UKK17

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-17

 

“அதுக்குள்ளயா வந்துட்டான்”, என பார்ட்டியின் அவசரத்தை வியந்தபடி கதவைத் திறந்தவள், வெளியில் நின்றிருந்தவர்களைக் கண்டு ஒரு நொடி ‘அவசரப்பட்டுட்டோமோ’ என்று ஒரு கனம் யோசித்தவள், எல்லாம் கைமீறியபின் பின்வாங்குவது தனக்கு நல்லதல்ல என நினைத்து வந்தவர்களை உள்ளே அழைத்து வந்தாள்.

பார்த்தவுடன் தெரிந்தது, வந்திருப்பது நாற்பது வயதை நெருங்கும் அவள்+அவன்= அவர்… ஒரு அர்த்தநாரீஸ்வரரின் வம்சாவழி என்று. அவனுடன் வந்திருந்த இன்னும் மூன்று நபர்கள் இவள் அழையாமலேயே உள்ளே வந்து அமர்ந்திருந்தனர்.

மௌனிகாவிற்கு சற்று மனபாரமாக இருந்தாலும், தனது செயலால் மனம் முரண்டினாலும் துணிந்து உள்ளே அழைத்து வந்திருந்தாள்.

அமரை விட்டு அர்ச்சனாவை அப்புறப்படுத்த அவள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.

கொல்கத்தா செல்லும் அமர் ஒரிசாவிலேயே மனைவியை விட்டுச் செல்வான் என எதிர்பார்த்து, அங்கிருந்த மலைவாழ் மனிதன் ஒருவனின் உதவியுடன் அர்ச்சனாவை அமரிடமிருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்த எண்ணியிருந்தாள், மௌனிகா.

அமருடன் அர்ச்சனாவும் இணைந்து கொல்கத்தா செல்லும் முடிவால் மௌனிகாவின் திட்டம் தவிடுபொடியாகி இருந்தது.  இதனை அவள் முற்றிலுமாக எதிர்பார்க்கவில்லை.

அர்ச்சனாவின் லோகேசனையே தனது அலைபேசி வாயிலாக பின்தொடர்ந்தவளுக்கு அமருடன் அர்ச்சனாவும் கருத்தரங்கத்திற்கு முந்தைய தினமே கொல்கத்தா வந்தது தெரிந்ததும் சோர்ந்திருந்தாள் மெளனிகா.

ஒரிசாவில் அவள் பணித்திருந்த, அர்ச்சனாவைக் கடத்த ஒப்புக்கொண்ட மலைவாழ் இனத்தவன்… மௌனிகாவிற்கு அழைத்து… அர்ச்சனா ஒரிசாவின் பொட்டங்கி கிராமத்தில் இல்லை எனக் கூறியபோது, தன்னை மீறி அவனிடம் புலம்பிவிட்டாள்.

அப்போது அவன்… தற்போது அவள் எங்கிருக்கிறாள் என்பதைக் கூறினால் அந்த இடத்தில் இருந்து அர்ச்சனாவை தன்னால் அப்புறப்படுத்த இயலும் என உறுதியாகக் கூறவே, அர்ச்சனா கொல்கத்தா சென்ற செய்தியை அவனுடன் பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு வந்திருந்தாள் மௌனிகா.

மௌனிகா பணித்திருந்த ஒரிசா நபர், கொல்கத்தா என்றவுடன் சற்று நேரம் யோசித்தவன், மெளனிகாவை மீண்டும் அழைப்பதாகக் கூறி அவனது அழைப்பைத் துண்டித்திருந்தான். பத்து நிமிடங்களில் ஒரு அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மௌனிகாவின் அலைபேசிக்கு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தான்.

உடனே அந்த எண்ணுக்கு அழைத்துப் பேசினாள் மௌனிகா. மெளனிகாவின் அலைபேசி அழைப்பை ஏற்ற கொல்கத்தாவைச் சேர்ந்தவன், யார் தனது அலைபேசி எண்ணை மௌனிகாவிற்குத் தந்தது எனக் கேட்கவே, ஒரிசா மலைவாழ் இனத்தவனின் பெயரைக் கூறினாள் மெளனிகா.

அதற்கு மேல் எதுவும் விவரம் கேட்காமல், நேரடியாக விஷயத்திற்கு வந்திருந்தான் அலைபேசியின் மறுமுனையில் இருந்தவன். பெண்ணின் புகைப்படத்தை பார்க்க வேண்டும் என அழைப்பின் மறுமுனையில் இருந்தவன் கேட்கவே, முகநூலில் இருந்த அர்ச்சனாவின் படங்களை எடுத்து அவன் கூறிய வாட்சப் எண்ணுக்கு அனுப்பியிருந்தாள் மெளனிகா.

