“இது எதுவுமே எனக்குத் தெரியாதே பாட்டி ! அப்போ பாட்டி நீங்க ஏன் என்னை இவ்வளவு நாள் பார்க்க வரலை ? எனக்கு யாருமே இல்லைன்னு நெனச்சேன் தெரியுமா? உங்களைப் பத்தி அப்பா அம்மா எதுவுமே சொன்னதில்லையே ! “என்றாள் சோகமும் குழப்பமுமாய்.
மெல்ல அவள் அருகில் அமர்த்த சிவாவோ அவள் தோளை ஆதரவாய் பற்றிக்கொண்டு “எனக்கும் தெரியும் காயு !”என்றான் ” சொல்லப்போனா எங்க எல்லாருக்கும் தெரியும்” என்று சொல்ல கௌதமும் உதயாவும் தலையை ஆம் என்பது போல் அசைத்தார். “ஆனால் என்ன பாட்டி இருக்குறது மட்டும் தெரியாது.” என்று சொல்ல
“அதுக்கு கரணம் உன் தாத்தா பப்பு , எங்கள் உயிரைக் காப்பாற்ற என்னையும் என் கணவரையும் உன் தாத்தாதான் சிலநாள் மறைவா வாழ வைத்தார் , எல்லாத்துக்குமே அந்த சுதாகரன் தான் காரணம் ! ஆமா பப்பு உன் அப்பாவுடைய உயிர்த் தோழன் ! “
“என்ன பாட்டி சொல்றீங்க ? “ என்று சிவா கேட்க காயத்ரியோ ஒரே நாளில் இத்தனை விஷயங்களையும் கிரகிக்க முடியாமல் தலையே வெடித்துவிடும் போல் இருக்க நெற்றியைப் பிடித்துக் கொண்டாள்.
“சொல்றேன் கண்ணா. உன் அப்பா கூட படித்தவன் இந்த சுதாகரன். கிட்டத்தட்ட நம்ம வீட்லயே வளர்ந்தவன். உங்கப்பா நிறுவனத்தில் அவனும் ஒரு பங்குதாரர் ஆனான். என் பொண்ணு ருக்கு வளர வளர அவ மேல் அவன் இஷ்டப்பட்டான் , உன் அப்பாவும் அவனுக்காக எங்ககிட்ட பேசினான் ஆனால் ருக்மணியோ தன் ஸ்னேஹிதன் க்ரிஷ்ணமூர்த்திய விரும்பினதா சொன்னாள். அவ இஷ்டம் இல்லாமல் எதையும் எங்களுக்குச் செய்ய விருப்பம் இல்லை. அவளை அந்த கிருஷ்ணமூர்த்திக்கே கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம்.
இந்த விஷயம் தெரிந்த சுதாகரனும் கோவிச்சுண்டு சென்னை போயிட்டான். தன் நண்பனைச் சமாதான செஞ்சுக்குறதா உங்கப்பா சொல்ல நாங்களும் பெரிதா எடுத்துக்கலை நாளடைவில் சமாதானம் ஆவானென்று நினைத்தோம்.
கிருஷ்ணமூர்த்தி படிப்புக்கு ஏற்ற மாதிரி உங்கப்பா மாப்பிள்ளைக்கு காரியதரிசி வேலை கொடுத்துக் கூடவே வைத்து பாத்துண்டார். சில வருஷம் கழித்து காயத்ரி பிறந்தாள் அவளைப் பார்க்கத்தான் நானும் அவரும் சென்னை வந்தோம் ஆப்போ தான் உன்னையும் நான் மறுபடி பார்த்தேன் சிவா , வேலை நெரிசல் காரணமா உன் அப்பாவோ காயத்ரி அப்பாவோ வருவது குறைந்து போச்சு. அவர்களால் உன் அம்மாவும் என் பொண்ணு ருக்குவுக்கு கூட இங்க அடிக்கடி வந்து போக முடியலை.ஆப்போ அப்போ போனில் பேசிப்போம் அவ்ளோவே.
சுதாகரனும் ஒருத்தியைக் கல்யாணம்செய்துண்டான். நாங்களும் நிம்மதியானோம்.
