Naan Aval illai 48

வன்மமும் வக்கிரமும் 
ராகவ் தன் வீட்டிலிருந்து புறப்பட்டவன் என்றுமில்லாமல் அன்று தன்னுடைய மனதிற்கு நெருக்கமான காரை எடுத்தான்.
அப்போது மனோ அவன் முன்னே வந்து “பாஸ்… பார்ட்டிக்கு வேற போறீங்க… நீங்களே டிரைவ் பண்ணிட்டு போனா ?” என்று கவலை கொள்ள,
“டோன்ட் வொர்ரி… ஐ வில் டேக் கேர்” என்றவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான். 
வரிசையாய் அவன் மூன்று படங்கள் முடித்து அதன் வெற்றிகளை ஈட்டிக் கொண்டிருந்தவன் இத்தனை நாளாய் தன் தேவைகளை மறந்து துடிப்பாய் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினான்.
எல்லாமே புகழ் என்ற போதையை எட்டி பிடிக்கதான். 
அவன் தந்தையின் மூலமாக அவனுக்கு மரியாதை கிட்டியிருக்கலாம். ஆனால் புகழ் என்பது அவனாக தேடி கொண்டால்தான். 
தந்தையின் சலுகையில் கதாநாயகனாக அறிமுகமானாலும் அதை தக்க வைத்து கொள்ள பெரும்பாடுப்பட்டான்.
அதன் பலனாய் மக்களுக்கிடையில் ரொம்பவும் பிரபலமான விருப்பமான நாயகனாக மாறியிருந்தான். 
அந்த இன்பத்தில் தன் நண்பர்களோடு சேர்ந்து டிரிங்ஸ் பார்ட்டியில் கலந்து கொண்டவன், நிதானமாய் மது போதையை ரசித்து  குடித்து கொண்டிருக்க,
அப்போது அவன் அருகிலிருந்த அவன் நண்பன் “ஏ ராகவ் ட்ரை திஸ்” .என்றூ போதை தினிக்கப்பட்ட சிகரெட்டை அவன் கையில் வைத்து,
“அப்படியே ஸ்லோவா ஸ்டெடியா ஏறும்” என்று அனுபவித்து உரைத்தான். 
“ரியலி ?!” என்று வியப்போடு கேட்ட ராகவ் அதனை வாங்கி முகர்ந்து போதே அவனுக்கு தலை கிறுகிறுத்தது. 
அந்த உணர்வு அவனுக்கு ரொம்பவும் பிடித்து போனது. 
அதனை வாங்கி அவன் புகைக்க ஆரம்பிக்க அவன் உணர்வுகள் எல்லாம் தூண்டி விடப்பட்டது. அதனை விடாமல் புகைத்தவன் அந்த இன்பத்தில் சிலாகித்தான்.
பின்னர் அந்த பார்ட்டியிலிருந்து அவன் வெளியேறிய சமயம் அங்கே அவனை பார்த்த பலர் அவனை சூழ்ந்து கொள்ள, அவர்களில்  நவநாகரிக ஆடை அலங்காரத்தில் இருந்த அந்த பெண்களின் தோற்றங்கள் அவனின் உணர்வுகளை முறுக்கேற்றிவிட்டன. 
தன் பேரும் புகழின் மீது கண்ணும் கருத்துமாய் இருந்தவன் பொது இடத்தில் ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்டுவிட கூடாதென்ற எண்ணத்தோடு அவர்களை எல்லாம் விலக்கிவிட்டு அவசரமாய் புறப்பட்டான். 
மது போதையை விட மாது போதை பெரும் ஆபத்தானது. அத்தனை சீக்கிரத்தில் அது தீர்ந்துவிடாது. 
அவன் உணர்வுகள் தறிகெட்டு பயணிக்க காரில் ஏறி அந்த இடத்தை விட்டு கிளம்பியவன் அறைகுறை போதை நிலையில் இருந்ததால்  வெகுநிதானமாக  ஓட்டிக் கொண்டு சென்றான்.
அதே நேரம் மனோவிற்கு தன் கைப்பேசியிலிருந்து அழைத்து பேச,
ராகவ் சொன்னதை கேட்ட மனோ பதட்டம் நிரம்பிய குரலோடு, , “வித்யா லட்சுமி கேரளாவில ஷீட்டிங்ல இருக்காங்க சார்… பாஸ்” என்றான்.
