மறந்துபோ என் மனமே(2) – MEM2 – அத்தியாயம் 7:
அவள் சோகமனநிலையை மாற்ற…
க்ரிஷ் “சுஷி. சாப்பிட வந்துட்டு என்ன அழுதுட்டு? உனக்குத் தான் மெக்ஸிகன் ஸ்டைல் வித் மோல் சாஸ் (Mexican style beef with Mole sauce) ரொம்பப் பிடிக்குமே. சாப்பிடலாமா?” இதழோரத்தில் புன்னகையுடன் கேட்க…
“அய்யே எனக்கு மோல் சாஸ் பிடிக்கவே பிடிக்காதுனு தெருஞ்சுட்டே கேக்கறயா உன்ன…” என்று அவன் தலையில் குட்டினாள்.
அவள் சகஜ நிலைக்கு வர அவளின் போன் அடித்தது. “ஆஃபீஸ்’ல இருந்துதான். நீங்க பேசிட்டு இருங்க. வந்துடறேன்” என எழுந்து சென்றாள்.
அவள் போவதைப் பார்த்த ஸ்டீவ் “நேத்து நடந்ததுக்கு ஸாரி க்ரிஷ். நான் இந்த வீக் இருக்க மாட்டேன். நீ தான் அவளைப் பாத்துக்கணும். அவ ஈவினிங் மேல கார் ஓடக்கூடாது”
“ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவ ரீஹாப் சென்டர் (rehab center) போவா. அவ கூட நீ போ ப்ளீஸ். இன்னிக்கி அவளுக்கு அப்பாய்ன்ட்மென்ட் இருக்கு” என்றான் ஸ்டீவ் அவசரமாக.
மறுபடியும் தொடந்தவன் “அப்பறம் அவளுக்கு, யாரும் ஹெல்ப் சொல்லிட்டுப் பண்ணாப் பிடிக்காது. சோ நீ அவளுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிடாத” என்று முடிக்க, ஸ்டீவை பார்த்துப் புன்னகைத்தான் ‘எனக்கும் தெரியும்’ என்று மனதில் நினைத்துக்கொண்டு…
“ஆமா… அவளுக்கு யாரும் ஹெல்ப் பண்ணா பிடிக்காது. ஸ்டீவ் உன்னத் தப்பா நெனச்சுட்டேன். உன்னைப்பத்தி அவ எதுமே சொல்லல” க்ரிஷ் சொன்னவுடன்…
“நம்ப ரெண்டுபேரும் அவ நல்லா இருக்கனும்னு நினைச்சோம் அவளோ தான். என் நம்பர் நோட் பண்ணிக்கோ” இருவரும் அவர்கள் நம்பரை பகிர்ந்துகொண்டனர்.
“எனக்கு ஒரே ஒரு டவுட் தான். உன்கூட வரப்ப அவ எப்பவுமே தள்ளாடிட்டே வந்தாலே. அது ஏன்?” க்ரிஷ் கேட்க…
“அதுவா… அவளுக்கு டாக்டர் வெரி மைல்டு ஸ்லீப்பிங் டோஸ் (very mild sleeping dose) குடுத்துருக்கார்.
அவளுக்குத் திடீர்னு தலைவலி வரும் ட்ரிங்க் பண்ணப்பறம். அது ஸெல்ஃப் டிடாக்ஸ் சைட் இஃபகட் (Side effect). அப்போ அந்த டேப்லெட் எடுத்துப்பா. அந்த டைம்ல அவளால சரியா நடக்க முடியாது”
“நான் அவ வீட்டுக்கு வந்தப்பறம் ட்ரிங்க் பண்ண விடமாட்டேன். சோ வரப்பவே அன்னைக்கி டோஸ் எடுத்துட்டு டேப்லெட் போட்டுப்பா. வீட்டுக்கு வந்தப்பறம் தூங்கிடுவா” என்று சொல்லும்போது
அன்று அவளுடன் வருகையில் அவள் எடுத்த மாத்திரை நினைவிற்கு வந்தது க்ரிஷிற்கு.
“அவளோட வில் பவர் (will power) சான்ஸ்’சே இல்ல. ஸெல்ஃப் டிடாக்ஸ் அவளோ ஈசியான விஷயம் இல்ல. அதுவும் கூட யாரும் துணையும் இல்லாம ஸ்டார்ட் பண்ணிருந்தா. பட் இப்போ அவ அல்மோஸ்ட் தாண்டிட்டா”
“இனொரு முக்கியமான விஷயம் என்னன்னா… வரபோற ஓரிரு நாட்கள் ரொம்ப முக்கியம். ஸெல்ஃப் டிடாக்ஸ் முடிக்கப் போறா. ரொம்பக் கவனமாப் பாத்துக்கணும். நான் அவ கூட இல்லையேனு நினச்சேன். பட் நீ” என்று சொல்லும்போது சுஷி வருவதைப் பார்த்து நிறுத்தினான்.
