MarandhupoEnManame2_11

அத்தியாயம் 11

 

“எனக்காகவா வந்த க்ரிஷ் இங்க?” கண்கள் கலங்க அவள் கேட்க, அவளுடைய மனநிலையை மாற்ற…

“உனக்காகன்னு சொல்ல முடியாது. உன் வீட்டு பக்கத்துல ரெண்டு தமிழ் பொண்ணுங்க இருக்காங்கன்னு கேள்வி பட்டேன். அதுல சாய்ரா பானு செம்ம’னு சொன்னாங்க… பேசிகலி எனக்கு தமிழ் பொண்ணுங்கன்னா ரொம்ப பிடிக்கும்… அதான் யோசிக்காம கிளம்பி வந்துட்டேன்”

“எவளோ நாள் தான் நானும் தனியா இருப்பேன். Peoria வேஸ்ட். ஜெர்சி’னா ஜெர்சி தான். கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கே” என்றான் கண்களில் விஷமத்துடன்.

சட்டெனச் சிரித்தவள் அவனை அடிக்க, சிரித்துக்கொண்டே அவளைச் சுற்றி அணைத்துக்கொண்டு, அவள் கன்னத்தில் படர்ந்திருந்த முடிக் கீற்றைக் காதிற்குப் பின் தள்ளி…

“நான் உன்கிட்ட எப்பவோ பேசியிருக்கணும். இதுவே ரொம்ப லேட். அதான் ஒரு குட்டி அசைன்மென்ட் நானே கேட்டுட்டு இங்க வந்துருக்கேன்”

“இனி எப்பவும் சுஷி கண்ணுல பாஸ்ட் பத்தி நெனச்சுக் கண்ணீர் வரவே கூடாது. இதே மாதிரி சிருச்சுட்டே இருக்கனும். புரிதா?” என்றான் அவள் கண்களைப் பார்த்து.

மழை நின்றிருந்தது… அவன் பேசியபின் ஏதோ அவள் மனதில் தோன்ற, அவனிடம் இருந்து விலகியவள்…

“எனக்கும் ஆச தான். இதே மாதிரி இருக்கனும்ன்னு. ஆனா நீ எவளோ நாள் இருப்ப? சின்ன அசைன்மென்ட்ல இல்ல வந்துருக்க… திரும்பப் போய்டுவயே. அப்பறம் பேக் டு தனிமை” என்று சொல்லிக்கொண்டு எழுந்தவள்… பால்கனி தடுப்பைப் பற்றிக்கொண்டு வானத்தைப் பார்த்தாள் வெறுமையுடன் .

‘நீ என்னவிட்டு போய்டுவன்றத நெனச்சாலே, நீ படிக்க ஹார்வார்ட் போனப்ப எவளோ கஷ்டமா இருந்துச்சோ, அதே வலி இப்போவும் வருது க்ரிஷ்…’ என அவள் மனது வருந்தியது.

‘ஆமால… நான் திரும்ப போகத்தானே வேணும். உன்ன பழைய சுஷியா பாக்கணும்ன்னு நெனச்சு வந்தேன்’

‘பல வருஷம் முன்னாடி நீ என் கிட்ட பேசாம என்ன விட்டுட்டு போனப்ப எப்படி இருந்துச்சோ, அந்த பாரத்தை உன்ன விட்டுட்டு திரும்ப போனும்ன்னு நினைக்கறப்ப உணரறேன். ஏதோ அழுத்தமா இருக்கு சுஷி’

‘என்னவிட்டு ஏதோ போய்டுமோன்னு தோணுது’ என்று நினைத்தவன் மனது படபடத்தது.

இருவரின் இடையில் சில வினாடிகள் மௌனம் நிறைந்திருக்க… அவள் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்து, ‘இதை அப்பறம் யோசிக்கலாம்’ என நினைத்து, சோபாவில் இருந்து எழுந்தவன்…

“இப்போ எதுக்குத் தனிமையைப் பத்தி நினைச்சுட்டு. நைட் என்ன சாப்பிடணும் தானே யோசிக்கணும்?” அவள் அருகில் சிரித்துக்கொண்டே அவளைப் பார்த்தவண்ணம் கேட்டான்.

அவன் வயிற்றில் குத்தியவள் “வா போய் சாப்பிடலாம்” என் அவன் கைக் கோர்த்து சாப்பிடச் சென்றாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்துத் தூங்கத் தயாரானார்கள்.

