megadhootham6

megadhootham6

                                      மேகதூதம் 6

 

ரிஷி வழக்கம் போல தனது டெஸ்லாவை வேகமாகச் செலுத்தியபடி பார்க்கிங்கில் வந்து  நிறுத்தினான்.
அந்த பெரிய காம்ப்ளெக்ஸில் நான்காவது ப்ளோரில் அவனது அலுவலகம் இருந்தது.
கனடாவில் ஐந்து முக்கிய இடங்களில் இருக்கும் இந்திய கடைகளுக்கும் காய்கறிகள் உள்பட மற்ற அனைத்து விதமான மளிகை பொருட்களும் ரிஷி தான் இறக்குமதி செய்கிறான்.
மற்ற நாடுகளை விட இங்கே அவனுக்கு நிறைய ஆர்டர் கிடைக்கவே அவனது தலைமை அலுவலகமாக கனடாவை அமைத்துக் கொண்டான்.

எந்தெந்த நாட்டுக்கு எப்போது சரக்கு அனுப்ப வேண்டும், எவ்வளவு அனுப்ப வேண்டும். சரக்கை தனக்கு இந்தியாவிலிருந்து அனுப்புபவர்களிடம் தொடர்பு கொள்வது , ஏதாவது ஒன்று தாமதமானால் அதை சமாளிப்பது என்று அனைத்து வேலைகளும் இங்கே அவன் ஆட்களை  நியமித்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ஒரு மினி கஸ்டமர் கேர் என்றே சொல்லலாம்.

புது ஆர்டர்கள், அங்கிருக்கும் முதலாளிகளிடம் தொடர்பு இவற்றை மட்டும் அவன் கவனித்துக் கொள்வான்.
சின்ன சின்ன பிரச்சனைகளை அவனது வேலையாட்கள் சமாளித்து விடுவார்கள். பெரிய லெவெலில் இருப்பதை மட்டும் இவனது கவனத்திற்கு கொண்டுவருவார்கள்.

இருந்தாலும் அவ்வப்போது என்ன நடக்கிறது என்பதை அவன் கவனித்துக் கொண்டு தான் இருப்பான். யாரும் எந்த விதத்திலும் தன்னை  ஏமாற்றி விடமால் பார்த்துக் கொள்வான்.
தந்தையையும் தன்னையும் ஏமாற்றிய ஒருவரிடமிருந்து கற்ற பாடம் அது. 

அவனது செகரெட்ரி அவனுக்காக வாசலிலேயே காத்திருந்தாள். முட்டி தெரியும் அளவு உள்ள ஸ்கர்ட் மற்றும் அதற்கு ஏற்றார் போன்ற கோட் உள்ள மேலாடை அணிந்து டீசண்டாக உடை அணிந்திருந்தாள்.

அந்த ஊருக்கு அது தோதான உடையே! அவளும் அழகியே! மற்ற ஆண்கள் கண்ணில் அழகாய்த் தெரியும் அவள் ஏனோ ரிஷியின் கண்களுக்கு இன்றுவரை தெரியவில்லை.

அவளை ரிஷி காரியதரிசியாக மட்டுமே பார்ப்பான். அவனைக் கவர அவளும் முயற்சி செய்ததுண்டு. இருந்தாலும் இவன் அசைந்த பாடில்லை.

புயல் வேகத்தில் வந்தான்.

“எவரிதிங் ரெடி?” நேரே உள்ளே சென்றான்.

“எல்லாரும் ரெடியா இருக்காங்க பாஸ். நீங்க வந்ததும் எல்லாரும் போகலாம்னு வெய்ட் பண்றாங்க.” ஷில்பா ஓட்டமும் நடையுமாக அவனைப் பின் தொடர்ந்தாள்.

“அவங்கள லஞ்ச்க்கு அனுப்ப வேண்டியது தான. எதுக்கு வெய்ட் பண்ணனும்”

“அது பாஸ்..” அவள் பதில் சொல்லும் முன்னே அனைவரும் அவனை வாயிலில் கைத்தட்டலுடன்  வரவேற்க, சிறிய புன்னகையுடன் எதிர்கொண்டான்.