அதுவரை கடத்தலின் வீரியம் புரியாமல் காரியத்தை செய்ய ஆரம்பித்திருந்தவளுக்கு, அடுத்தடுத்து அவனிடமிருந்து அழைப்புகள் மற்றும் கட்டளைகள் என வரவே ‘இது என்னடா பெரிய எரிச்சல் பிடித்ததான கட்டளைகள்’ என எண்ணினாலும், தனது கனவை எண்ணி அமைதியடைந்திருந்தாள்.

அர்ச்சனாவை, யாரும் சந்தேகப்படாதவாறு… அவள் தங்கியுள்ள இடத்தில் இருந்து கொல்கத்தான் குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து வருமாறு மட்டுமே அவளுக்கு பணி கொடுக்கப்பட்டிருந்தது.

அதற்கு அவன் சார்ந்த நபர்கள் யாரும் உதவமாட்டார்கள் எனவும், அது அவளின் சாமார்த்தியம் என்றும், அதன்பிறகு பொருளை (அர்ச்சனாவை) பெற்றுக் கொள்ளும் தளமாக அவர்கள் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு வந்த அரை மணி தியாலத்தில், அவ்விடத்தில் வந்து நேரில் பொருளை பெற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தான்.

அதுபோலவே, அவர்கள் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு கொல்கத்தாவில் தங்கி பணிபுரியும் தனது பள்ளித் தோழனின் உதவியுடன் அர்ச்சனாவை அழைத்து வந்தவளுக்கு எதையோ சாதித்தது போன்ற திருப்தியில் இருந்தாள் மௌனிகா.

கொல்கத்தான் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு வந்தவுடன், வந்த செய்தியை அவனுக்கு அழைத்துக் கூறியிருந்தாள். அரைமணித் தியாலத்தில் வருவதாகக் கூறியிருந்தவன் அதற்கு முன்பாக வந்தது முதல்  இன்ப அதிர்ச்சி.

வந்தவர்களைக் கண்டவுடன்… அவனின் புற உருவமும், அவனைச் சுற்றியிருந்த மூவரின் வெளித்தோற்றமும் அவர்களின் தொழிலை கூறாமல் கூறவே… விடயம் புரிந்தவளுக்கு சற்று தயக்கமும், கூடவே அவள் இதுவரை அறியாத பயமும் எட்டிப் பார்த்தது உண்மை.

ஆனாலும் தனது கனவை, தன்னை நிராகரித்தவனையே தனக்கு மணவாளானாக்கி காலம் முழுமையும் அவனை தன் அடிமையாக்கி வாழும் தனது கனாவை… வாழ்வின் இலட்சியமாக்கிக் கொண்ட தனது மனநிலையில் இருந்து பின்வாங்கும் உத்தேசம் இல்லாமல் செயல்படுத்தத் துணிந்திருந்தாள், மெளினிகா.

 

 

சோபாவில் படுத்து இருந்தவளை ஆசையாக பார்த்திருந்த அர்த்தன், கோவிலின் மூலவரைக் காண்பது போல அர்த்தத்துடன் இரண்டு முறை சுற்றி வந்தான்.

சோபாவின் அருகே இழுத்து போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்து, தெளிவான ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தான் அர்த்தன்.

“சரி, நீங்க என்ன எதிர்பார்த்தாலும் நான் தரத் தயார், இங்க வாங்கிக்கறதா இருந்தாலும் சரி, இல்ல எங்க வேணுமோ அங்க உங்களுக்கு பணமாவோ, இல்ல பொருளாவோ தந்திறேன்”, அர்த்தன் மௌனிகாவைப் பார்த்துக் கூறினான்.

பிறகு அர்ச்சனாவை நோக்கி தூய தமிழில்,

“பட்டு, கஷ்டப்படாம எழுந்திரு”, எனக் கூற

அர்த்தனின் தமிழில் வியந்த மெளனிகா, “உங்கள பாத்தா தமிழ் மாதிரி தெரியலயே?” என்றபடி “அவ மயக்கத்தில இருக்கா, நான் தண்ணி எடுத்துட்டு வரவா?”

