OVOV 29

“வாட் ….அப்போ துஷாந்த் அந்த பொண்ணை காதலிக்கிறான் என்று  தவறாய் நினைச்சு,அதற்காக இத்தனை பேர் வெட்டிட்டு செத்தாங்களா?”

“தவறுன்னு நீ எப்படி சொல்றே திலீப். அந்த பொண்ணு குடும்பம் நம்பும் படியாய் போட்டோ, வீடியோ ஆதாரம் ஏதாவது கிடைத்து இருக்கலாம்.

போன் செய்து யாராவது ‘உங்க வீட்டு பொண்ணு இவன் கூட பழகுது. வெளியே தெரிஞ்சா மானம் போகும்’ என்று பயமுறுத்தி இருக்கலாம்.

போட்டோ ஷாப்பிங் செய்து இருவரும் ஒன்றாய் இருப்பதை போல் போட்டோ அனுப்பி வைத்து இருக்கலாம். யு சீ திலீப் டெக்னாலஜி ஹாஸ் அட்வான்ஸ்ட் சோ மச்.அதை ஆக்கவும் பயன் படுத்தலாம்.அழிக்கவும் பயன்படுத்தலாம். இங்கே ஆக்கபூர்வமான காரியத்திற்கு அழிக்கவும் பயன்படுத்தி இருக்கலாம்.

அந்த பொண்ணு போகும் இடத்திற்கு எல்லாம் துஷாந்த்தும் சாதாரணமாய் வந்து இருக்கலாம்.

இல்லை என்றால் அவனிடம் இருந்து பொருள் வாங்குவதாக பெயர் செய்து கொண்டு அந்த பெண் போகும் இடத்திற்கு எல்லாம்  ‘அவள் குடும்பம் கண்காணிக்குது’ என்று தெரிந்தே யாராவது வர வழைத்து இருக்கலாம்.

அதனால் அடிதடி என்று பெரிய ரகளை ஏற்பட்டு, பெண் வீட்டு காரங்க “உன் சாவு என் கையால் தான்”என்று கத்தி இருக்கலாம்.

அதை சாக்காக வைத்து பத்து பேர் வந்து அட்டாக் செய்தது போல் தடயங்களை செட் செய்து, ‘யாராவது ஒருத்தன், ஒரே ஒருத்தன்’ துஷாந்த்தை போட்டு தள்ளி இருக்கலாம். பொண்ணு வீட்டுக்காரங்க தான் இதை செய்தாங்க என்று அவங்களை துஷாந்த்  கும்பல் போட்டு தள்ளி இருக்கலாம்.”என்றான் அவன்.

‘இவன் என்ன சொல்கிறான் ?…..இருக்கலாம் …இருக்கலாம் என்று சொல்லி சொல்லியே, நடந்ததை நேரில் பார்த்தவன் போல் ஹ்ம்ம் இதை எல்லாம் நடத்தியவன் போல் அல்லவா பேசுகிறான்?

துஷாந்த்  காதலிக்காத போது அவன் அவர்கள் தங்கையை காதலித்தான் என்று தவறாய் புரிந்து கொண்ட ஒரே காரணத்திற்காக ரத்த ஆறு ஓட வைக்க முடியுமா என்ன?

‘முடியும்’ என்று தான் நிரூபித்து காட்டி இருக்கிறானே இவன்’ என்ற திகைப்பை திலீபால் மட்டும் அல்ல அந்த ரெகார்டிங்   கேட்டு கொண்டு இருந்தவர்களாலும் நம்ப தான் முடியவில்லை.

அடுத்து என்ன கேட்பது சொல்வது என்று புரியாமல் பல வினாடி மௌனம் திலீப் காட்டினான்.

“என்ன திலீப் …ஒரு தவறான தகவல், ஒரு illusion எப்படி இதை எல்லாம் நடத்தியது என்ற குழப்பமாய் இருக்கிறதா? நம்பும் விதத்தில் சொன்னால் எதையுமே நம்பி விடுவது தான் மக்கள் கூட்டம். அதற்கு பெஸ்ட் உதாரணம் சொல்லவா?

