Maranthu po en maname 6

மறந்துபோ என் மனமே(2) – MEM2 – அத்தியாயம் 6:

‘என்ன ஆச்சு சுஷி உனக்கு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உன்ன இந்த நிலைல பாக்கவே முடில. உன்ன மொதல்ல டாக்டர்’ட்ட கூட்டிட்டுப் போகணும். இப்படியே போச்சுன்னா உன்னத் திரும்ப மீட்கறது கஷ்டமாயிடும்’ என்று வருத்தத்துடன் அன்றைய இரவைக் கழித்தான்.

இரவு முழுதும் அவளின் நினைவாக இருந்தவன் உறங்க நேரமாக காலைத் தாமதமாக எழுந்தான்.
அவசர அவசரமாகக் கிளம்பி, சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தான். வெளியில் சுஷி

“மோர்னிங் க்ரிஷ்” என்று சொல்லியவாறே.
பதிலுக்கு “குட் மோர்னிங்” என்றவன் முன்தினம் நடந்தது வருத்தமாக இருந்தாலும் முகத்தில் சிறிய புன்னகையுடன் “கெட் இன் சுஷி” என்றான்.

அதை உணர்ந்தவளாய் அவனிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்தாள்…

“என்ன லேட் ஆயிடுச்சா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவளிடம்

“ஆமா. லேட்’டா எந்துருச்சுட்டேன்… நீ கிளம்பலையா இன்னும். சாப்பிடறயா?” அவன் கேட்க

“ரெடி ஆகிட்டு தான் வந்தேன். கிளம்பவேண்டிதுதான்” என்றவள் நிறுத்தி “செம்ம வாசனை. ஆண்ட்டி தக்காளி தொக்கா” என்று கேட்டுக்கொண்டே டைனிங் டேபிளுக்கு சென்று அவன் தட்டைப் பிடிங்கினாள்.

“ஹ்ம்ம். தோசை வித் தக்காளி தொக்கு” என்று அதைச் சாப்பிட ஆரம்பிக்க “நீ சாப்பிடலயா’னுலாம் கேட்க மாட்டேன்… எனக்குப் பசிக்குது. ஆஃபீஸ்ல பிரட் யோகர்ட் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துப்போச்சு” என்றவள்

“எவளோ நான் ஆச்சு ஆண்ட்டி சமையல் சாப்பிட்டு” ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டே சொன்னாள்.

“இன்னும் இந்தப் பழக்கம் போகல” அவளைப் பார்த்துப் புன்முறுவலிட்டவனிடம் “உங்கிட்ட இருந்து பிடிங்கி சாப்பிடறது… அதுவும் ஆண்ட்டி செஞ்ச டிஷ் சாப்பிடறது ஒரு தனி டேஸ்ட்” என்று சிரித்துக்கொண்டே சாப்பிட்டாள்.

“ஆமா நீ சமைக்கலாம் கத்துக்கிட்டயா… பரவாலேயே” அவனைப் பார்த்துக் கேட்க “ஹ்ம்ம் பாரு சொல்லிக்குடுத்துருக்கா. ஸ்டான்போர்ட்ல இருந்தப்பவே நானே கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டேன்”

“இன்னிக்கி நைட் நான் டின்னர் செய்றேன்” என்று சொல்லிக்கொண்டே அவன் வைத்திருந்த பிரட் எடுத்து சாப்பிட்டான்.

“ஆமா இங்க வந்து கூட உன் லீலைய ஸ்டார்ட் பண்ணிட்டயா?” கேட்டாள் இதழோரத்தில் புன்னகையுடன்.
அவன் புரியாமல் பார்க்க “நேத்து ப்ரியா கூடப் பாத்தேன் உன்ன Gregorys Coffee’ல” என்றாள் சாப்பிட்டுக்கொண்டே.

“ஹாஹாஹா என்ன பாத்தியா? அப்போ வந்து பேசி இருக்கலாம்ல” என்றான் பதிலுக்குப் பலமான சிரிப்புடன். “ஏன் நந்தி மாதிரி டிஸ்டர்ப் பண்ணனும்னு வரல” அவள் சொன்னவுடன்

“சும்மா தான் பேசிட்டு இருந்தேன். நீ நினைக்கற மாதிரிலாம் இல்ல” நமட்டுச் சிரிப்புடன் சொல்ல…

“அது எனக்கே தெரியும். ஏன்னா அவளுக்கு பாய் ஃபிரன்ட் இருக்கான்” என்றாள் ஒரு விரலில் அழகு காட்டி .