“ஹனி மயங்கல… அந்த மாதிரி உன்ன ஏமாத்திட்டு படுத்திருக்கா… என் பட்டு என்னையே மயக்குறா!”, அதையே ரசனையாக தமிழில் ஜொள்ளினான்.

“என்ன சொல்றீங்க?”, அதிர்ச்சியாக கேட்டாள் மௌனிகா.

அதற்குள் தன் கைவிரலால் ஆசையாக அர்ச்சனாவின் கன்னம் தடவி இதழில் கை வைக்கும் முன் அர்த்தனின் கையை தட்டிவிட்டிருந்தாள் அர்ச்சனா.

அர்ச்சனாவின் செயலைக் கண்ட மௌனிகா, “நல்லா நடிப்ப போல”, என அலட்சியமாகக் கேட்க, கண்களைத் திறந்து மெளனிகாவைப் பார்த்தவள்

“உன்ன விடவா நான் நடிக்கிறேன்”, படுத்த நிலையில் வினா எழுப்பியிருந்தாள் அர்ச்சனா. அவளின் பேச்சை அருகில் இருந்தவன் ரசிப்பதை அவள் கவனிக்கவில்லை.

“சரியா சொல்ற, உண்மையில… அமர பின்னுக்கு தள்ளிட்டு, யுனிவர்சிட்டில நான் ஃபர்ஸ்ட் பிளேச பிடிக்கணும்னு அவங்கூட ஃப்ரண்ட போல பழகினேன், ஆனாலும் அவன் தான் ஜெயிச்சான். எனக்குள்ள இருந்த தோல்வி மனப்பான்மைய அவன விட அதிக சம்பளம் வரக்கூடிய உத்யோகத்தில சேர்ந்து ஜெயிச்சதா நினச்சேன்.

அதிகமா சம்பதிச்சேன், ஆனா அதிலயும் ஒரு நிறைவு இல்ல எனக்கு.  அதனால அந்த வேல, சம்பளம் எல்லாம் தோல்விதான்… அதான் அமர கல்யாணம் பண்ணிக்கணும்னு எங்க அப்பாவ விட்டு கேக்க சொன்னேன்.  அதையும் அவன் ஏத்துக்கல… அதனால இன்னைக்கு நீ கஷ்டப்படற”, என்று பேசியவளை படுத்தபடியே பார்த்திருந்தாள் அர்ச்சனா.

அர்ச்சனாவின் அலட்சியத்தைப் பொருட்படுத்தாமல் அர்த்தன் தன் இரு கைகள் கொண்டு தூக்கி அமர வைத்தவனை தன் விழிகளின் பார்வைக்கு தந்தவள்

தனது (மயக்கம்போல நடித்திருந்த) குட்டு வெளிப்படக் காரணமானவனைப் பார்த்தாள். அழகி + அழகன் = அர்த்தன்.  ஆனால் ரசிக்க இயலாத அவனின் இருமுகத் தன்மை, அவளுக்கு பயம் தந்தது…  பார்க்கும் போது… ஆண்களின் ஜீன்ஸ், வெண் நிறத்தில் உள்ளாடை தெரியும் வகையிலான சட்டை அணிந்திருந்தாலும் அச்சம் வரச் செய்த தோற்றம்.

கண்களுக்கு மை தீட்டி, மீசையில்லாமல் அவனைக் கண்டவளுக்கு பூச்சாண்டியைப் பார்த்து அழும் குழந்தை போல அழுகை வந்தது.

“ஊட்டி ரோஜாவாட்டம் இருக்க”, அர்த்தன் பிதற்ற

அழுகையுடன் கைகளைக் குவித்து “என்னை விட்ருங்க… நான் எங்காவது கண் காணாத இடத்துக்கு கூட போயிறேன்”, என அர்ச்சனா அழ ஆரம்பிக்க

“ஹனி, உன்ன ராணி மாதிரி வச்சுக்கறேன், என்னப் பாத்தா பயப்படற… உன்னை ஃபோட்டோல பாத்ததுல இருந்து நேருல பாக்க துடியா துடிச்சிக்கிட்டு இருக்கற என்னப் பார்த்து உனக்கு பயம் வேணாம்”, அர்த்தநாரீஸ்வர உருவம் பேசியது.