அவன் கடுப்பாகி “அரேஞ்ச் ஸம்படி எல்ஸ் என் டேஸ்டுக்கு ஏத்த மாதிரி… இன்னைக்கு நைட் ஈசிஆர் பங்களாவில” என்றவன் காரை ஓட்டியபடி உரைத்தவன்,
இறுதியாய் “நோ எக்ஸ்யஸஸ்… மனோ… இன்னைக்கு எனக்கு வேணும்” என்றவன் சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு காரில் முன்னேறி சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த பெண்ணை கண்டு  சடாரென பிரேக்கை அழுத்தி காரை நிறுத்தினான். 
அவள் அதன் சத்தத்தை கேட்டே மிரண்டு  தரையில் வீழ்ந்தாள்.
விழுந்த அதிர்ச்சியிலிருந்து அவள் மீளாமல் இருக்க, ராகவ் தன் காரின் கண்ணாடியை திறந்து “நடுரோட்ல விழற… இடியட்” என்று கோபத்தில் கத்தினான்.
அவன் குரல் கேட்டு மெல்ல சுதாரித்து எழுந்து கொண்டவள் “ஸாரி…என் ஸ்டிக் இங்க விழுந்திருச்சு… அதை எடுக்க வந்தேன்” என்று சொல்லிக் கொண்டே அவள் தரையை துழாவி அவள் ஸ்டிக்கை தேடி கொண்டிருக்க, அவன் விழிகள்  அவளை நோக்கின. 
எளிமையாக இருந்தாலும் நேர்த்தியாக அவள் புடவை உடுத்தியிருந்த அழகை கண்டு சலனமுற்றவன், 
இருள் சூழ்ந்திருந்த அந்த இடத்தை சுற்று முற்றும் பார்த்துவிட்டு தன் காரிலிருந்து இறங்கி வந்தான். 
அவள் குனிந்து தன் ஸ்டிக்கை தேடி கொண்டிருப்பதை பார்த்து வன்மமாய் ரசிக்கலானான்.
அவளின் பளிச்சிட்டிருந்த பின்னங் கழுத்தை பார்த்தவன், அவள் முகத்தை பார்க்க வேண்டுமே என்ற ஏக்கத்தோடு,
கீழே கிடந்த அவள் ஸ்டிக்கை எடுத்து கொண்டு, “நீ தேடிற ஸ்டிக் என் கையில இருக்கு” என்க, அவள் பெருமூச்சுவிட்டபடி எழுந்து நின்றவள் “தேங்க்ஸ்” என்று புன்னகையிக்க,
பளிங்கு சிற்பமென இருந்த அவள் உடலமைப்பையும் செதுக்கி வைத்த முகத்தோற்றத்தை பார்த்து அசந்து போனான்.
அவன் உள்ளூர ஏற்றிய போதையை விடவும் அவன் அழகு அவளை இன்னும் இன்னும் போதையூட்ட அவன் நீட்டி கொண்டிருந்த அந்த ஸ்டிக்கை அவள் கரத்தில் பற்றி கொண்டு வாங்க முற்பட அதை அவன் கெட்டியாக பிடித்து கொண்டான்.
அவள் புரியாமல் “கொடுங்க ஸார்” என்று கேட்க,
“நீ ப்ளைன்ட்டா ?!” என்று அவன் பரிதாபமாய் கேட்க அவளுக்கு எரிச்சல் மூண்டது. இத்தனை நேரமாய் அவனுக்கு அது கூடவா தெரியவில்லை என்று 
எண்ணமிட்டு கொண்டு “ஹ்ம்ம்” என்றாள்.
அவன் தன் கூர்ந்த விழிகளால் அவளை அளவெடுத்தபடி பார்க்க, 
அவள் அதை உணராமல்”ஸ்டிக்கை கொடுங்க ஸார்” என்று கேட்க அவன்  அவள் கரத்தை பற்றி கொண்டு “உன் வீடு எங்கேன்னு சொல்லு நான் டிராப் பன்றேன்” என்றான்.
