NN 18

மறுநாள் சனிக்கிழமை காலை கௌதம், லட்சுமி, உதயா, ஸ்ரீவட்சன் ஷாப்பிங் செய்து விட்டு சினிமா பார்த்துவிட்டு வருவதாய் சென்றனர். அவர்கள் எவ்வளவு அழைத்தும் காயத்ரி செல்லவில்லை. “நீங்க ஜோடியா டேட்டிங் போறீங்க நான் எதுக்கு நடுவுல? என்ஜாய்“ என்று மறுத்துவிட்டாள்.

சிவாவோ காலையில் வெளியே சென்றவன் தான்.

மாலை கௌதம் காயத்ரிக்கு வாட்ஸப்பில், “சிவா வர லேட் ஆகும், சார் மைதாமாவு கூட டேட்டிங் போயிருக்கான், அதுவும் டிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்க்கோ . நாங்க வர லேட் ஆகும் நீ சாப்பிட்டு தூங்கு கண்ணா. மிஸ் யூ” என்று டிஸ்கோ வை அழுத்தி சொல்லி பற்றவைத்து விட,

காயத்ரியோ ” போகட்டுமே டிஸ்க்கோ தானே போகட்டும்! நாளைக்கி அவன் காலு நிற்காமல் டிஸ்ஸ்ஸ்ஸ்க்கோ ஆடும் பாருங்க” என்று கருவி கொள்ள.

“பதவச்சுட்டியே பரட்டை” என்று உதயா சொல்ல.

கௌதமோ, “நானே மால்க்கு தான் வந்திருக்கேன் அவனுக்கு டிஸ்கோ கேட்குதா? அதுவும் மைதாமாவோட?“ என்று போலியாய் கோவித்துக்கொண்டான்.

அங்கு டிஸ்கோவில்,

“டார்லிங்! உங்களை நான் முன்னாடியே பார்த்திருந்தால் நல்ல இருந்துருக்கும்“ தாரிகா கொஞ்சலாய்.

“அதான் இப்போ பார்த்தாச்சே“ என்றான் சிவா அலட்டிக்கொள்ளாமல்.

“இல்லை அப்படி பார்த்திருந்தால்…” தாரிக்கா இழுக்க,

“இப்போ என்ன கொறஞ்சுபோச்சு?“ சிவா கடுகடுக்க.

“விடுங்க டார்லிங், கம் லெட்ஸ் டிரிங்க்“ அவனை இழுத்தபடி குடிக்க அழைக்க,

“சாரி தாரிக்கா, எனக்கு அந்த பழக்கம் இல்லை, வேணும்னா நீ போய் குடி“ சிவா சொல்லிக்கொண்டிருக்க அவன் மொபைலில் கௌதமின் குறுஞ்செய்தி கண்டு, “நான் கிளம்பனும் காயத்ரி வீட்டில் தனியா இருக்கா“. என்றான்.

“ஏன் கௌதம் உதயா இல்லையா நீங்க தான் போகணுமா?“

“இல்லை அவங்க டேட்டிங் போயிருக்காங்க“

“அண்ணனும் தங்கையும் சேர்ந்து டேட்டிங்கா“ ஏளனமாக நகைத்தாள்.

“நான்சென்ஸ் என்ன இது பேச்சு? உன்னை மாதிரி ஆளுங்களுக்குத்தான் இந்த குடி கூத்தாடும் வேலையெல்லாம் டேட்டிங். எங்களை பொறுத்தவரை சினிமா, பார்க், மால் இதுதான் டேட்டிங். இதுல அண்ணன் தங்கை அவங்க கல்யாணம் செய்துக்க போறவங்களோட போறதுல என்ன இருக்கு?“ சொன்னவனின் கண்களில் வெறுப்பு.

அதனை சிறிதும் பொருட்படுத்தாத தாரிக்கா “
அங்கே எல்லாம் இப்படி கட்டி பிடிக்க முடியுமா? கிஸ் பண்ண முடியுமா? அப்புறம் என்ன காதல்? தொடாமல் காதலா?“ ஏளனமாய் சிரித்தாள்.