ஒருநாள் எங்கண்ணா அவசரமா போன் பண்ணி விமான விபத்தில் உன் அப்பாவும் மீதி எல்லாரும் இறந்து போயிடத்தவும் உடனே எங்களைக் கொஞ்ச நாள் தலை மறைவா இருக்கவும் சொன்னார். விசாரிக்கக் கூட சென்னை வரவேண்டாம் உடனே தலைமறைவா ஆகும் படி சொன்னார். ஒரு விலாசமும் கொடுத்து எங்களுக்கு புது அடையாளத்தையும் கொடுத்து மறைந்து வாழச் சொன்னார் . என்ன எதுன்னு அப்போ எங்களுக்குக் காரணம் சொல்லலை .
பின்னாடி அந்த சுதாகரன் ருக்மணியையும் கிருஷ்ணாமூர்த்தியையும் வேறு வேறு விதத்துல விபத்துனு போர்வைல கொன்னது தெரிஞ்சுது. இதயமே வெடிச்சு போச்சு ஆனா எங்களால ஒன்னுமே பண்ண முடியாத நிலை. ஆதாரம் இல்லாத போனதால எங்களால அவனை சட்டப்படி தண்டிக்க முடியல. எல்லாவற்றையும் நான் பாத்துக்கிறேன் இப்போதைக்கு முக்கியம் சிவா காயத்ரி இரண்டு பேரோட உயிர் அதுக்காகவாது நாம பொறுமையா இருக்கணும்னு அண்ணா சொன்னார். அதுக்காக நாங்களும் அந்த பாவிய ஒன்னும் பண்ணாம..” என்று முடிக்க முடியாமல் குலுங்கி குலுங்கி அழ துவங்க. காயத்ரியும் சிவாவும் மொத்தமாய் உடைந்து விட கௌதமும் உதயாவும் கூட கண் கலங்கி விட்டனர்.
“அந்த துரோகி எங்க இருக்கான் பாட்டி.? அவன் எங்க இருக்கான் சொல்லுங்க அவனை என் கையாலேயே கொன்னாத்தான் எனக்கு ஆத்திரம் அடங்கும்” என்று சிவா ஆவேசமாக பொங்க ” வேணாம் பப்பு! நீ செய்யவேண்டியது சிலது இருக்கு அவசர படாதே”.என்று அவனை சமாதானம் செய்தார் பாட்டி .
“ என்ன பாட்டி இது? யாருன்னு தெரிஞ்ச அப்புறமும் அவனை விட்டு வைக்கணுமா? ஏன் என்னால முடியாதுன்னு நினைக்கிறீங்களா ? “ என்று அவன் மேலும் சீற
“ போடா போ அவனை கொன்னுட்டா எல்லாம் சரியா ஆயிடுமா? அப்படினா போ இப்போவே போ” என்று பாட்டியும் சினம் கொள்ள.
சிவா கண்கள் சிவக்க ஏதும் சொல்லமுடியாமல் தன் அருகில் இருந்த மேஜையை ஓங்கி குத்திவிட்டு இங்கும் அங்கும் அடிபட்ட சிங்கம் போல அலைய துவங்கினான்
காயத்ரியோ சுத்தமாய் நொறுங்கி போயிருந்தாள். அவள் பெற்றோர் இருவரையும் சிவாவின் குடும்பத்தையும் கொன்றவன் இன்னும் எங்கோ தண்டிக்க படாமல் நடமாடிக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தப்பின் வாயில் வார்த்தை வராமல் அழுது அழுது மயங்கியே போனாள்.
“ இதெல்லாம் பார்க்கத்தான் நான் இருக்கிறேனா ஆண்டவா. சிவா மொதல்ல குழந்தையை ரூமில் படுக்கவை பாவம் “ என்று ஆழ்ந்த மூச்சொன்றை விட்டவர்.
“அந்த கவரை ரூமிற்க்கு கொண்டு போய் படி மீதி விஷயம் தான விளங்கும் , நான் கொஞ்சம் படுத்துக்குறேன் என்றால முடியலைக் கண்ணா “ என்று அவர் கண்கலங்கக் கட்டிலில் சாய்ந்து கொண்டார் .
