ஒரு வாரமாய் கௌதமின் உடல் நிலையால் சோகமாய் இருந்த அந்த வீடே ,இன்றிரவு ஒரே சந்தோஷமும் குத்தாட்டமும் கும்மாளமுமாக மாறியது.

ஆடி களைத்து அவர் அவர் தன் அறைக்கு திரும்ப, காயத்ரி அவள் ரூமில் இருந்த பால்கனிக்கு முதல் முதலாக சென்றாள் . அது நீண்டு அகண்டு ஒரு நீளமான அறைபோல் இருந்தது, அதில் இருவர் அமரும் ஊஞ்சலும் , பால்கனியின் சுவற்றில் படர்ந்த கொடியும் , அங்கே கீழே இருந்த செயற்கை புல் தரையும் , அனைத்திற்கும் இன்னும் எழில் சேர்க்கும் வண்ணம் வெளியே மிதமான மழை சிலு சிலுவென , அவள் மெய் மறந்து நின்றாள்.

” டூ யு லைக் இட் ? திஸ் எஸ் மை பேவோரைட் பிளேஸ் ! உன் ரூமிற்க்கு அப்புறம் ! ” என்று கண்சிமிட்டி சொல்லிக்கொண்டே சிவா வர அப்போதுதான் அவள் அதை கவனித்தாள் அந்த பால்கனிக்கு இரு கதவுகள் இருந்தன ஒன்று அவன் அறையில் மற்றொன்று இவள் அறையில்.

” எஸ் ! எதோ கார்டன் ல இருக்க மாதிரி இருக்கே ! பிளஸ் இந்த மழை ! ” என்று அவள் அந்த ஊஞ்சல் கம்பியை தடவி கொண்டே சொல்ல .

அவன் அந்த ஊஞ்சலில் உட்கார்ந்து ” கம் ஸீட் ! ” என்றபடி அவளுக்கு இடம் விட்டு அமர்ந்தான் . அவள் தயங்க ” வா னு சொல்றேன்ல ” என்று கை பற்றி இழுத்து அவன் அருகில் உட்காரவைத்தான் .

அவன் காலால் மெல்ல ஊஞ்சலை அசைக்க இருவரும் குழந்தைகள் போல அதில் ஆடி மகிழ்தனர் !

” ரொம்ப நாள் அப்புறம் இன்னிக்கி நான் ரிலாக்ஸ்ஸ்டூ மூட் ல இருக்கேன் ! ” என்றான் அவன் .

” ம்ம் எனக்கு மனசுக்கு பிடிச்சுருக்கு இந்த மழை இந்த இடம் இந்த ஊஞ்சல் அப்புறம் உ….” என்று சொல்லாமல் எங்கயோ பார்த்து முகத்தில் இருந்த வெட்கத்தை மறைக்க காயத்ரி திரும்ப .

” ஹே என்ன சொன்ன ? அப்புறம் உ.. ? என்ன அது என்ன சொல்லு. சொல்லேன் ” என்று கெஞ்ச

“ஒன்னும் இல்லை குட் நைட் ” என்று சொல்லி அவள் நழுவ எழ

” காயு ! நான் தூக்கம் வராம தாவிக்காணுமா ? என்னனு தான் சொல்லு ப்ளீஸ் ! ” என்று அவன் மேலும் கெஞ்ச.

மதியம் அவன் செய்தது போலவே , மெல்ல அவன் காது மடல் அருகே சென்று , மெல்ல , ஹஸ்கி வாய்ஸில் ” உங்களையும் ரொம்ப பிடிச்சுருக்கு சிவா..” என்று மெதுவாய் சொல்லி ,அவன் அமர்திருந்த ஊஞ்சலை அசைத்து விட்டு அவள் ரூமிற்கு சென்று பால்கனி கதவை தாளிட்டு கொண்டாள் .

அவள் அசைத்து சென்றது ஊஞ்சல் மட்டும் அல்ல அவன் மனதையும் கூட ! மௌனமாய் முகமெல்லாம் புன்னகை பூசி அந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருந்தான்.

காலை கதிரவனின் கிரணங்கள் முகத்தில் பட மெல்ல எழுந்தவன் தான் பால்கனியிலேயே உறங்கியதை அப்பொழுதான் உணர்ந்தான் ! அவள் சொல்லி போன வார்த்தைகள் காதில் ரீங்காரம் இட்டுக்கென்டே இருந்தது.

