Nan Un Adimayadi–EPI 20

Nan Un Adimayadi–EPI 20

அத்தியாயம் 20

பாவி நெஞ்ச என்ன செஞ்ச

உந்தன் பேர சொல்லி கொஞ்ச

என்ன கொன்னாலும் அப்பொதும்

உன் பேர சொல்வேனடா!!!  (தவமங்கை)

 

பின்னால் இருந்து தாக்கும் எதிராளியை எப்படி சமாளிப்பது என பயிற்சி அளித்துக் கொண்டிருந்தாள் தவமங்கை. அன்று என்னவோ வெக்கையாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என்பதை லேசாக இருண்டிருந்த வானம் கட்டியம் கூறியது. வேர்த்து வழிந்த நெற்றியைப் புறங்கையால் துடைத்துக் கொண்டவள்,

“கேர்ள்ஸ்! லேட்ஸ் டேக் எ ப்ரேக்!” என்றாள்.

ப்ரேக் எனும் வார்த்தைக்குக் காத்திருந்தது போல ஓடி வந்தான் காளை. கையில் இருந்த குட்டி துண்டை மங்கையிடம் நீட்டினான். மாணவிகள் இல்லாதிருந்தால் அவனே துடைத்து விட்டிருப்பான். அந்தளவு அவளோடு நெருங்கி இருந்தான் இந்த சில தினங்களாக. அவனது தயக்கம், பயம், தாழ்வு மனப்பான்மை எல்லாம் ஓரளவு மட்டுப்பட்டிருந்தது. மட்டுப்பட வைத்திருந்தாள் மங்கை.

அவள் முகத்தைத் துடைத்துக் கொள்ளவும், ஜூசை நீட்டினான் காளை. வாங்கிக் குடித்தவள், மீதியை அவனிடம் கொடுத்து யாரும் அறியா வண்ணம் ஒற்றைக் கண்ணை சிமிட்டினாள். மாணவிகளுக்கு முதுகு காட்டி நின்றவன், மீதி ஜூசை கடகடவென தன் வாயில் சரித்துக் கொண்டான். கடலை மிட்டாயை வாங்க மாட்டேன் என சொன்னவன், இப்பொழுதெல்லாம் அவள் சாப்பிட்டு மீதி தரும் உணவை கோயில் பிரசாதமாகவே பாவிக்க ஆரம்பித்தான்.

எப்பொழுதும் போல பாட்டில்களில் தங்களுக்கு வந்த ஜீசை குடித்தவாறே சளசளத்துக் கொண்டிருந்தனர் மாணவிகள்.

“டீச்சர்”

“என்ன கலா?”

“நம்ம சூரிய பார்க்க நாங்களாம் ஹாஸ்பிட்டல் போயிருந்தோம்ல, அவன் என் கிட்ட மன்னிப்பு கேட்டான் டீச்சர். ரொம்ப பாவமா போச்சு!”

“சூரி யாரு பாப்பா? அந்த ராங்கிக்காரன் தானே?” என கேட்டான் காளை.

அருகில் இருந்த கணவனைப் பார்த்து,

“எனக்கு இன்னும் தாகமா இருக்கு! ஜுஸ் வேணாம்! போய் மினரல் வாட்டர் எடுத்துட்டு வரீங்களா, ப்ளீஸ்!” என கேட்க,

“தோ டீச்சர்! இதுக்கெல்லாம் எதுக்கு ப்ளீஸ்! இப்போ வரேன்” என நடையைக் கட்டினான் காளை.

அவன் அகன்றதும் கலாவின் புறம் திரும்பிய மங்கை,

“இப்போ எப்படி இருக்கான்?” என கேட்டாள்.