காயத்ரியைத் தூக்கிக்கொண்டு பெண்களுக்கான அறையில் இருக்கும் கட்டிலில் படுக்கவைத்து விட்டு அவள் அருகில் அமர்த்த சிவா அந்த கவரில் இருக்கும் காகிதங்களைப் பிரித்தான்.
முதலிலிருந்த கடிதத்தில்,
அன்புள்ள பப்பு,
இக்கடிதம் உன் கையில் இருக்கிரதென்றல் பட்டு உன்னிடம் எல்லா விஷயங்களையும் சொல்லி இருபாள் என்று நம்புகிறேன்.
பப்பு என் மேல உனக்கு கோவம் இருக்கும். நியாயம் தான் ஆனா அப்போ இருந்த சூழலில் உன்னை நான் எந்த கஷ்டமும் அண்டாம வளர்க்க நினைத்தேன் அதான் உன்கிட்ட எதையும் சொல்லல. இப்போ உனக்கு சுதாகரன் பத்தி தெரிஞ்சு இருக்கும்,
அவன் குணம் தெரியாமலே அவனை கூடவே வளர்த்தோம். என்ன சொல்வது பாலும் கள்ளும் ஒரே மாதிரி தானே இருக்கு. ருக்மணி தனக்கு கிடைக்காததை மனசுலயே வச்சு கருவி இருக்கான் அந்த கிராதகன், ருக்மணி போனப்போவே எங்களுக்கு சந்தேகம் இருந்துது ஆனா அவன் தான்னு தீர்மானமா சொல்ல முடியல.பின்னால பிளேன் விபத்து ஆனதிலிருந்து மீண்டும் அந்த சந்தேகம் தலை தூக்கித்து ஆனா அப்பவும் என்கிட்ட தகுந்த ஆதாரம் இல்லை .
ஆனா எனோ சுதாகரனோட அடுத்த குறி பட்டுவும் அவர் கணவரும்னு எனக்கு நம்ப தக்க துப்பு வந்ததினால் நான் அவர்களை மறைஞ்சு வாழ வச்சேன் .
நீயும் சின்ன பையன் காயத்ரியோ இன்னும் சின்ன பொண்ணு அதுனால என்னால இதை உங்க கிட்ட சொல்ல முடியல . கிருஷ்ணமூர்த்தியும் காயத்ரிக்கு ஏதும் தெரியாமல் அவ சாதாரண குழந்தையா வளரனும் , சொத்து பத்து வேணாம் சம்பளம் மட்டும் போறும்னு பிடிவாதமாவே இருந்ததுனால காயத்ரியையும் நம்ம வீட்டிற்கு கூட்டிண்டு வர முடியல .
ஒரு நாள் மனசு தாங்காம கோவமா சுதாகரனோட சட்டையை பிடிச்சு கேக்க போனேன் . அவனோ கம்பெனி பங்குகளை விட்டு கொடுத்தா உன்னையும் காயத்ரியையும் உயிருடன் விடுவதாய் சத்தியம் செஞ்சான்.
எனக்கும் வயசாயிபோச்சு உடம்புலயும் மனசுலயும் தெம்பு இல்லாமல் போச்சு , நீங்க இரண்டு பேராவது உயிரோடு இருக்கவேண்டுமென்று அவன் கேட்டுக்கொண்டபடி கம்பெனியில் உனக்கென்று இருந்த பங்குகளை அவனுக்கு விட்டுக் கொடுத்தேன். அவனுக்கும்உன் அப்பாக்கும் இருந்த தொடர்பை முழுவதும் அழித்தேன். அவனும் தன் பேர் அடையாளமென்று எல்லாவரையும் மாற்றிக் கொண்டான் , அமெரிக்கா சென்று செட்டில் ஆனான் .
