காரை நோக்கி சிவாவைப் பின்தொடர்ந்து தாரிகா செல்ல , கௌதமின் கையை பிடித்து இழுத்த காயத்ரி ” அவ மட்டும் அவர் பக்கத்தில் வண்டியில் உட்கார்ந்தால் அவளோதான் சொல்லிட்டேன் ! ” என்று மிரட்ட

” டோன்ட் வொரி காயு ! ” என்று விரைந்தவன் தாரிகா ஏறும் முன்னே.

” சிவா நான் ஓட்டுறேன் ” என்று சொல்லி அவனிடம் வண்டி சாவியைக் கேட்டுக்கொண்டே , கண்ணால் காயத்ரியைக் கட்டினான் . நண்பனின் கண் ஜாடையைப் புரிந்து கொண்டவன் “நோ ! ஐ வில் “ நானே வண்டியை ஓடுகிறேனென்று சாவியைக் கொடுக்க மறுத்தான்.

‘என்கிட்டே பேசமாட்டாளாம் ஆனா மைதாமாவைப் பார்த்து பொறாமை மாட்டும் படுவாளாம் வா டி வா.. குட்டி பிசாசு இன்னிக்கி உன்னை என்னிடம் பேச வைக்கிறேன் ! ‘ என்று மனதில் செல்லமாய் கருவிக்கொண்டான்.

கௌதம் வேறுவழியின்றி அவனருகில் அமர காரின் முன் கதவைத் திறக்க.

சிவா அவனைப் பார்த்து “ கௌதம் ! நீ பின்னாடி உட்கார் தாரிக்கா டார்லிங் யு கம் ! “ தாரிக்காவை அழைத்து அருகில் அமரச் சொன்னான்.

அதிர்ந்த கௌதம் ‘ இவன் இன்னிக்கி சந்திரமுகி கூட சடுகுடு விளையாடபோகுறான் போல ..நீ பட்டாதான் புருஞ்சுப்பே ‘ மனதுக்குள் புலம்பிய படி பின் இருக்கையில் காயத்ரியின் அருகில் அமர செல்ல..அவளோ கௌதமை பொசுக்கிவிடுவதைப் போல் முறைத்தாள்.

‘ அடப்பாவி என்ன கோர்த்து விட்டுட்டானே! ஐயோ முறைக்கிறாளே ! பார்க்காத கௌதம் அவளைப் பார்க்காதே ! ‘ தனக்கு தானே சொல்லிக்கொண்டு பார்வையைத் திருப்பாமல் இருக்க .

‘ நானே கஷ்டப்பட்டு இவ மூட மாற்றப் பார்க்கிறேன் அண்ணா எதற்கு இப்படி செய்றார் ? ‘ உதயா குழப்பமாய் தோழியைப் பார்க்க அவளோ சிவாவை முறைத்துக் கொண்டிருந்தாள்.

‘ எதற்கு இவ இப்படி முறைக்கிறா ? ‘ உதயா காரின் முன் சீட்டை பார்த்து விக்கித்து போனாள்.

அங்கே சிவா தாரிக்காவிற்கு சீட் பெல்ட் அணிவித்து விட்டு அவள் சீட்டை முன்னே பின்னே அட்ஜஸ்ட் செய்து கொண்டிருந்தான் முகமெல்லாம் புன்னகையுடன்.

‘ ஏன் பேடாவுக்கு சீட் பெல்ட் போட தெரியாதாமா ? ‘ அவளும் கோவமாகத் திரும்பிக்கொண்டாள்.

காயத்ரியோ மொத்த கோவத்தையும் திரட்டி கௌதமின் காலை மிதிக்க “ஐயோ…” கௌதம் அலறிவிட்டான்.

“ என்னடா ? “ சிவா கேட்க

“ஒன்னும் இல்லைடா ஒரு குள்ள கொசு கடிச்சுருச்சு ! “ கௌதம் ஓரக்கண்ணில் காயத்ரியை முறைக்க.

மறுபடி காலை மிதிக்க அவள் முயற்சிக்க கௌதமோ காலை இழுத்துக்கொண்டு

நாக்கை துருத்தி அழகு காட்ட. அவளும் பதிலுக்கு அதையே செய்ய

இதை ரியர்வியூ கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்த சிவாவோ சிரித்துக்கொண்டான்.

திநகரில் உள்ள அந்த பிரபல துணி கடையிலில் கார் பார்க் செய்யப்பட்டது.

ஜவுளிக் கடை லிப்ட்டில் ஏறும் நேரம் தாரிக்காவோடு உரசியபடி நின்று கொண்டான் சிவா.

கௌதமோ ‘ காலியா கிடக்கிற லிப்ட்டில் எதற்கு இந்த சீன ஓட்டுறான் ? இவன் அடிவாங்காமல் போகமாட்டான் போலயே ! ‘ என்று குழம்ப

பட்டுப்புடவை தளம் வந்தவுடன் காயத்ரி கோவமாய் உதயாவின் கையை பிடித்து விறுவிறுவென வெளியேறி விட்டாள்.