“ரிக்கவர் ஆகிட்டு இருக்கான் டீச்சர்! கால் எலும்பு கூடி வந்துருச்சாம். இன்னும் ஓன் மன்த்ல ஸ்கூல்கு போகலாம்னு டாக்டர் சொல்லிட்டாராம். எங்களோட நோட்ஸ்லாம் அவனுக்கு குடுத்துட்டு வந்தோம். அப்போத்தான், நான் உன்னைப் பின்னால தட்டனதலாம் மனசுல வச்சிக்காம எனக்கு நோட்ஸ் எடுத்துட்டு வந்திருக்க நீ! எவ்ளோ நல்ல மனசு உனக்குன்னு சொல்லி சொல்லி மாஞ்சுப் போயிட்டான்! உங்க கிட்டயும் சாரி சொல்ல சொன்னான் டீச்சர்”

“ஒருத்தர் தப்ப உணர்ந்து திருந்த, வாழ்க்கையில எவ்ளோ பெரிய அடி விழ வேண்டி இருக்கு! ஹ்ம்ம் என்னத்த சொல்ல. இப்போதைக்கு டீச்சரால போய் அவன பார்க்க முடியாது கலா! நெக்ஸ்ட் டைம் நீங்க விசிட் பண்ணறப்ப அவன் கிட்ட சொல்லு, ஸ்கூல் வந்ததும் மங்கை டீச்சர் எட்ஸ்ட்ரா க்ளாஸ் வச்சு, விட்டுப் போனதெல்லாம் சொல்லி குடுப்பாங்கன்னு! சரி, சரி போ கலா! திரும்ப ப்ரக்டிஸ் ஆரம்பிக்கலாம்!” காளை வருவதைப் பார்த்து அவளை அனுப்பி விட்டாள் மங்கை.

அவன் கொண்டு வந்து கொடுத்த நீரைப் பருகியவள்,

“பக்கத்துலயே இருங்க காளை! இங்க முடிஞ்சதும், நம்ம ரெண்டு பேரும் தோப்புல பிக்னிக் போகலாம்” என சொன்னாள்.

“சரி டீச்சர், சரி டீச்சர்” என ஆனந்தமாக சொன்னவன், அவள் முடித்து வரும் வரை அங்கு ஓர் ஓரமாக அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

பயிற்சி முடித்து மாணவிகளைப் பத்திரமாக அனுப்பி விட்டவள், காளையின் அருகே வந்து அமர்ந்தாள்.

“என்ன சார்! ஒரே சைட்டா இருக்கு!”

“சைட்டுத்தான் டீச்சர்! முன்னலாம் பார்க்கனும்னு தோணும்! ஆனா நேருக்கு நேர் பார்க்க தைரியம் வராது! அங்க இங்க நின்னு திருட்டு சைட் அடிப்பேன்! இப்பவும் கூட இன்னும் அந்த தயக்கம் முழுசா விலகல டீச்சர்!” மனதில் உள்ளதை அப்படியே பகிர்ந்துக் கொண்டான் காளை.

“பைக்ல ஏத்திட்டுப் போறப்போ சைட் மிரர்ல பார்க்கறது, ரூம்ல இருக்கறப்போ என் ட்ரேசிங் டேபிள் கண்ணாடி வழியா பார்க்கறது, கிச்சன்ல சில்வர் தட்டு வழியா பார்க்கறதுன்னு எப்போ பாரு திருட்டுப் பூனை மாதிரி தான் பார்க்கறீங்க! நான் உங்க மனைவியாகி சில பல வாரங்கள் ஆகுது காளை சார்! நமக்குள்ள டிச்சுக்கா டிச்சுக்கா கூட நடந்துருச்சு! நீங்க தைரியமா நேராவே உங்க வைப்ப சைட் அடிக்கலாம், தப்பில்ல” என அவனை சீண்டியவள், கால் நீட்டி அமர்ந்திருந்தவன் மடியில் படக்கென படுத்துக் கொண்டாள்.

மடியில் படுத்துக் கொண்டவளின் சிகையை மென்மையாக கோதி கொடுத்தான் காளை. அப்படி செய்வது அவளுக்கு ரொம்பவே பிடிக்கும். ரூமில் இருக்கும் நேரங்களில் அடிக்கடி மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு, அவன் கையை இழுத்து தன் கூந்தலுக்குள் நுழைத்துக் கொள்வாள். அவன் கோதிக் கொடுக்க பல சமயங்களில் அப்படியே கண்ணசந்து போய் விடுவாள். சில சமயங்களில் அவள் கண்ணீர் அவன் மடியை நனைக்கும். பதறி போய் ஏன் என கேட்டால், தலை வலி என சொல்லி சமாளிப்பாள். அவனுக்குத்தான் துடித்துப் போய் விடும். காமாட்சியிடம் போய் கஷாயம் கொடு, தைலம் கொடு என ஆர்ப்பாட்டம் செய்து விடுவான்.

