Maya 18

Maya 18

மாயநதிச்சுழல்

சுழல்-18

இதுவரை:

சுரபியிடம் எந்த சலனமும் இல்லை. ஆனால் அவள் தலை மேல் கீங் கீங் என்று சத்தம் செய்து கொண்டிருந்த கருவி, ஒரு நொடி நின்று, பின் பலமாக துடிக்கத் துவங்கியது. சுரபியின் இதயத்திற்கு தான் கூறியது புரிந்து போன மகிழ்ச்சியில், சுரபியின் நெற்றியில் மெல்லமாக இதழ்களைப் பதித்தவன், சில நொடி நின்று அவளின் முகத்தை உள்வாங்கிக் கொண்டு அவ்விடம் விட்டுச் சென்றான்.

இனி:

அடுத்து வந்த இரண்டு நாட்களுமே அமுதாவிற்கு எப்படி கழிந்தது என்று அறியா வண்ணம் சடுதியில் சென்றிருந்தது.மதிமாறன் அலுவல்களைக் காண காலையில் சென்றால் திரும்பவும் மருத்துவமனை வந்து சேர இரவானது. ஆனால், இடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் அமுதாவின் கைப்பேசிக்கு அழைத்து விசாரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டான்.

இரவு முழுக்க மருத்துவமனையிலேயே உறங்கி எழுந்தான். ஒரு தினம் கழிந்ததும் சுரபி கண்விழித்தாள். கன்கஷன் நீங்கியிருந்தது. ஐ.சி.யுவில் இருந்து வார்டிற்கு மாற்றி விட்டனர். அதிகம் பேசாவிடினும், அக்கா தன்னுடன் இருப்பதை பெரும் பலமாக உணர்ந்தாள். அதைவிடவும் மதிமாறன் நடந்து கொண்ட முறையைத் தான் சுரபியால் நம்ப இயலவில்லை.

இரவு முழுக்க, மருத்துவமனையின் அறையிலேயே அமர்திருந்தவன், சுரபியைக் கண்ட போதெல்லாம் தவறாது புன்னகை சிந்தினான். சுரபிக்கு ஆச்சகர்யமாக இருந்த போதும், மனம் நிம்மதியில் ஆழ்ந்தது. அவன் இல்லாத பகல் வேளையில், அமுதாவிடம் மெல்ல பேச்சு கொடுத்தாள் சுரபி.

“அக்கா….மதிகிட்ட நம்மளைப் பத்தி சொன்னியா?”

“அதெல்லாம் எதுக்கு இப்போ…நீ நல்லா ரெஸ்ட் எடு மொதல்ல…வளவளன்னு பேசாத”

“சொல்லுக்கா….ப்ளீஸ்”

“ஆமா, சொன்னேன்….சிலோன் அகதிங்க….அதனால தான் போலீஸ்னதும் கொஞ்சம் மிரண்டோம்னு சொன்னேன்… அதனால என்ன இப்போ…நீ தூங்கு சுபி…”

“சொல்லாமை இருந்திருக்கலாம்கா…இப்போ அவனுக்கு என் மேல பரிதாபம் வந்திருக்கும். பார்க்கற பார்வையிலையே “ஐயோ பாவம்ன்னு” அவன் மனசு நினைக்கறதை என்னால சகிச்சுக்க முடியலை…கண்ணுல ஒரு மாதிரி கனிவு தெரியுது. இது ரெண்டு நாள் முன்னாடி இல்லை…அப்போ அவன் கண்ணில கொஞ்சமே கொஞ்சம் காதல் இருந்த மாதிரி இருந்துச்சே தவிர, பரிதாபம் இல்லை..”

“அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்…இப்பவே என்னத்துக்கு இதெல்லாம்”

“அவனை போக சொல்லிடு….இங்க வரவேண்டாம்னு சொல்லிடு….சும்மா சும்மா என்னை பட்சாதாபட்டு பார்க்கவேண்டாம்னு தெளிவா சொல்லிடு..”