அவன் பேச்சை நிறுத்துவதைப் பார்த்துக் கொண்டே வந்த சுஷி அவர்களிடம் “என்ன ரெண்டுபேரும் சீரியஸ்’ஸா பேசிட்டு இருக்கீங்க? என்ன பாத்தவுடனே ஸ்டாப் பண்ணிடீங்க. எதப் பத்தி?”
ஸ்டீவ் கிரிஷை பார்த்து முழிக்க, சுதாரித்துக்கொண்ட க்ரிஷ்…
“அதுவா. அதோ அங்க இருக்காளே… அவ சூப்பர்’ரா இருக்கால்ல. ஸ்டீவ் அவள சைட் அடுச்சான்” கண்களால் க்ரிஷ் யாரையோ காட்டி “அவளைப் பத்திதான் பேசிட்டு இருந்தோம்” என்றவுடன் ஸ்டீவ் வாயைப் பிளந்தான்.
“ஸ்டீவ் நீயா? சைட்’டா?” ஆச்சர்யத்துடன் அவனைப் பார்த்துக் கேட்டவள், க்ரிஷ் பக்கம் திரும்பி
“அடப்பாவி ஒரு அஞ்சு நிமிஷம் விட்டுட்டு போனா அவனையும் மாத்திட்டாயா” என்று போலியாக க்ரிஷை திட்டினாள்.
மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு, அவரவர் அலுவல்களைப் பார்க்கச் சென்றனர்.
க்ரிஷ் மனதில் சுஷியின் எண்ணங்களே நிறைந்திருந்தன.
‘டாக்டர்ட்ட பேசி என்ன செய்யணும் செய்யக் கூடாதுன்னு தெரிஞ்சுக்கணும்’ என்று நினைத்துக்கொண்டான்.
இருவரும் பேசியது போல் ரீஹாப் சென்டர் சென்றனர். அவள் குறித்து வைத்திருந்த அந்த வாரத்துக்கான குறியீடுகளைப் பார்த்த மருத்துவர் இருவரிடமும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு க்ரிஷிடம் தனியாகப் பேசினார்.
பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார்கள் இருவரும். எப்பொழுதும் எடுத்துக்கொள்ளும் மதுவை அவள் எடுக்காமல் நேராக வீட்டிற்கு வந்திருந்தனர்.
சுஷி அவளுடைய வீட்டிற்குச் சென்று ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு கிரிஷ் வீட்டிற்கு வந்தாள்.
அவன் சமயலறையில் ஏதோ செய்துகொண்டிருந்தான்.
“என்ன க்ரிஷ் ரெடி ஆகிடுச்சா? பசிக்குது”சொல்லிக்கொண்டே அங்கிருந்த மேடை மீது ஏறி உட்கார்ந்துக்கொண்டாள்.
“இதோ ரெடி பண்ணிட்டே இருக்கேன். அதுவரைக்கும் இந்த டீ குடி” என்று அவளிடம் குடுத்துவிட்டுக் கடாயில் ஏதோ செய்ய ஆரம்பித்தான்.
டீ குடித்துக்கொண்டிருந்தவள் அவனை ஏதோ கலாய்க்க, போலியாகக் கோபப்பட்டவன் பதிலுக்குக் கிட்சன் டிஷ்யூ பேப்பர் (tissue paper) எடுத்து அவள் மேல் போடும் சமயம், அவனுடன் தங்கி இருப்பவன் உள்ளே வர சரியாக இருந்தது.
வந்தவன் கிட்சன் இருந்த நிலையையும், உள்ளே மேடை மேல் அவள் உட்கார்ந்திருந்ததையும் பார்த்துவிட்டு க்ரிஷிடம்
“காலைலயே சொன்னேன். யாரையும் வீட்குள்ள விடக் கூடாதுன்னு. அது இல்லாம கிட்சன் இவளோ கேவலமா இருக்கு” கோ அவன் வார்த்தைகள் வந்தது.
“ஸாரி மேன். அஞ்சு நிமிஷம். நான் க்ளீன் பண்ணிடறேன்” க்ரிஷ் அவசரமாக சுத்தம் செய்ய முற்படும்போது….
