tom and jerry 5

டாம் அண்ட் ஜெர்ரி.5

பார்த்திபனும் பாலாவும் சோபாவில் உட்கோர்ந்து டிவியில் கிரிக்கெட்  பாத்துக் கொண்டிருந்தனர்…அப்போது அங்கு வந்த ஜனனி சோபாவில் பார்த்தியின் அருகில் உட்கோர்ந்தவாரு பார்த்திபனின் கையில் இருந்த ரிமோட்டை புடிங்கி மியூசிக் சேனலை வைத்தாள்…

ஏய் எருமை ரிமோட்ட குடுடி….

அதலா முடியாது போடா இந்த கிரிக்கெட்ல அப்படி என்னத்தான்டா இருக்கு நீங்க ரெண்டு பேரும் மணிகணக்கா இதையே பாத்துப்போட்டு இருக்கிங்க???

அதுல என்ன இருந்தா உனக்கென்னடி எங்களுக்கு புடிச்சிருக்கு நாங்க பாக்கறோம் நீ உன்ற வேலையப்பாரு…

அக்கா குடுங்க  மேட்ஜ்  முடிஞ்சவுடனே குடுத்தப்போடறோம்  அதுக்கப்பரம் நீங்க எதுவேணாலும் பாருங்க நாங்க கேக்கவே மாட்டோம்…

நா ரிமோட்ட தரனும்னா ஒரு கண்டிசன் இருக்கு அதுக்கு பார்த்தி ஓகே சொன்னா நா தறேன் பாலா…

அதலா என்னால உன்னோட கன்டிசன்லாம் ஒத்துக்க முடியாது  போடி…

முடியாதுனா போடா நானும் ரிமோட்ட தரமாட்டேன்…

அண்ணா பிளீஸ்ண்ணா இன்னும் அஞ்சே ஓவர் தானுங்ண்ணா இருக்கு ஆரு ஜெயிக்கராங்கனு பாக்கோனும் அக்கா சொல்லரதுக்கு ஒத்துப்போட்டு ரிமோட்ட வாங்குங்ண்ணா….

பாலா இவளபத்தி உனக்கு தெரியாதாடா??எதாவது ஏடாகூடமாத்தான்டா செய்ய சொல்லுவா???

அண்ணா எனக்காக ஓகே சொல்லுங்ண்ணா..

சரி ஒத்துக்கறேன் நீ மொத ரிமோட்டக் குடுடி…

அஸ்க்கு புஸ்க்கு ரிமோட்ட வாங்கிப்போட்டு என்ன ஏமாத்திப் போடலாம்னு பாக்கரியா அதலா முடியாது. நா சொல்ரத செய்யறேனு சொல்லு அப்போதா தருவேன்….

உன்ற இம்சை தாங்கலடி சரி என்ன செய்யோனும்னு சொல்லு செஞ்சி தொலைக்குறேன்???

அவன் கையை பிடித்து இழுத்துச்சென்று பாலாவுக்கு கேக்காதவாறு சிறிது தூரம் சென்று நின்னுக்கொண்டு ராத்திரி ஒரு மணிக்கு நீ ஏங்கூட  வழுவுக்குள்ள  இருக்க உன்றக்கூட படிச்ச ரஞ்சித் வூட்டுக்கு வறோணும்???

ஒரு மணிக்கா அந்த நேரத்துல அவங்கவூட்ல  உனக்கென்னடி வேலை??

நா கார் ஓட்டிக் கத்துக்ரதுக்கு ட்ரைவிங் கிளாஸ் போறேன்ல அங்க அவனோட தம்பியும் வரான்…

அதுக்கென்ன??

மொத சொல்ரதக்கேளுடா…

நேத்து அவனோட தம்பிய கூட்டிப்போவ அவன் வந்துருந்தான் அப்ப அவங்கார்ல தெரியாம என்னோட வண்டிய மோதிப்போட்டேன் அதுக்குப்போய் என்ற வண்டிசாவிய புடிங்கி வச்சிப்போட்டான்டா…

இரு இரு அவனே புடிங்கி வச்சிப்போட்டானா இல்லை நீ சாவிய எடுத்து வைக்கர அளவுக்கு பேசுனியா???

ஹி ஹி கண்டுபுடிச்சிட்டாயாடா???