அவன் குரலில் இருந்த கிறக்கமும் அவன் மேல் வந்த சிகரெட் நாற்றத்தோடு கலந்த போதை வாசமும் அவளுக்கு வெறுபாகிட, “கையை விடுங்க… பக்கம்தான் நானே போயிடுவேன்” என்றாள். 
அவன் போதை உச்சத்தை தொட்டிருக்க அப்படி சாலையை நிற்பது உசிதமில்லை என எண்ணியவன் அதற்கு மேல் தாமதிக்காமல் தன் காரின் பின்கதவை திறந்து அவளை உள்ளே தினித்துவிட்டு காரை எடுத்தான்.
 விதிர்விதிர்த்து போனவள் “என்ன பன்றீங்க. ?என்னை இறக்கிவிடுங்க” என்று கத்தி ஆர்பாட்டம் செய்ய, அவன் மிதமான குரலில்
“கொஞ்ச நேரதான் பேபி… திரும்பி கொண்டு வந்து உன்னை அதே இடத்தில இறக்கி விட்டிடுறேன்” என்றவன் அவள் தாடையாய் கொஞ்சலாய் தடவினான்.
“சீ… என்னை இறக்கி விடுடா” என்றவள் அவன் கரத்தை தட்டிவிட்டு அந்த கார் கதவை திறப்பதற்கான வழியை தேடி தடவி பார்க்க,
“டோரெல்லாம் திறக்க முடியாது… நீ கத்தினாலும் வெளியே கேட்காது… உள்ளே நடக்கிற எதுவும் வெளியே இருந்து யாரும் பார்க்க முடியாது… ஸோ பெட்டர் ஸைன்ட்டா வா” என்றான். 
“இப்ப என்னை இறக்கிவிட போறீங்களா இல்லையா ?!” என்றவள் மிரட்டி கொண்டே கார் கண்ணாடியை விடாமல் தட்ட, அவளின் அந்த செயல் அவனை எரிச்சல்படுத்தியது.
அவன் உடனடியாக திரும்பி அவள் கட்டியிருந்த புடவையை இழுக்க, அவள் மிரட்சியுற்று தன் கரத்தை மார்போடு சேர்த்து பிடித்து கொள்ள, “இப்ப கையை வாயை வைச்சுட்டு ஸைன்ட்டா வரல… இங்கேயே உன்னை மொத்தமா உரிச்சிருவேன்… பார்த்துக்கோ” என்றவன் கோபம் பொங்க உரைத்தான். 
அவள் அதிர்ந்து பதறியவள் கண்ணீரை உகுத்தபடி “என்னை இறக்கி விடுங்க… ப்ளீஸ் நான் போகனும்” என்றாள்.
அவன் அவள் சொல்வதற்கு துளி கூட செவி சாய்க்காமல் காரை அதிவிரைவாய் ஓட்ட அவள் விடாமல் அவனிடம் கெஞ்சியபடியே வந்து கொண்டிருந்தாள்.
வேறெண்ண செய்வதென்றே அவளுக்கு புரியவில்லை.
அவனுக்குள் இருந்த போதையை அவனை ஆட்டிவித்து கொண்டிருக்க, வலையில் சிக்கிய இரையை பார்த்து சிலந்தி இரக்கம் காட்ட இயலுமா ?!
அவன் தன் வீட்டிற்குள் காரை நுழைத்துவிட்டு, காரின் பின் கதவை திறந்த அவள் தோளின் மீது கரம் வைக்க ரௌத்திரமாய் அவன் கரத்தை பற்றி விரல்களை கடித்தாள்.
“ஆ” என்று கத்தியபடி வலியால் துடித்தவன் “ஏ விடுடி” என்று சொல்லி அவன் கரத்தை மீட்டுக் கொள்ள முயன்று அவளை தள்ளிவிட்டு அவன் தன் கரத்தை உதறிக் கொண்டு வலியால் அவதியுற்றான். 
அதற்குள்ளாக அவள் திறந்திருந்த கதவு வழியாக வெளியேற தட்டுத்தடுமாறி ஓடினாள்.
அவன் சிரித்தபடி ‘ஹ்ம்ம்… கடிச்சிட்டு ஒடிறியா ?! எங்கே ஓடினாலும் என் வீட்டுக்குள்ளயேதான் நீ ஓடனும்’ என்று குரூரமாய் சொல்லியவன் அவள் ஓடும் திசையை நோக்கி நடந்தான்.