அர்த்தனின் ஜொல்லைக் கண்டு ‘எல்லா இனத்துக்கும் இவள பிடிக்கும் போல’ என மனதில் நினைத்தாலும் அதை வெளிக்காட்டாமல், “அழாம போறீயா இல்ல திரும்பவும் மயக்க மருந்து கொடுக்கவா?”, மெளனிகா

“எல்லாம் உன்னால தான், உனக்கு நான் என்ன கெடுதல் பண்ணேன், அவரு உன்ன வேணானு சொன்னதுக்கு… என்ன இங்கல்லாம் கொண்டு வந்து இவன் முன்னாடி நிறுத்திருக்க… நீ ஒரு பொண்ணா?

என்னய அவ்வளவு கொற சொல்ற… நீ, ஆனாலும் என்னை வச்சு வாழ பிரியந்தான் என் மாமாவுக்கு. ஆனா உன்ன வேணானு ஏன் சொன்னாருனு புரியாம… மேல மேல தப்பு பண்ணு, இதுல என்னய கொற சொல்ல வேறு வந்துட்டா… பெரிய இவளாட்டம்”, எனக் கோபமாகப் பொரிந்தாள்.

“ஆம்பளைக்கு பெரும்பாலும் தனக்கு அடங்கியிருக்குற பொண்ண தான் ரொம்ப பிடிக்கும், அடாவடிப் பொண்ண எல்லா ஆம்பளைங்களுக்குப் பிடிக்காது”, அர்ச்சனாவை விட்டு விழியை எடுக்காமல் ரசனையாகக் கூறினான் அர்த்தன்.

“அத அவகிட்ட சொல்லுங்க… நான் அடங்கலயாம் மாமாவுக்கு, இவ கண்டா…”, கோபமாகப் பேசினாள் அர்ச்சனா.

“என்னடி எல்லாம் கேட்டுட்டியா? “, என அலட்சிய பார்வை ஒன்றை அர்ச்சனாவின் மீது வீசியவள் “சீக்கிரம் கிளம்பு சத்தமில்லாம, எனக்கு நிறய வேல கிடக்கு”

“நீ என்ன இங்க கூட்டிட்டு வந்ததுக்கு என்னனு ஆளாகப் போறீயோ எனக்கு தெரியல, ஆனா மாமா கண்டிப்பா… நான் இல்லாம போனாலும் உன்னய மட்டும் ஏத்துக்கவே மாட்டாரு, அது எனக்கு தெரியும்”, அமரை மெளனிகாவின் வார்த்தைகளால் சற்று முன் படித்திருந்தாள்.

“அத நான் பாத்துக்கறேன், இப்ப நீ கிளம்பு”, மெளனிகா.

“என்னய எப்டியும் தேடி வந்துருவாறு, அப்புறம் இருக்குடி உனக்கு கச்சேரி”

“எப்டி வருவான்?, இந்த இடத்தைக் கண்டுபிடிச்சு அவன் இங்க வரது எல்லாம் நடக்கற காரியமா?, வளவளன்னு பேசாம கிளம்புடி மொதல்ல”

“அவர பத்தி அவ்வளவா எனக்கு முன்னாடி தெரியாதுங்கறத ஒத்துக்கறேன்.  ஆனா நீ பேசினத கேட்டபின்னதான் எனக்கு தைரியம் வந்திருச்சு, அவரு கண்டிப்பா எப்படியும் என்னைக் காப்பாத்தி கூட்டிட்டு போவாரு”

“அப்ப தைரியமா கிளம்பு, அவன் வந்து உன்ன காப்பாத்தட்டும்,  அதையும் நான் பாக்கறேன்”

“நடக்காதுன்னு நினைக்கறியா… இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ள அது நடக்கும்”

“ஜோசியமெல்லாம் சொல்லாம இடத்த விட்டு மொதல்ல கிளம்பு…”, அலட்சியமாக சிரித்தபடி சொன்னாள் மௌனிகா.

“எனக்கு தெரியும் என்னைய பாத்துக்க”, என இருவரின் வாக்குவாதம் நீள…,

அர்த்தன் தனது தொழிலில் உள்ள சில இடர்பாடுகளைக் கணித்து, தனது பணியில் ஆயத்தமாக எண்ணி, அர்ச்சனாவின் கைபிடிக்க, அதற்கு மேல் அமர்ந்திருந்தாள் வரும் சங்கடங்களை உணர்ந்து இருந்த அர்ச்சனா, அமர்ந்திருந்த சோபாவில் இருந்து எழுந்திருந்தாள்.

அர்த்தனின் செயல்பாடுகளைக் கண்டு, அர்த்தனுடன் வந்திருந்தவர்களில் ஒருவன் அவர்களுக்கு முன் சென்று கதவைத் திறந்தான்.