நானும் நிம்மதியா இருந்தேன் ஆனால் அவன் சுகுமார் என்கிற புது அடையாளத்தோடு திரும்ப வந்து இருக்கிறான். அவன் கண்ணில் படாமல் நீங்க இரண்டு பெரும் நிம்மதியா வாழவேண்டுமென்று நான் நினைக்கிறேன். நான் எவ்வளவு நாள் உயிருடன் இருப்பேனென்று தெரியவில்லை இப்போதே என் உடல் நிலை மோசமா இருக்கு , நான் எப்பொழுதும் சொன்னது போல காயத்ரி உன் பொறுப்பு நீதான் அவளை பாத்துக்கணும்.
இதெல்லாம் உங்கிட்ட சொல்ல முடியாமல் போய்டுமோன்னு பயம் வரவே இந்த கடிதத்தையும் அந்த உயிலையும் தயார் செய்தேன் உரிய நேரம் வரும் பொழுது இவை எல்லாம் உன்னிடம் வந்து சேர ஏற்பாடும் செய்தேன் .
இந்த உறையில் அந்த சுதாகரன் தான் இப்போது இருக்கிற சுகுமார் என்பதற்கும் , அவன்செய்த கொலைகளுக்கும் ஆதாரங்கள் இருக்கிறது , கார் ட்ரைவர் கொடுத்த வாக்குமூலம். அந்த விமானியுடைய மனைவி இருக்கும் இடம் எல்லாம் இருக்கிறது. நீதான் இதைப் பயன் படுத்தி அந்த கயவனை தண்டிக்கவேண்டும் .
எதையும் தனியா செய்யாதே கௌதமை கூடவே வைத்துக்கொள். அவன் நிதானமானவன். உன்னை நம்பாமல் சொல்லவில்லை கெளதம் உன்னை உயிராய் நினைக்கிறான்.
கௌதமின் அப்பா எப்படி இறுதிவரை உங்கப்பாக்கு ஒரு நல்ல நண்பனாகவும் பார்ட்னராகவும் இருந்தாரோ அதே போல் நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கணும். அவனும் உதயாவும் என் பொறுப்புன்னு நான் அவன் அப்பாவுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கேன். என் ஸ்தானத்தில் இருந்து அவர்களை உன் உடன்பிறப்புகளாய் நினைத்து பார்த்துக்கொள்.
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
கண்ணா நீ புத்திசாலி , கோவம் மூளையை மழுங்க செய்யும் , வேகத்தை விட விவேகம் தான் முக்கியம் . ஆத்திரத்தில் உடனே அவன் சட்டையை பிடிக்க பார்க்காதே புத்திசாலி தனமாக நடந்துகொள்.
கடவுள் என்றும் உங்களுக்கு துணை இருப்பார்
என் ஆசீர்வாதங்கள்
உன் மன்னிப்பை வேண்டும் உன் தாத்தா
கடிதத்தை படித்த சிவா தாத்தாவின் வேண்டுகோளையும் மீறி கோவத்தின் உச்சிக்கே சென்று விட கௌதமும் இம்முறை மிகவும் சினமேறி கத்த துவங்க உதயவோ பயந்தே போய்விட்டாள். அவளுக்கும் மனமெங்கும் கோவம் பொங்கதான் செய்தது அனால் ஆண்கள் இருவரின் கோவத்தை தாங்க முடியாமல் பயந்துதான் போனாள் .
காயத்ரியோ மயக்கம் தெளியாமல் மயங்கியே கிடைக்க , அந்த மாலையும் இரவும் மிகவும் மன அழுத்தத்துடன் சென்றது .
மறுநாள் காலை சிவாவும் கௌதமும் அந்த சுகுமாறன் என்கிற சுதாகரை பற்றிய விவரங்கள் சேகரிக்க முடிவு செய்தனர் , மயக்கமும் உறக்கமும் தெளிந்த காயத்ரியிடம் மீதி விஷயங்களை உதயா மெதுவாக சொன்னாள் , அனால் இம்முறை அவளும் சிவாவைப்போல் மிகவும் கோவம் கொண்டு பொரிந்து தள்ளினாள்.