அவளுக்கு தப்பி கொள்ள மாட்டோமா என்ற எண்ணம் மட்டுமே.
அவள் தட்டுத்தடுமாறி தன் மானத்தை தற்காத்து கொள்ள முட்டி மோதி ஓடியவள் எதிரே இருந்த செடி கொடிகள் தடுக்க  கால் இடறி கீழே விழ நேரிட்டது.
அவள் மூச்சு வாங்கி கொண்டு எழுந்து கொள்ள, அவன் பின்னோடு வந்து அவள் காதோரம் வந்து கிசுகிசுத்த குரலில், “என்ன பேபி?  ஓட முடியலயா ? நான் வேணா தூக்கிக்கிட்டுமா ?” என்றவன் கேட்டு அவளை தொடவும்,  அவள் படபடப்பாக மூன்னேறி ஓட அவனை அவள் தடுக்கவில்லை.
அங்கிருந்து சற்று தள்ளியிருந்த 
நீச்சல்குளத்தில் அவள் தவறி விழுந்து மூச்சு திணற, அதை அவன் எதிர்பார்த்தான்தான்.
அவன் மெல்ல நடந்துவந்து நீச்சல்குளத்தை நெருங்கி “அதிகபிரசங்கி… இதெல்லாம் தேவையாடி உனக்கு” என்று பரிகசித்து சிரிக்க,
அவள் தண்ணீரில் தத்தளித்து உயிருக்காக போராட, மரணம் கூட அந்த நொடி அவளுக்கு உதவ மறுத்தது. 
அவளை உள்ளிறங்கி காப்பாற்றியவன் மயக்க நிலையில் கிடந்தவளை தன் படுக்கை அறையில் தூக்கி வந்து படுக்க வைத்தான். 
அவன் தன் ஈர உடைகளை களைந்து மாற்றிவிட்டு, படுக்கையில் கிடந்தவளை அருகில் அமர்ந்தான்.
அவளை அப்படி  நனைந்த மேனிக்கு பார்த்தவனுக்கு இன்னும் கிறக்கமானது.
அவளை அங்கம் அங்கமாய் ஆழ்ந்து ரசித்தபடி சிகரெட்டை ஊத அது அவள் நாசிக்குள் புகுந்து கொள்ள அவள் இருமிக் கொண்டே விழிகளை திறந்தாள்.  
எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் அவள் உள்ளம் அச்சத்தை நிரப்பிய நேரம் அந்த அறையின் குளிரூட்டியால் அவள் உடலெல்லாம் நடுங்கி கைகால்களெல்லாம் வெடவெடத்துக் கொண்டிருந்தது. 
அவள் நிலையை கவனித்தவன் தன் மேஜையிலிருந்து மதுவை கிளாஸில் நிரப்பி “ஹாட் டிரிங்ஸ் குடிக்கிறியா பேபி… குளிர் போயிடும்” என்றவன் கேட்டு ஒரு க்ளாஸை எடுத்துவந்து அவள் உதட்டருகே வைக்க, கோபம் மூண்டு “சீ பொறுக்கி ராஸ்கல்… எங்கடா என்னை கூட்டிட்டு வந்த” என்று சொல்லி அந்த கிளாஸை தட்டிவிட, அது கீழே விழுந்து உடைந்து சிதறியது.
அதனை பார்த்தவன் சிரத்தபடி “டிரிங்ஸ் வேண்டாம்னா பரவாயில்லை… உன் குளிரை நான் சரி பன்றேன் பேபி” என்று சொல்லி தன் முகத்தை அவள் கழுத்தில் இறங்கி வருட, அருவருப்பாய் உணர்ந்தவள் அவனை தள்ளிவிட முயன்று தோற்று கொண்டிருந்தாள்.
உள்ளும் புறமும் எரிதழலில் இட்டது போல் எரிய அவனோ அவள் தடை செய்வதையும் மீறி அவளை அப்படியே படுக்கையில் சாய்த்து விட்டான்.
அவன் அவள் புடவையை விலக்கி கொண்டு அவளூடே மேலும் செல்ல யத்தனிக்க, அவள் தவிப்போடு படுக்கையின் அருகிலிருந்த இரவுவிளக்கை கையில் எடுத்து அவன் தலையில் அடித்தாள்.