ரெண்டாம் உலக போரின் போது ஜப்பான் மீது வீசப்பட்ட ரெண்டு அட்டாமிக் பாம் –‘little boy,fat man‘ சிறந்த உதாரணம். Misunderstanding/தவறாக புரிந்து கொள்ளுதல்…இது எவ்வளவோ ‘Deadly’ என்று உட்சபட்ச   நிரூபணத்தை  ஜப்பான் மீது வீச பட்ட இந்த ரெண்டு  குண்டுகளே சொல்லும்.

ரெண்டாம் உலக போரின் போது “ஜப்பான் சரணடைய போகிறதா?” என்று கேட்டு இருக்கிறார்கள்.

அதற்கு அந்த நாட்டின் அரசர் “mokusatsu” என்று பதில் அளித்து உள்ளார். அதற்கு அர்த்தம் -“இதற்கு பதில் அளிக்க நாங்கள் தயாராக இல்லை.இதை பற்றி ஆலோசித்து வருகிறோம்” என்பது.

ஏறக்குறைய “நோ கமெண்ட்ஸ், இன்வெஸ்டிகஷன் நடந்துட்டு இருக்கு” என்று உங்க பெரியப்பா இன்டெர்வியூ அப்போ சொன்னார் இல்லையா,அதையே தான் ஜப்பான் நாட்டு மன்னரும் சொன்னார்.

ஆனா இதே பதில் வாஷிங்டன் சென்று அடைந்த போது “உங்கள் கேள்வியை நாங்கள் அவமதிப்பாக கருதுகிறோம்.அதற்கு தக்க பதிலடி ஜப்பான் கொடுக்கும்”என்று மாறி போனது.

இப்போ மீடியா,சில கலங்கரை விளக்கங்கள் ஒரு சின்ன விஷயத்தை தங்கள் சுய நலத்திற்காக எப்படி ஊதி, ஊதி பெருசாக்குகிறார்களோ, அதே போல் அன்று  இதை மீடியா ஊதி, ஊதி பெருசாக்கி அமெரிக்காவின் மானபிரச்சனை ஆக்கி விட,அமெரிக்கா ப்ரெசிடெண்ட்  ட்ரூமன், இந்த அவமதிப்புக்கு பதிலடி ‘அடாமிக் பாம்’ என்று திருப்பி அடித்ததில் ஒட்டுமொத்த உலகத்தின் தலைவிதியே மாறி தான் போனது.

இதே போல் தான் 1692-1693 நடந்த மிகவும் பிரசித்தி பெற்ற மாசாச்சூசெட்ஸ் என்ற அமெரிக்கா மாகாணத்தில் நடந்த ,”salem witch trials /சூனியக்காரிகளின் சோதனைகள்”.

சில இளம் பெண்கள் பேய் பிடித்தவர்கள் போல் நடந்து கொண்டதில்,அவர்கள் நடவடிக்கைகளை கண்டு அவர்கள்  “சூனியக்காரிகள்” என்று பரவிய வந்திதியால், இளம் பெண்களை  நெருப்பில்,நீரில் கொத்து கொத்தாய் தள்ளி நடத்த பட்ட சோதனைகள்.

அவர்கள் ‘சூனியக்காரிகள் என்றால் எரிந்து போவார்கள்,ஆற்றில் மூச்சு முட்டி இறந்து போவார்கள் என்று 200 பேரை சந்தேகபட்டு எரித்தார்கள்,தண்ணீரில் தள்ளி சோதனை செய்தார்கள்.

பிறகு தான் தெரிய வந்தது அந்த பெண்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஒரு பூஞ்சை ergot என்ற வகையை சேர்ந்தது.அது மூளையை தாக்கினால்,பாதிக்கப்பட்டவர்கள் பைத்தியம் மாதிரி,பேய் பிடித்தவர்கள் மாதிரி நடந்து கொள்வார்கள் என்று பின்னர் ஆராய்ச்சியில் தெரிய வந்தது.

இன்னும் உதாரணம் சொல்லவா மஹாபாரத்தில் “அஸ்வத்தாமா” என்ற பெயர் கொண்ட ‘யானை இறந்ததை,’ ‘தன் மகன்   அஸ்வத்தாமா தான் இறந்து விட்டான்’ என்று துரோணாச்சாரியாவை நம்ப வைத்த கிருஷ்னன்.

