OVOV 30

OVOV 30

வயல் வெளிகள் நடுவே  நடந்ததை ஜீரணிக்கவே முடியாமல் வீரேந்தரும் அவருடன் இருந்தவர்களும் தவித்து கொண்டு இருக்க,அவர்களுக்கு சற்றும் குறையாத நிலையில்,அர்ஜுன் வீட்டின் வரவேற்பறையில் தன்னை தானே நொந்து கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.

ப்ரீத்தியால் எவ்வளவு முயன்றும், சொர்ணக்காவின் மரணத்தில், நியூஸ் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

செய்த செயல் சரி தான் என்றாலும்,,’தான் அந்த போதை மருந்து பாக்கெட் தூக்கி அடிக்கவில்லை என்றால் இந்நேரம் அவர் போலீஸ் பாதுகாப்பில் பத்திரமாய் உயிரோடு இருந்து இருப்பாரோ!’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை ப்ரீத்தியால்.

கொல்ல வேண்டும் என்று டார்கெட் வைத்து விட்டால்,,’அவன்’ போலீஸ் கஸ்டடியில் இருப்பவனையே வித விதமாய் யோசித்து,,கண்டு பிடிக்க முடியாத “slow poison”,வகை எல்லாம் பயன்படுத்தி  கொல்வான் என்பது அறியாத ப்ரீத்தி, ‘தன்னால் ஒரு உயிர் போக காரணமாகி விட்டதே!’ என்று மனதிற்குள் வருந்தி கொண்டு இருந்தாள்.

இறந்தவள் சிறார்களின் தேகத்தை போக பொருளாய், தான் சுகமாய் வாழ பலி கொடுக்கும் வகையை சார்ந்த அரக்கி.

ஆயிரம் முறை கல்லால் அடித்தே கொல்ல பட வேண்டிய ஈன பிறவி தான் என்றாலும், ‘ஒரு உயிர் பிரிய தான் காரணமாய் ஆகி விட்டோமோ!’ என்ற எண்ணம் மனதை குடைந்து கொண்டு இருந்தது.

அரக்க ஜென்மங்களின்  உயிரை பறிப்பது கொலை இல்லை அசுரவதம்,சூர சம்ஹராம் “justifiable homocide/நியாயமான கொலை” என்று பல உலக நாடுகளின் சட்டங்கள் இதை சொல்கின்றன.

ஹரியானாவின் டிஜிபி, டாக்டர் கே. பி. சிங் தனது பேட்டி ஒன்றில் இந்தியாவில் 7 சட்டங்கள் IPC -INDIAN PENAL CODEல் சூழ்நிலையை பொறுத்து நடைபெறும் கொலைகள்- ‘கொலைகளே அல்ல’ என்று சொல்வதாக அளிக்கப்பட்ட பேட்டி பற்றி ACP ராஜேஸ்வரி சொல்லிய தகவல்கள் அப்பொழுது ப்ரீத்திக்கு நினைவிற்கு வர தான் செய்தது.

IPC செக்ஷன்  100,103, 104,99,106,96 கீழ்

தற்காப்பு கொலை –

Rational Self-Defense,

கற்பழிப்பு முயற்சியின் போது ,

கடத்தல் முயற்சியின் போது ,

ஆசிட் தாக்கு நடைபெற போகிறது என்ற சூழ்நிலை,

ஒருத்தனோ,ஒரு கும்பலோ கொள்ளையடிக்க வரும் போது உங்கள் உயிரையோ,உடமைகளையோ பாதுகாக்க துணியும் நிலை

என்று மேற்சொன்ன சூழ்நிலைகளில் perpatrator/குற்றம் புரிபவரை கொல்வது தவறே இல்லை என்று பொது மக்களுக்கு /முக்கியமாக தன்னையோ,தன்னை சார்ந்தவர்களை காக்கும் நிலையில் உள்ள பெண்கள், இதனை அறிந்து தங்கள் வெளியே செல்லும் இடங்களில் எந்த சூழ்நிலை வந்தாலும் எதிர்த்து போராட வேண்டும் என்று இந்திய அரசியல் சாசனமே சொல்கிறது.

பெண்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களை தற்காத்து கொள்ளலாம் என்பதற்கு தாஜ் மஹாலில் இருந்து 250KM தொலைவில்   உள்ள Badausa என்ற நகரத்தில் சம்பத் பால் தேவி என்ற பெண் தலைமையில் செயல்படும் “குலாபி கேங் /GULABI GANG “என்ற உலகத்தின் மிக பெரிய பெண்கள் VIGILANTI குழுவே சிறந்த உதாரணம்.

Gulabi Gang (2012) - IMDb

பிங்க் நிற சாரி அணிந்து கொண்டு,கையில் மிக பெரிய பிங்க் நிற தடி எடுத்து கொண்டு இந்த பெண்கள் குழு, அநீதிகளை எதிர்த்து தெருவில் வரும் காட்சியே நமக்குள் வீரத்தை விதைத்து விடும்.

அரசாங்க ஊழல்,குழந்தைகள் திருமணம்,வரதட்சணை கொடுமை,DOMESTIC VIOLENCE-என்று இல்லங்களில் பெண்களுக்கு செய்யப்படும் கொடுமைகளை எதிர்த்து ஒரே சமயத்தில் 18-60 வயது வரை உள்ள பெண்கள்  நூற்றுக்கணக்கில் குரல் கொடுப்பார்கள்.

தேவை என்ற போது உயிரை எடுப்பதும்,உயிரை கொடுப்பதும் கூட தவறே இல்லை.”

ப்ரீத்தியின் “அக்னி தாரகைகள்” குழுவில் ACP ராஜேஸ்வரி பேசியது நினைவிற்கு வந்து ப்ரீத்தியின் குற்ற உணர்ச்சியை சற்று குறைக்க தான் செய்தது.

