KYA-PREFinal

KYA-PREFinal

                       காலம் யாவும் அன்பே 38

 

தினமும் காலையிலும் மாலையும் ஒரு கப் காபியையே இருவரும் அருந்தினர். வாகீசன் குடித்துவிட்டுக் கொடுப்பதை இயல் அருந்த, மாலையில் அவள் குடிப்பதை வாகி குடித்தான்.

இருவரும் ஒரே தட்டில் உண்டு, ஊட்டி விட, ஆகாஷ்

“நல்லா தேறிட்டீங்க.. முன்னாடியாவது நாங்க பாக்கறோம்னு கொஞ்சம் கண்ட்ரோல் இருந்துச்சு, இப்போ எங்களுக்கு முன்னாடியே எல்லாம்….! நடக்கட்டும் ! கட்டும் …! ட்டும்…. ! டும்…! ம்ம்ம்ம்…..!” கிண்டல் செய்ய…

“டேய்! அன்னிக்கு கோயில்னு கூட பார்க்காம அமரிக்கா நெனப்புல ஒருத்தன் கிஸ் பண்ணான். அவனாலம் விட்ருவீங்க… நான் என் பொண்டாட்டிக்கு ஊட்டி தான டா விடறேன். இதுக்கு மட்டும் வந்துடுவீங்களே.. போடா ..” அவனை விரட்டி விட்டு மீண்டும் இயலுக்கு ஊட்டினான்.

அவளும் அவனுக்கு ஊட்டி விட,

“வந்தனா… உங்க அப்பா அம்மாக்கு போன் பண்ணு… இதையெல்லாம் என்னோட சின்ன ஹார்ட் பாத்துட்டு சும்மா இருக்குமா… நான் ஏற்கனவே எப்படின்னு உனக்குத் தெரியும்ல… ஊட்டு டி வந்து..” வந்தனாவிடம் கோரிக்கை வைக்க,

அவள் நன்றாக தட்ட்டில் இருந்த சாம்பாரை  வழித்து உண்டு கொண்டு, “இரு சாப்ட்டு வரேன்!” எனச் சொல்ல..

தலையில் அடித்துக் கொண்டான் ஆகாஷ்..

“ இது தேறாது…! நான் கிச்சன்ல இவளுக்கு சமைச்சு போட்டே கெழவன் ஆயிடப் போறேன்…இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ மா…” என அவளுக்கு இன்னும் கொஞ்சம் பொங்கலும் சாம்பாரும் ஊற்றினான்.

அவர்களின் பேச்சும் செயலும் அங்கே கலகலப்பை உண்டு செய்தது.

இதே போன்று நாட்கள் வாகீசன் இயல் இடையில் மிகவும் அன்னியோன்யமாகவே சென்றது.

இரவில் அவனைக் கட்டிக் கொள்ளாவிட்டால் அவளுக்கு உறக்கமே வருவதில்லை.

உறக்கத்தில் அவன் தள்ளிப் போனாலும் , அவனை நெருங்கி அவன் தோளில் தலை வைத்துப் படுத்துக் கொள்வாள்.  அவனும் அவளை இழுத்து தன் நெஞ்சின் மேல் போட்டுக் கொள்வான்.

அந்த சிறிய கட்டில் அவர்களிடத்தில் நெருக்கத்தை அதிகப் படுத்தியது.

அவ்வப்போது அவன் செய்யும் சீண்டல்களுக்கு ரசிகை ஆனாள். அவன் தான் அவளின் கணவன் என்பதில் பெருமை பொங்கியது. அழகு, ஆளுமை , அறிவு என எதிலும் குறைவில்லை.

அதே போல அவனுக்கும் அவளின் சிணுங்கலும் , சிறுபிள்ளைத் தனமும் மிகவும் கவர்ந்தது. தனக்காக அவள் செய்யும் சிறு செயலும் பெரிதாக உணர்ந்தான். தன் காதலை அவள் மூலம் அறிந்தான்.

அவள் அவனது வாழ்வில் வராமல் போயிருந்தால் என்னவாகியிருக்கும் என அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.