அருவருப்பே சிவாவின் முகமெங்கும் ஆக்கிரமிக்க “வாட்? பொது இடங்களில் கட்டி பிடிப்பது முத்தம் கொடுப்பது இதெல்லாம் காதலா?“

தாரிக்கா “எல்லாம் வேஷம், எவனுக்கு தான் காதலியை தொட ஆசை இருக்காது? உனக்கு என்னை பார்த்தால் எதுவும் தோணலையா?“ வெட்கமில்லாமல் அவனை சாட,

சிவா முகமெங்கும் சிவப்பேற “காதலிக்கும் பெண்ணின் உடல்தான் காதலுக்கு தேவையா? அப்போ அந்த பொண்ணு காதலியா இல்ல வேறயா? அப்படி இருக்கும் பெண்கள் கூட காசுக்காக வறுமைக்காக அப்படி இருக்காங்க அனால் பொய்யாய் காதலென்ற பெயரில் தொட போனால் அவங்களும் துப்பிட்டுதான் போவாங்க!“

“அப்போ காதலியை தொட்டால் அவன் கெட்டவனா? காதலனை தொட்டா அவள் கெட்டவளா? இதோ நான் உங்களை கட்டி பிடிக்க போறேன் நான் கெட்டவளா?“ தாரிக்கா அவனை நெருங்கி அணைக்க முற்பட,

இரண்டடி பின்னாடி நகர்ந்தவன் “ஆமா, சம்மதம் இல்லாத ஆணையோ பெண்ணையோ தொட்டால் தப்புதான். மனசு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது“ .

அவன் உறுதி அவளை அச்சுறுத்தியது. உடலால் அவனை பலவீனபடுத்த நினைத்தாள் அவள். ஆனால் அவனோ நெருப்பாய் தகிக்கிறான்.

“ஏன் அப்போ என்னை கட்டி பிடிச்சா உங்கள் கற்பு கெட்டுப்போகுமோ?“

“உன்னை மனதளவில் நான் நெருங்கினால் என் கற்பு கெடும் தான்! மனசு தான் கற்பு உடல் இல்லை. உனக்கு முதல்ல கற்புன்னாலே என்னனு தெரியலை“ சிவா நொடியில் அவளை ஏளனம் செய்ய,

“என்ன புது விளக்கமா? நல்ல கதை விடறீங்க, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தால் எனக்கு எதுவும் தெரியாதா? நான் சொல்றேன் கற்புன்னா…****“பொது இடம் என்றும் பாராமல் அவனிற்கு அவள் விளக்கம் சொல்ல,

“ஸ்டாப் இட், நீ சொல்றது உடல் ரீதியான விஷயம். நான் சொல்றது மனசு. ஒரு பெண்ணின் பலவீனத்தை பயன்படுத்தி ஒரு ஆண் அவள் உடலை தொட்டால் சீரழித்தால் அங்கே கெடுவது ஆணின் கற்பு! மனதளவில் அவள் உறுதி கொண்டிருந்தால் பெண் பரிசுத்தமானவளே!“.

“அப்படியா எல்லாரும் சொல்றாங்க? கற்பழிஞ்சதா பெண்ணைத்தான் சொல்லுது உங்க சமுதாயம்!“ அவள் விடுவதாக இல்லை.

“சமுதாயம் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுமா? மனதளவில் சுத்தமான பெண் என்றுமே புனிதமானவள்! கற்புடையவள்!“ சிவா தீர்மானமாய் முடித்தான் .

அவன் உறுதியில் அவன் கற்பிற்கு சொல்லும் விளக்கத்தில் திணறினாள். ‘கண்டபடி உளறுறான்! இவன் ஒரு வேஸ்ட் பீஸ்!‘ மனதில் கடிந்து கொண்டாள்.