இளையவர்களின் மனவுளைச்சலை தாங்கமுடியாமல் பாட்டியோ மிகவும் வேதனையுடனே இருந்தார். அன்று மதியம் உணவிற்கு பிறகு சென்னை செல்வதாக சிவா கூற , இரண்டு நாள் இருந்துவிட்டு போக அவனிடம் பாட்டி வேண்டினார், ஆனால் தாத்தா கொடுத்த வேலையை முடித்து விட்டு வந்து நீண்ட நாள் தங்கு வதாக கூறி நால்வரும் விடை பெற்றனர்.
சென்னையை அடைய நடுநிசி ஆனது. மறுநாள் விடியற்காலை காயத்ரி சிவாவின் அறையை பரபரப்பாய் தட்டி பார்க்க அவனோ ஆழ்ந உறக்கத்தில் இருந்தான் கதவை திறக்காததனால் , இருவர் அரைக்கும் ஒரே பால்கனி என்பதனால் அந்த கதவின் வழியே அவன் அரிக்கு சென்ற அவள் அவனை வேகமாக எழுப்பினாள் .
பதறி எழுந்த சிவாவோ ” என்ன காயு என்னாச்சு ? என்ன விஷயம் ? ” என்று பதற
சிவா மறுபடி அந்த சுதாகரன் என் கனவுல வந்தான் , அவன் காலில் லாடம் வச்ச சூ போட்டு இருக்கான் , எதோ பெரிய மீட்டிங் ரூமில் உட்கார்ந்து இருக்கான் கூடவே ஒரு பொண்ணு இருக்கா ஆனா முகம் தெரியல சுதாகரன் முகமும் தெரியல ஆனா அவன்தான் இருக்கனும் , அங்க இருந்த கம்பெனி லோகோ இது பாருங்க என்று ஒரு வரை படத்தை காட்ட
” ஓ மை காட் ! காயு இது இது என்ன தெரியுமா ? “
“ கௌதம் கௌதம் “ என்று அலறி கொண்டே படுக்கை விட்டு ஓடினான் சிவா. அவன் அலறலை கேட்ட கௌதமும் தன் அறையை விட்டு வெளியே விரைந்து வந்தான், காயத்ரி காட்டிய வரை படத்தை காட்டி
” டேய் இது என்னனு தெரியுதா ? ஆய் காண்ட் பிலீவ் இட் ! இவ்ளோ நாள் கண்ணுக்கு முன்னாடியே இருந்துது ஆனா நமக்கு தெரியலை பாரேன் ! கௌதம் இதான் சுதாகரன் கம்பெனி ! மாட்டினான் டா ! இனி அவன் நம்ம கிட்டேந்து தப்பிக்க முடியாது ! ” என்று குதித்தான்
“சிவா என்னடா சொல்றே ? ஐயோ இவங்கள இவ்ளோனாள் தெரியாம போச்சே. விட கூடாதுடா , சீக்கிரமா நாம அந்த விமணியோட மனைவியை பார்க்க போகணும் இல்ல இன்னிக்கே போகணும் ! ” என்று கௌதமும் குதிக்க
“ஐயோ என்ன நடக்குதுன்னு எனக்கு யாரவது சொல்லுங்களேன் ! ” என்று காயத்ரி கத்த
” காயு ! ரிலாக்ஸ் இது என்ன எந்த கம்பெனி தெரியுமா? ” என்று சிவா ஆர்வமாக
” அதான் தெரியலையே. எதோ சைனீஸ் சிம்பல் மாதிரி இருக்கு , சொல்லித்தான் தொலைங்களேன் ! ” என்று அவள் பொருமல் இழக்க
” தாரா குரூப்ஸ் காயத்ரி தாரா குரூப்ஸ் ! நம்ம பிசினெஸ் எதிரின்னு நெனச்சேன் , இல்லை இவங்க நம்ம வாழக்கைக்கே எதிரி நம்ம ஜென்ம விரோதி ! ” என்று படபடத்தான் சிவா.
“ஐயோ என்ன சொல்றீங்க , இவங்க தானே கௌதம் அண்ணாவை கொல்ல பார்த்தது , உங்க கம்பெனி டீலை திருட பார்த்தது ! விடக்கூடாது ! இன்னும் அவன் ஆத்திரம் தீரலை பாருங்க” என்று அவளும் பொங்க.