மலர்ந்த பூத்தோட்டமாய், கலகலப்புடன், கண்ணில் மின்னலுடன் புள்ளி மான் என வந்த பெண்ணவளின் முகத்தாமரை,கூம்பி போன பூ மொட்டாய் மாறி விட,அதை கண்ட அர்ஜுன் மனதில் ரத்தமே வடிந்தது.

ப்ரீத்தி  உதடுகள் தான் மற்றவர்களுடன் பேசி கொண்டு இருக்கிறதே ஒழிய, காலையில் கண்களில் ஒளியுடன் அவனை கட்டி போட்ட அந்த தேவதை மிஸ்ஸிங். அதை அந்த காதலனால் ஏற்க முடியவில்லை.

ராஷ்மி மகனின் முகவாட்டத்தை கவனித்து கொண்டே இருந்தாரோ என்னவோ, அவன் கை மேல் தன் கையை வைக்க பெருமூச்சுடன் அவரை திரும்பி பார்த்த அர்ஜுன் அவர் முகத்தில் இருந்த, ‘என்ன?’ என்ற கேள்விக்கு விடையாய்    ப்ரீத்தியின்  பக்கம்  தலை அசைத்தான்.

அவரும் ப்ரீத்தியை நியூஸ் ஒளிபரப்பு ஆனதில் இருந்து கவனித்து கொண்டே தானே இருக்கிறார். அவருக்கும் அந்த பெண் தன்னை இப்படி வருத்தி கொள்வதில் வேதனை தான்.

இறந்தவள் மனித ஜென்மமே கிடையாது தான் என்றாலும், அவள் இறக்க ப்ரீத்தி காரணமே இல்லை என்பது தான் உண்மை என்றாலும்,’தன்னால் இப்படி ஆகி விட்டதோ!’ என்று துடிக்கும் அந்த பெண்ணின் இரக்க குணம், அவரையும் தான் அசைத்து பார்த்தது.

என்ன செய்து இந்த பெண்ணின் மனதை மாற்றுவது என்று புரியாமல் யோசித்து கொண்டு இருந்த அவர் கண்களில்    டேபிள்  மேல் இருந்த பத்திரிகை பட, சட்டென்று பிரகாசம் ஆனவர் அர்ஜுனிடம் அதை பற்றி சொல்ல அவனும் துள்ளி எழுந்தான்.

“ப்ரீத்தி!….நேத்து நடந்த கலவரத்தில் உன் தோழி திருமணமே மறந்து தான் போனது… அவங்க நம்ம ரிலேஷன் வேற… ரொம்ப பழக்கமான குடும்பம்…

இப்போ ரிசப்ஷன் தான் நடந்துட்டு இருக்கும்.போய் பார்த்துட்டு வா.. அர்ஜுன்! தீப்!  ப்ரீத்தியை கூட்டி போய்ட்டு வாங்க. உனக்கும் மன மாற்றமாய் இருக்கும்.” என்றார் ராஷ்மி.

ராஷ்மி பேச்சை பாதியில் இருந்து தான் கவனித்த ப்ரீத்தியின் காதுகளில் அவர் அரைகுறையாக சொன்ன,  “ரிலேஷன்”என்ற பதம் மட்டும் தான் கவனத்தில் பதிந்தே ஒழிய, அவரின்,  ‘உன் தோழியின் திருமணம்’ என்ற வார்த்தை கவனத்தில் வராமல் போனது.

இந்த தோழி அந்த ப்ரீத்தி ஜெஸ்மிந்தேர் தோழி ஆச்சே.

இந்த தோழியின் திருமணத்திற்கு தான்,  அந்த ப்ரீத்தி பதிண்டா வந்து இருப்பதே. அந்த திருமணத்திற்கு தான் இந்த ப்ரீத்தியை போக சொல்லி கொண்டு இருந்தார் ராஷ்மி.

சரியாய் கவனித்து இருந்தாலாவது, ‘எனக்கு இங்கே யாருமே தோழி இல்லையே!’ என்று சற்றாவது ப்ரீத்தி உஷார் ஆகி இவர்களை கேட்டு இருக்க முடியும்.

“இல்லை ஆன்ட்டி.  இவங்க போய்ட்டு வரட்டும். நான் வேற எதுக்கு?”என்றாள் ப்ரீத்தி,  இவங்க ரிலேஷன் திருமணதிற்கு வேலை பார்க்க வந்த தன்னை எதற்கு போக சொல்கிறார்கள் என்பது புரியாமல்.

ப்ரீத்தி தன் தந்தை வர முடியாத போதெல்லாம்,  ஹர்பிர் அங்கிள் உடன் இது போன்ற பார்ட்டி, பங்க்சனுக்கு எல்லாம் சென்றவள் தான்.

அப்பொழுது அந்த கம்பெனியின் வருங்கால முதலாளி, தற்பொழுதைய ட்ரைனி, ஹர்பிர் காரியதரிசி என்ற முறையில் உடன் சென்றாள். ஆனால், அதுவும் இதுவும் ஒன்றா? இப்போ மட்டும் என்ன மாறி விட்டது?

ப்ரீத்தியே அவள் அறியாமல் மாறி கொண்டு தானே வருகிறாள்.

‘தான்’என்ற சுயத்தை மறைய வைத்து, இன்னொருத்தரின் உயிராய் மாறுவது. அவள் அவனாகவும்,அவன் அவளாகி போவதும் தானே காதல்.

முழு சரணாகதி.

நீயே என் உடல்,பொருள்,ஆவி என்று கடைசி மூச்சு,கடைசி இதய துடிப்பு உள்ள வரை  இரு இதயங்கள் ஒரு இதயமாய் இணைந்து துடிப்பது தானே  காதல்.

இந்த இணைவு பிரிக்க முடியாத ஆத்ம பந்தம்,உலகத்தின் அதி உன்னத ‘நம்பிக்கையின் ‘அடிநாதம்’ என்ற எண்ணம் எங்கு தவறி போகிறதோ அங்கு தான் இந்த காதல் பொய்த்து போகிறது.