“ உதயா ! உங்கன்னா ரொம்ப பன்றார் சொல்லிட்டேன் ! “ காயத்ரி உதயாவை ஏகத்துக்கும் மிரட்ட

“நான் என்னடி பண்ணுவேன் ! “ உதயா பாவமாக முழிக்க.

அங்கே அவர்களை நோக்கி ஓடிவந்த லட்சுமி

“ஹாய் பியூடிஸ் ! நான் இப்போதுதான் வந்தே…”

சிவாவின் கையை பற்றிக்கொண்டு ஒய்யாரமாய் வந்த தாரிகாவை பார்த்த லட்சுமி கேள்வியாய் கௌதமை பார்க்க அவனோ சலிப்பாய் தலையை ஆட்டிக்கொண்டே அவள் அருகில் சென்றான்.

லக்ஷ்மியை நோக்கிப் புன்னகைத்த படியே வந்த சிவா தாரிகாவை பார்த்து “ டார்லிங் ! இவ லட்சுமி ! கௌதம் கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணு ! “ ஆறுமுகம் செய்துவைக்க

அவன் சொன்ன டார்லிங் என்ற வார்த்தையில் லட்சுமியும் அதிர்ந்துதான் போனாள். வெளியில் வெறும் புன்னகையை அவள் உதிர்க்க .தாரிகாவோ ஏளனமாய் லட்சுமியைப் பார்த்து சிறிது தலையை மட்டும் அசைத்தாள்.

“ என்ன டார்லிங் நாம மட்டும் தானென்று நெனச்சேன்! “ தாரிக்கா இழுக்க

“ அதான் சொன்னேனே போனில் அப்புறம் என்ன ? “ கடிந்துகொண்ட சிவா நொடியில் குரலில் தேனைக் குழைத்து.

“ டார்லிங் கம் ! “ அவளை அழைத்துக்கொண்டு முன்னே செல்ல

கௌதம் தலை கவிழ்த்த படி பின்னே சென்றான். நண்பனின் நடவடிக்கைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. அவர்கள் திட்டம் என்ன ? இங்கே நடப்பதென்ன?

லட்சுமியோ “ என்னடி இது அநியாயம் ? நீங்கதானேடி சொன்னீங்க இதெல்லாம் டிராமான்னு ! என்னடி இது கர்மம் ? “ என்று கடுகடுக்க.

காயத்ரி எதுவுமே பேசாமல் கடையின் தரையில் உள்ள டயில்ஸை எண்ணுவதுபோல் தரையைப் பார்த்தபடி நடக்க. உதயாவோ “ தெரியாலடி ! இதெல்லாம் பிளான்லேயே இல்லை ! அண்ணாவுக்கு என்ன ஆச்சோ ! “

“ உங்கொண்ணாக்கு அவளைத் தான் பிடிச்சுருக்கு போல ! “ மெல்லிய குரலில் சொல்லிவிட்டு வேகமாய் சென்று கௌதமின் கையை பிடித்துக்கொண்டு நடக்கத் துவங்கினாள் காயத்ரி.

பட்டுப்புடவை தளத்தையே தலைகீழாய் புரட்டிக் கொண்டிருந்தாள் தாரிக்கா ! இது நொட்டை அது நொள்ளை என்று எந்த புடவையிலும் திருப்தி அடையவில்லை அவள்.

ஏனோ தானோ என்று உதயா புடவைகளை பார்க்க. தன்னால் அவள் மனநிலை சரிவதை உணர்த்த காயத்ரி போலியாய் உற்சாகமானாள்.

“ஹே லட்சுமி! உதயா நிறத்துக்கு அந்த மஞ்சள் புடவை செம்மயா இருக்கும் . இந்த மயில் கழுத்து புடவை அதைவிட அழகா இருக்கும் ! “ ஆர்வமாய் புடவையை எடுத்து தோழியின் மேல் வைத்து அழகு பார்த்தாள்.

“உனக்கு உன் கையில் இருக்கும் மாம்பழ நிறம் புடவை அமோகமா இருக்கும் போ! “ லட்சுமியை புகழ்ந்தவள்

“ வாங்கக் கட்டி காட்டச் சொல்லலாம். “ கிளம்ப.

“ நில்லுடி காயு ! உனக்கு ? “ உதயா அவளை இழுக்க.

“ அதானே ? எங்களுக்கு எடுத்து குடுக்காவா உன்னை கூட்டிக்கொண்டு வந்தோம் ! ஒழுங்கு மரியாதையா புடவை எடு! “
லட்சுமி மிரட்ட.

வேண்டா வெறுப்பாய் சிலையைப் போல் காயத்ரி நிற்க . உதயாவும் லக்ஷ்மியும் மாறி மாறி அவள் மேல் புடவைகளை வைத்து வைத்துப் பார்த்தார்கள்.

“ இந்த பிங்க் புடவை சும்மா அள்ளுது காயு ! எடுத்துக்கோ ! வா கட்டி பார்ப்போம் ! “ லட்சுமி துள்ள.