பாவம் வெளியில் நடக்கும் கூச்சலில் கண் விழித்த உதயாவிற்கோ ஒன்றும் புரியவில்லை.
அன்று சிவாவும் கௌதமும் அந்த விமானியின் மனைவி இருக்கும் இடத்திற்கு சென்று அந்த விபத்தை பற்றி விசாரிக்க.
முதலில் மறுத்தவர் பின்பு மெல்ல சொல்லதுவங்கினார்
“ தம்பி எங்களை ஒன்னும் செஞ்சுடாதீங்க. சொல்றேன். அவர் உங்கப்பாகிட்ட வேலைக்கு சேர்ந்து ஒரு ஆறுமாசம் தான் இருக்கும் , ஒரு நாள் ஒருத்தர் வந்து அவர்கிட்ட பேசணும்னு சொல்லி வெளில கூட்டிகிட்டு போனார் , வீடு திரும்பும் பொழுது அவர் முகமே சரி இல்ல , அடுத்தநாள் தான் அந்த விபத்து நடந்தது . நானும் அது தர்ச்செயலா நடந்ததுன்னு நெனச்சேன் ஆனா என் கணவர் எனக்கு எழுதி எங்க வீட்டுக்கே போஸ்ட் பண்ண கடிதம் அப்புறம் தான் கிடைச்சுது.
அதுல அவர் முன்னே வேலை செய்த கம்பெனியில் கவன குறைவா இருந்ததால ஒரு விபத்து ஏறத்தாழ நடக்கும் தருவாயில் கோ பைலட் உதவியால் தவிர்க்க பட்டது , அந்த தவறு காரமாய் அவருக்கு வேலை போச்சு. அதை அவர் மறைத்து உங்கப்பாகிட்ட வேலைக்கு சேர்ந்துருக்கார் , அந்த சுதாகரன் சொல்லும் படி நடத்துக்காவிடில் அவரை பற்றி எல்லாருக்கும் சொல்லுவது மட்டும் இல்லாமல் எண்ணெயும் என் பிள்ளைகளையும் கொன்று விட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதா எல்லாரையும் நம்ப வைப்பேன்னு மிரட்டி இருக்கார் . அதுக்காக பயந்து அவர் கொடுத்த பெருந்தொகையை வங்கியில் என் பேரில் போட்டு வச்சுட்டு , அவர் சொன்ன படி அடுத்த நாளே வேணும்னே விமானத்தை மலையில் மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கார்.
நானும் பயத்தில் யார்ட்டயும் எதையும் சொல்லாம தான் இருந்தேன் ஆனா உங்க தாத்தா எப்படியோ கண்டுபிடிச்சு என்னை கேள்வி கேட்டு துளைச்சுட்டார் நானும் ஒரு கட்டத்தில் உண்மையை சொல்லி , அவர் கிட்ட மன்னிப்பு கேட்டேன், அந்த லெட்டரை அவர்கிட்ட கொடுக்கணும்னு நெனச்சேன் ஆனா அவர் அதுக்குள்ள காலமாயிட்டதா தெரிஞ்சு நான் சும்மா இருந்துட்டேன் நீங்களும் அப்போ சின்ன பிள்ளையா இருந்தீங்க.
எங்க வீட்டுக்காரர் பண்ண தவறுக்கு அவரை மன்னிச்சுடுங்க . அவர் பண்ணது மன்னிக்க முடியாத குற்றம் இருந்தாலும் பெரியமனசு பண்ணுங்க தம்பி” என்று அவர் கதற அவர் ஆசுவாச படும் வரை சிவாவும் கௌதம் பொருமாயாய் இருக்க.
மெல்ல தன்னை தேற்றி கொண்ட பெண் ” தம்பி அந்த லெட்டர் எங்க பேங்க் லாக்கர்ல இருக்கு , என் கூட வந்தீங்கன்னா கையோட எடுத்து தரேன். எங்களை ஒன்னும் பண்ணிடாதீங்க கெஞ்சி கேட்டுக்குறேன்! “
அவர்களை அன்றே வங்கிக்கு அழைத்து சென்றார்.