அவன் பின்மண்டையை பிடித்து கொண்டு அவளை விலகி வந்தான்.
அவள் இதயம் மத்தளமாய் கொட்ட கண்ணீரோடு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, படுக்கையை விட்டு தட்டுத்தடுமாறி இறங்கி நடந்தவளின் பாதத்தில் கிளாஸ் துண்டுகள் குத்தி கிழிக்க “அம்மா” என்றபடி வலியால் மேலே நடக்க இயலாமல் தரையில் உட்கார்ந்து கொண்டாள்.
அவன் அவளின் நிலைமையை பார்த்து “இதுக்கு பேர்தான் தன் வினை தன்னை சுடும்னு சொல்வாங்க” என்று சொல்லி உரக்க சிரித்தவன் 
அவள் அருகில் வந்தவன் “சும்மா சீன் க்ரியேட் பண்ணாம ஒழுங்கா நான் சொல்றதை கேளு” என்றான்.
அவள் கரம்கூப்பியபடி “என்னை விட்டுடுங்க… நான் போயிடிறேன்” என்று கெஞ்ச,
“எனக்கு வேண்டியதை கொடுத்துட்டு எங்கே வேணா போ நான் தடுக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு துச்சாதனனை போல் அவள் புடவையை பற்றி இழுத்தான்.
“வேண்டாம் ப்ளீஸ்” என்று அவள் பதறியபடி தன் புடவையை கெட்டியாய் அவள் பிடித்து கொள்ள, அவளை காக்கும் சக்தி அங்கே எதுவும் இல்லை.
அவளை துகில் உரிப்பதில் அவன் பிடிவாதமாய் இருக்க, அவளும் விட்டுகொடுக்காமல் “நான் உங்க காலில் கூட விழுறேன்.. என்னை விட்டிருங்களேன்” என்றவள் கண்ணீர்விட்டு அழுது தேம்ப,
அவன் சற்றும் இரக்கமில்லாமல் அவளை நெருங்கியவன் அவள் புடவையை கழற்றிவிடுவதில் மும்முரமாய் இருந்தான்.
அவள் ஒரு நிலைக்கு மேல் தன் பொறுமையிழந்தவள் சீற்றமாய் 
அவன் முகத்திலறைந்து தள்ளிவிட்டாள். 
அதிர்ச்சியுற்றவன் ரௌத்திரமாய் அவள் கூந்தலை பற்றி தூக்க, “வலிக்குது விடுங்க” என்று அவள் துடித்தாள்.   
அவன் ஆக்ரோஷமாய் அவளை விடாமல் சிகரெட்டை பற்ற வைத்தவன் புகையை ஊதியபடி 
“ப்ளைன்டாச்சே… கொஞ்சம் சாஃப்டா நடந்துக்கலாம்னு பார்த்தா, நீ என்னடான்னா ஓவரா பன்ற?” என்று சொல்லி அவசரமாய் அவள் புடவையை  கழற்றி தூக்கிவீச, அவள் அதனை உணர்ந்து தன் மேலங்கத்தை மறைத்து அவமானத்தில் கதறி அழ, அவள் கழுத்தை இறுக்கி பற்றி தூக்கியவன் சுவற்றோடு அவளை அழுத்திபிடிக்க அவள் தவிப்புற்றாள். 
அவனோ தன் இதழை கொண்டு அவள் இதழ்களை அழுந்த மூடினான். 
அந்த முத்தத்தின் வழியே அவன் தன் குரோதத்தையும் வன்மத்தையும் அவள் மீது இறக்க,  அவளுக்கு மூச்சு திணறி கொண்டிருந்தது.
அவன் அத்தனை சீக்கிரத்தில் அவளை விடாமல் அவள் உதடுகளை சிறைபிடித்து வண்ணமே இருந்தவன் இறுதியாய் அவனாக சலித்து அவள் உதடுகளை விடுக்க, மெல்ல அவள் கழுத்தை பற்றியிருந்த கரத்தையும் விலக்கி கொண்டான். 