மூவரும் ட்ரையல் பார்க்கச் செல்ல. உதயாவும் லட்சுமியும் முதலில் உள்ளே செல்ல அவர்களுக்கு புடவை கட்ட கடையில் வேலை செய்யும் பெண்கள் உதவ சென்றனர்

காயத்ரி அங்கே அமர்ந்திருந்த கௌதமின் அருகே நிற்கச் செல்ல…. அங்கே அவனருகில் இவள் வருவதைக் கண்ட தாரிக்கா

“ சிவா டார்லிங் இந்த சாரீ எப்படி நல்லா இருக்கா? “ கரு நீல பட்டுப்புடவையைக் கட்டியிருந்தவள் சிவாவின் தோளில் சாய்ந்துகொண்டு கண்ணாடியைப் பார்த்துக் கேட்க.

அதுவரை அலுப்புடன் இருந்த சிவா. காயத்ரி வருவதைக் கண்டு போலி உற்சாகத்துடன் “ எஸ் பேபி ! யு லுக் செக்ஸி ! “ சற்று உரக்கவே சொன்னான்.

எதிலுமே ஒட்டாமல் நாற்காலியில்அமர்ந்திருந்த கௌதம் விக்கித்து போனான்.

காயத்ரியோ கண்கள் கலங்க… அதை யாரும் கவனிக்கும் முன்னே கட்டுப் படுத்திக்கொள்ள அதைப் பார்த்துவிட்ட தாரிக்காவின் கண்களிலோ வெற்றி புன்னகை ‘ என் லெவலுக்கு நீயெல்லாம் நிற்கக் கூட முடியாது ! ‘ மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

இதையறியாமல் பட்டுடுத்தி அழகாய் கொலு பொம்மை போல் உதயாவும் லட்சுமியும் வந்து நிற்க .

அவர்கள் அழகில் தாரிகாவே கொஞ்சம் மிரண்டுதான் போனாள். பின்பு திமிராய் தோளைக் குலுக்கியவள் கண்ணாடியில் மீண்டும் தன்னை தானே ரசிக்கத் துவங்கினாள்.

“ தாறுமாறா இருக்கு டா ! “ தோழிகளை ஆவலாய் நெருங்கிச் சுற்றிச் சுற்றி பார்த்தாள் காயத்ரி. “ செமயா இருக்கீங்கடி ! அண்ணா ! வாங்க வந்து உங்கள் தங்கையையும் ஆளையும் பாருங்கள் ! “ கௌதமை வம்படியாய் இழுத்து வந்து நிற்க வைத்தாள்.

“ நல்லா இருக்கு மா ! “ ஒழுங்காய் கூட பெண்கள் இருவரையும் கவனிக்காமல் சொன்னவன்..“ யாரை சொல்றீங்க அண்ணா? “ காயத்ரி கேட்கும் முன்பே மீண்டும் நாற்காலிக்குச் சென்றுவிட்டான்.

எதுவுமே அவனுக்குப் பிடிக்கவில்லை. சிவா தரிக்காவிடம் எதிர்பாராமல் பழகுவதையோ ! தாரிக்கா விவஸ்தையில்லாமல் சிவாவுடன் ஈஷி கொண்டிருப்பதையோ ! அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

“ நீ போடி ! போ கட்டிண்டுவா ! “ உதயா காயத்ரியை வம்படியாய் அனுப்பி வைத்தாள். வேண்டா வெறுப்பாய் சென்றாள் காயத்ரி.

கண்களை இங்கும் அங்கும் ஓடவிட்டிருந்த கௌதம் “ வாவ்! “ எழுந்தே நின்றான்! அவன் சொன்ன தொனியில் அனைவரும் திரும்ப.

“ ஐயோ குட்டி பார்பி பொம்மை ! “ உதயா பூரிக்க “ ஆமா ! ஜம்முன்னு இருக்கேடி காயு ! “ லட்சுமி அவளை நோக்கி நடக்க.

“போடி இவ குட்டி சைஸ் மஹாலக்ஷ்மி ! “ கௌதம் பெண்களை முந்திக்கொண்டு சென்று காயத்ரியின் தலையை மென்மையாய் வருடி

“ யு லுக் கர்ஜியாஸ் ! லக்க்ஷணமா இருக்கே குட்டிம்மா ! “ அவளை மென்மையாய் அணைத்துக்கொண்டு விடுவித்தான்.

“ ரொம்ப நன்றி அண்ணா ! “அழகாய் புன்னகைத்தாள்.

தாரிக்கவோ ‘ ரொம்பதான் பொங்குறேடா கௌதம் ! தமம்த்தூண்டு இருக்கா ! என் தோள் அளவுகூட இல்ல..சோளக்கொள பொம்மை மாதிரி இருக்கா ! சீ ! என் நிறத்துக்கும் உயரத்திற்கும் இவளா எனக்குப் போட்டின்னு அப்பா சொன்னார் ? அவருக்கு கண்ணுல கோளாறு ! ‘ மனதினில் ஏளனமாய் நகைத்துக்கொண்டாள் அந்த ஏளன நகை முகத்திலும் வெளிப்பட தோளை குலுக்கி உடைமாற்று அறையினுள் சென்றாள்.