வீட்டுக்கு வெளியே டீச்சர் எனும் கெத்தோடு நடந்துக் கொள்பவள், வீட்டுக்குள் வந்து விட்டால் குழந்தையாகி விடுவாள். வீட்டு வாடகைக்கு வந்தவளுக்கும், இப்பொழுது வீட்டு மருமகளாக இருப்பவளுக்கும் ஆயிரெத்து எட்டு வித்தியாசங்களைப் பட்டியலிட்டு விடலாம். காமாட்சி சாப்பிடும் போது, அவர் அருகே அமர்ந்து ஆவென வாயைத் திறந்து ஊட்ட சொல்லிக் கேட்பவள், அதையே வழக்கமாக்கி தினம் ஒரு வாயாவது அவரிடம் உணவு வாங்கிக் கொள்வாள். தோப்பில் இருந்து வீட்டுக்கு வந்த மச்சக்காளை ஒரு தடவை கொய்யா பழங்களை கொண்டு வந்து இவளிடம் கொடுக்க, அன்றிலிருந்து ‘அப்பா, எனக்கு என்ன கொண்டு வந்தீங்க’ என கேட்டு அவர் வருகையை எதிர்ப்பார்த்திருக்க ஆரம்பித்தாள். சின்னப் பிள்ளைப் போல அவள் எதிர்ப்பார்ப்புடன் நிற்க, தினம் எதாவது எடுத்து வர ஆரம்பித்தார் அவரும்.

காமாட்சி மச்சக்காளைக்கே இந்த நிலை எனும் போது காளையின் நிலையையே சொல்லத்தான் வேண்டுமோ! ரூமுக்குள் வந்து விட்டால், குழந்தையாகவே மாறிப் போவாள் தவமங்கை. காளையை ஒட்டிக் கொண்டே இருப்பாள். இரவில் புத்தகம் திருத்தும் போது கூட, நாற்காலியில் அவனை அமர்த்தி அவன் மடியில் இவள் அமர்ந்துக் கொள்வாள். அவள் வேலையைப் பார்க்க இவன் சலிக்காமல் அவளைப் பார்த்திருப்பான். சில நேரம் அவன் தோளில் தொங்குவாள், பல நேரம் மடியில் பம்முவாள்.

அவள் செயல்களில் மோகம் கூடிப்போய் எ.எலிசு என அவன் தட்டுத் தடுமாறினால், வாயிலேயே போடுவாள் மங்கை.

“என்ன எலிசு? இல்ல என்ன எலிசுன்றேன்? அம்மும்மான்னு கூப்டுங்க!” என சொல்லி காமம், காதல் இல்லாத அன்பை மட்டும் யாசிப்பாள் அவன் ராட்சசி! அம்மும்மா என கூப்பிட சொல்லும் போது, கூந்தல் வருடுதல், கன்னத்து முத்தம், கைக்கு சொடக்கு எடுத்து விடுவது, நெற்றியில் இதழொற்றல் இப்படி மட்டுமே எதிர்ப்பார்க்கிறாள் என இத்தனை நாட்களில் புரிந்து தேறி இருந்தான் காளை. கணவனின் முகம் பார்த்து, அவன் ஆசை எலிசை அவனுக்கு கொடுப்பதிலும் குறை வைத்ததில்லை காளையின் மங்கை.

மடியில் கண் மூடி படுத்திருப்பவளையே ஆசையாக பார்த்திருந்தான் காளை. மெல்ல விரல் கொண்டு அவள் முகவடிவை அளந்தவன்,

“மாங்கனியாய் நீ குலுங்க

ஆண் கிளியாய் நான் நெருங்க” என பாடினான். அவன் பாடினால் மெய் மறந்து போவாள் மங்கை. அன்று மேடையில் பாடியதில் இருந்து அடிக்கடி பாட்டு கச்சேரி நடக்கும் அவர்கள் தனியறையில்.