உதயாவும் காயத்ரியம் மாறி மாறி விடுப்பு எடுத்து கௌதமை இதுநாள் வரை பார்த்துக்கொண்டு இருக்க. அவர்கள் பரீட்சை நெருங்குவதால் சிவா கௌதமை முழுநேரம் கவனித்து கொண்டான்.

வாரங்கள் உருண்டோடின ! கெளதம் கட்டுகள் பிரிக்க பட்டு , பிசியோதெரபி எடுத்துக்கொள்ள துவங்கி இருந்தான் .அவர்களுக்கு மறுநாள் அந்த செமெஸ்டரின் கடைசி பரீட்சை ! காயத்ரி முதல் தள ஹாலில் படித்து கொண்டு இருந்தாள் , உதயாவும் சிவாவும் ஷாப்பிங் செய்ய வெளியே சென்றிருந்தனர்.

காயத்ரி அலறும் சத்தம் கேட்டு பதறி ஓடிவந்தான் கெளதம் , அவள் ஹாலில் டெட்டி பொம்மையை அணைத்தவாறு தரையில் சுருண்டு கிடந்ததாள். அவள் கையில் இருந்த புத்தகம் அவள் அருகில் விழுது இருக்க . கண்கள் குளமாய் எங்கோ வெறித்து பார்தி கொண்டு இருந்தாள் .

பதற்றத்துடன் அவள் அருகில் வந்த கெளதம் ” என்னமா ஆச்சு ? எதையாவது பார்த்து பயந்தியா? ஹே என்னாச்சு? இல்லை மறுபடி கனவா ?” என்றபடி அவளை எழுப்பி உட்கார வைத்தான்.

” அண்ணா அப்பாவையும் அவர் உறவுகள் அனைத்தையும் கொண்றது ஒருத்தனே! ” என்றவள் மேலும்
அவள் கனவில் :
“அவர்களை கொன்ற போதே உன்னையும் கொண்னு இருக்கனும் தப்பு செய்து விட்டேன் டா ! உன் எஜமானன் போன இடத்துக்கே அவர் விசுவாசி உன்னையும் அனுப்பிவைக்கிறேன் ! ” என்று சொல்லி அவர் இறக்கும் வரை பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டே இருந்து மெல்ல நகர்ந்தன அந்த கால்கள் .

அதை டைரியில் எழுத முடியாமல் அவள் கைகள் நடுங்கி கொண்டே இருக்க இயன்றமட்டும் கிறுக்கியவாறு எழுதி வைத்தாள் . அந்த ஷூ அணிந்த கால்கள் மெல்ல சாய்ந்து சாய்ந்து நடப்பதையும் குறித்தாள்.

” அண்ணா அப்படினா என் அப்பாவிற்கு சிவாவின் அப்பாவை தெரியுமா ? விசுவாசி , எஜமானன் என்றெல்லாம் அந்த அரக்கன் சொன்னானே! அப்படியானால் அவர்களுககு ஒருவரை ஒருவர் தெரியுமா? உங்களுக்கு ஏதாவது தெரியுமா? சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் ! எனக்கு தலை வெடிக்கும் போல இருக்கு ! ப்ளீஸ்! ” என்று அவள் கெஞ்சி கொண்டிருக்கும் பொழுதுதான் சிவாவும் உதயவும் வீட்டிற்குள் நுழைத்தனர்.

ஆசையாய் வாங்கியவற்றை காட்ட மேலே வந்தவர்களோ , கௌதமின் அதிர்ந்த முகத்தையும் பயத்திலும் குழப்பத்திலும் இருந்த காயத்ரியின் முகத்தையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவள் கையில் இருந்த கனவு டைரியை கண்ட சிவா நடந்ததை யூகித்து கொண்டான்.

என்ன என்பது போல் தன் நண்பனை செய்கையில் கேட்டு கொண்டே மெதுவாக அவள் அருகில் அமர்ந்தவாறு அவள் கையை பற்றி ” காயு ரிலாக்ஸ் . என்ன ட்ரீம் ? சொல்லு நாங்க இருக்கோம்ல ! ” என்றான். அவள் ஏதும் சொல்லாமல் கௌதமை கண்களால் உதவிக்கு அழைக்க .

