MMV 23
MMV 23
அத்தியாயம் – 23
அவர்கள் அனைவரும் சேர்ந்து நெதர்லாந்து செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அதனால் அனைவரும் ஒன்றிணைந்து பர்சேஸ் செய்ய ஷாப்பிங் சென்றனர்.
ஜவுளிக் கடைக்குள் நுழைந்த சுமிம்மாவிற்கு அவர்கள் அனைவரும் சேர்ந்து துணியெடுத்துக் கொடுத்தனர்.
“சுமிம்மா உங்களுக்கு இந்த ஜீன்ஸ் அழகா இருக்கும்..” என்று ரித்து ஒரு செட் எடுக்க, “அம்மாக்கு இந்த குர்த்தீஸ் நல்லா இருக்கும்..” என்று ரேணு ஒரு செட் எடுத்தாள்.
பாரதியும், நிலாவும் சேர்ந்து சுமிம்மாவிற்கு அழகான பட்டுபுடவை ஒன்று தேர்வு செய்தனர்.
பிரவீன், அஜய், திவாகர் மூவரும் ஒவ்வொரு சுடிதார் செலக்ட் செய்ய, “இத்தனையும் எனக்காகவா.. நீங்க எடுக்கும் துணி அனைத்தும் எனக்காகவா..” என்று சுமிம்மா பாடலைப் பாடிக் கொண்டிருக்க,
“இந்த சுடிதாரை டிரையல் ரூமில் போய் போட்டு வாங்க..” என்றான் அஜய்..
அவர் டிரையல் ரூம் உள்ளே செல்ல கடைக்குள் நுழைந்தவள், “குட்டிஸ் ட்ரஸ் கலெக்ஷன் எல்லாம் எங்கே இருக்கு..” என்று அவள்
சேல்ஸ்மேனிடம் கேட்க, தனக்கான துணிகளை தேர்வு செய்து கொண்டிருந்த நிலா திரும்பி அவளைப் பார்த்தாள்.
மெரூன் கலர் சுடிதார் அணிந்த பெண்ணின் மீது அவளின் பார்வை கேள்வியாக படிய, ‘இந்த பெண்ணை எங்கோ பார்த்த மாதிரியே இருக்கு..’ என்று அவளின் சிந்தனை எங்கோ சென்றது..
“நிலா இங்க பாரு உனக்கு இந்த சாண்டில் கலர் சுடிதார் சூப்பராக இருக்கும்..” என்ற பாரதியின் குரல் அவளின் கவனத்தைக் கலைத்தது.தான் எடுத்து வந்த சுடிதாரை அவளின் மீது வைத்து கண்ணாடியில் அவளின் முகம் பார்த்தான்..
ஓவிய பாவைபோல அவளின் நிறத்திற்கு நீல நிறத்தில் கற்கள் பதித்த அந்த சுடிதார் அவளை தேவதை போல காட்டியது.. “மை ஸ்வீட் பேபி..” என்று அவளின் கன்னத்தில் அவன் இதழ்பதிக்க,
“கடையில் வைத்து என்ன பண்றீங்க..” என்றவளின் கன்னம் வெக்கத்தில் சிவந்தது..
“கிஸ் பண்ணினேன்..” என்று வெக்கம் இல்லாமல் சொன்னவனைப் பார்த்து முறைக்க மட்டுமே நிலாவால் முடிந்தது.
அதற்குள் சுடிதாருடன் வந்த சுமிம்மாவை பார்த்த திவாகர்,
“காலேஜ் பிகர் எல்லாம் பத்தடி தள்ளி நிற்கணும் சுமிம்மா..” என்று அவரின் கன்னத்தில் முத்தமிட, “டேய் இது கடைடா..” என்று அவனின் தலையில் தட்டினார் சுமிம்மா.
அவரின் சத்தம்கேட்டு அந்த மெரூன் கலர் சுடிதார் அணிதிருந்த பெண் திரும்பிப் பார்க்க அது அஜயின் பார்வைக்கு தப்பவில்லை. அவளின் பார்வை அஜயின் அருகே நின்றிருந்த பிரவீனின் மீது படிவத்தை உணர்ந்தவன், ‘இவங்க..’ என்ற சிந்தனையுடன் அவளைப் பார்த்தான்..
