Neenga kanale 4

அத்தியாயம் – 4

500

இஷா வீட்டிற்கு சென்று அந்த கேஸ் சம்பந்தப்பட்ட நோட்டீஸ் வரிக்கு வரி விடாமல் படித்தாள். விடாமல் படித்துக் கொண்டு இருக்கும்போது வெளியில் இருந்து அறைகதவை தட்டும் சத்தம் கேட்டது.

கையில் இருந்த பைலில் பார்வையை வைத்தக் கொண்டே,

“எஸ் . கமின்” என்று குரல் கொடுத்தாள்.

உள்ளே வந்தவரை யார் என்று பாராமலே, 

“என்ன .. சங்கரிம்மா … அம்மா எதுவும் கொடுத்து அனுப்பினாங்களா?”

பதில் எதுவும் வராமல் இருக்கவே, நிமிர்ந்து பார்க்க, அங்கே இஷான் நின்று இருந்தான்.

“வா.. இஷான்.. இந்த நேரம் வந்து இருக்க?”

“மணி என்ன தெரியுமா? பன்னிரெண்டரை.. இன்னும் என்ன பண்றே?”

“ம்ப்ச்.. இந்த நோட்டீஸ்க்கு பதில் அனுப்ப வேண்டாமா?”

“அதுக்கு நீ ரிப்ளை அடிச்சாலும் பரவாயில்லை. நமக்கு வந்த நோட்டீஸ்சே பார்த்துட்டு இருக்க?”

எதிரில் இருந்த இருக்கையை காண்பித்து உட்காருமாரு சொல்லிவிட்டு,

“ப்ரோ.. வக்கீல்களோட முதல் பாடமே எதிர் கட்சி வக்கீல் எந்த செக்சன்லே நம்மள லாக் பண்றாங்களோ அத உடைக்கிறது தான்.. சோ அத நாம கண்டுபிடிக்கணும்.. அதான் திருக்குறள் மனப்பாடம் பண்ற மாதிரி நோட்டீஸ்ச மனப்பாடம் பண்ணிட்டு இருக்கேன்..”

“ஹ.ஹ.. நீ எப்போ இவ்ளோ விட்டியா பேச ஆரம்பிச்ச? மெட்டிரியலிஸ்டிக்கா இல்லாம கல கலன்னு இருக்கே.. “

“ஏன்.. ப்ரோ.. இதுதான் என் நேச்சர்.. “

“அப்படி தெரியலையேடா.. நான் படிக்க வெளிநாடு போனப்போ நீ சின்ன பொண்ணு.. திரும்பி வந்தபோது நீ சென்னைலே படிச்சுட்டு இருந்தவ புனே யுனிவெர்சிட்டிக்கு போய்ட்ட.. திரும்பி வந்தப்போ இவ்ளோ வாயடிக்கலையே.. நான் நினைச்சேன்.. எனதெருமை தங்கச்சிக்கு அறிவு வளர்ந்துருச்சு. அப்படின்னு..”

“என்னது எருமை தங்கச்சியா?”

“ச்சே.. ச்சே.. அது ஸ்லிபிங் தி நாக்கு.. அருமை தங்கச்சி தான் சொன்னேன்”

“ஏய்.. நீயும் என்னை மாதிரி மொக்கையா பேச ஆரம்பிச்சுட்டே? உங்க ஹாவர்ட் யுனிவெர்சிட்டிலே இதுக்கு தனி கோச்சிங் கிளாஸ் வச்சுருக்காங்களா என்ன?”

“அடிங்க.. உங்க அளவுக்கு காலேஜ் ரவுடியா இல்லாட்டாலும், நாங்களும் ஸ்டுடென்ட்ஸ் தான்.. “

“ஆகான்.. நான் ரவுடி .. நீ பார்த்த? “

“பார்த்தியா பேச்சை மாத்திட்ட.. நான் என்ன கேக்க வந்தேன்?”