தன் ஏமாற்றத்தை மறைத்து சிரித்தாள் அவள். “நீங்க பயந்தான்குளி சிவா! நான் சும்மா விளையாடினேன்! அதுக்குள்ள ஏன் இவ்ளோ கோவம்?“ என்று குழைய,

“ஹ்ம்ம் விளையாட்டும் லிமிட்ல இருக்கட்டும் தாரிக்கா. நீ ரொம்ப கெஞ்சி கேட்டேன்னு நான் வந்தேன் இல்லைனா இந்த டிஸ்கோ பார் எல்லாம் எனக்கு அல்ர்ஜி“ சிவா கோவத்தை அடக்கி மென்மையாக பேச கஷ்டப்பட்டான்.

“நீங்க எவ்ளோ பணக்கார வீட்டு பையன். குடிக்கமாட்டேன், டான்ஸ் ஆடமாட்டேன், பெண்ணை தொடமாட்டேன்னு, நீங்க என்ன முற்றும் துறந்த முனிவரா?“ சிரித்தபடியே அவனை ஆழம் பார்த்தாள்.

“குடிக்கறதும் டிஸ்கோ ஆடுறதும் பணக்காரத்துவமா? எனக்கு தெரியாதே? பெண்ணை தொடமாட்டேன்னு நான் சொல்லவே இல்லையே. எனக்கு மனைவி ஆகும் பெண்ணை உரிமையோட தொடுவேன். என் வீட்டின் நான்கு சுவரத்துக்குள்! இப்படி பொது இடத்தில் பிறர் பார்க்க அவளை கட்சி பொருள் ஆக்க மாட்டேன்“ அவன் சொன்னபடி பழச்சாறை பருக .

“அப்போ குடிக்கிறவன் எல்லாரும் கெட்டவன். டிஸ்கோ ஆடுறவங்க எல்லாரும் கெட்டவங்க? நான் அமெரிக்காவில் குடிப்பேன் ஒரு ஒரு வீக்கெண்டும் டிஸ்கோ பப் போவேன் நான் கெட்டவளா?“ தாரிகா நேரடியாய் தாக்க,

“அலுப்பு தீர சில பேர் குடிக்கிறாங்க! கவலை மறக்க சிலபேர் குடிக்கிறாங்க! அதெல்லாம் பரவால்லை ஒரு லிமிட்டில் இருந்தால்! ஆனா பொழுது போகாமல் குடிச்சா? குடிச்சு காரை ஒட்டி அச்சிடேன்ட் செய்தா? போதைல சம்மதம் இல்லாமல் பெண்ணை சீரழிச்சா? அதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம். வீட்டுக்குள்ள குடிக்கலாம். யாரையும் தும்புருத்தம குடிக்கலாம். அனா எதற்கும் ஒரு எல்லை கொடு வேணும்!“

ஆழ்ந்த பெருமூச்சை விட்டாள் தாரிக்கா. ‘சரியான அசமஞ்சம்!‘ மனதில் கடுகாடுத்தாள்.

ஒரு மிடறு பழச்சாறு குடித்த சிவா தொடர்ந்தான் “டிஸ்கோ ஆடலாம் ஆனா இப்படி தொட்டு உரசி ஆபாசமா அடக்குடாது. ஒரிஜினல் டிஸ்கோ என்னனு உனக்கு தெரியுமா? போ போய் கூகுளை கேளு! உனக்கு கிளாஸ் எடுக்க எனக்கு நேரம் இல்லை நான் கிளம்புறேன் காயத்ரி தனியா இருப்பா“ எழுந்தவனை வழிமறித்தாள்.

“என்னை டிராப் செய்துட்டு போங்க“ வம்படியாய் அவனுடன் காரில் சென்றாள்.

சிவா வீட்டை அடையும் நேரம் காயத்ரி ஹாலிலேயே உறங்கி இருந்தாள்.

