MMV 5
MMV 5
அத்தியாயம் – 5
அதே நேரத்தில் கன்னியாகுமரியில்…
தன்னுடைய குடுப்பத்தைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்திருந்திருந்தான் சிவகுமார். சிறு வயதில் இருந்தே பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும் கூட, வேலை என்று வந்தால் அவரை மாதிரி ஒரு உழைப்பாளியைப் பார்க்க முடியாது..
“கோகிலா..” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தார்.
அவனின் அழைப்பு கேட்ட மறுநொடியே, ‘என்ன இவர் இப்பொழுது வந்திருக்கிறார்..’ பதறியடித்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தாள் கோகிலா.
“என்ன திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கிறேன் என்று ரொம்ப பயந்துவிட்டாயா?” என்று கேட்டுக்கொண்டு அவளின் அருகில் வந்தான் சிவகுமார்.
கணவனை அந்த நேரத்தில் அப்படியொரு சூழலில் அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவளையும் அறியாமல் அவளின் கைகள் வயிற்றை வருடியது.
அவன் தன்னை நெருங்கினால் உண்மை கண்டு பிடித்து விடுவான் என்று உணர்ந்து அவள் விலக நினைக்க, அவளின் பதட்டமான முகம் கண்டு அவனின் பார்வையும் கூர்மையாக பெற்றது.
அவ்வளவு தொலைவிலிருந்து வந்தவரை அவள் வரவேற்ற விட்டாலும் பரவில்லை.. ஆனால் அவள் அதிர்ந்து நின்ற விதமே அவனின் மனதிற்கு தவறாகப்பட்டது.
“கோகிலா..” என்ற அழைப்புடன் அவன் அவளை நெருக்கிட, அவளோ பயத்துடன் இரண்டடி பின்னே நகர்ந்தாள். அவளின் பார்வையிலிருந்த பயத்தை உணர்ந்தவர், “கோகிலா..” என்ற அழைப்புடன் அவளை நெருக்கினார்.
அதற்குள் அங்கு வந்த பக்கத்துவிட்டு பட்டுமாமி, “கோகிலா தலை சுத்துது என்று சொன்னீயே இந்த கஷாயம் கொண்டு வந்திருக்கேன் குடிச்சிடும்மா..” என்றார்.
அப்பொழுது தான் அவளின் கணவரைக் கண்ட பட்டுமாமி, “வாப்பா சிவகுமார். நீ போனமுறை வந்துட்டுப் போகும் பொழுதே நினைத்தேன். எப்படியும் இந்த பிள்ளை இப்படி ஏதாவது நல்ல விஷயம் சொல்லுமென்று..” என்று புன்னகைத்தார்.
அவர் சொன்ன அர்த்தம் புரிந்து அதிர்ந்து நின்றவரின் பார்வை மனைவியின் மீது நிலைக்க, “என்னங்க அப்படி பார்க்கிறீங்க..” என்று அழகாக வெக்கப்பட்டாள் கோகிலா.
கொஞ்சநேரத்திற்கு முன்னால் அவளின் முகத்திலிருந்த பயத்திற்கும் இப்பொழுது இருக்கும் வெக்கமும் அவரை மேலும் குழப்பிவிட்டது.
“மனைவி மசக்கிய இருக்கிற விஷயம் தெரிந்து அதிர்ந்து நிற்கிறான் பாரு உன்னோட ஆம்பிளையான்..” என்று சிவகுமாரின் தலையில் இடியை இறக்கினார் பட்டுமாமி.
அவளிடம் கஷாயத்தை கொடுத்துவிட்டு செல்ல பின்னோடு நடந்த அனைத்தும் உணர்ந்தவரின் உள்ளம் தணலாக கொதித்தது.
‘அடுத்து என்ன நடக்க போகிறதோ..’ என்ற பயத்தில் அதிர்ந்து
திருதிருவென்று விழித்தாள் அவனின் மனையாள்.
“நிலா எங்கே..?” என்றவரின் பார்வை அவளின் மீதே நிலைக்க, “அவள் வீட்டைவிட்டு போயிட்டா..” என்ற அடுத்த கணமே, ‘பளார்’ என்று ஒரு அரைவிட்டத்தில், அந்த அறையின் மூலையில் போய் விழுந்தாள் கோகிலா.
“என்னப்பா என்னோட பெண்ணைப் பார்த்து இப்படி அடிக்கிற..” என்று வீட்டின் உள்ளே நுழைந்த மாமியாரின் முகம் பார்த்தவரின் முகம் செந்தணலாக மாறியிருந்தது.
“இதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல..” என்றவர் தொடரும் முன்னரே அவரின் போன் அடித்தது.
சகுந்தலா மகளின் அருகில் சென்று, “இந்த நேரத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க கூடாதா..” அக்கறையுடன் கேட்க சிவகுமாருக்கு அப்படி பற்றிக்கொண்டு வந்தது.
“நான் தருகிற டைவர்ஸ் பேப்பரில் சைன் பண்ற இல்ல..” சகுந்தலா அதிர்ந்து நிற்க, கோகிலாவோ அவனைக் கொலைவெறியுடன் வெறித்தாள்.
மறுபக்கம் யாரும் போனை எடுக்கவில்லை என்றதும் சோர்ந்து போகாமல் மீண்டும் அதே நம்பருக்கு அழைக்க உடனே போனை எடுத்தார் சிவகுமார்.
“ஹலோ” என்றவரின் குரல் கம்பீரமாக ஒலித்தது.
“மாமா நான் நிலா..” என்றாள்.
“வெளிநாட்டில் எவளையோ நல்ல கைக்குள் போட்டுகிட்டு என்னிடம் டைவர்ஸ் கேட்கிறாரம்மா. அவள்தான் இப்போ போன் பண்ணிருக்கிற..”என்று இல்லாத பழியைத் தூக்கி அவனின் மீது போட்டாள்.
அவரின் கோபம் எல்லை கடக்க, “ஒரு நிமிஷம்மா..” அவர்களின் பக்கம் திரும்பியவர், “என்னடி சொன்ன..” என்று மீண்டும் அவளின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறைவிட்டார்.
“எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரியல உன்னை சும்மா விடமாட்டேன்.” என்று உறுமியவரின் சத்தம் கேட்டு மௌனமானாள் நிலா.
“நீ எங்கம்மா இருக்கிற? நீ நல்ல இருக்கிறாயா?” அக்கறையுடன் விசாரிக்க, “நான் நல்ல இருக்கேன் மாமா. ஆனால் நான் எங்கே இருக்கேன் என்று மட்டும் கேட்காதீங்க மாமா..” என்றவளின் குரலில் வருத்தமே மிஞ்சியது.
தவறு செய்தவள் கண்முன்னே கம்பீரமாக நின்றிருக்க, ஒரு தவறு செய்யாத பிள்ளையோ எங்கோ கண்காணாத இடத்தில் இருப்பதை நினைத்து அவர் மனம் வருத்தினார்.
“சரிம்மா எதற்கு போன் பண்ணின என்று சொல்லுடா..”என்று கேட்க மறுப்பக்கம் சிறிதுநேரம் மௌனம் நிலவிட, “மாமா நான் படிக்க போறேன்.
என்னோட பிளஸ் டூ சர்டிபிகேட் உங்களிடம் இருக்கு. நீங்க அதை கொடுத்தால் போதும் மாமா..” என்றவள் தயக்கத்துடன் இழுத்தாள்..
“என்னடா சொல்ற மேல படிக்க போறீயா? சரி அங்கே யார் உன்னை படிக்க வைக்கிற?” விசாரித்தார்.
“இங்கே இருக்கிற அம்மா என்னை படிக்க வைக்கிறேன் என்று
சொன்னாங்க..” என்றாள் நிலா.
“சரிடா நீ இடத்தை சொல்லும்மா நான் நேரில் கிளம்பி வருகிறேன்..” திடுக்கிட்ட நிலாவோ, “மாமா நீங்க நேரில் வர வேண்டாம். எனக்கு நீங்க கொரியர் அனுப்பிவிடுங்க..” அவளின் குரல் நடுக்கத்துடன் ஒலித்தது..
அவளின் பயமறிந்தவரோ, “நான் உனக்கு மாமா ஸ்தானம் தான். ஆனால் நீ என்னோட மகள்டா. நீ பயப்படாமல் இரு. மாமா இங்கே பிரச்சனை எல்லாம் முடித்துவிட்டு உன்னை நேரில் வந்து பார்க்கிறேன்..” என்றவர் அவளிடம் முகவரியை வாங்கிக்கொண்டு போனை வைத்தார்.
அவர் போனை வைத்த பிறகு அவளையும் அறியாமல் நிலாவின் கண்கள் கலங்கியது. மச்சினிச்சி மற்றொரு மனைவி என்று நினைக்கும் மாமன்மார்களுக்கு நடுவே, அவளை ஒரு மகளாக பாவித்து பேசும் சிவகுமாரை நினைத்து அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.