“ஹை. உனக்கு மறந்துட்டுதா.. அப்போ ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்தான்.. ப்ரோ உன் தங்கச்சின்னு எழுதி என் போட்டோவ பாக்கெட்டில் வச்சுக்கோ.. “

“எந்த போட்டோ..? நீ குறத்தி வேஷம் போட்டு எடுத்த போட்டோ தானே..?”

“டேய். வேண்டாம்..”

இப்போது சரியாக அவள் அம்மா இஷா அறைக்கு வர,

“இஷா.. அண்ணனை ..டா போட்டு பேசாதேன்னு சொல்லிருக்கேனே..” என

“வாங்க தாய்க்குலமே .. அது எப்படி சரியா தமிழ் சினிமா போலீஸ் மாதிரி எல்லா சீன்னும் முடிஞ்சு உன் என்ட்ரி கொடுக்கிற.. இவ்ளோ நேரம் உன் தவப் புதல்வன் என்னை ஓட்டினப்போ எல்லாம் வரல.. உன் புள்ளைய நான் பேசற நேரம் மட்டும் வந்து சாமி ஆடு.. ஆல் மை டைம்… “

“யாரு.. அவன் உன்னை ஓட்டினான்.. அவனுக்கு அப்படின்னா என்னன்னு கூட தெரியாது.. “

“யாரு.. அமுல் பேபி மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு அர்னாப் கோஸ்வாமி மாதிரி பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு திரியறான் உன் புள்ள.. நீயும் அவன நம்புற.. வளர்ப்பு சரியில்லை அம்மா… பார்த்துக்கோ..”

“என்னடி பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்கான் அவன்?”

“அந்த ராவ்வ தூக்கிடலமானு மீசைய முறுக்கிட்டு திரியறான்.. நீ என்னடான்னா அவனை கிரீன் சான்ட்ன்னு ஊருக்குள்ளே சொல்லிக்கிட்டு இருக்க.. “

“இஷான்.. என்னடா சொல்றா அவ..?”

இஷாவின் அப்பா ராஜசேகருக்கு பெரும்பாலும் தொழிலில் போட்டி தான் இருக்குமே தவிர, எதிரிகள் என்று சொல்லும்படி யாரும் இருப்பதில்லை. நேரில் பார்க்கும் போது மரியாதையாக பேசுமளவிற்கு தான் எல்லோரிடமும் உறவினை வளர்த்து இருப்பார்கள்.

ராவ் இவர்கள் கம்பெனியில் ஷேர் அதிகம் இருப்பதால் சற்று தன் முக்கியத்துவத்தை காட்டுகிறார் என்ற அளவில் தான் இஷா அம்மாவிற்கு தெரியும். இஷா மீது அவருக்கு இருக்கும் பகை உணர்ச்சி பற்றி எதுவும் தெரியாது.. அது தெரிந்தால் மிகவும் பயந்து விடுவார் என்று, அதை மறைத்தவனாக

“அவ சொல்றது எல்லாம் மனசுலே வச்சுக்காதீங்க அம்மா.. ஏய்.. வாலு.. நான் உன்னை என்ன கேட்டேன்? இத்தனை நாள் இல்லாம இப்போ உன்கிட்ட பழைய குறும்புத்தனம் எல்லாம் தலை தூக்கி இருக்கே.. என்ன விஷயம்?”

“ஆமா செல்லம்.. நடுவில் என்னாச்சு உனக்கு? ஏன் எங்கிட்ட நீ எதுவும் சொல்லலை..? எதுவும் பிரச்சினையா.. ?”

தன் அண்ணனை முறைத்தவளாக ,

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைமா .. உன் உத்தம புத்திரனுக்கு வேற வேலை இல்லை.. “ என்றவள்

“அம்மா.. நீங்க போய் தூங்குங்க.. நான் இத முடிக்க இன்னும் நேரம் ஆகும்..”

