அவள் பதில் பேசாமல் மௌனமாய் அவனையே பார்க்க,
சையத் ஆவல் மிகுதியால்”நான் அவங்களை பார்க்கனும்” என்று எழுந்து கொண்டான்.
“அதுக்கென்ன பார்க்கலாம்… நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க” என்றாள்.
“நோ ஜென்னி… எனக்கு இப்ப பார்க்கனும்” என்று தன் பார்வையை சுற்றிலும் சுழற்றினான்.
“என்ன சையத்? இப்ப குக்கை பார்த்து என்ன பண்ண போற… குக்கிங் ஏதாவது கத்துக்கிற ஐடியா இருக்கா?!” என்று கேட்டு ராகவ் பரிகசித்து சிரிக்க,
ஜென்னி புன்முறுவலோடு “அது அப்படி இல்ல மிஸ்டர். ராகவ்… உங்களுக்கு அந்த டிஷ்ல இருக்கிற ருசிதான் தெரியுது… ஆனா சையத்திற்கு அதுல ஆழமான அன்பு தெரியுது… இல்லயா சையத் ?!” என்று கேட்க,
சையத் ஜென்னியை புரியாமல் பார்க்க, அவள் சொன்னதை கேட்டு ராகவும் குழம்பினான்.
ஜென்னி புன்னகையித்து, “சாஜிம்மா… ப்ளீஸ் வாங்க… உங்க மகனை ஏற்கனவே ரொம்ப தவிக்க விட்டீங்க… இதுக்கு மேலயும் வேண்டாம்” என்று அழைத்தாள்.
சையத் தேடலாய் பார்க்க சாஜி சமையலறையில் இருந்து வெளியே வந்தார்.
“ம்மா” என்றவன் அந்த நொடியே தன் அம்மாவை கட்டிக் கொள்ள, அவரும் கண்ணீர் மல்க “சையத்” என்று அவனை அணைத்துக் கொண்டார்.
ராகவ் யோசனைகுறியோடு ஜென்னியின் புறம் திரும்பி சமிஞ்சையால் கேட்க “சையத்தோட அம்மா” என்றாள்.
ராகவ் இதுவரையில் அவர்களை பார்த்ததில்லை. அவனுக்கு நடப்பதொன்றும் விளங்கவில்லை.
சையத்திற்கோ நடப்பது நிஜமா கனவா என்று சந்தேகம் தோன்றியது.
அவன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் பெருகி ஓட, சாஜியும் கட்டுபடுத்த முடியாமல் அவன் மீது சாய்ந்தபடி “நான் உன்னை புரிஞ்சிக்காம ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் இல்ல சையத்” என்றார்.
“என்ன பேசிறீங்கம்மா? நான்தான் உங்களையும் வாபாவையும் புரிஞ்சிக்காம ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்” என்றான்.
அந்த சமயம் “அண்ணா” என்றழைத்தபடி சையத்தின் தங்கை அவன் அருகாமையில் வரவும்
ஆச்சர்ய குறியோடு “அப்சானா” என்று அவளையும் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
அந்த கணம் சையத்திற்கு தன் தம்பி நினைவுக்கு வர “ஆஷிக் எங்கம்மா?” என்று கேட்டான்.
சாஜி பதில் சொல்வதற்கு முன்னதாக ஜென்னி முந்திக் கொண்டு “ஆஷிக் மும்பையில இருக்கான் சையத்” என்றாள்.
சையத் தன் அம்மாவை கேள்வியாய் பார்க்க, இத்தனை நேரம் புரியாமல் பார்த்திருந்த ராகவ் ஜென்னியிடம் “அது சரி… உனக்கெப்படி ஜென்னி ?!.. சையத்தோட பேஃமிலியை பத்தி தெரியும்” என்று கேட்டான்.
சையத்தின் மனதிலும் அதே கேள்வி எழுந்தது.
ஜென்னி கைக்கட்டி நின்றபடி, “அது பெரிய கதை… அப்புறம் பேசிக்கலாம்.. இப்ப டின்னர் டைம்” என்றவள் சையத்தையும் அழைத்து அமரச் சொன்னாள்.
