MMV – 24

MMV – 24

அத்தியாயம் – 24

கன்னியாகுமரியில்…

அந்த மருத்துவமனையிலிருந்து கலையரசன் வெளியே வந்தவனின் முகத்தில் மெல்லிய சோகம் படர்ந்திருப்பதைக் கண்ட நிரஞ்சன் அவனின் அருகில் வந்தவன், “என்ன சொன்னாங்க..” என்று கேட்டான்.

“மாலதிக்கு சரியாக ஒரே வழி உங்க அம்மாவை நேரில் சந்திப்பது தான்னு சொல்லிட்டார்..” என்றான் சோகமாகவே.

நிரஞ்சனின் மனதில் நித்தியின் முகம் வந்து செல்ல அவனின் மனமும் சோகத்தை தத்தெடுத்தது. நித்தி இயல்பாக இருப்பது போல தன்னைக் காட்டிகொன்டாலும் அவளின் மனதிலும் தாயைப் பற்றிய கவலை இருக்கவே செய்தது..

கணவனின் மனம் நோகக்கூடாது என்ற ஒரே காரணத்தை மனதில்கொண்டு அவளும் அமைதியாகவே இருந்தாள்.. இருக்கிறாள்..

அத்தை தன்னால் தான் வீட்டைவிட்டு போயிட்டாங்க சென்ற மன அழுத்தத்தால் அவள் மெல்ல மெல்ல மனநோயிக்கு இரையாகிவிட அவளை அதிலிருந்து மீட்க கலையரசன் ஐந்து வருடமாக போராடுகிறான்.

மாலதியின் மனநிலை சரியில்லை என்று உணர்ந்த நாளில் இருந்து ராகுலை வளர்க்கும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்டான். அப்படியே ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது. ஆனால் இன்னும் மாலதி சரியான மாதிரி தெரியல..

அவர்களின் வரவை எதிர்பார்த்து வாசலில் நின்றிருந்தாள் மாலதி. கணவன் காரில் வந்து இறங்கிட மறுப்பக்கம் கதவை திறந்து யார் இறங்குகிறார் என்று உன்னிப்பாக கவனித்தவளின் பார்வை நிரஞ்சனைப் பார்த்தும், “அத்த வரல..” என்று கேட்டுகொண்டே அவனின் அருகில் சென்றாள்

“அம்மா வருவாங்க மாலதி..” என்று எப்பொழுதும் சொல்லும் பொய்யை சொல்லி அவளை சமாளித்தவன், “வீட்டிற்கு யார் வந்திருக்காங்க..” என்று கேட்டு பேச்சை திசை திருப்பினான்.

உடனே மாலதியின் முகம் மலர்ந்துவிட, “கார்த்திகா நெதர்லாந்து போறாளாம். அவ ரொம்ப நாள் ஆசையை நிஜமாக்க கௌசிக் கூட்டிட்டு போறறாம் அதை சொல்லிட்டு போக வந்திருக்கிறா..” என்றவள் பேசியபடியே நடக்க அவளை பின் தொடர்ந்தனர் ஆண்கள் இருவரும். இருவரும் வீட்டிற்குள் நுழைய சங்கரியின் குரல்கேட்டது..

“அப்பா..” என்று ஓடிவந்த ஆதியைத் தூக்கிக் கொண்டான் நிரஞ்சன்.

நித்தி அவனைப் பார்த்தும் புன்னகைக்க, “சரியான சேட்டை பண்றாங்க. சொன்ன பேச்சு கேட்கல..” என்று அவனின் மனையாள் புலம்பிட, “விடு நிதி அவன் அப்படி இருந்தால் தான் அழகு..” அவனின் உதட்டிலும் புன்னகை அரும்பியது. அவர்களுக்கும் ஒரே பையன் ஆதித்யா ஓவர் செல்லம்.

“அப்பா குட்டி பாப்பா அவ்வளவு அழகாக இருக்கு.. ராகுல் அங்கேதான் இருக்கான்..” என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து நழுவி கீழிறங்கி ஓடிவிட, “அனிதா வந்திருக்கிறாளா?” என்று நிரஞ்சன் மனைவியிடம் கேட்க அவளும் தலையசைத்தாள்.

