MMV 20

அத்தியாயம் – 20

வீட்டின் வாசலில் நிழலாட கண்டு இருவரும் திரும்பிப் பார்க்க உணர்வுகளை துடைத்த முகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தாள் நிலா.

அவர்கள் இருவரும் திகைத்தபடி இவளையே பார்க்க கணவனையும், தமக்கையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “எனக்கு கற்பப்பை எடுத்த விஷயம் உங்க இருவருக்கும் முன்னாடியே தெரியுமா?” என்றவளின் குரலில் இருப்பது கோபமா இல்லை வெறுப்பா என்று இருவருக்கும் புரியவில்லை.

“நிலா இந்த விஷயத்தை நான் முன்னாடியே உனக்கு சொல்ல நினைச்சேன்..” என்று சங்கர் பேச்சைத் தொடங்க, “எந்த விஷயத்தை?” என்று அழுத்தமாக இருவரையும் பார்த்தாள் நிலா.

“உனக்கு ஆபரேஷன் நடந்தபொழுது தான் உன்னோட கற்பப்பை ரிமூவ் பண்ணனும்னு சொன்னதும் உங்க அக்காதான் கையெழுத்துப் போட்டு கொடுத்தாங்க..” விஷயத்தை வெளிப்படையாக சொல்ல இடிந்துபோய்  சரிந்து அமர்ந்தாள்.

ஆசையாக வளர்த்த ஆட்டை துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொல்வது போல இருந்தது கோகிலாவின் செயல்.. அதுக்கு கணவனும் துணையாக இருந்தான் என்ற செய்தியே அவளின் தலையில் இடி இறங்கியது போல இருந்தது..

“அதுக்காக நீ வருத்தபடாதே நிலா.. நான் கன்சீவாக இருக்கேன்.. இந்த குழந்தையை பெற்று உன்னோட கையில் கொடுக்கிறேன் நீ வளர்த்துக்கோ..” என்று ஆறுதலாக கூறிய கோகிலா அவளின் கையைப்பிடிக்க நிலா அவளின் கையை உதறினாள்.

அவள் கோபமாக நிமிர்ந்து கணவனைக் கேள்வியாக பார்க்க, “நிலா டெஸ்ட் டுயூப் பேபியோ இல்ல வாடகை தாய் வைத்து குழந்தை பெற்றுக்கொண்டால் நமக்குள் விரிசல் வரும் என்று உன்னோட அக்காதான் சொன்னாங்க..” என்றவன் தொடர்ந்து,

“இதுவே உங்க அக்கா என்ற பொழுது அந்த பிரச்சனை வராதுல்ல..” அவன் சாதாரணமாக சொல்லவே கணவனை எரிப்பது போல பார்த்தவள், “நீயெல்லாம் ஒரு மனுஷனா?” என்று கோபத்தை உள்ளடக்கிய குரலில் கேட்டாள்.

“ஏய் நிலா இதில் என்ன தவறு கண்ட..” என்று சாதாரணமாகவே கேட்டான் சங்கர், “டேய் இவ சொன்னா உனக்கு எங்கடா போச்சு அறிவு.. இவளோட புருஷன் இவளுக்காக அங்கே மொழி தெரியாத நாட்டில் கஷ்டபடுகிறான்.. நீங்க இருவரும் இப்படியொரு காரணம் செய்தது தெரிஞ்சா..” என்றவளால் அதற்கு மேல் யோசிக்க கூட முடியவில்லை..

“ஏய் என்னடி டேய் என்று சொல்ற..” என்று அவன் கோபத்தில் கையோங்க, “கை வைடா.. கை வை..” என்று அவனை எதிர்த்து நின்றவள்,  “இவள் சொன்னாளாம் இவன் செய்தானாம்.. அறிவு இல்ல..” என்று எரிச்சலோடு அவளை பார்த்தாள்.

“நீங்க செய்த காரியம் எனக்காக நீங்க செய்த தியாகமா.. வெளி வாய்விட்டு சொல்ல முடியாத கேவலத்தை செய்துவிட்டு அதுக்கு ஆயிரம் காரணம் சொல்றீங்க.. ச்சீ..” என்று முகத்தைத் திருப்பினாள்.

“உன்னால் பெற்றுக்கொள்ள முடியாது.. அவங்க பெற்று கொடுப்பதை வளர்க்கும் வழியைப் பாரு..” என்றான் சங்கர் சாதாரணமானவே.