“ஹாப்பி சென்கன்ட் அனிவர்சரி பாஸ். மூணாவது வருஷத்துக்குள்ள அடி எடுத்து வைக்கறீங்க. இந்த ரெண்டு வருஷத்துல நல்ல வளர்ச்சி காட்டியிருக்கீங்க. உங்களுக்குக் கீழ வொர்க் பண்றது எங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்.” ஒருவர் முன் வந்து சொல்ல,

“நீங்க இல்லாம இது என்னால கண்டிப்பா சாதிச்சிருக்க முடியாது. உங்க பங்கு தான் அதிகம்.” தன்னடக்கத்துடன் கூறினான் ரிஷி.

“உங்க மாஸ்டர் ப்ரெய்ன் தான் பாஸ் எல்லாத்துக்கும் காரணம். நாங்க உங்க கைடன்ஸ்ல தான் எல்லாமே செய்யறோம். நீங்க இத ஒதுக்கத் தான் வேணும்.”

“இட்ஸ் எ டீம் வொர்க். நான் மட்டும் கிரெடிட் எடுத்துக்க முடியாது. ஓகே லெட்ஸ் கோ பார் லஞ்ச்.” முன்னே கை காட்டி அனைவரையும் நடக்கச் சொன்னான்.

“ஷில்பா, நீயும் கெளம்பு. ஐ வில் பி தேர் சூன். ஒரு எச்டிமேஷன் கரெக்ட் பண்ணி அனுப்பனும். முடிச்சுட்டு வரேன்.” அவளையும் அனுப்பிவிட்டு தன் அறைக்குச் சென்றான்.

எல்லோரும் லஞ்ச் சாப்பிட சற்று தூரம் தள்ளி இருந்த அந்த இந்திய உணவகத்திற்கு சென்றனர்.

ஆம். அஞ்சலி வேலை செய்யவிருக்கும் இடத்தில் உள்ள ஹோட்டலுக்குத் தான் !

அனைவரும் சென்ற பின் சற்று தாமதமாகத் தான் அவன் கிளம்பினான்.

அங்கே அஞ்சலி தன் அலுவலகத்தில் முதல் நாள் வேலையைத் தொடர காலையிலேயே சென்றிருந்தாள். ஏற்கனவே அறிமுகமான நபர்கள் என்றாலும் இப்போது தான் அவர்களை நேரில் காண்கிறாள்.

அனைவரிடமும் அளவளாவிவிட்டு தனக்காக கொடுக்கப் பட்ட இடத்தில் அமர்ந்து வேலையை ஆரம்பித்திருந்தாள்.

அதற்குள் மதிய நேரம் வந்துவிட, ரம்யா போன் செய்தாள்.

“ஹே அஞ்சு லஞ்ச் சாப்பிட போலாம் வா. நீ கிரௌண்ட் ப்ளோர் வந்துடு. நான் லான்ச் ல வெய்ட் பண்றேன்.” என்றாள்.

காலையில் ஒன்றும் சாப்பிடாமல் கிளம்பியிருந்ததால் அவளுக்குமே பசித்தது.

உடனே லேப்டாப்பை வைத்துவிட்டு எழ, அவளது உயர் அதிகாரி அருகே வந்தார்.

“கிளம்பிடீங்களா அஞ்சலி.”

“லஞ்ச் சாப்பிட தான். ஐ வில் பீ பேக்” சிரித்த முகமாகக் கூறினாள்.

“நோ ப்ராப்ளம். நீங்க ஜெட்லேக்ல இருப்பீங்க. வீட்டுக்கு போரதுனாலும் ஓகே தான். நெக்ஸ்ட் வீக் ப்ரொடக்ஷன் இருக்கு. அதுக்கு நீங்க இருந்தா போதும். டேக் ரெஸ்ட்.” என சொல்லிவிட, அவளுக்கும் தூக்கம் வருவது போலத் தான் இருந்தது.

ஆகையால் சாப்பிட்டு விட்டு வீட்டிற்குச் சென்று உறங்கலாம் என கிளம்பினாள்.

ரம்யா அவளைக் கண்டதும் , “என்ன டி லேப்டாப்பை எடுத்துட்டு வந்துட்ட, வீட்டுக்கு போக சொல்லிட்டாங்களா?” அவளோடு சேர்ந்து நடந்து கொண்டு கேட்டாள்.