கௌதமோ சிவாவின் முகத்தைப் பார்க்க எண்ணித் திரும்ப ‘ அடப்பாவி ! ‘ கௌதம் மலைத்து விட்டான்

சிவா அங்கே அதுவரை எதோ யோசனையில் இருக்க கௌதமின் குரலைக் கேட்டுத் திருப்பியவன் அங்கே இளம் பிங்க் வண்ண பட்டுப் புடவையில் சராசரி உயரத்திற்கும் சற்று குறைவாய்…மாநிறத்தில் அலட்டலின்றி வந்து நின்ற தன்னவளை கண்டு கண்கள் இரண்டும் சாசர் போல விரிய மெய் மறந்து நின்றான்.

‘ அடிச்செல்லாமே இவளோ அழகையும் ஜீன்ஸ் பேண்ட் சுடிதாரென்று அடக்கி வச்சுக்கிட்டு இருந்துருக்கே ! புடவை காட்டினாலே பெண்கள் அழகு கூடித்தான் போகுமோ? என்ன இன்னும் குட்டி பெண்ணாத் தெரியுறே செல்ல குட்டி ! ‘ மனதில் வியந்து தன்னவளை கொஞ்சிக் கொண்டிருக்க. மொபைல் வைப்ரேட் ஆனதில் சுயநினைவுக்கு வந்தான்.

கௌதமின் வாட்சாப் “ டேய் வாய்க்குள்ள டைனோசர் போயிட போகுது ! மூடு ! “ சிவா சுதாரித்துக் கொண்டான்.அவசரமாய் எதோ பதிலளித்தான்.

அனைவரும் பாராட்ட ஏக்கமாய் சிவாவைப் பார்த்தாள் காயத்ரி. அவன் மெச்சுதலாய் ஒரு புன்னகை உதிர்தலும் போதுமே!

அவனோ பாராமுகத்துடன் வராத போனைகாலை பேசுவதுபோல் வெளியேறினான். கௌதம் அவன் பின்னே சென்றான் அதுவரை காயத்ரியின் கண்களை விட்டு விடுதலை அடையத் துடித்துக் கொண்டிருந்த கண்ணீர் வெளியேறியது.

வெருட்டெனச் சென்று உடைமாற்றி வந்தாள்.

தோழிகள் இருவரும் மனவருத்தம் மொத்தத்தையும் தாரிக்காவின் மேல் வஞ்சமாய் மாற்றிக்கொண்டனர்.

லக்ஷ்மியை அவள் வீட்டில் விட்டுவிட்டு தாரிக்காவை ட்ராப் செய்யச் செல்லும் பொழுது காரில்

தாரிக்கா “ டார்லிங் ! அந்த சாரி எனக்கு நெஜம்மா நல்லா இருந்ததா? “ மயக்கும் குரலில் கேட்க.

“ எஸ் டார்லிங் ! அதுல என்ன சந்தேகம் ? நான் அமெரிக்காவில் இருக்கிற நாசாவுக்கு போக ரொம்ப ஆசைப் பட்டேன் ! ஆனால் இன்றைக்கு என் ஆசை நிறைவேறிடுத்து “ வண்டி ஒட்டியபடியே வசீகரமாய் புன்னகைத்தான் சிவா.

“ நான் கேட்டதுக்கு நாசாவுக்கும் என்ன சம்பந்தம் ? “ தாரிக்கா குழம்ப.

“வானமே கீழே இரங்கி வந்தது போல இருந்தது…அந்த புடவை ! “ ஏகத்திற்கும் சிவா பாராட்ட.

‘ நீ நாசா போகிறதும் நாசமா போகிறதும் உன் கையில் இல்லடா மச்சி ! என் தங்கை கையில் இருக்கிறது ‘ மனதில் சொல்லி உரக்கச் சிரித்துவிட்டான் கௌதம்.

“என்னடா சிரிக்கிற? “ சிவா ரியர்வியூ கண்ணாடியில் கௌதமின் முகம் பார்க்க.

“நத்திங் ஒன்றும் இல்லை ! “ கௌதம் மொபைலை நோண்ட

தாரிகாவோ கௌதமின் சிரிப்பில் ஏகத்திற்கும் கடுப்பானாள் ‘ இவன் முதலில் துரத்தவேண்டும் ஓவராதான் போறான் என்னமோ மனசில் நெனச்சுத்தான் சிரிக்கிறான் திமிறு பிடித்தவன் ! அப்புறம் இந்த காயத்ரியை இங்கேயே விட்டு வைக்கிறது எனக்கு நல்லது இல்லை ! ‘ மனதினுள் கருவி கொண்டாள்.

காயத்ரியோ இந்த கூத்தை எல்லாம் பார்க்க சகியாமல் உதயாவின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

தாரிக்கா வீட்டில் இறங்கியதும் சிவாவிடம் “என்னைப் புடவையில் பார்த்த பொழுது என்ன நேனைசீங்க ? “

காயத்ரியைப் புடவையில் பார்த்ததை எண்ணி எண்ணி மனதில் குதூகலித்துக் கொண்டிருந்தவன் எதோ நினைவில் “ புடவையில் பார்த்த நொடி கையில் தாலி இருந்தால் கட்டி இருப்பேன்! “ சொல்லி கண்களை மூடி புன்னகைத்தான்.

