வீரேந்தர், திலீப் சட்டையை பிடித்து இழுத்த இழுப்பில் அவன் சட்டை கிழிந்து தொங்கியது. ரஞ்சித்தும் சரணும் பெரு முயற்சி செய்து அவர் பிடியில் சிக்கி தவித்து கொண்டு இருந்த திலீப்பை மீட்டார்கள்.
ரஞ்சித், வீரேந்தரை பிடித்து கொள்ள,சற்று நேரத்தில் தன்னை சமாளித்து கொண்ட அவருக்கு, தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான் சரண்.அதை முகத்தில் முதலில் அப்படியே சாய்த்த அவர் யூனிபோர்ம் நனைவதை பற்றி கூட கவலை படவில்லை.
மீதம் இருந்த பாதி பாட்டில் நீரை குடித்தவர்,நெஞ்சில் எரிந்து கொண்டு இருந்த தீயை, அதன் மூலம் அணைக்க முடியுமா என்று முயன்றாரோ என்னவோ!
அங்கு இருந்தவர்களுக்கு வீரேந்தர் நிலைமை புரியாமல் இல்லை. அவரே சமாளித்து கொள்ளட்டும் என்று அவருக்கு நேரம் கொடுத்து அமைதியாய் நின்றவர்கள் மனதில் பல கேள்விகள்,குழப்பங்கள்.
விடை?
எல்லா மரணங்களும் ஏற்க முடியாத ஒன்று தான் என்றாலும் ஒரு சிலர் இழப்பு நெருஞ்சிமுள்ளாய் உறுத்தி கொண்டே இருக்கும். ’ரேஷ்மா வன்சினி‘ மரணம் அந்த வகை.ரொம்ப சென்சிடிவ் விஷயம் அர்ஜுன் குடும்பத்திற்கு.
ரேஷ்மா வன்சினியை சிறு வயது முதல் தூக்கி வளர்த்தது வீரேந்தர்.ஏறக்குறைய அந்த வீட்டின் இளவரசி வன்சினி. வன்சினி என்றால் பஞ்சாபி மொழியில் “குடும்பத்தின் விளக்கு” என்று பெயர்.
பொருத்தம் பார்த்து வைத்து ,அர்ஜுன் குடும்பத்தின் விளக்காகவே வளர்க்க பட்ட பெண்மணி “ரேஷ்மா வன்சினி” .குருதேவின் முதல் மனைவி.அர்ஜுன் அத்தை.
அந்த வீட்டில் அவர் மரணத்தால் அதிகம் நிலை குலைந்து போனவரும் தந்தை ஸ்தானத்தில் இருந்து வளர்த்த அண்ணன் வீரேந்தர் தான்.
அவர் தங்கை முரட்டு குணம் உள்ள பெண் தான்.வெட்டு ஒன்று துண்டு ரெண்டு யார் மனதையும் பற்றி கவலை படாமல் பொரிந்து விடும் மூர்க்கத்தனம் கொண்டவர்.
‘ஹிஸ்டிரியா பேஷண்ட்’ என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொண்டவர்.
வாழ்க்கை என்பது எங்கு நாம் வளைகிறோம், எங்கு நாம் திடமாய் நிற்கிறோம் என்பதை பொறுத்து அமைவது.
அப்படி வளைய தேவையே இல்லாமல்,அவர் நினைப்பது கூட நிறைவேற்றி விடும் பிறந்த வீடு,புகுந்த வீடு ரெண்டும் அமைந்தும் வாழ்க்கையை துளைத்த துர்பாக்கியவாதி வன்சினி!
“தான்’ என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை.” என்று கவிஞ்சர்கள், ஞானிகளாய் முன்னரே எழுதி வைத்து விட்டு விட்டார்கள்.
வாழ்க்கை சிலருக்கு வரமாய் இருந்தாலும், அதை சபிக்கபட்ட ஒன்றாய் பணத்திற்காகவும், வீண் வரட்டு கெளரவம் ,ஈகோ,ஆணவம், திமிரால் தொலைத்து விடும் சில அற்ப ஜென்மங்களின் பிரதிநிதியாய் இருந்தவர் வன்சினி.
அன்பு, பாசம், காதல் எதையும் தகர்த்து விடும் என்பது உண்மை தான் என்றாலும், இந்த அன்பு, காதலை வைத்து வன்சினியை திருத்த குருதேவ் தவறி விட்டாரா, இல்லை வளர்ப்பில் இவர்கள் தடுமாறி விட்டார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியே.
குருதேவ் குடும்பத்தை காப்பாற்ற ரா பகல் பாராமல் உழைத்து கொண்டு இருக்க, 24 மணி நேரமும் தன்னை குருதேவ் கொஞ்சாததற்கு காரணம் தன்விக்கும், குருதேவ்விற்கும் இருக்கும் affair என்று சண்டை போட்டு விட்டு தான் பிரிந்து வந்து இருந்தார்.
அவர் சொன்ன உறவு உண்மையா என்பதற்கான ஆதாரம் அவரிடம் உள்ளதா என்று பல முறை கேட்டும் வன்சினி வாயை திறக்கவே இல்லை.
உடன் வேலை செய்தால் இப்படி எல்லாம் கதை திரித்து கட்டும் சில ஜென்மங்களை, வேலைக்கு என்று செல்லும் பெண்கள் வாழ்வில் கடந்து தான் வர வேண்டி இருக்கிறது.
அழகான நட்பு அங்கே களங்கபடுத்த பட்டது. ஒரு பெண்மை ஒரே வார்த்தையில் ஊரின் முன்னே ஒழுக்க கேடாய் சித்தரிக்கபட்டது.
“என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்“என்று வன்சினி ஊரை கூட்டியே பாடி விட்டார். அங்கு சந்தேகம் படும் வண்ணம் அவர் உருவாக்கிய பூதம் இல்லவே இல்லை என்பது தான் ஹைலைட்.
யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டது மட்டும் இல்லாமல் மற்றவர்களின் வாழ்வையும் நரகமாக்கி கொண்டு இருந்தது.
ஏற்கனவே மதம் கொண்ட யானை ‘சந்தேகம்’ என்ற மிக கொடிய நோய் பிடித்து கொள்ள, பூத்த அழகான காதல் என்னும் செடி,காலில் நசுக்க பட்டு யாருக்கும் பயன் இல்லாமல் மாறி போனது.
வன்சினி மரணித்த அன்று அர்ஜுன் குடும்பம் மொத்தமும் சண்டிகரில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்று இருந்தனர்.எவ்ளவோ கேட்டும் வன்சினி திருமணத்திற்கு வர முடியாது என்று பிடிவாதமாய் இருந்து விட்டார்.
இவர்கள் கிளம்பிய சற்று நேரத்திற்கு எல்லாம் குருதேவ் வன்சினியிடம் பேச வந்து இருக்கிறார்.வழக்கமாய் தினமும் காலை வந்து வன்சினியை அழைப்பது அவர் வேலை.
‘தன்மானம்’ என்ற ஒன்றை விட்டு,காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக இல்லை பாவத்திற்காக ஊர் உலகத்தின் முன் அவமானபட்டும், தினமும் தன்னுடன் வந்து விடுமாறு கெஞ்சுவது குருதேவ் வேலை.
“சர்தான் போடி” என்று போகாமல் தன் திருமண வாழ்வை மீட்க தினமும் வந்து போராடுவது குருதேவ் தினப்படி கடமைகளில் ஒன்றாகவே மாறி தான் போனது.
ஆனால் இந்த முறை குருதேவ் கோபத்துடன் காண பட்டதாய் மற்றவர்கள் கூறினார்கள்.வந்த உடனே ஓங்கி வன்சினியை அறைந்து இருக்கிறார்.கோபமே படாத குருதேவ் வன்சினியை அடித்தார் என்ற செய்தியே இவர்களால் நம்ப தான் முடியவில்லை.
வயல் வெளிகளில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் தான் அவர்களுக்குள் மூண்ட சண்டையை விலக்கி இருக்கிறார்கள். குருதேவ்வும் அதற்கு மேல் அங்கு நில்லாமல் கிளம்பி விட்டு இருந்தார்.
மழைக்காலம் என்பதால் சட்டென்று மேகம் மூடி கொள்ள, வேலை செய்து கொண்டு இருந்தவர்களை வன்சினியே வீட்டுக்கும் அனுப்பி வைத்து இருக்கிறார்.
மாடியில் காய வைத்த துணி எடுக்க சென்றவர்,பாசி படிந்த படிகளில் உருண்டு கவனிக்க கூட ஆள் இல்லாமல் முழு இரவும் படியிலே துடித்து இறந்து இருக்கிறார் .
யாராவது ஒருத்தர் அந்த சமயம் அங்கு இருந்து இருந்தால் கூட உயிரை காப்பாற்றி இருக்க முடியும் தான்.
ஆனால் விதி!.
அப்படி நடந்ததாய் தான் இன்று வரை இவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
மறுநாள் காலை திருமணம் முடிந்து திரும்பிய இவர்கள் பார்த்தது உயிர் அற்ற வன்சினி உடலை மட்டுமே.
குருதேவ் கோபம் கொள்ளும் அளவிற்கு வன்சினி அப்படி என்னத்தை செய்து வைத்தார் என்பது இன்று வரை இவர்களும் கேட்டது இல்லை,குருதேவும் சொன்னது இல்லை.இவர்கள் தான் கடைசியாய் மனைவியின் முகத்தை பார்க்க கூட அனுமதிக்கவில்லையே!.
“உன்னால் தான் வாழ வேண்டிய எங்க வீட்டு பெண் இன்று பிணமாய் இருக்கிறாள்.அவள் முகத்தை பார்க்கும் தகுதி கூட உனக்கு கிடையாது.
எங்கிருந்தோ வந்த ஒருத்திக்காக இவளை விலக்கி வைத்த உனக்கு, இங்கே வரும் அருகதை கூட கிடையாது.”என்று மனைவியின் இறப்பிற்கு வந்த குருதேவை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாய் ஒட்டுமொத்த கிராமமும் துரத்தி தான் அனுப்பியது.
துக்கத்தில் அந்த குடும்பம் ‘சந்தேகம்’ என்னும் பேய் பிடித்து விலகி வந்தது வன்சினி என்பதை ஏனோ மறந்து போனது.
‘இல்லாத ஓர் தவறான உறவு இருப்பதாக தங்கள் தங்கை மன பிழற்வில் இருக்கிறார்’ என்பது ஏனோ அவர்கள் அறியாமல் போக,குற்றமே செய்யாத குருதேவிற்கு ஒட்டுமொத்த கிராமமும் சேர்ந்து தண்டனை வழங்கி தான் விட்டது.
பழைய நினைவுகளில் பின்னோக்கி பயணித்து கொண்டு இருந்த வீரேந்தர் கண்களில் இருந்து மௌன கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.
சற்று நேரத்தில் தன்னை சமாளித்து கொண்ட வீரேந்தர் கண்கள் இரண்டும் கோவை பழம் போல் சிவந்து இருந்தது.
மீண்டும் பதிண்டா SSP வீரேந்தராக மீண்டவர் தன் கண்களை திலீப் மேல் பதித்தார்.
“சாரி “என்றார் வீரேந்தர் திலீப் இருக்கும் நிலை கண்டவராய்.
போட்டு இருந்த சட்டை கிழிந்து இருக்க அதை கழற்றி தூக்கி எறிந்து இருந்தவன்,ஏதோ பனியன் விளம்பத்திற்கு நிற்கும் மாடல் போல் நின்று இருந்தான்.