“அட குட்டிமா இங்கயே தூங்கிட்டியா? சாரி பேபி அந்த மைதாமாவு மூட கெடுத்துட்டா, நாளைக்கு பூரா உன்கூடவே இருப்பேன்“
தூங்கி கொண்டிருந்த காதலியை கையில் ஏந்தியவன் பேசியபடியே அவள் அறைக்கு தூக்கிச்சென்றான்.

“அப்போ சரி மன்னிச்சு விடறேன்“ ஒற்றை கண்ணை திறந்து அவள் பதிலளித்து கண்களை மீண்டும் மூடி தூங்குவதுபோல் நடித்தாள்.

“குட்டி பிசாசு! எப்போடி முழிச்சே? தேவை இல்லாம தூக்கிகிட்டு போறேனே! அரிசி மூட்டை! கீழே இறங்கு“ அவன் செல்லமாக கடிந்து கொள்ள.

“அஸ்கு புஸ்கு பெட் வரை தூக்கிட்டு போங்க, நீங்க தூக்கும் பொழுதே தூக்கம் கலைந்து போச்சுபா“ புன்னகைத்தாள்.

“கொஞ்சம் வெயிட்டை குறை தினமும் உன்னை இப்படி தூக்கினா என் கை அவ்ளோதான் “ போலியாய் அலுத்தபடியே அவளை கட்டிலில் கிடத்தினான்.

“சரி நீ தூங்கு. எனக்கும் அசதியா இருக்கு. குட்நைட்“ மென்மையாய் அவள் நெற்றியில் முத்தமிட்டு தன் அறைக்கு திரும்பினான்.

மறுநாள்,

ஹாலில் நால்வரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது
“சண்டே ஆச்சே எங்கயாவது ஜாலியா போயிட்டு வருவோமா?” என்று அவளை சிவா ஆசையாய் கேட்க.

“ஒரு வாரம் ஒரு டேட்டிங் தான் போகணுமாம்!” என்று அவள் சொல்ல,

“யாரு சொன்னது?“ சிவா முறைக்க,

“ உங்களுக்கு தெரியாதா அஜ்கபூஜக் ஸ்வாமிகள் சொல்லிருக்கார்“

“என்னது? அஜக்புஜக் ஸ்வாமிகளா?“ சிவா முழிக்க,

“அண்ணா அவ உங்கள ஓட்டுறா, நீங்க என்ன இப்படி முழிக்கிறீங்க?“ உதயா விழுந்து விழுந்து சிரிக்க.

“நான் ஒன்னும் நம்பலையே“ அசடு வழிந்தவன் குப்புற விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற மாதிரி சமாளிக்க.

கிளுக்கென்று சிரித்துக்கொண்ட காயத்ரி கௌதமை நோக்கி,

“கௌதமண்ணா இன்னிக்கி லட்சுமி அப்பா பேச கூப்பிட்டாருல மறந்துடாதீங்க உங்க பிரெண்ட கூட்டிகிட்டு போயிட்டு வாங்கோ, நானும் உதயாவும் அவ மடிசார் தைக்க கொடுக்க போகணும்” என்று சொல்ல,

“ஆமா ராவுகாலம் முடிஞ்சு கிளம்பறோம். ஆமா அதென்ன மடிசார் தைக்கணுமா? ரவிக்கை தானே தைப்பாங்க?” என்று கௌதம் கேட்க,

“வீட்டுல பெரியவங்க இருந்த மடிசார் கட்டி விடுவாங்க, கல்யாணத்துல அவசரமா யூடியூப் பாத்து கட்டி ரிஸ்க் எடுக்க முடியாது அதான் மடிசார் ரெடிமேடா தைச்சு கொடுப்பான்னு கேள்வி பட்டு தைக்கலாம்னு” என்று காயத்ரி சொல்ல.