போலியான வருத்தத்துடன் “ப்ச்… இதுவேறயா. மிஸ் ஆயிடுச்சே. அப்போ ப்ரியா இல்லனா சாய்ரா.

சாய்ரா’வ ட்ரை பண்ண வேண்டிதுதான்” சிரித்துக்கொண்டே சொல்லும்போது வீட்டில் மற்றொரு அறையில் இருந்து ஒருவன் வெளியே வந்தான்.

வந்தவனைப் பார்த்த சுஷி, க்ரிஷிடம் “வந்துட்டானா?” மெதுவாகக் கேட்க அவன் ஆம் என்பது போல் தலையசைத்தான்.

அவன் க்ரிஷுடன் வீட்டை பகிர்ந்துகொள்பவன். வீட்டின் உரிமையாளன்.

வந்தவன் க்ரிஷிடம் “சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் உள்ளே அனுமதி இல்லை. கான்ட்ராக்ட்’ல இது இருக்கு. தெரியும் தானே (Relatives and friends are not allowed inside. Its in the contract. You know right)” என்று காரராகச் சொல்லிவிட்டு அவளைப் பார்த்தவண்ணம் வெளியே சென்றான்.

“எப்போ வந்தான்? காண்ட்ராக்ட்ல அப்படி இருக்கா என்ன?” அவள் கேட்க “ஹ்ம்ம்ம். நேத்து வந்தான். வந்ததுல இருந்து இதை அப்படி வைக்காத இப்படி யூஸ் பண்ணாதனு தொல்ல பண்றான்” சலித்துக்கொண்டான் க்ரிஷ்.

“நீ ஏன் Airbnb ரூம்’லாம் எடுக்கற? தனியா பாத்துக்கலாம்ல. இல்லனா பேசாம என் வீட்டுக்கு வந்துடு” என்று சாப்பிட்டுக் கொண்டே சொன்னவளைப் பார்த்தவன் “ஹ்ம்ம் பாப்போம்” என்றான்.

அவள் சாப்பிட்டு முடிக்க… அவனும் இருந்த பிரட் சாப்பிட்டுப் புறப்பட… இருவரும் புறப்பட்டனர்.
சிறிதுநேரத்தில் அவரவரின் ஆஃபீஸிக்கு சென்றடைந்தனர்.

அவன் ப்ரியாவின் அழைப்பிற்காகக் காத்திருந்தான் எப்படியாது இன்று ஸ்டீவை பார்த்துவிட வேண்டுமென்று…

*****

ப்ரியாவின் அழைப்பிற்காக எதிர்பாத்துக்கொண்டிருக்கும் போது அவனுடைய மொபைல் அலற, அவசரமாக எடுத்தவன் அதில் ‘சுஷி காலிங்’ என்பதைப் பார்த்து அட்டன்ட் செய்தான்.

“சொல்லு சுஷி…. இப்போவா…. ஓ சரி… எங்க… இதோ வரேன்…” என்று அழைப்பைத் துண்டித்தான்.

‘எப்படியாவது இன்னிக்கி அவனைப் பாக்கணும் நெனச்ச இப்போ பாத்து இவ கூப்பிடறாளே’ என்ற யோசனையுடனே புறப்பட்டான்.

அடுத்தச் சில நிமிடங்களில் அவள் சொன்ன இடத்திற்குச் சென்றவன், அந்த ஹோட்டலின் கண்ணாடி வழியே உள்ளே பார்க்க… சுஷியுடன் ஸ்டீவ் உட்கார்ந்திருந்தான்.

‘இவன்கிட்ட பேசணும்னு நாம நெனச்சா இவளே இவன இங்க உட்காரவெச்சுருக்காளே. இன்னிக்கி என்னனு தெருஞ்சுக்க வேண்டிதுதான்’ என்ற எண்ணத்துடன் உள்ளே சென்றான்.

“ஹே க்ரிஷ். வா. இப்போ தான் நம்மளோட சின்ன வயசு போட்டோஸ்லாம் பாத்துட்டு இருந்தோம்” என்றவுடன்

“என்ன திடீர்னு கூப்டுருக்க” என்று கேட்டுக்கொண்டே டை லூஸ் செய்துகொண்டு ஒரு தோரணையாக ஸ்டீவை பார்த்தவன் மனதில் ‘நேத்து என்ன யார்னு கேட்ட.