“ஆமா ரம்மி. நெக்ஸ்ட்  வீக் ப்ரோடக்ஷனுக்கு இருந்தா போதும் ரெஸ்ட் எடுன்னு சொல்லிட்டாரு. நல்ல பசி சீக்கிரம் வா” என துரிதப் படுத்தினாள்.

“ம்ம்.. சரி அப்போ ராஜ வர சொல்றேன். உன்னை வீட்ல டிராப் பண்ணிடுவான்.” ரம்யா கூற,

“ஹே பரவால்ல , நான் கேப் ல போய்டறேன். உபெர் (uber) இருக்குல..”என தனது கைபேசியில் உபெர் (uber) ஐ தேட,

அவளைத் தடுத்தாள் ரம்யா.

“அதெல்லாம் வேணாம். ராஜ் சும்மா தான் இருப்பான். இரு அவனையே கேட்கறேன்” என அவனுக்கு அழைத்தாள்.

“சொல்லுங்க மேடம்” ராஜ் எடுத்தான்.

“சாப்டியா ராஜ்?” அக்கறையும் அவள் குரலில் வெளிப்படவே செய்தது.

“ஆமா நேத்து நைட் நீ செஞ்ச புலாவ்வ என் தலைல தான கட்டின. சாப்டலன்னா சும்மா விட்ருவியா. எல்லாம் ஆச்சு” ஆச்சுவில் ஒரு அழுத்தம் கொடுத்தான்.

“நீ முன்ன மாதிரி இல்ல. கல்யாணம் டேட் பிக்ஸ் பண்ணது லேந்து உனக்கு என் சாப்பாடு கசக்க ஆரம்பிச்சுடுச்சு. இது சரிப்பட்டு வராது. நாம பிரேக்கப் பண்ணிக்கலாம்.” கோவமாக அவள் கூற,

“ ஊட்டுக்காரம்மா …அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. சும்மா…வில்ல்லாட்டுக்கு சொன்னேன் டி செல்லம்” உடனே காலில் விழுந்தான்.

“நீ மானங்கெட்டவன்…. போய்த் தொல… நானும் அஞ்சலியும் இப்போ தான் சாப்பிட போறோம். சரி வெட்டியா தான இருக்க…  அங்க ஒரு ட்வென்டி மினிட்ஸ்ல வந்துடு. சாப்பிட்டு முடிச்சதும் அஞ்சலிய வீட்ல டிராப் பண்ணனும்.” அவனுக்கு ஆணை பிறப்பித்தாள்.

“ம்ம்ம். சரி ங்க மேடம்.” சிரித்துக் கொண்டே போனை வைத்தான்.

“எதுக்கு டி டிஸ்டர்ப் பண்ற. எதாவது வேலை இருக்கப் போகுது.” அஞ்சலி வருத்தப் பட,

“அதல்லாம் இல்ல அஞ்சு. இவங்க ப்ராஜெக்ட் கொஞ்சம் லிபரல் தான். சோ நோ வொரீஸ்” சொல்லிக் கொண்டே அந்த ரெஸ்டாரெண்டில் நுழைந்தனர்.

அங்கே பார்ட்டி ஹாலில் ஒரே கூட்டமாக இருப்பதை கண்டனர்.

“ஏதோ டீம் லஞ்ச் போலிருக்கு.” ரம்யா அஞ்சலியிடம் சொல்லிக்கொண்டே ஆர்டர் கௌண்டர் அருகில் சென்றாள்.

அஞ்சலி “எனக்கு குய்க் லஞ்ச்” என்றாள்.

அவளும் இரண்டு குய்க் லஞ்ச் சொல்லிவிட்டு, இரண்டு நிமிடத்தில் ரெடியாக அதைப் பெற்றுக் கொண்டே ஒரு கார்னர் டேபிளில் அமர்ந்தனர்.

அந்த பார்ட்டி ஹாலில் இருந்து சிரிப்பும் கூச்சலுமாக சத்தம் கேட்டவண்ணம் இருந்தது.