“சிவா கொஞ்சம் ரூமிற்கு வாடா ! ” என்று அவனை அழைத்து சென்றான்.

உதயா காயத்ரியை அவள் ரூமிற்கு அழைத்து சென்று சமாதானம் செய்தாள். “படிச்சது போறும் ! நீ ரெஸ்ட் எடு ! எந்த கனவா இருந்தாலும் இன்று ஒருநாள் எனக்காக யோசனையை ஒத்தி போடு . நாளை ஆராயலாம் ! ” என்றாள். அவள் சொல்வதை காயத்ரி காதில் வாங்கினாலும் அதை அவள் புத்தி ஏற்க வில்லை.

அவளுள் ஆயிரம் கேள்விகள். மனம் அமைதி இன்றி துடித்து கொண்டிருந்தது. ஆனால் வெளியில் மௌனமே உருவாய் இருந்தாள்.

கெளதம் அவளின் கனவு பற்றி சொல்ல சொல்ல சிவா அப்படியே உடைந்து கட்டிலில் அமர்ந்து விட்டான் ‘ இப்படியுமா ஒரு அரக்கன் இருப்பானா ? ஐயோ! அங்கிள் ஆக்சிடெண்டில் சாகவில்லையா ? அதுவும் கொலையா ? இத்தனை கொடுமையையும் செய்தது ஒருவனா ? அல்லது ஒரு கூட்டமா ?விந்தி விந்தி நடப்பவன் யார் ?’ இன்னும் பல கேள்விகள் அவன் மண்டையை குடைந்து கொண்டிருந்தது.

கௌதமோ மெதுவாய் ” சிவா ! நான் காயத்ரி கேட்டதிற்கு எதுவும் சொல்லலை ! ஆனா சொல்லிட்டா பெட்டர் ! அவதான் உன்னை விரும்பறான்னு அப்பட்டமா தெரியுதே இன்னும் ஏன்டா தயக்கம்? நாளை எக்ஸாம் முடியுது! எங்காவது தூரமா ஹாலிடே போகலாம் அங்கு வச்சு..” என்று சொல்லி கொண்டிருக்கும் பொழுதே உதயா வர .

” அண்ணா காயுவ சமாதானம் பண்ணிருக்கேன் ! சாப்பிட போகலாமா! இப்போவே மணி பதினொன்னு. நாளை எக்ஸாம் இருக்கு. “என்று சொல்ல நால்வரும் சாப்பிட சென்றனர்.

யாரும் யாருடனும் பேசவில்லை அங்கே நீண்ட நெடிய கணமான மௌனம் மட்டுமே ! எல்லார் மனதிலும் ஆயிரம் கேள்விகள்! ஆனால் யாருக்கும் இன்று பேச மனமில்லை.

உறங்க செல்லும் பொழுது காயத்ரி மெல்ல சிவாவிடம் ” இன்னிக்கி என் பக்கத்துல படுத்துக்குறீங்களா ? ப்ளீஸ் ! ” என்றாள் , மறுக்க நினைத்தான் சிவா, நாளை பரீட்சை தன்னால் அவள் கவனம் சிதறுமோ என்று தயக்கம் காரணமாய். பல நாட்களாய் அவளை சொல்லாலோ செயலாலோ நெருங்காமல் தன்னை கட்டு படுத்தி கொண்டிருந்தான் . இன்று இவள் வாய்விட்டு கேட்ட பிறகு மறுக்கவும் முடியவில்லை .

“சரி வரேன் நீ படுத்துக்கோ ! ” என்று சொல்லி அனுப்பிவிட்டு , சிறிது நேரத்தில் அவள் அறைக்கு தன் டெட்டியுடன் வந்தான். அருகில் படுத்து இருவருக்கு நடுவில் தன் பொம்மையையும் வைத்தான். ” தூங்கு ! நான் இருக்கேன் ! நாளை எக்ஸாம் நல்ல பண்ணனும் வேற எதுவும் யோசிக்காதே , குட்நைட் , ஸ்வீட் ட்ரீம்ஸ் ” என்று அவள் கைகளில் முத்தமிட்டு கண்களை மூடிக்கொண்டான் .. சிறிது நேரம் மனம் அமைதியின்றி தவித்தாலும் அவள் மெல்ல மெல்ல அவன் தன் கையை ஆறுதலாய் பற்றியிருந்ததில் பாதுகாப்பாய் உணர்ந்து தூங்கிவிட்டாள்.