“ஹாய் அண்ணா..” என்று சங்கரியைப் பார்த்ததுமே, “வாம்மா.. இன்னைக்கு தான் சென்னையிலிருந்து வந்தாயா?” என்று கலையரசன் வினாவினான்.

“நான் மட்டுமா வந்தேன்.. ஊரே திரண்டு வந்திருக்கு..” என்று சங்கரி குறும்புடன் முணுமுணுக்க,

“ஏய் அங்க என்ன தனியாக முணுமுணுக்கிற..” என்று அவளின் காதை செல்லமாக திருகினாள் நித்தி..

“ஐயோ அக்கா நான் என்ன முணுமுணுத்தேன்..” என்று கேள்வியை அவளிடமே கேட்டு நாசுக்காக அவளின் கையை விளக்கிவிட்டாள் சங்கரி..

அப்பொழுது தான் மாடியிலிருந்து இறங்கி வந்த வித்யா, “அண்ணா நானும் வந்திருக்கேன்..” என்று அவனுக்கு நினைவுபடுத்தியபடியே இறங்கிவர ஆண்கள் ஹாலில் விரிக்கபட்டிருந்த பெரிய ஜமக்காளத்தில் அமர்ந்தனர்

“நான் போய் எல்லோருக்கும் சமைக்கிறேன்..” என்று சமையலறை நோக்கி திரும்பிய மாலதி, “அத்தை வருவாங்க இல்ல.. அவங்களுக்கு வேண்டாக்காய் புளி குழம்பு வைக்கவா..” என்று கேட்டாள்..

“ம்ம் வைங்க அக்கா.. சுமிம்மா சீக்கிரம் வருவாங்க..” என்று கூறியவளை மற்றவர்கள் புரியாத பார்வை பார்த்தனர். மாலதி அவள் போக்கில் சமையறைக்கு சென்று மறைந்திட, “ஆமா நீ என்னவோ சொன்னயே..” என்று சசிதரன் அவளின் அருகே வந்தான்..

“நானா?” என்ற சங்கரி உணமையைச் சொல்லாமல் மழுப்பிவிட, “நீ எதையோ மறைக்கிற..” என்றவனின் பார்வை அவளை துளைத்தெடுக்க அவளைக் காப்பாற்ற வந்தான் நிரஞ்சன்.

“அவ என்ன மறைக்க போறா..” என்று சங்கரிக்கு சப்போர்ட் பண்ணி நிரஞ்சன் பேச, “அண்ணாவோட சப்போர்ட் மூலமாக கல்யாணத்தில் இருந்து தப்பிச்சுகிட்டே இருக்கிற..” என்று கூறினான் மகேஷ்.

அவள் படிப்பு முடிந்ததும் அவளின் வீட்டினர் அவளுக்கு கல்யாண ஏற்பாடு செய்ய, ‘சின்ன பொண்ணு.. இன்னும் கொஞ்சநாள் வேலைக்கு போகட்டுமே..’ என்று அவளை வேலைக்கு அனுப்பி வைத்தான் நிரஞ்சன்.

“வாடா நல்லவனே.. என்ன என்னோட தங்கை என்ன சொல்ற..” என்று அவனின் தோளில் இயல்பாக கைபோட்டான் நிரஞ்சன்.

அவனின் பின்னோடு வந்த வித்யாவைப் பார்த்து, “வாம்மா வித்யா..” என்ற நிரஞ்சனின் கவனத்தை ஈர்த்தது சசியின் குரல்

“அவள் என்னை நல்லா மொத்தற ரஞ்சன். தினமும் காளி அவதாரம் எடுக்கும் அவளிடமிருந்து தப்பிக்க நான் படும்பாடு யாருக்கு தெரியும்..” என்று புலம்ப பெண்கள் மூவரும் சிரித்தனர்

“கார்த்திகாவும் எங்கே..” என்று கலையரசன் கேட்கும் பொழுதே கீழே இருக்கும் அறையிலிருந்து குழந்தை அழுகும் குரல் கேட்டது. அவளை சமாதானம் செய்ய முடியாமல் மகேஷ் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தான்..