“ஏண்டா.. காலையில் பார்த்துக்கோ.. உடம்பை கெடுத்துக்காத..”

“நான் காலையில் இது விஷயமா ஆபீஸ்லே பேப்பர்ஸ் ரெடி பண்ணனும்.. ஒரளவு பாயிண்ட்ஸ் எடுத்தாதான் போனவுடனே வேலை ஆரம்பிக்க முடியும். “

“ரொம்ப நேரம் முழிக்காத.. சீக்கிரம் படுத்துக்கோ.. இஷான்.. அவளுக்கு ஹெல்ப் பண்ணி ரெண்டு பேரும் சீக்கிரம் தூங்குங்க.. குட் நைட்.. “ என்றுவிட்டு சென்றார்.

அவர் செல்லவும் “அடிக்கடி நம்ம அம்மா தான் ஒரு மங்குனி அமைச்சர் என்று நிரூபித்து கொண்டு இருக்கிறார் அண்ணா..”

“என்ன சொல்ற இஷா?”

“பின்னே உன்னை போய் எனக்கு ஹெல்ப் பண்ண சொல்றாங்களே.. உனக்கு இதிலே இருக்கிறது என்ன தெரியும்?”

“ஒய்.. நான் வெளிநாட்டில் படிச்சவன் நியாபகம் இருக்கா?”

“அதுதான்பா பிரச்சினையே..? இங்கே உள்ளது நிறைய வித்தியாசம் இருக்கும்..புரியுதோ?”

“சரி.. சரி.. இப்போ நான் என்ன செய்யட்டும்..?”

“ஒன்னும் பண்ண வேணாம்.. போய் தூங்கு.. இல்லியா.. என்னை குறத்தி வேஷம்ன்னு சொன்னதுக்கு தண்டனையா.. என் மூஞ்சிய பார்த்துட்டு இங்கியே உட்கார்”

“டேய்.. இஷான்.. இதுதான் வாய் கொடுத்து வாண்டடா மாட்டிகிறது போலே.. ஹ்ம்ம்” என்று புலம்ப

இஷா சிரித்துக் கொண்டே மீண்டும் அந்த நோட்டீஸ் பார்வையிட ஆரம்பித்தாள். சற்று நேரத்தில் , ஹூரே.. என்று சத்தம் போட்டு நிமிர்ந்தவள்,

அவளின் சந்தோஷத்தை பார்த்த இஷான்,

“என்னாச்சு இஷா? “

“அண்ணா.. அவங்க நோட்டீஸ்லேயே நமக்கு பாயிண்ட் கிடைச்சுருச்சு.. “

“என்ன பாயிண்ட்ஸ்?”

“பர்ஸ்ட் என்னனா .. இந்த நோட்டீஸ் நமக்கு அனுப்பின சுற்றுசூழல் போர்டு அவங்களுக்கு இந்த மாதிரி இந்த ரசாயன கழிவுகள் அந்த குட்டையில் கலந்து இருக்கிறதா பொது மக்கள் கிட்டேர்ந்து தகவல் வந்துருக்கு.. அவங்க அத ஆய்வு செஞ்சப்ப அது எங்கிருந்து வந்ததுன்னு கண்டு பிடிக்க முடியல. அது உங்க பாக்டரி கழிவுகள் சேரும் இடம் என்பதால் இந்த நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பரோம்ன்னு சொல்லிருக்காங்க..

ரெண்டாவது .. இதுவரை எங்களோட எந்த ஆய்வறிக்கையிலும் உங்க பாக்டரி கழிவுகள் குறித்து எந்த புகாரும் வந்தது இல்லை.. இருந்தாலும் எங்களால் இதை அனுமதிக்க முடியாது அப்படின்னு சொல்லிருக்காங்க..”

“இதான் நீ ஏற்கனவே சொன்னியே இஷா?”