அப்பொழுது அங்கே இன்னொரு செக்சனில் நின்றிருந்த அஜய் பிரவீனிடம், “அண்ணா அந்த மெரூன் கலர் சுடிதாரை பாரு..” என்று அவனின் கவனத்தை திசை திருப்ப நிமிர்ந்து அவன் கைகாட்டிய பெண்ணை ஒரு பார்வை பார்த்தான். அவளின் முகம் சரியாக தெரியவில்லை..
“யாருடா..” என்று கேட்டவனின் பார்வை அவள் மீது படிந்தது. உடனே அந்த மெரூன் கலர் சுடிதார் அணிந்திருந்த பெண் சேல்ஸ்மேனிடம் எதையோ கேட்க அவரும் அவளுக்கு பதில் கொடுத்தார்.
அவளை பார்த்துவிட்டு திரும்பிய பிரவீன், “அழகா இருக்கிற..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றனர். அவர்கள் உடை தேர்வு செய்து முடித்துவிட்டு வெளியே வந்தனர்.
அவர்கள் எல்லாம் வரிசையாக வெளியேற தன்னைக் கடந்து சென்றவனின் மீது அவளின் பார்வை தெளிவாகப் பார்த்தவள்,
“பில் போட்டு வைங்க..” என்று எடுத்த உடைகளை சேல்ஸ்மேனிடம் கொடுத்துவிட்டு அவனை பின் தொடர்ந்தாள்.
அவன் அஜயுடன் பேசியபடியே செல்ல, “ஹலோஒரு நிமிஷம் நில்லுங்க..” அவனின் முன்னாடி போய் நின்றவளைப் பார்த்தும், ‘இவ எதுக்கு வர..’ என்றவன் அவளைப் புரியாத பார்வை பார்த்து வைத்தான். அஜய் அவளைப் பார்த்தும் புன்னகையுடன் அவர்களுக்கு தனிமையைக் கொடுத்து விலகிச் சென்றான்..
“நீங்க யாரு..” என்று அவன் ஆழ்ந்த பார்வையுடன் அவளைப் பார்த்து கேட்க,
“ஓ சாரே அப்போ என்னிடம் நீங்க சொன்னது எல்லாமே டைலாக்கா? நான்தான் நீங்க தேடி வருவீங்க என்று இத்தன நாளை வீணடித்துவிட்டேனா?” என்று இடையில் கையூன்றி அவள் தோரணையாக நின்றவளை நொடியில் அடையாளம் கண்டு கொண்டது..
அவள் தன்னை அடையாளம் கண்டு பிடித்து பேசுவதை நினைத்து அவனின் உதட்டில் புன்னகை அரும்பிட, “சிரிக்காத.. ஒரு வார்த்தையில மனசை அள்ளிட்டு வந்துட்டு சிரிக்கிற நீ..” என்று அவள் அவனை உரிமையுடன் அடித்தாள்.
“ஸாரி.. என்னை அடிக்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தா?” என்று அவனும் குறும்புடன் கேட்க அவனை கொலை வெறியுடன் பார்த்தவள், “நீ என்ன உரிமையில் வருவேன்னு சொல்லிட்டு வந்தீயோ அந்த வார்த்தை தான் உரிமையைக் கொடுத்தது..” என்றவளின் கோபம் அடங்க மறுத்தது.
“உன்னைக் கொன்னு போட்டாலும் கோபம் தீராது.. ஐந்து வருஷமா உன்னை நினைச்சிட்டு இருக்கேன்..
இப்போ வந்து நீ என்ன கேள்வி கேட்கிற..” என்று அவனிடம் அவள் சண்டை போட்டாள்..
“ஐந்து வருஷமா எனக்காக வெயிட் பண்ணிருக்கிற.. இது தெரியாம நான் வேற கல்யாணம் பண்ணிட்டேனே..” என்று அவன் சீரியசாக பதில் கொடுக்க,
“கல்யாணம் பண்ணிருந்த எங்க அம்மாட்ட சொல்லி உன்னை கூண்டில் ஏற்றியிருப்பேன்..” என்று கூறியவள் கோபத்துடன் திரும்பி நடந்துவிட்டாள்.