வீரேந்தர் சமாளித்து கொண்டதை கண்ட உடன் தான் அவர் கையை விட்ட ரஞ்சித், தன் பைக்கில் இருந்த ட்ராவல் பையில் இருந்து ஒரு ஷர்ட் எடுத்து வந்து திலீப்பிடம் கொடுக்க,”தேங்க்ஸ் ப்ரோ” என்று வாங்கி அணிந்து கொண்டான்.
“திலீப்! …நீ சொன்னது உண்மை தானா? … வன்சினி மரணம், கொலை என்பது எத்தனை சதவீதம் உண்மை?”என்றார் வீரேந்தர் திடமான குரல், தங்கை பேரை சொல்லும் போது மட்டும் சற்று தடுமாற.
“100 % உண்மை தகவல் பெரியப்பா…நம்ம குடும்ப விஷயம் என்றால் நானும் அப்பாவும் ஒன்றுக்கு பத்து முறை சரி பார்ப்போம் என்பது தெரியாதா என்ன? இதுவரை “அவன்” கொடுத்த எந்த தகவலும் தவறாய் போனதே இல்லை பெரியப்பா.
அத்தை மரணத்திற்கு, அந்த காபோஸ் தான் காரணமாம். ‘அத்தை போதை மருந்து பயன்படுத்தினார்களா?’ என்று வேற சந்தேகம் இருக்கு என்கிறான்.
வன்சினி அத்தை மரணம்-அரசியல் கொலை … அத்தையை கொன்று, குருதேவ் மாமாவை மத்திய அமைச்சர் ஆக்கி இருக்கிறானாம்.
குருதேவ் மாமா நல்லவர். கை சுத்தமானவர். மக்கள் நலனை மட்டுமே முன் நிறுத்தும் அரசியல்வாதி. நேர்மையானவர்.
ஆனால், பின்னால் இருந்து அவர் பெயரை பயன்படுத்தி என்ன எல்லாம் செய்தார்களோ!… அவரே அறியாமல் இன்னும் இதில் எல்லாம் அவரை மாட்டி விட்டு இருக்கிறார்களோ!.
அதே மாதிரி தான் அவர் மகன் அமன்ஜீத் ஹோட்டல், கோடௌன் எல்லாம் பயன்படுத்தபடுகிறது. இந்த வாரம் அமன்ஜீத் கோடௌன் எறிந்த போது சரண் அண்ணா, அர்ஜுனை தான் கேள்வி கேட்டார்… ஆனால், அதன் பின் இருப்பது காபோஸ் …
இப்போ அமன்ஜீத் ஹோட்டலில் ப்ரொதெல்/ப்ரோஸ்ட்டிடூஷன் நடந்துட்டு இருக்குன்னு அந்த அதிகாரி கொலை வழக்கில் மூலம் உறுதி ஆகி இருக்கு” என்று திலீப் பேசி கொண்டே போக, அவர்களின் அடிவயிறு கலங்க ஆரம்பித்தது.
வீரேந்தர் நினைவுகள் மீண்டும் பின் நோக்கி சென்றது.
வன்சினி குருதேவ் உடன் சண்டை போடு வந்து இருந்த சமயம். அவர் நடவடிக்கை எல்லாம் ஏறுக்கு மாறாய் தான் இருந்தது.
திடீர் திடீர் என்று எங்கேயோ போவதும்,வருவதுமாய் வேறு இருந்தார் வன்சினி.நிறைய பணம் வேறு எடுத்து செலவு செய்து இருந்தார்.
நாலு அரை கொடுத்து திருப்பி அனுப்ப தான் அவர் நினைத்தது.
ஆனால் அவர் அம்மா, தம்பி யதுவீர் ‘தங்கள் வீட்டு பெண்ணின் மேல் தவறே இருக்காது’ என்று அவரை எதுவும் செய்ய விடாமல் தடுத்தார்கள். வீரேந்தராலும் தங்கையை அடிப்பது எல்லாம் முடியாத விஷயம் தான்.
ரெண்டு வாரத்திற்கும் மேல், ‘வன்சினி நடவடிக்கை சரியில்லை எதோ தவறு இருக்கிறது!’ என்றே புரிந்தது அவருக்கு.
‘போலீஸ்காரன் மூளை அப்படி நினைக்க வைக்கிறதோ, ஒன்றுமே இல்லாததை பெருசு ஆக்குகிறமோ!’ என்று நினைக்கும் அளவில் இருந்தார் வீரேந்தர் .
கொஞ்சம் நிதானித்து கவனித்து இருந்தால் பஞ்சாபில் இன்று, “காபோஸ்” என்ற ஒருவனின் போதை சாம்ராஜ்யமே உருவாகி இருக்காது தான்.
சிறு செடியை ஆலமரம் போல் தழைக்க தான் விட்டு இருந்தார்கள் அவர்கள். எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவும் வித்தை அவன் அறிந்து இருந்தான் என்பதே இத்தனை வருடம் கழிந்த பிறகு தான் இவருக்கே தெரிய வருகிறது.
‘என்ன?’ என்று அவர் விசாரிக்கும் முன்,உறவினர் திருமணம் என்று தவிர அனைவரும் சண்டிகர் சென்று இருந்தனர்.
அன்று காலை தான் குருதேவுடன் சண்டை. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில்,வன்சினி கவனம் இல்லாமல் விழுந்து இறந்து இருப்பர் என்று தான் அனைவரும் நினைத்தார்கள்.
குருதேவ் வந்து சண்டை போட்டதால் தான் – கவனம் படி ஏறும் போது இல்லை என்று அவர்கள் கோபம் பெருகியது.
தன்வியை குருதேவ் அத்தனை சீக்கிரம் மணந்தது, அமன்ஜீத் பிறந்தது எல்லாம் குறுகிய காலத்தில் நடந்து விட ,அவர்களை எரிமலையாக்கியது .