“வாங்க வாங்க செல்ல குட்டி வாங்க..” என்று குழந்தையை சமாதானம் செய்யும் முயற்சியில் நிரஞ்சன் இறங்கிட, “அம்மா மாதிரியே வந்து பிறந்திருக்கிற..” என்ற மகேஷின் குரலில் கோபமே இல்லை..

“மகேஷ் பாபு மாதிரி மாப்பிள்ளை வேணுன்னு கேட்டேன் இல்ல.. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்..” என்று சொல்ல,

“குட்டிம்மா உன்னோட அம்மாவுக்கு ஒரு ரவுண்ட் பத்தலையாம்.. இன்னொரு ரவுண்ட் போன என்ன..” என்று தன்னுடைய மூன்று மாத குழந்தையிடம் அவன் ஐடியா கேட்டு வைக்க அவனின் பின்னாடி நின்றிருந்த அனிதாவைப் பார்த்து சங்கரி வாய்விட்டு சிரித்தாள்.

“உனக்கு ஒரு ரவுண்ட் பாத்ததோ..” அவனின் தலையில் நறுக்கென்று கொட்டினாள் அனிதா. அங்கிருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர். நித்தி எழுந்து மாலதிக்கு உதவி செய்ய சமையலறைக்கு சென்றாள்.

“சரியான தொல்லை..” என்று முணுமுணுத்தான் மகேஷ். அனிதாவுக்கு மகேஷிற்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது.  இப்பொழுது தான் சென்னையிலிருந்து காஞ்சிபுரத்தில் செட்டில் ஆகியிருக்கின்றனர்

அப்பொழுது பின் வாசலில் கொய்யாக்கா பறித்துவிட்டு, “சுமிம்மா வைத்த மரம்.. எவ்வளவு காய் கொடுக்குது பாருங்க..” என்றபடி கொய்யாகாயை கொறித்தபடி கணவனும் மனைவியும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

“வாம்மா கார்த்திகா.. வா கௌசிக்..” என்று கலையரசன் அவர்களை வரவேற்க, “வரோம் வரோம்..” என்று இருவரும் கோரஸ் பாடியபடியே பாயில் வந்து அமர்ந்தனர். அவர்கள் இருவரும் திருமணமான புதுமண தம்பதிகள். இவர்கள் இருவரும் கோயம்பத்தூரில் இருந்து வந்திருக்கின்றனர்.

நிரஞ்சனிடம் அனிதாவின் குழந்தை சமாதானம் ஆகாமல் அழுகவே, “அம்மா மாதிரியே அழுகிற குட்டிம்மா..” என்று அவனின் கையிலிருந்து குழந்தையை வாங்கியவள் மடியில் போட்டு தட்டிக்கொடுக்க குழந்தை தூங்க தொடங்கியது..

அந்த குழந்தையின் பிஞ்சு விரல்களை வருடியவளின் முகத்தில் சோகம் பரவியது.

“டாக்டரை சந்திச்சீங்களா சசி.. டாக்டர் என்ன சொன்னாரு..” என்று நிரஞ்சன் கேட்க,

“டிரீட்மெண்ட் இருக்காம். அவரோட ஹாஸ்பிட்டலுக்கு வர சொல்லிட்டு போயிருக்கார்..” என்ற சசியின் குரலும் நலிந்தே வந்தது.

திருமணமாகி மூன்று வருடங்கள் சென்ற பிறகும் குழந்தை இல்லாமல் ஆயிரம் அவப்பெயருக்கு ஆளானாள் வித்யா. சசியின் அன்பாப கவனிப்பால் கொஞ்சம் இயல்பாக இருக்கிறாள்.

அப்பொழுதுதான் அவர்களின் கவனம் மாலதியின் பக்கம் திரும்பிட, “அவங்க எப்போ அண்ணா சரியாவங்க..” என்று ரஞ்சனிடம் கேட்டான் மகேஷ்.