“ஏன் நிலா நான் குழந்தை பெற்று தந்தால் நீ வளர்க்க மாட்டாயா?” என்று வார்த்தைகளில் பாசம சொட்ட சொட்ட கேட்டாள்.

“என்னோட புருஷனுக்கு உன்னை குழந்தைப்பெற்று தரச்சொல்லி நான் கேட்டனே.. இல்ல அந்த குழந்தை இங்கே ஆண்டு அனுபவிக்க இருக்கும் சொத்து எல்லாம் வீணாக போயிரும் என்று உன்னோட காலில் விழுந்து கதறினேனா?” என்று அவள் கெட்ட கேள்வியில், ‘நம்ம இவங்க சொன்னதை கேட்டிருக்க கூடாதோ..’ கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்..

“இப்போ எதுக்கு நீ எண்ணையில் அப்பளம் மாதிரி குதிக்கிற.. உனக்கு நல்லது நினைத்தது ஒரு தப்பாடி..” என்று கோகிலா சண்டைக்கு வந்தாள்.

நிலாவின் கோபம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்க, “எனக்கு உன்னோட புருஷனை பிடிச்சிருக்கு. நீ அவனை டைவர்ஸ் பண்ணிரு நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிருந்தா விட்டு கொடுத்திருப்பேன்..” என்றவள் நிறுத்தி இருவரின் முகத்தையும் பார்த்தாள்.

“ஆனால் நீங்க செய்த காரியத்தை நினைக்க நினைக்க அருவருப்பாக இருக்கு.. அதைவிட சபலபுத்தி உடைய ஒருவனை கணவன் என்று கண்மூடித்தனமாக இருந்திருக்கேன்.. அதற்கு விலையாக என்னோட கற்பப்பையை இழந்திருக்கேன்னு நினைக்க நினைக்க வெறிவெறியாக வருது..” என்று உச்சகட்ட கோபத்தில் கத்தினாள் நிலா.

“அவங்க பெற்று தரும் குழந்தையை நீதான் நிலா வளர்க்கணும்..” என்று சங்கர் உறுதியாக கூறவே, “எதுக்கு நீங்க இருவரும் செய்த காரியத்திற்கு நான் துணை போனேன் என்று ஊர் உலகம் சொல்வதற்கா?” என்றதும் சங்கருக்கும் கோபம் வந்தது..

“ஏய் என்ன நீ லூசு மாதிரி பேசற.. இந்த விஷயம் நம்ம மூவருக்கு தான் தெரியும்.. அப்புறம் எப்படி வெளியே இருப்பவங்களுக்கு தெரியும்..” என்று அவன் அவளிடம் நியாயம் கேட்க அந்த கேள்வியில் நிலாவிற்கு சிரிப்புதான் வந்தது..

“ஹா ஹா ஹா.. வாழ்க்கை பற்றி கணக்கு போடுறீங்க இல்ல.. ஓஹோ காற்று உங்களுக்கு சாதகமாக வீசுது இல்ல..” என்று வாய்விட்டு சிரித்த நிலாவை அவர்கள் இருவரும் கேள்வியாக நோக்கிட,

“எல்லா நேரத்திலும் காற்று ஒரே திசையில் வீசாது.. அடுத்த நிமிஷம் என்ன நடக்குன்னு யாராலும் கணிக்க முடியாது.. அதனால் நீங்க நினைப்பது தான் நடக்குன்னு கனவு கண்டுட்டு இருக்காதீங்க..” என்றவள் இளக்காரமாக பேச கோகிலாவால் பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.

“என்னோட மாமா என்னை மகள் மாதிரி நினைத்து வளர்த்தார்.. உங்களோட சுயநலத்திற்கும், நீங்க செய்த துரோகத்திற்கும் துணை போக என்னால் முடியாது.. நானும் அவருக்கு துரோகியாக விரும்பல.. நீங்க செய்த செயலுக்கு அவர் வந்து முடிவு சொல்லட்டும்.. இனிமேல் இந்த இடத்தில் நான் ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன்..” என்றவள் வீட்டைவிட்டு வெளியே செல்ல திரும்பினாள்.

அவளின் பேச்சிலிருந்தே அவளின் முடிவை தெளிவாக உணர்ந்த சங்கர்  தன்னுடைய இறுதி அம்பை அவளை நோக்கி குறிபார்த்து வீசினான்.

“உனக்கு நான் தாலிகட்டிருக்கேன்.. நான் சொல்ற மாதிரி தான் நீ நடக்கணும்..” என்று அவன் அவளை கையைப்பிடித்து நிறுத்தவே அவனின் கையை உதறினாள் நிலா..