“யப்பா..பெரிய பார்ட்டி போல. இப்படி கத்தறாங்க” ரம்யா சிலாகிக்க,

“பரவால்ல இங்க இப்படி எதாவது ஒன்னு இருந்தா தான், இந்த ஊர்ல பொழுது போகும்” அஞ்சலி உணவை வேகமாக உண்டுகொண்டே சொன்னாள்.

பத்து நிமிடத்தில் இருவரும் தட்டை காலி செய்துவிட்டிருக்க,

“நான் வாஷ்ரூம் போய்ட்டு வரேன். நீ ராஜ்க்கு போன் பண்ணு” எழுந்து சென்றாள் அஞ்சலி.

பார்ட்டி ஹால் வழியாக கடந்து செல்கையில்,

கையில் ஆளுக்கு ஒரு வைன் கோப்பையை வைத்துக் கொண்டு,

“லெட்ஸ் சியர் ஃபார் அவர் வொண்டர்புல் பாஸ்..” என ஒருவன் எழுந்து நின்று சொல்ல,

உடனே அனைவரும் எழுந்து கொண்டு,

“சியர்ஸ் மிஸ்டர்.ரிஷி” என ஒரு சேர கத்தினர்.

ரிஷி என்ற பெயரைக் கேட்டதும் , அஞ்சலி திடுக்கிட்டு அந்த ஹாலை நோட்டமிட, அனைவரும் ஒருவனைச் சுற்றி நின்றிருந்ததால் ரிஷியை அவளால் காண முடியவில்லை. கூடத்தை மட்டுமே பார்த்தாள்.

“உலகத்துல ரிஷி அவன் ஒருத்தன் தானா?” அவளின் மனமே மண்டையில் தட்ட,

ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து சென்றாள்.

அவள் சென்றதும், ரிஷி எழுந்து நின்று,

“தேங்க் யு ஆல்” என்றான்.

அவனது குரல் சற்று சத்தமாக ஒலித்தாலும் அது அவள் காதுகளை எட்டவில்லை. ஏனெனில் வாஷ்ரூமின் கதவுகள் அவனது மனதைப் போல கனமாக இருந்தது.

அவள் போனவேகத்தில் திரும்பியும் வந்தாள் ஆனால் அதற்குள் ரிஷி அங்கிருந்து பில் செட்டில் செய்ய சென்றிருந்தான்.

பில் கவுன்ட்டர் ரம்யா அமர்ந்திருந்த டேபிளின் எதிரில் தான் இருந்தது, ஆனால் ரம்யா ராஜைக் காண வெளியே சென்றுவிட்டாள்.

ஒரு இரண்டு நிமிடம் தாமதித்திருந்தால் ரம்யா ரிஷியைக் கண்டிருப்பாள். அத்துடன் அஞ்சலியும் அவனைச் சந்தித்திருப்பாள். விதி விளையாடியது.

அஞ்சலி வாஷ்ரூமில் இருந்த போதே, ரம்யா அவளுக்கு ‘வெளியே வந்துவிடு’ என போன் செய்துவிட, அஞ்சலியும் டேபிளுக்குச் செல்லாமல் நேரே வெளியே சென்றுவிட்டாள்.

ரம்யா ராஜுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அஞ்சலி வெளியே வந்ததும்,

“அஞ்சு நீ வீட்டுக்கு போயிட்டு கதவ லாக் பண்ணிக்கோ. நான் ஆறு மணிக்குள்ள வந்துடுவேன். நீங்க கெளம்புங்க. எனக்கு வேலை இருக்கு, என் டீம்மேட் போன் பண்ணிட்டான். ஓகே பை” நிற்காமல் ஓடிவிட்டாள்.

“பை” என உறைத்தவள் ராஜைப் பார்க்க,

“நீங்க கார்ல உட்காருங்க, கொஞ்சம் ஸ்நாக்ஸ் மட்டும் வீட்டுக்கு வாங்கிட்டு வந்துடறேன். ஈவினிங் வந்தா சாப்பிட வேணும். நீங்களும் பசிச்சா சாப்டுக்கலாம்.” அவள் பதிலுக்காக நிற்காமல், கார்கதவைத் ரிமோட் சாவியின் உதவியால் திறந்தவன், ரெஸ்ட்டாரென்ட் உள்ளே சென்றான்.