ஆனால் இருவருக்கும் ஒரு விஷயம் மட்டும் பயத்தை அளித்தது. சேனா சொன்னது போல , இரண்டு பேரில் ஒருவர் இறக்க வேண்டும் என்பது தான்.

அதை நினைக்கும் போதே இந்தப் பத்து நாளும் தான் தங்களுக்கு வாழ்க்கை என்பது போலவும் அதை வாழ்ந்தே தீர வேண்டும் என்றும் அவர்களுக்குள் உணர்வு வந்தது.

காதலை பரிமாறிக் கொண்டனர்.

சேனாவின் பூஜை முடிய இன்னும் ஒரே நாள் தான் பாக்கி இருந்தது. மறுநாள் இரவு பூஜையில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

ஆகாஷோ இனி என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டிருந்தான். அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டு தோட்டத்தில் அமர்ந்திருக்க,

“ என்ன டா இங்க வந்து உட்கார்ந்திருக்க, அங்க வந்து பாரு, இயலும் ஹெட்டும் நமக்குப் பின்னாடி லவ் பண்ண ஆரம்பிச்சு செம்ம ஸ்பீடா போயிட்டு இருக்காங்க. அவங்களப் பார்த்தாலே ஆசையா இருக்கு டா.

ஒருத்தருக்கொருத்தர் பாத்துகறதும், ஊட்டிக்கறதும் .. அவங்க முகமே பிரகாசமா இருக்கு. இத்தனை நாள் பாத்துட்டு இருந்த இவங்களுக்குள்ள இத்தனை காதலான்னு நினைக்கறப்ப ரொம்ப ஆச்சரியமா இருக்கு. லவ்லி கப்பிள்ஸ்…

எனக்கும் நம்ம கல்யாணம் எப்போ நடக்கும்னு ஆசையா இருக்கு டா..” என அவனது அருகில் அமர்ந்து அவன் தோள் சாய்ந்து கொள்ள,

அவனோ இன்னும் சீரியசாக இருப்பதைக் கண்டு அவனை முறைத்தாள்.

“ என்ன டா. நான் பேசிட்டே இருக்கேன். இவ்வளவு சீரியஸா என்ன யோசிக்கற..” ஆகாஷின் முகத்தை திருப்பிக் கேட்டாள்.

“நீ அவங்க காதலை பாக்கற. அவங்க இதுக்கப்பறம் உயிரோட இருப்போமா இல்லையான்னு நினைச்சு இத்தனை காதலை போழியராங்களோன்னு நான் நினைக்கறேன்” அவளை பார்த்துக் கூற,

“ச்சே! ஏன் டா இப்படி பேசற. கண்டிப்பா சேனா அவங்க நாலு பேரையுமே காப்பாத்திடுவாங்க. அதுல எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்ல.

வர்மா ரதிய எந்த அளவு காதலிக்கறாருன்னு நான் பாத்ததில்ல. ஆனா, சேனா தன்னோட நண்பனை எவ்வளவு நேசிக்கறாருன்னு எனக்கு நல்லாவே தெரியுது.

யாராவது ஒரு ப்ரெண்டுக்காக இவ்வளவு செய்வாங்களா. வாகீ இயல்ன்னு ரெண்டு பேரை உருவாக்கி, அவங்க மூலமா தன்னோட நண்பனைக் காப்பாத்த நினைக்கற அவருக்கு நிச்சயம் கடவுள் துணை இருக்கும்.

அவர் அத்தனை சீக்கிரம், யாரையும் விட்டுட மாட்டாரு.

வர்மா, வாகீ , ரதி இயல்…. இந்த ட்வின் கப்பிள்ஸ் நிச்சயம் நல்லா இருப்பாங்க… நீ வேணா பாரு!” வந்தனா மிகவும் நம்பிக்கையோடு பேச,

அவளின் பேச்சு ஆகாஷுக்கும் சற்று தெம்பை அளித்தது.