இந்த ஆத்ம பந்தம் இங்கே இந்த இரு இதயங்களுக்கு இடையே வலுவான பிணைப்பினை உருவாக்குமா?… இல்லை பல ஆயிரக்கணக்கான கானல் வரி கவிதைகள் போல் அர்த்தம் அற்றதாய் போகுமா?

மனதில் ஈர்ப்பால் வந்து விட்ட கள்ளத்தனம் வந்து விட்டது.

ஒரு புறம் அர்ஜுன் உடன் செல்வது என்பது வானில் பறக்க வைத்தாலும், ரியாலிட்டி என்ற ஒன்று  உண்டு தானே!

‘இது சரி வருமா!’ என்ற பூதாகரமான கேள்வி ஒன்று அவளை உள்ளே குடைந்து கொண்டு இருந்தது.

காதல்

ஒரு வழி பாதை பயணம்

அதில் நுழைவது என்பது சுலபம்

பின்பு திரும்பிட நினைப்பது பாவம்

அது ஆற்றிட முடியா காயம்

காதல்

ஆற்றிட முடியா காயம்..

மேகங்கள் போட்டிடும் கோலம்

அது காற்றினில் களைந்திட சோகம்

காலை கதிரவன் அழித்திடும் பனிபோல்

காதல் விதியவன் சித்தைதிடும் கனவோ!

கோடையில் காய்ந்திடும் நதிகள்

எந்த நிலையிலும் காயாத விழிகள்

கதை சாகின்ற வரையும் தொடரும்

கட்டை வேகின்ற போதும் மலரும்!

எவ்வளவு அழகான, ஆழமான வரிகள்

இந்த ஒரு வழி பாதையில் சென்று விட்டால் மீள முடியுமா?

ஜாதி, அந்தஸ்து, மொழி,வாழ்க்கைமுறை என்று பல வித்தியாசங்கள் நடுவே அகழியாய் இருக்கிறது. இதை எல்லாம் கடந்து விடுவது சுலபம் தான் என்றாலும் அதற்கு அர்ஜுன் துணை வேண்டுமே! …கிடைக்குமா?

அழகான பெண்ணை ரசிப்பது என்பது கண் இருக்கும், எந்த ஆண்மகனும் செய்து விட கூடிய ஒன்று தான். புதிதாய் வந்த எதன் மீதும் ஏற்படும் கவர்ச்சி அனைவர்க்கும் வர கூடியது தான். ஆனால் ,இது இன கவர்ச்சி மட்டும் தானா?  இல்லை உயிர் ரெண்டை இணைக்கும் தெய்வத்தின் தீர்ப்பா?

சலனப்பட்டுவிட்ட மனதுடன், இவனுடன் செல்வது மட்டும் இல்லை, உடன் இருந்து வேலை செய்வதும் அவள் இதயத்திற்கு மிகுந்த சவாலான விஷயமே!.

அர்ஜுனை போன்ற மனிதனின் மீது காதல் வரவில்லை  என்றால் தான் அதிசயம்.

அவள் குழப்பத்திற்கு, தயக்கத்திற்கு அடிப்படையே இல்லை என்பது தான் ப்ரீத்திக்கு புரியாமல் போனது. அர்ஜுன் தவமிருப்பது இவள் கை பிடிக்க தானே!.

ஆனால், என்ன ஒன்று பெண் தான் மாறி போய் இருக்கிறது.

பல ஆயிரம் ஆசைகள் உண்டு

இவர் இதயங்கள் நினைப்பதற்கு

இந்த மனிதர்கள் தெய்வங்கள் இல்லை

இங்கு நினைத்ததை முடிப்பதற்கு

போ என்றால்  மேகங்கள் எங்கே போகுமோ!

யார் நெஞ்சம் யாரிடம் எங்கே சேருமோ?

விதி தான் இதற்கு பதில் சொல்ல முடியும்.

சொல்லுமா?

அர்ஜுனை பார்ப்பதும், தனக்குள் தர்க்கம் செய்து கொண்டு இருப்பதுமாக  தவித்து கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.

‘ஐயோ! …இந்த திருடன் கூட சென்றால் இதயத்திற்கு பலத்த சேதாரம் ஆகி விடுமே!… காதல் என்ற ஆயுதம் கொண்டு இதயத்தை திருடி விடுவானே கள்ளன்…

அய்யோ! அப்படி பார்த்து பார்த்து கொல்லாதே அர்ஜுன்…‘

‘என்ன பார்வை

உந்தன் பார்வை!’ என்று பாட வைத்து விடுவான் போல் இருக்கே…’ என்று அவள் இதயம் புலம்பி கொண்டு இருந்தது.

அவள் இங்கி பிங்கி போட்டு கொண்டு இருப்பதையும், அதை கண்டு அர்ஜுன் டென்ஷன் ஆகி கொண்டு இருப்பதையும் கண்ட தீப், இவங்களை இப்படியே விட்டால் வேலைக்கே ஆகாது என்பது புரிந்து விட ,

“கம் பர்ஜாயீ! …பஞ்சாபி ரிசப்ஷன் என்றால் சும்மாவா? …செமையா இருக்கும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று ஊரே அமர்க்கள படும்…சாப்பாடு மலை மலையா குவிச்சு வைத்து இருப்பாங்க…..

குஜிலிஸ் வேற ரசகுல்லா கணக்கா வருவாங்க…ப்ளீஸ்,ப்ளீஸ்….வாங்க வாங்க..”என்று தீப் கை குவித்து கேட்க,ப்ரீத்திக்கு சிரிப்பே வந்து விட்டது.

“கம் ப்ரீத்தி! …”என்று அர்ஜுன் தன் உள்ளங்கையை வேறு நீட்ட அவனுடன் செல்லும் முதல் டிரைவ் என்ற எண்ணமே ப்ரீத்தியை ஏதோ செய்தது.

அவளை பொறுத்தவரை அது தான் அவனுடன் செல்லும் முதல் பயணம்.

