது கொடு என்று கேட்டீர்கள், நானும் தருவதாகச் சொன்னேன்.” அந்தக் கதவின் உள்ளே செல்ல அடியெடுத்து வைப்பதற்கு முன்பு அவள் கூற,

திடுக்கிட்டான் வர்மா. ‘அப்படி என்றால் முன்னரே இந்த முடிவை எடுத்து விட்டாளா?!’ என அதிர்ந்தவன், அவளது கையைப் பற்றி இருந்ததை மேலும் இறுக்கிக் கொண்டு, “ காதலே! என்னுடன் சேர்ந்து நீயும் இங்கு வந்துவிட முடிவு செய்தாயா?” கலக்கமாகக் கேட்க,

“ எனக்கு வேறு வழி தெறியவில்லை அத்தான். உங்களைப் பிரியும் துணிவும் எனக்கில்லை. அப்படி நான் உங்களைப் போகவிட்டு தனித்து இருந்திருந்தால், ஒரே நாளில் இறந்துவிடுவேன். அப்போதும் என் ஆன்மா உங்களைத் தான் சுற்றி வரும். நான் இறந்தால் அது உங்களுக்கும் வருத்தம் , அதனால் தான் இப்படிச் செய்தேன்.” சொல்லும் போதே இருவருக்கும் மனதில் வலி உண்டாக,

அவளைத் தன்னோடு அனைத்துக் கொண்டான்.

 நீரில் வெகுநேரமாக  அந்தக் கதவு அவர்களுக்காக காத்திருக்க, இருவரும் கைகோர்த்து தங்கள் முதல் அடியை எடுத்து வைத்து உள்ளே சென்றனர்.

புயல் காற்றும் அதன் வேகமும் , கண்ணைக் கூசச் செய்யும் பிரகாசமான  ஒளியும் அவர்களை வரவேற்க,

“ரதி எது நடந்தாலும் என் கையை மட்டும் விட்டுவிடாதே!” என கத்தினான் வர்மா.

அவளும் அவன் சொன்னது போல அவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். பின்னிருந்து யாரோ தள்ளிவிட்டது போல உணர, இருவரும் அந்த ஒளிக்குள் பிரவேசம் செய்தனர்.

வழியறியாத அந்த மாயக் கதவினுள் அவர்கள் நடக்க முடியாமல் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தனர். பக்கவாட்டில் அவர்களுக்குப் பல காட்சிகள்  தெளிவாகத் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தது.

அது நிச்சயம் இந்த உலகில் நடந்து கொண்டிருக்கும், அல்லது நடந்து முடிந்த அல்லது நடக்கப் போகும் காட்சிகள் தான். இவை அனைத்தையும் அவர்கள் ஒரு சில நொடிகளில் கடந்து கொண்டிருந்தனர்.

காலபுருஷன் அவர்களை அவனிடமிருந்து விரட்டிக் கொண்டிருந்தான்.

காலத்தையும் தாண்டி, அண்ட வெளிப் பிரதேசம் அவர்களை தூரத்தில் அழைப்பது தெரிந்தது. வெகு தொலைவில் ஒரு அமானுஷ்ய இருட்டு புள்ளியாக அவர்களுக்குத் தெரிந்தது.

இந்த ஒளியைக் கடந்து அங்கு செல்ல வேண்டும்.

வெகு நேரம் ஆகுமோ என நினைத்துக் கொண்டிருக்க வெகு சீக்கிரத்திலேயே அந்த இடத்தை அடைந்தனர்.

இத்தனை நேரம் அவர்களைத் தாங்கி வந்த அந்த ஒளி வண்டி அவர்களை வெளியே தள்ளியது. பயணச் சீட்டு இல்லாத பிரயாணிகளை நடத்துனர் கீழே இறக்கி விடுவது போல, ‘சீக்கிரம் இறங்கு’ எனக் கீழே தள்ளியது போல அவர்களும் வந்து கீழே விழுந்தனர்.

விழுந்தனர் தான்! ஆனால் அடி படவில்லை. தரையில் விழவில்லை! அண்ட வெளி  என்று சொல்லக் கூடிய அந்த பால் வெளி மண்டலத்தில் நிற்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் பறந்தனர்.