சையத்தின் முகம் அத்தனை பிரகாசமாயிருந்தது. தன் அம்மாவின் கையால் என்றாவது சாப்பிடுவோமா என்று உள்ளுக்குள் இருந்த தவிப்பெல்லாம் தீர்ந்து போயிருந்தது.
பல நாள் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் விதமாய் அன்று சையத் ஆசை தீர உண்டான்.
சாஜியும் ஆசை தீர மகனுக்கு உணவு பரிமாறியவர் ராகவிற்கும் பார்த்து பார்த்து பரிமாறினார்.
எல்லோரும் உணவருந்திய பின் முகப்பறையில் அமர, அப்சானா சையத்தின் அருகில் அமர்ந்து ஜென்னியை பற்றி புகழ்ந்து கொண்டிருந்தாள்.
ஜென்னியின் மீதான கிறக்கமும் மயக்கமும் அவனுக்கு ஏற்கனவே காதலாய் மாறி இன்று அவன் வாழ்வில் நுழைந்த தேவதையே அவள் என்று தோன்றியது அவனுக்கு .
அவன் மீதான மரியாதையும் அபரிமிதமாய் பெருகியிருந்தது.
சையத் இந்த எண்ணத்தோடு அவளையே பார்த்திருக்க, ராகவிற்கு உள்ளுக்குள் பற்றி எறிந்தது.
ராகவ் அந்த சூழ்நிலையை மாற்ற எண்ணி “இப்ப சொல்லு ஜென்னி… சையத் அம்மாவை எப்படி உனக்கு தெரியும்” என்று கேட்க,
அவள் நிமிர்ந்து அமர்ந்தபடி “அது… என் டேட் ஒன் இயர் பேக் சென்னையில இந்த வீட்டை வாங்கினார்… அந்த வீட்டை மெய்ன்டையின் பண்ண ஆள் தேடின போது சாஜிம்மாவும் அவங்க பையனும் வேலைக்கு சேர்ந்தாங்க… ஆறு மாசம் முன்னாடி டேட் இங்க வந்து தங்கியிருந்த போது… சாஜிம்மா குக்கிங் ரொம்ப பிடிச்சி போய் மும்பை கூட்டிட்டு வந்துட்டாரு… முதல்ல வராமாட்டேன்னு சொன்னாங்க… அப்புறம் டேட் பசங்க படிக்க ஏற்பாடு பன்றன்னு சொன்ன பிறகு மனசு மாறி சாஜிம்மா அப்சானா
ஆஷிக் எல்லோரையும் கூட்டிட்டு வந்துட்டாங்க… வந்த கொஞ்ச நாள்லயே எல்லோரும் எங்களோட ரொம்ப மிங்கிலாயிட்டாங்க… அதோடு ஆஷிக் ப்ரில்லியன்ஸி டேடுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு… கூடவே வைச்சுக்கிட்டாரு…” என்றவள் சையத்தை நோக்கி “ஆனா சாஜிம்மா ஒரு தடவை கூட உங்களை பத்தி இந்த ஆறு மாசத்தில பேசினதேயில்லை சையத்… கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க இன்ட்ர்வீயூ பார்த்து ரொம்ப அழுத போதுதான் அப்சானா என்கிட்ட உங்களை பத்தி சொன்னா… அப்பதான் சென்னை ரீஓபன் இனாகுரேஷனுக்கும் என்னை அழைச்சாங்க… முதல்ல வேண்டாம்னு நினைச்சேன் அப்புறம் சாஜிம்மாவுக்காக வரலாம்னு முடிவு பண்ணேன்… அதே டைம்ல மிஸ்டர். ராகவ் என்னை மீட் பண்ண கால் பண்ணியிருந்தார்… அப்போ வேறெதோ மூட்ல அப்படி பேசிட்டேன்…அப்புறம் தெரிஞ்சிது…. நீங்களும் ராகவும் ரொம்ப க்ளோஸ்னு…. அந்த ஐடியாலதான் டேட்கிட்ட பேசிட்டு இனாகுரேஷனுக்காக சென்னைக்கு சாஜிம்மாவையும் கூட கூட்டிட்டு வந்தேன்… வந்ததும் உங்களை மீட் பண்ண வந்து நம்ம கான்வஸேஷன் தப்பான ரூட்ல போய்… ” என்று அவள் சொல்லி முடிக்க
“அப்போ அந்த மீட்டிங் சையத்துக்காகவா ?!” ராகவ் கேள்வியாய் பார்த்தான்.