Wounded Knee Massacre என்று 1890களில் Pine Ridge Indian Reservation, South Dakota நடந்த கொலைகள், December of 1977 அமெரிக்கா ப்ரெசிடெண்ட் ஜிம்மி கார்ட்டர்ரின் போலந்து பேச்சு.

எப்படி ஒரு கார் டிரைவர்ருக்கு  கிடைத்த தவறான பாதை  தகவல் Archduke Franz Ferdinand கொல்லப்படவும், முதல் உலக போர் ஆரம்பிக்கவே காரணமாய் இருந்தது.

The Battle of Antietam ( Battle of Sharpsburg) ,commander of General Robert E. Lee’s rear guard, D.H. Hill தவறான புரிதலே காரணம்.

communist leader Nikita Khrushchev பேசிய “My vas pokhoronim” என்ற வார்த்தை அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கு “பனி போர்” நடந்து கொண்டு இருந்த காலத்தில் எப்படி “உங்களை நாங்கள் புதைத்து விடுவோம்”என்று தவறாக புரிந்து கொல்லப்பட்டு ஜான் F கென்னடி “உலகத்தையே இருந்த இடத்தில் இருந்து அழித்து விடுவேன்” என்று சொல்லும் வரை சென்றது.

வரலாறு முழுக்க இப்படி உதாரணம் நிறைய உண்டு திலீப். இப்போ இருக்கும் சோசியல் மீடியா,முகநூல் ஒன்று போதுமே எப்படி ஒரு வார்த்தை, ஓராயிரம் விதமாய் மாறி அடித்து கொள்ள போதுமானது என்று  விரிவாக கூற

அதை எல்லாம் கொஞ்சம் கடன் வாங்கி…எப்படி என் கதை, வசனம், டைரக்ஷன் எல்லாம்? ரியல் லைஃபில் ஒரு ரீல் ஒட்டியிருக்கேன்.ஒரு பாராட்டு கூட இல்லையா.சோ sad.”என்றான் அவன்.

“அப்படி என்றால் இதை எல்லாம் பின்னால் இருந்து செய்தது நீயா?”

“யெஸ் நானே தான் …”

“இதனால் உனக்கு என்ன யூஸ்?”

“என்ன யூஸ் என்று சொல்வதற்கு முன்னால் xxx  மனைவியை ஒருத்தன் டார்ச்சர் செய்யறான், இன்னொருவன் அக்கா கணவன் ரோட்டில் போகும் போது கார் ஏறி இறந்தது, பள்ளி சென்ற குழந்தை காணாமல் போனது, அக்கா ஈவ்  டீசிங், ராகிங், தம்பி கை கால் உடைப்பு, மால் சண்டை, சரக்கு லாரி எரிந்தது   போன்ற பல நிகழ்ச்சிகளின் விளைவாக ஏற்பட்ட தகராறில் மொத்தம்  இதுவரை எத்தனை மரணம் நிகழந்தது என்று தெரியுமா?

பனிரெண்டாம் வகுப்பில் செடி வரைந்து பார்ட்ஸ் குறிக்க சொல்வாங்க  இல்லை அதே மாதிரி செய்து பாரேன்…டவுட் இருந்தா அந்த மூன்று குழுக்களின் மரம் வரைந்து அதில் யார் மரணம் யாருடன் தொடர்பு கொண்டு இருக்கிறது என்று போட்டு பார்.

அதிகம் வேண்டாம் கடந்த மூன்று வருடத்தில் இறந்த இந்த மூன்று கூட்டத்தின் ஆட்களின் மரணத்தை மட்டும் லிங்க் செய்து பாரு பிரீயா இருக்கும் போது.”என்றான் அவன் வெகு கூலாக.

“அவன்” ஏதோ கண்ணாமூச்சி ஆட்டம் அந்த மூன்று போதை மருந்து கூட்டத்துடன் அவர்களே அறியாமல் ஆடி இருக்கிறான். பொய்யான தகவல்கள்,உண்மை போலவே பரப்பி இருக்கிறான்.அதையும் நம்பி  அதன் விளைவாக மூன்று கூட்டத்திலும் இத்தனை பேர் அடித்து கொண்டு பழிக்கு பழி என்று இறந்து போய் இருக்கிறார்கள் என்பது மட்டும் விளங்கியது.