சேனா நிச்சயம் அவர்களை கை விட மாட்டார் என்று அவனுக்கும் தோன்றவே செய்தாலு ஒரு பயம் இருந்தது. அது மறைந்து இப்போது நம்பிக்கை பிறந்தது.

“ஆமா டியர்.. நீ சொல்றது உண்மை தான். நிச்சயம் நல்லது நடக்கும். நாளைக்கு நைட் நாமளும் அவங்க கூட போய் ஹெல்ப்பண்ணனும். எங்க அவங்க ரெண்டு பேரும் ஆளக் காணும்?” என்க,

“ இந்த ஊர்ல பெஸ்டிவல் நடக்குதுல, அதுனால இயல் கோவிலுக்குப் போகணும்னு சொன்னா, ஹெட் கூட்டிட்டு போயிருக்காரு.”

“ ஓ! ஓகே ஓகே…. நம்ம விஷயத்துக்கு வா… எங்க அப்பா அம்மா உங்க அப்பா அம்மா… எல்லாறையும் இங்க வர சொல்லிட்டேன். நமக்கும் இந்த ஊர்ல தான் கல்யாணம் பேபி! அவங்க அடுத்த வாரம் இங்க வராங்க. அப்புறம் ஒன் மந்த் இங்க இருந்து அவங்க நல்லா ஊர் சுத்தட்டும். நம்ம ப்ராஜெக்ட் முடிச்சுட்டு எல்லாரும் ஒன்னா யூஸ் க்கு கிளம்பலாம்.” அவளை தன்னோடு நெருக்கி அமர்த்திக் கொண்டு அவன் சொன்னான்.

“ எப்போ டா, அவங்களுக்கு போன் பண்ண!? எனக்கும் இந்த ஊர் பிடிச்சிருக்கு. ரொம்ப அமைதியா, சிட்டியோட பரபரப்பு இல்லாம பீஸ்புல்லா இருக்கு. இங்கயே கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா எனக்கு யூஸ் போகப் பிடிக்கல, நாமளும் ஹெட்,இயல்  கூட இந்தியாவுலையே இருக்கலாம் டா…ப்ளீஸ்…” அவனின் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

அவனுக்கு அவள் செய்கை பிடித்துப் போக, “நீ சொன்ன நான் மில்கிவே ல கூட இருக்கத் தயார் பேபி..” அவளின் இதழைத் தேடிக் குனிய,

அவனின் குரல் அவளை அதற்கு சம்மதிக்க வைத்தது.

அவன் உதடுகளை குழந்தை போல் மென்மையாக முத்தமிட்டாள்.

கோவில் திருவிழாற்காக அந்த ஊரே களைகட்டி இருந்தது. நிறைய கடைகளும், ஆங்காங்கே நீர் மோர் , பானகம் கொடுக்கும்  பந்தல்களும் , ராட்டினம் போட்டோ எடுக்கும் கடைகளும் இன்றும் அந்த ஊரில் பழமை மாறாமல் வைத்திருந்தனர்.

பழமையை விரும்பும் இருவரும் அதனை ரசித்துக் கொண்டே கோவிலுக்குச் சென்றனர்.

இயல் அழகாக மிகவும் எளிமையாக ஒரு பட்டு சுடிதார் அணிந்திருந்தாள். வாகீசன் ஒரு டி ஷர்ட்டும் , பேண்டும் அணிந்திருந்தான்.

ஒவ்வொரு கடையாக பார்க்கும் போது, இயல் அவளது ஊரினைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்தாள்.

அவளின் பேச்சையும் அந்த மாலை வேளையும் அவனை வாழ்வை ரசிக்கச் சொன்னது.

ஆசையாக  மனைவியைப் பார்த்தான்.

அருகில் பூவாசம் வீச,  அங்கே ஒரு பெண் பூ விற்றுக் கொண்டிருந்தாள்.

முன்னால் சென்று கொண்டிருந்த  இயலை அழைத்தான்.

“இயல்…”

“ ம்ம்ம்…” அவளும் திரும்பிப் பார்க்க,

அவளுக்காக அந்தப் பூக்காரியிடம் மல்லிகைச் சரம் வாங்கினான்.