அவன் சொன்ன பதிலில் தாரிக்காவின் மனம் துள்ளிக் குதிக்க. புன்னகைத்தபடியே வீட்டிற்குச் சென்றாள்.

காயத்ரியின் மனதோ சுக்குநூறாய் உடைந்தது.

சொல்லிவிட்டபின்னே தான் தாரிக்காவின் கேள்வியை உணர்தான் சிவா “ ஷீட் ! “ தலையில் அடித்துக்கொண்டான்.

கண்ணாடியில் பின் இருக்கையை நோட்டம் விட்டான் . காயத்ரி உதயாவின் தோளைக் கண்ணீரால் நினைத்துக்கொண்டிருக்க கௌதம் ரௌத்திரமாய் அவனை முறைத்துக்கொண்டிருந்தான்.

மெல்லக் காரை எடுத்த சிவா “ காயு ! “ வாய் திறக்க

“ அவரை பேசவேண்டாம் சொல்லுங்கள் அண்ணா ! “ காயத்ரி கௌதமை முறைக்க.

“ சாரி கண்ணா புரிஞ்சுக்கோ! நான் அவள் கேட்ட பொழுது என்ன நினைச்சேன்னா..” சிவா முடிக்கும் முன்பே

“வாய மூடிக்கிட்டு இருங்க ! ஒரு வார்த்தை பேசினே அப்புறம் என்ன சொல்லிடுவேன்னு தெரியாது ! “ காயத்ரி அதுநாள் வரை இருந்த இறுக்கம் சோகம் மறந்து கத்தினாள்.

சிவா மௌனமானான்.” சரி வீட்டுக்கு போயி பேசிக்கலாம்.”

வீட்டில் லிபிட்ல்

“ காயு ! தயவுசெய்து! “ சிவா வாயெடுக்க

“ மூடுனு சொல்றேன்லடா அறிவில்லை ? “ காயத்ரி சிலிர்த்துக்கொண்டு முழுமூச்சாய் இறங்கி விட்டாள்.

காயத்ரி சிவாவை ஒருவழி செய்யப் போகிறாள் என்று புரிந்துக் கொண்ட கௌதம் உதயா இருவரும் குஷியாய் தயாரானார்கள் வேடிக்கை பார்க்க.

“ என்ன மூடு ? டா? என்ன இது ? ஏய் ! “ சிவா பொங்க.

அவனைச் சிறிதும் மதியாமல் சென்றுவிட்டாள் காயத்ரி

“பேசிகிட்டு இருக்கேன்ல! “ சிவா அவள் பின்னே கத்த

“ பேசிட்டு கெட ! “ சொல்லிடவிட்டு தன் அறைக்குள் புகுந்தவள் இரவு உடைமாற்றி கீழே சென்று விட்டாள்.

“ என்ன கெடவா ? நான் ஒருத்தன் பேசிகிட்டு இருக்கேன் ரொம்ப தான் ! ஓவரா போறாடா ! “ சிவா கௌதமிடம் எகிறிக்கொண்டிருந்தான்.

கௌதமோ “நீ செய்ததுக்கு இந்த மரியாதையோ ஜாஸ்தி மச்சான்! “

“ சாப்பிடவாங்க! “ உதய சொல்லிச் செல்ல.

“ ஒரு மண்ணும் வேண்டாம் ! “ சிலிர்த்துக்கொண்டான் சிவா.

“வாடா சும்மா ! “ நண்பனை விடாப் பிடியாய் இழுத்துச் சென்றான் கௌதம்.

கௌதமிற்கும் உதயாவிற்கு பரிமாறி தானும் பரிமாறிக்கொண்டு அமர்ந்தாள் காயத்ரி

“ காயு எனக்கு? “ சிவா கேட்க

“ கண்டவளை நீ கொஞ்ச ! தாலி கட்ட! நான் உன்னை ஊட்டி வளர்த்து விடணுமா என்ன ? “ காயத்ரி அவனை முறைக்க

“ ஹே சொல்றேன்ல நான் நடிச்சேன்! எதோ ஞபாகத்துல..”

“ ஸ்டாப் இட் சிவா! “ காயத்ரி எழுந்து விட்டாள்

“ ஹே என்னடி உனக்குப் பிரச்சனை ? சொல்றேன்ல ! “ சிவாவும் சிலிர்த்துக்கொண்டாடு காயத்ரியின் தட்டை தன்னிடம் இழுத்துக்கொண்டான்.

“ காயு! “ உதயா வாயெடுக்க

“ நீ உட்கார் . பேசாமல் வேடிக்கை பார்ப்போம் ! “ தங்கையை அடக்கினான் கௌதம்.