“இதனால் என்ன யூஸ் என்று கேட்டேனே”என்றான் திலீப்.

“எந்த குழு செயல்படவும் ஆட்கள் தேவை திலீப். கொத்து கொத்தாய் ஆட்கள் இறந்து போனால் யாரை வைத்து தொழில் செய்ய முடியும்?  நீ ஒரு கூட்டத்தின் தலைவன். உன் கூட்டத்தில் ஒருவன் கொல்ல படுகிறான்.அதற்கு retaliation/பழிக்கு பழி உன் கூட்டத்து ஆட்கள் என்று அடுத்த ரெண்டு கூட்டத்தில் இருக்கும் சிலரை போட்டு தள்ளுகிறார்கள்.

அவர்கள் திரும்பி உன் கூட்டத்தை அடிக்கிறார்கள் . இப்படியே கொன்று கொன்று விளையாடினால் யார் மிஞ்சுவார்கள் சொல்லு?

“டாமினோஸ்/dominos” கேம் விளையாடி இருக்கியா திலீப்? ஒட்டுமொத்த சிப் கீழே விழ நீ தள்ள வேண்டியது ஒரே ஒரு strategic காயை மட்டும் தான். அதை தான் இங்கு நான் செய்தேன். ஒரு கூட்டத்தில் ஒரு மரணம் நிகழந்தால் அதன் விளைவாக ‘செயின் ரியாக்ஷன்/chain reaction’ போல் தொடர்ந்து பல இடங்களில், பல மரணங்கள்.

இந்த மரணங்கள் தொடர் விளைவாக இன்னும் பல மரணங்களை ஏற்படுத்தும். ஆள்,பொருள் எல்லாம் காலி.”   என்றான் அவன்.

தலை சுற்றி போனது திலீப்புக்கு மட்டும் மற்ற மூவருக்கும் கூட தான்.

“ஏன்?”என்று திகைப்புடன் ஒலித்தது திலீப் குரல்.

“ஐ ஆம் காமன் மேன் திலீப். போலீசாலேயே கூண்டோடு ஒழிக்க முடியாத கூட்டத்தின் கூட எல்லாம் பறந்து பறந்து சண்டை போட நான் என்ன சினிமா ஹீரோவா? ஏதோ என்னால் முடிந்தது காட்டின் ஒரு இலையை கொளுத்தி விட்டேன். அதன் தீ மளமளவென்று பரவி அக்கம் பக்கம் காடுகளையும் சேர்த்து பொசுக்கி கொண்டு இருக்கிறது.

ஒரே கல்லில்  பல மாங்காய் அடிக்கும் முறை இது தான்.என்  பேரும் வெளியே வராது. குற்றம் நடந்த முறையை பார்ப்பவர்கள் “gang retialiation “என்று மட்டும் தான் நினைப்பாங்க.

ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன் மிக பெரிய இருட்டு உலகை எல்லாம் எதிர்ப்பான் என்று யாராவது சத்தியம் செய்து சொன்னாலும் யாரும் நம்ப போவதில்லை.” என்றான் அவன்

வாஸ்தவம் தானே…இத்தனை மரணங்களுக்கு பின்னால் ‘தனி ஒருவன்’ அதுவும் காமன் மேன் – மிக சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒருவன் இருக்கிறான் என்று சொன்னால் நம்புவது மிக கடினமா விஷயம் தான் என்றாலும் இது போன்ற கொலைகள், மரணங்கள் பற்றிய தொகுப்பு பல புத்தக வடிவிலேயே கடைகளில் கிடைக்கிறதே.100 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்த கான்செப்ட் வைத்து பல மொழிகளில் வந்து விட்டதே.

அவன் சரியாக தான் சொல்கிறான்.“strategic மரணம்” எந்த ஒருவனை கொன்றால் அவன் மரணத்தால் தொடர்ந்து பல மரணங்கள் நடக்குமோ,அதை ஆரம்பித்து வைத்தால் போதும் அது தொடர் கொலையாய், சங்கிலி தொடராய் மாறி விடும் என்பது இது தானோ

‘pre -planned,well executed mass serial killing.இதற்கு பெயரே “DOMINOS EFFECT”என்று சொல்வார்கள்.ஆனால் இவன் தான் இதை செய்தான் என்பதற்கான ஆதாரம் எங்குமே இருக்க போவதில்லை.