ரயில் நிலைய சம்பவங்கள் குறிப்பாக, “லிப் ஷேக்” ட்ரெண்ட்  இன்னும் அவளுக்கு தெரியாதே!.

தெரிய வந்தால்?

“பர்ஜாயீ!…அண்ணாவை தனியா அனுப்பினோம், அவரை மீண்டும் பார்க்கவே முடியாது ….சொல்லிட்டேன் ..உஷாரு ….அண்ணாவை சாக்கு பையில் கடத்த கூட ரெடியா இருக்காங்க …சோ அவர் பாதுகாப்பிற்கு கூட வாங்க.” என்றான் தீப் ப்ரீத்தி காதில்.

“ஏன் தீப்? …பணத்திற்காக உங்க அண்ணனை கடத்தும் ஆபத்து/threat  இருக்கா என்ன?” என்றாள் பயப்பந்து நெஞ்சில் உருள.

அர்ஜுன் இல்லத்தின் செழிப்பு,அவன் தொழில்களின் வளமை,அவனின் குடும்ப வரலாறு -1799களில் பஞ்சாபை ஆண்ட மகாராஜா ‘ரஞ்சித் சிங்’ அவர்களின் முக்கிய படைத்தளபதி அர்ஜுன் முன்னோர் என்பதும், அவன் பரம்பரை கோடீஸ்வரன்  என்பதை சொல்லாமல் சொல்லி கொண்டு இருந்தது.

அதனால் ஏதாவது ஆபத்தா?

அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் அந்த நினைப்பு கூட மூச்சை நிறுத்தி விடும் போல் தோன்றியது.

“நீங்க வேற…இது பணத்திற்கான கடத்தல் இல்லை .அவரை கட்டி பிடிச்சி இச்சு இச்சுன்னு நாலு இச்சு வைக்க…கன்னி பையனை வேறு எதற்கு அண்ணி கடத்துவாங்க?…போங்க அண்ணி ஐம் சோ shy .

அர்ஜுன் என்றால் செம கிரேஸ்.

சும்மா இரும்புல செய்து வைத்த சிலை  மாதிரி இருந்தா பொண்ணுங்க மனசு   காந்தமாய் அவர் மேல் ஒட்டிக்கொள்ளும்.

இந்த அண்ணா கூட வந்தா ஒரு குஜிலி கூட நம்மளை பார்க்காது. வகை தொகை இல்லாமல் இவர் மேல் விழுந்து வைப்பாங்க.எனக்கு ஜெலுசில் தேவைபடும்.

நீங்க கூட வந்தீங்கனா உங்களை மீறி,யார் இவர் மேல் பெவிகால் போடாத குறையாய் ஒட்டி கொள்வாங்க சொல்லுங்க?”என்று நாடக பாணியில் நெற்றியில் கை வைத்து தீப் கேட்க, ப்ரீத்திக்கு சிரித்து, சிரித்து வயிறு வலி வராத குறை.

“என்னடா என்னை பத்தி அவங்க கிட்டே சொல்லிட்டு இருக்கே? …”என்றான் அர்ஜுன் இடுப்பில் இரு கைகளையும் வைத்து கொண்டு.

அவன் நின்ற விதமே அலாதியாய் இருக்க,’அய்யோ!.. அழகா!.. நிக்கிறதுலேயே கொன்னுடுவான் போல் இருக்கே!….

அழகு!… அழகு!…

நீ நடந்தால் நடை அழகு…

நீ சிரித்தால் சிரிப்பழகு…

நீ ஒருவன் தான் அழகு…

ஓ..ஓ நெற்றியிலே

சரிந்து விழும் நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற

அஞ்சு விரல் அழகு!…

அடப்பாவி! சினிமா பாட்டிற்கு எல்லாம் புது அர்த்தம் உணர்த்தி கொண்டு இருக்கிறானே!’ என்று இங்கு ஒரு கன்னி மனம் காந்தமாய் அந்த இரும்பின் மேல் ஈர்க்க  பட்டு கொண்டு இருந்தது.

“அது ஒண்ணும் இல்லை வீர்ஜி … நீங்க எவ்வளவு நல்லவர்… வல்லவர் …நாலும் தெரிந்தவர்….என்று அண்ணி கிட்டே சொல்லிட்டு இருந்தேன்.”என்றான் தீப்.

“இல்லையே!.. என் காதில் வேறு என்னமோ விழுந்ததே! …ஏதோ குஜிலி உன்னை பார்க்காதுன்னு…”

“அய்யோ! அய்யோ! அண்ணா அது குஜிலி இல்லை ….குல்பி …ice…லேட்டா போனா, குல்பி ஐஸ் கூட மிஞ்சாதுனு சொல்லிட்டு இருந்தேன்.”

“வகை தொகை இல்லாம விழுந்து வைப்பாங்க என்று …”

“அது வகை தொகை இல்லாமல் விருந்து வைப்பாங்க என்று சொன்னேன்…”

“ஏதோ ஜெலுசில் தேவை படும் என்று ….”

“ஆமா அண்ணா அண்ணிக்கு நம்ம பக்கம் காரம் ஒத்துக்குமா இல்லை ஜெலுசில் வாங்கி கொள்ளவா என்று கேட்டு வைத்தேன் …”

“அது என்னவோ இச்சு இச்சுன்னு ….ஏதோ …”

“அது இச்சு இச்சு இல்லைன்னா …பிச்சு பிச்சு (Ṭukaṛā ṭukaṛā)….சப்பாத்தியை பிச்சு பிச்சு  கூட சாப்பிடலாம் (Capātī kivēṁ khāṇī hai)என்று அண்ணிக்கு விளக்கி கொண்டு இருந்தேன்….”

“சப்பாத்தி சாப்பிட ஒரு விளக்கம் தேவை ஹ்ம்ம்….”

“ஆமா அண்ணா …சாப்பாடு விஷயம் இல்லை ….எது வந்தாலும் அது எல்லாம் எங்களுக்கு சாப்பாட்டுக்கு பிறகு தான் ப்ரோ.”