” அப்போ நம்ம கல்யாணத்துக்கும் உனக்கு மடிசார் தைச்சுக்கலாம்” என்று சிவா உற்சாகமாக சொல்ல,

“அதை கல்யாணம் நடக்கும் பொழுது பாக்கலாம். நீங்க இப்படி டேட்டிங் போயிட்டு இருந்தா அப்புறம் நம்ம கல்யாணம் யோசிக்க வேண்டிய விஷயம்!” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள் .

‘தேவையா உனக்கு?’ என்பது போல் கௌதம் சிவாவை பார்க்க “வீரனோட வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் டா, நாம ரெடி ஆவோம் வா லட்சுமி வீட்டுக்கு போகணும்ல” என்று இருவரும் தயாராக சென்றனர்.

அன்று மாலை லட்சுமி வீட்டில் அவளது பெற்றோர்கள் கையோடு திருமண தேதி முடிவு செய்தனர். கௌதம், சிவா கோரிக்கையை ஏற்று அவர்கள் இருவரது திருமணமும் ஒரே நாளில் ஒரே மேடையில் நடத்த லட்சுமியின் தகப்பனாரும் ஒப்பு கொண்டனர்.

மடிசாரை தைக்க கொடுத்த பெண்கள் இருவரும் பராக்கு பார்த்தபடி கொஞ்சம் சுற்றித்திரிந்தனர்.

உதயா சில கைவினை பொருட்களை வாங்கிவிட்டு “காயு இதை பாரேன்“ திரும்ப அவளை அங்கே காணவில்லை!

சுற்றும்முற்றும் தேடியவள் அவளை எங்கும் காணாது அவளின் கைபேசிக்கு அழைக்க அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்க பதறியவள் கௌதமிற்கு போன் செய்தாள்.

“அண்ணா காயத்ரியை காணும்! மொபைல் ஆப் இருக்கு!“ அவள் பதற,

“என்னடி சொல்றே? அவ உன்கூடதானே வந்தா? எங்க போனா?“ கௌதம் கத்த உதயா அழ ஆரம்பித்தாள்.

சிவா விஷயம் அறிந்ததும் நிலைகொள்ளாது தவித்தான்.

“எனக்கு பயமா இருக்கு டா கௌதம், எங்கடா போயிருப்பா? ஒருவேளை அந்த தாரிகா? “

“டேய் அவ ஏண்டா காயத்ரி மேல கைவைக்க போறா?“ கௌதம் சமாதானம் சொன்னபடி அவனை அழைத்துக்கொண்டு புறப்பட,

“இல்லடா எனக்கென்னமோ மனசு சரி இல்லைடா“ சிவா தொலைபேசியில்
“கொஞ்சம் அந்த போனை ட்ரேஸ் செஞ்சு இப்போவே சொல்லுங்க ப்ளீஸ்“ தொண்டையில் வார்த்தைகள் திக்கிதிணற,

வெகுநேரம் தேடியும் அவள் கிடைக்காமல் உடலும் மனமும் சோர்ந்தது. சாலையில் அவளை தேடி தேடி கௌதமும் சிவாவும் ஆளுக்கொரு புறமாய் அலைய.

அவன் போன் அலறியது அதை எடுத்த சிவா “ ஹலோ!“

“ஹலோ ஹலோ! சிவா! நான் காயத்ரி! என்னை யாரோ தூக்கிட்டு வந்துட்டாங்க, பயமா இருக்கு சிவா!“ அவள் அழுகையும் பதட்டமுமாய் சொல்ல,

“காயு! பயப்படாதே! எங்க இருக்கே?“.

“தெரியல சிவா ஒரே இருட்டா இருக்கு. இங்க இருந்தவன் போன் கீழே விழுந்தது அதை எடுத்துதான் கால்.. .சிவா யாரோ வராங்க திரும்ப கூபிட்றேன்“.

“டேய் கௌதம் காயத்ரி காயத்ரி…“ திக்கி திணறி விஷயத்தை சொன்னான்.

“நீ கூல் ஆகு“ கௌதம் அவனை சாலை ஓரமாய் அமரவைத்தான்.