அவர்கள் மிதந்த இடத்திலிருந்து திரும்பிப் பார்க்க, அவர்களுக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில் அவர்கள் வெளியே வந்தது அவர்கள் வாழ்ந்த அந்த உலகத்தை விட்டு மட்டுமல்ல, நமது சூரியக் குடும்பத்தை விட்டே வெளியே வந்திருந்தனர்.

சூரியன் மற்றும் அதைச் சுற்றி உள்ள கோள்கள் இருக்கும் இடம் பால்வெளி மண்டலம்  என்று சொல்லப்படும். அதனைத் தாண்டித் தான் இப்போது அவர்கள் வந்திருந்தனர்.

அப்போது தான் அவர்களது பார்வை விரிவடைந்தது. அங்கிருந்து சுற்றிப் பார்க்க, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பல ஆயிரக் கணக்கான பால்வெளி மண்டலங்கள் தெரிந்தது.

அனைத்துமே ஒரு தட்டு போன்ற வட்ட வடிவத்தில்  சாய்வான கோணத்தில் சுற்றிக் கொண்டிருந்தன.

                                  

 

இவர்கள் இத்தனை தூரம் வெளியே வந்திருப்பார்கள் என்று நினைத்தும் பார்க்கவில்லை.  

அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கும் முன்பே அந்த அண்ட வெளியில் அவர்கள் வந்ததற்கு எதிர்த் திசையில் மீண்டும் ஒரு கதவு தோன்றியது.

இது நிச்சயம் இங்கிருக்கும் வேறு ஒரு உலகிற்குத் தான் வழி என்பது புரிய, மனையாளின் இருக்கப் பற்றியக் கையை விடாமல் அந்த கதைவை அடைந்தான் வர்மா.

அவனோடு காலங்களைக் கடந்து கண்டங்களைக் கடந்து கோள்களைக் கடந்து பயணம் செய்வாள் என சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை ரதி. அவனைப் பார்த்து புன்னகை புரிய,

“செல்வோமா காதலே! புது  சொர்கத்திற்கு !” தலையை அவள் புறமாகச் சாய்த்து அவன் கேட்க,

“உங்களோடு நான் இருக்கும் ஒவ்வொரு இடமும் எனக்குச் சொர்கமே அத்தான்.” அவன் தோள் சாய,

வர்மாவிற்கு மனதிற்குள் இனித்தது. அவளது கையைப் பற்றி முத்தமிட,

இருவரும் காதலுடன் காலடி எடுத்து வைத்தனர் புது உலகில்.

அடுத்த நொடி, பழையபடி காற்றினைக் கிழித்துக் கொண்டு பறக்க, சில நிமிடத்ததில் வேறு இடத்திற்கு வந்து விழுந்தனர். உடனே அந்தக் கதவு மறைந்து விட,

அவர்கள் இருந்த இடம் ஒரு அடர்ந்த காடு. ஆள் நடமாட்டம் அந்த இடத்தில் இல்லவே இல்ல என்பது அங்கு வளர்ந்திருந்த செடி மரங்களைப் பார்த்தாலே தெரிந்தது.

“ அத்தான்! இங்கு மனிதர்களே இல்லை போலிருக்கிறதே!” ரதி சற்று பயம் கொள்ள,

“ இருக்கலாம் ரதி. இது நம்மைப் பொறுத்த வரை வேறு உலகம். இங்கு இன்னும் பரிணாம வளர்ச்சி அடையாமல் கூட இருக்கலாம். இனிமேல் கூட மனிதர்கள் தோன்றலாம்.

நமக்கு இதைப் பற்றி தெரிய இன்னும் சிறிது தூரம் உள்ளே சென்று பார்ப்போம்.” அந்தக் காட்டை கண்களால் அளந்தபடி, முன்னேறி நடக்க ஆரம்பித்தான்.

கொஞ்ச நேரம் நடந்ததுமே அவர்களிக்குத் தெரிந்துவிட்டது, இது மிகவும் பரிட்ச்ச்சயமான இடமாகப் பட்டது.