இப்போ புரிதா நான் யார்னு’ என்று அவன் முன்னே அமர்ந்தான் சற்றுத் திமிராக.

அவன் கேட்டக் கேள்விக்கு “இல்ல உங்க ரெண்டு பேத்துக்கும் ஒரு இன்றோ கொடுக்கலாமேனு தான் கூப்பிட்டேன்” என்றாள் க்ரிஷிடம்.

“ஸ்டீவ் இது க்ரிஷ் என்னோட childhood friend. என்னோட நெருங்கிய தோழன். ஒரு பதினஞ்சு வருஷத்துக்கு மேல இருக்கும் இல்ல க்ரிஷ்” என்று சொல்லும்போது க்ரிஷ் சுஷியை பார்த்துப் புன்னைகைத்துவிட்டு, ஸ்டீவை கர்வமாகப் பார்த்தான்.

“ஹலோ” என்ற ஸ்டீவிடம் பதிலுக்கு

“ஹலோ” என்றான் சற்றுக் கோபமாக முன்தினம் நடந்த நிகழ்வுகளை எண்ணி.

“க்ரிஷ்” என்று சுஷி அழைக்க அவளிடம் திரும்பினான். “இது ஸ்டீவ் என்னோட வேலபாக்கறான். ப்ரென்ட்ன்னு சொல்றதைவிட ஹி இஸ் மோர் லைக் மை ப்ரோ” என்றவுடன் அதிர்ந்தான்.

அவன் மனதில் ‘என்னது ப்ரோ வா? இத நான் யோசிக்கவே இல்லையே. சரி ப்ரோவாவே இருக்கட்டும். ஆனா ஏன் இவக் கூடவே சுத்திட்டு இருக்கான்?’

‘இவன் யாரு அவ யார்கூடப் பேசணும் பேசக்கூடாதுனு முடிவு பண்ண’ என்று நினைக்கும்போது

“ஹே” என்று சுஷி அவனை நிகழ்விற்குக் கொண்டுவந்தாள்

“ப்ரோ வா” என்று சஷியை பார்த்துக் கேட்க “எஸ். ஸ்டீவ் தான் உன்னப் பாக்கணும்ன்னு சொன்னான்.

நேத்து ஈவினிங் மீட் பண்ணலாம்ன்னு நெனச்சேன். பட் நீ மீட்டிங்ல பிஸி’யா இருந்த. அதான் மீட் பண்ண முடில”

சுஷி சொன்னவுடன் ஸ்டீவ், “ஸாரி க்ரிஷ். Sue உன்னப் பத்திச் சொன்னா நீ ஃப்ரென்ட்’னு. பட் எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்துச்சு. நீ நல்லவனா இல்ல அந்த சரத் மாதிரியான்னு”

“இப்போ தான் உங்களோட சின்ன வயசு போட்டோஸ்’லாம் காட்டினா. அவ ஒரு பத்திரமான இடத்துல இருக்கனும்ன்னு நெனச்சேன். அதான் நேத்துக் கொஞ்சம் ப்ரோப்லம் ஆகிடுச்சு” என ஆங்கிலத்தில் பேசி முடித்தான்.

“யாரு அந்த சரத்?” க்ரிஷ் சுஷியை கேட்க “அது பெரிய கத அப்பறம் சொல்றேன். சோ இப்போ சந்தேகம் தீர்ந்துடுச்சா ஸ்டீவ்? பழைய டிரைவ் (drive)… அதுல இருக்க போட்டோஸ் தேடிக் கண்டுபிடிக்கறதுக்குள்ள இவளோ ஆயிடுச்சு” என்றாள்.

“ஸாரி ஸ்டீவ் உன்னத் தப்பா நெனச்சுட்டேன்.” மன்னிப்புக்கேட்டான் க்ரிஷ். பதிலுக்கு ஸ்டீவ் சின்னதாகப் புன்னகைத்தான்.

“க்ரிஷ்… ஸ்டீவ் ஒரு மீட்டிங் விஷயமா இன்னிக்கி ஒஹாயோ (Ohio) போறான். அதுக்குள்ள இத ஸால்வ் பண்ணிட்டா அவன் நிம்மதியா இருப்பான் அதான் உன்ன வர சொன்னேன்” சுஷி சொன்னவுடன்
“உனக்கு ஸ்டீவ் எப்படித் தெரியும் சுஷி?” க்ரிஷ் கேட்க அதை எப்படிச் சொல்வதென்று யோசித்தவள் ஸ்டீவைப் பார்த்தாள்.