கால் செய்தபடி இங்கும் அங்கும் உலவியவன் சிலநிமிடங்கள் கழித்து “சிவா உனக்கு கால் வந்த நம்பர் எங்க இருக்குனு தெரிஞ்சுபோச்சு. நான் போலீஸ்க்கும் சொல்லிட்டேன் நாம கிளம்புவோம் வா“

அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர் வழியில் மறுபடி சிவா கைபேசி அலறியது. “சிவா, பயமா இருக்கு. இங்க வந்தவன் சரி இல்லை அவன் பார்வையே சரி இல்லை எனக்கு பயமா இருக்கு சிவா!“ அவள் பதற,

“காயு சொல்றத கேளு, நாங்க நீ இருக்குமிடத்தை கண்டுபிடிச்சுட்டோம் வந்துட்டே இருக்கோம். நீ பயப்படாதே! உன்னை நம்பு! உன் நகமும் பல்லுமே உன் ஆயுதம்! எதுக்கும் பயப்படாதே…” சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுது போன் அழைப்பு துண்டிக்க பட்டது.

கௌதம் காரை அசுர வேகத்தில் செலுத்தினான.

அங்கே,

“கிட்ட வராதே வந்தே என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது“ காயத்ரி தன்னை நெருங்கியவனை எச்சரிக்க,

ஆஜானுபாகுவாய் சிகெரெட் நாற்றம் அறையெங்கும் வீச முகமெங்கும் வெறுப்பும் வக்கிரமுமாய், “என்னடி செய்வே? தம்மாத்தூண்டு இருக்கே! என்னமோ உன் ஆளு கற்புக்கு விளக்கம் சொன்னானாம்! ***“ கேவலமான வார்த்தைகளை பேசிய படி அவன் நெருங்க,

“சீ கேவலமா இல்லை ? ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசணும்னு உன் வீட்டுல சொல்லி கொடுக்கல ? அறிவு கெட்ட…” அவள் சொல்லி முடிக்கும் முன்பு அந்த அரக்கன் அவளை அறைந்து தள்ளினான்.

அவளிடம் அத்துமீற அவன் முயல சிவாவின் வார்த்தைகள் அவள் காதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது, “உன் நகமும் பல்லுமே உன் ஆயுதம்“

கையில் பட்ட இடைகளிலெல்லாம் அவனை கீறி அவன் தோலை கிழித்தாள்… வெறிபிடித்தவள் போல் எட்டிய இடங்களில் எல்லாம் அவனை சர மாறியாக கடிக்க துவங்கினாள் . அவன் வலியில் துள்ளி விலகி,

“ உன்னை என்ன செய்றேன் பாரு ***“ வெறிபிடித்தவன் போல் அவளை மீண்டும் நெருங்க . இம்முறை அவளோ கையில் கிடைத்த கட்டை கல்லு என் எல்லாவற்றினாலும் அவனை தாக்கி ஓட துவங்கினாள் .

இங்க சுத்தி காடு உன்னால தப்பிக்க முடியாது…” ஏளனமாக சிரித்தபடி அவன் வெறிபிடித்த மிருகமாய் துரத்த.

அந்த அறைக் கதவை திறக்க ஒவ்வொரு சுற்றிலும் முயன்று முயன்று தோற்றாள்.

மனமும் உடலும் ஓய்ந்தது கண்கள் சொருகி மயங்கும் நிலையில் அவளிருக்க,

கதவை வெளியிலிருந்து இடிக்கும் ஒலி கேட்ட நொடி “சிவா… சிவா…” என்று அலறியபடி அவள் கதவருகில் செல்ல, இம்முறை அவளை பிடித்துவிட்ட அரக்கன் மறுபடி அத்து மீற முற்பட,

கதவு தாழ்ப்பாள் தெறித்து விழ, புயலென உள்ளே நுழைந்தனர் சிவாவும் கௌதமும் . சிவாவோ தன்னவள் அரை மயக்கத்தில் அலங்கோலமாய் கீழே கிடக்க வேட்டை மிருகம் போல் அவளை தாக்கி கொண்டிருந்தவனை கொலை வெறியுடன் எட்டி உதைத்தான். தன் சட்டையை கயற்றி அவளை மூடியவன் அந்த மனித மிருகத்தை கொன்றுவிடும் நோக்கோடு வெறித்தனமாய் தாக்க துவங்கினான்.