மறுநாள் “சிவா ! சீக்கிரமா இந்த வில்லனை கண்டுபிடிக்கணும்டா. அதுக்கு முன்னாடி மனச ரிலாக்ஸ் பண்ண நீ சொன்ன மாதிரி எங்காவது ட்ரிப் போகலாமா ? ” என்று கெளதம் கேட்க .

” ஓகே கெளதம் ! எனக்கும் மனசு பாரமாதான் இருக்குடா ! போகலாம் எங்க போறது நீயே யோசிச்சு சொல்லு ! ” என்றான் சிவா பதிலுக்கு.

அன்று மாலை 6 மணிக்கு அவர்கள் இருவரும் பிசினஸ் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது , ஸ்ரீவத்ஸன் அவன் பெற்றோருடன் அவர்கள் வீட்டிற்கு வந்தான் ,

நாராயண மூர்த்தி , ஸ்ரீவத்சனின் அப்பா ” ஸ்ரீவத்சன் தான் என் கம்பெனியை நிர்வாகம் பண்ண போறான் ! ஆல்ரெடி அவன் கொஞ்சம் கொஞ்சம் இப்போவே வேலை பண்ண ஆரம்பிச்சுட்டான் ! உங்க உதயாவை எங்களுக்கு பிடிச்சுருக்கு, எங்க பையனுக்கும் ரொம்ப பிடிச்சுருக்கு ! உங்களுக்கு விருப்பம் இருந்தால் கல்யாணம் பேசலாம்னு தான் வந்தோம் ! ” என்று வந்த விஷயத்தை சுற்றி வளைக்காமல் சொல்லி அவர்களையே பார்த்திருந்தார் ஆவலாய் .

ஸ்ரீவத்ஸ மெல்ல ” எனக்கு உதயாவை எப்போவுமே பிடிக்கும். ஆனா காதல்னு உணர்ந்தது ரொம்ப சமீபமா தான் , ஆனா ஏனோ எனக்கு அவகிட்ட சொல்லி அப்புறம் பெரியவங்க கிட்ட சொல்லி இதெல்லாம் உடன்பாடு இல்லை. ! அதான் அப்பா அம்மாவை கூட்டிண்டு வந்தேன் ! தப்பா எடுத்துக்காதீங்க ! ” என்றான்

இவ்வளவு நேர்மையாய் இவர்கள் பேசியது கௌதமிற்கும் சிவாவிற்கும் மிகவும் பிடித்தது . ” உதயாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன் ! ” என்று கெளதம் தயங்க.

” குழந்தை சம்மதம் தானே ரொம்ப முக்கியம். கேட்டு சொல்லுங்கோ. ” என்றார் புன்னகையுடன் நாராயண மூர்த்தி.

தோட்டத்தில் காயத்ரியுடன் ஷுட்டில் விளையாடி கொண்டிருந்த உதயாவை மெல்ல நெருங்கி இருவரும் விஷயத்தை சொல்ல ” ஸ்ரீவத்ஸ எனக்கு நல்ல பிரென்ட். அவனை எனக்கு பிடிக்கும். உங்களுக்கு அவனை பிடிச்சா. அவனை கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம் ” என்று சொல்லிவிட்டாள். இரு சகோதரர்கள் மனதிலும் நிரம்ப மகிழ்ச்சி. கௌதமோ உதயாவை ” என் செல்லம் ! ” என்று அவள் தலையை மென்மையாக வருடி கொடுத்தான்.

வந்தவர்களிடம் உதயாவின் சம்மதத்தை தெரிவித்த அவர்களுக்கும் மிக சந்தோஷம் , ஸ்ரீவத்சன் முகமோ ஆயிரம் வாட்ஸ் பல்ப்போல பிரகாசமானது !