மெல்லிய நகைப்புடன் அவன் விரலைப் பற்றி மெல்லிய முத்தம் இட்டவள், படக்கென வலிக்க கடித்தும் வைத்தாள். அவன் வலியில் ஆவென கத்த, ஸ்ப்ரீங் போல துள்ளி எழுந்தவள்,

“எப்போ பாரு மாங்கா, மாங்கனி, மாம்பழம்னுகிட்டு! அன்னிக்கு என்ன பாட்டு படிச்சீங்க…

‘அழகா பறிச்சு

உன்ன அப்படியே நாந்தான் திங்கப்போறேன்

மாம்பழமாம் மாம்பழம்’னு. இப்போ சொல்றேன், தில்லு உள்ள புல்லா(bull) இருந்தா என்னைப் புடிச்சு கடிச்சுத் தின்னு பார்ப்போம்” என சவால் விட்டவள், பிடித்தாள் பி.டி உஷா ஓட்டம்.

சிரிப்புடன் எழுந்து அவளைத் துரத்த ஆரம்பித்தான் காளை. தோப்பை சுற்றி சின்ன பிள்ளைகள் போல ஓடினர் இருவரும். மங்கையின் சிரிப்பு சத்தம் வானத்தின் இடிக்கு போட்டியாய் கேட்டது. அவளை துரத்திப் பிடித்திருந்த காளை, இறுக்கி அணைத்து ஆசையாய் இதழொற்றினான். சிரிப்புடன் அவனுக்குள் அடங்கிக் கொண்டாள் மங்கை. அவர்கள் முத்த சத்தம் பொறுக்காத வருண பகவான், அவர்களை பயமுறுத்த மழையை அனுப்பி வைத்தார் பூமிக்கு. சடசடவென மழை அடித்து ஊற்ற, தன்னவளை விலக்கினான் காளை.

“வீட்டுக்குப் போயிடலாம் டீச்சர்! காய்ச்சல் கீய்ச்சல் வந்துட போகுது உங்களுக்கு” என அவசரப்பட்டான் காளை.

“அம்மும்மாவ உப்பு மூட்டைத் தூக்கிக்க பைக் வரைக்கும்!” என கையை நீட்டியபடி நின்றாள் மங்கை.

அவள் அம்மும்மாவில் காதல் கேடி காளை மறைந்து பாச டாடி காளை வெளி வந்தான். புன்னகையுடன் அவள் முன்னே மடிந்து அமர, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு உப்பு மூட்டை ஏறிக் கொண்டாள் மங்கை. கால்களை முன்னே கொண்டு வந்து அவன் வயிற்றில் கிடுக்கிப்பிடி போட்டுக் கொண்டவள், அவன் தோளில் தாடையைப் பதித்துக் கொண்டாள். அவன் காதில் மெல்லிசையாக,

“ம்மா ம்ம்ம்மாஆஆ ம்ம்மா” என பசுவைப் போல சத்தமிட்டாள் தவமங்கை.

“என்ன டீச்சர்?”

“ஐ லவ் யூன்னு, என் காளைக்கு மாட்டு லேங்குவேஜ்ல சொன்னேன்”

வெடித்து சிரித்தான் காளை. விதவிதமான மொழியில் டிசைன் டிசைனாக நான் உன்னைக் காதலிக்கறேன் என சொல்ல ஆரம்பித்திருந்தாள் மங்கை. இவன் புரியாமல் என்ன என்னவென கெஞ்சி கூத்தாடினால், ஐ லவ் யூ என சொல்லி அவனை சிலிர்க்க வைப்பாள்.

“நீங்க ராமராஜனுக்கு சொந்தம்னும், உங்களுக்கு மாட்டு பாஷை தெரியும்னு எனக்குத் தெரியாம போச்சே டீச்சர்!”

“குரங்குக்கு வாழ்க்கைப் பட்டா சொறிய தெரியனும்! கழுதைக்கு வாழ்க்கைப்பட்டா உதைக்க தெரியனும்! காளைக்கு வாழ்க்கைப் பட்டுட்டு மாட்டு லேங்வேஜ் கத்துக்கலைன்னா எப்படி?”