“சரி..சொல்லறேன்…இப்போ தூங்கு”என்று அமுதா முடிந்த வரையில் சுரபியை சமாதானப்படுத்தி உறங்கச் செய்தாள். மருந்தின் வேகத்தில் சுரபி உறங்கிய பின்னர், அவள் சொன்னதை மெல்ல அசைபோட்டவண்ணம் அறையில் அமர்ந்திருந்தாள். சுரபி கூறியதை நினைத்த போது சிரிப்பாக இருந்தது அமுதாவிற்கு.

“பைத்தியக்காரி…அவனை போக சொல்லவா, ரிஸ்க் எடுத்து அவங்கிட்ட நம்மளைப் பத்தி சொன்னேன். பார்க்க நல்லவனா இருக்கான், குடும்பம் நல்லது. இவங்கிட்ட உன்னை சேர்த்திடனும்னு எவ்வளவு யோசிக்கறேன். அவனுக்கு உன்மேல காதல் வரணும்னு ஆசைப்படறேன்..இவ என்னடான்னா, அவனை போக சொல்லலுன்னு சொல்லறா….”என்று உறங்கும் தங்கையைப் பார்த்துக் கொண்டே முனுமுனுத்தாள் அமுதா. அமுதாவைப் பொறுத்தவரையில் அவள் செய்வதில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. சுரபி, மதிமாறனை விரும்புகிறாள் என அமுதாவிற்கு ஐயமில்லாமல் புரிந்தது. நேற்றுப் பேசியதில் இருந்து, மதிமாறனுக்கும் சுரபியின் மேல் பிரியம் இருக்கிறது என்பதும் கண்கூடத் தெரிகிறது.

“கொஞ்சம் முயற்சி பண்ணி, ரெண்டு பேர்த்துக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டா என் கடமை முடியும்…மதிமாறனோட அப்பா அம்மா எப்படி பட்டவங்களோ..சுரபியை ஏத்துகுவாங்களா? அவங்க நினைக்கறதை விட சிறப்பா சீர், நகை எல்லாம் செய்யணும்…சுரபியை வேண்டாம்னு சொல்ல ஒரு காரணம் கூட இருக்கக் கூடாது.” என்று பலவும் மனதில் நினைத்தபடிக்கே அன்றைய பொழுதைக் கழித்தாள்.

அன்றைய தினம் மாலை, சுரபியின் விபத்து பத்தி கேட்டறிய, சிருஷ்டி பள்ளியில் இருந்து சில ஆசிரியைகள் வந்திருந்தனர். சுரபியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்ததை விடவும், விபத்து எப்படி நடந்தது என தெரிந்து கொள்வதிலேயே அதிக ஆர்வம் இருந்தது.

“அந்த நேரத்தில் ஈ.சி.ஆர்க்கு நீ எப்படி போன? தனியாவா போன?” இந்த ரீதியில் கேள்விகளை தொடுத்துக் கொண்டிருந்த அறிவியல் ஆசிரியையின் விசாரிப்புகள் சுரபிக்கு ரசிக்கும் வண்ணம் இல்லை. சுரபி பதில் சொல்ல தடுமாறுவது தெரிந்து, அமுதா உதவிக்கு வந்திருந்தாள். “சுபிம்மா ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரில்ல…ரெஸ்ட் எடும்மா…”என நாகரீகமாக வந்திருந்தவர்களை அவ்விடம்விட்டு அப்புறப்படுத்த முற்பட்டாள். அந்த முயற்சிக்கு பலனும் கிடைத்திருந்தது.