கட்டுக்கதை போல தோன்றினாலும் இந்தியாவில் செயல்பட்ட “சல்வா ஜூடும் “என்ற அமைப்பு மாவோயிஸ்ட்  எதிராக பொதுமக்கள் உருவாக்கிய விஜிலாண்டி குழு.

“subway vigilante” Bernhard Goetz, ரயில் நிலையங்களில் கொள்ளை அடித்து கொண்டு இருந்த கொள்ளையனை கொன்றது.

செப்டம்பர் 11 அமெரிக்காவின் ரெட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு Jonathan Idema என்பவர் ஆப்கானிஸ்தானிற்குள் ஒற்றை ஆளாய் நுழைந்து அங்கே “தனி சிறைச்சாலை” ஒன்றை உருவாக்கி தீவிரவாதிகள் என்று சந்தேகப்பட்டவர்களை எல்லாம் கொன்றதாய் வழக்கே உண்டு.

இப்படி உலகம் முழுவதும் அநியாயத்திற்கு எதிராக பொதுமக்களே சட்டத்தை கையில் எடுத்து கொண்டதற்கான ஆதாரங்கள் உண்டு’ என்று நினைத்து பார்த்த வீரேந்தர் திகைத்து நின்றார்.

தன் யோசனையில் உழன்று கொண்டு இருந்த வீரேந்தரை பிளேயரில் ஒலித்த திலீப் குரல் மீண்டும் நினைவுலகத்திற்கு அழைத்து வந்தது.

“எதுக்கு இதை எல்லாம் செய்யரே? இதனால் உனக்கு என்ன பலன்?”

“திருட்டுனா பயந்து,கலவரம் என்றால் என் வீட்டுக்கு ஏதாவது ஆகுமா என்று நடுங்கி ,மாச சம்பளம் வாங்க நாயாய்,பேயாய் உழைக்கும் காமன் மேன் நான் திலீப்.ஆனா இவனுங்க சொகுசாய் வாழ, என் வீட்டை சுடுகாடு ஆக்குவானுங்க அதை பார்த்துட்டு கண் காது எல்லாத்தையும் மூடிட்டு, போலீஸ் ஏதாவது செய்யட்டும் என்று நடையா நடக்க சொல்றியா?

உங்க சொந்த உறவுக்குலேயே ரேஷ்மா வன்சினி,பாயல் என்று ரெண்டு பெண்களை இழந்து இருக்கீங்க.அப்போ பஞ்சாப் முழுவதும் இந்தியா முழுவதும் எத்தனை குடும்பம் சிதைந்து இருக்கும் இல்லை, சிதைத்து தான் இருப்பாங்க?

ரத்தம் கொதிகலை உனக்கு?  தினம் தினம் எங்காவது ஒரு வீட்டில் இந்த போதையால் ஒரு மரணம், இந்த கும்பலால் ஒரு குழந்தை காணாமல் போகிறது என்ற நியூஸ் கேட்டு கேட்டு எனக்கு மூச்சு முட்டுது திலீப்.

திங்க சாப்பாட்டை கையில் எடுத்தால் அதில் ரத்த வாடை தான் அடிக்குது.கண் மூடி தூங்கினா சிதைக்க பட்ட ஏதாவது ஒரு பிஞ்சின் கூக்குரல் உயிர்குலை நடுங்க வைக்குது.

வருங்கால சந்ததி நம் கண் முன்னே ஊடங்களாலும், சமுதாயத்தாலும், கதை, படம் என்ற பெயரில் வரும் சில வக்கிரங்களை ஊக்குவிக்கும் கேடுகெட்ட தனத்தாலும், யாருக்கு எது நடந்தால் என்ன என்ற சுயநலத்தாலும் அழியும் போது மனிதன் என்று சொல்லி கொண்டு திரிவதில் அர்த்தம் இல்லை.”

