MEM2

மறந்துபோ என் மனமே(2) – MEM2 – Chapter 2

 

“ஹே க்ரிஷ் நீ எங்க இங்க” என்று ஆச்சர்யத்துடன் கேட்க “தேங்க் காட். என்ன ஞாபகம் இருக்கே உனக்கு” என்றான்.

“உன்ன எப்படி மறக்க முடியும். என்ன சுஷினு கூப்பிடறது நீ மட்டும் தானே. பை தி வே இங்க எப்படி” என்று கேட்க “அஃபீஷியல் ட்ரிப்” என்றான் தோள்களை குலுக்கி.

“தட்ஸ் நைஸ். இங்க எங்க? இன்னிக்கி ஈவினிங் மீட் பண்ணலாம்” அவள் சொல்ல…

“F602. Airbnb stay, நீ” என்று கேட்கும்போது அவன் மனதில் ‘F605 தானே’ என்று நினைக்க அவளும் அதையே சொன்னாள்.

லிப்ட் கீழ் தளத்தில் நின்றது. இருவரும் வெளிய வந்தனர். “உன் ஆஃபிஸ் எங்க இருக்கு க்ரிஷ்?”

அவன் “நியூபோர்ட் டவர்” என்றவுடன் “ஹே வி ஆர் சோ கிளோஸ். எந்த ஃப்லோர்?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

“27th ஏன் சேம் பில்டிங்? உன்னோடது எங்க” என்று கேட்டவன் மனதில் ‘எனக்கு தெரியாதா சுஷி நம்ப ஆஃபீஸ் கிளோஸ்னு. கேட்டுள்ள வந்துருக்கேன் இங்க’ என்று நினைக்க “எஸ் சேம் பில்டிங். நான் 16th” என்றாள்.

“ஓகே க்ரிஷ். டைம் ஆச்சு. டேக் டௌன் மை நம்பர். நம்ம ஈவினிங் மீட் பண்ணலாம்” என்று அவள் நம்பர் குடுத்துவிட்டு விருட்டென கார் எடுத்துக்கொண்டு பறந்தாள்.

அவள் சென்றுக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு போன் அழைப்பு வர “எஸ், நான் பார்க்கிங்ல இருக்கேன்” என்று ஆங்கிலத்தில் சொல்ல ஒரு கார் வந்தது. அதில் ஏறிக்கொண்டான்.

‘எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. அவ ஒரு வருஷம் முன்னாடி எப்படி இருந்தானு. ராம் கூட இருந்தவரைக்கும் சந்தோஷமா ஆரோகியாமா இருந்தா. ஆனா இப்போ கொஞ்ச நாளா எவளோ மாற்றங்கள் அவகிட்ட’

‘அவளை நான் இந்த நிலைமைக்கு வர விட்டுருக்கக் கூடாது. நான் தப்பு பண்ணிட்டேன்’

‘சின்ன வயசுல இருந்து ரொம்ப பயந்த சுபாவம். ஷி வாஸ் டூ டெலிகேட். அதுனால நான் ஓவர்ப்ரொடெக்ட்டிவ்’வா(Over protective) இருந்துட்டேன்’

‘அதுவே எங்க ரெண்டு பேருக்கும் இடைல பெரிய விரிசல் ஏற்படுத்துச்சு. அப்பறம் எங்க ஈகோ எங்களை திரும்ப சேரவிடலை’

‘நான் அவளை தனியா விட்டிருக்கக் கூடாது. அவளுக்குப் பலமா இருந்துருந்தா மே பி இப்போ இந்த கண்டிஷன்’ல இருந்துருக்கு மாட்டா’

“சர்ர்ர்ர்…… வி ஹவ் ரீச்ட் (Sir, we have reached)” என்ற அழுத்தமான குரலை கேட்டு நிகழ்வுக்கு வந்தான் கிரிஷ்.

“ஸாரி. தேங்க்ஸ். நான் சாயங்காலம் கூப்பிடறேன்” என்று ஆங்கிலத்தில் அந்த கார் டிரைவரிடம் சொல்லிவிட்டு இறங்கி அவன் ஆஃபீஸிற்கு சென்றான்.

சுஷியின் நினைவுகள் வந்தவண்ணம் முதல் நாளை கழித்துக்கொண்டிருந்தான். ஒருவழியாக அன்றைய தினத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவன் சுஷீலாவின் வரவிற்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் வராததால் அவளின் மொபைல் எண்ணிற்கு அழைத்தவனுக்கு அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக பதில் வந்தது. சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ள மறுபடியும் அதே மெசேஜ்.

மணி ஒன்பதை கடந்தும் அவள் வராததால் கதவை ஒருக்களித்து சாற்றிவிட்டு சோபாவில் சாய்ந்தான்.

காத்திருந்து கண்ணசைந்தவன் லிப்ட் சத்தம் கேட்டு கண்விழிக்க சுஷீலா அவன் வீட்டை கடந்து சென்றுகொண்டிருந்தாள்.

நிலை தடுமாறி நடப்பவளை எவனோ ஒருவன் கைத்தாங்கலாக அழைத்துச்சென்று கொண்டிருந்தான்.