“ டேய் அவ்ளோ நல்லவனா டா நீ? உனக்குத் தெரியுமே ! வாட்ஸாப்ப் பண்ணேனே ! “ சிவா கௌதமை கேட்க

“ உங்க பொய்க்கு அவரை ஏன் கூட்டு சேக்குறீங்க? அவரே வெட்டிபீசு “ தட்டை தன்னிடம் இழுத்துக்கொண்டாள்.

கௌதம் சிலிர்த்துக்கொண்டு .“ வெட்டி பீசா? நானா? “

“ஆமா ! பிரென்ட் அப்படித் திகட்டத் திகட்டக் கடலை போடுவானாம் நீங்க மொபைலே கெதியென்று கேட்பீங்களாம் !” அவனைப் பிடித்துக்கொண்டாள் காயத்ரி.

“ காயுமா நான் மொபைலில்! “ கௌதம் துவங்க

“ஒரு ஆணியும்…” வாயில் கையைவைத்துக் காட்டி சும்மா இருக்கும்படி அவனை முறைத்த காயத்ரி.

“சொல்லுங்கள் சிவா சார்! என்ன திட்டம் சொன்னீங்க? என்ன பண்ணிவச்சுருக்கீங்க? “ அவனை முறைத்தபடியே தட்டை தள்ளிவிட்டு டைனிங் மேசை மேல் ஏறி உட்கார்ந்தாள்.

“ஆளுமட்டும் பனை மரம் மாதிரி வளர்ந்தால் போதுமா ? மூளை ஒரு கடுகளவுக்காவது வேண்டாமா டா ? “ அவனை முடிந்த மட்டும் முறைத்தாள்.

” ஹலோ ! என்னது டா வா ? ஒரு டார்லிங் சொன்னதுக்கா இப்படி என் மரியாதை காற்றில் பறக்கிறது ? சரி இல்லையே இப்போதே என் நிலைமை இப்படியா ? நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீ இப்படிதான் இருப்பியா காயு? ” என்று சிவா கேட்க.

“நம்ம கல்யாணமா? அப்படி ஒன்று நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் ! “

“சொல்பேச்சை கேட்கவே மாட்டியா நீ ? ” சிவா பொறுமை இழந்தான்.

“மாட்டேன் ! ” காயத்ரி அவனை நெருங்கி முறைக்க

“அப்போ சொல்லு எனக்கு உன்னை பிடிக்கலை ! நான் உன்னை லவ் பண்ணலை ! நான் உன்னைக் கல்யாணம் செய்துக்க மாட்டேன் ! சொல்லு என் கண்ணைப் பார்த்து சொல்லு ! நான் இனி உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்! “ சிவா தீர்க்கமாகக் கேட்க

“டேய் என்னடா நீ அவதான சின்ன பெண். எதோ.. “ கௌதம் வாயெடுக்க. அவனைக் கைகாட்டி தடுத்தான் சிவா.

“ என்னால் முடியாதென்று நினைக்கிறீர்களா “ சிலிர்த்தெழுந்த காயத்ரி. சிவாவின் சட்டை காலரைப் பற்றி இழுத்து.

“எனக்கு உன்னை..” அவள் சொல்லச் சிவாவின் இதயம் துடிப்பதை ஒருகணம் மறந்தது .

“எனக்கு உங்களை மட்டும்தான் ரொம்ப பிடிச்சிருக்கு ! “ சொன்னவள் முகம் மென்மையானது

“நான் உங்களை லவ் பண்றேன் ! ” கண்கள் கொஞ்சம் கலங்கியது நால்வருக்கும்

“ஆனால் கல்யாணம்? ” குறும்பு புன்னகையுடன் சொன்னவள் “அது உங்கள் கையில்தான் இருக்கு! “ முடித்தாள் .

சிவா அவளை அணைத்துக்கொண்டான் . கௌதமோ ” அட்றா அட்றா ! சூப்பர் ! ” கைதட்ட

உதயவோ ” சாச்சுப்புட்டா டா அண்ணா ! ” மனமார சிரித்தாள்.

காயத்ரி புன்னகைத்தபடியே “ யாருக்கு ஷோ பார்க்க வேண்டாமோ கண்ணை மூடிக்கோங்க! “ என்றவள் நொடியும் தாமதிக்காமல் காதல் மொத்தத்தையும் திரட்டி ஆழ்ந்த முத்தமாய் மாற்றி அவனுக்கு தெரியப்படுத்த

“ ஏய்ய்ய் ” உதயா கண்கள் மூடிக்கொள்ள கௌதமோ சிரித்துக்கொண்டே கண்களைத் திருப்பிக் கொண்டான்.

எதிர்பாரா முத்த தாக்குதலில் திணறியது சிவாதான்! கண்களை மூடிக்கொண்டவனின் மூளை வேலை நிறுத்தம் செய்தது ! அவள் விலகிய பின்பும் முகமெங்கும் ரத்த சிவப்பேற மிகவும் அமைதியாய் உணர்ந்தவன் அவளின் குரலில்தான் சுயநினைவுக்கு வந்தான்

முடிந்த வரை வெட்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவள் “ இப்போது போங்க! எங்க வேண்டுமோ போங்க! இனி எனக்கு எந்த கவலையும் இல்லை ! “ என்றவள் ஏதும் நடக்காததுபோல் சிவாவிற்கு உணவைப் பரிமாற.