“ஏய் சங்கரி.. சிவசங்கரி..” என்று அவன் அவளின் பெயரை ஏலம்போட, “அப்படியே போயிரு..” என்றவள் அந்த கடைக்குள் சென்று எடுத்த துணிகளை வாங்கிக்கொண்டு,
‘இவனை நம்பினேன் பாரு என்னை சொல்லணும்..’ என்று மனதிற்குள் பெருமியபடி அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
அவன் அவளை சமாதானம் செய்ய நினைத்து அவளைப் பின் தொடர அவனின் கண்ணில் மண்ணைத் தூவிட்டு அங்கிருந்து மயமாக மறைந்துவிட்டாள் சங்கரி. அவளை எங்கே தேடியும் காணாமல்,
‘இவ்வளவு கோபத்தில் இருக்கிறாளே..’ என்ற நினைவுடன் மற்றவர்களைத் தேடிச் சென்றான்.
அவர்கள் காம்ப்ளக்ஸ் வெளியே வரும்பொழுது அங்கே எல்லோரும் கூட்டமாக நின்றிருந்தனர். அந்த கூட்டத்தைக் கவனித்த சுமிம்மா,
“டேய் அங்கே என்னடா கூட்டமாக இருக்கு..” என்று அவர் கேள்வி எழுப்பினார். அவர் கைகாட்டிய திசையை நோக்கிய அஜய், “மகேஷ் பாபு படம் சூட்டிங் சுமிம்மா..” என்றான் சாதாரணமாக..
“டேய் வாங்கடா போய் பார்த்துட்டு போலாம்..” என்றவர் சொல்ல மற்றவர்கள் ஒருவரையோருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களும் சுமிம்மாவின் பேச்சிற்கு தலையாட்டிட அவர்களும் ஷுட்டிங் பார்க்க சென்றனர்.
அவர்கள் சென்ற பொழுது சண்டை காட்சிகள் முடிந்திருக்க, “என்ன சுமிம்மா சூட்டிங் முடிந்த பிறகு வந்திருக்கிறோம்..” என்று ரேணுவும், ரித்துவும் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டனர்.
அப்பொழுது அங்கே சலசலப்பு அதிகரிக்க, “ஸார் ஏதாவது பிரச்சனையா?” என்று பாரதி அவர்களிடம் கேட்க அன்றைய ஷூட்டிங் அம்மா ரோலில் நடக்க நடிகை வரவில்லை என்றனர் கூட்டத்தில் நின்றிருந்த ஒருவன்..
“வாவ்..” என்ற சுமிம்மா, “அஜய் அஜய் எனக்கு அந்த ரோலில் நடிக்க ஆசையாக இருக்குடா..” என்று குழந்தை பிள்ளை சாக்லெட்டிற்கு அடம்பிடிப்பது போல எகிறி குதித்தார் சுமிம்மா..
“அம்மா மெல்ல கட்டடம் தாங்காது..” என்ற திவாகரை அவர் கண்டுகொள்ளாமல் பிடிவாதத்துடன் நிற்பதை பார்க்க குழந்தை மாதிரியே தெரிந்தார் சுமிம்மா.
“ஹும்ம் இனி இவங்க நம்ம பேச்சைக் கேட்க மாட்டாங்க..” என்ற பாரதி அங்கிருந்த படப்படிப்பாளர்களிடம் பேச செல்ல அஜயும், பிரவீனும் அவனை பின் தொடர்ந்தனர். அவர்கள் பேசிவிட்டு வரும் பொழுது அவர்களுடன் சேர்ந்து மற்றொரு நபரும் உடன் வந்தான்..
“மேடம் படத்தில் அம்மா ரோலில் நடிக்கிற பெண் வரல.. நீங்க அவங்க மாதிரி இருக்கீங்க.. ஒரு இரண்டு வரி டைலாக் பேசினீங்கன்னா இன்னைக்கு சூட் ஓவர்..” என்று சொல்ல அவரும் சரியென்று சொல்ல அவருக்கு அளவான ஒப்பனைகள் போடப்பட்டு கேமரா முன்னாடி நிறுத்தப்பட்டார்..
அவரின் நடிப்பைப் பார்த்து எல்லோரும் மெய் மறந்து நின்றிருக்க நிலா மட்டும், “சுமிம்மா ஆல் ரவுண்டர்.. சான்சே இல்ல..” என்று சொல்லிக் கொண்டிருக்க அவளின் பின்னோடு கூட்டத்திற்குள் நுழைந்த சங்கரி, ‘சுமிம்மாவா..’ என்று வேகமாக எட்டிப்பார்த்தாள்.