“அம்மாவைப் பார்த்தால் அவளோட மனம் சரியாகுன்னு சொன்னாங்க மகேஷ்..” என்றான் கலையரசன்

“அப்போ அம்மாவைக் கண்டுபிடிக்க வேண்டியது தானே..” என்று கௌசிக் தீவிரமான சிந்தனையுடன் உரைக்க சங்கரி அமைதியாகவிட்டாள்.

சுமிம்மாவை அவள் சந்தித்து இரண்டு மாதம் சென்ற பின்னரும் அவள் அவரை சந்தித்தாக யாரிடமும் மூச்சுவிடவில்லை. கோபத்தில் அனிதாவிற்கு போன் பண்ணி திட்டிவிட்டாள்.

பிறகு அவள் வீடு வந்த பிறகு அனிதா அவளை விசாரிக்க, ‘சுமிம்மா மாதிரி ஒருத்தங்களைப் பார்த்தேன்..’ என்று சொல்லி உண்மையை மறைத்துவிட்டாள். அதற்கு காரணம் பாரதியும், அஜயும் மட்டுமே என்ற உண்மை அவள் மட்டுமே அறிந்தது..

“அண்ணா அம்மாவை எப்போ கண்டுபிடிக்க போறீங்க..” என்று சங்கரி கோபத்துடன் அவர்களை பார்த்தாள்.

“அவங்கள கண்டுபிடிக்க முடியல சங்கரி..” என்று நிரஞ்சன் பெருமூச்சுடன் கூறினான்.

“இதே பதிலை இன்னும் எத்தனை நாளுக்கு சொல்ல போறீங்க அண்ணா..” என்று வித்யா அவனிடம் சண்டைக்கு வந்தாள்

“அவரின் மீது ஏன் எரிந்து விழுகிறீங்க.. அவரும் தேடிட்டே தான் இருக்கிறாரு..” என்று மச்சானை விட்டுகொடுக்காமல் பேசினான் கலையரசன்.

“மச்சானை சொன்ன பொறுக்காதே..” என்று அனிதா முணுமுணுக்க,

“பின்ன உன்னை மாதிரி இருப்பாங்களா..” என்று மகேஷ் வார்த்தையைவிட அவளும் வந்த சண்டையை விடுவேனா என்று சண்டைக்கு கிளம்பிவிட்டாள்..

“ஐயோ நீங்க இருவரும் சண்டை போடாமல் இருங்க..” என்ற கார்த்திகாவின் சத்தத்தில் வீடே அதிர, “ஏன் அத்தை கத்திறீங்க..” என்று காதை அடைத்துக்கொண்டு மறுபக்கம் கத்தினர் ராகுலும், ஆதியும்!

அவர்களை சமாதானம் செய்ய ஆண்கள் இருவரும் படாதபாடுபடவே  கலையரசனின் வீடே கலகலப்புடன் இருக்க மதியம் உணவை முடித்துவிட்டு வெளியே வந்த நித்தி அவர்களை அமரவைத்து சாப்பாடு பரிமாறிட அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர்.

அன்றைய பொழுது ஓடிமறைய வீட்டின் மாடியில் போய் அமர்ந்து அவரவர்கள் பேசிகொண்டிருக்க அப்பொழுதுதான் அவர்கள் அனைவரும் சேர்ந்து வந்திருப்பது உணர்ந்து கலையரசன், “ஆமா நீங்க எல்லோரும் ஒன்றாக வந்திருக்கீங்க என்ன விஷயம்..” என்று விசாரித்தான்.

“நானும் அவரும் நெதர்லாந்து போறோம் அண்ணா.. நம்ம எல்லோரும் சேர்ந்து போனால் நல்ல இருக்கும்..” என்று மெல்லிய குரலில் கூறினாள்.

“இப்பொழுதா?” என்று இழுத்தான் கலையரசன். மாலதி எதையும் உணராமல் இருண்ட வானத்தை வேடிக்கைப் பார்த்தாள்.

“அவங்களுக்கும் ஒரு மாறுதல் கிடைக்கும்..” என்றான் கௌசிக். அவனின் பேச்சை வைத்தே சுமிம்மாவை காண செல்ல வழியைக் கண்டு பிடித்தாள் சங்கரி..