அவள் தடுமாறி நடந்து கொண்டிருப்பதை பார்த்தவன் அவள் அருகே சென்று “சுஷி” என்றழைத்தான்.

அவள் அருகில் இருந்தவன் க்ரிஷை மேலும் கீழும் பார்த்து “ஹூ ஆர் யு” என கேட்க, அவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

அவளால் என்ன நடக்கிறது என்று கூட பார்க்க முடியாத அளவிற்கு தள்ளாடினாள். அவளை அழைத்து வந்தவன், அவனை கடந்து சென்று அவளின் வீட்டின் கதவை திறக்கலானான் கிரிஷை பார்த்தவண்ணம்.

அவளை அந்த கோலத்தில் பார்த்த க்ரிஷ் மனது படபடக்க “டூ யு நோ ஹர்?” என்ற சத்தம் கேட்டு திரும்பினான். அங்கே இளம் பெண் பார்க்க இந்திய முக ஜாடையுடன்.

அவளை எங்கோ பார்த்தது போல் இருந்தாலும் அவளிடம் ஆம் தெரியும் என்பதுபோல் தலையசைத்து விட்டு திரும்பி சுஷீலாவின் வீட்டை பார்க்க அவர்கள் இருவரும் உள்ளே சென்றிருந்தனர்.

மீண்டும் அவள் பக்கம் திரும்பியவன் ஏதோ நினைவுக்கு வந்தவனாய் “ஸாரி நான் க்ரிஷ். உங்கள தானே நான் காலைல லிப்ட்ல பாத்தேன்?” என்று கேட்டான் ஆங்கிலத்தில்.

பதிலுக்கு அவள் புன்னகைத்து “எஸ், ஐ அம் ப்ரியா” என்று நிறுத்தி “F605” என்று அவள் வீட்டைக்காட்டி

“ஓகே தென் சி யு ஸம்டைம் லேட்டர்” அவனை கடந்து அவள் வீட்டிற்குள் சென்றாள்.

சுஷியை நினைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றவன் ‘அட்லீஸ்ட் நீ ராம் கூட பிரேக் அப் ஆனதுக்கப்பறமாவது நான் உன்னோட பேசி இருக்கனும். என் தப்பு. உன்ன தனியா விட்டுருக்க கூடாது’ என்று நொந்துகொண்டான்.

பின் அவன் எண்ணம்… அவளுடன் வந்தவனை நினைவுகூர்ந்தது.

‘யாரவன். எப்படி தெருஞ்சுக்கறது அவன் நல்லவனா இல்லையானு. ஒரு வேல அந்த ப்ரியா கிட்ட கேட்ட தெரியுமோ. இந்த நேரத்துல போய் டிஸ்டர்ப் பண்ணா தப்பா எடுத்துப்பாங்களா. ஆனா அவங்களே தானே பேசினாங்க’

‘அப்போ அவங்களுக்கு ஏதோ தெரியும் அதான் என்கிட்ட சுஷிய தெரியுமானு கேட்டாங்க. சரி இப்போவே போய் பேசலாம்’ என்று அடுத்த நிமிடம் ப்ரியாவின் வீட்டு காலிங் பெல் அடித்தான்.

கதவு திறக்க அந்தப்பக்கம் வேறு ஒரு பெண் “எஸ்” என்று கேள்வியுடன் பார்க்க “ப்ரியா” என்றான் மறுபடியும் கதவு எண்ணை பார்த்து உறுதிசெய்துகொண்டு.

சிறி நொடிகளில் ப்ரியாவும் எட்டிப்பார்க்க “ஹே ஹாய். ப்ளீஸ் கெட் இன்” என்றவள் அவசர அவசரமாக சோபா மேல் இருந்த துணிகளை எடுத்து சுத்தம் செய்தாள்.

“பேச்லரேட் (bachelorette) ஹவுஸ்” புன்னகையுடன் சொல்ல “ஐ நோ” என அவனும் புன்னைகைத்தான்.

“ஷி ஐஸ் சாய்ரா. ரூம்மேட்” அவள் தோழியை அறிமுகம் செய்ய இருவரும் ஹலோ பகிர்ந்துகொண்டனர்.

ப்ரியாவும் சோபாவில் அமர்ந்து “நீங்க சுஷீலா பத்தி தெரிஞ்சுக்க தானே வந்துருக்கீங்க” என்று பேச்சை ஆரம்பிக்க உள்ளேயிருந்து சாய்ரா

“ப்ரியா உன் அம்மா போன் பண்ராங்க” என்றாள். “அப்பறம் பண்றேன்னு சொல்லிடு” என்று சொல்லிவிட்டு அவன் பக்கம் திரும்பினாள்.

“ஓ நீங்க தமிழா? ஆமா சுஷீலா பத்தி தான் கேட்க வந்தேன்” என்றான் க்ரிஷ். “காலைல நீங்க சுஷீலாகிட்ட பேசினதை பாத்தேன்” என்றவள் “உங்களுக்கு எப்படி அவங்கள தெரியும்?” என வினவினாள்.