“எஸ் அண்ணா.. ஆனால் இத நாம கோர்ட்லே பயன் படுத்த முடியுமான்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு.. இப்போ இவங்க சொல்லிருக்கிறே செக்ஷன்லே ஒரு லூப் எனக்கு கிடைச்சு இருக்கு.. அத வச்சு நான் நாளைக்கு ஸ்டே வாங்கிடுவேன்”

“வாவ்.. சூப்பர்.. “

“அப்புறம் அண்ணா.. அப்பா கிட்டே சொல்ல வேண்டாம்.. நாம எதுக்கும் அப்பாக்கு ஒரு முன்ஜாமீன் எடுத்துரலாம்..”

“வாட்.. இஷா.. இப்போதானே கேஸ் ஸ்மூத்தா போகுமன்ற மாதிரி சொன்ன..? அதுக்குள்ளே இப்படி சொல்றே.. ?”

“இல்லைனா.. நான் ஆர்க்யு பண்றத பொலுஷன் போர்டு ஈஸியா ஒத்துப்பாங்க.. அவங்களுக்கு சட்டப்படி நமக்கு டைம் கொடுக்க பெர்மிஷன் இருக்கு.. ஆனால் நமக்கு எதிரா கேஸ் போட்டு பொலுஷன் போர்ட தூண்டி விட்டவங்க அவ்ளோ லேசில் விட மாட்டாங்க.. சோ நாம ஸ்டேக்கு அப்ளை பண்ணும் போதே முன்ஜாமீனும் வாங்கிடலாம்”

“நாம ஒன்னும் கிரிமினல் குற்றம் எதுவும் பண்ணலையே .. இஷா.. ? முன் ஜாமீன் வாங்கும் அளவிற்கு ஒரு தப்பும் பண்ணலையே?”

“சட்டப்படி பாக்டரிலேர்ந்து வெளியேறும் கழிவுகளுக்கு நம்ம கம்பெனிதான் பொறுப்பு.. அதிலும் ஆபத்தான கழிவுகள்ன்னு லேப் டெஸ்ட்லே சொல்றாங்க.. சோ இதுக்கு நம்ம கம்பெனி தான் பொறுப்பு ஏத்துக்கணும்.. அடுத்து இது மீடியா வரைக்கும் போயாச்சு.. சோ அவங்க ஏன் இதுக்கு நடவடிக்கை எடுக்கலைன்னு பொலுஷன் போர்டுகிட்டே கேட்கும் போது சட்டப்படி அந்த கம்பெனி மூவ் பண்றாங்க.. சோ நாங்களும் அப்படிதான் போக முடியும்ன்னு அவங்க சொல்ற மாதிரி இருக்கணும்.. அப்போ தான் பியுச்சர்லே நமக்கு போர்ட்லேர்ந்து பிரச்சினை இல்லாம இருக்கும் “

“ஹ்ம்ம்.. அப்பாக்கு சொல்லாம எப்படி முடியும் இஷா? சொன்னால் தான் நல்லது”

“அதுவும் சரிதான்.. ஆனால் அப்பா எப்படி எடுத்துப்பாங்க..தெரியல?”

“நான் பார்த்துக்கறேன்.. அப்பா வரணுமா அங்கே..?”

“தேவை படாது .. அப்பாக்கு உள்ள ஐடி கார்டு எல்லாம் மட்டும் எடுத்துக்கலாம்.. “

“சரி.. இஷான்.. நீ போய் படுத்துக்கோ.. நான் சில பாயிண்ட்ஸ் மட்டும் நோட் பண்ணிட்டு , தூங்க போறேன்..”

“சரிடா.. குட் நைட்..”

இஷான் கிளம்பி செல்ல, சற்று நேரம் தன்னுடைய டைரியில் சில குறிப்புகளை எழுதி வைத்தாள் இஷா.. பின் ரெஸ்ட் ரூம் சென்று விட்டு தன் படுக்கையில் படுதவளுக்கு, இஷானின் கேள்வி நினைவு வந்தது.