என்ன இருந்தாலும் குருதேவ் மனிதர்.காதலை மனைவியிடம் எதிர்பார்த்து எதிர்பார்த்து பல வருடமாய் ஏமாந்த கணவர்.
முதல் மனைவி காட்ட தவறிய அன்பு, காதல், அரவணைப்பு தன்வியிடம் பெரும் போது, அதுவும் ஊர் அறிய மணந்த மனைவி என்னும் போது அவர்கள் இல்லறம் குருதேவிற்கு தவறாக தெரியவில்லை.
இல்லறம் என்பது காதல்,காமம் ரெண்டும் சேர்ந்தது தான் என்றாலும் அதையும் தாண்டிய ஒரு நட்பு, ஒரு அரவணைப்பு, ‘நான் இருக்கிறேன்’ என்ற ஒற்றை பார்வை, ஒற்றை தொடுகை, இயல்பான பேச்சு, வாழ்க்கையை உயிர்ப்போடு உணர வைக்கும் ஒரு தோள், இதற்கு ஏங்காத மனமே இல்லை என்னும் போது அன்பால் குருதேவை தன்வி தன்னவராய் ஆக்கி கொண்டது இயல்பான ஒன்று தான் என்றாலும், அதற்கும் தவறான உருவம் கொடுத்து இருந்தனர் அர்ஜுன் குடும்பத்தினர்.
என்ன இருந்தாலும்,எத்தனை தவறு செய்து இருந்தாலும் அவர்கள் வீட்டு பெண். விட்டு கொடுக்க முடியவில்லை.
ஆனால், இன்று நினைக்கும் போது கடைசி ரெண்டு வாரம் வன்சினி போதை மருந்தினை பயன்படுத்தி இருந்தார் என்றே தோன்றியது.
அவர் சந்தேகம் உண்மையா? இல்லை வேறு ஏதும் ஒன்றா?
பிரேத பரிசோதனை எல்லாம் நடத்தப்படாமல் தான் வன்சினி நல்லடக்கம் செய்ய பட்டு இருந்தார். ஒருவேளை பிரேத பரிசோதனை செய்து இருக்க வேண்டுமோ?
வன்சினி கொலை, குருதேவ் அரசியல் எப்படி லிங்க் என்று புரியாமல் போனது.
ஐந்து வருடமாய் “accident” என்று மாற்ற பட்டு இருந்த கொலைகளே அவர்கள் தலையை சுற்ற வைக்க, ‘அதற்கு ஆரம்ப சுழியே தங்கள் வீட்டு பெண் மரணம் என்பதாய் இருக்குமோ!’ என்று எண்ணமே அவர்களை நிலைகுலைய வைத்தது.
தங்கள் வீட்டிற்குள் நுழைந்து தங்கள் வீட்டு பெண்ணை கொல்லும் துணிவு எவனுக்கு உண்டு?
மனைவி இறந்ததால் ‘சிம்பதி ஓட்டு/sympathy vote’ என்று நினைக்க முடியாமல் குருதேவ் உடனே தன்வியை மணந்து இருந்தார்.
பஞ்சாபில் முக்கியமாய் பதிண்டா அதன் சுற்று புற கிராமங்களில் பல மாதம் விவாதிக்க பட்ட ஒன்றாகவே இருந்தது வன்சினி மரணமும்- குருதேவ் மறுத்திருமணமும்.
பாதி பேர் குருதேவின் பக்கம் பேசவும் தயங்கவே இல்லை தான்.அவர் குணம் பற்றி தெரிந்தவர்கள் ஆயிற்றே.
அது மிக பெரிய பிரச்சனை ஆனது என்றாலும், குருதேவ் தான் தேர்தலில் வெற்றி பெற்றார்.
வன்சினி மரணத்தை குருதேவ் ‘நல்ல பெயர் வென்று விட்டது’ என்று நினைத்து இருந்தால், அவரை யாரோ,எப்படியோ ஜெயிக்க வைத்து இருக்கிறான்.
யார் அவன்?
“திலீப் இது எல்லாம் உண்மையா!…பொய் தானே?” என்றார் குரல் தழுழுக்க அந்த தந்தையாய் இருந்த அண்ணன்-பொய்யாய் இருந்து விடாதா என்ற வேண்டுதலுடன்.
திடமாய் இருக்கும் அவரை அந்த நிலையில் பார்க்க ரஞ்சித்தாலே முடியவில்லை என்னும் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த சரண், திலீப்பால் மட்டும் எப்படி முடியும்?
தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்த திலீப் அதில் ஏதோ ஒரு பைல் ஓபன் செய்து,”பெரியப்பா!…இது அந்த “விஜிலாண்டி” நேற்று இரவு என்னுடன் போனில் பேசும் போது ரெகார்ட் செய்தது கேளுங்க.”என்று அந்த ஆடியோ பைலை ஓட விட்டான்.
குரலை வைத்து அடையாளம் காண முடியாத வண்ணம் “வாய்ஸ் SCRAMBLER “ குரலை மாற்றி ஒலிக்க செய்யும் கருவி பயன்படுத்தபட்டு உள்ளது என்பது காவலர்களுக்கு புரிந்து போனது.
அப்படி ஒரு கட்டை குரல் ஒலிக்க ஆரம்பித்தது, பல ரகசியங்களை வெளி கொண்டு வந்த வண்ணம்.
“முதலிலேயே சொல்லி விடுகிறேன் .இது என்னுடைய போன் இல்லை.தேவை இல்லாமல் நம்பர் ட்ரெஸ்/trace செய்யும் வேலை எல்லாம் செய்யாதே திலீப். உன்னுடன் நான் பேசும் எல்லா நம்பர் இன்னொருத்தர் இடம் இருந்து கடனாய் பெற்றது.”என்றது அந்த கட்டை குரல்.
“போன் திருடியதை” இப்படி கூட பாலிஷா “கடனாய் பெற்றது” என்று சொல்லலாமா?