“மாட்டு பாஷைல டீச்சர்னு எப்படி கூப்டறது?”

“ம்மாம்மா!”

அவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“என்னோட செல்ல ம்மாம்மா” என கொஞ்சிக் கொண்டவன், தன் தோளில் தாடை புதைத்திருந்தவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

மழை அடித்து ஊற்ற, தன் ஆசை மணவாட்டியை சுகமான சுமையாக சுமந்து சென்றான் காளை. வீட்டை அடையும் போது இருவரும் தொப்பலாக நனைந்திருந்தனர். அன்று பார்த்து ராஜேஸ்வரி தன் கணவன் குழந்தைகளுடன் வந்திருந்தாள். வீட்டினுள் நுழைந்த காளை,

“வாங்க மாமா” என வரவேற்க,

“ஹ்ம்ம்” என ஒற்றை வார்த்தை பதில் மட்டும் கிடைத்தது.

“வாங்கண்ணா! வாங்கண்ணி!” என வரவேற்ற மங்கை,

“கொஞ்சம் இருங்க ரிப்ரேஷ் ஆயிட்டு வந்திடறோம்.” என அவர்களிடம் சொல்லி விட்டு,

“வாங்க மாமா! வந்து குளிச்சிடுங்க! சளி புடிச்சிக்கப் போகுது” என காளையை அழைத்தாள்.

அவளின் மாமாவில் திகைத்து விழித்தான் அவன்.

“அட, வாங்க மாமா” என சொல்லியவள், அவன் கைப்பிடித்து இழுத்துப் போய் விட்டாள்.

ரூமுக்குள் நுழைந்ததும்,

“என்ன அதிர்ச்சி காளை சார்?” என கேட்டாள் மங்கை.

“இல்ல டீச்சர்! திடீர்னு மாமான்னு சொல்லவும் திகைப்பா போச்சு”

“தனியா இருக்கறப்போ என் புருஷன வாடா டேய், போடா டேய்னு கூட கூப்டுவேன்! அதுக்குன்னு மத்த லார்டு லபக்குதாஸ் முன்னுக்கெல்லாம் உங்கள விட்டுக் குடுத்துருவேனா? நான் ஒரு மனைவியா உங்கள மதிச்சாத்தானே மத்தவங்க மதிப்பாங்க! அப்படியே ப்ரீஸ் ஆகி நிக்காம, போய் குளிங்க” என சிடுசிடுத்தவள்,

முணுமுணுப்பாக,

“ஹ்ம்மாம் ஹ்ம்ம்! பெரிய பிஸ்தா பருப்பு மாதிரி பில்டப்பு! வாங்க மாமான்னு மரியாதையாத்தானே கூப்டாரு. அதுக்கு ஒரு பதில சொன்னா சிம்மாசனத்துல இருந்து சறுக்கிருவாரோ சீமைத்துரை! இந்த மூஞ்சுக்கு என் புருஷன் எதுல குறைஞ்சுப் போயிட்டாராம்! இரிட்டேட்டிங் இடியட்” என ராஜியின் கணவனை வறுத்தெடுத்தாள்.

முனகிக் கொண்டே போய் குளித்து வந்தாள் மங்கை. உடை மாற்றி விட்டு தலைத் துவட்ட நேரமில்லாததால் துண்டை தலையில் முடிந்துக் கொண்டு அடுப்படிக்குப் போனாள் அவள். அவளை அந்தக் கோலத்தில் பார்த்ததும் பொசு பொசுவென கோப மூச்சு விட்டார் காமாட்சி.

“இங்க வந்து உக்காருத்தா” என கோபத்துடன் அழைத்தவர், அவர் அமர்ந்ததும் தலையைத் துவட்ட ஆரம்பித்தார்.

“என்ன அவசரம்? நல்லா தலைய காய வச்சிட்டு வர வேண்டிதானே?”