தன் மனம் கவர்ந்தவனை பிரிந்ததே தன் அமைதிக்கு காரணம் என்று சொல்ல முடியாமல் தவித்தாள்.

அவளுக்கு நம்பிக்கை இருந்தது. தான் ஒரு வார்த்தை சொன்னால் தன் பெற்றோர்கள் தனக்கு வேண்டியதை செய்து விடுவார்கள் என்று .. இன்று மட்டுமல்ல அன்றும் அவளுக்கு அது தெரியும்..

ஆனாலும் சில காரணங்களால் தன் மனதோடு வைத்துக் கொண்டாள். அந்த வேதனை அவளை சில காலம் தன் இயல்பை தொலைக்க வைத்து விட்டது.

இப்பொழுதும் அதே காரணங்கள் அப்படியே தான் இருக்கின்றது.. ஆனாலும் அவளின் உள் மனம் சந்தோஷத்தில் கூத்தாடுகிறது. அதன் காரணம் அவளுக்கும் தெரியவில்லை. என்றாலும் இந்த உற்சாகம் அவள் வீட்டினருக்கு திருப்தி அளித்ததில் அவளுக்கும் மகிழ்ச்சியே..

இந்த எண்ணங்களோடு வெகுவாக உருண்டு புரண்டவள், பின் தன்னை அறியாது தூங்கி விட்டாள்.

காலையில் முதல் நாளை விட இன்னும் உற்சாகமாக காணபட்டாள். எல்லோரும் அவள் கேஸ் பற்றிய உற்சாகம் என்று எண்ணி, அதையே கேட்க, அவளுக்குமே அப்படிதான் இருக்கும் என்ற எண்ணம் தோன்றி, அதை ஆமோதிக்கவும் செய்தாள்.

காலையில் சீக்கிரமே கிளம்பியவள், போன் பேசிக் கொண்டே ஹாலுக்கு வர,

“ஹேய்..ரேஷூ.. சீக்கிரம் ரெடி ஆகு.. நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன்”

“ஏம்மா தாயே.. சொல்றத சீக்கிரம் சொல்ல மாட்டியா? நான் இப்போதான் எழுந்து பல் தேய்ச்சுகிட்டு இருக்கேன்.. இன்னும் குளிச்சு கிளம்ப வேண்டாமா?”

“யானை எல்லாம் தினமும் குளிக்குதா என்ன? நீயும் ஒரு நாள் குளிக்காம சென்ட் அடிச்சுட்டு வா”

“அடியேய்.. நான் குளிக்கிறத பத்தி நீ சொன்னதுக்கு கூட கவலபடலை. ஆனால் யானை கூட கம்பேர் பண்ணுறியே? இது உனக்கே நியாயமா இருக்கே? பண்றதே.. பண்ற.. அழகா மயில், மான் இதுக கூட கம்பேர் பன்னலாம்லே..”

“ஹி.. ஹி.. உன்னை பார்த்தா என்ன தோணுதோ அத தான் செல்லம் கம்பேர் பண்ண முடியும்”

“ஹ்ம்ம்.. உன்னை .. உன் கூட பிரெண்டா இருக்கேன்லே.. உனக்கு அப்படிதான் தோணும்..”

“சரி. சரி.. இந்த வெட்டி அரட்டை அடிக்கிற நேரத்துலே போய் ஒரு க்ரோ பாத் எடுத்துட்டு ரெடி ஆகு”

“வாட்.. அது என்னடி க்ரோ பாத்?”

“அச்சோ.. இது தெரியாத.. பாப்பாவா நீ”

“போதும் உன் பில்ட் அப்.. என்னன்னு சொல்லு?”

“அதாண்டி.. காக்கா குளியல் … “

“ஏய் .. வந்தேன் “

“நான் போன வச்சுட்டேன்” என்று சிரித்தபடி வைத்தவள், எதிரில் அவள் அன்னை வரவும், நின்றாள்.