“நான் சொல்றேன்” சற்றுத் தயங்கி ஸ்டீவ் ஆரம்பித்தான்.

“என் சிஸ்டர் மிடில் ஸ்டேஜ் ஆல்கஹாலிக் (Middle stage Alcoholic). அவளை டிரீட்மென்ட்’காக கூட்டிட்டுப் போன்னப்ப தான் சுஷீலா’வ அங்க பாத்தேன். அவளை முன்னாடியே ஆஃபீஸ்ல பாத்ததால போய்ப் பேசினேன்”

“அங்க அவ ஸெல்ஃப் டிடாக்ஸ் (Self Detox) ப்ரோக்ராம் எடுத்துட்டு இருந்தா. என் சிஸ்டர்’க்கு நான் என்ன செய்வேனோ… அந்த மாதிரி சுஷிக்கு சப்போர்ட்டா இருந்தேன். அவ்ளோதான்” என்றான் புன்னகை மாறாமல்.

அவனைத் தொடர்ந்து சுஷி “ஸ்டீவ் சிம்பில்’லா சொல்லிட்டான் க்ரிஷ். பட் அவன் செய்த ஹெல்ப், அதுக்கும் மேல ”

“எப்பவும் ஹாஸ்பிடல்க்கு நான் டாக்ஸில தான் போவேன். என்னை நைட் டிரைவ் பண்ணக் கூடாதுன்னு சொல்லிருக்காங்க. பட் ஸ்டீவ் மீட் பண்ண அன்னிக்கிக் கொஞ்சம் வேல இருந்ததால ஹாஸ்பிடல்க்கு நானே கார் எடுத்துட்டுப் போனேன்”

“உன்கூடக் கார்ல சாப்பிட போனப்ப எனக்கு பிளாங்க் அவுட் (blank out) ஆயிடுச்சுல்ல. அதுபோல அன்னக்கி ஹாஸ்பிடல்’ல இருந்து கிளம்பரப்ப… பார்க்கிங்’ல கார் எடுக்கறப்ப, சுத்தமா பிளாங்க் அவுட் ஆயிடுச்சு”

“சடன் ஸ்டார்ட் (sudden start) பண்ணப்ப என்ன பண்ணேன்னு தெரில அங்க விளையாடிட்டு இருந்த ஒரு சின்னப் பொண்ணுமேல மோதப் போய்ட்டேன். அப்போ அங்க ஸ்டீவ் அந்தப் பொண்ண வழில இருந்து காப்பாத்தினான்”

“அதப் பாத்த நான் சடன் பிரேக் போட்டு நிறுத்த, பக்கத்து கார்ல மோதி, எனக்கு ஒரே நெர்வஸ் ஆயிடுச்சு. அப்போ எனக்கு ஹெல்ப் பண்ண ஸ்டார்ட் பண்ணான்.

ஆஃபீஸ்’ல இருந்து வீடு… இல்லாட்டி ஹாஸ்பிடல். அங்க இருந்து வீட்டுக்கு”

“எனக்கு சிலசமயம் ஒர்ஸ்ட் ட்ரீம்ஸ் (worst dreams) வரும். சோ தனியாத் தூங்க பயமா இருக்கும். அதுனால நான் தூங்கினதுக்கப்பறம் கிளம்புவான்”

“இது எல்லாத்துக்குமேல, இவன் இல்லனா அந்த சரத் என்னை என்ன செஞ்சுருப்பான்னு கூடத் தெரில” எனச் சொல்லும்போது….
அவள் கண்களில் சிறு துளிக் கண்ணீர் வர… க்ரிஷ் அவள் கைகளை ஆதரவாகப் பற்றிக்கொண்டான் மனது பொறுக்காமல்.

அதே சமயம், அவளை ஆதரவாகத் தட்டிக்கொடுத்த ஸ்டீவ் ‘அழக்கூடாது’ என்று அவளைச் சாமதப்படுத்தினான்.

அதைப் பார்த்து க்ரிஷ் ‘ச்ச இவனப் போய்த் தப்பா நினச்சுட்டேனே. ஸாரி ஸ்டீவ். ஆனா யார் அந்த சரத். அவன் மட்டும் என் கைலக் கிடைக்கட்டும். செத்தான்’ என்றவன் மனதில் கோபம் பொங்கியது.