“குட் நைட் க்ரிஷ். சீக்கரம் தூங்கணும். காலைல சீக்கரம் எந்திருக்கணும். நேத்தன் இங்க சன் ரைஸ் சூப்பர்’ரா இருக்கும்’ன்னு சொன்னாரு. காலைல 5.30’க்கு எழுப்புவேன் ஒகே?”

“வாட்? நீ அதெல்லாம் பாரு… நான் ஏன் எந்திருக்கணும்? ஆள விடு. என்ன எழுப்பின நீ முடுஞ்ச” என்று எச்சரித்தவனுக்கு ஏதோ நினைவிற்கு வர, “ஏய் சுஷி இன்னிக்கி எடுக்க வேண்டிய லிமிட் நீ எடுக்கல” என ஞாபகப் படுத்தினான்.

“அட ஆமால்ல… மறைத்தே போய்ட்டேன் க்ரிஷ்” என்றவள் பிரிட்ஜ்’ஜில் இருந்து எடுத்து “first டைம் குடிக்கறதையே மறந்துருக்கேன். உன்னால” என்று புன்னகைத்துவிட்டு மருந்தைக் குடிப்பது போல் மது’வைக் குடித்தாள்.

இருவரும் வெளியே சிரித்தாலும் உள்ளே ஏதோ ஒன்று அழுத்தமாகவே இருந்தது.

அவரவர் அறைகளில் உறங்கச் சென்றனர். சிறிது நேரம் உறங்கிய பின் தூக்கத்தில் எழுந்த க்ரிஷ், சுஷி அவன் அறையில் இருந்த சோபாவில் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ந்தான்.

அருகில் சென்றவன் அவள் நன்றாக உறங்குவதைப் பார்த்து ‘ஏதாச்சும் பயந்து வந்துருப்பாளோ?’ என எண்ணி, அவள் அருகே மண்டியிட்டு அவளின் தலை முடியைக் கோதினான்.

“உன் கூடப் பேசறது… இந்த சிரிச்ச முகம்… உன்ன பழையபடி பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு சுஷி. ஆனா என்ன சொல்றது’ன்னு தெரில. உன்ன விட்டு போனும்’னு நெனச்சா ரொம்ப ஹெவி’யா ஃபீல் பண்றேன்” என்றான் மெல்லிய குரலில் மனதில் இறுக்கத்துடன் .

அவன் தீண்டல் மற்றும் பேச்சில் லேசாகத் தூக்கம் தடைபட, போர்வைவையை நன்றாகப் போர்த்திக்கொண்டாள் தூக்கத்தில் இருந்து எழாமல்.

*******

“டேய் க்ரிஷ் எந்திரிடா. எந்திரி…” என்று சத்தமாக அவனுடைய போர்வையை இழுத்து எழுப்பிக்கொண்டிருந்தாள் சுஷி.

“சுஷி ப்ளீஸ்… தூக்கம் வருது. நான் நைட்’டே சொன்னேனே நான் வரல’னு. நீ போ” மறுபடியும் அவன் போர்த்திக்கொண்டு தூங்க நினைக்க…

“இப்போ நீ எந்திரிகல இந்த தண்ணிய மூஞ்சில ஊத்திடுவேன்… எந்திரி” என்றாள் கையில் தண்ணீர் கிளாசை ஏந்தியவண்ணம்.

“தொல்லை பண்ணாம போய்டு சுஷி…” என்று அவன் திரும்பிப் படுத்துக்கொள்ள, அந்தப் பக்கமாகச் சென்று அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள்.

அதை எதிர்ப்பார்க்காதவன் “சுஷி…” எனக் கத்திகொண்டே எழ, அவள் வெளியே ஓடினாள். அவனும் அவளைத் திட்டிக்கொண்டே பின் தொடர, இருவரும் கீழே வந்தடைந்தனர்.

அவர்களுக்காக அங்கே நேத்தன் காத்துக்கொண்டிருந்தான்.

அவன் அவளைத் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்தவன் இருவரையும் சிரித்துக்கொண்டே தடுத்துப் பிரித்து நிறுத்த…

தூக்கம் தடைபட்டுவிட்டதே என்ற எரிச்சலில் க்ரிஷ் “நீயும் நேத்தனும் போலாம்ல சுஷி… என்ன ஏன் எழுப்பின???”

“அதான் கீழ வரைக்கும் வந்துட்டல… வா போலாம்” என அவனை இழுத்துக்கொண்டு சென்றாள் சுஷி.