“ஹே நீ வெளிய போ” அந்த புதிதாக வந்தவன் சுஷியிடம் சொல்ல, தன்னை அதட்டுகிறானா என்ற கோவத்தில் “ஷட் அப். எனக்குத் தெரியும்”
“க்ரிஷ் நீ எதுக்கு இவன்கிட்டலாம் ஸாரி கேட்டுட்டு. சும்மா தொல்லை பண்ணிட்டு இருக்கான். இதுக்குத் தான் இந்த airbnb ரூம்லாம் வேணாம்னு சொன்னேன்”
“எல்லாம் எடுத்துட்டு வா என் வீட்டுக்குப் போலாம். நீ இனி இங்க இருக்க வேணாம்” என்றாள் ஆங்கிலத்தில் கோபத்துடன் வந்தவனைப் பார்த்து.
க்ரிஷ் முழிக்க… அடுப்பை அணைத்தாள்.
“சுஷி அவசரப்படாத. இது சின்ன ப்ரோப்லம். இதுக்கு ரியாக்ட் பண்ண வேண்டாம் நம்ம” க்ரிஷ் சொல்ல அதைப் பொருட்படுத்தாமல் அடுப்பின் மேல் இருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு…
“மத்ததெல்லாம் எடுத்துட்டு வா” என்று அவள் வீட்டிற்குச் சென்றாள்.
அவள் வீட்டிற்குச் சென்ற மறு வினாடி அவன் வரவில்லை என்பதைப் பார்த்து விட்டுத் திரும்ப வந்தாள் அவன் வீட்டிற்கு.
“நீ இன்னும் எடுத்துட்டு வரலையா?” என்று கேட்டுக்கொண்டே அவள் உள்ளே வந்த சமயம் அவனுடன் தங்கிருந்தவன் கிட்சனுள் இருந்து வெளியேறினான்.
“இதோ எடுத்துட்டு வரேன்…” என்று க்ரிஷ் கைலியில் சில பொருட்களை எடுத்துக்கொண்டு சுஷி வீட்டிற்கு வந்தான். சிறிது நேரத்தில் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, சமையலை அவளின் வீட்டில் செய்து முடித்தான்.
இருவரும் சாப்பிட உட்கார்ந்தனர்.
“சுஷி, நீ என்ன சாப்ட்ராமன்னு சொன்ன. நீ மட்டும் என்ன. கோவப்பட்டு மொதல்ல வாணலிய தான் தூக்கிட்டு வந்த” அவளைக் கிண்டல் செய்ய…
“ஆமா. எங்க அவன் சமைக்க விடமாட்டானோன்னு பயந்து எடுத்துட்டு வந்துட்டேன். நமக்கு சாப்பாடு தான் முக்கியம்” என்று பல்லை காட்டிக்கொண்டு சிரித்தவள், அவன் பரிமாறியதை உன்ன ஆரம்பித்தாள்.
“எப்படி இருக்கு?” க்ரிஷ் சாப்பிட்டுக்கொண்டே கேட்க “ஏதோ இருக்கு. நாட் பேட்” எனச் சொன்னவளைப் பார்த்து “நாட் பேட்’ன்னு சொல்லிட்டு செம்ம கட்டு கட்டுறத பாரு” மறுபடியும் அவளைக் கிண்டல் செய்தான்.
“நீ ஃபீல் பண்ண கூடாதுல்ல அதுக்கு தான் கஷ்டப்பட்டு சாப்பிடறேன்” என்றாள் உதட்டில் சின்னதாகப் புன்னகையை ஏந்திக்கொண்டு.
“பாத்தா அப்படித் தெரில” என்றான் பதிலுக்குப் புன்னகையுடன்.
வெகு நாட்கள் கழித்து அவளுடை இரவு உணவு நேரம் மிகவும் சாதாரணமாகச் சந்தோதமாக நகர்ந்தது.
இருவரும் சாப்பிட்டு முடிக்க, சிறிதுநேரத்தில் அவளுடைய அன்றைக்கு எடுத்துக்கொள்ளவேண்டிய மது எடுத்துக்கொண்டு வந்தாள்.
“இன்னிக்காவது கம்பனி குடுப்பயா? இல்ல வேணாம் வேணாம்னு சீன் போடுவயா?” கேட்டுக் கொண்டே சோபாவில் உட்கார, அவனும் அவள் அருகில் அமர்ந்தவன் இருவருக்கும் க்ளாசில் ஊற்றினான்.
இருவரும் மது அருந்திக்கொண்டே அவள் ஸ்டீவிடம் காட்டிய அவர்களுடைய சிறுவயது போடோஸை லேப்டாபில் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இருவரின் இடையே மௌனமே நிறைந்திருந்தது.