திறந்தவன்… அசையாமல் நின்றிருந்தான்.

*****************************************

 

தொலைக்காட்சியில் தொலைந்திருந்தவன் மனைவியின் வருகையை உணரவில்லை.  அடுக்களைக்குள் சென்று தேநீர் தயாரிக்கும் பணியில் இருந்தவளை பின்னிருந்து இரு கைகள் அனைத்ததும், அந்த எதிர்பாரா அணைப்பில் முதலில் அரண்டிருந்தாலும் பிறகு சமாளித்திருந்தாள்.

“என்ன பாஸ், டிவிக்குள்ள முத்துக்குளிச்சிட்டு இருந்தவருக்கு என் முதுகுப்பக்கம் என்ன வேல?”, என்றாள் சிரித்தபடி

“லாக்கர தான் பாக்கவிடல, அதான் என்னோட லாக்கர் இருக்குற பேங்க… வாசல்ல இருந்து பாக்கலாம்னு வந்தேன்”, மனைவியின் பயிற்சியில் தன்னை தேற்றியிருந்தான்.

“பேங்க பாத்த மாதிரி தெரியலயே, பேங்கையே உங்க கஷ்டடியில கொண்டு வந்தா மாதிரியில்ல தெரியுது”

“அப்டியா தெரியுது?”, என்றபடி கழுத்துப் பகுதியில் இதழ் பதிக்க, பதித்தவனின் உணர்வுகளை ஜனதாவின் உடலுக்குள் இடம் மாற்றியிருக்க, இன்ப அலை ஜனதாவை மீட்ட உன்னதமான இன்ப உணர்வுடன்

“பாஸ்… டீ வேணும்னா கொஞ்ச நேரம் ஹால்ல இருங்க, நீங்க இப்டி பண்ணா என்னால ஒரு வேலயும் செய்ய முடியாது”, என்றபடி தன்னை பின்னாலிருந்து அணைத்து பிடித்திருந்தவனின் கைகள் ஜனதாவின் வயிற்றுப் பகுதியை சுற்றி இருக்க, அவளின் கை கொண்டு சுற்றி இருந்த கணவனின் கைகளுக்குள் இருந்து கைகளைப் பிரித்து வெளிவந்தபடி கூறினாள்.

“சரி… அஞ்சு நிமிசந்தான் உனக்கு இங்க வேல, அதுக்குள்ள நீ ஹாலுக்கு வரலன்னா, நான் இங்க வந்திருவேன்”, என்றபடி ஹாலுக்கு கிளம்ப

“நான் என்ன மந்திரவாதியா… அஞ்சு நிமிசத்துல டீ போட… டீ போட்டு எடுத்துட்டு வரேன் இப்ப நீங்க ஹாலுக்கு போங்க”

அதற்குமேல் அங்கு நிற்காமல் ஹாலில் வந்து டிவியில் ஒரு கண்ணும், அடுக்களையின் வாயிலில் ஒரு கண்ணுமாக அமர்ந்திருந்தான் சந்துரு.  இவன் புதியவன் ஜனதாவிற்கு.  இது வரை வேலை வேலை என்று திரிந்தவன்.  அவர்களின் அறைக்குள் மட்டும் இந்திரனாக, சந்திரனாக, மன்மதனாக வலம் வந்திருந்தவன் இன்று முழுவதும் மன்மதனாக மாறியிருந்த அதிசயத்தை ரசித்திருந்தாள் பெண்.

தேநீர்  அருந்தியபின் ஜனதாவின் மடியில் தலைவைத்துப் படுத்தவாறு தொலைக்காட்சியில் வரும் காட்சிகளைப் பற்றி மனைவியிடம் பேசியபடி இருந்தான், சந்துரு.

ஜனதா, சந்துருவின் தலையில் வருடிக் கொடுத்தவாறு கணவனின் அண்மையை ஆகர்சித்து ஆனந்தத்திருந்தாள். தொலைக்காட்சியில் வரும் காட்சிகளில் கவனம் இருக்கும் வரை பொது விடயங்களை அணுகி அலசியிருந்தனர்.

குடும்பக்கதை மட்டுமல்லாமல் உடலும் மனதும் குதூகலிக்கும் வகையில் வகை தொகையான ஒருவர் அறியாத விடயங்களை தன் சரிபாதிக்குப் பகிர்ந்து, பேசியே நேரத்தை ராக்கெட் வேகத்தில் கடந்திருந்தனர்.