“ஆமாம் ராகவ்… அதுவும் இல்லாம நீங்க புதுசா பண்ண போற மூவிக்காக என்னை கமிட் பண்ண கூப்பிடிறீங்கன்னு நான் கெஸ் பண்ணேன்… ஸோ மிஸ்டர். சையத்தும் வருவாருன்னு நினைச்சேன்.. அங்க நான் நினைச்சதை பேசவிடாம… நீங்க இரண்டு பேரும் மூவி பத்தியே பேசிட்டிருந்தீங்க… என்னால பேச முடியல.. அந்த மோசமான ஸிட்டுவேஷன்ல சொல்ல வந்ததையும் சொல்ல முடியல” என்றாள்.
ரூபாவிற்கு இப்போதுதான் நடந்த நிகழ்விற்கான காரண காரியங்கள் விளங்கின. இதைதான் கமிட்மென்ட் என்றாளோ? மனதோடு எண்ணிக் கொண்டவள், ஒரு காரியத்தை எடுத்து அதை மனதோடு வைத்து செய்து முடிக்கும் அவளின் உறுதியை கண்டு அந்த நொடி வியப்படைந்திருந்தாள்.
ராகவிற்கு தன்னை அவள் எதற்கு அழைத்தாள் என்று எண்ணம் உண்டாக,
அதனை யூகித்தவள் “உங்களை நான் ஏன் கூப்பிடன்னு யோசிக்கிறீங்களா ராகவ்” என்று கேள்வி எழுப்ப அவன் அவளின் கணிக்கும் திறனை பார்த்து ஆச்சர்யப்பட,
ஜென்னி மேலும் “இன்னைக்கு உங்களை நான் இன்வைட் பண்ணதுக்கு ஸ்பெஷல் ரீஸன்.. சாஜிம்மாதான்… அவங்க பிள்ளையோட வெற்றிக்கு நீங்கதான் காரணம்னு உங்களை பார்த்து நன்றி சொல்லனும்னு என்கிட்ட சொன்னாங்க” என்க,
அந்த கணம் சாஜியும் ஆமோதித்து “ஆமாம் தம்பி… நீங்க சையத்தோட வளர்ச்சிக்காக ரொம்ப துணையா இருந்திருக்கீங்கன்னு டீவில சையத் சொல்லி கேட்டேன்.. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல… ” என்று அவர் கைகூப்பி நிற்க,
ராகவ் சங்கடத்தோடு “அவன் என் நண்பன்மா இதுல என்ன இருக்கு.. அதுவும் இல்லாம அவன் திறமைதான் அவன் வெற்றிக்கு காரணம்… ” என்றான்.
ஜென்னியும் ஆமோதித்து “நூறு பர்ஸன்ட் உண்மை… சையத்தோட திறமைதான் இந்தளவுக்கு அவரை உயர்த்திருக்கு” என்றாள்.
சையத்திற்கு வானத்தில் மிதந்திருப்பது போன்றிருந்தது. இத்தனை சந்தோஷத்தை அவன் அனுபவித்ததே இல்லை என்பது போல் திக்குமுக்காடி போனான்.