“என்ன அவசரம்னா என்னன்னு சொல்ல! உங்க மருமகன் வந்துருக்காரு! ஏற்கனவே என் புருஷன என்னன்னு கூட அவரு கண்டுக்கல! இதுல நான் மெதுவா ஆடி அசைஞ்சி வந்தா என்னை வேற மரியாதை தெரியாதவன்னு நெனைச்சிட்டா! அதான் இந்த அவசரம்த்தா” என பதில் சொன்னாள் மங்கை.

அடுப்படிக்கு ஓடி வந்த அதிதி தன் அத்தையின் மடியில் அமர்ந்துக் கொண்டாள். சுற்றும் முற்றும் பார்த்த காமாட்சி,

“ஏத்தா! உன் புருஷன மதிக்கலன்னு கோபமா? மாப்பிள்ளைக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்னு விடுத்தா! நாங்களாம் பேசாம இருக்கலியா?” என அவள் தாடையைப் பிடித்து சமாதானம் செய்தார் காமாட்சி.

“நீங்க அப்படி இருந்தா நானும் அப்படியே இருப்பனா?” என எடக்குக் கேள்வி கேட்டவளை,

“டீச்சர்!” என மெல்லிய குரலில் அழைத்தான் காளை.

அந்த டீச்சர் மெலிதாக வந்தாலும் அதில் தெரிந்த லேசான கண்டிப்பில் முகம் சுளித்தாள் மங்கை. காளையைத் திரும்பி பார்த்து நன்றாகவே முறைத்தாள்.
“இல்ல டீச்சர்! என்ன இருந்தாலும் அக்காவோட வீட்டுக்காரு, நம்ம வீட்டு மாப்பிள்ளை! மரியாதை குடுக்கனும்ல” என நிதர்சனத்தை மெல்லிய குரலில் எடுத்து சொன்னான் காளை.

இவள் திருப்பி பதில் பேசவே இல்லை. அவனை முறைத்துக் கொண்டே காமாட்சி போட்டு வைத்திருந்த காபியை கப்பில் ஊற்றி எடுத்துக் கொண்டு முற்றத்துக்குப் போய் விட்டாள்.

“டீச்சர், டீச்சர்” என காளை சமாதானப் படுத்த அழைத்தும் கண்டுக் கொள்ளவில்லை அவள்.

“நீ ஏன்டா மாமியார் மருமக பேச்சுக்குள்ள தேவையில்லாம ஆஜர் ஆகற! உன் பொண்டாட்டி பிடிவாதக்காரின்னு உனக்குத் தெரியாதா? நான் என்ன திட்டுனாலும் தாங்கிக்குவா! எதுத்துப் பேசுவா இருந்தாலும் சொன்னத கேட்டுக்குவா! ஆனா நீ லெசா குரல உசத்திட்டாக் கூட தாங்கிக்க மாட்டான்னு இத்தனை நாளுல நீ கண்டுக்கலியா?” என மகனைக் கடிந்துக் கொண்டார் காமாட்சி.

அதிதி மங்கையுடனே சென்றிருக்க, இவர்கள் இருவரும் முற்றத்துக்குப் போனார்கள். அங்கே மங்கை ராஜாமணியுடனும் ராஜேஸ்வரியுடனும் ஆங்கிலத்தில் சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் கூட அழகாக ஆங்கிலம் பேசும் மனைவியை ரசிக்கத் தோன்றியது காளைக்கு.

இவனைப் பார்த்ததும்,

“வாங்க மாமா! இங்க வாங்க” என தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டாள்.

அதன் பிறகு தமிழில் மட்டுமே பேசினாள் மங்கை. காபி கப்பை எடுத்து காளைக்குக் கொடுத்து உபசரித்தாள். அவன் கலந்துக் கொள்வதைப் போல பேச்சை எடுத்து சென்றாள். மாமா இப்படி மாமா அப்படி என விவசாயத்தில் அவன் செய்து வரும் புதுமைகளைப் பகிர்ந்துக் கொண்டாள். இதெல்லாம் மங்கை தெரிந்து வைத்திருக்கிறாளா என காளைக்கே ஆச்சரியம். அவன் கையை மெல்ல பற்றிக் கொண்டு தான் பேசிக் கொண்டிருந்தாள். அவ்விடத்தை விட்டு அவனை நகரவிடவில்லை.