“இந்த இடத்தை நான் முன்னேற பார்த்தது போல உள்ளது ரதி!” அவளுடன் பேசிக்கொண்டே நடக்க,

“என்ன சொல்கிறீர்கள் ?! இங்கே எப்படி நீங்கள் வந்திருக்க முடியும்?” அவன் புரியாமல் ஏதோ சொல்றிறான் என்ற நினைப்பில் அவள் கூற,

“இல்லை , எனக்கு தோன்றிக்கொண்டே இருக்கறது!” அவனுக்குள் குழப்பம் மேலிட,

ஆனால் நன்றாக தெரிந்தது போல அந்த அடர்ந்த காட்டிற்குள் வழி கண்டுபிடித்து அவனது கால்கள் மட்டும் சென்று கொண்டே இருந்தது.

ரதிக்கு ‘இவன் இலக்கில்லாமல் நடக்கிறானா…அல்லது தெரிந்து தான் செய்கிறானா என்று புரியவில்லை. அப்படியே தெறிந்து செய்வதானால், இந்த இடம் அவனுக்கு முன்பே தெரியுமா….? அது எப்படி சாத்தியம்.?’ யோசித்துக் கொண்டே பின்னே சென்றாள்.

கிட்டத்தட்ட அந்தக் காட்டைவிட்டு அவர்கள் வெளியே வர இருந்த சமயம் ,யாரோ மரம் வெட்டுவது போல சத்தம் கேட்க, அங்கே இருவரின் கவனமும் திரும்பியது.

“அத்தான், அங்கே சத்தம் கேட்கிறதே!” சத்தம் வந்த திசையை கை காட்டி ரதி குறிப்பிட,

“ஆமாம் ரதி! வா சென்று பார்ப்போம்…” என்று அவளையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்ல,

இவர்களை ஏமாற்றாமல் அங்கே ஒருவன் நின்று மரம் வெட்டிக் கொண்டிருந்தான்.

இருவருக்கும் அவனைக் கண்டதிலேயே சாற்றி நிம்மதி ஏற்பட ,

அவனிடம் சென்றனர்.

யாருமே இல்லாமல், தனியாக இந்தக் காட்டில் மாட்டிக் கொண்டுவிடுவோமோ என்ற நினைத்திருந்த நேரத்தில் ஆபத்தாண்டவனாக அந்த மரம்வெட்டி தெரிந்தான்.

அவன் உடையும் நாகரீகமாகத் தான் இருந்தது. கதர் வேட்டி மட்டும் இடையில் கட்டியிருந்தான். உடல் சற்று கருத்த தேகமாகவும் ஆனால் வாட்ட சாட்டமாக இருந்தான்.

அவன் அருகில் சென்ற வர்மா, அவனை மெதுவாக, “ஐயா!” என்றழைக்க,

அவன் வெடுக்கென அதிர்ந்து திரும்பினான்.

இவர்கள் இருவரையும் ஆச்சரியாம்கப் பார்த்தான். எதுவும் பேசாமல், அவர்களை சிறிது நேரம் நோட்டம் விட்டான்.

அவனது பார்வை, ஒரு வேளை அவனுக்குத் தான் பேசியது புரியவில்லையோ என்று தோன்ற வைத்தது வர்மாவிற்கு.

மேலும் ஒரு முறை அவனது கவனத்தைக் கலைக்க, “ ஐயா, நான்  இந்திரவர்மா, இவள் எனது மனைவி பாகீரதி” என அவளை அருகே அழைத்துச் சொல்ல,

“ இல்லை,…. நீ ஒரு கொலைகாரன். என்னைக் கொல்ல வந்திருப்பவன்…..” என விறகுவெட்டி பதற,

“ஐயா..இல்லை நீங்க நினைபதுபோல அல்ல..” அவனுக்கு விளக்க இரண்டடி முன்னேறினான் வர்மா…

அவனை கை யை முன்னே நீட்டித் தடுத்தான் அந்தப் புதியவன். வர்மா பேச ஆரம்பிப்பதற்குள், அவன்

“டேய்… கருணா, வாஞ்சி , வேலா…. அந்த கொலைகாரன் வந்திருக்கான் வாங்க டா” என்று குரல் கொடுத்துவிட்டு ஓட ஆரம்பித்தான்.

வர்மாவோ கண்ணிலே கிடைத்த மனிதர்களைப் பார்த்து பயந்து ஓடும் எண்ணமில்லாமல் அவனோடு பின்னே சென்று தன்னைப் பற்றி புரியவைக்க முயல, ரதியும் அவர்கலோடு ஓடி வந்தாள்.