அங்கே சுமிம்மா நடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து,
“சு..மி..ம்..மா..” என்று அதிர்ந்து நின்றிருக்க டேக் முடிந்ததும் சுமிம்மாவிற்கு ஆரஞ்சு ஜூஸ் கொடுக்கப்பட அதைக் குடிக்காமல் சுமிம்மா சோகமாக அமர்ந்திருந்தார்..
அவரின் முகத்தைப் பார்த்ததும், “ஏன் சுமிம்மா என்னவோ மாதிரி இருக்கீங்க..” என்று அஜய் அவனிடம் கேட்டான். அவனை நிமிர்ந்து பார்த்தவர், “இந்த அனிதா பொண்ணுதான் மகேஷ் பாபு கூட ஒரு சீன் நடிக்கனுன்னு சொல்லுவா..” என்றவரின் பேச்சில் இடையிட்டான் பாரதி..
“அதுக்கு இப்போ என்னம்மா பண்ணனும்..” என்று கேட்டான்.
“அவளை பற்றி ஒன்னும் இல்லடா.. மகேஷ் பாபு கூட ஒரு சீன் நடிச்சிட்டேன்.. என்ன அம்மா ரோலுக்கு பதிலாக ஹீரோயின் ரோல் கொடுத்திருந்தா..” என்றவர் முடிக்கும் முன்னரே அவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை முறைத்தனர்.
அப்பொழுது அவரின் அருகில் வந்த சங்கரி, “நீங்க சுமிம்மா தானே?” என்று கேட்க அவளின் குரல்கேட்டு நிமிர்ந்தவர் எதிரே நின்றிருந்த சங்கரியைப் பார்த்தும் அதிர்ந்து விழிக்க, “நீங்க யாரு..” என்று கேட்டான் பாரதி..
“நான் அவங்ககிட்ட பேசணும் அண்ணா..” என்றவள் தீர்மானமாக சொல்லிவிட்டு அவளின் பக்கம் திரும்பியவளை அவர்கள் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை பிரவீனைத் தவிர!
அனைவரும் யோசனையுடன் நின்றிருக்க, ‘ஐயோ தேடி வந்து நிற்கிறாளே..’ என்று மனதிற்குள் புலம்பினார் சுமிம்மா.
அவளை நிமிர்ந்து பார்த்த சுமிம்மா, “நீ வேற யாரோன்னு நினைச்சிட்டு என்னிடம் பேசறம்மா..” என்றவர் அவளை தெரியாதது போல நடிக்க சுமிம்மாவின் கையை சுரண்டிய பிரவீன் அவர் திரும்பிப் பார்த்தார்.
“சங்கரி சுமிம்மா..” என்று அவன் மெல்லிய குரலில் குறும்புடன் கூற அவனைக் கொலைவெறியுடன் பார்த்த சுமிம்மா, “டேய் வாயை மூடுடா..” என்று பல்லைக் கடித்த சுமிம்மாவின் பேச்சு அவளின் காதிலும் தெளிவாக விழுகவே செய்தது.
“நீ யாரும்மா..” என்று கேட்ட நிலாவிடம், “அவங்க என்னோட அம்மா..” என்றவள் சுமிம்மாவை முறைக்க, “இங்கே பாரும்மா.. இவன் என்னோட மகன்.. நான் என்னோட மகளோட கல்யாணத்துக்கு நெதர்லாந்தில் இருந்து வந்திருக்கேன்..” என்று அஜயைக் கைகாட்டினார் சுமிம்மா..
அவள் அவர்சொல்லும் பொய்களுக்கு எல்லாம் அசராமல் நின்றிருக்க, “சுமிம்மா..” என்று அவள் மீண்டும் பெயர் சொல்ல, “நான் சுமிம்மா இல்ல.. என்னோட பெயர் ஜெனிபர்..” என்று புதுபெயரைக் கூறிய சுமிம்மா அஜயின் பக்கம் திரும்பினார்.
“டேய் உன்னை நெதர்லாந்துக்கு டிக்கெட் புக் பண்ண சொன்னேனே பண்ணிட்டியா?” என்று அவர் அவனை மிரட்ட அவளையும் சுமிம்மாவையும் மாறி மாறி பார்த்த அஜய், “இனிதான் பண்ணனும்..” என்றான் பாவமாக..