ஆசிரியைகள் கிளம்ப எத்தித்த சமயம், வெறும் வாய்க்கு அவலாக மதிமாறன் வந்து சேர்ந்தான். அறையினுள் உள்ளே நுழைந்தவனையும், சுரபியையும் மாற்றி மாற்றி பார்த்தவண்ணம், தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டு ஆசிரியைகள் படை விடை பெற்றுச் சென்றது. அமுதா மருத்துவமனையின் பில் மற்றும் காப்பீடு சம்பந்தமாக விசாரித்து வர சென்றுவிட, மதிமாறன் ஆயசமாக சுரபியின் அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு, கால்களை அகல் நீட்டி அமர்ந்தான்.

“இப்போ எப்படி இருக்கு? மோஸ்டிலி நாளைக்கு டிஸ்சார்ஜுனு சொல்லியிருக்காங்க..”

“ம்ம்ம்”என்று மட்டுமே சுரபியால் பதிலளிக்க முடிந்தது. அவளது மனம், மதிமாறன் சிந்தும் இந்த புதிய நேசத்தை ஏற்கமறுத்தது. பரிதாபத்தினால் வந்த காதல் தனக்குத் தேவையில்லை என்று நினைத்தாள். மனதின் எண்ணங்களை ஓரளவிற்கு முகத்திலும் படரவிட்டாள். சுரபியின் முகச் சுருங்கலைக் கண்டவன், உடலில் மேலும் ஏதோ உபாதை என்றே அர்த்தம் கொண்டான்.

“எதாவது பண்ணுதா சுபி..தலை வலிக்கறாப்ல இருக்கா? கால்ல பெயின் இருக்கா…வலி இருந்தா கஷ்டப்பட்டு தாங்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்கள்ள….சொல்லும்மா…எங்கையாவது வலிக்குதா?”

“இல்லை…ஆனா..” சுரபியின் மனம் ஒரு நிலையினை அடைந்திருந்தது. மனதிற்குள் ஒரு முடிவெடுத்திருந்தாள். அதை அமுதா அக்கா வரும் முன்னர் நிறைவேற்றிவிட வேண்டும் என்று ஆவலும் கொண்டாள்.

“சொல்லுமா..” என சுரபி ஏதோ சொல்ல வருவதைக் கண்டு, நாற்காலியில் எழுந்து நன்றாக அம்ர்ந்து கொண்டு வினவினான் மதிமாறன்.

“நீங்க ஏன் இங்க வந்தீங்க?” என சுரபியின் கேள்வியை மதிமாறன் எதிர்பார்க்கவில்லை.

“என்ன?”

“ஏன் இங்க வந்தீங்க? தினமும் ஏன் வர்றீங்க?” என்றாள் குழப்பமற்ற தெளிவான குரலில்.

“உன்னைப் பார்க்க”என பதிலளித்த மதிமாறனின் குரல் அனியாயத்திற்கும் குழம்பியது. என்ன பேசுகிறாள் எனத் தெரிந்து பேசுகிறாளா? அல்லது தலையில் கவலைக்கிடமாக ஏதேணும் அடிப்பட்டிருக்குமா? என பலவாறு சிந்திந்தான்.

“அதான் ஏன்னு கேட்கறேன்”என சுரபி மீண்டும் அதே கேள்வியை மொழிய, இந்த முறை நிஜமாகவே மதிமாறன் பயந்து போனான். கீழே விழுந்ததால் தலையில் ஏற்பட்ட காயம் பலமாக உள்ளே தாக்கியிருக்க வேண்டும் என நம்பினான். நாற்காலியில் இருந்து எழுந்தவன், கட்டிலில் தலையணையின் உதவியுடன் சாய்வாக அமர்திருந்தவளின் அருகில் சென்று நுனியில் அமர்ந்தான்.

“சுபி, நீ ஏன் இப்படியெல்லாம் பேசறன்னே புரியலை. ஏதோ பெருசா அடிபட்டிருக்குன்னு நினைக்கறேன். ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்திடறது நல்லதுன்னு தோணுது..”என்று சொல்லிக் கொண்டே அவளது கைகளின் அருகில் தனது விரல்களை கொண்டு சென்ற போது, சுரபி சட்டென அவளது கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். முகத்தில் ஒரு கோபமும் அதைவிடமு சிறிய அருவருப்பும் மிளிர்ந்ததைக் கண்டு மதிமாறன் கையை எடுத்துக் கொண்டான்.