“இதை எல்லாம் நீ உங்க அண்ணி கிட்டே சொல்லிட்டு இருந்தே! …”

“யெஸ் of course …”

“நீ சொன்னதா சொல்லும், இதை எல்லாம் நான் நம்பணும்? ….”

“certainly why not …”

“கொஞ்சம் வாசல் பக்கம் பார்த்து திரும்பேன் தீப் …”

“அய்! அதுக்கு வேற ஆளை பாருங்க …அப்படி திரும்பி நின்னா நீங்க ஒதைப்பீங்க…”

“நீ திரும்பவே இல்லை என்றாலும் உதைப்பேன் …”என்று அர்ஜுன் முடிப்பதற்குள் தீப் எடுத்து இருந்தான் ஓட்டம்.

அர்ஜுன் அவனை துரத்தி கொண்டு ஓடி எதிரே வந்து கொண்டு இருந்த அமர்நாத் மாமா மேல் அவன் மோதி நிற்க ,

“ஐயோ பர்கிதா!…” என்று அலறியவாறு பின் இருந்த சோபாவில் விழுந்தார் அமர்நாத்.

“தோடா!….லவ்ஸ் மன்னன் வந்துட்டார்…அது என்ன மாம்ஸ் கீழ் விழும் போது எல்லோரும் அம்மா அப்பா…குதா என்று கத்துவங்க…நீங்க என்ன மாமி பேரை சொல்லிட்டு விழறீங்க?” என்றான் அர்ஜுன்.

“அதானே!…இது என்ன புதுசா இல்லை இருக்கு…”என்றான் தீப்.

அர்ஜுன் கவனம் அமர்நாத் மேல் திரும்பியதை கண்டு கடவுளுக்கு மனதில் நன்றி சொல்லி கொண்டு –

‘ஜெய் ஹோ அமர் மாம்ஸ்…இல்லைன்னா இந்த வீர்ஜி கையால் இல்லை, இல்லை ‘கர்லா கட்டை’ போன்ற கையால் எவன் அடி வாங்குவது?…யம்மா மீ ஜஸ்ட் எஸ்கேப்’

“அய்யோ! ஷைத்தானுங்க ரெண்டும் என் பக்கம் வந்துடுச்சே …. நான் காலி.” என்று முனகியவர்,

“எங்கேயோ கிளம்பணும் என்று சொல்லிட்டு இருந்தா மாதிரி இருந்துச்சே!… கிளம்புங்க டைம் ஆகுது பாருங்க…”என்றார் அவர்களை விரட்டுவதில் குறியாக.

“கிளம்புறதா?..எங்க கூட நீங்களும் தான் கிளம்பறீங்க மாம்ஸ். பொண்ணு அப்பா உங்க ஜிகிரி தோஸ்த்,அந்த லாலா ஸ்வீட் ஸ்டால்காரர் தான்.உங்களுக்கும் சேர்த்து தான் பத்திரிகை வச்சிட்டு போனார்.அம்மா சொல்ல மறந்துட்டாங்க போல் இருக்கு.”என்றான் அர்ஜுன்.

“அடப்பாவி கடன்காரா!.எனக்கு தெரியாமல் அவன் பொண்ணு திருமணத்தை எப்படி முடிச்சான்?”என்றார் அமர்நாத் நொந்தவராய்.

“அட சும்மா இரு மாமா.அவர் பெண்ணாவது நல்லவனை கட்டட்டும்.நீங்க செய்யும் டுபாக்கூர் வேலையில் பிரச்சனை வந்த குடும்பம் தான் அதிகம்.அந்த பெண்ணாவது நல்லா இருக்கட்டும்.”என்றான் அர்ஜுன் சீரியஸ்சாக முகத்தை வைத்து கொண்டு.

அமர்ந்த தன் இதயத்தில் கை வைத்து,”யூ டு ப்ருட்ஸ்”என்று ரியாக்ஷன் கொடுக்க,

“எனக்கு ஒரு சந்தேகம் மாமா.உங்க நண்பராய் இருந்துட்டு அந்த மனுஷன் எப்படி அவ்வளவு புத்திசாலியாய், இன்னொரு ‘மேட்ரிமோனி சர்வீஸ்’ பயன் படுத்தி நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்தார்?.நம்பவே முடியவில்லை”என்ற அர்ஜூன்க்கு, தீப் ஹைபைவ் கொடுத்தான்.

அவர்கள் பேசுவதை பின் இருந்து ராஷ்மி மொழி பெயர்த்து கொண்டு இருக்க, ப்ரீத்தியால் அதற்கு மேல் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் விழுந்து, விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

“நீயுமா பிஹென்ஜி?”என்றார் ராஷ்மியை பார்த்து.

அமர் மாமா கொடுக்கும் ரியாக்ஷன்னுக்கு ப்ரீத்தி காதில் ஏனோ

மலராக  நினைச்சு தான்

உன்னை வளர்த்தேன்

நீயும் முள்ளாக தச்சி 

விட நானும் துடிச்சேன்!…’என்று T.ராஜேந்தர் வாய்ஸ்சில் BGM ஒலிக்க ப்ரீத்தியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“என்ன செய்வது காகா/தம்பி.உண்மை கசக்க தான் செய்யும். நான் உன்னை பத்தி புகழந்து பேசணும் என்று தான் நினைக்கிறன். ஆனால் அப்படி பேசும் விதமாய் நீ இதுவரை எதையும் செய்த்ததில்லையே பா.பொய் பேச கூட வாய் வர மாட்டேங்குது.

அப்படியே பேசினாலும் அதுவும் உன்னை பத்தி பேசினா எல்லோரும் கண்டு பிடிச்சுடுறாங்க.மீ வாட் டு டூ டார்லிங் ப்ரோ?” என்ற அவர் மகன்கள் இருவருக்கும் ஹை பைவ் கொடுத்தார்.