மெல்லிய புன்னகையுடன் அவன் உன்ன துவங்க.

“ அநியாயம்பண்றே காயு நீ! அண்ணன் ஒருத்தன் இங்க குத்துக்கல்லு மாதிரி இருக்கேன் ! கொஞ்சமான மரியாதையை இருக்கா? “ செல்லமாக அவளைக் கடிந்து கொண்டவன்.

சிவாவைப் பார்த்து “ டேய் ! நீ என்னடா இப்படி மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி ஆயிட்டே ! ஒரேமுத்தத்திற்கே சரெண்டாரா ? இருந்தாலும் இதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன் ! “ போலியாய் அலுத்துக்கொண்டான்.

உதயாவோ வெட்கப்பட்டு தன் அறைக்கு ஓடிவிட்டாள்.

“என்ன கொடுமைடா இது ? கிஸ் அடிச்சவங்க ஏதுமே நடக்காதது போல இருக்கீங்க! அவ ஏன்டா ஓடுறா ? இந்த குடும்பமே லூசு போல இருக்கு ! “ கௌதம் சிரிக்க.

“நீயும் இந்த குடும்பம் தான் டா ! “ சிவா அழகாய் முகம் சிவக்கச் சிரிக்க.

‘ஆண்களின் வெட்கம் தான் எத்தனை அழகு!’ உணவை மறந்து தன்னவனை ரசித்துக் கொண்டிருந்தாள் காயத்ரி

மடியில் உதயா தன் அறையில்

“ஸ்ரீவத்ஸா ! தூங்கிட்டியா ? “

“இல்லை ! என்ன இந்நேரத்துக்கு போன்? எல்லாம் ஓகே தானே?”

“இல்லை ! ஓகே இல்லை ..”

அவன் பதட்டத்துடன் “ என்ன மா? என்ன ஆச்சு? பயமுடுத்ததே டி ! “

தனக்குள் சிரித்துக்கொண்டவள் “ ஒரு மு,,மு..” முத்தம் வேண்டி போன் செய்த பொழுது இருந்த தைரியம் காற்றில் பறக்க வார்த்தைகள் அந்தரத்தில் நின்றது

“என்ன? என்ன? சொல்லுடி! “

“ஒரு முத்..”

மறுமுனையில் பலத்த சிரிப்பு சத்தம் கேட்க உதயா குங்குமமாய் சிவந்தாள்

“இதற்கா? நீ எப்போ என் கிட்ட இப்படி ரொமான்டிக்கா பேசுவேன்னு துடிச்சுட்டுஇருந்தேன் தெரியுமா ?..ஒன்று என்னடி செல்லம் ? இந்தா …இச்இச்….” கணக்கில்லாமல் வழங்கினான் ஸ்ரீவத்சன் .

கௌதம் நிலையோ மோசமாய்…சிவா காயத்ரி அடித்த இந்த லூட்டியில் லக்ஷ்மியின் நினைவு வர

பைக்கை கொண்டு பறந்துவிட்டான். புயலென அவள் வீட்டை அடைந்தவன் காலிங் பெல்லயும் அதே வேகத்தில் அடித்தான்

“ செல்லமே வா வா..இனி இந்த கௌதம் ரெமோ மோட் ! “ முனுமுனுகொண்டான்.

கனவில் மிதந்தவன் லக்ஷ்மியை முத்தம் இடுவது போல் கற்பனை செய்து உதட்டைக் குவித்து தயாராக.. அப்படியே உறைந்தான்

கதவைத் திறந்த லக்ஷ்மியின் அம்மாவோ வெட்கத்தில் “ வாங்க மாப்பிள்ளை..” சிரித்துக்கொண்டே நிற்காமல் ஓட

“என்னடி இது 24 வருஷத்துக்கு அப்புறம் புதுசா வெட்க படுறே ? “ குழப்பமாய் வந்த லக்ஷ்மியின் தந்தை கௌதமின் வழியும் முகத்தைக் கண்டு புரிந்து கொண்டார்.

“மாமா அது லட்சுமி..” தலையைக் கோதிக்கொண்டு அத்தனை அழகாய் வெட்கப்பட்டான் கௌதம்.

“லட்சுமி! “ குரல் கொடுத்த அவள் அப்பா.

மாடிக்குப் போங்க மாப்பிள்ளை “ லட்சுமி மாப்பிள்ளை மேலே வரார் பார்! “

“நீங்கப் போங்க ..” சிரித்துக்கொண்டே நாகரீகமாய் சென்றமர்ந்தார் கௌதமின் வருங்கால மாமனார்.