“இஷா.. ஆயில் பாத், சன் பாத் கேள்விபட்டுறுக்கேன்.. க்ரோ பாத் இப்போதண்டி கேள்விபடறேன்.. எங்கிருந்து இப்படி எல்லாம் பேச பழகுவீங்களோ? முடியல”

“ம்மா.. அது எல்லாம் அப்படி தான்..”

“சரிம்மா நான் கிளம்பறேன்..”

“ரேஷ்மிதான் இன்னும் ரெடி ஆகல இல்ல.. நீ எதாவது கொஞ்சம் சாப்பிட்டு போ.”

“இருக்கட்டும்மா.. நான் சொன்னேனேன்னு அவ வேகமா கிளம்பி, சாப்பிடாமல் இருப்பா .. நான் ஆபீஸ்க்கு போயிட்டு பிரேக் பாஸ்ட் ஆர்டர் பண்ணி ரெண்டு பேரும் சாப்பிடறோம்..”

அப்போது அங்கே வந்த அவள் அப்பா “இஷா .. அண்ணா எல்லாம் சொன்னான் .. நானும் அங்கே வரேனேடா”

“வேணாம்பா.. இன்னைக்கு ஹியரிங்கில் உங்கள கூட்டிட்டு வர சொல்லி ஜட்ஜ் சொன்னா மட்டும் நீங்க வந்தா போதும்.. & இன்னொரு விஷயம் முன்ஜாமீன் வாங்கனும்னு சொன்னேனே தவிர, அது நம்ம பாக்டரிக்கு ப்ராப்லம் சால்வ் பண்ண டைம் கொடுக்காமலோ, அல்லது கண்டிப்பா சீல் வைக்கும் நிலைமைக்கு போனாலோ மட்டும் தான். நீங்க வந்தா மீடியா அட்டென்ஷன் உருவாகும்.. அது தேவை இல்லாம எல்லோருக்குமே சிக்கல்.”

“சரிடா.. ஆல் தி பெஸ்ட் .. & இது வரைக்கும் சின்ன சின்ன லீகல் கிளியரன்ஸ் எல்லாம் பண்ணிக் கொடுத்து இருக்க. இதுதான் கொஞ்சம் சிக்கலான விஷயம்.. பார்த்து ஹான்டல் பண்ணு.. உனக்கு பின்னாடி எப்போவும் நாங்க இருப்போம்.. “

“தேங்க்ஸ் டாடி.. முதலில் இது ஒரு கேஸ் அப்படின்னு எடுத்தா கூட, என் அப்பா சம்பந்தப்பட்ட கேஸ்.. சோ.. உங்க ரெபுடேஷன் பாதிக்காம இத ஜெயிச்சு காட்டுவேன்”

இப்போது மூவரும் அவளை வாழ்த்த , நல்ல மனநிலையோடு கிளம்பி போனாள்.

இவள் போகும்போது, ரேஷ்மியும் ரெடி ஆகி இருக்கவே, இருவருமாக காரில் கிளம்பி தங்கள் அலுவலகத்திற்கு சென்றனர்.

ஏற்கனவே அவள் எடுத்து வைத்து இருந்த குறிப்பை வைத்து வேகமாக டாகுமென்ட்ஸ் தயார் செய்து எடுத்து வைத்தனர்.

கொஞ்சம் வேலை முடியவும், இஷா பிரேக்பாஸ்ட் ஆர்டர் செய்ய இருவரும் சாப்பிட்டு சற்று ரிலாக்ஸ் ஆகினர்.

சாப்பிட்டு முடித்து எல்லாம் எடுத்து வைக்கும் போது பத்து மணியை நெருங்க, இவர்கள் கோர்ட் கிளம்பினர்.

காரில் செல்லும்போது இஷா சற்று டென்ஷனாக இருப்பதை பார்த்தவள், அவளை கூல் செய்யும் விதமாக

“ஏண்டி.. பக்கி… .என்னை பார்த்தா க்ரோ பாத் எடுக்கிறவ மாதிரியா தெரியுது? ஒரு வாரத்துக்கு ஒரு சோப்பு காலி பண்றேன்..”