அவர் முகம் போன போக்கை பார்க்க ப்ரீத்திக்கு என்னவோ வடிவேலு காமெடி லைவ் ரிலே மாதிரியே தோன்றியது.

“வேணாம் ….வலிக்குது …அழுதுடுவேன் ….”என்று வடிவேலு வாய்ஸ்க்கு,அமர் மாமா வாய் அசைப்பது போல் தோன்றி வைக்க, தீப் வேறு அவர் மாமியாருக்கு லவ் லெட்டர் கொடுத்த கதையாய் சொல்லி விட ப்ரீத்தியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

“ஹே போதும்.சாலாவை ஒரே அடியாய் ஓட்டினா எப்படி? ஒரேடியா அடிச்சா என் சாலா (மனைவியின் தம்பி) தாங்க மாட்டான்.கொஞ்சம் கொஞ்சமாய் வைத்து செய்யுங்க.

ரொம்ப அடிச்சா தாங்கா வேணாமா?வச்சி செய்யுங்க.டைம் ஆகுது பாரு அர்ஜுன்” என்றவாறு துண்டை உதறி தோளில் போட்டு கொண்டு உள்ளே சென்ற அர்ஜுன் அப்பா யதுவீரை பார்த்து

‘இவர் கேரக்டர்ரை புரிஞ்சுக்கவே முடியவில்லையே!’ என்று அமர்நாத் ஜெர்க் ஆகி நிற்க, அமர்நாத்   ரியாக்ஷன் பார்த்த ப்ரீத்திக்கு,’நாயகன் கமல்’ டைலொகு தான் மனதில் ஓடியது.

“நீங்க நல்லவரா

இல்லை கெட்டவரா”

அமர்நாத்தை வைத்து செய்தது போதும் என்று பெரிய மனது வைத்து அர்ஜுன்,”டென் மினிட்ஸ்”என்று அர்ஜுன், ப்ரீத்திக்கு  கை காட்டி விட்டு செல்ல, நிம்மதி பெருமூச்சு விட்ட அமர்நாத்,துண்டை காணோம் துணியை காணோம் என்று அங்கு இருந்து எடுத்தார் ஓட்டம்.

“இந்த அண்ணாவிற்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை… பொண்ணுங்க ரெடியாகி வர பத்து நிமிஷம் போதுமா ? இவரை மாதிரி பேண்ட் ஷர்ட் போட்டுட்டு ஒரு பெண்ணால் கிளம்ப முடியுமா?பாருங்க அண்ணி”என்று நடு ஹாலில் நின்று புலம்பி கொண்டு இருந்த தீப் தோளில் கை வைத்து தட்டிய அவர்கள் சமையல் பெண்மணி ரஷியா,

“இப்படி தனியா நின்னு பேசினா அதுக்கு வேற பெயர் சொல்வாங்க. இன்னும் நிக்காஹ் கூட ஆகாத புள்ள நீ . Rasō’ī dā kamarā/சமையல் அறையில்  இருந்து எலுமிச்சம் எடுத்து வந்து தரேன்.தலைக்கு தேய்ச்சு குளி கண்ணா”என்று சொல்லி விட்டு போக,அந்த ஹாலில் தான் மட்டுமே நிற்பதை கண்ட தீப், தன் தலையில் அடித்து கொண்டான்.

“அய்யோ! இதுங்க ரெண்டும் சேர்ந்துட்டு நமக்கு லூசுன்னு பேர் வாங்கி கொடுத்துடும் போல் இருக்கே ….முடியலைடா.’என்று புலம்பியவாறே ரெடியாகி வர தீப் அவன் அறைக்கு சென்றான்.

அதற்குள் தயார் ஆகி வந்த அர்ஜுன் கராஜ்ஜில் இருந்து, தன் ஆஷ் கலர் ford Endeavour- 7 சீட்டெர் SUV வண்டி எடுத்து வந்து வீட்டு வாயிலில் நிறுத்தவும், ப்ரீத்தி சந்தன நிற அனார்கலி சுடிதாரில் தேவதை போல் வாயிலில் வந்து நிற்கவும் சரியாகி இருந்தது.

Ford Endeavour Price in India 2022 - Images, Mileage & Reviews - carandbike

வாயிலில் நின்ற பிரீத்தியை கண்டு ராஷ்மி மட்டும் இல்லை எல்லா பெண்களும் ஒரு கணம் கண்கள் விரிய தான் பார்த்தார்கள்.

ஒரு படி மேலே போய் ராஷ்மி ப்ரீத்திக்கு கையால் திருஷ்டியே கழித்து விட்டார்.

Designer Floral Print Anarkali, Printed Salwar Kameez, Printed Suit, Printed Suit Set, महिलाओं के प्रिंटेड सूट in Sahara Darwaja, Surat , Online Fashion Marts | ID: 7844671833

“போய்ட்டு வரேன் ஆன்ட்டி .”என்றாள் ப்ரீத்தி.

“குரு உன் துணைக்கு வரட்டும் மகளே!…போய் என்ஜோய் செய் …எதை பற்றியும் கவலை படாதே!.”என்றார் ராஷ்மி.

சட்டென்று அந்த வீட்டின் ஹால் அருகே இருந்து கை தட்டல் சத்தம் கேட்க எல்லோர் பார்வையும் அங்கே திரும்பியது.

தாத்தா தரஞ்சீத் பாட்டியா கையை பிடித்து கொண்டு முக்காடு இட்ட பெண்மணி ஒருவர் வந்தார்.

அவர் சைகை பாஷையில் அதை சொல்ல அதை தீப் மொழி பெயர்த்தான்.

“இரு ..bhabi…என்ன குழந்தையை வெறும் வயத்துல அனுப்பறீங்க.வயறு காலியாக இருந்தால், மனசு இன்னும் சோர்த்து போய்டும்.எவ்வளவோ தூரம் போகணும்.