“நீ சொல்வது உண்மை என்று நான் எப்படி நம்புவது? -திலீப்.
“நம்பு நம்பாமல் போ…நம்பவில்லை என்றால் உனக்கு தான் நஷ்டம்.”-அவன்
“சரி சொல்லு.”-திலீப்
“இன்று ரயில் நிலையத்தில் நடந்தது “ஆன்டி நாற்காட்டிக்ஸ் “ஸ்ட்ரிங் ஆபரேஷன்/anti narcotics string operation”.டெல்லியில் இருந்து ஒரு “ஸ்பெஷல் டீமே” இறங்கி இருக்கு.எத்தனை பேர் என்பது எல்லாம் தெரியாது.
குழந்தைகள் உடம்பில் போதை மருந்தை வைத்து கடத்திட்டு வந்ததை ஒரு பெண் -அதுவும் உனக்கு ரொம்ப தெரிந்த பெண் தான் துப்பு கொடுத்தார்.அவரும் அந்த ட்ரெயினில் தான் வந்துட்டு இருந்தார்.ஒரே கம்பார்ட்மெண்ட்.”அவன்
“எனக்கு தெரிந்த பெண்ணா!…யார் அது?”-திலீப்.
“உன் அண்ணா அர்ஜுனுக்கு பார்த்து இருக்கும் பெண் …திருமணம் வேண்டாம், வேலை செய்ய போகிறேன் என்று தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி வந்து இருக்கும் மாடர்ன் ஜான்சி ராணி -ப்ரீத்தி ஜெகன்னாதன்.உன் வருங்கால அண்ணி.”-என்றான் அவன்
“வாட்!…பொய் சொல்லாதே!…” திலீப் திகைத்து அலறுவது கேட்டது.
” உன் கிட்டே பொய் சொல்லி எனக்கு ஆக போவது என்ன திலீப்?…போய் பதிண்டா அரசு மருத்துவமனையில் விசாரித்து பார் …இப்போ உங்க அர்ஜுன் அண்ணா மொத்த குடும்பமும் அங்கே தான் அவள் கண் விழிக்க காத்துட்டு இருக்காங்க.” என்றவன் ப்ரீத்தியின் துணிச்சல், அறிவு, எப்படி ‘ஜெஸ்ஸி’ பற்றி முடியாத நிலையிலும் எப்படி வந்து தகவல் கொடுத்தாள் என்று எல்லாம் சொல்லி முடித்தான்.
“அந்த பெண் ஜெஸ்ஸியை எதற்கு கொலை செய்யணும் என்று ட்ரை செய்தே?”
“அந்த பொண்ணு ஜெஸ்ஸி அடிக்ட் போல் இருந்தது.வரும் போதே முழு போதையில் ஓவர் டோஸ் ஆக போகுதுன்னு நினைச்சா பொழைச்சிக்கிச்சு.
சரி இது எல்லாம் உயிரோடு இருந்து நாட்டுக்கு என்னத்தை செய்ய போகுது, குடும்பத்திற்கும் பாரம் தானே போட்டு தள்ளிடலாம் என்று தக்க சமயம் வர காத்து இருந்தேன்.”
“அடப்பாவி! ….”என்று திலீப் அலறுவது கேட்டது.
“ப்ரீத்தி வந்து சொன்னதும் தான், jessi போதை மருந்துக்கு எதிராக போராடும் குழு வைத்து நடத்துவது தெரிய வந்தது….நல்லவேளை ஒரு அப்பாவியை கொன்ற கணக்கு என் லிஸ்டில் சேராமல் போனது.
ஏற்கனவே தினமும் அந்த லிஸ்ட் நீண்டுட்டே போகுது.அதில் இதுவும் சேர்ந்து இருக்கும்…என்ன இதுவரை செத்தவங்க எல்லாம் சாக வேண்டியவங்க…
ஆனா, இந்த பெண்ணை போட்டு தள்ளி இருந்தா என் மனசாட்சியே என்னை கொன்று இருக்கும் …தேங்க்ஸ் டு ப்ரீத்தி டியர்” என்றவன் மேலும் தொடர்ந்து எப்படி அந்த சொர்ணக்காவை கொன்றான், அவர் சொன்ன தகவல்கள், தன்ராஜ் மரணம் என்று அக்குவேறாக பிரித்து சொல்ல, கேட்ட திலீப் அப்பொழுது எப்படி திகைத்தானோ, அதே திகைப்பில் தான் அந்த நொடி காவலர்கள் மூன்று பேரும் இருந்தார்கள்.
“காபோஸ் என்ற ஒருவனே இல்லையாம் திலீப். இந்த போதை மருந்து “KINGPIN” என்று ஒருத்தன் பஞ்சாபில் இல்லையாம். அது ஒரு கட்டுக்கதையாம்.
உன் பெரியப்பா கூட கூமுட்டையாய் தான் இருக்கார்.போதை மருந்து கட்டமைப்பு, ஆர்கனைஸ்ட் கிரைம்/organized crime ஒருத்தன் தலைமையில் இங்கு நடைபெறவே இல்லையாம். காமெடி பண்ணிட்டு இருக்காங்க காவல் துறை மொத்தம்.”-அவன்.
“உன் கிட்டே மட்டும் அதற்கான ஆதாரம் இருக்கா என்ன?”என்றான் திலீப்.
“உன் மொபைல் பாரு …அதில் வாட்ஸாப்ப் இமேஜ் ஒன்று அனுப்பி வைத்து இருக்கேன். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை 1910-1957களில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்த ஐந்து குடும்பங்களில் ஒன்றான,” மாபியா/mafia” என்று அழைக்கபடும் “Gambino Crime Family” கட்டமைப்பு.