“ஹ.. ஹ.. ஆக்சுவலி உன்னை நான் தினம் குளிக்கிற லிஸ்ட்லேயே சேர்க்கல.. ஒரு வாரத்துக்கு ஒரு சோப்பு என்ற விளம்பரம் உங்க வீட்டிலே ஓட்டினதை வச்சு தான் க்ரோ பாத் லிஸ்ட்லே சேர்த்தேன்.”

“அஹான்.. நீங்க எப்படி மேடம்..? அந்த லிஸ்ட் கூட கிடையாது.. சென்ட்..பார்ட்டி தான்.. என்னை சொல்ற ரைட்ஸ் கிடையாது.. பார்த்துக்கோ”

“சரி.. சரி நம்ம பஞ்சாயத்த அப்புறம் வச்சுக்கலாம்..இப்போ கோர்ட் வந்தாச்சு.. வா கெத்த மெய்ண்டைன் செய்வோம்..” என இருவரும் பைல்ஸ் எடுத்துக் கொண்டு காரில் இருந்து இறங்கினர்.

அப்போது இவர்கள் அருகில் வேறொரு கார் வந்து நிற்க, அதில் அன்றைக்கு ஹோடேலில் பார்த்த அந்த உயர்ந்த மனிதன் இருந்தான்.

இந்த பக்கம் இஷா காரை பூட்டிக் கொண்டு இருக்க, அந்த பக்கத்தில் இருந்த காரில் இருந்தவனை பார்த்ததும் ரேஷ்மிக்கு எரிச்சல் வந்தது.

அதற்குள் காரின் அந்த பக்கமிருந்து இன்னொரு உயரமான மனிதன் கோர்ட் வளாகத்திற்குள் செல்ல, ஹோடேலில் பார்த்தவன் ரேஷ்மியை கவனித்து,

“ஹேய்.. குள்ள வாத்து.. நீ என்ன கோர்ட்க்கு எல்லாம் வந்து இருக்க?”

“மிஸ்டர். ஒட்டகசிவிங்கி நீயே வரும்போது நான் வரதுக்கு என்ன ?”

“ஹ..ஹ.. என்ன தப்பு செஞ்ச ? என்னை திட்டின மாதிரி யாரையாவது திட்டிட்டியா? அவன் கேஸ் கொடுத்து இருக்கனா? சீக்கிரம் சொல்லு .. இங்கே நமக்கு தெரிஞ்ச ஜட்ஜ் இருக்காங்க.. அவங்கள வச்சு உன்னை ஜாமீன்லே எடுக்கறேன்?”

“ஜாமீன்லே எடுக்கிற மூஞ்ச பாரு? நீ போய் பேசினா வார்னிங்கோட விடுற ஜட்ஜும் ஆயுள் தண்டனை கொடுத்துருவார்? போங்க மிஸ்டர் வேலைய பார்த்துட்டு”

அதற்குள் காரை லாக் செய்து விட்டு வந்த இஷா,

“ஹலோ சார்.. என்ன இந்த பக்கம்?”

“நான் பிரைவேட் செகரெட்டரி டு ஜட்ஜ்.. .. நீங்க ..” என்று இழுத்தவன், கழுத்தில் இருக்கும் வைட் கார்ப் மற்றும் கையில் இருந்த கருப்பு கோட் இரண்டையும் பார்த்தவன்,

“ஒ.. நீங்க லாயரா..? “

“ஆமாம்.. உங்கள இங்கே பார்த்தது இல்லையே?”

“எஸ் மேம்.. சார் ட்ரான்ஸ்பர் ஆகி ஒன் வீக் தான் ஆகுது. “ என, இதுவரை சற்று எளிதாகவே பேசிக் கொண்டு இருந்த இருவரும், இப்போது ப்ரோபிஷனலாக பேச ஆரம்பித்தனர்.