இரு கண்ணா… இந்தா இந்த கப்பை பிடி.ரசமலாய்.இனிப்பு குறைவாய் போட்டு இருக்கு.ரெண்டு சாப்பிடு”

தீப் அவர் சைகையை மொழி பெயர்க்க, உபிந்தர் தன் கையில் இருந்த பௌல் ஒன்றை அந்த பெண்மணியிடம் நீட்ட, உபிந்தர் பாட்டியா கையை பிடித்து கொண்டு தாங்கி ,தாங்கி வந்து ஒரு பௌல் ஒன்று முழுவதும் ரசமலாய் ப்ரீத்தி கையில் கொடுத்து விட்டு மீண்டும் உள் அறைக்கே சென்று விட்டார்..

பௌல் நீட்டிய அந்த கை முழுவதும் தீக்காயத்தின் வடுக்கள் போல் இருக்க,ப்ரீத்தி அதிர்ந்து நின்றாள்.

From colonial Algeria to modern day Europe, the Muslim veil remains an ideological battleground

அவள் திகைப்பை பார்த்த ராஷ்மி,”அவங்க என் nannan /என் கணவரின் ரெண்டாவது தங்கை விர்து/virtu.ரொம்ப அழகான,அன்பான பெண்.டெல்லியில் என் மாமனாரின் அண்ணன் வீட்டில் தங்கி படித்து கொண்டு இருந்தார்.

எங்க வீட்டில்,இன்னும் சொல்ல போனால் இந்த கிராமத்தில் இருந்தே டாக்டருக்கு படிக்கச் போன முதல் பெண் இவங்க தான்.சொந்த மருத்துவமனை இங்கே ஆரம்பிக்கணும் என்பது தான் இவங்க கனவாய் இருந்தது.எல்லாம் போச்சு.

லவ் செய்யறேன் என்று ஒருவன் ரொம்ப டார்ச்சர்.stalking

சினிமா, கதை படிச்சுட்டு,அதில் வெறி பிடிச்சி ஒரு psycho இவங்களை ஆறு மாசம் தொடர்ந்து செய்யாத கொடுமை இல்லை.

இவங்க தைரியமானவங்க போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தாங்க. அதற்கு அவன் பதில் இது தான்.

ஆசிட் அட்டாக்/ acid attack. பிழைக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

முகம்,கை,கால்,குரல்வளை சிதைந்து விட்டது. காலில் இருந்து சதை,நரம்பு எடுத்து ஆபரேஷன் செய்து ஓரளவிற்கு முகத்தை மீட்டார்கள்.கால் தாங்கி, தாங்கி தான் நடப்பாங்க.பல வருடம் மாமனார் தான் டெல்லியில் தங்கி இவங்களை பிழைக்க வைத்து கூட்டிட்டு வந்தார்.

ரூம் விட்டு வெளியே வர மாட்டாங்க. என்  மாமனார்  கூட மட்டும் தான் இருப்பாங்க.பேசவும் முடியாது.சைகை பாஷை மட்டும் தான். இன்று ஏதோ நீ பசியோடு வெளியே போக கூடாது என்று ரூம் விட்டு வெளியே வந்து இருக்காங்க.” என்றார் ராஷ்மி.

Four US students suffer acid attack in France

கண்கள் கலங்கி விட ப்ரீத்தி நின்று விட, அவள் தோளை அணைத்து தட்டி கொடுத்தார் ராஷ்மி.

“அவங்களே தனக்கு நேர்ந்ததை பத்தி கவலை படும் டைப் கிடையாது.யாராவது அவளுக்காக சோகமாய் இருப்பதாக தெரிந்தால் கூட சண்டைக்கு வந்து விடுவாள்.

சோ இந்த எஸ்பிரஸின் மாத்திட்டு இந்த ரசமலாய் சாப்பிட்டு கிளம்பு.அர்ஜுன் வெயிட் செய்யறான் பாரு .”என்று இன்னொரு பௌல்லில் ராஷ்மி ரசமலாய்களாய் அடுக்க ப்ரீத்தி மீண்டும் திகைத்து போனாள்.

‘என்ன விட்டா வீடு மொத்தம் சேர்ந்து நம்மை குண்டு கத்தரி,ரோடு ரோலர் ஆக்கிடுவாங்க போல் இருக்கே!.எங்க வீட்டு வாசற்படியை இடித்து தான் கட்டணுமோ!…

யம்மா! இது என்ன ரசமலாயா? இல்லை யானை தலையா…ஒவ்வொண்ணும் இமாம் பெருசு இருக்கு …

ஒண்ணை சாப்பிட்டாலே  ரெண்டு நாளைக்கு பசி எடுக்காது போல் இருக்கு…இதில் ஒரு முழு பௌல்….ஐயோ கொலை! கொலை! …சாப்பாடு போட்டே கொல்றாங்க ….’என்று புலம்பினாள் ப்ரீத்தி -மனதிற்குள் தான்.

அவள் ரெண்டை சாப்பிடும் வரை அந்த பெண்கள் கூட்டம் ப்ரீத்தியை விடவே இல்லை.

‘இந்த மாதிரி அன்பை வாழ்ந்து பார்த்து அனுபவித்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.வெறும் வார்த்தைகள் கொண்டு ஒரு பஞ்சாபி குடும்பத்தின் அன்பை விவரிப்பது என்பது இயலாது’ என்றே தோன்றியது ப்ரீத்திக்கு.

அவள் மனம் மாற ஏதோ ஒரு திருமணத்திற்கு அனுப்புவதும், அர்ஜுன், தீப்,அமர்நாத்,ராஷ்மி,யதுவீர்  எல்லோரும் சேர்ந்து கலாய்த்து கொண்டு அவள் கவனத்தை திசை திருப்புவதும், தனக்கு நேர்ந்த கொடூரத்திற்காக நான்கு சுவற்றுக்குள், பல வருடமாய் வனவாசம் இருக்கும் ஒரு பெண் கூட அவளை மகளாக நினைத்து, அவள் வயிறு வாடினால் மனம் நிறையாது என்று பார்த்து பார்த்து செய்வது என்று “உள்ளங்கையில் வைத்து தாங்குவது “என்ற பதத்தை அன்று கண்கூடாய் பார்த்து,மன பூர்வமாய் உணர்ந்து அனுபவித்தாள் ப்ரீத்தி.