கோவிலுக்காக வாங்குகிறான் என்று தான் நினைத்தாள்.

பூவை வாங்கி வந்தவன், “திரும்பு” எனவும்,

மனமெல்லாம் பூக்களால் நிறைந்தது இயலுக்கு. கன்னங்கள் சிவக்க திரும்பிக் கொண்டாள்.

ஏற்கனவே அவளது தலையில் இருந்து ஒரு ஹேர்பின்னை எடுத்து,

அவளது தலையில் மூன்று முழம் மல்லியையும் அழகாக வைத்து விட்டான். முன்னால் ஒற்றைச் சரத்தை தொங்க விட்டான்.

அவள் ரசித்து அவனைப் பார்க்க, “ இப்போ போலாம்” என முன்னால் நடந்தான்.

கணவனின் மேல் காதல் பொங்க அவன் பின்னே நடந்தாள்.

கோவிலுக்குள் சென்று அந்த அம்மனை தரிசித்து இருவரும் மனதார நால்வரின் நல்வாழ்விற்காகவும் வேண்டிக்கொண்டனர்.

பூசாரி வந்து அவனின் கையில் குங்குமத்தை கொடுத்தார்.

 இயல் இன்னும் கண்மூடி கணவனின் நலனுக்காகவும், இத்தனை அன்பைப் பொழியும் கணவன் கிடைத்ததற்கு அந்த கடவுளுக்கும் நன்றி சொல்லி , நடக்க இருக்கும் நாளைய இரவு நல்ல படியாக விடிய வேண்டும். மீண்டும் தன் கணவனோடு வாழ்வை முழுதாக வாழ வேண்டும் .

இப்படி ஒரு கணவனை என்றும் இழந்து விடக்கூடாது என அவளின் மனம் அந்த அம்மனின் முன் உருகிக் கொண்டிருந்தது.

அவள் தீவிரமாக வேண்டுவதைப் பார்த்து, அவளது நெற்றியில் அவனே குங்குமத்தை வைத்தான்.

அவள் கண் திறந்து பார்த்து சிரிக்க, இந்தக் காட்சியை ஊர் பஞ்சாயத்துத் தலைவர் பார்த்தார்.

அவரின் பார்வை வாகீசனுக்குப் புரிந்தது.

“ இவங்க என்னோட மனைவி தான்.” என அவளின் தோளைச் சுற்றி கை போட்டுக் கொண்டு சொல்ல,

“அட! அபப்டியா தம்பி! எனக்குத் தெரியாம போய்டுச்சு. நான் நீங்க எல்லாரும் ஒண்ணா வேலை மட்டும் தான் பாக்கறீங்கன்னு நெனச்சுட்டு இருந்தேன்.

புருஷன் பொண்டாட்டின்னு எனக்குத் தெரியாம போய்டுச்சே! அன்னிக்குக் கூட இது தெறியாம விரதம் இருங்கன்னு சொல்லிட்டேன். சாரி மா” என உடனே வருந்த , அருகில் இருந்த அவரின் வீட்டுக்காரியிடம்,

“இவங்க அந்த இடிஞ்ச கோவிலை ஆராய்ச்சி பண்ண வந்தவங்க, அன்னிக்கு வாசலோட வந்துட்டுப் போய்ட்டாங்க, வீட்டுக்கு கூப்டு புள்ள…” என மனைவியை ஏவினார்.

அவரும் உடனே இயல் அருகில் சென்று,

“ வா ம்மா… இந்த திருவிழா முடியற வரைக்கும் எங்களுக்குத் தெரிஞ்சவங்க எல்லாரையும் கூப்பிட்டு வீட்டுல தாம்பூலம் குடுக்கறது எங்க வழக்கம். ஒரு எட்டு எங்க வீட்டுக்கு வந்துட்டு அப்பறம் கிளம்புங்க” என அவளின் கை பற்றி அழைக்க,

இயலோ வாகீசனைப் பார்த்தாள். அவனும் கண்ணசைத்து சம்மதம் சொல்ல,

கோவிலிலிருந்து நேராக அவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

அவர்களுக்கு பலகாரம் கொடுத்தனர். வாகீசன் அமர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருக்க,

இயல் அந்த அம்மாவுடன் உள்ளே சென்றாள். அவளுக்கு குங்குமத்தை வகுட்டில் வைத்துவிட்டார்.