அவன் வார்த்தைகள் வராமல் ஜென்னி அருகாமையில் வந்து நின்று நெகிழ்வாய் பார்த்தவன், “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ஜென்னி… நீங்க யாரு எனக்கு… சத்தியமா புரியல…
எவ்வளவு பெரிய வெற்றி கிடைச்சாலும் அதை கொண்டாட யாராச்சும் கூட இருக்கனும்… நான் இத்தனை நாளா அதுக்காகதான் ஏங்கிட்டிருந்தேன்… அதை நீங்க நான் கேட்காமலே தந்திருக்கீங்க… என்ன சொல்றது… ஆனா நன்றின்னு மட்டும் சொல்ல மாட்டேன் ஜென்னி… நீங்க செஞ்ச காரியத்துக்கு அது பத்தாது” என்று சொல்லும் போது அவள் குறுக்கிட்டு அவனை நிறுத்த,
அவன் அவளை கையமர்த்தி “ப்ளீஸ் ஜென்னி… நான் முழுசா சொல்லிடிறேன்” என்று தொடர்ந்தான்.
“நான் இப்படி சொல்றேன்னேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… என் சுயவிருப்பத்துக்காக சொல்லல… நான் நெக்ஸ்ட் எடுக்க போற அந்த மூவில உங்களை தவிர வேறு யாருமே நடிக்க வைக்க முடியும்னு எனக்கு தோணல… நீங்க மட்டூம்தான் அந்த ரோலை பண்ண முடியும்… பணத்துக்காக இல்ல புகழுக்காக வேண்டாம்… பெண் சமுதாயத்துக்காக… முன்னேற்றுத்துக்காகன்னு யோசிச்சி பாருங்க… நீங்க மட்டும் அந்த படத்துல நடிக்க விருப்பப்படலன்னா… நான் நிச்சயம் அந்த ப்ரோஜ்க்ட்டையே ட்ராப் பண்ணிடுவேன்” என்று சொல்ல ஜென்னி வாயடைத்துப் போனாள்.
ராகவிற்கு அவன் கடைசியாக சொன்னது அதிர்ச்சிகரமாக இருந்தது. அது அவனின் கனவுபடம் என்று வாய் ஓயாமல் சொல்வானே.
ஜென்னியும் அவன் சொன்னதில் அதிர்ந்து “என்ன சொல்றீங்க சையத்?” என்று கேட்க,
“உங்களை தவிர வேறெந்த பெண்ணையும் அந்த படத்தோட கதாநாயகியாய் என்னால யோசிச்சி கூட பார்க்க முடியாது” என்றான் தீர்க்காமாக!
ராகவ் அந்த நேரத்தில் குறுக்கிட்டு பேச முடியவில்லை, எனினும் அவனுக்குள் கோபம் கொப்பளித்து கொண்டிருந்தது.
இறுதியாய் அவர்கள் உரையாடல் முடிந்து சையத் தன் அம்மாவையும் தங்கையையும் அழைத்து கொண்டு புறப்பட, ஜென்னி கார் வரை வழியனுப்ப வந்தாள்.
சையத் புறப்படும் தருவாயில் அவளிடம் காதலை சொல்ல மனம் துடிக்க, அவன் பெருமூச்சோடு “தேங்க் யூ ஜென்னி.. நான் இதை எப்பவும் மறக்கவே மாட்டேன்” என்றான்.
“இட்ஸ் ஒகே சையத்… ” என்றவள் அப்சானாவை பார்த்து “சந்தோஷமா அப்சானா” என்க,
அவள் ஜென்னியை கட்டிக் கொண்டு வெதும்பியவள், “தேங்க்ஸ் கா” என்று
ஜென்னியை அவள் விடாமல் கட்டிக் கொண்டிருக்க, சாஜியும் கலங்கி நின்றார்.
மகனோடு போகிறோம் என்பதை தாண்டி ஜென்னியை பிரிய போகிறோம் என்ற சோகமே அவர்களை ஆளுமை செய்ய, ஜென்னி பிராயத்தனப்பட்டு சமாதானம் செய்து அவர்களை அனுப்பிவிட்டாள்.
அவர்களின் அந்த பிரிவு உணர்வுபூர்வமான காட்சியாய் அரங்கேறியது.