மூவரும் கரையில் காத்திருக்க… க்ரிஷ் மட்டும் தலை கவிழ்த்து உட்கார்ந்திருந்தான் தூங்கி வழிந்துகொண்டு.

“சன் ரைஸ் கூட ரெயின்போ பாக்க முடிமா? ஏன் இன்னிக்கி ஒரே மேகமா இருக்கு?” நேத்தனிடம் சுஷி கேட்க… “மேகமெல்லாம் கொஞ்ச நேரத்துல போய்டும். நேத்து நல்ல மழை. நிறைய வாய்ப்பு இருக்கு இன்னிக்கி ரெயின்போ தெரிய” என்றவுடன் சுஷி சந்தோஷத்தில்…

“க்ரிஷ் சூப்பர்’ல” என அவன் பக்கம் திரும்ப, அங்கே அவன் தூங்கிகொண்டிருந்தான். “டேய்” என சுஷி அவனை எழுப்ப, அவன் “எங்க வந்துருச்சா? எங்க எங்க… சீக்கரம் பாத்துட்டுப் போய்த் தூங்கலாம்” சுற்றி முற்றிப் பார்த்துக் கேட்டான்.

“தூங்காத… விடியப்போகுது” மறுபடியும் வானத்தைப் பார்த்து உட்கார்ந்திந்தாள். காலை விடிய விடிய வானம் மேக மூட்டத்துடனே இருத்தது. நேரம் கடந்துகொண்டிருந்தது… ஆனாலும் சூரிய உதயம் தென்படவில்லை.

“இன்னிக்கி டவுட் தான் Sue” என்றான் நேத்தன்.

“என்னது… இன்னிக்கு வராதா…?” கேட்டது சுஷி அல்ல, க்ரிஷ்… கேட்டுவிட்டு அவசரமாக எழுந்து வீட்டினுள் சென்றான்.

இருவரும் ‘எதற்குச் செல்கிறான்?’ என யோசிக்க ‘ஒருவேளை திரும்பத் தூங்கப் போறானோ?’ என சுஷி நினைத்துக்கொண்டிருக்கும் போது… சில நிமிடத்தில் திரும்பிவந்தவன் கையில் ஒரு வாட்டர் ஜக்.

வந்த வேகத்தில் அவள் மேல் ஊற்றியவன் “வேணாம்னு சொல்ல சொல்ல என்ன எழுப்புனல…” என்றான் பற்களைக் காட்டி சிரித்துக்கொண்டு. “டேய்” என அவள் தடுப்பதற்குள் நனைந்து விட்டாள்.

முகத்தைக் கைகளால் துடைத்துக்கொண்டவள் “நான் உன்மேல க்ளாஸ்ல தான் ஊத்த வந்தேன். அப்பறம் பாவமேன்னு தெளிக்கமட்டுமே செஞ்சேன். ஆனா நீ…” என்று அவளுடைய ஆடையைக் காண்பித்துக் கோபத்துடன் அவனை அடிக்கச் சென்றாள்.

அவன் அவளைத் தடுக்க, இருவரும் சண்டை போட்டுக்கொள்வதைப் பார்த்த நேத்தன், சிரித்துக்கொண்டே இருவரையும் பிரித்துவிட்டான்.

**********

மதிய உணவு அவள் செய்து கொண்டிருந்தாள். அவன் டிவி’யில் ஏதோ படம் ஆரம்பிக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

திடீரென ஏதோ நினைவிற்கு வர, திரும்பி அவளிடம் “சுஷி… லியோ (Leonardo Dicaprio) மூவி. ஏதாச்சும் ஞாபகம் வருதா?” சிரிப்பை அடக்கிக்கொண்டு அவன் கேட்க, ”கச கசா மேட்டர் தான” என சிரித்தாள்.

சத்தமாகச் சிரித்தவன் “ஒரு பாப்கார்ன் கோக்’குகாக உன்ன கூட்டிட்டு போனேன் பாரு” என்றான் சிரிப்பை அடக்கமுடியாமல்.

“வீட்ல குடுக்கற பாக்கெட் மனி மூவி டிக்கெட்’க்கு தான் பத்தும். பாப்கார்ன் இந்த மாதிரி ஆஃபர்ல தான் கிடைக்கும் ஆனா என் நேரம்…” எனச் சொல்லும்போது அவளின் முகத்தில் புன்னகையுடன் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.

———–

இருவரும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம்.