பின் அவளுக்கு ஒரு புடவையும் அதில் வெற்றிலைப் பாக்கு மஞ்சள் என அனைத்தையும் வைத்துக் கொடுத்து அனுப்பினார்.

மனம் நிறைந்த படி இருவரும் தங்கள் வீட்டிற்கு நடந்து வந்தனர்.

இயல் வாகீசன் வந்து நின்ற கோலம் , ஒரு மனம் நிறைந்த தம்பதிகள் போன்று மங்களகரமாக இருந்தது.

“அப்படியே நில்லுங்க!” என ஆகாஷ் தனது மொபைலில் போட்டோ எடுத்தான்.

இயல் அவனை நெருங்கி நின்று கொள்ள, அவனும் அவளின் தோள் மேல் கை போட்டு தன்னுடன் இணைத்துக் கொண்டான்.

தங்களின் அறைக்கு வந்த பிறகு, இருவரும் ஒரு வித மோன நிலையில் இருந்தனர்.

மல்லிகையின் வாசம் இருவரின் மனதையும் மற்றவர் பால் ஈர்த்தது.

வகுட்டில் குங்குமம், மஞ்சள் பூசிய தாலி , மல்லிகைப் பூ என இயல் வழக்கத்தை விட அதிகமாக அவனை இம்ம்சித்துக் கொண்டிருந்தாள்.

அதே போல, கணவன் வைத்து விட்ட குங்குமம், பூ, பின்பு தம்பதிகளாக ஒருவரின் வீட்டிற்குச் சென்று முதல் முறை சுமங்கலிப் பெண்னுக்கான அங்கீகாரம் கிடைத்தது அனைத்துமே அவளின் சந்தோஷத்தை இரட்டிப்பாகச் செய்தது.

எப்போதும் போல கையில்லாத பனியன் வழியாகத் தெரிந்த அவன் தோள்கள் , தலைக்குக் குளித்ததால் அவன் தலைமுடி ஃபேன் காற்றில் பறந்தபடியும்  , கோவிலில் நெற்றியில் வைத்த விபூதியின் காய்ந்த நிலையும் பார்க்கப் பார்க்க  மேல் காதல் மோகம் இரண்டும் பெருக்கெடுத்து ஓடியது.

இன்று ஏனோ இருவருக்கும் சகஜமாக இருக்க முடியவில்லை. இருவர் மனத்திலும் ‘இன்று இல்லை என்றால் பிறகு எப்போது!’ என்ற எண்ணம் தோன்றாமலில்லை.

இருந்தாலும் ‘காத்திருப்போம்’ என்று சொன்ன சொல்லும் தடுத்தது.

கண்ணெதிரே கட்டிய மனைவி காதலுடன் அவனைப் பார்த்தும்  கைகட்டிய நிலை அவனுக்கு மிகவும் கொடுமையாக இருந்தது.

‘அவளை நெருங்க உரிமையும் ஆசையும் இருந்தும் ஏன் காத்திருக்கிறாய். தாய் தந்தை எப்படியும் ஒத்துக்கொள்ளத் தான் செய்வார்கள். அவள் வீட்டிலும் அப்படித் தான்.’ மனம் இன்று அறிவுரை வழங்கியது.

ஒரு அணைப்போ , ஒரு முத்தமோ அல்லது ஒரு சின்ன தொடுகையோ அவர்களின் காதல் சங்கமத்தைத் துவக்கத் தயாராக இருந்தது. ஆனால் அதை யார் செய்வது!?

இருவரும் கட்டுப் படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

வாகீ அவளைப் பார்க்க, அவளோ தவித்துக் கொண்டிருந்தாள். பெண்மையின் நாணம் தடுத்தது.

நேரம் ஆக ஆக ‘வேண்டும்’ என்ற எண்ணம் மேலோங்கி நின்றது.

