Marmi 4
Marmi 4
காவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
“ஒரே மாறி 3 கொலைகள் 3 தற்கொலைகள்..கொலை செய்யப்பட்டவங்க எல்லாமே பெரிய புள்ளிகள்..அதுல ஒருத்தர் எம்.பி..மேலிடத்துல இருந்து செம ப்ரஸ்சர்.சீக்கிரமா இந்த கேஸ முடிக்கணும்னு” சொன்னார் டி.ஜி.பி
“சார் இந்த கேஸ்ல இருக்க சில பாயின்ட்ஸ பாத்தோம்னா சதாசிவமும் அரவிந்தனும் XYZ கல்லூரிய சேர்ந்தவங்க அப்போ கொலைப் பண்ணவங்களுக்கும் XYZ கல்லூரிக்கும் எதாவது சம்மந்தம் இருக்கானுப் பார்க்கணும்னு” ஒருத்தர் சொன்னார்.
“அப்படி சம்மந்தம் இருந்தா அவங்களைக் கொலைப் பண்ண கார் டிரைவருக்கும் கந்துவட்டிக்காரருக்கும் என்ன சம்மந்தம்னு” கேட்டார் இன்னொருத்தர்.
“அப்போ எம்.பிக்கும் XYZ கல்லூரிக்கும் என்ன சம்மந்தம்.அவரை அவரோட மகனே எதுக்குக் கொலைப் பண்ணனும்னு” கேட்டார் இன்னொருத்தர்.
சூர்யா பேச ஆரம்பித்தார்…
“இந்த கொலையைப் பண்ணவங்க எல்லாம் அவங்களாவே தற்கொலைப் பண்ணிக்கிட்டாங்க அதும் ஒரே மாறி மாடியில இருந்து குதிச்சு… அதுமட்டுமில்லாமல் கொலைப் பண்ணப்பட்ட எல்லாம் ஒரே மாறி கை நரம்பு அறுக்கப்பட்டு இறந்துருக்காங்க…
எல்லாத்துக்கும் ஒரே சென்டர் பாய்ண்ட் ராஜேஷ்ங்குற பேரும் அப்புறம் அந்த இடமும் தான்…அந்த இடத்துல என்ன இருக்கு…அந்த ராஜேஷ் யாரு இந்த கேள்விகளுக்கு விடைத் தெரிஞ்சா இதுக்கு எல்லாத்துக்கும் விடைத் தெரிஞ்சிடும்..”
“சார் ஆனா அந்த இடத்துல வெறும் புதரா இருக்கு அதுமில்லாம ராஜேஷ்னு யாரையும் தெரியாதுனு அங்க இருக்கறவங்க சொல்றாங்களேனு” ஒரு அதிகாரி சொன்னார்.
“விடை எங்க கிடைக்குமோ அங்க தேடணும் சார்”…
“சதாசிவமும் அரவிந்தனும் XYZ கல்லூரிய சேர்ந்தவங்க அப்போ ராஜேஷ்ங்குற பெயருக்கும் XYZ கல்லூரிக்கும் எதாவது தொடர்பு இருக்கானு பாருங்க..அப்புறம் அந்த புதரான இடத்துல எதாவது கிடைக்குதானு தேடுங்கனு” சொன்னார் சூர்யா…
கல்லூரியில் விசாரணை நடத்தப்பட்டது…
“இங்க ராஜேஷ்னு நிறைய பேரு படிச்சுருக்காங்க சார்..இப்போ கூட நிறைய பேரு படிக்கறாங்க இப்படி ராஜேஷ்னு மொட்டையா கேட்டா எப்படி சார்னு” கேட்டார் கல்லூரி ஊழியர்..
ராஜேஷ் என்ற பெயரில் இருந்த அனைவரின் விவரங்களையும் விசாரித்தனர்.
அதில் ராஜேஷ்ங்குற ஒரு பையன் ஐந்து வருடத்திற்கு முன்னால படிப்ப பாதியில விட்டுட்டு போனதாக இருந்தது..அவனின் முகவரி கொலை நடந்த அந்த புதரின் முகவரியாக இருந்தது..இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்…
சூர்யா அந்த இடத்திற்கு சென்றார்…
அதே நேரத்தில் அந்த இடத்தை மோப்ப நாய்கள் மோப்பம் இட்டன.சிறிது நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுற்றி குரைத்தன.அந்த இடம் தோண்டப்பட்டது.
தோண்ட தோண்ட துருநாற்றம் வீச ஆரம்பித்தது…அதற்குள் ஒரு சடலம் எடுக்கப்பட்டது.அது மேலும் அதிர்ச்சியாக இருந்தது..
அதிர்ச்சிகள் தொடரும்……