இரவு நேரம் நெருங்க, சமைக்கப் போவதாக காமாட்சி எழ மங்கையும் எழுந்துக் கொண்டாள். மழை விட்டிருக்க, வாழை இலை வெட்டி வருவதாக காளையும் எழுந்துக் கொண்டான். மங்கையருகே வந்தவன் டீச்சர் என அழைக்க, அவனை முறைத்து விட்டு அடுப்படிக்குள் புகுந்துக் கொண்டாள் மங்கை.

“ஏன்டி ராஜி! இவ்ளோ புத்திசாலியா இருக்கா உன் தம்பி பொண்டாட்டி! நம்மள விட நல்ல படிப்பு! ஆனாலும் மாமா மாமான்னு உன் தம்பிய பார்த்து இந்தளவுக்கு உருகறாளே” என ஆச்சரியமாகக் கேட்டான் ராஜாமணி.

“இதுக்கு பதில் சொன்னா, சத்தியமா என் கிட்ட கோவிச்சுக்க மாட்டேன்னு சொல்லுங்க, நான் விளக்கம் குடுக்கறேன்” என சொன்னாள் ராஜி.

“சேச்சே! உன்னைப் போய் நான் கோவிச்சுக்குவனா ராஜிம்மா! இந்த ராஜாவுக்கு ஏத்த ராஜிடி நீ”

“ஹ்க்கும் ரொம்பத்தான்!” என நொடித்துக் கொண்டவள்,

“சில பேர் மாதிரி தனக்குத்தான் எல்லாம் தெரியும் அப்படிங்கற தலைக்கணம் இல்ல மங்கைகிட்ட! படிச்ச படிப்பு அறிவ வளக்கத்தான், அகம்பாவத்த வளக்க இல்லன்னு புரிஞ்சு வச்சிருக்கற புள்ள! நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் தான் தளும்போ தளும்புன்னு தளும்பும்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கற அறிவாளி. சில பேர் மாதிரி அரைவாளி(பாதி நிரம்பிய வாளி) இல்ல. அன்பு பாசத்துக்கு அடிமையாகுறவ அவ, பணம், படிப்பு பகட்டுக்கு இல்ல” என கிண்டல் தொணியில் சொன்னாள் ராஜி.

“உன் தம்பி பொண்டாட்டிய ஏத்தி வச்சு, என்னை தலைக்கணம் பிடிச்சவன், அகம்பாவக்காரன், குறைகுடம், அரைவாளின்னு திட்டித் தீர்த்துட்ட! எவ்ளோ நாளாடி இந்த சான்ஸ்கு காத்திருந்த?” என சிரிப்புடன் கேட்டான் ராஜியின் கணவன்.

“உங்கள திட்ட சான்ஸ்க்கு காத்திருப்பாங்களா என்ன? போட்டுத் தாக்கிட்டுப் போயிட்டே இருப்பேன் நான்” என இவளும் சிரித்தாள்.

“என்னவோ போ! ரெண்டு பேரும் நல்லா இருந்தா சரி”

“உங்கள மாதிரி கொள்ளிக்கண்ண யாரும் வைக்காம இருந்தா, நல்லாத்தான் இருப்பாங்க!” என சொல்லியவள் தானும் அடுப்படிக்குள் நுழைந்துக் கொண்டாள்.

அவர்கள் குடும்பம் இரவு உணவை திருப்தியாக உண்டுவிட்டே கிளம்பினார்கள். பார்த்து பார்த்து அவர்களை கவனித்தாள் தவமங்கை. ஆனால் அவள் மட்டும் பிறகு சாப்பிடுவதாக சொல்லி விட்டாள். அவள் சாப்பிடாமல் காளையும் சாப்பிடாமல் இருந்தான்.

அவர்கள் கிளம்பியதும், யாரிடமும் பேசாமல் ரூமுக்குள் நுழைந்துக் கொண்டாள் மங்கை. அவள் பின்னாலேயே போனவன்,

“டீச்சர் சாப்பிட வாங்க” என கூப்பிட்டான்.