நேரம் செல்லச் செல்ல தொலைகாட்சியின் காட்சிகளில் தொலையாமல் ஒருவரின் அருகாமையில் மற்றவர் தொலைந்திருந்தனர்.  காட்சிகள் அங்கு காணாமல் போயிருக்க, இருவரைத் தவிர சுற்றம் மறந்து போயிருந்தது.

நேரமானதால் வயிற்றுப்பசிக்கும், இருவரின் அருகாமையினால் வாலிப பசிக்கும் இடையே இருவரும் சிக்கித் தவித்திருந்தனர். ஒரு முடிவுக்கு வர இயலாதவனாய், மனைவியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு சந்துரு சற்று விலகியிருந்தான்.

பெண்மையின் இயல்பான நாணம் கணவனை தானாக நெருங்கத் தடைபோட, ஜனதா அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்க இயலாத நிலையில்… தன்னிலையை கணவனுக்கு எவ்வாறு உணர்த்துவது என தவித்து இருந்தாள்.

தவிப்புகளைத் தவிர்க்கும் வழி அறியாத சந்துரு, தன் தவிப்பை மனைவிக்கு தெரிவிக்க எண்ணி… அமர்ந்திருந்தவளின் கழுத்தைச் சுற்றி இருகரங்களால் அவளின் வதனத்தை தன்னை நோக்கி இழுக்க, மறுக்காமல் இசைந்தவளின் இதழை மீட்டியிருந்தான்.

மீட்டலால் நாணம் ஓழிந்த வேளை… பெண்ணவளின் உணர்வுகள் கணவனை கொள்ளை கொள்ளத் துவங்கியிருந்தது. நாணம் கடந்த பெண் தனது செயல்களின் மூலம் கணவனுக்கு பச்சைக் கொடி காட்ட அதற்குமேல் கணவன் மனைவியை ஆட்சி செய்ய துவங்கியிருந்தான்.

அதற்குமேல் இருவரும் இருந்த இடம் மறந்து போயினர். தடை தகர்க்க… எழுந்த கைகளைத் தடை செய்தவளை யோசனையாகப் பார்க்க, அவளின் கண்களில் தெரிந்த நாணம் சொன்ன செய்தியை உணர்ந்தான்.

இருக்கும் இடத்தை உணர்ந்து பெண்ணவள் நாணியதை எண்ணி, தன் கைகளில் தன்னவளை ஏந்தியவன் அவர்களின் அந்தப்புரம் நோக்கி நடந்தான்.

படுக்கையில் விட்டவனை தன்னோடு இழுத்து… தடை தகர்க்க துவங்கியவனை ஆடையாக்கி இருந்தாள் பெண்.  வசந்த வாசல் திறந்த வேளை தடுமாற்றம் இல்லாமல் வாலிபம் விளையாட ஒருவருக்கொருவர் வசியமாகி இருந்தனர்.

இந்திரலோகத்தின் இன்பங்களையெல்லாம் மொத்தமாக திரட்டி ஒரே நேரத்தில் அணு அணுவாய் சுவைத்து, ரசித்து, இந்திரியங்கள் தெறிக்கும் கலவியை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தனர் இருவரும்.

களைப்பை மீறிய களிப்பு இருவருக்குள்ளும் இருக்க… மயக்கத்திலிருந்து மீண்டவன், மனைவியை விட்டு எழ, அதுவரை ஆடையாக இருந்தவன் அகன்ற வேளையில் படுக்கையில் இருந்த விரிப்பை ஆடையாக்கி கணவனை முறைத்தாள்.

“அவசரக்குடுக்கை”, முணுமுணுத்தாள்

“ஏய் என்னடி முணுமுணுக்கற?”

“…”, அவனைப் பார்க்கவே செய்யாமல் விரிப்பிற்குள் தலையை நுழைத்திருந்தாள் ஜனதா.

“நான் கடைக்குப் போயி எதாவது நைட் சாப்பிட வாங்கிட்டு வரேன்… நீ ரிலாக்ஸா கீழ வா”, என்றவன் தன்னை சரிசெய்து கொண்டு உடைமாற்றி வெளியே கிளம்பினான் சந்துரு.

கணவன் செல்லும் வரை படுக்கையில் இருந்தவள், அதன்பின் எழுந்து பாதிக் குளியல் முடித்து வெளிவரவும், சந்துரு உணவுடன் வீட்டிற்குள் நுழையவும் நேரம் சரியாக இருந்தது.

*****************************************