உன்னபத்தி  எனக்கு தெரியாதாடி…

அவன் என்னப்போய் சாரி சொல்ல சொல்ராண்டா அதுதா முடியாது போடானே கொஞ்சமே கொஞ்சம் திட்டினேன் அதுக்குப்போய் சாவிய எடுத்து வச்சிப்போட்டான் நா சாரி சொன்னாத்தா சாவி தருவானாம்???

ஆரு நீ கொஞ்சம் பேசுன இத நாங்க நம்போனுமாக்கும்…

சரி அதுக்கு அன்னேரத்துல போய் சாரி சொல்ல போறியாடி??

லூசாடா நீ?? சாரி சொல்ரமாதிரி இருந்துருந்தா நா மதியமே கேட்ருக்கமாட்டேனா?? சாரி கேட்டா என்னோட தான்மானம் என்னாகரது??

பொடலங்கா தன்மானம்  வாயில எதாவது வந்தரப்போகுது ஏன்டி தப்பு பண்ணது நீ அப்போ சாரி கேக்கரதுல எம்புட்டு குறஞ்சிப்போகப்போற???

சாரிலா என்னால கேக்கமுடியாது போடா??

சரி அப்போ எதுக்குதான் போகப்போறேனு சொல்லித் தொலை??

என்ற வண்டி சாவிய நாம ரெண்டுப்பேரும் திருட போறோம்…

என்னாது சாவிய திருடப்போறோமா???அடிங்க…ஓடிப்பொயிடு என்னபாத்தா உனக்கு திருடன் மாதிரியா தெரியுது???

பிளீஸ்டா நாவேர வண்டி பஞ்சர் கடைல வுட்ருக்கேனு மாமாக்கிட்ட பொய் சொல்லிப்போட்டேன் டா நாளைக்கு வண்டி எடுத்துப்போட்டு வரலைனா மாமா கேப்பாங்க…

அது உன்னோட பிரச்சனை அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை???

பார்த்தி மாமா எனக்காக இதக்கூட செய்யமாட்டிங்ளா???

இம்புட்டு நேரம் வாடா போடான இப்போ எப்படி மாமா வருது??நீ எம்புட்டுத்தா மரியாதை குடுத்தாலும் நா வரமாட்டேன் போடி….

என்ற மாமன் மகனே நா இன்னும் போட்டோவ டெலிட்பண்ணல…

என்னடி சொல்ர அதா நேத்தே நீ கேட்ட போன் வாங்கிப்போட்டு வந்து குடுத்தனே???

ஆமா ஆரு இல்லைனு சொன்னாங்க…ஏன்டா நீ இம்புட்டு மக்கா இருக்க நா எத சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா??….

ஒழுங்கு மரியாதையா அத டெலிட் பண்ணுடி இல்லைனா நா என்ன பண்ணுவேனே தெரியாது…

நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ ஆனா நைட் ஒரு மணிக்கு ரெடியா இரு…

பாலா இந்தா கேட்ஜ்   கையிலிருந்த ரிமோட்டை பாலாவை பார்த்து தூக்கிப் போட்டுவிட்டு  சென்றாள்…

அவள் சென்றதும் பார்த்திபன் பாலாவின் அருகில் வந்து உட்கோர்ந்தான்…

அண்ணா அக்கா என்ன சொன்னாங்க???

சொரக்காயிக்கு உப்பில்லைனு சொன்னா போடா நீ வேர கடுப்பேத்திட்டு இருக்க??

என்னாச்சுங்ண்ணா இம்புட்டு கோபமா இருக்கிங்க??

இன்னைக்கு நைட் ஒரு மணிக்கு நா அவக்கூட திருட போவோனுமாம்…

திருடவா எதுக்குங்ண்ணா???

ஏங்கூட படிச்சான்ல ரஞ்சித் அவங்கார இடிச்சது மட்டுமில்லாம அவங்கிட்டையே சண்டைக்கு போயிருக்கா அவன் பதிலுக்கு இவளோட வண்டி சாவிய புடுங்கி வச்சிப்போட்டான் போல அதுதா இப்ப போய் திருடிட்டு வறோனுமாம்…

அதுதா அப்பா கேட்டதுக்கு  பஞ்சர்னு பொய் சொன்னாங்லா??

ஹா ஹா அண்ணா அப்போ திருடப்போறோம்னு சொல்லுங்க?? …

ஏன்டா நீவே வயித்தெரிச்சல்ல கிளப்பர…

ஏனுங்ண்ணா வர முடியாதுனு சொல்ல வேண்டியது தானேங்ண்ணா…

நா அப்படித்தா சொன்னேன் அதுக்கு அவ அந்த போட்டோவ வச்சி மெரட்ரா பாலா…

நேத்து போன குடுத்துட்டு போட்டோவ டெலிட் பண்ணிப்போட்டு வரலைங்ளா?.