அந்தப் புதியவன் ஊர்க்குள் ஓடி வந்து மீண்டும் அனைவரையும் அழைத்தான். ஆங்காங்கே குடிசைகளை வரிசையாகப் போட்டு அங்கே மக்கள் குடியிருந்தனர்.

இவனது சத்தம் கேட்டு அனைவரும் அரிவாள், வேல் கம்போடு வெளியே வர,

அனைவரும் வர்மாவையும் ரதியையும் சுற்றி வளைத்தனர்.

ரதிக்கு உள்ளூர பயம் வர வர்மாவை ஒண்டிக் கொண்டு நின்றாள்.

“ டேய் யாருடா இந்தப் பொண்ணு..” என வர்மாவை அந்த கூடத்தில் நின்ற ஒருவன் மிரட்டினான்.

“இதோ பாருங்கள், நீங்க நினைப்பது போல இல்லை.. நான் வர்மா, கோயில் பனி செய்கிறவன், இவள் என்னுடைய மனைவி. நாங்கள் இந்த இடத்திற்குப் புதிது.” வர்மா தன்னிலை விளக்கம் கொடுக்க ,

அவனை எல்லோரும் நம்பாத பார்வையே பார்த்தனர்.

“நீ தான் எங்கள் கூட்டத்தில் ஒருவனைக் கொன்றாய். அதை நாங்கள் கண்ணால் பார்த்தோம்.இப்போது உடை மற்றும் அலங்காரம் மாற்றிக் கொண்டு வந்தால் உன்னை விட்டு விவிடுவோமா..” கோபத்துடன் முதலில் வந்த விறகுவெட்டி கர்ஜித்தான்.

அதற்குள் அங்கே கூட்டம் கூடிவிட, இவர்களையே எல்லோரும் கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வர்மாவை நன்றாக திட்டுவதிலிருந்தே புரிந்தது, “யாரோ ஒருவனை மற்றொருவன் கொன்று விட்டான். கொன்றவனை இவர்கள் நான் என நினைத்து திட்டுகிறார்கள். இவைகளுக்கு நான் புரியவைக்கிறேன் ரதி” என பயந்து அவன் பின்னே ஒளிந்திருந்த ரதிக்கு ஆறுதல் சொல்ல,

அந்தக் கூட்டத்தில் சலசலப்பு. 

ஏன்டா வென்று திரும்பிப் பார்க்க, அங்கே சாட்ஷாத் வர்மாவே வந்து கொண்டிருந்தான்.

அனைவரும் அவனைக் கண்டு பயந்து வழிவிட , கூட்டத்தை விலக்கிக் கொண்டு வர்மா இருந்த இடத்திற்கு வந்தான்.

இருவருக்கும் ஒருவரை ஒருவர் காண ஆச்சரியமாய் இருந்தது. ரதிக்கு சொல்லவே வேண்டாம். மயக்கம வராத குறை தான்.

இந்த அதிசயத்தை அனைவரும் கண்டனர். ஒரே மாதிரி இருவரா…! என்ற ஆச்சரியம் இதுவரை அங்கு நடந்ததில்லை.

சிறிது நேரம் பிடித்தது அந்த அதிர்ச்சி விலக “யார் நீ !? என்றான் அந்த ஊரின் கொலைகார வர்மா.

அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்ட வர்மா, “ ஐயா நான் வேறு உலக…(சொல்லவந்ததை மறைத்து) வேறு ஊரிலிருந்து வருகிறேன். இந்த ஊரில் தங்கி பிழைப்பை நடத்தலாம் என்று மனைவியையும் அழைத்து வந்தேன். இங்கு எல்லோரும் என்னை நீங்கள் என்று நினைத்து திட்டித் தீர்க்கிறார்கள்.

யார் நீங்கள்? எதற்க்காக உங்களை திட்டுகிறார்கள்?” பொறுமையாகக் கேட்டான்.