அவள் கண்டுக் கொள்ளவேயில்லை. மீண்டும் மீண்டும் அவன் கெஞ்ச இவள் காதே கேட்காதது போல இருந்தாள். பெருமூச்சுடன் அடுப்படிக்கு சென்று ஒரு தட்டில் உணவிட்டவன், தங்களது அறைக்கு நுழைந்தான். கட்டிலில் கவிழ்தடித்துப் படுத்திருந்தாள் மங்கை.

“அம்மும்மா!” என அவன் அழைக்க, எழுந்து அமர்ந்தாள் மங்கை.

“ஆ காட்டுங்க அம்மும்மா”

மெதுவாக வாயைத் திறந்தாள் அவள்.

“அம்மும்மா, அம்மும்மா” என சொல்லி சொல்லியே அவளுக்கு உணவூட்டி முடித்தான் காளை.

அதன் பிறகே அவன் சாப்பிட்டு விட்டு வந்தான்.

மெல்ல அவள் அருகில் போனவன்,

“கோபமா டீச்சர்?” என கேட்க, அவன் அம்மும்மாவில் குப்புறப் படுத்திருந்த பிசாசு அவன் டீச்சரில் முழித்துக் கொண்டது.

“ஆமா, ஆமா! கோபம்தான்! உங்களுக்கு உங்க அக்கா முக்கியம், உங்க மாமா முக்கியம். நான் முக்கியமில்ல, என் புருஷன் முக்கியமில்ல” என கத்த ஆரம்பித்தாள்.

“இல்ல டீச்சர்! அக்கா” என ஆரம்பிக்க,

“ஒன்னும் தேவையில்ல! இந்தக் காளை எனக்கு வேணா! டீச்சர்னு அதட்டுன இந்தக் காளை எனக்கு வேணா” என கத்தியவள், தலையணைப் போர்வையை எடுத்துக் கொண்டு வெளியே போய் விட்டாள். வெளியே போனாலும் அவளது பழைய ரூமுக்குப் போகவில்லை. காமாட்சியின் அருகே போனவள், அவர் பக்கத்தில் போர்வையை விரித்துப் படுத்துக் கொண்டாள். மெல்ல நிமிர்ந்து, தன் மகனைப் பார்த்தார் காமாட்சி. ரூம் வெளியே பாவமாக நின்றிருந்தான் அவன். இவருக்கு சிரிக்கவா, பாவப்படவா என தெரியவில்லை.

பக்கத்தில் படுத்திருந்த மங்கை வேறு லேசாக விசும்ப, ஆதரவாக அவள் மேல் கையைப் போட்டுத் தட்டிக் கொடுத்தார் காமாட்சி. மெல்ல விசும்பல் அடங்கித் தூங்கிப் போனாள் அவள். ஆனாலும் தூக்கத்தில் புரண்டுக் கொண்டே இருந்தாள். நடு இரவில் தன் மங்கையை அலுங்காமல் தூக்கிக் கொண்டான் காளை.

“மெதுவா தூக்கிட்டுப் போடா” என கண்ணை மூடி இருந்தாலும் குரல் மட்டும் கொடுத்தார் காமாட்சி.

மங்கையைக் கட்டிலில் மெல்ல விட்டவன், தன் கை சந்தில் அவளைப் படுக்க வைத்துக் கொண்டான். அவன் அருகாமையில் புரளாமல், ஆழ்ந்து உறங்கிப் போனாள் தவமங்கை.

மறுநாளே எல்லாவற்றையும் மறந்து விட்டு அவள் சமாதானமாகி விட, ஆசையும் அன்புமாய் போனது அவர்களின் நாட்கள். ந்து விதிக்குப் பொறுக்காமல் மீண்டும் வந்தது ஒரு சச்சரவு அவர்களுக்குள்.

அந்த சண்டையில்,

“ஏன் டீச்சர்? ஏன்?” என காளை கதற,

“ஏன்னா ஐ லவ் யூ! நான் உன்னைப் பைத்தியமா காதலிக்கறேன்” என வெறிக் கொண்டவள் போல கத்தினாள் தவமங்கை.

(அடிபணிவான்…)

error: Content is protected !!