அங்கு லாக்கரில் இருந்து கடிதத்தை எடுத்து அவர்களிடம் ஒப்படைத்த பெண் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார்.
கையில் இருந்த கடிதத்தை பிரித்து படிக்க அவர் சொன்னது அப்படியே அந்த விமானி கைப்பட எழுதி இருந்தது , கூடவே பேங்க் அக்கவுண்ட் பற்றின விவரங்களும் இருந்ததது .
உடனே எதற்கும் இருக்கட்டும் என்று அதை போட்டோவும் பிரதியும் எடுத்து வைத்து கொண்டனர் , கையோடு அசலை அவர்கள் வாங்கி லாக்கரில் வைத்தனர்.
வீட்டிற்கு சென்ற நேரம் அங்கே அந்த சுதாகரன் அமர்ந்திருந்தான் பக்கத்தில் அவர் மகள் தாரிகா !
கோவமாய் முன்னேறிய சிவாவை கண் காட்டி அமைதி படுத்தினான் கௌதம். வெறியை அடக்கி கொண்டு மெதுவாய் வீட்டினுள் நுழைந்த சிவா எதுவும் சொல்லாமல் சோஃபாவில் உட்கார்ந்து முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அமைதியாய் இருந்தான்
சிறிது நேரம் கழித்து சுதாகரன் பேச துவங்கினான். ” சிவா ! என்னை உனக்கு தெரியாது ! நான் உன் அப்பாவோட பால்யகால தோழன் , நான் அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டேன் , கொஞ்ச வருஷம் முன்னாடிதான் இந்தியா வந்தோம் , இது என் பொண்ணு தாரிக்கா உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் தாரா குரூப்ஸ் எம் டி , உங்கள ஒரு கலந்தாய்வில் பார்த்து இருக்கா. அப்போதிலிருந்தே உங்களைத்தான் கல்யாணம் பணிப்பெண்ணு ஒத்தை கால்ல நிக்குறா ! ” என்று முடிக்க
கௌதமோ தாரிக்காவின் காலையே உற்று பார்க்க ” என்ன மிஸ்டர் ! ” என்று தாரிக்கா பட படக்க
” ஒரே காலில் நிக்குறீங்கன்னு உங்கப்பா சொன்னார் அதான் ! ” என்று நக்கலாய் கௌதம் சொல்ல
” நான்சென்ஸ் ! என்ன இது அது ஒரு புரிதலுக்கு சொன்னார் ! ” என்று அவளும் புரிந்தால்
” கௌதம் ! என்ன இது வீட்டுக்கு வந்தவங்ககிட்ட ! ” என்று சிவா கௌதமை முறைக்க கௌதமிற்கு ஒன்று விளங்க வில்லை
” சாரி சார் ! அவன் கொஞ்சம் விளையாட்டு பிள்ளை ! எனக்கு ரொம்ப சந்தோஷம் சார் ! எனக்கும் உங்க பெண்ணை பிடிச்சுருக்கு ! சீக்கிரம் நாள் பார்த்து மேல ப்ரோசீட் பண்ணுவோம் ! ” என்று சொல்ல.
கௌதம் கோவமாய் உள்ளே எழுந்து சென்று விட்டான் . ” அவனை விடுங்க சார் பாத்துக்கலாம் ! ” என்றான் சிவா முகத்தில் ஒட்டவைத்த புன்னகையுடன்.
” ரொம்ப சந்தோஷம் தம்பி ! அப்புறம் இங்க உங்க கூட காயத்ரின்னு உங்க உறவுக்கார பொண்ணு இருக்கறத கேள்வி பட்டேன் , வயசு பொண்ண வைத்து கொண்டு எப்படி என் பொண்ணு கல்யாணத்தை நடத்த முடியும்? நானே நல்ல பையனா பாக்குறேன்! அவளுக்கு முதலில் கல்யாணம் பண்ணி வச்சுடலாம் . என்ன சொல்றீங்க ? ” என்று சொல்லி முடிக்கும் முன்பே வெடுக்கென்று எழுந்த சிவா
” நான் அதை பாத்துக்குறேன் சார் ! நீங்க அதை பற்றி கலவை பட வேண்டாம் ! அப்போ பாக்கலாம் ! ” நீ கெளம்பு என்பது போன்ற தொனியில் சிவா கைகளை கூப்பி சொல்ல.