“ஆமா அண்ணா நம்ம எல்லோரும் போயிட்டு வரலாம்..” என்று சங்கரி அவள் பங்கிற்கு கூறவே நித்தியின் மனதிலும் அதே எண்ணம் இருப்பதை அவளின் முகத்தை வைத்தே கண்டுகொண்டான் நிரஞ்சன்

“என்ன மச்சான் போலாமா?” என்று கேட்க, “அனிதா – மகேஷ் இருவரையும் விட்டுவிட்டு எப்படி போவது.. குழந்தைக்கு ஆறு மாதம் தானே ஆகிறது..” என்றாள் வித்யா அனிதாவின் மணியில் தூங்கிய மழலையைப் பார்த்தபடியே..

அப்படி இப்படி என்று யோசித்தவர்கள் அனைவரும் இறுதியாக நெதர்லாந்து செல்வது என்று முடிவெடுத்தனர். அப்பொழுதுதான் டாக்டரின் அப்பாயின்மென்ட் வித்யாவிற்கு நினைவு வர, ‘நாளை போன் பண்ணி கேட்டுக்கலாம்..’ என்று நினைத்தாள்.

அதன்பிறகு அவர்களும் ஊரைச்சுற்றி பார்க்க நெதர்லாந்து போவது என்று முடிவாகவே அதற்காக வேளைகளில் துரிதமாக இறங்கினார் கலையரசனும், நிரஞ்சனும்!

வீடு வந்து சேர்ந்த யாரும் சுமிம்மாவிடம் எந்த விஷயம் பற்றியும் கேட்காமல் இருந்துவிட அவரின் மனம் கொஞ்சம் நிம்மதியடைத்தது. அவர்கள் நெதர்லாந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தான் அஜய்.

ஆனால் ரித்து மற்றும் ரேணுவினால் அவர்களின் பயணம் தடைபடவே சுமிம்மா அவர்களின் வீட்டில் பேசுபடி ஆகிடவே அவரும் போய் பிள்ளைகளுக்காக பரிந்து பேசினார்

ரித்துவின் தாத்தாவிடம் சுமிம்மா அவளின் காதல் விசயத்தை சொல்ல அவரும் யோசனையுடன் பேத்தியின் முகத்தையும், திவாகரின் முகத்தையும் பார்த்தார்.

திவாகர் நல்ல ஒழுக்கம் உடைய பையனாகவும் அதே நேரத்தில் ரித்துவை அவன் நன்றாக பார்த்துக்கொள்வான் என்பதால், “இவளோட திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன்.. அவங்க திருமணம் முடிந்ததும் நீங்க அவங்களோட நெதர்லாந்து போங்க..” என்று முடிவாக கூறிவிட்டார்

ரேணுவின் வீட்டில் சுமிம்மா சென்று பேச மகளின் விருப்பமே தங்களின் விருப்பம் என்றவர்கள் அஜயை அவனின் தந்தையுடன் வந்து பெண்கேட்க சொல்ல வெளிநாட்டில் இருந்து மகனுக்காகவே கிளம்பி வந்தார் நாதன்.

அவர் வந்து அவர்களிடம் முறையாக பெண்கேட்க இருவீட்டினர் வீட்டிலும் இரண்டு ஜோடிக்களுக்கும் திருமணம் முடிவானது. குறிப்பிட்ட நல்ல நாளில் அவர்களின் திருமணம் நடைபெற அடுத்த ஒரு வாரத்தில் அவர்கள் நெதர்லாந்து கிளம்பினர்.

அவர்கள் ஊருக்கு கிளம்பும் பொழுது டாக்டர் நினைவு வித்யாவிற்கு வரவே உடனே அவரின் நம்பருக்கு அழைத்தாள் வித்யா. ஊருக்கு கிளம்பும் நேரத்தில் யாரது என்ற கேள்வியுடன் போனை எடுத்தான் பாரதி..

“ஸார் நான் கன்னியாகுமரியில் இருந்து வித்யா பேசறேன்..” என்று அவனுக்கு அவள் நினைவுபடுத்தவே, “எந்த வித்யா..” என்ற சிந்தனையில் நின்றான் பாரதி.