இல்லை பாலா அவளே பண்ணிப்போடறேனு சொன்னாலா அதா நானும் வந்துட்டேன்…

அட போங்கண்ணா நீங்க இம்புட்டு ஏமாளியா இருக்கிங்ளே உங்களுக்கு அக்காவ பத்தி தெரியாதுங்ளா??கையோட போனவாங்கி டெலிட் பண்ணிப்போட்டு வரத விட்டுப்போட்டு…

அவ இப்படி ஏமாத்துவானு நானென்ன கனவாக் கண்டேன் பாலா???

சரி அத விடுங்ண்ணா இப்போ நீங்க ரஞ்சித்த அண்ணா வூட்டுக்கு போகப்போறிங்ளா???

போவாம வேர என்ன பண்றதுடா போய்த்தா ஆவோனும்…

பாத்துங்ண்ணா மாட்டிக்காதிங்க இதுமட்டும் அப்பாவுக்கு தெரிஞ்சது உங்களுக்குதா திட்டுவிழும்…

ஆமாடா அதுவேர பயமா இருக்கு…

ராத்திரி ஒருமணி…

போர்வையை போர்த்தி முகம் தெரியாமல் பேய்முகம் வரைந்த மாஸ்க் போட்டு மறைத்தவாரு  ஒரு பெரிய உருவம் பார்த்திபனின் ரூமிற்குல் சென்றது…

அந்த உருவம் பார்த்திபன் தூக்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும் அங்கிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து அவன் மேலே ஊற்றியது….

தண்ணீர் பட்டதும் அலறியடித்துக் கொண்டு எழுந்த பார்த்திபன் அங்கு நின்றுக் கொண்டிருந்த உருவத்தை பார்த்து கத்தினான் ஐயோ பேய் பேய்… அவன் கத்தியாதும்   அந்த உருவம் அவன் வாயை மூடியவாரு ஏன்டா  இப்படி கத்ர போர்வையை விலக்கியவாரு  நாந்தான் என்றாள்…

ஏய் இம்சை இப்போ எதுக்குடி என்ற மேல தண்ணிய ஊத்தி நல்லா தூங்கிட்டு இருந்தவன எழுப்பின??

உன்றக்கிட்ட என்னடா சொன்னேன்???

அத கேக்கத்தா இப்படி நடுராத்திரில பேய்மாதிரி வந்து  எழுப்பினியாடி???

நா பேய் மாதிரியா இருக்கேன்??

சனியனே உன்ற உருவத்த கண்ணாடிலப்போய் பாரு…

அங்கிருந்த கண்ணாடியில் போய் தன்னைப்பார்த்தவள் ஆ ஆஆ.. என கத்தினாள்…

அடியே லூசு இப்போ எதுக்குடி கத்தி ஊரையே கூட்ர??? மொத இந்த வேசத்த எல்லாம் கலை பாக்க சகிக்கல??

போர்வையை எடுத்துப்போட்டு நைட்டியை  கழுட்ட போனவளை பார்த்ததும் அடியே எருமை என்னடி பண்ற… உன்ற ரூம்ல போய் ட்ரெஸ்ச மாத்திட்டு வா…

அட ச்சீ செத்த அமைதியா இருடா என்றவள் தான் போட்ருந்த ஒவ்வொரு நைட்டியாக கழுட்டினாள்…

அடப்பாவி என்னடி இது இத்தன நைட்டி போட்ருக்க???

எல்லாம் ஒரு சேப்டிக்காகத்தான் ஒருவேலை மாட்டிக்கிட்டோம்னா அடிபின்னிப் போடுவாங்கல அதுக்குத்தா இத்தானை நைட்டி…

அடி லேசா படும்னு என்னோட நைட்டிய போட்டு அதுக்குமேல அத்தையோட நைட்டியெல்லாத்தையும் எடுத்து வந்து போட்டுக்கிட்டேன்…

அடிப்பாவி உன்ன நம்பி வரதுக்கு எனக்கு தர்ம அடி வாங்கிவைக்காம விடமாட்ட  ….