முகத்தில் அரைத்தாற்போல் சிவாவின் செயல் இருந்தாலும் மறுக்காமல் திருமணத்திற்கு அவன் உடனே ஒப்புக்கொண்டதால் சினத்தை கட்டுப்படுத்திக் கொண்டு
“ வரோம் ! “என்று சுதாகரன் கிளம்ப.
” ஐ ஆம் வெரி ஹாப்பி டார்லிங்! நீங்க என்னை உடனே ஏத்துப்பீங்கனு நினைக்கல ” என்ற தாரிகா ஆர்வமாய் சிவாவிடம் நெருங்கி அவன் உணரும் முன்பே அவன் கன்னங்களில் முத்தம் கொடுத்துவிட்டு “ சீக்கிரம் நம்ம கல்யாணத்துக்காக கத்துக்கிட்டு இருப்பேன் டார்லிங்! “ என்று கண்ணடித்து அவன் பதிலுக்கு காத்திராமல் சந்தோஷமாய் சுதாகரன் பின் சென்றாள்.
கோவமாய் கன்னங்களை துடைத்துக்கொண்டவன் மோசமான ஆங்கிலவார்த்தைகளால் அவளை திட்டி தீர்த்தான்.
“ திமிருபுடிச்ச **** இவளுக்கு நான் வேணுமா **** ? “ இன்னும் பலபல வர்ணங்களில் அவர்களை திட்டிக்கொண்டே இருந்தான்.
மாடிக்கு சென்ற கௌதமோ கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தான்.
சிறிதுநேரத்தில் மேலே வந்த சிவாவை கண்ட அவனோ ஆவேசமாய் அவன் சட்டை காலரை பற்றி வெறி பிடித்தது போல் கத்த துவங்கினான்.
” டேய் லூசாடா நீ ? அவன் கிட்ட பொறுமையா டீல் பண்ணுன்னு தான் உன் கையை பிடிச்சேன் , என்ன தைரியம் இருந்தா அவன் வீடு ஏறி வந்து சம்மந்தம் பேசுவான் ! நீ என்னடா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றே ? அவனை அங்கேயே கொன்னு போடாம ! காயத்ரியை பத்தி நெனச்சியா ? என்னடா இப்படி முதுகெலும்பு இல்லாம இருக்கே ? சே உன்னை பார்க்கவே பிடிக்கலை போடா! ” என்று நிறுத்தாமல் கத்தினான்.
” டேய் கூல் என்ன நீ அவ்ளோதான் தெரிஞ்சு வச்சுருக்கியா? நான் அவனை கொல்லாம விட்டதே பெரிய விஷயம்.
எலி தானா போரிலே சிக்கும் பொது ஏன்டா வேண்டாம்னு ஓட விடணும் ? நாமளா அவனை கண்டு பிடிச்சு நெருங்குறது கஷ்டம் ஆனா அவனா வந்த சிக்கி இருக்கான். இதை பயன் படுத்தி அவன் அப்பாவ எப்படி நம்ப வச்சு கழுத்தறுத்தானோ அதே போல நாம் செய்யணும்.
அதுக்குதான்.மத்தபடி அந்த மைதா மாவை கட்டிக்க நான் என்ன லூசா ? லூசு பயலே. ” என்று சிவா சொல்லி கொண்டு இருக்கும் பொழுதே உதயாவும் காயத்ரியும் அங்கு வர.
“மவனே இருடீ உன்ன வச்சுக்கறேன்” என்று கௌதம் முன்னே ஓட “டேய் ஏதான சொல்லி குட்டையை குழப்பாதே டா ப்ளீஸ் “ என்று சிவா பின்னே ஓடினான்.