“என் பெயர் வளவன்பாரி. இந்த ஊர் மக்கள் என்னைத் திட்டினாலும் நான் செய்யும் நல்லது இவர்களுக்குத் தெரியாது. அந்த ஒழுக்கம் கெட்டவனை நான் கொல்லாவிட்டால், அவன் மனைவியே அதைச் செய்திருப்பாள். எவன் ஒருவன் மனைவியை மதிக்கத் தெறியாமல் வாழ்கிறானோ, அவன் என்னைப் பொறுத்தவரை வாழத் தகுதியற்றவன்.

அவன் மனைவியை அடிமை போல் நடத்தினான். அவள் அவனோடு வாழப் பிடிக்காமல், விலகி வந்தால் ஊர் பேச்சுக்கு ஆளாக நேரிடும் என்ற நிலையில் தற்கொலை செய்துகொள்ள துணிந்தாள். ஒரு பாவமும் அறியாத அவள் எதற்கு சாக வேண்டும். மனைவியை கொடுமைப்படுத்தும் இவன் தான் சாகவேண்டும் என்று நான் அவனை வெட்டினேன். அதனால் தான் என்னை இவர்கள் திட்டுகிறார்கள். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எந்தப் பெண்ணும் கண்ணீர் வடிக்கக் கூடாது! அது தான் எனக்கு வேண்டும்.அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நீங்கள் என்னுடன் வாருங்கள். உணவருந்தி விட்டு பேசலாம்” முறைப்பாகப் பேசினாலும், அவனும் தன்னைப் போல் மனைவிக்காக பேசுகிறான் என்பதே வர்மாவிற்கு அவன் மேல் மதிப்பை உண்டாக்கியது.

அவனை அழைக்கும் போது தான் , வளவன் கவனித்தான். வர்மாவின் மனைவி தன் மனைவி போலவே இருக்கிறாள் . இது விந்தையிலும் விந்தை.  

அவர்களை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் மனைவியை அழைத்தான் வளவன். நான்கு பேரும் அதிர்ச்சியுற்றனர்.

இவர்களை சந்தித்ததைப் பற்றி சொல்லி அவர்களை உபசரிக்கச் சொன்னான் வளவன்.

வர்மாவும் ரதியும் நடப்பதை நம்ப முடியால் இருந்தனர்.

வேறு உலகத்தில் நம்மைப் போன்ற இருவர். அதுவும் அங்கும் அவர்கள் கணவன் மனைவி!

அவர்களின் உறவை இனி என்ன சொல்லி வியப்பது. அவர்களின் பந்தம் எல்லா உலகத்திலும் காதலாக வளர்ந்திருக்கிறது.

அந்த ஆணாதிக்க ஊரில் இருந்தாலும் மனைவியை மதித்து நடப்பவன் வளவன் என்று நினைக்க ரதிக்கு, தன் கணவனின் பிரதிபிம்பம் கூட நல்லவனாகவே இருக்கும் என ரசித்தாள்.

கொலையும் செய்வாள் பத்தினி என்பது மாறி, கொலையும் செய்வான் மனைவி மேல் காதல் கொண்ட பதி என நினைத்தாள்.

வர்மாவும் வளவனும் பேசிக் கொண்டிருக்க, வளவனின் மனைவி அதிகம் பேசாமல் உள்ளேயே முடங்கிக் கொண்டாள். வர்மா இந்த இடத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வளவனிடம் பேச்சுக் கொடுத்தான்.

அந்த இடத்தைப் பற்றியும் அங்கு வாழ்பவர்கள் பற்றியும் அறிந்துகொண்டான். வளவனும் வர்மா தன்னைப் போன்றே மனைவி மேல் மாறாக் காதல் கொண்டவன் எனப் புரிந்து, அவனோடு நெருக்கமானான்,  ஒரே உருவமோ அல்லது ஒரே சிந்தனையோ அவர்களை சிநேகமாக்கியது.

வர்மாவிற்கு நன்றாகப் புரிந்தது. இது நம் உலகத்தைப் போன்றே மற்றொரு உலகமாக இருந்தாலும், அங்கு வாழும் மக்களின் பிரதிகள் தான் இங்கும் வாழ்கிறார்கள். ஆனால் வேறு பெயரில், வேறு தொழில் செய்து கொண்டு, வேறு விதமான வாழ்வியலில் இருக்கிறார்கள்.

இதே போல அந்த பால்வெளி மண்டலத்தில் இருந்த பல்வேறு சூரியக் குடும்பங்களில் இருக்கும் உலகில் தன்னைப் போன்றவன் என்ன செய்கிறான் என்று தெரிய ஆர்வம் மேலோங்கியது.