அவனின் நிலையைக் கண்டு ரித்துவும், ரேணுவும் சிரிக்க, ‘இவங்க யாரு..’ என்ற சிந்தனையில் நின்றிருந்த திவாகர் மண்டையை உடைத்துக் கொண்டான்.
“இந்த பொண்ணைத்தானே நம்ம பிரவீன் லவ் பண்றான்..” என்று நிலா பாரதியிடம் கேள்வி கேட்க தம்பியின் முகம் பார்த்துவிட்டு, “ம்ம் அவனோட பார்வையை சரியில்ல..” என்றவன் குறும்புடன் சிரித்தான். பிரவீனின் பார்வை அவளின் மீது குறும்புடன் படிந்தது.
“சரி நீங்க பர்சேஸ் முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க..” என்றவர் எழுந்துக்கொள்ள, “அம்மா எனக்கு இந்த பெண்ணிடம் பிடிச்சிருக்கு..” என்று பிரவீன் குறும்புடன் கூறினான்..
‘என்னைக் கூண்டு கிளியாக மாற்றாமல் விடமாட்டான் போலவே..’ என்றவர் நொடியும் தாமதிக்காமல் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார்..
“சுமிம்மா..” என்று சங்கரி அவரைப் பின் தொடர, “என்னோட பேரு ஜெனிபர்..” என்றவர் அடுத்த சிலநொடியில் ரோடு கிராஸ் பண்ணி அந்தபக்கம் சென்றவர் அங்கே பைக்கில் வந்த ஒருவனை நிறுத்தினார்.
“தம்பி நான் என்னோட பிள்ளைகளுடன் ஷாப்பிங் வந்தேன்.. நான் பெத்தது என்னை விட்டுட்டு கிளம்பி போயிருச்சுப்பா.. என்னை என்னோட வீட்டில் மட்டும் இறக்கி விட்ட உனக்கு புண்ணியமாக போகுப்பா..உனக்கு தலைநாளில் பையன் பிறக்குப்பா..” என்றார்.
அவரை ஏறயிறங்க பார்த்தவன், “அம்மா நீங்க வாங்க நான் உங்களை வீட்டில் கொண்டு போய் விடுகிறேன். உங்களுக்கு அட்ரஸ் தெரியும் இல்ல..” என்று சந்தேகமாக இழுத்தான்..
அதற்குள் சங்கரி அருகில் வருவதைக் கவனித்த சுமிம்மா, “ம்ம் தெரியும்ப்பா..” என்றவர் அவனின் பின்னோடு பைக்கில் ஏறிவிட அவனும் கிளம்பிவிட்டான். அவரின் ஓட்டமும், பதட்டம் படந்த முகமுமே அது சுமிம்மாதான் என்று உறுதி செய்தவள் உடனே போனை கையில் எடுத்து அனிதாவிற்கு அழைத்தாள்..
அவள் ஒரே ரிங்கில் போனை எடுக்க, “நீயெல்லாம் எதுக்குக்கா ஊருக்குள் இருக்கிற..” என்று அடுத்த எடுப்பில் அவளின் மீது எரிந்து விழுந்தாள் சங்கரி..
“ஏய் எதுக்கு இப்போ கத்தற..” என்று அவள் புரியாமல் கேட்க, “நீ போனை வை.. நான் வீட்டில் வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்..” என்று அவளை மிரட்டிவிட்டு கடுப்புடன் போனை வைத்தவள் சுமிம்மா சென்ற திசையை நோக்கினாள்.
சுமிம்மா பேயைக் கண்டது போல ஓடுவதைப் பார்த்த பாரதிதான் ஒரு முடிவுடன் சங்கரியை நோக்கிச் சென்றான். மற்றவர்கள் அவளை பின் தொடர, “அம்மா என்னை ஏமாத்திட்டீங்க இல்ல..” என்றவள் கோபத்துடன் நின்றிருந்தாள்..
அவர் சொன்ன அட்ரஸில் அவரை இறக்கிவிட்டவன், “இனிமேல் வெளியே போகும் பொழுது அவங்களோட போகாதீங்க அம்மா..” என்று அக்கறையுடன் சொல்லிவிட்டு அவன் சென்றுவிடவே நிம்மதி உணர்வுடன் வீட்டிற்குள் நுழைந்தார் சுமிம்மா. இனி என்ன நடக்கும்..?