அவள் தனியாக நின்று அழுவதை கவனித்த சுமிம்மா, “நிலா பொண்ணுங்க அழுகக்கூடாது. வைராக்கியம் குறைந்து போய்விடும். அதனால் கண்ணைத் துடைத்துவிட்டு வேறு வேலையைப் பாரு..” என்று அதட்டிட விழிகளைத் துடைத்துவிட்டு, அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்த நாட்கள் சென்றது.
அன்று காலையில் வீட்டிற்கு கொரியர் வரவே, அதை கையெழுத்துப் போட்டு வாங்கிய ரித்திகா, “நிலாவின் பெயருக்கு வந்திருக்கு..” என்றதுமே, “நிலா.. நிலா..” என்ற அழைப்புடன் பின் வாசலுக்கு சென்றாள்.
காலையில் எழுந்தும் நன்றாக குளித்துவிட்டு தலையைக் கோதிய வண்ணம் நித்தியகல்யாணி பூச்செடியின் அருகில் நின்றிருந்தாள் நிலா. அதுவரை அவளை ஆழ்ந்து கவனிக்காத ரித்திகா கூட அன்று அவளின் மீது பார்வையை நிலைக்கவிட்டாள்.
அவளின் முகம் நிலவிற்கு போட்டிபோட அவளின் இடைவரை தாண்டிய கூந்தலோ கார்கால மேகங்களுடன் போட்டிபோட்டது. மைதீட்டப்படாத விழிகள் அவளையே மையல்கொள்ள அழைத்திட, ‘என்ன அழகுடா..’ என்று நினைத்தாள்..
அவளின் பக்கம் திரும்பிய நிலா, “வாங்க அக்கா..” இயல்பான
புன்னகையுடன் அழைக்கவே, “உன்னோட சர்டிபிகேட் கொரியர்
வந்திருக்கு..” அவளின் கையில் கொரியரைக் கொடுத்தாள்.
“அதற்குள் வந்துவிட்டதா?” என்ற ஆச்சர்யத்துடன் வாங்கியவளின் கண்ணில் பட்டது அந்த கடிதம். அதற்குள் ஒரு சின்ன செக் ஒன்று இருந்தது.
முதலில் கடிதத்தைக் கையில் எடுத்து பிரித்து படித்துவிட்டு கண்கலங்க நின்றவளின் அருகில் வந்து கடிதத்தை வாசித்தாள் ரித்திகா. அவளின் விழிகள் வியப்பில் விரிந்தது.
“சுமிம்மா..” அவளின் கையிலிருந்த கடிதத்தை வாங்கிகொண்டு
ஆர்ப்பாட்டமாக வீட்டிற்குள் நுழைந்தாள் ரித்திகா.
நிலாவோ தன்னுடைய கையிலிருந்த சர்டிபிகேட் பார்த்து, ‘என்னோட வாழ்க்கையே இனிமேல்தான் தொடக்கம்..’ என்று நினைத்தாள்..
அந்த கடிதத்தில் சாரம்சம் இதுவே, ‘நீ மறுபடியும் படிக்கிறேன் என்று சொன்னது எனக்கு சந்தோசம்டா. நீ நல்ல படிக்கணும். உன்னிடம் பணம் இருக்கா இல்லையான்னு தெரியல. இப்பொழுது உன்னோட தேவைகளுக்காக செக் போட்டு அனுப்பியிருக்கிறேன். இன்னும் ஏதாவது தேவை என்றால் மறக்காமல் எனக்கு போன் பண்ணும்மா. இனிமேலாவது
உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கட்டும்..’ என்று கடிதத்தை
முடித்திருந்தார்
“எதுக்கு ரித்திகா இப்படி கத்திட்டே வர..” என்று சுமிம்மா அவளை அதட்டவே, “இங்கே பாருங்க சுமிம்மா நிலாவோட மாமா சர்டிபிகேட்டுடன் ஐம்பதாயிரம் செக் அனுப்பியிருக்கார்..” என்றாள்.
அவள் எந்த நிலையில் தன்னுடன் பயணம் செய்தாள் என்று நினைத்துப் பார்த்தவர், ‘இவளின் பின்னணி தெரியாமல் அவளை நாம் தவறாக நினைக்க கூடாது..’ என்று முடிவுடன் நிமிர வீட்டிற்குள் நுழைந்தாள் நிலா.
“சுமிம்மா அந்த செக் உங்களிடம் இருக்கட்டும்..” என்றதும், ‘இதே மற்ற பெண்களாக இருந்தால் இந்நேரம் அந்த ஐம்பதாயிரத்திற்கும் பிளான் பண்ணிட்டு மற்ற வேலை பார்ப்பார்கள்’ அவளை வியப்புடன் ரித்திகாவின் விழிகள் விரிந்தது.