அதே போல் “காபோஸ்” என்றும் “இருட்டின் இளவரசன் /PRINCE OF DARKNESS” என்று அழைக்கபடுவனின் கூட்டத்தோடு மேலும் மூன்று கூட்டத்தின் கட்டமைப்பு தான் அனுப்பி வைத்து இருக்கும் flowchart .
இந்த மூன்று குழுக்கள் தான் இப்பொது பஞ்சாபில் நடக்கும் எல்லா சமுதாய சீர்கேட்டிற்கும் காரணம். இந்த மூன்று கூட்டத்தில் ரெண்டு கூட்டத்தின் அடிமட்ட ஆள் முதல் இந்த கூட்டத்திற்கே தலைவர்களாக இருக்கும் ஆட்களின் முழு தகவல் திரட்டி விட்டேன்.
காபோஸ் என்றும் “பிரின்ஸ் ஆப் darkness”என்று அழைக்க படுபவன் மட்டும் தான் யார், அவன் தளபதிகள் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. “என்றவன் மேலும் நான்கு கிரைம் கூட்டத்தின் FLOWCHART அனுப்பி வைத்தான்.
விஜிலாண்டி வாட்ஸாப்பில் அனுப்பி வைத்த புகைப்பட flowchart திலீப்- வீரேந்தர்,சரணுக்கு அனுப்பி வைக்க,அவர்கள் அதை ரஞ்சித் எண்ணிற்கு அனுப்பி வைத்தார்கள். அதை பார்த்த மூன்று காவலர்களும் திகைப்பின் உட்சதை அடைந்தார்கள் என்று சொன்னால் மிகையல்ல.
அவர்களிடமே இல்லாத தகவல்கள் அவை.மிக துல்லியமாய் ஒவ்வொரு கூட்டத்திலும் அடிமட்டத்தில் யார் இருக்கிறார்கள் என்ற தகவல்கள் அவை.பஞ்சாபின் வெவ்வேறு நகரங்களில் பரவி இருந்தன அந்த கூட்டத்தின் கிளைகள்.
அதை பற்றிய தகவல்களை தன் டீமிற்கு அனுப்பி வைத்த ரஞ்சித் அவர்களை கண்காணிக்கவும்,முடிந்தால் வெளியே தெரியாமல் அவர்களை கைது செய்யவும் ஆவண செய்ய கட்டளை அனுப்பி வைத்தான்.
வீரேந்தர் சைகை காட்ட திலீப் அந்த ரெக்கோர்டிங் play செய்தான்.
“இத்தனை விவரம் உனக்கு எப்படி கிடைத்தது?”என்றான் திலீப் இவர்களின் சந்தேகத்தை வார்த்தையாய் வெளியிட்டு.
“காவல் துறைக்கு சில வரை முறைகள் உண்டு.அவர்கள் துப்பாக்கியில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு தோட்டாவிற்கும் அவர்கள் தலைமை அதிகாரி,மனித உரிமைகள் ஆணையம் எல்லாவற்றிக்கும் பதில் சொல்லி ஆக வேண்டும் திலீப்.
ஒரு நிலைக்கு மேல் அவர்கள் கைகள் கட்டபட்ட கைதிகள்.
சினிமாவில் காட்டுவது போல் எல்லாம் “இன்ஸ்டன்ட் தண்டனை”,”ஸ்பெஷல் விசாரிப்பு “எல்லாம் அதிரடியாக செய்து விட முடியாது என்பது நிதர்சனம். சட்டம்,நீதிமன்றம் இதை தாண்டி இவர்களால் செயல் பட முடியாது .
ஆனால் இது போன்ற தடைகள் என் பாதையில் கிடையாது. மனித போர்வையில் சுற்றும் எந்த விலங்கையும் கொல்ல நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.
‘உயிர் பயம்’எந்த உண்மையையும் கக்க வைத்து விடும்.”என்றான் அவன் சிறிதும் அலட்டி கொள்ளாமல்.
“என்ன இது எல்லா கூட்டத்திலும் நிறைய பேர் X குறி போடபட்டு இருக்கு?” என்றான் திலீப்.
“செத்துப்போனவங்க மேல் X குறி தான் போட முடியும் திலீப் …ஹார்ட்டின் சிம்பல் லா வரையமுடியும்?”என்றான் அவன் நக்கலாய்.
“வெயிட் வெயிட் …இதில் சில பேரை எனக்கு தெரியுமே! …இவங்க மரணத்தினை நான் தானே என் நியூஸ் சேனல்லில் கவர் செய்தேன். இது குடும்ப பகை ,retaliation /பழிக்கு பழி வாங்க என்று ரௌடிங்க கும்பல் ஒன்றை ஒன்று சுட்டு கொன்ற வழக்கு தானே இது எல்லாம்.
சில பல வருடமாய் பஞ்சாப் தெருக்களை ரத்த களறியாக்கிய மரணங்கள் இவை எல்லாம்.போன வாரம் கூட இது மாதிரி ஒரு கும்பல் அடித்து கொண்டு,துப்பாக்கி சண்டை நடந்து இறந்து போனாங்களே!… “என்றான் திலீப்.
“அதே அதே … ஏதோ நாட்டுக்கு என்னால் முடிந்தது.” என்றான் அவன் குரலில் அத்தனை ஏளனத்துடன்.
“வெயிட். கம் அகைன்… நீ என்ன சொல்ல வர? கிட்டத்தட்ட ஐம்பது பேருக்கும் மேல் பல்வேறு வழக்குகளில்,பல்வேறு காலகட்டங்களில் அடித்து கொண்டு செத்ததற்கு நீ காரணமா?
இது என்ன சினிமா படம் என்று நினைப்பா இல்லை ஏதாவது பரிசுக்கான கதை போட்டி என்று நினைப்பா? இதை எல்லாம் கேணை மாதிரி நம்ப வேறு எவனாவது இருப்பான்…அவன் கிட்டே போய் சொல்லு…ஐம்பது பேர் சாவுக்கு தனி ஒருத்தனான நீ காரணமா?”என்றான் திலீப்.