பொறுக்க முடியாமல் அவன் அவளை நெருங்க, அவள் இதயத்தின் துடிப்பு அதிகமானது.

அவனைப் பார்க்காமல் திரும்பிக் கொண்டாள்.

அவன் மேலும் நெருங்க, அவள் முதுகு காட்டி அமர்ந்திருந்தாள்.

அவன் நெஞ்சால் அவளின் முதுகை உரசியபடி அமர்ந்தான். மல்லிகை அவனை அழைத்தது. அதை கைகளில் பிடித்து நுகர்ந்தான்.

அவன் மூச்சு கழுத்தில் வெப்பம் ஏற்றியது இயலுக்கு.

மெல்ல அவளின் இடையில் கை வைத்தான். ஒரு தீண்டலில் மனம் அவனை நாடியது. அவன் கையைப் பற்ற,

அதுவே அவனுக்குப் போதுமானதாகத் தோன்றியது.

அவளைத் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டு, தன் முகத்தால் அவளின் முதுகில் படம் வரைந்தான்.

அவளோ துடித்துப் போனாள்.

திரும்பி அவனை அனைத்துக் கொண்டாள் மோகத்துடன். அவளின் முகம் கழுத்து என முத்த மழை பொழிந்தான்.

தன் பங்கிற்கு அவளும் அவனைக் கொஞ்சித் தள்ளினாள்.  அவளை விலக்கிவிட்டு தன் மேலுடையைக் கழற்றி எறிந்தான்.

அவனின் மார்பில் தன் இதழ்களால் வண்ணம் தீட்டினாள். திகட்டாத இனிப்பை அவன் அள்ளிச் சுவைதான்.

நாடி நரம்பெல்லாம் அவளின் முத்தத்திற்காக ஏங்கியது. அவளும் பஞ்சமில்லாமல் வாரி வழங்கினாள்.

பொறுமை இழந்தவன் அவளை சுற்றி வளைத்து அவள் செய்த அனைத்தையும் திருப்பிச் செய்தான்.

ஆடைகள் சென்ற இடம் தெரியவில்லை. அவனே அவளுக்கு ஆடையானான்.  மொத்த ஆளுமையையும் அவளிடம் காட்டிக் கொண்டிருந்தான்.

மோகத்தைக் கொடுத்த மல்லிகையை தொட அதுவும் அவன் கைகளில் வந்தது. தொடுத்த பூவை மீண்டும் உதிரியாக்கி அவளுக்குத்  தலை முதல் கால் வரை அர்ச்சனை செய்தான்.

 

இயலுக்கு ஒவ்வொரு நொடியும் இன்னும் நீளாதா என்று ஏங்க வைத்தது.

சோர்ந்து பின் தெளிந்து மீண்டும் சோர்ந்து காமனுக்கே கற்றுக் கொடுத்தனர்.

அவளுக்குள் அவனும் அவனுக்குள் அவனும் ஒன்றாகக் கலந்து விடிய விடிய காதல் பாடம் படித்தனர்.

அவன் களைத்துப் போய் விடியலில் குப்புறப் படுத்து உறங்க, அவனின் முதுகில் முகம் புதைத்து அவளும் உறங்கிவிட்டிருந்தாள்.

அவனின் மனைவியாக மொத்தமாக வாழ்ந்த திருப்தி அவளிடம். அதே நிம்மதி அவனிடம்!

 கலக்கமின்றி இருவரும் அடுத்த நாள் இரவு சேனாவின் எதிரே அந்த பாதாள சிவலிங்கத்தை வணங்கிக் கொண்டு நின்றனர்.

சேனா அவர்களை இப்போது நீருக்குள் அனுப்ப சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் மனக்கண்ணில் ஆகாயம் தெரிய, அன்று திருவாதிரை நட்சத்திரம் இல்லையென்றாலும் அதை ஆகாயத்தில் பார்த்து வணங்கி, வாகீயையும் இயலையும் நீருக்குள் அனுப்பினார்.

 

 

 

 

 

 

error: Content is protected !!