அந்தத் தியேட்டர் வாசலில் ஒரு பெரிய நோட்டீஸ். “Come as a couple. XL popcorn and Coke on us (ஜோடியாக வாருங்கள். XL பாப் கார்ன், கோக் இலவசம்)” என்றிருந்தது.

“க்ரிஷ் கண்டுபிடிச்சுட மாட்டாங்களே… பயமா இருக்குடா” என அவள் கேட்டுக்கொண்டிருக்க, பேன்ட்ரி சென்றார்கள் இருவரும்.

“அதெல்லாம் அவங்களுக்கு தெரியாது. நீயே காட்டிக்குடுத்துடாத” சொல்லிக்கொண்டே படத்தின் டிக்கெட்’டை கவுண்டரில் காட்டியவன், சுஷியின் தோளைச் சுற்றிக் கைப் போட்டுக்கொள்ள, அவள் அவனின் இடைச் சுற்றிப் பற்றிக்கொண்டாள்.

இருவரையும் பார்க்க… டேட்டிங் (Dating) வந்தவர்கள் போல இருந்தனர்.

இவர்களைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே, கவுண்டரில் இருந்தவன் பாப்கார்ன் மற்றும் கோக்’கை இலவசமாக நீட்டினான். சந்தோஷமாக அதை வாங்கிக்கொண்டு இருவரும் தியேட்டர் உள் சென்று இருக்கையில் அமர்த்தினார்.

படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் கழித்து… அவன் பக்கம் திரும்பியவள் “டேய் க்ரிஷ்… பக்கத்துல ஏதோ கச கச’னு பண்றாங்க” என மெதுவாகச் சொல்ல “என்ன கச கச’வா? அப்படினா?” என்றவன் அவள் பக்கம் எட்டிப் பார்த்தான்.

அங்கே ஒரு ஆணும் பெண்ணும் படம் பார்க்காமல் வேறு வேலையில் இறங்கி இருக்க…

“ஏய்… நீ ஏன்டி அதெல்லாம் பாக்கற? இதுக்குப் பேரு வேற வெச்சுருக்கப் பாரு… கச கச’னு. ஐயோ” எனத் தலையில் அடித்துக்கொண்டவன்

“படத்துக்கு வந்தா படம் மட்டும் பாரு… இந்தப் பக்கம் திரும்பு” எனக் கடிந்துகொள்ள, அவளும் திரை இருக்கும் பக்கம் திரும்பினாள்.

சிறிதுநேரத்தில் “ஐயோ க்ரிஷ் ஏதோ சத்தமெல்லாம் குடுக்கறாங்க. நீ இந்தப் பக்கம் வாடா” என்றாள் முகத்தை அஷ்டக் கோணலாக வைத்துக்கொண்டு.

“உன்கூட வந்தேன் பாரு… படம் பாக்க… அதுவும் ஒரு பாப்கார்ன்கு ஆசப்பட்டு. என்ன சொல்லணும்” என்று திட்டிக்கொண்டே, இருக்கையை மாற்றிக்கொண்டான்.

——————-

“சுஷி ஸ்டவ்’ல ஏதோ கருகுது…” என்று க்ரிஷின் சத்தத்தில் நிகழ்விற்கு வந்தவளிடம், “என்ன கச கசா பத்தி யோசிச்சயா?” என சிரித்துக்கொண்டே அவன் கேட்க,

“போடா. உன்கூடப் பாத்தேன் பாரு அந்தப் படத்தை… ” என அங்கிருந்த ஏதோ ஒரு காயை அவன் மேல் எறிந்தாள்.

அதை லாவகமாகப் பிடித்தவன் “உனக்கு மட்டும் எப்படி இப்படிலாம் பேரு வெக்க தோணுமோ” என்றான் சிரித்துக்கொண்டே.

—–

மாலை நேரம் நெருங்கும்போது இருவரும் ஏரிக்கரையின் ஓரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே நேத்தனும் வந்தான்.

க்ரிஷ் போன் மணி அடிக்க, அதில் “பாரு” எனக் காட்டியது. அங்கிருந்து சென்று தனியாகப் பேச ஆரம்பித்தான், இங்கே நேத்தனும் சுஷியும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென நேத்தன் அவளிடம் “யு போத் மேக் அ லவ்லி கபுல். மேட் ஃபோர் ஈச் அதர் (You both make a lovely couple. Made for each other)” என்றான் வியப்புடன்.

அதைக் கேட்ட சுஷி புருவங்கள் முடிச்சிட்டாலும், இதழ்களில் புன்னகை பூத்திருந்தது.