“என்னோட வாழ்க்கையே போச்சு.. பெண்ணுக்கு தேவை தன்மானமும் அவளோட கற்பும் தான்.. அதில் ஒன்னை நான் வேரோட இழந்துட்டேன்.. ஆனால் தன்மானம் இழந்து உன்னோட நான் வாழ தயாராக இல்ல..” என்றவள் கழுத்திலிருந்த தாலியைப் பார்த்தாள்.

“நாளைக்கே ஊரிலிருந்து என்னோட மாமா வந்து நீயும் இந்த செயலுக்கு துணை போனீயா? என்று என்னை கெட்ட என்னால் பதில் சொல்ல முடியாது.. நீங்க செய்த காரியத்தை மறைத்து வைத்து நான் நாடகமாடவும் தயாராக இல்ல..” என்றவள் கழுத்திலிருந்த தாலியைக் கலட்டினாள்.

“இது என்னோட கழுத்தில் இருக்கிற வரைக்கும் தானே என்னை நீ தடுக்க முடியும்.. நேரத்திற்கு நேரம் நிறம்மாறும் பச்சோந்தி மாதிரி சபலபுத்தி காரனோடு என்னால் வாழ முடியாது..” என்று அவனின் முகத்தில் அதைவிட்டு எறிந்தாள்.

அவர்கள் இருவரும் அவளிடம் அப்படியொரு செயலை அவர்கள் இருவரும் எதிர்பார்க்கதால் திகைப்புடன் நின்றிருக்க, “இப்போ அவள் எனக்கு அக்கா இல்ல.. அவளோட புருஷன் ஊரிலிருந்து வந்து கேள்வி கேட்பான் நீயே அவனுக்கு பதில் சொல்லு..” என்று கோகிலாவின் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.

“உன்னோட புருஷன் வந்து கேட்ட நீயும் தயங்காமல் என்னிடம் சொன்ன அதே காரணத்தை தெளிவாக சொல்லும்மா.. உன்னோட புருஷன் உன்னை தலையில் தூக்கி வெச்சு கொண்டாடுவார்..” என்று நிதர்சனத்தை அவர்கள் உணரும்படி கூறியவள் அறைக்குள் சென்றாள்.

அவளின் உழைப்பில் வாங்கிய துணியை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறும் பொழுது இருவரையும் புழுவை விட கேவலமான ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினாள்..

எங்கு செல்வது என்று தெரியாமல் கடற்கரைக்கு வந்து அமர்ந்தவளின் விழிநீர் பெருகியது.. வீடு என்ற அஸ்திவாரமே ஆட்டம்கண்டுவிட எங்கு சென்று என்ன செய்ய போகிறோம் என்ற கேள்வியுடன் அவள் அமர்ந்திருந்தாள். அவளின் கண்களில் தான் அந்த குழந்தை மணல்வீடு கட்டும் காட்சி விழுந்தது..

“அந்த குட்டி பொண்ணுதான் எனக்கு வாழ்க்கையைப்பற்றி புரிய வைத்தாள்.. எதுக்கும் துவண்டு போகவே கூடாது.. இது ஒரு முடிவு அல்ல நல்ல ஒரு ஆரம்பத்தின் அழகாக தொடக்கம் என்று புரியவைத்தாள்..” என்றவள் கண்ணீரோடு நிமிர்ந்தாள்.

“இதெல்லாம் உங்க எல்லோரிடமும் மறைக்கணும் என்று நினைக்கல.. என்னோட கடந்த காலத்தை நான் திரும்ப நினைக்க விரும்பல.. இனிமேலாவது என்னை கட்டாயப் படுத்தாதீங்க..” என்றவள் அவளையும் மீறி அழுதாள்..

அவளின் இழப்பு எல்லோருக்கும் கஷ்டத்தைக் கொடுத்தது. அவ்வளவு தைரியமாக வீட்டைவிட்டு வெளியேறிய நிலாவை நினைக்கும் பொழுது சுமிம்மாவிற்கு சந்தோஷமாக இருந்தது.. அவரின்ன் மகள் தைரியசாலி என்ற எண்ணமே அவரின் சந்தோசத்திற்கு காரணமாக அமைந்தது..