அவர்கள் சென்ற பின் ராகவ் புறப்பட தயாராக ஜென்னி புன்முறுவலோடு “உங்க டைமை ரொம்ப வேஸ்ட் பண்ணிட்டேன் போல… சாரி” என்க,
அவன் பெருமூச்செறிந்து “இட்ஸ் ஒகே… ஆனா இப்போ நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்… முடியுமா ?!” என்று கேட்டு இறுக்கமாய் பார்த்தான்.
“உள்ளே போய் பேசலாம்”
“இல்லை இங்கயே” என்றபடி அவன் ரூபாவை பார்க்க, ஜென்னியும் அவளை சமிஞ்சையால் அங்கிருந்து போகச் சொன்னாள்.
சுற்றிலும் இருள் பரவி நிசப்தமாய் கிடக்க, ராகவ் ஆழ்ந்து அவளையே பார்த்தான்.
ஜென்னி சங்கடமாய் உணர்ந்த போதும் அதை காட்டிக் கொள்ளாமல் “ஏதோ பேசனும்னு சொல்லிட்டு இப்படி ஸைலன்ட்டா இருக்கீங்க” என்று வினவ,
அவன் அவள் வசம் சாயும் தன் மனதை கட்டுபடுத்திக் கொள்ள முடியாமல்
சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க முயல ஜென்னி எரிச்சலோடு “ராகவ்… இங்க ஸ்மோக் பண்ணாதீங்க… எனக்கு அந்த ஸெம்லெல்லாம் அலர்ஜி” என்று சொல்லும் போதே அவள் முகத்தில் படபடப்பு தொற்றிக் கொண்டது.
ராகவ் அவள் சொல்வதை கேட்காமல் அதனை பற்ற வைத்துவிட்டு “நீ சொல்றதெல்லாம் நான் கேட்கனுமா ?!” என்றபடி புகையினை இழுத்து வெளியேற்ற அதை நுகர்ந்தவளுக்கு கலவரம் தொற்றிக் கொண்டது.
“நான்ஸென்ஸ்” என்றவள் அருவருப்பாய் பார்த்துவிட்டு நகர யத்தனிக்க அவனோ அவள் கரத்தை கெட்டியாய் பற்றி இழுத்து, அவன் காரில் அவளை நெருக்கியபடி “என்னால முடியல.. எனக்கு இப்பவே உன்னை கிஸ் பண்ணனும்” என்க,
அவள் பார்வை உஷ்ணமாய் மாறியது. “ஸ்கவுன்ட்ரல்” என்று திட்டிவிட்டு அவனை விலக்கிவிட முயல, அவனோ அசையாமல் நின்றான்.
அவள் “செக்யூரிட்டி” என்று சத்தமிட, அவன் கோபமடைந்து “இப்ப எதுக்கு சும்மா சீன் க்ரீயேட் பன்ற… ஒரு கிஸ்ல உன் கற்பா போயிடப் போகுது” என்றவன் சிகரெட்டை புகைத்தபடி அவளை நெருங்கினான்.
அவள் நாசிக்குள் புகுந்த அந்த சிகரெட் வாடை அவள் உடல் மூளை என இரண்டையும் மெல்ல செயலிழுக்க செய்து கொண்டிருந்தது.
ஜென்னி அவள் வாழ்வில் சிரமப்பட்டு எதை மறந்திருந்தாலோ, இன்று அவனின் அந்த செய்கையால் அவை நினைவலைகளாய் எழும்பியது.
பதட்டத்தின் உச்சக்கட்டத்தில் இதயத்தின் துடிப்பு அதிகரிக்க, அவள் உடலெல்லாம் வியர்த்து நடுக்கமுற தொடங்கி இறுதியாய் மூச்சுவிட முடியாமல் திணற ஆரம்பித்தாள்.
ராகவ் சிகரெட்டை புகைத்தபடி அவள் தடுமாறுவதை பார்த்து வியாப்பானவன், அதை விரும்பவும் செய்தான்.
அவனை தடுக்கவும் முடியாமல் அந்த சூழலில் இருந்து விடுபடவும் முடியாமல் அவள் இருக்க, ராகவின் நினைப்பிற்கு அது சாதகமாகியது.