இப்போ பேசலாம் நேரமில்ல  சீக்கரம் வாடா…

சரி போ வந்து தொலையறேன்…

இருவரும் ரஞ்சித் வூட்டுக்கு கொஞ்சம் தள்ளி வண்டியை நிறுத்திப்போட்டு வந்தனர்…

கேட் பூட்டிருக்கு எப்படி உள்ளப்போறதுடி…

திருடப்போறவங்க ஆராவது முன்வாசல் வழியா போவாங்கலாடா லூசு பேசாம வா…

ஏன்டி நானென்ன  திருடரதுக்கு ட்ரெயினிங்லாமா போயிருக்கேன்…

ப்போ பேசாம வரப்போறியா இல்லையாடா…

வந்த தொலையறேன் எல்லாம் என்ற தலையெழுத்து…

பின்புறம் வந்தவர்கள் காம்பௌன்ட் சுவர் அருகில் சென்றவள் பார்த்தி இங்க வந்து கொஞ்சம் குனியேன்…

எதுக்குடி??

சொல்ரத செய்டா…

பார்த்தி குனிந்ததும் அவன் மேல் ஏறி காம்பௌன்ட் சுவரின் மேல் உட்கோர்ந்தவாரு பார்த்தி சீக்கரமா மேல ஏறிவாடா சொல்லிக்கொண்டே அந்தபக்கம் குதித்தாள் …

இதுக்குத்தா என்ன குனிய சொன்னியாடி உன்ன வூட்டுக்குப்போய் வச்சிக்குறேன் என்றவன் அவனும் சுவரின் மேல் ஏறி  அந்தபக்கம் குத்தித்தான்…

பார்த்தி ரஞ்சித் வூட்டுக்கு நீ வந்துருக்கத்தானே அவன் ரூம் எதுனு சொல்லு??

நாம அவனோட ரூம்க்கு நேராதா கீழதா நின்னுப்போட்டு இருக்கோம்…

சரி அப்போ என்ற பின்னாடியே வா என்றவாரு முன்னாள் சென்றவள்  அங்கிருந்த வேப்பமரத்தின் அருகில் வந்ததும்  இந்த மரத்துமேல ஏறுனா அவனோட ரூம் பால்கனி வரைலும் கிளைப்போகுது அதுல இருந்து பால்கனிக்கு தாவிடலாம்…

ஏய் ஜானு ஆராவது பாத்தாங்க கட்டிவச்சி தோல உரிச்சிப்போடுவாங்க வேணாம் ஜானு வா நாம திரும்ப வூட்டுக்கே போயிடுவோம் காலைல நானே ரஞ்சித்துக்கிட்ட மன்னிப்புக்கேட்டு உன்ற சாவிய வாங்கித்தறேன்…

பார்த்தி பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்கும்போதே ஜானு மரத்தில் ஏறி கிளையிலிருந்து பால்கனியின்   சுவற்றை தாவி பிடித்தவாரு திரும்பி பார்த்தவள் பார்த்தி மேலேறாமல் கீழையே நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவள் டேய் அங்க என்னடா தனியா நின்னு பொழம்பிட்டு இருக்க மேல ஏறிவாடா…

அடியே எரும நா இங்க பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு மேல ஏறிப்போர…

எல்லாம் என்ற அப்பாவ சொல்லனும் பொட்டப்புள்ளை மாதிரியா வளர்த்து வச்சிருக்கராரு கொரங்கு மாதிரி மரத்துக்கு மரம் தாவுது..எல்லாம் ஏங்கெரகம்  என அவளை திட்டிக்கொண்டே மரத்தில் ஏறினான்…

பார்த்தியும் ஜனனியின் பின்னாள்  மரித்திலிருந்து பால்கனியில் குதித்த்தான்…

ஜானு அங்க பாத்தியா ரஞ்சித்தோட  ரூம் பால்கனிக் கதவு திறந்துருக்கு அவன் முழிச்சிருந்தாலும் இருக்கலாம் வா போயிடலாம்…

அடிச்சீ எதுக்குடா இப்படி பயந்து சாகர நடுசாமத்துல ஆராவது தூங்காம இருப்பாங்கலாடா..அவன் தூக்கத்துல

கதவை மூட மறந்துருப்பான்…இப்ப இதுவும் நமக்கு நல்லதா போச்சி ஈசியா உள்ளபோய் சாவிய எடுத்துப்போட்டு வந்தரலாம்…

ஏ நடுசாமத்துல நாம ரெண்டுபேரும் தூங்காம பேய்மாதிரி ஒலாத்துலையா?? அந்தமாதிரி ஒருவேலை தூக்கம்வராம அவனும் முழிச்சிருந்தா என்னபண்ணுவடி???