ரதி அவனை தனியே அழைக்க, வர்மா வளவனிடம் சொல்லிக் கொண்டு அவளுடன் சென்றான்.

“ அத்தான் , இந்த உலகம் நம்மைப் போன்ற மக்கள் , அதாவது நம்மைப் போன்றே உருவம் கொண்ட மக்கள் இருக்கிறார்கள் அல்லவா…”என அவளது புரிதலைச் சொல்ல,

“அட! என் காதலுலும் இங்கு வந்த பிறகு என்னைப் போன்றே சிந்திக்கிறாளே!” என அவள் நெற்றி முட்டினான்.

“ம்ம்ம்” என செல்லமாக முறைத்தவள், “ அத்தான், இவர்களிடம் நாம் எங்கிருந்து வந்தோம் எனச் சொல்வோமா?” எனவும்,

வர்மாவும் அதைத் தான் யோசித்திருந்தான். “எண்ணம் நீ செயல் நான்” என சிரித்துக் கொண்டே சொல்லி,

வளவனையும் அவன் மனைவியும் அழைத்தான்.

“வளவா! உன்னிடம் ஒரு உண்மை சொல்கிறேன்…” வர்மா ஆரம்பிக்க,

“ சொல் வர்மா..” தன்னிடமே பேசுவது போல அவனுக்குள் ஒரு பூரிப்பு,

“நாங்கள் வேறு உலகத்திலிருந்து வருகிறோம்!” என ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தான்.

வளவனும் அவன் மனைவியும் ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்க,

இவர்கள் இருவரும் சேர்ந்திருப்பது பிடிக்காத ஊர் மக்கள் , ஏற்கனவே வளவன் மேல் இருந்த கோபத்தாலும் அவர்களை மொத்தமாக அழிக்க முடிவு செய்து,

நான்கு பேராக சேர்ந்துகொண்டு அவனது குடிசைக்குத் தீ வைத்தனர்.

தீ லேசாகப் பற்றிக் கொள்ளும் போதே அதை உணர்ந்த வர்மா,

“வளவா! உன் குடிசைக்குத் தீ வைத்து விட்டனர், கிளம்பு!” என துரிதப் படுத்தினான்.

“வர்மா! நான் இவர்களைப் பார்த்துக் கொள்கிறேன். நீ உன் மனைவியுடன் எந்த வித பாதிப்பும் இன்றி இங்கிருந்து புறப்படு. உன் ஆராய்ச்சியை நீ தொடர்ந்து செய்ய வேண்டும். கிளம்பு…எங்களை பார்த்துக் கொள்ள என்னால் முடியும்”  வர்மாவைத் துரத்தினான்.

“இல்லை வளவா..எனக்கு இங்கு உதவிய உன்னை….” அவனை விட முடியாமல் தவிக்க,

“இது என் ஊர். என் மக்கள். என்னால் சமாளிக்க முடியும். நீ கிளம்பிச் செல். உன்னை மறுமுறை பார்க்காவிட்டாலும் உன்னை என்னால் மறக்க முடியாது.” கட்டித் தழுவி அவனுக்கு விடை கொடுத்தான்.

வளவனும் அவனது மனைவியும் தண்ணீர் மொண்டு தங்கள் குடிசையின் தீயை அணைக்க, பின் புறமாக வர்மாவும் ரதியும் மீண்டும் அந்த காட்டிற்குள் சென்றனர்.

வந்த இடத்தைத் தேடிக் கண்டு பிடிக்க அவர்களுக்கு சிரமாக இல்லை. ஏனெனில் வளவனிடம் பேசியதிலிருந்து அது தான் இருக்கும் ஊரின் அருகில் இருந்த காட்டுப் பகுதி தான் என்பது புரிந்தது.

நம் உலகின் பிரதி பிம்பம் போலத் தான் இந்த உலகும் இருக்கிறது.

முன்பு கீழே குதித்த இடம் வந்து சேர்ந்ததும் , மீண்டும் மாயக் கதவு தோன்ற அதற்குள் சென்றனர் ரதியும் வர்மாவும்.

 

 

 

 

 

 

 

error: Content is protected !!