” ப்ரோ…ப்ரோ …ப்ரோ சில் ரிலாக்ஸ்… ஐம்பது இல்லை. கிட்டத்தட்ட நூறுக்கும் அதிகமான நபர்கள், இந்த குழுவில் இருப்பவர்கள் அடித்து கொண்டு,சுட்டு கொண்டு சாக காரணம் நான் என்று சொல்கிறேன்.
நம்பும் படியாக இல்லையா! …உனக்கு புரியும் விதமாகவே கேக்கிறேன்.இப்போ ஒரு குழுவை அழிக்கணும் என்றால் என்ன செய்யணும் ?
சப்போஸ் உன் டிவி சேனல்லையே காலி செய்யணும் என்றால் என்ன செய்யணும் “
“வாட்?.. “
“சும்மா அலாரதே! …ஜஸ்ட் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லு.”
“ஹ்ம்ம்!…யார் அந்த குழுவின் தலைவனோ, இல்லை என் சேனல் ஓனர் யாரோ அவரை போட்டு தள்ளினால் வேலை சுலபம்.”என்றான் திலீப்.
“ச்சு ச்சு …”என்றது எதிர்முனை.
“என்ன சரியாய் தானே சொன்னேன்.”என்றான் திலீப்.
“இது எல்லாரும் செய்யும் வேலை திலீப்… உன் சேனல் ஓனர் உன் அப்பா.அவரை உனக்கு யாருன்னு தெரியும். அதனால் அவரை போட்டு தள்ளனும் என்று சுலபமாய் சொல்லிட்டே.
சப்போஸ் ஓனர் யாருன்னே தெரியாது என்ற நிலைமை இருந்தால் …அந்த ஓனர் இறந்தாலும், இன்னொருத்தன் தலைவைனாய் வரும் நிலைமை என்றால், அப்போ என்ன செய்வே?”என்றான் அவன்.
அவன் கேட்பதும் சரி தானே.
போதை மருந்து கூட்டத்தின் தலைவன் யார் என்றே தெரியாத போது யாரை என்று போட்டு தள்ளுவது?
ஒரு தலைவனை கொன்றாலும் ரோமாபுரி கதையாளர் “ovid ” சொன்னது போல் “மெடூசா” என்ற ஆயிரம் பாம்பு தலை கொண்ட பெண்ணை போல் இருப்பது தானே இது போன்ற organised crime குழுக்களின் கட்டமைப்பு .
ஒரு தலை வெட்ட பட்டாலும், அதன் இடத்தில் இன்னொரு தலை முளைத்து விடுமே!
“ரொம்ப யோசிக்காதே. நானே வழி சொல்லி விடுகிறேன்….ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்றால் ஆணிவேரை வெட்டுவதற்கு முன் அதன் கிளைகளை முதலில் வெட்டி விட வேண்டும்.கண்ணுக்கு முன் ரெண்டாம் கட்ட மூன்றாம் கட்ட ஆட்கள் இருக்கும் போது கண்ணுக்கு தெரியாத தலைவனை எதற்கு தேட வேண்டும்?
இந்த ரெண்டாம் கட்ட மூன்றாம் கட்ட ஆட்களை போட்டு தள்ளி விட்டால், அதாவது அடுத்த தலைமை இடத்திற்கு வருவதற்கு ஆட்களே இல்லாமல் போய் விட்டால் , அப்போ குழு ஆட்டம் கண்டு விடும் இல்லையா?
இந்த தலைவன் என்ற மரம் ஸ்டெடியாக நிற்க கிளைகளின் உதவி ரொம்ப முக்கியம் திலீப். கிளைகளே இல்லாமல் மரம் மட்டும் எப்படி தனித்து நிற்க முடியும்?
வேரில் வெந்நீர் ஊற்றி கொண்டே கிளைகளை பறித்து கொண்டு இருக்கிறேன். அதுவும் செய்வது நான் என்றே இவர்கள் அறியாத வண்ணம் செய்து கொண்டு இருக்கிறேன் “என்றான் அவன்.
“இன்னும் புரியலை….இந்த அடியாட்கள் சண்டைக்கு நீ எப்படி காரணமாய் இருக்க முடியும்?”என்றான் திலீப்.
“அந்த சண்டை எப்படி வந்தது திலீப்?
பஞ்சாபில் ஏற்கனவே சொன்னது போல் இப்போது மூன்று கூட்டம் போதை மருந்து, ஆட்கடத்தல், ஹவாலா, சிகப்பு விளக்கு தொழில் அதை சார்ந்த குற்றங்கள்,pronography எல்லாவற்றிலும் இருக்கிறது.
இவர்களை A,B,C என்று வைத்து கொள். இந்த மூன்று குழுக்களை பற்றி ஏற்கனவே புகைப்படம் அனுப்பி விட்டேன்.
சப்போஸ் ஒரு உதாரணத்திற்கு A கூட்டத்தில் இருக்கும் ஒருவன், C கூட்டத்தில் இருக்கும் ஒருவனின் தங்கையும் காதலிக்கிறார்கள் என்று வைத்து கொள். கூட்டம் என்பதை தாண்டி ஜாதி,மதம் என்று பல இதில் உண்டு. அப்போ என்ன நடக்கும்?”
“மிக பெரிய சண்டை வரும்”
“ அப்படி சண்டை வந்த பிறகு A கூட்டத்து ஆள் ஒரு நாள் இரவில் அவன் வீட்டில் வைத்தே கொல்ல படுகிறான்.காரணம் C கூட்டமாம். அப்போ என்ன நடக்கும் சொல்லு?”
“தங்கள் A கூட்டத்தில் உள்ள ஆளை போட்டு தள்ளியதற்காக “C” கூட்டத்து ஆளை போட்டு தள்ளுவாங்க. அதானே.”என்றான் திலீப்.