“எனக்கு இப்போ பைத்தியம் பிடிச்சிருக்குன்னு சொல்லறீங்களா?”என அடிக்குரலில் வினவியவளை வித்யாசமாகப் பார்த்தான். இவ்வளவு தினம் தான் கண்ட, காதலுற்ற சுரபிக்கும், இப்போது தன் கண்முன்னால் படுத்திருப்பவளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. மனம் கண்டதையும் நினைத்து குழம்பித் தவிக்க, மதிமாறன் என்ன பேசுவது என்று அறியாமல் நின்றிருந்தான்.

மதிமாறனின் முகச் சுருக்கத்தை சுரபி உணர்ந்தவள் போல், குரலை நிதாமாக்கிக் கொண்டு தொடர்ந்து பேசினாள். “இத பாருங்க மதிமாறன், என்னால உங்களுக்கு வீண் சிரமம் வேண்டாம். என்னை ஹாஸ்பிடல் கொண்டு வந்து சேர்ந்து, அக்காவை வரவழைச்சு நிறைய உதவி செஞ்சிட்டீங்க…அதுக்கு நாங்க உங்களுக்கு கடமைப் பட்டிருக்கோம். நீங்க செஞ்ச உதவிகளே போதும். இனி அக்கா பார்த்துக்குவாங்க…சோ, நீங்க தினமும்வந்து என்னப் பார்க்கனும்னு அவசியம் இல்லை…”என மெங்குரலில் மொழிந்தாள். மதிமாறனுக்கு சுரபி என்ன சொல்ல வருகிறாள் என்பது தெளிவாகப் புரிந்தது.

“மூடிட்டு உன் வேலையை மட்டும் பாருடான்னு” நல்ல விதமா சொல்லறா என மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான். சுரபி இருந்த மனநிலையில், இப்போது எது கூறினாலும் அவளுக்குப் புரிபடப்போவதில்லை என தெளிவாக விளங்கியது. எனவே, முடிந்த மட்டிலும் முகத்தில் அதிர்ச்சி ரேகைகளை பிரதிபலித்தவன், சட்டென எழுந்து கொண்டான். வார்த்தைகளால் பேசி புரியவைக்க இயலாத பலவிஷயங்கள், மெளனங்களாலும், பிரிவினாலும் புரியும் என மதிமாறனுக்கு விளங்கியது.

கண் இமைக்காமல் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தை உற்று நோக்கியவன், “டேக் கேர்”என்று மட்டும் மொழிந்தன. மேஜையின் மேல் வைத்திருந்த தனது கைப்பேசியை மட்டும் எடுத்துக் கொண்டு அறையினைவிட்டு விடுவிவென வெளியேறினான். சுரபி மதிமாறனின் இந்த செயலை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ஏதேணும் திரும்ப பேசுவான். தன்னிலை விளக்கம் கூறுவான். புரியவைப்பான் என மனதின் மூலையில் எழுந்த சிறிய எதிர்ப்பார்ப்பு தவிடுபொடியானது.