வீட்டின் வாயிலில் நிற்க வைத்தே இத்தனையும் நடந்து கொண்டு இருக்க,அதை நமுட்டு சிரிப்புடன் ரசித்து கொண்டு இருந்தான் அர்ஜுன் என்ற கள்வன்.

ப்ரீத்தியின் முகம் போகும் போக்கு அவனுக்கு அத்தனை பிடித்தமாய் இருந்தது.

எது தான் அர்ஜுனுக்கு ப்ரீதியிடம் பிடிக்காமல் இருக்க போகிறது? அந்த வீட்டில் அத்தனை பாந்தமாய் அவள் பொருந்தி போனது அவனுக்கு அளவில்லாத மகிழ்ச்சியே.

போதும்,போதும் என்ற அளவில் அந்த குடும்பத்தின் அன்பில் மூழ்கி, திளைத்து கார் அருகே வந்து நின்றாள் ப்ரீத்தி. மற்றவர்கள் காட்டியது ஒரு வித அன்பு என்றால் காரை இயக்கி கொண்டு இருந்தவன் கண்களில் வழிந்த இன்னொரு விதமான அன்பு ப்ரீத்தியை புரட்டி போட்டது.

கண்கள் மீண்டும் போர்வாளாய் ஒன்றை ஒன்று தழுவி கொள்ள, ‘தங்களின் இணையின் அழகை ரசிக்க ரெண்டு கண்கள் போதவில்லையே!’ என்று வருந்தவே ஆரம்பித்து விட்டது அந்த இளம் நெஞ்செங்கள் ரெண்டும்.

கருப்பு நிற TUXEDOவில் ஆண் அழகனாய் காரில் அமர்ந்து இருந்த அர்ஜுன் மீது இருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை ப்ரீத்தியால்.

akshaykumar - YouTube

பலருக்கு tuxedo என்பது ‘சோலைக்கோலை’ பொம்மைக்கு ஆடை அணுவித்தது போல தான் ப்ரீத்திக்கு தோன்றும்.

எல்லோர்க்கும் கோட் சூட் பொருந்தி விடாது.

‘எதுக்கு இந்த கோமாளி வேஷம்? நம்ம நாட்டின் சீதோஷண நிலைக்கு இது தேவையா? அட போங்கய்யா! …இந்த கழக்கூத்தாடி வேஷத்திற்கு ஒரு formals ஒருத்தரை மெஜஸ்டிக்காக காட்டி விடும்’ என்று ப்ரீத்தி பலமுறை எண்ணியது உண்டு.

ஆனால், இன்றோ அந்த tuxedo என்ற ஆடை உருவானதே ‘இவன் ஒருத்தன் அணிய மட்டும் தான்’ என்று ப்ரீத்தியால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

அகன்ற தோள்களை,பரந்து விரிந்த மார்பினை,குறுகிய இடையை மிக  அழகாய் அலங்கரித்து இருந்த அந்த tuxedo அணிந்து  அந்த  உடைக்கே  பெருமை சேர்த்து கொண்டு இருந்தான் அர்ஜுன்.

‘சாதாரண கந்தல் துணியை அணிந்தால் கூட, இவனின் இந்த ஆண்மையை, இவனிடம் இருந்து வெளிப்படும் இந்த காந்த சக்தியை, ஆகர்சனத்தை  குறைத்து விட முடியாது தான்… அழகா! …இப்படி அழகாய் இருந்து  என்னை  கொல்லலாமா? …’என்று சிணுங்கியது ப்ரீத்தி மனம்.

ப்ரீத்தியோ அவன் ஆண்மையில் சிக்குண்டு கிடக்க, பெண்ணவளின் அழகில் அங்கு ஒரு கவிஞன் உருவாகி இருந்தான்.

இங்கே பாருங்கள்

ஒரு பேரழகி!

இதயத்தை பறித்து

விடும் ராட்ஷசி!

குமரியாய் இருந்தும்

பிள்ளையின் மனத்துடன்

ஆயிரம் சூரியர்களின் 

கதிர் வீச்சு போன்ற புன்னகையால்

என்னை சாய்த்தவள்! …

கவிஞ்சர்களின்  கற்பனை ஊற்று

 இதோ இவள் மட்டும் தான்.

அழகான பாடல் வரிகள் அனைத்திற்கும்

ஆதியும் இவள் தான் …

அந்தமும் இவள் மட்டும் தான்…

இதயத்தை ஆழ்ந்து துளைத்து

காதல் என்ற போரில்

என்னை அடிமையாக்கி விட்ட

பேரரசி இவள் தான்!

இவள் கொடுக்கும் வலிகளுக்கு

 இவளே மருந்தாகி போகும்

மாய தேவதை

இவள் மட்டும் தான்

கடினமான கற்பாறைகளையும்

தன் ஓர விழி பார்வையில் கரைத்து விடும்

அமிலமும் இவள் தான்.

இலையுதிர்காலத்தில்

பூக்கும் நந்தவனம் இவள்

என் நினைவுகளை

ஆக்கிரமிக்கும் சொர்க்கம் இவள்

என்னை கொன்றவாரே,

  ரட்சிக்கும் தேவதையும் இவள்  தான் 

அவளை தவிர இந்த உலகில்

முழுமை எதுவும் இல்லை

என்னில் சரிபாதி …

என்னில் இருக்கும் உயிர்ப்பு

இதோ இந்த பேரரழகி மட்டும் தான்

என்று அறைகூவல் விடுத்தது அந்த காதலனின் நெஞ்சம்.

காதலனின் கண்களுக்கு அவன் காதலி உலக  பேரழகி தானே.

பயணம் தொடரும்…

error: Content is protected !!