“உதவி செய்தது “B” கூட்டத்து ஆட்கள் என்ற கூடுதல் தகவல் கிடைத்தால்?”
” “யார் எல்லாம் இந்த காதலுக்கு உதவி செய்தார்களோ, அவன் இறக்க காரணமாய் இருந்தார்களோ அவர்கள் எல்லோரையும் தான் போட்டு தள்ளுவார்கள்.
retailation/பழிக்கு பழி/revenge என்றால் வழக்கமாய் இது தானே நடக்கும்?” .”
“சோ அப்போ “b”,”c “கூட்டத்தின் ஆட்கள் சும்மா இருப்பார்களா?”
“அது எப்படி சும்மா இருக்க முடியும்? காரணமே இல்லாமல் அடித்து கொள்ளும் அந்த மூன்று கூட்டம் இவ்வளவு பெரிய காரணம் கிடைத்தால் சும்மாவா இருப்பார்கள்? retaliate செய்யாமல் விட மாட்டார்கள் தானே”என்றான் திலீப்.
“இந்த கதை தான் துஷாந்த் மரணத்தில் நடந்தது.
அவன் மரணத்திற்கு பழி வாங்க என்று கொல்லபட்டவங்க எண்ணிக்கை மட்டும் பத்துக்கும் அதிகம். இதில் காபோஸ் குழுவோடு மீதம் உள்ள மத்த ரெண்டு குழுக்களின் ஆட்களும் இறந்து போனாக”என்றான் அவன்.
“ஹ்ம்ம் … துஷாந்த் ….யெஸ்… யெஸ் ….ரெண்டு வருடத்திற்கு முன் XXXX மதத்து பெண்ணை காதலிக்கிறான் என்று கும்பலாய் அவன் வீட்டில் போய் வெட்டி கொன்றார்கள் அந்த நியூஸ் தானே!…”என்றான் திலீப் வழக்கு என்று நினைவு வந்தவனாய்.
“அதே… துஷாந்த் வழக்கே தான்.ஒன்றை யோசித்தாயா திலீப்… துஷாந்த் ஒரு குழுவில் அடிமட்ட பாக்கெட் விற்கும் ஒருவன். அவன் மரணத்திற்காக இத்தனை பேர் ஏன் கொல்லபடணும்? “
“அவங்க காதலிச்சாங்க …ஜாதி,மத சண்டையாச்சு.அந்த பெண்ணின் அண்ணன்,அப்பா,அவனுக்கு உதவியாய் இருந்த நண்பர்கள்,உறவினர்கள் என்று மூன்று பக்கமும் மாத்தி, மாத்தி கொலை நடந்தது. காதல், ஜாதி, மதம் என்றால் கேட்கவும் வேண்டுமா? “என்றான் திலீப்.
“நீ சொல்வது சரி தான் திலீப்…ஜாதி விட்டு ஜாதி,மதம் விட்டு மதம் காதலிச்சா இப்படி எல்லாம் கலவரம் நடக்கும் தான். ஆனா யார் –யாரை, எப்போ, எப்படி காதலிச்சாங்க திலீப்?”என்றான் அவன்.
” துஷாந்த் XXX தங்கையை …”என்றான் திலீப்.
“அவங்க காதலிச்சதுக்கான ஆதாரம்? சொல்லு திலீப் ரெண்டு பேர் காதலிச்சாங்க சரி.ஜாதி மதம் என்று மூன்று குடும்பம், கிட்டதட்ட பத்து பேர் செத்து போனாங்க சரி. அப்படி அவர்கள் காதலித்ததற்கான ஆதாரம் எங்கே? யார் இவங்க காதலித்ததை நேரில் பார்த்தது திலீப்? “என்றான் அவன்.
“நீ …நீ என்ன சொல்ல வரே?”என்றான் திலீப் தன் அவன் சொல்ல வருவது புரிந்தும் புரியாமலும்.
“அந்த பொண்ணு XXX யாரை காதலிச்சது?”
“கூட படிக்கும் துஷாந்த்தை தான்.”என்றான் திலீப்.
“அந்த துஷாந்த் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்காதவன்.அவன் எப்படி காலேஜ் படிச்சு இருக்க முடியும்? அதுவும் மாஸ்டர்ஸ் டிகிரி?
லாஜிக் ரொம்பவே இடிக்குதே திலீப்.
ஒரு பத்திரிக்கைக்காரனாய் இருந்துட்டு இதை எல்லாம் கூட கவனிக்காமல், “உடன் பயிலும் xxxx காதலித்ததால் மதத்தின் பெயரில் நடந்த கொடூரம்”’ என்று நீயும் தானே உன் சேனலில் நியூஸ் ஒட்டி காண்பித்தே!…என்ன இன்னும் புரியலையா?
அந்த பொண்ணு காதலித்தது உண்மை. கூட படிக்கும் பையன் ஒருவனை காதலித்தது உண்மை. இன்னும் சொல்ல போனால் இப்பொழுது அந்த பெண்ணிற்கு யாருடன் திருமணம் நடந்து இருக்கோ அந்த பையனை தான் அது காதலிச்சதே.”என்றான் அவன்
“வாட்! ….அப்போ எதுக்கு துஷாந்த்த்தை கொன்றாங்க?”
“தங்கை காதலிச்சா சும்மாவா விடுவாங்க?”
“ஆனா, அந்த பொண்ணு காதலிச்சது தான் துஷாந்த்தை இல்லையே!.”
“உனக்கு புரிந்த இந்த சிம்பிள் விஷயம் பெண்ணின் வீட்டுக்கு தெரியவில்லையே! …THERE IS NO HONOUR IN KILLING என்று இந்தியாவின் கோடியில் இருந்தவர்கள் கூட பொங்கினார்கள் தான். வாட் டு டூ?”என்றான் அவன் குரலில் அத்தனை எள்ளலுடன்.
பயணம் தொடரும் …