தன்னுடைய வளர்ப்பு தவறாக போகவில்லை என்று உணர்ந்த சிவகுமாரின் கண்களும் லேசாக கலங்கியது.. ஆனால் அவளையே உயிராக விரும்பும் பாரதியின் முடிவு என்னவோ என்று அவர் திரும்பி அவனின் முகம் பார்த்தார். அவனின் முகம் கல்போல் இறுகிகிடக்க சிலைபோல அமர்ந்திருந்தான் பாரதி.

“சுமிம்மா மக கோழை இல்ல.. நீ அழுகக்கூடாது..” அவளைக் கண்டித்தவர் அவளின் கூந்தலை பாசமாக வருடினார்.

“என்னை மாதிரியே நீயும் நிறைய கஷ்டம் பட்டிருக்க இல்ல..” என்ற அஜய் தங்கையை மடியில் படுக்க வைத்துக்கொண்டான்..

பிரவீன், திவாகர், ரேணு, ரித்தி எல்லோரும் கலக்கத்துடன் அமர்ந்திருந்தனர். வீடெங்கும் அமைதி நிலவிட நிலாவின் மனதிலிருந்த பாரம் இறங்கியது போல உணர்ந்தாள். ஆனால் பாரதி தன்னை என்ன நினைப்பான் என்ற எண்ணம் அவளின் அடிவயிற்றில் பகீரென்றது.

அப்பொழுது முன்னே பாரதி வந்து நிற்க நிலா எழுந்து அமர்ந்தவண்ணம் அவனையே பார்த்தாள். அவளை சுற்றியிருந்த அனைவரின் கவனமும் பாரதியின் பக்கம் திரும்பிட நிலா தலையைக் குனிந்து கொண்டாள்.

“நிலா நிமிர்ந்து என்னைப் பாரு” என்றவனின் குரலின் அதட்டலில் மெல்ல நிமிர்ந்து அவளின் முகத்தைப் பார்த்தாள்.

தன்னுடைய காதலை மொத்தத்தையும் விழியில் தேக்கிய பாரதி, “நான் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் நிலா. என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்றவனின் பார்வை அவளின் மௌனத்தை உடைத்தது..

“உங்களிடம் எல்லாம் இத்தனை நாள் பொய் சொல்லிட்டேன்னு உங்க யாருக்கும் என்மேல் கோபம் வரவே இல்லையா?” என்று சந்தேகமாக அவள் இழுத்தாள்.

அவளின் மனநிலை உணர்ந்து, “ஹே லூசு! உனக்கு பிடிக்காமல் ஒதுக்கிய விஷயத்தை நீயாக இதுவரை பேசல.. அதற்கு போய் நாங்க எல்லோரும் உன்னை தவறாக நினைப்போமா?” என்று புன்னகையுடன் அவன் சாதாரணமாக கேட்டான்.

அதுவரை அவளின் மனதை அழுத்திய பாரம் முற்றிலும் இறங்கிவிட, “ரொம்ப சீக்கிரம் உண்மையை உளறிட்டேனோ..” என்ற நிலா இயல்பு நிலைக்கு திரும்ப அவளின் உதட்டிலும் புன்னகை அரும்பியது..

“சரி என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?” என்று பாரதி அவளிடம் நேரடியாக கேட்க, “எனக்கு கற்பப்பை இல்ல பாரதி..” என்று அவள் பாவமாக கூறினாள்..

“அப்படின்னு உனக்கு யார் சொன்னா..” என்று அவன் கேள்வியாக புருவம் உயர்த்தவே, “எனக்கு அந்த நர்ஸ் சொன்னாங்க..” என்றவளோ குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள்.

மற்றவர்கள் திகைப்புடன் அவனை நோக்கிட, “நர்ஸ் சொன்னா மேடம் நம்புவீங்களோ? உனக்கு ஆப்ரேஷன் செய்த இந்த டாக்டர் சொன்னா நம்பமாட்டீங்களா மேடம்..” என்று குறும்புடன் அவன் புன்னகைத்தான்.

அவனை சுற்றி இருந்த எல்லோருக்கும் ஏதோவொரு விஷயம் புரிவது போல இருந்தது. சுமிம்மா புன்னகையுடன் இருவரையும் பார்த்தார்.

“நான் தான் உனக்கு ஆப்ரேஷன் பண்ணிய டாக்டர். நீ இழந்துட்டேன் என்று நினைக்கிற எதுவும் நீ இழக்கல நிலா. உனக்கு நான் கற்பப்பை ரிமூவ் ஆப்ரேஷன் பண்ணல.. உனக்கு முன்னாடி கலைநிலா என்ற இன்னொரு பெண்ணுக்குத்தான் நான் அந்த ஆப்ரேஷன் பண்ணேன்..” என்றவன் தன்னுடைய டைரியை கொடுத்து அதிலிருந்த குறிப்பை காட்டினான்.