“ஸார் நான் வித்யாசசிதரன்..” என்றவனுக்கு அவள் நினைவுபடுத்த, “ஓ நீங்களா..? என்னம்மா திடீரென்று கூப்பிட்டு இருக்கீங்க..” என்று கேட்டான்

“ஸார் நாங்க குடும்பமாக சேர்ந்து நெதர்லாந்து டூர் போறோம்.. அங்கே போயிட்டு வந்த பிறகு நான் டிரீட்மெண்ட்க்கு வரேன் ஸார்..” என்றாள்.

“நாங்களும் அங்கேதான் வித்யா போறோம்.. நீங்க நெதர்லாந்து வந்தும் எனக்கு கால் பண்ணுங்க.. நான் உங்களுக்கு ட்ரீட்மெண்ட் பண்றேன்..” என்றவன் அங்கே தங்க போகும் முகவரியைக் கொடுத்தான்.

“இன்னும் நின்னுட்டு என்ன பண்றீங்க..” என்ற நிலாவின் குரல் ஹாலில் இருந்து கேட்டது..

“இதோ வரேன் நிலா..” என்றவன் தொடர்ந்து, “அங்கே வந்து சந்திக்கிறேன் ஸார்..” என்ற வித்யா போனை வைத்தாள்.

அஜய் – ரேணு இருவரும் ஒரு ஸீட்டில் அமர்ந்துவிட, திவாகர் – ரித்துவும் மற்றொரு சீட்டில் அமர்ந்தனர். பாரதியும் – நிலாவும் ஜோடியாக அமர்ந்திருக்க சுமிம்மாவுடன் அமர்ந்திருந்த பிரவீனின் பார்வை அவர்களை சுற்றி வந்தது..

“என்ன பிரவீன் பார்த்துட்டு இருக்கிற..” என்று சுமிம்மா அவனிடம் கேட்க பிரவீன் அவரை பொய்யாக முறைத்தான்.

“அவங்க எல்லாம் ஜோடி ஜோடியா உட்கார்ந்திருக்காங்க.. ஆனா என்னை மட்டும் உங்களோட உட்கார வெச்சிட்டீங்க..” என்று புலம்பிட அவனின் மனவருத்தம் புரியவே செய்தது.

“இதுக்கா நீ சோகமாக இருக்கிற..” என்று சுமிம்மா சாதாரணமாக கேட்டார்.

“அவங்க எல்லோருக்கும் நல்லது பண்ணிட்டு எனக்கு மட்டும் டீலில் விட்டுடீங்க அம்மா..” என்று அவன் குறைபட்டான்.  அவனின் முகத்தை பார்த்தார் சுமிம்மா.

“ஒரு கண்ணில் வெண்ணையும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு வைக்க முடியுமாடா..”

“என்னோட அம்மாவிற்கு நான் ஸ்பெஷல்..” என்ற பிரவீன் தொடர்ந்து,

“உங்களை கூண்டு கிளியாக் மாற்றித்தான் நான் அவளை கல்யாணம் பண்ண முடியுமா என்ன.. நான் அண்ணாவிடம் பேசிட்டேன்.. அண்ணா அவங்க வீட்டில் பேசறேன்னு சொல்லிருக்காங்க சுமிம்மா.. நீங்க முன்னே நின்று நடத்தி வைத்தால் போதும்.. எனக்கு எங்கம்மா எப்பவும் என்னோட இருக்கணும்..” என்று அவன் உண்மையான பாசத்துடன் அவரின் தோளில் சாய்ந்து கொண்டான்..

அவனின் பாசம் கண்டு அவரின் கண்கள் கலங்கிட, “அவன் என்ன போய் பேசறது. இந்தியா வந்தும் நானே சங்கரி வீட்டில் பேசி உனக்கு அவளை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்..” என்றதும் அவனின் முகம் மலர்ந்தது.

அவர்களின் பிளைட் நெதர்லாந்து நோக்கி பயணித்தது. அங்கே ஆர்மி சுமிம்மாவை எப்படி சந்திக்க போகிறது???

 

error: Content is protected !!