சிறுபெண்ணாக சின்ன போனிடைல் போட்டுக்கொண்டு வாய்மட்டும் சிரிக்காமல், முகமே சிரித்துக்கொண்டு இருக்க,
பக்கத்தில் க்ரிஷ் சிரித்துக்கொண்டு அவள் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு நின்றிருந்தான்.
பின் இன்னொன்றில் கொஞ்சம் வளர்ந்தச் சிறுமியாக கோபத்துடன் அவனை அடிப்பதற்குக் கை ஓங்குவது போல், அவன் அவளிடம் தப்பிக்கும் போது எடுத்த படம்.
இன்னொன்றில் வளர்ந்த பெண்ணாக சுஷி விளையாட்டு உடையுடன் கையில் டென்னிஸ் பேட்டை குறுக்கே வைத்துக்கொண்டு மற்றொரு கை அவன் தோள் மேல் இருக்க, அதே ஸ்போர்ட்ஸ் உடையுடன் அவனுடைய கை ஃபுட்பாலை வளைத்திருந்தது.
பின் இருவரும் சுற்றுலாச் சென்றிருக்கையில் கடற்கரையில் விளையாடும்போது எடுத்த படங்கள்.
ஏதோ வைபவத்தின் போது, அவள் அவன் சாப்பாட்டு இலையில் இருந்து ஏதோ எடுப்பது, அதை உண்பது போன்ற படங்கள்.
அவன் பள்ளிப் படிப்பு முடிந்து பட்டமளிப்பு விழாவில் இருவரும் பார்வதி மற்றும் விக்ரமுடன் எடுத்த படங்கள்.
மற்றொன்றில் அவன் தலைக் குனிந்து மண்டியிட்டு இருப்பதுபோல், அவள் அவனை ஆசிர்வாதம் செய்வதுபோல் ஒரு படம்.
அவனுடைய அகாடமி கேப் அவள் போட்டுக்கொண்டு, அவன் அவளின் தோள்சுற்றிக் கைபோட்டுக்கொண்டிருந்த படம்.
அந்தப் படமே கடைசிப் படமாக இருந்தது.
பார்த்து முடிந்தவுடன், அவனின் தோளின் மேல் சாய்ந்தாள்…
“ஏன் க்ரிஷ் நான் தான் லூசு உனக்குத் தெரியும். நான் ஏதோ பேசினேன்னு சொல்லிட்டு… என்கிட்டே பேசாம போய்டுவயா?”
“நம்ம ரெண்டுபேரும் அப்படியே இருந்துருந்தா, நான் இன்னிக்கி இப்படி இருந்துருப்பேனான்னு தெரில” என்று எண்ணிக்கொண்டு அவள் கண்கள் கலங்கின.
அவள் சாய்ந்தவுடன் அவனும் அவள் உச்சந்தலைமேல் சாய்ந்துகொண்டான்…
“உன்முகத்துல எவளோ சந்தோதம் எல்லாப் போட்டோஸ்’லயும்”
“நான் உன்கிட்டப் பேசி இருக்கனும் சுஷி. உன்னைப்பத்தி வேற யார்யார்கிட்டயோ தெருஞ்சுகிட்ட நான் உன்கிட்ட பேசியிருந்தா இப்போ உனக்கு இவளோ கஷ்டம் இருந்துருக்காமப் பாத்துருப்பேன்” என்று மனதுக்குள் வருத்தப்பட்டான்.
அவள் கையை மெதுவாக எடுத்து அவன் கைகளுக்குள் வைத்துக்கொண்டவன் “ஸாரி சுஷி” என்றான்.
அவள் சட்டென எழுந்து “எதுக்கு” என்று கேட்க “ஏதோ சொல்லணும்னு தோணிச்சு” என்றவுடன் மறுபடியும் அவன் தோள் மேல் சாய்த்துக்கொண்டாள் அவன் கையைப் பற்றிக்கொண்டு.
அவள் அருந்திய மது, பார்த்த அந்தப் படங்கள், தோள் சாயத் தோழன் அருகில் இருப்பது, அவளின் தனிமையை மறந்து அன்று அவளின் கண்கள் உறக்கத்தைத் தழுவியது எந்த மாத்திரையும் இன்றி.
அவள் உறங்குவதை உணர்ந்தவன் வெகுநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான் அவள் தூக்கம் கலையாமல் இருக்க.
அவன் மனதில் மருத்துவர் அவளை எப்படிப் பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னது ஓடிக்கொண்டே இருந்தது.