“போலீஸ்,சட்டம் இருக்கு.அவங்க அவங்க கடமையை செய்வாங்க.உன்னை போலே எல்லோரும் கத்தி எடுப்பது சரியாய் வராது.நாளைக்கு இதனால் நீ ஜெயிலுக்கு போனால் உன் குடும்பத்தின் நிலை என்ன யோசித்து பாரு.உன் குழந்தைங்க “கொலைகாரன் பிள்ளை”என்று தான் ஊர் உலகம் சொல்லும்.

உன் கிட்டே இருக்கும் ஆதாரம் எல்லாம் போலீஸ் கிட்டே கொடுத்துடு.வீரேந்தர் பெரியப்பா,சரண் அண்ணா பத்தி தெரியும் தானே.கை வெகு சுத்தம்.அவங்க இதை எல்லாம் நிச்சயம் சரி செய்வாங்க.முதல் அமைச்சர் பிரதான் கூட இவர்களுக்கு முழு சப்போர்ட் கொடுத்துட்டு தான் இருக்கார்.”என்றான் திலீப்.

“குடும்பமா?…எனக்கா ?”என்று கேட்டவன் குரலில் என்ன இருந்தது என்று சத்தியமாய் அவர்களுக்கு புரியவில்லை.

ஒருவேளை இந்த கூட்டத்தால் அவன் குடும்பத்திற்கு ஏதாவது நடக்க கூடாதது நடந்து விட்டதா?அதனால் தான் இந்த ருத்ரதாண்டவமா?

“எனக்கு குடும்பம் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லை திலீப். நான் இருந்தாலும் செத்தாலும் ஏன் என்று கேட்க நாதி இல்லாதவன். எனக்கு தான் யாரும் இல்லை.ஆனால் இங்கு உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான் இருக்கேன் திலீப்.

இந்திய அரசியல் சாசனம் என்ன சொல்லுது தெரியுமா? “தேவை படும் போது அதாவது போர் காலத்தில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் கட்டாயம் ஒருவனை போர்க்களத்திற்கு அனுப்ப வேண்டுமாம்”.அது “கடமைகள்” என்ற பிரிவில் வரும்.

நமக்கு தான் சுதந்திரம்,பிரைவசி,rights என்பது பத்தி தானே அக்கறை.கடமைகள் என்று ஒரு தனி அதிகாரமே சாசனத்தில் உண்டு.அதை பற்றி எல்லாம்  நமக்கு என்ன வந்தது?

என் நாடு இப்பொழுது போரிட்டு கொண்டு இருக்கிறது. “நார்க்கோ terrorism” என்ற அரக்கனை எதிர்த்து. ஒரு இந்திய குடிமகனாக என் இந்திய மக்களை ‘உயிரோடு பிணமாக்கி’ கொண்டு இருக்கும் ஒவ்வொருவனையும் போர்க்களத்தில் கொல்வது  என் கடமை.this is war.I declare war against these SOB.

இதை செய்ய  எந்த சட்டத்தின் ஒப்புதலும், எந்த துறையின் அனுமதியும் எனக்கு தேவை இல்லை.என் நாட்டில் நடப்பது ஓவெர்டோஸ் மரணங்கள் இல்லை…திட்டமிடப்பட்ட கொலைகள்….

இதுவரை போதை மருந்து,குடி என்று எத்தனை கோடி மக்கள் இறந்து போய் இருப்பார்கள்…எத்தனை குடும்பங்கள் சிதைந்து இருக்கும்….உங்க போலீஸ்,நீதி,சட்டம்,கோர்ட் எல்லாம் ஆமை வேகத்தில் ரிப்போர்ட் மட்டுமே எழுதி கொண்டு இருக்கட்டும்…

“பஞ்சாப் சிங்கம்” என்று பெயருக்கு சொல்லிக்கொள்பவன் இல்லை  இந்த பஞ்சாபி.உண்மையான இந்திய குடிமகன்….பொறுத்து இருந்து பார் இந்த ட்ரெயின் போதை பெண் மரணம் எங்கு எல்லாம் எப்படி எல்லாம் வெடிக்க போகிறது என்று…..வைக்கட்டுமா ?”என்றான் அவன்.

“வெயிட் வெயிட் …”என்று அலறினான் திலீப்.