“நான் முதல் ஆப்ரேஷன் பண்ண பொண்ணுக்கு கற்பப்பை ரிமூவ் ஆப்ரேசன், உனக்கு நீர் கட்டி ரிமூவ் ஆப்ரேசன் இரண்டும் நான்தான் பண்ணினேன்..” என்றவன் தொடர்ந்து அவளைப் பற்றிய உண்மையை தேடி சென்ற அனைத்தையும் சொன்னான்..

அனைவரும் அடுத்தடுத்த அதிர்ச்சியில் அமர்ந்திருக்க நிலாவோ “பாரதி நிஜமா சொல்றீயா? எனக்கு கற்பப்பை இருக்கா.. அதை நீங்க ரிமூவ் பண்ணலையா?” என்று திகைப்பு மாறாமல் கேட்டாள்.

அவனும் ஒப்புதலாக தலையசைக்க, “நிஜமாவா..” என்று நம்பாமல் கேட்க, “இந்த விஷயத்தில் நான் பொய் சொல்வேனா?” என்றதும் தான் இழந்ததாக நினைத்தது, தன்னுடன் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றாள். அப்பொழுது தான் அவளுக்கு ஏற்பட்ட சந்தேகம் உறுதியாக தான் கற்பப்பையை இலக்கல என்று முழுவதுமாக நம்பினாள்..

“என்னோட கணிப்புபடி இங்கே தவறாக நடந்த இரண்டு விஷயம்.. நர்ஸ் குழப்பத்தில் மாற்றி சொல்லியிருக்கிற.. அடுத்து உன்னோட அக்கா உன்னோட கணவனை வளைக்க பொய் சொல்லியிருக்கிற..” என்றவன் தன்னுடைய எண்ணோட்டத்தை கூறினான்..

“இதை முன்னாடியே சொல்லிருக்கலாம் இல்ல அண்ணா.. இத்தனை அலம்பல் தேவையா?” என்று பிரவீன் அவனிடம் சண்டைக்கு வந்தான்.

“நான் சொன்ன மேடம் நம்புவாங்களா?” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினான்..

“ஹப்பாடா பிரச்சனை ஓவர் என்னம்மா கல்யாண ஏற்பாட்டை நான் கவனிக்கட்டுமா?” சுமிம்மா குறும்புடன் கேட்க,

“இதென்ன கேள்வி சுமிம்மா நீங்க ஏற்பாட்டை கவனிங்க.. இங்க கல்யாணம் முடிஞ்சாதான் எங்க ரூட்  கிளியர் ஆகும்..” என்றான்.

நிலா ஏதோ சிந்தனையில் இருக்க, “ஹலோ மேடம்..” என்றழைத்த பாரதியை அவள் நிமிர்ந்து பார்க்க, “கொடுக்க ஒன்னும் இல்ல ஒன்னும் இல்லன்னு சொல்லி இத்தனை வருடம் என்னை இப்படி சுத்தலில் விடுவ என்று நான் நினைக்கல..” என்று இருபொருள்பட கூறியவன் வாய்விட்டு சிரித்தான்.

அவன் கூறிய அர்த்தம் அவளுக்கு புரிந்துவிட, “ச்சீ..” என்றவள் அழகாக வெக்கப்பட, “டேய் போக்கிரி என்னோட மகளையே வெக்கப்பட வெச்சிட்ட..” என்ற சுமிம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவளின் கண்களில் இரண்டும் சிவப்பதை அவன் ரசனையுடன் நோக்கியது. அதுவரை அவன் சொல்லாத சில விஷயத்தை அவனின் விழி பேசவே, ‘போ..’ என்று பார்வையை விலகிக் கொண்ட நிலாவைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான் பாரதி.

அதுவரை அமைதியாக இருந்த பாரதி தன்னுடைய காதலில் வெற்றி கண்டான். அவளை மட்டுமே காதலித்த பாரதி கடைசியில் பொறுமையாக இருந்து அதே காதலுடன் அவளின் கரம் பிடித்தான்.

அதுவரை சோகத்தில் மூழ்கிய மனங்களில் சந்தோஷம் மலர வீடே திருவிழா கோலமானது.. அடுத்து வந்த நல்ல முகூர்த்ததில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.