“உங்கள சந்திச்சது ரொம்ப சந்தோஷம்.. மிஸ்டர்.. “ என்று இழுக்க,

“ஐ அம் விக்ரம்.. “

“ஐ. அம் இஷா” என, யோசனையாக அவளை பார்த்தான்..

“என்ன சார் யோசிக்கிறீங்க ?”

“இல்ல.. உங்க பேர் கேள்விப்பட்ட பேரா இருக்கு.. அதான் “

“அப்படியா “ என்று புன்னகை செய்ய, “ஓகே. மிஸ்டர் விக்ரம்… பிறகு பார்க்கலாம்” என்றபடி கிளம்பினாள்.

இஷா வக்கீல் சேம்பர் நோக்கி செல்ல, விக்ரம் ஜட்ஜ்ஸ் சேம்பர் பக்கம் திரும்பினான்.

இருவரும் நடக்க ஆரம்பிக்க, ரேஷ்மி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“ஹேய்.. ரேஷூ.. என்னாச்சு? இவ்ளோ டென்ஷன்.?”

“அந்த வளர்ந்து கேட்டவன் ரொம்ப இரிடேட் செஞ்சுகிட்டு இருக்கான் இஷா..”

“அவர் பேர் விக்ரம்.. அவர் போஸ்ட் சொன்னார்ல் .. மரியாதையா பேசு”

“அந்த திமிர் தான் பார்க்கிற நேரம் எல்லாம் வம்பு பண்றான்..”

“ரேஷூ..” என,

“சாரி.. ஒன்னும் சொல்லல போதுமா ?”

“ஹ்ம்ம்.. வா”

அவள் சேம்பரில் அமர்ந்து தேவையான பாயிண்ட்ஸ் நோட்ஸ் எடுத்தவள், அவர்கள் கேஸ் நேரம் வர காத்து இருந்தனர்.

சற்று நேரத்தில், ரேஷுவிடம்

“ரேஷு.. நமக்கு எதிரா யார் வாதாட போறாங்கன்னு விசாரிச்சு சொல்லேன் ? அதோட ஜட்ஜ் யாருன்னும் பாரு” என, சற்று நேரத்தில் பதில் வந்தது.

“இஷா.. நமக்கு ஆப்போசிட் பார்ட்டி ராஜேஷ்ன்னு ஒருத்தர்.. அவரும் நம்ம கோர்ட்க்கு புதுசாதான் தெரியறாரு.. & நம்ம கேஸ் பார்க்க போற ஜட்ஜ் மிஸ்டர் .. சித்தார்த் விஸ்வநாதன்..” என

அவளை நிமிர்ந்து பார்த்த இஷாவின் முகத்தில் வார்த்தையால் வடிக்க முடியாத உணர்வுகள் பொங்கியது.

“சித்தார்த் விஸ்வநாதன்.. சித்து.. சித் .. “ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள், அப்படியே கண்களை மூடிக் கொண்டாள்.

ரேஷு திடுக்கிட்டு அவளை “இஷா .. இஷா..” என்று தோளை அசைக்க, கண்களை திறந்தவள்,

“ஒன்னும் இல்லை ரேஷ்மி.. ஒரு பத்து நிமிஷம் நான் தனியா இருக்கேன்.. “ என, ரேஷ்மி வெளியேறினாள்.

“கடவுளே.. இப்போ நான் சித் முன் சென்று நிற்க வேண்டுமே.. அவர் என்னை பார்த்ததும் என்ன நினைப்பார்..? அவர் இப்போ இருக்கும் பதவிக்கு என்னை தெரிந்தவளாக காட்டிக் கொள்ள முடியாது.. அவர் என்னை கண்டு கொள்ளாமல் இருந்தாலும் என்னால் தாங்க முடியுமா ? “ என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.

கருத்துக்களை தெரிவிக்க 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!