“என்ன?’

“எங்க அத்தை வன்சினி எப்படி இதில் வந்தாங்க என்று சொல்லவே இல்லையே…அவங்க மரணத்திற்கும் மாமா குருதேவ் அரசியல் பிரவேசத்திற்கு சம்பந்தம் எப்படி?அத்தை ட்ரக் அடிக்ட்டா?”என்றான் திலீப் அவசரமாக.

“உன் அத்தை ட்ரக் ஆட்டிக்ட்டா என்பது எல்லாம் தெரியாது.ஆனா இறந்த அன்று அவங்களை “காபோஸ்”போய் பார்த்து இருக்கான்.இறந்த அன்று மதியமே உடலை அடக்கம் செய்து விட்டாங்க தானே?”

“ஆமா …அப்பா சொல்லி இருக்காங்க.மழையில் இரவு முழுவதும் ஊறி இருந்த உடல். அதனால் மதியத்திற்குள் அடக்கம் செய்துட்டாங்க.”என்றான் திலீப் குரல் தழுதழுக்க.

“accident என்று நீங்களாகவே நினைச்சுட்டு போஸ்ட்மார்ட்டம் கூட செய்யாமல் உடலை புதைத்து இருக்கீங்க.கொஞ்சம் தாமதமாய் புதைத்து இருந்தால் கூட உடலில் இருந்த காயம், கன்னி போனதற்கான தடயம் கிடைத்து இருக்கும்.”என்றான் அவன்

“வாட் …உடலில் காயமா …யூ மீன் அத்தையை அந்த காபோஸ் டார்ச்சர் செய்து இருக்கான் என்று சொல்றியா என்ன?” லட்சம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல் வலி ஏற்பட்டது திலீப்புக்கு மட்டும் இல்லை கேட்டு கொண்டு இருந்த மற்றவர்களுக்கும் தான்.

“யெஸ் …குருதேவ் முதல் மனைவி, SSP வீரேந்தரின் ஆசை தங்கை எப்படி எல்லாம் அடித்து, உதைத்து துன்புறுத்தி அதன் பின் மாடியில் இருந்து பலமுறை தள்ளி விடப்பட்டு கொல்லபட்டர், அதை கூட கண்டுபிடிக்காத கூமுட்டை தான் பஞ்சாப் போலீஸ் வீரேந்தர், சரண்  என்று கை கொட்டி சிரித்தான் என்னிடம் சிக்கியவன்.”என்றான் அவன்.

“வாட் ….எங்கே அவன்?…அவனை என் கையாலேயே …..”என்று திலீப் அலறினான்.

“ஆஹாங் …அது எப்படி ப்ரோ …உன் வீட்டு பெண் மேல் ஒருத்தன் கை வைத்து இருக்கிறான் என்றால் மட்டும் அப்படியே ரத்தம் கொதியோ கொதினு கொதிக்குது.அது எப்படிங்க சார் அவனை உங்க கையாலேவா?…இதையே நாங்க செய்தா மட்டும் “கொலைகாரன்” என்று சொல்வீங்களா? நீங்க செய்தா அதற்கு பெயர் என்ன சார்?

ஆமா உங்க அத்தையை பஞ்சாபின் மிக பெரிய போதை மருந்து கூட்டத்தின் தலைவனான காபோஸ் தான் கொன்றான்.அதுவும் “ZULBA “என்ற பெண்ணிற்காக. அந்த பெண்ணின் இருப்பிடம் தெரிய வேண்டும் என்பதற்காக.” என்றான் அவன்.

“ஸுல்பாவா?யார் அந்த பெண்?”என்றான் திலீப்.

“யாருக்கு தெரியும்?ஆனால் அந்த காபோஸ்ஸை       அடையாளம் காட்ட கூடிய ஒரே பெண் ஸுல்பா மட்டும் தானாம்.அந்த பெண் எப்படி உங்க அத்தைக்கு பழக்கம் என்பது எல்லாம் தெரியாது .

எங்கே அவங்களை ஒளித்து வைத்து இருக்காங்க என்பதை கேட்டு தான் அத்தனை டார்ச்சர். காபோஸ் பற்றிய மொத்த ரகசியங்களும் தெரிந்த ஒரே பெண் ஸுல்பா மட்டும் தான்.