அவன் தந்த முத்தத்தில் அவள் ஒரு நொடி மரணத்தை தழுவிவிட்டு வர, முகமெல்லாம் சிவப்பேற தரையில் சரிந்து விழுந்தாள்.
காதலனை கூட நெருங்கவிடாமல் தன் பெண்மையை போற்றி காத்தவளுக்கு ராகவின் செய்கை எந்தளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.
அருவருப்பாய் கூனி குருகி அமர்ந்திருந்தவள் “சீ…மனிஷனாடா நீ ?!” என்று அவள் கூறவும் அவன் சத்தமாய் சிரித்துவிட்டு, அவளை நெருங்கி அவளை தன் கரத்தில் தூக்க யத்தனிக்க, அவள் வராமல் அவனிடம் முரண்டுபிடித்தாள். 
பொறுமையிழுந்தவன் தன் கப்போர்டை திறந்து ஒரு மது பாட்டிலை எடுத்து பாதியை குடித்தான்.
மேலும் அவளை கட்டாயப்படுத்தி அதனை வாயில் ஊற்ற, அவள் பலமுறை தடுத்தும் விடாமல் அவளை குடிக்க வைத்தான்.
மெல்ல போதையில் கிறங்கியவளை தூக்கிவந்து தன் படுக்கையில் போட்டான். 
முதலில் அவளை அடைய வேண்டுமென்ற ஆசைதான் இருந்தது. ஆனால் அவள் எதிர்ப்பு தெரிவிக்க தெரிவிக்க அது அவனுக்கு உள்ளூர வெறியாக கொழுந்து விட்டெறிந்தது.
எதிர்த்து போராட முடியாத நிலையில் அவள் மறித்து போன நிலையில் கிடக்க, 
அவன் உறவாடியது அவளின் உடலோடு மட்டும்தான்.
அவன் விருப்பத்தையும் தேவையையும் அவன் அவள் மீது வலுகட்டாயமாய் தினித்து கொண்டிருக்க, வேறுவழியின்றி அவள் தேகம் அவனுக்கு உடன்படவே நேர்ந்தது.
அவளுக்கு வலிக்க வலிக்க தன் தேவையை அவன் நிறைவேற்றி கொள்ள அவளால் கண்ணீர் மட்டுமே விட முடிந்தது. அதை தாண்டி அவளால் எதுவும் செய்யமுடியவில்லை. 
நிறுத்தாமல் வழிந்தோடிய கண்ணீரில் அவள் உணர்வுகளும் சேர்ந்து வடிந்து கொண்டிருக்க, இரத்தமும் சதையுமாய் இருந்த அவள் உடலுக்குள் உணர்வும் உயிரும் அதற்குள் ஓர் மனதும் காதலும் இருந்ததை அவன் அறிந்திருக்கவில்லை.
அவள் விழிகள் இருண்டிருந்தாலும் அவள் கனவும் காதலும் வண்ணமயமானதாயிற்றே. 
அதனை ஒரு நொடியில் சாம்பலாக்கியவன், தன் மொத்த வன்மத்தையும் வக்கிரத்தையும் அவளிடம் தீர்த்து கொண்ட பின்னரே அவளை விட்டு விலக, அவள் அப்போது உணர்வற்று வெறும் உடலாக மட்டுமே கிடந்தாள். 
அந்த நொடியே அவள் இறந்துவிட்டாள் என்றே சொல்ல வேண்டும்.
அவளை அவள் உணர்வுகளை அவள் காதலை அவள் ஆசையை என எல்லாவற்றையும் மிச்சம்மீதியின்றி அவன் கொன்றிருக்க அங்கே கிடந்தது சாக்ஷியின் பிண்டம் மட்டும்தான்.. 
அவள் நிலையை பார்த்த ராகவ் தவறாக அவள் மடிந்துவிட்டாள் என்று எண்ணிக் கொண்டு மனோவுக்கு அழைக்க அவன் பதட்டத்தோடு “ஸாரி பாஸ்… நீங்க கேட்டதை நாளைக்கு அரேஞ்ச் பண்ணிடிறேன்” என்க,
“அதெல்லாம் வேண்டாம்… நம்ம ஆளுங்க இரண்டு பேரை கூட்டிட்டு வந்து சேரு… ” என்று சொல்ல, மனோவிற்கு ஏன் என்று புரியவில்லை.