சுமிம்மாவின் பார்வை தன்மீது படிவதை உணர்ந்த நிலா, “என்னோட அம்மா மாதிரி என்னை அக்கறையுடன் கவனிச்சிகிறீங்க. இந்த பணம் உங்களிடம் இருப்பதுதான் எனக்கு சரின்னு படுது.” என்றவள் சர்டிபிகேட் பத்திரமாக
எடுத்து வைத்தாள்.
நிலாவின் பின்னணி அறியாமல் இருந்தாலும், அவளின் மீது பாசமாகவே இருந்தார் சுமிம்மா. எந்த ஒரு தருணத்திலும் அவளை சந்தேகப்பட அவரால் முடியாது.
அடுத்த நாள் காலையே சுமிம்மா அவளை டுடேரியல் கிளம்பிவிட்டு, “நிலா கிளம்பிவிட்டாயா?” என்று கேட்க, “இதோ வந்துவிட்டேன் சுமிம்மா..” என்று அறையிலிருந்து வெளியே வந்தாள் நிலா.
அவளைப் பார்த்த சுமிம்மாவின் முகம் போன போக்கைப் பார்த்து, “என்னம்மா..” என்றவள் மீண்டும் தன்னுடைய சேலையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “சேலை நன்றாகத்தானே கட்டியிருக்கிறேன்..” என்றவள் தன்னுடைய புடவை பார்த்தாள்.
“அடியே இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் ஜீன்ஸ், டாப் என்று போட்டுட்டு ஊரையே சுற்றிவிட்டு வருது. நீ என்னடா என்றால் பட்டிக்காடு மாதிரி சேலையை கட்டிட்டு வந்து நிற்கிற..” என்று எரிச்சலுடன் கூறினார்.
“என்னம்மா இப்படி திட்டுறீங்க..” என்றவள் சிணுங்கிகொண்டே
“நானே சேலையை மாறிவிட்டு ஜீன்ஸ், டாப் போட்டால் பரவல்ல என்று நினைக்கிறேன் நீ என்ன இந்த வயதில் இப்படி பழங்கால பெருசுக மாதிரி பேசற..” என்று குறும்புடன் கூறினார்.
“என்ன சுமிம்மா சொல்றீங்க..” என்று அவள் அதிருந்து நின்றிருக்க,“ம்ம் நீ தேற மாட்ட..” தன்னுடைய பெட்டியை திறந்து அதிலிருந்து சுடிதாரை எடுத்து நிலாவின் கையில் கொடுத்தார்.
கருநீல கலரில் டாப்பும், வைலட் கலர் பேண்ட் மற்றும் சால்வை இரண்டும் பார்க்க அழகாக இருக்கவே, “ம்ம் நேரமாகிறது போ போ.. சீக்கிரம் போய் சுடிதாரை மாத்திட்டு வா..”என்று அவளை அனுப்பிவிட்டார்
சுடிதாரில் வந்த நிலாவைப் பார்த்தும், “செம பிகர்..” என்று விசிலடித்த சுமிம்மாவைப் பார்த்து, “என்னம்மா நீங்க பசங்க மாதிரி பண்றீங்க..” என்று அழகாக வெக்கப்பட்டாள்.
“பொண்ணு என்று இருந்தா நாலு பசங்க சைட் அடிக்கணும்.. என்ன ஒரு செஞ்சாக நானே முதலில் உன்னை சைட் அடித்துவிட்டேன். என்ன நான் ஆணாக பிறந்திருக்க கூடாதா..” என்று மயக்கம் தேக்கிய விழிகளுடன் அவர் கூறியவர் பெருமூச்சுவிட்டார்.
“ச்சீ போங்க அம்மா..” என்று அழகாக வெக்கப்பட்டாள்.
“ஐம்பதிலும் ஆசை வரும்.. ஆசையுடன் பாசம் வரும்..” என்றவர் பாடல் பாடவே, “ஐயோ அம்மா..” என்று முகத்தை மூடி நின்றாள் நிலா.
“வாம்மா போலாம்..” என்றவர் அவளை அழைத்துக்கொண்டு டுடேரியல் செல்ல, அவர்களுக்கு முன்னே வந்து அங்கே காத்திருந்தான் கவிபாரதி.