“நானும் IL (Illinois) தான். நாங்க ரெண்டுபேரும் சைல்ட்ஹூட் ஃபிரண்ட்ஸ் (Childhood friends). இங்க அவள காலைல பாத்தேன். இன்னிக்கி ஈவினிங் மீட் பண்ணலாம்னு சொன்னா. பட் நீங்க தான் பாத்தீங்களே அவ எப்படி வந்தானு” என அவன் முடிக்க…

“ஆக்ட்சுவலி நாங்க ரெண்டு பேரும் ஒரே ஆஃபீஸ். அவங்க இங்க வந்தப்ப, நான் தான் இங்க வீடு ரெண்ட்க்கு எடுத்துகுடுத்தேன்” என்றாள்.

“அவ கூட இன்னிக்கி யாரோ…” அவன் இழுக்க “ஹி இஸ் ஸ்டீவ். எங்க ஆஃபீஸ் தான்” என்றாள் பெரிதாக ஆர்வம் இல்லாமல்.

‘அவன் நல்லவனா இல்ல… அத எப்படி கேக்கறது’ என்று அவன் யோசிக்கும்போது

“நான் குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வரேன்” என்றவள் ஜூஸ் எடுத்து வந்தாள்.

அவனுக்கு கொடுக்க “நீங்க சுஷீலா கிட்ட பேசுவீங்களா?” கேட்டான் க்ரிஷ்.

“இப்போல்லாம் அதிகமாயில்ல. ஆரம்பத்துல நல்லா பேசினாங்க. அவங்களுக்கு ஏதோ ப்ரோப்லம் இருக்குனு நினைக்கறேன்”

“டெய்லி நைட் கொஞ்சம் அதிகமாவே ட்ரிங்க் பண்ணுவாங்க. சிலசமயம் ரொம்ப ஓவர் டோஸ் ஆச்சுன்னா ஆஃபீஸ் வரமாட்டாங்க. வீட்ல இருந்தே வேல பாப்பாங்க”

“நிறைய குடிக்க வேணாம்னு சொல்லிருக்கேன். ஆனா அவங்க கேட்கல. என்னோட க்ளைன்ட் அவங்க. அதுக்கு மேல நான் பேசின நல்லாயிருக்காதுனு விட்டுட்டேன்”

“அதுக்கப்பறம் அவங்க ஸ்டீவ் கூட க்ளோஸ் ஆகிட்டாங்க, எங்களோட அவ்வளவா பேசல. சும்மா ஹாய் பை அவ்ளோதான்” என்றாள் பதிலுக்கு.

“ஸ்டீவ் எப்படிப்பட்ட ஆள்?” என்று தயக்கத்துடன் அவன் கேட்க

“சரியாய் தெரில. கூட வேலைபாகரப்ப தப்பா ஒன்னும் தெரில. ஸ்டீவ் கூட பேசறதுக்கு முன்னாடி அவங்க ரொம்ப ட்ரிங்க் பண்ண மாதிரி தெரில. பட் அவனோட சேர்ந்ததுக்கப்பறம் அதிகம் ஆயிடுச்சோனு தோணும்” என்றாள் புருவத்தை உயர்த்தி.

அதை கேட்டு அவன் மனம் வருந்தியது.

“ஆஃபீஸ்ல இருந்து நேரா வீட்டுக்கு மோஸ்ட்லி வரமாட்டாங்க. வெளிய கூட்டிட்டு போய்ட்டு தான் வருவான்”

“ஆரம்பத்துல இதெல்லாம் வேணாம்னு சொன்னேன். அவங்க கேக்கல. நாங்களும் விட்டுட்டோம்” என்றவளிடம் மறுபடியும் சாய்ரா அவள் அம்மா அழைப்பதாக சொல்ல

“ஸாரி நீங்க உங்க வேலைய பாருங்க. நானும் நியூபோர்ட் டவர்ஸ்’ல தான் ஒர்க் பண்றேன். நாளைக்கு டைம் கிடைச்சா மீட் பண்ணலாம்” என்றவனிடம் “கண்டிப்பா” என்று இருவரும் நம்பர் பகிர்ந்துகொண்டனர்.

வீட்டிற்கு திரும்பியவன் எண்ணங்களில் சுஷீலா நிறைந்திருந்தாள்.

‘ப்ரியா சொன்னதை வெச்சு பாத்தா அந்த ஸ்டீவ் நல்லவனானு தெரில. ஒரு வேல தப்பானவன்னா எப்படியாவது அவள அவன்கிட்ட இருந்து விடுவிக்கணும்’

‘அப்போ தான் அவளோட அடிக்ஷன்ல(addiction) இருந்து மீட்க முடியும்” என்று அவளை பற்றி நினைத்தவன் அப்படியே கண்ணுறங்கினான்.

மறுநாள் காலை சீக்கிரமாக எழுந்து புறப்பட்டவன் அவளை அவள் வீட்டில் பார்த்துவிட்டு ஆஃபீஸ்க்கு செல்ல முடிவெடுத்தான்.