அவன் சிறிது நேரத்தில் ஆட்களை அழைத்து கொண்டு வந்து சேர, அவர்களிடம் அவளை காண்பித்து “டிஸ்போஸ் பண்ணுங்க” என்று இரக்கமில்லாமல் கூற மனோ அதிர்ந்தான்.
அவன் மேலும் “அப்படியே எனக்கு பெங்களூருக்கு நெக்ஸ்ட் ப்ளைட் டிக்கெட் போடு” என்று சொல்லிவிட்டு  அங்கிருந்து அகன்றுவிட, மனோ அந்த ஆட்களிடம் சொல்லி அவளை காரில் தூக்கி கொண்டு சென்று புதைக்க சொன்னான்.
அவர்களும் அவன் சொன்னது போல புறப்பட, அந்த நேரம் வழியில் இரவு போலீஸ் ரோந்து வருவதை பார்த்து பின்தங்கியவர்கள், ஆள் அரவம் இல்லாத ஓர் சாலையில் அவளை அவசரமாய் தூக்கி
போட்டுவிட்டு சென்றனர்.
சாக்ஷி மயக்க நிலையில் இருந்து மீண்டு எழுந்து அவள் அந்த சாலையில் வருபவர்களிடம் அபயத்திற்காக நிற்கும் போதுதான் டேவிடின் கார் அவளை முட்டி சாய்த்தது.
அழகாய் இருப்பதும் பெண்ணாய் பிறந்ததுமே அவளின் இந்த கதிக்கு காரணமெனில் அதற்கு அவள் எந்தவிதத்திலும் காரணகர்த்தா அல்லவே. 
ஆனால் அதற்காகவெல்லாம் அவள்  மடிந்து போக தயாராயில்லை. எந்த அழகு அவளுக்கு சத்ரூவாய் மாறியதோ அந்த அழகை கொண்டே அவனை வீழ்த்த முற்பட்டாள்.
*******-
சூர்யன் தன் ஒளிக்கிரணங்களை ராகவின் அறைக்குள் பரப்ப அப்போது ராகவ் போதை மயக்கத்தில் கிடந்தான்.
சாக்ஷியை பார்த்த நாள் தெள்ளத்தெளிவாய் நினைவுக்கு வந்து அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
ஜென்னி தன்னை பழிவாங்கதான் தன் வாழ்வில் நுழைந்தாளோ? !
இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளும் ஆவலில் ஜென்னிக்கு அழைப்பு விடுத்தவன் “உன்னை உடனே பார்க்கனும் ஜென்னி” என்றான் அழுத்தமாக.
“அப்போ நீங்க மும்பைக்கு வரனும்” என்க, அவனுக்கு கோபம் பொங்கி கொண்டு வந்தது. அவளை பார்த்தே தீர வேண்டும் தவிப்பில் கிடந்தவன் “எப்போ சென்னைக்கு வருவ” என்று கேட்க,
“இன்னைக்கு ஈவனிங் வந்திருவேன்”
“அப்போ நானே வந்து ஏர்போர்ட்ல உன்னை பிக்அப் பண்ணிக்கிறேன்”
“யோசிச்சிக்கோங்க… பப்ளிக் ப்ளேஸ் வேற… உங்களுக்குதான் பிரச்சனை” 
“ஹ்ம்ம்… நான் பார்த்துக்கிறேன்” என்று தீர்க்கமாய் சொல்லிவிட்டு அவன் அழைப்பை துண்டித்தவன், 
அந்த நொடியே மனோவை அழைத்து தன் குரூரமான சிந்தனையை ராகவ் தெரிவிக்க அவன் அதிர்ந்து “பாஸ் விஷயம் தெரிந்தா உங்க இமேஜ் ஸ்பாலிடும்… அப்புறம் நீங்க சினி இன்டிஸ்டிரல தலைதூக்க முடியாது” என்க, 
அவன் கடுகடுத்த முகத்தோடு “நான் என்ன செய்ய போறேங்கிறதெல்லாம் அவகிட்ட பேசின பிறகுதான்… அவ என்னை கோபப்படுத்தினாதான் இந்த ஆயுதம்” என்றான்.
மனோவிற்கு அச்சம் தொற்றி கொண்டது.