ராஜ் உள்ளே சென்று ஸ்நாக்ஸ்வாங்கிக் கொண்டிருக்க, ரிஷி அருகிலேயே நின்று அங்கிருந்த சூடான டீயைக் குடித்துக் கொண்டிருந்தான். அவன் தன் பணியாளர்களுக்கு வைன் கொடுத்துவிட்டு, தனக்கு டீ கேட்டிருந்தான். அதனால் வெளியே நின்று குடித்துக் கொண்டிருந்தான்.

ராஜுக்கு அந்தக் கடைக்காரன் மிகவும் பழக்கம் தான், அதனால் அவன் வழக்கமாக வாங்கும் ஸ்நாக்சை அவன் சொல்லாமலேயே பேக் செய்து கொடுத்தான்.

“எக்ஸ்ட்ரா ரெண்டு பேக் குடுங்க” என கேட்டான் ராஜ்.

அவனும் பேக் செய்துகொண்டு,

“ பொண்டாட்டிக்கு ஸ்நாக்ஸ் வாங்கி குடுத்தே தாஜா பண்றீங்க போல” என கிண்டல் செய்தான்.

“அவ இதுக்கெல்லாம் மயங்கற ஆள் இல்ல ஜி” என சிரித்தான்.

இந்த உரையாடலை பார்த்துக் கொண்டு தான் இருந்தான் ரிஷி.

ஒரு வெற்றுச் சிரிப்பு தோன்றியது.

பின்பு ரிஷி தான் கிளம்புவதாக அங்கிருந்தே அவனது பி ஏ வுக்கு சைகை செய்துவிட்டுக் கிளம்ப.

ராஜும் அதே நேரம் வெளியே வந்தான்.

ராஜின் கார் எதிரில் தான் ரிஷியின் கார் இருந்தது. காரின் உள்ளே அஞ்சலி தனது மொபைலை பார்த்துக் கொண்டிருக்க, ராஜ் உள்ளே வந்து அமர்ந்தான். அவள் கையில் ஸ்நாக்ஸ் கொடுத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

எதிர்ப்பாராத விதமாக, ரிஷி தனது காரையும் ஸ்டார்ட் செய்ய, எதேர்ச்சையாக ராஜின் காரைப் பார்க்க நேர்ந்தது.

ரிஷி உறைந்து போனான்!!

‘அஞ்சலி இங்கு தான் இருக்கிறாளா!!?’

இதயம் வேகமாகத் துடித்தது. கைகள் நடுங்குவது போல இருந்தது. கால்கள் தனது ஸ்திரத்தை இழந்தது.

ஸ்டார்ட் செய்த காரை உடனே அணைத்துவிட்டான்.

ராஜ் அவளிடம் அந்த ஸ்நாக்சைக் கொடுப்பதைப் பார்த்தவன் கண்களில் அத்தனை ரௌத்திரம்.

‘இவன் தான் உன் கணவனா!?’ உள்ளே கனன்றது.

ராஜின் கார் கிளம்பியது.

‘அந்தக் காரை பாலோ செய்யலாமா வேண்டாமா?’

‘என் காதலை வேண்டாமெனச் சொன்னவள் எப்படிப் போனால் என்ன! எங்கிருந்தால் என்ன? அவளைப் பற்றி நான் ஏன் ஆராய வேண்டும்?’ ஒரு பக்கம் யோசித்தாலும், கைகள் தானாக அவனது காரை பாலோ செய்ய ஸ்டீரிங்கை பிடித்தது.

இத்தனை நாள் யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தானோ இல்லை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தானோ அவளை இப்படிக் காண உண்மையில் அவன் மனம் விரும்பவில்லை தான்.

‘நான் மட்டும் உன்னை மறக்க முடியாம தவிக்கறப்ப நீ மட்டும் கல்யாணம் பண்ணி சிரிச்சு சந்தோஷமா இருக்கியா!’ கோபம் தலைக்கேறியது.

டெஸ்லா ராஜின் கார் பின்னால் சென்றது.

 

 

 

 

 

 

error: Content is protected !!