பார்த்தியும்,ஜனனியும் மெதுவாக ரஞ்சித்தின் ரூம்க்குள் காலெடுத்து வைத்து உள்ளே சென்றனர்…

இவர்கள் உள்ளே சென்றதும் ரூம் கதவு தாழிடப் படும் சத்தம் கேட்டு பயந்துப்போய் அப்படியே நிற்கும்போதே   லைட் ஆன் ஆனதும் போச்சி மாட்டிக்கிட்டோம்டி நாளைக்கு காலல நாம ரெண்டு பேரும்தா முக்கிய செய்தியே…

பாத்துக்கலாம் விடுடா??

அடியேய் நாம இருக்க நிலமை நியாபகம் இருக்கா இல்லையா??பயமே இல்லாம பேசர…

பார்த்தி பொழம்பிக் கொண்டிருக்கும் போதே வாங்க நீங்க வருவிங்கனு எம்புட்டு நேரம்தா முழிச்சிருக்கரது சரி இனி வரமாட்டிங்க போலனு  நினச்சி தூங்கவே போயிட்டேன்… வா பார்த்தி..வா ஜானு என்றவாரு அவர்கள் முன்னாள் போய் நின்றான் ரஞ்சித்…

அந்த வூரில் கிருஷ்ணன்,சந்திரன் குடும்பத்தைப் போன்றே மிகவும் செல்வாக்கான குடும்பத்து மூத்த வாரிசு ரஞ்சித்தின் அப்பாவும் ட்ரான்ஸ்போர்ட்,விவசாயமும் செய்துக் கொண்டிருக்கிறார்…அவருடைய தொழிலை இப்போது ரஞ்சித் பார்த்துக் கொண்டிருக்கிறான்…எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத நம்ம பார்த்தி மாதிரியே நல்லபையன்…

சாரிடா ரஞ்சி இவதா நா சொல்ரத கேக்காம என்ன இழுத்துப்போட்டு வந்துட்டா…

எனக்கு தெரியாதாடா ஜானுவ பத்தி ஸ்கூல் படிக்கரப்பல இருந்து பாத்துட்டுத்தானே இருக்கேன்…

சரி நின்னுட்டே இருக்கிங்க ரெண்டுபேரும் வந்து உட்காருங்க…

நாங்க ஒன்னும் உன்ற வூட்ல உட்கோர வாரல என்ற சாவியக்குடு நாங்க போயிட்டே இருக்கோம்…

நீ சாரிகேட்டு சாவிய வாங்கிட்டு போயிட்டே இருக்கலாம் ஜானு…

அதலா முடியாது போடா…

ஜனனி ரஞ்சித்த மரியாதையா பேசு உன்னவிட வயசு மூத்தவன் முதல்ல சாரிக்கேளு…

விடு பார்த்தி ஜானு சின்ன பொண்ணுதானே அவளுக்கு எப்படி கூப்டனுமோ அப்படியே கூப்டட்டும் அதுல எனக்கொன்னும் பிரச்சனை இல்லை…

நீங்க ஒன்னும் விட்டுத்தரவேனாம்… சாரி இது நா மரியாதை இல்லாம பேசுனதுக்கு… வாங்க மாமா போலாம் பார்த்தியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்…

ஏய் ஜானு இரு சாவிய வாங்கிப்போட்டு போலாம்…

ஒன்னும் வேணாம் வாங்க மாமா…

ஏன் ஜானுவுக்கு ரஞ்சித் மேல இம்புட்டு கோபம்னு யோசிக்குரிங்ளா?? பார்த்தியும்,ரஞ்சித்தும் படிச்ச ஸ்கூல்லதான் ஜனனியும் படிச்சா அப்போ பார்த்திய பாக்கப் போரப்ப எல்லாம் ரஞ்சித்து அந்த வயசுக்கே உண்டானா குரும்புதனுத்துல அவள சீண்டிவிட்டு அழுகவச்சி போடுவான் அதனாலையே ஜானுவுக்கு ரஞ்சித்த கண்டாவே ஆகாது அதுதா மேடம் ரஞ்சித்த எங்க கண்டாலும் வேணும்னே வம்பிழுப்பா நேத்தும் அவன் கார்னு தெரிஞ்சே வண்டியக் கொண்டுப்போய் இடிச்சிட்டா..அவன் சாரி கேக்க சொன்னதுக்கும் கேக்காம வந்துட்டா…