இரண்டு இரண்டு படிகளைத் தாவி ஏறிய கௌதம் அங்கே எதிரே தன் அறையை விட்டு வெளியே வந்த லக்ஷ்மியைப் பார்த்து..அசடு வழிய

“ கொஞ்சம் முன்னாடி தான் ட்ராப் பின்னிட்டு போனீங்க ? என்ன கௌதம் ? ஏதான வேணுமா ? “ குழப்பமாய் கேட்க

ஏதும் பேசாமல் அவளை நெருங்கியவன் கன்னங்களை அவள் புறம் திருப்பி ஒற்றை விரலால் கன்னங்களைச் சுட்டிக் காட்ட.

“என்னங்க? பல்லு வலிகிதா ? “ லட்சுமி பாவமாய் கேட்க

ஏகத்துக்கும் கடுப்பானவன் “ பல்லு வலித்தால் டாக்டர்கிட்ட போகாமல் உன்னை ஏன் பார்க்க வறேனாம்?

“அப்ப என்ன கன்னத்தில் ? “ அவனை நெருங்கி அவன் கணங்களை ஆராய

“என்னடி தேடுறே? அதென்ன கீழடியா? இப்படி ஆராய்ச்சி செய்ய ? “ புருவம் சுருக்கி முணுமுணுக்க

“பின்ன என்னதான் கன்னத்தில்? “ கடுப்பானாள் லட்சுமி

“உம்மா.. ! “ கௌதம் மறுபடி கன்னங்களை சுட்டிக்காட்ட

“என்ன?????? “ அவள் முட்டைக் கண்கள் வெளியே விழுந்து விடும் போல் அவள் முழிக்க.

“ மாப்பிள்ளை கிஸ் கேட்கிறார் மக்கு! “ வெட்கப்பட்டுக்கொண்டே வந்த லக்ஷ்மியின் தாயார் கௌதமிற்கு பழசாரை மேஜையில் வைத்துவிட்டு கீழே விரைந்தார்.

“ மாமியார் ரெகமெண்டஷன்ல தான் கிஸ் கிடைக்கும் போல இருக்கிறதே ! “ கௌதம் அவளைக் குறும்பாய் பார்க்க

“நோ! “ ஓடிவிட்டாள் அவள்.பின்னே ஓடியவன் ஒன்றுக்கும் மேலே வாங்கிக்கொண்டு மிதந்த படியே வீட்டிற்குத் திரும்பினான்.

அங்கே சிவாவும் காயத்ரியும் பால்கனி ஊஞ்சலில்

“ நீ ரொம்ப ஸ்பீடா இருக்கே டா காயு! எனக்கு இவளோ ஸ்பீட் ஆகாது ! “ சிவா போலியாய் அலுத்துக்கொள்ள

“ மன்னிச்சுடுங்க சிவா! என்ன ஆச்சுன்னு தெரியலை ! “

“ ஹேய் சீ! நான் சும்மா கிண்டலுக்கு கேக்கறேன் ! நீவேற ! “

“நான் ஒன்று கேட்கவா ? மனசு முழுக்க காதலோடு இவளோ வருஷமா எப்படி என்னிடம் பேசக் கூட இல்லாமல் ? “ அவன் தோளில் சாய்ந்தபடி அவள் கேட்க

அவளின் நாடிபிடித்து உயர்த்தியவன் தன்னவளை காதலுடன் பார்த்து

“ நீ சின்ன பெண் அப்போதும் இப்போதும் ! ஆனால் நான் உன்னைமாதிரி பொறுமை இழக்க முடியாதுல்ல ! ஒன்று உன் படிப்பு கெடக்கூடாது . இரண்டு நான் சொந்தமா எனக்கென்று பிசினெஸ்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்க நெனச்சேன்! மூன்று நீ என் மனைவி ஆகும் வரை உன்னை கண்ணியமா மரியாதையா நடத்த நெனச்சேன் அதான் உன்னை உடலளவில் நெருங்காமல் பழக நெனச்சேன் ”

அவளின் நெற்றியில் ஆசையாய் மென்மையாய் முத்தமிட்டு ” ஆனால் மேடம் இன்னிக்கி அதற்கும் வேற்று வச்சுடீங்க ! “ சொல்லிக் கண்சிமிட்ட

நாக்கை கடித்துக்கொண்டாள் அவள் “சாரி இனி அப்படி நடந்துக்க மாட்டேன்! இனி தொட்டுப் பழக மாட்டேன்! “ விலகி அமர்ந்து கொள்ள

“ஹே அதெல்லாம் முமு இப்போது முபி ! “ அவன் அவளை நெருங்கி அமர

“முமு முபி? “ அவள் குழம்ப

“ முத்தத்திற்கு முன் முத்தத்திற்குப் பின்!” கண்ணடித்தவன் அவளை நோக்கிக் குனிய..” அஸ்கு புஸ்கு! “ அவனை தள்ளிவிட்டு

“போய் தூங்குங்கள் பாஸ் ! குட்நயிட்! “ அவள் ஓடிவிட

“ இனி எங்க நான் தூங்க..வெஜிடேரியன் காதல் ஒரு குத்தமாய்யா? ” நிலவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டான் சிவா.

மூன்று ஜோடிகளும் காதலில் திளைத்தபடி உறக்கம் தொலைத்து இரவை ரசித்தனர்

error: Content is protected !!