காபோஸ் மரண வலையில் இருந்து தப்பிய ஒரே பெண்ணும் அவங்க தான்.இப்போதைக்கு எப்படியும் நாற்பது,நாற்பத்தி ஐந்து வயது இருக்கலாம் அந்த பெண்ணிற்கு.இந்தியாவில் எங்கே எந்த மூலையில் அவங்களை உங்க அத்தை ஒளித்து வைத்து இருக்காங்க என்பது கடவுளுக்கு  தான் வெளிச்சம்.”என்றான் அவன்.

“அங்க அடையாளம் ஏதாவது ?”என்றான் திலீப்.

“நோ ஐடியா….காபோஸ் அந்த பெண்ணை கண்டு பிடித்து கொல்வதற்கு  முன் உங்க பெரியப்பாவையும் அண்ணனையும் அந்த பெண்ணை கோட்டை விடாமல் காப்பாற்ற சொல்லு. உங்க அத்தை தன் உயிரையும் இழந்து, காப்பாற்றிய பெண் என்ற காரணத்திற்காகவாது ஏதாவது செய்ய சொல் உங்க பெரியப்பாவை.”

“உங்க மாமா குருதேவ் தேர்தலில் நின்ற போது என்ன சூழ்நிலை,எப்படி அவர் இத்தனை எதிர்ப்பையும் மீறி அவரால் வெல்ல முடிந்தது என்பது அவருக்கே தெரியுமா என்பது சந்தேகம் தான்.

அரசியலில் அப்பா,மகன்,கணவன்,மனைவி போட்டு தள்ளி விட்டு இறந்து போனவர்களின் பெயரில் ‘sympathy vote’  மூலம் ஜெயிப்பது எல்லாம் சர்வ சாதாரணம் “என்றவன் அழைப்பு துண்டிக்க பட உறைந்து நின்றார்கள் காவலர்கள் மூவரும்.

எங்கே எப்படி காபோஸ், ஸுல்பா,வன்சினி வாழ்க்கை பாதை ஒன்றாய் இணைந்து இருக்க முடியும்? மற்றவர்கள் பற்றி கவலையே படாத சுயநலவாதியான தங்கள் தங்கை, உயிர் இழந்தது ஒரு பெண்ணை காப்பாற்றவா?

யார் என்றே தெரியாத ஒரு பெண்ணிற்கு அடைக்கலம் கொடுக்க போய் வன்சினி உயிர் பிரிந்து இருக்கிறது.

வாழ்ந்த பொழுது செய்த குற்றங்களுக்கு ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்ற போய் உயிர் துறந்து, செய்த பாவங்களுக்கு பிராயிச்சிதம் செய்து விட்டார் வன்சினி.

எல்லோரும் ஒரு நாள் நம்மை படைத்தவனிடமே திரும்ப தான் போகிறோம்.இதில் எத்தனை வாழ்க்கை ‘வாழ்க்கையாய்’ இருக்கிறது? எத்தனை மரணங்கள் அர்த்தம் நிறைந்ததாய்,மரணத்திற்கே ஒரு உவமை கொடுப்பதாய் அமைந்து விடுகிறது?

வாழும் போது மனித பிறவியாய் இல்லை என்றாலும் சாகும் வேளையில் இன்னொரு உயிரை ரட்ச்சிக்கும் கடவுளாய் தான் இருந்து இருக்கிறார் வன்சினி.

ஒரு உயிரை காக்க தன் கடைசி மூச்சு உள்ளவரை போராடி, பெண்கள் என்றாலே “எந்த தீமையையும் எதிர்க்கும் வல்லமை கொண்ட சக்தி”என்று நிரூபித்து விட்டு தான் உயிர் துறந்து இருக்கிறார் வன்சினி.

இங்கே இவர்கள் நடந்ததை ஜீரணிக்கவே முடியாமல் தவித்து கொண்டு இருக்க,அவர்களுக்கு சற்றும் குறையாத நிலையில் தன்னை தானே நொந்து கொண்டு இருந்தாள் ப்ரீத்தி அர்ஜுன் வீட்டில்.

பயணம் தொடரும்…