அவர்கள் தூரத்தில் வரும் பொழுதே அவர்களை பார்த்த பாரதியின் உள்ளம் இதயத்தைவிட்டு எகிறி குத்தித்தது. அவன் இன்ப அதிர்ச்சியில் சிலையாகி நிற்பதை கவனித்துவிட்டார் சுமிம்மா..
அவளை சுடிதாரில் பார்த்தும், ‘சுடிதாரில் இவ்வளவு அழகாக இருக்கிற..’ அவர்கள் அருகில் வரும் முன்னரே தன்னுடைய தடுமாற்றத்தை சரி செய்துகொண்டான்..
அவர்கள் இருவரையும் கண்ட மறுநொடியே, “எவ்வளவு நேரம் வெயிட் பண்றேன். வேண்டும் என்றே லேடாக வரீங்க..” என்று இருவரையும் வம்பிழுக்க வெடுகென்று நிமிர்ந்த நிலா அவனை வெட்டும் பார்வை பார்க்க,அவனின் உதடுகளில் கள்ளச்சிரிப்பில் மறந்தது.
அவளை வம்பிழுத்ததே அந்த பார்வைக்காகத் தானே.. அவனின்
பார்வையிலிருந்தே அதைக் கண்டு கொண்ட நிலா, ‘வேண்டும் என்று பண்றான்..’ என்று பல்லைக் கடித்தாள்..
“நீ ஏன் சீக்கிரம் வந்தாய்..” என்று சுமிம்மா அவனை வேண்டுமென்றே வம்பிற்கு இழுக்க அவனின் முகம் போன போக்கைப் பார்த்து நிலாவிற்கு சிரிப்பு வந்தது.
“சுமிம்மா நீங்க வேண்டும் என்றே தூண்டி விடுறீங்க..” என்று பல்லைக் கடிப்பது அவனின் முறையானது..
அதன்பிறகு அவளின் சர்டிபிகேட் எல்லாம் வாங்கிப் பார்த்து டுடேரியலில் சேர்த்து விட்டுட்டு வெளியே வந்தவன், “நாளையிலிருந்து காலை வந்துவிடு நிலா. இங்கே சொல்லும் விஷயத்தை கொஞ்சம் கவனமாக படி. டவுட் வந்தால் ஸாரிடம் கேளு..” என்றதும் சரியென்று தலையசைத்தாள்.
“சரி பாரதி நாங்க வீட்டிற்கு போகிறோம்..” என்று சுமிம்மா சொல்ல, “ஒரு நிமிஷம் அம்மா..” என்றதும் நிலா நிமிர்ந்து அவனைக் கேள்வியாக நோக்கினாள்.
தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சின்ன பரிசு பொருளை எடுத்து நிலாவின் கையில் கொடுத்தான். அவளும் மறுபேச்சின்றி அந்த பரிசு பிரித்து பார்க்க அழகான சில்வர் கலர் ஹீரோ பேனா இருந்தது.
அந்த பேனாவைப் பார்த்தும், “நான் ரொம்பநாளாக வாங்க வேண்டும் என்று ஆசைபட்ட அதே பேனா. எனக்கு ஹீரோ பேனாவில் இந்த கலர் மட்டும் ரொம்ப பிடிக்கும். ஆனால் கடைசி வரை என்னால் இந்த பேனா வாங்கவே முடியல.
ஸ்கூலில் இந்த பேனாவிற்கு பெரிய போர்களமே நடக்கும்.. எக்ஸாம் டைம்ல இந்த பேனாவை வாங்கி ஆகணும் என்று படித்தது எல்லாம் ஒரு காலம்..” என்று தன்னுடைய பள்ளிகூட நாட்களில் மூழ்கினாள் நிலா.
பாரதியின் பார்வை அவளின் மீதே நிலைக்கவே, அவளின் இந்த எதார்த்தம் கண்ட சுமிம்மா, “இன்னும் குழந்தை மாதிரியே இருக்கிற..” என்று அவளின் தலையை பாசமாக வருடிவிட நினைவுலகிற்கு வந்தாள் நிலா.
“ரொம்ப தேங்க்ஸ்..” என்றதும், “இந்த பேனாவில் எக்ஸாம் எழுது..” என்றதும் புன்னகையுடன் சரியென்று தலையசைத்தாள்.
அவனின் பார்வையில் இருக்கும் மாற்றத்தை உணர்ந்து கொண்ட சுமிம்மா, ‘ம்ம் இது எதுவரை போகிறது என்று நானும் பார்க்கிறேன்..’ என்று நினைத்துகொண்டவர் மனதிற்குள் ஒரு கணக்கு போட்டுகொண்டார்..
மொட்டு வளரும்.