” ஸ்ரீவத்ஸ் ஜாதக படி அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணலேன்னா 10 வருஷம் தள்ளும்னு ஜோசியர் சொல்லிருக்கார் ! அதுனால நிச்சயம் கல்யாணம் எல்லாம் தேர்ந்து வச்சுக்கலாம். கல்யாணதுக்கு மூணு மாசத்துக்குள்ள நல்ல முஹூர்த்தம் பாத்துட்டா நல்லது ! ” என்றார் ஸ்ரீவத்சன் அப்பா.

” மூணு மாசமா ! அவ்ளோ சீக்கிரம் எப்படி மாமா? அவ இன்னும் காலேஜ் முடிக்கலையே. ” என்று பதறினான் கெளதம் . சிவாவும் ” அவளே குழந்தை ! எப்படி சார் இவ்ளோ சீக்கிரம்? அதுவும் எங்களுக்கு சொந்தம்னு வீட்டுல பெரியவங்கனு யாருமே இல்லையே . நாங்க நாலுபேரும் தான் ஒருத்தருக்கு ஒருத்தர் உறவு. ” என்றான்

“அப்படி பார்த்தா ஸ்ரீவத்ஸும் இன்னும் படிக்கிறான். உதயாவும் மேல வேணும்னாலும் படிக்கட்டும். இனி உங்க நாலுபேருக்கும் அம்மா அப்பா நாங்க இருக்கோம் ! ” என்று தன்னையும் அவர் மனைவிவையும் காட்டி சொன்னவர் மேல ” ஸ்ரீவத்ஸும் உங்கள பத்தி எல்லாம் சொல்லி இருக்கான். இனி யாரும் இல்லைன்னு சொல்லாதீங்கோப்பா ! ” என்று சொல்ல.

அதற்குமேல் அங்கு மறுக்க எதுவும் இல்லாதால் மூணு மாசத்திற்குள் திருமணம் நடத்த தீர்மானம் ஆனது.

அவர்கள் சென்றவுடன் ” உதயாவை நாம தான் குழந்தைன்னு நெனைக்கிறோம். ஆனா அவள் வளர்ந்துட்டத இப்படி ஒரு விஷயம் நடக்கும் பொழுது தான் உணர முடியுது” என்றான் கெளதம்.

“எஸ் டா! காலம் வேகமா சுழலரது. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. மனசுக்கு சந்தோஷமாவும் இருக்கு . மேரேஜை தடபுடலா பண்ணிடுவோம் டா ! எனக்கும் தங்கைன்னு அவ மட்டும்தானே இருக்கா! ஜமாய்ச்சுடலாம் ! ” என்றான் சிவா .

” நீ இருக்கும் பொது எனக்கு என்னடா மச்சி கவலை ! ” என்று நண்பனை கட்டிக்கொண்டான் கெளதம் .

காயத்ரியோ மாடியில் உதயாவை கிண்டல் செய்து கொஞ்சிக் கொண்டு இருந்தாள் ” ஹே ! கள்ளி இது எப்போ நடந்தது! அம்முக்குணி சொல்லவே இல்ல பாத்தியா? ” என்று சினுங்க

” ஹே என்னடி நீ உனக்கு தெரியாம எப்படி ? எனக்கே இன்னிக்கிதான் தெரியும் அவன் என்ன விரும்புறது! அதுவும் என்ன துணிச்சல் பார் சாருக்கு? நேரா வந்து பொண்ணு கேட்டுட்டான்!” என்று அவளும் வாய் பிளக்க

“நம்பிட்டேன் ! நான் நம்பிட்டேன் ! ” என்று காயத்ரி உதயாவின் கன்னத்தை பிடித்து ஆட்டி மறுபடி கொஞ்ச . அங்கே ஒரே சிரிப்பு மழை .

நேத்து அந்த வீட்டில் இருந்த அமைதியும் குழப்பமும் என்ன இன்று இங்கு நிலவும் மகிழிச்சும் குதூகலமும் என்ன

உதயாவின் திடீர் திருமண ஏற்பாட்டால் காயத்ரியின் கனவு பற்றிய என்னமோ கலவலையோ அவர்களுக்கு வரவில்லை ! காயத்ரியும் தோழியின் திருமண செய்தியால் குதூகலமாகவே இருந்தாள். இதை கவனித்த மற்ற மூவரின் மனமும் கொஞ்சம் நிம்மதியானது.

error: Content is protected !!