“எப்படா கிளம்புவோம்னு காத்திருந்தவன் மாதிரி, உடனே போயிட்டான் அமுதாக்கா”என மதிமாறன் சென்ற சிறிது நேரத்தில் திரும்பி வந்திருந்த அமுதாவிடம் நடந்தவைகளை விளக்கும்  போது சுரபி மொழிந்தாள். அமுதாவிற்கு தன் தங்கையின் மனநிலையினை எண்ணி சிரிப்பு எழுந்தது. அவனாக பேசவரும் போது”வேண்டாம் சென்றுவிடு”என்கிறாள். அவன் சென்ற பிறகோ,”ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டானே”என புலம்புகிறாள். இதெல்லாம் என்னவென்று சொல்வது என மனதிற்குள் நினைத்து நெகிழ்ந்தாள். எப்பாடுபட்டும் மதிமாறனை சுரபிக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

மருத்துவமனையில் போகும் முன்னர், தன்னை சந்தித்து மதிமாறன் பேசிச் சென்ற விஷயங்களும் மனதில் வந்து போயின. சுரபியின் புலம்பல்களுக்கு பதிலேதும் சொல்லாமல், தனது எண்ணங்களுடன் மூழ்கிப் போனாள் அமுதா.

அடுத்த இரண்டு தினங்களில் சுரபியை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பிவிட முடிவெடுத்திருந்தனர். சுரபியிடம் பேசிச் சென்ற பின் மதிமாறன் இரு தினங்களும் மருத்துவமனைக்கு வரவில்லை. “இப்போ எப்படி இருக்கா? மாத்திரை சாப்பிட்டாளா?”என காலையும் மாலையும் அமுதாவிற்கு அழைத்து விசாரித்துக் கொண்டான். சுரபியிடம் இது பற்றி சொல்லவேண்டாம் என வலியுறுத்தியிருந்ததால் அமுதா மதிமாறனின் விசாரிப்புகள் குறித்து தங்கையிடம் பகிர்ந்துகொள்ளவில்லை. இரண்டு தினங்களும் சுரபியிடம் தெரிந்த முகம் மாறுதல்களை கூர்ந்து கவனித்தவண்ணம் இருந்தாள் அமுதா.

கதவுகள் திறக்கப்படும் போது ஆர்வமாக பார்ப்பதும், கைப்பேசியை அடிக்கடி எடுத்து செய்தி வந்துள்ளதா என சோதிப்பதும், அமுதாவின் கைப்பேசிக்கு வரும் அழைப்புகளை கூர்ந்து கவனிப்பதும்,”யாரு ஃபோன்ல”என விசாரிப்பதும் என சுரபி, மதிமாறன் இல்லாத இந்த இருதினங்களில் அவனை வெகுவாக தேடத்துவங்கியிருந்தாள் அமுதா எதிர்ப்பார்த்ததும் இதுவே என்பதால் பட்டும்படமால் பதில் சொல்லி சுரபியின் ஆர்வத்தை அணைந்து போகாமல் அவ்வப்போது எண்ணை வார்த்துவந்தாள்.

அன்றைய தினம் மதியம் டிஸ்சார்ஜ் என மருத்துவர் தெரிவித்துச் சென்றிருந்தார். உரிய பில் தொகையினை செலுத்தி ரசிதுகளையும், தேவையான மருந்து மாத்திரைகளையும் அமுதா வாங்கிவந்துவிட்டிருந்தாள். மதிமாறனுக்கு முந்தினமே கைப்பேசியில் செய்தி சொல்லியிருந்தபடியால் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டிருந்தான்.

“லேட் ஆகிடுச்சா”என கேட்டுக் கொண்டே மருந்துவரிடம் இருந்து டிஸ்சார்ஜ் சம்மரி வாங்க காத்திருந்த அமுதாவிடம் வினவினான். “சம்மரி வாங்கினதும் கிளம்பறது தான்..அப்பறம் நான் சொன்ன விஷயம்…”என மதிமாறனிடம் அமுதா நினைவூட்ட அவன் மென்மையாக சிரித்தான், “நான் பார்த்துக்கறேணு சொன்னேனே…” என்றான் சிரிப்பினூடே. “இல்லை…ஹோட்டல் இங்க இருந்து தூரமா? ஹாஸ்பிடலுக்கு கொஞ்சம் பக்கமா இருக்கணும்…ஏன்னா இன்னும் மூனு நாள் கழிச்சு செக் கப்க்கு வரசொல்லியிருக்காங்க…”

“நான் பார்த்துக்கறேங்க….வாங்க” என செவிலியர் கொண்டு வந்து சமர்பித்த டிஸ்சார்ஜ் சம்மரியினைப் பெற்றுக் கொண்டு சுரபியின் அறையினை நோக்கி நடந்தான். சுரபி கொஞ்சம் தெம்புடன் கட்டிலில் அமர்ந்து அக்காவின் வருகைக்காக காத்திருந்தாள். கதவினைத் திறந்த மதிமாறனைக் கண்டு கண்களை அகலமாக விரித்தவள், முன் சந்திப்பில் வரதே என திட்டவட்டமாக கூறிய வார்த்தைகளை நினைவில் கொண்டு வந்து நிறுத்தி, முறுவலிப்பதில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டாள்.

மதிமாறனும் முகத்தில் பெரிதாக எந்த உணர்வுகளையும் காட்டிக் கொள்ளவில்லை. மறந்தும் கூட “உடம்பு எப்படி இருக்கு?”என சுரபியிடம் விசாரிக்கவில்லை. “திங்ஸ் எல்லாம் எடுத்தாச்சாங்க? வெளிய டாக்ஸி ரெடியா இருக்கு..”என அமுதாவிடம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவனைக் கண்டு சுரபி வெகுவாக எரிச்சல் கொண்டாள். “நான் இங்க ஒருத்தி குத்துகல்லு மாதிரி இருக்கேனே…எப்படி இருக்க சுரபி? கால் வலி எப்படி இருக்குன்னு ரெண்டு வார்த்தை கேட்டா குறைஞ்சா போயிடும்?” என முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டே மனதிற்குள் திட்டித் தீர்த்தாள். மருத்துவமனையின் வாசல் வரை சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்த போதும், நாற்காலியில் இருந்து காத்திருந்த டாக்ஸியில் அமுதாவின் துணையுடன் ஏறி போதும் கூட, சுரபிக்கு அடுத்து எங்கே செல்கிறோம் என்ற கேள்வி உதிக்கவில்லை.

மதிமாறன் அவனது வண்டியில் முன்னே செல்ல, டாக்ஸி பிந்தொடர்ந்தது. இருபது நிமிட பயணத்தில், ஒரு கோவிலில் பின்பக்க சுற்றுச்சுவரைக் கொண்ட நீண்ட தெருவிற்குள் நுழைந்து அந்த பழமையான வீட்டின் வாயிலில் சென்று டாக்ஸி நிற்கும் வரையிலும், அமுதாவும் சுரபியும் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தனர்.

“இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு”என டாக்ஸியின் கண்ணாடி அருகில் கைகளை ஊன்றியபடிக்கு மதிமாறன் மொழிய, அமுதாவுமே சற்று ஸ்தம்பித்துப் போனாள்.

“இது ஹோட்டலா? நேம் போர்ட் கூட இல்ல..” என காரின் கதவினைத் திறந்தபடிக்கு கீழே இறங்கிய அமுதா வினவ, மதிமாறன் மையமாகப் புன்னகைத்தான்.

“இது என்னோட வீடு..மேல மாடி போர்ஷன்…இங்க தங்க உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காதுன்னு நினைக்கறேன்” என மதிமாறன் அமுதாவின் ஒப்புதலுக்காக காத்திருக்க, அமுதா தோளை சின்னதாக குலுக்கிக் கொண்டு கண்களை உருட்டினாள். அவளது பார்வை காரினுள் அமர்ந்திருந்த தங்கையிடம் படர்ந்து மீண்டது. மதிமாறன் புரிந்து கொண்டவன் போல, கதவினைத் திறந்து, “சுரபி…”என விழிக்கும் முன்னர், “இது என்ன இடம்?”என சற்றே கோபத்துடன் வினவினாள்.

 

error: Content is protected !!