அதற்குள் மேலும் இருவர் அங்கே வர,

“இவனுங்களை கொன்னு வீசு டா“ அந்த அரக்கன் கட்டளை பிறப்பிக்க,

கௌதம் வந்த இருவரையும் வெறித்தனமாய் தாக்க ஆரம்பித்தான். இவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஒருவன் மயங்கி விழ மற்றொருவன் கத்தியால் கௌதமை தாக்க, அது அவன் கைகளையும் தோளையும் கிழித்து காயப்படுத்தியது.

இவர்கள் சண்டையின் நடுவே வந்த போலீஸ் கௌதமை தாக்கியவனை காலில் சுட்டு வீழ்த்த அந்த அரக்கனோ கீழே கிடந்த காயத்ரியை கொன்றாவது விட வேண்டும் என்ற நோக்கில் சிவாவை தள்ளிவிட்டு கத்தியுடன் அவளை நெருங்க போலீசாரால் வேறு வழி இன்றி சுடப்பட்டான்.

“நீங்க அவங்களை கூட்டிகிட்டு மருத்துவமனை கிளம்புங்க சார், கூட கான்ஸ்டபிள் இவரை அனுப்பி வைக்கிறேன். ரேப் அட்டெம்ப்ட் தான் எதுக்கும் நீங்க செக் பண்ணிக்கோங்க . கொஞ்சம் போர்மாலிட்டீஸ் இருக்கும் சார்“ என்ற ஆய்வாளர் மேலும் சில விவரங்களை வாங்கிக்கொண்டு அவர்களை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

தன்னவளை மடியில் கிடத்திக்கொண்ட சிவா கண்கலங்கியபடி அவளை மென்மையாக வருடி கொடுக்க கௌதம் காரை மருத்துவமனைக்கு செலுத்தினான் .

மருத்துவமனையில் கான்ஸ்டபிள் விவரங்களை கூற காயத்ரி அனுமதிக்க பட்டாள்.

கௌதமிற்கும் முதலுதவிகள் செய்யப்பட்டன.

சிவாவோ மனம் தாங்காமல் கர்ஜித்து கொண்டிருந்தான். “சே இவளை போய் தப்பான எண்ணத்தோட எப்படி சீ… அவன கொல்லாம விடமாட்டேன் டா“.

கௌதமோ, “அவனை கண்டிப்பா சும்மா விடமாட்டேன். ஆனா எனக்கு இதுல சந்தேகம் இருக்குடா! இது வெறும் ரேப் காக கடத்தின மாதிரி தெரியல அவன் ஏன் அவளை கொல்ல முயற்சிதான் யோசி அதுவும் போலீஸ் வந்தபிறகும!“.

கௌதம் சொன்னதில் இருந்த உண்மை சிவாவை யோசிக்க வைத்தது
“ஒருவேளை இதெல்லாம் …”

“சார் டாக்டர் கூப்பிட்றாங்க“ செவிலியர் அழைக்க நண்பர்கள் இருவரும் மருத்துவர் அறைக்கு விரைந்தனர்.

“டாக்டர், காயத்ரி எப்படி இருக்கா? ஒண்ணும் ஆபத்து இல்லையே? அவ ஏன் கண்ணை திறக்க மாட்டேங்குறா?“ சிவா ஓயாமல் கேள்விகளை பதட்டத்துடன் அடுக்க.

“நீங்க?“ டாக்டர் அவனை ஆராய,

“நான் சிவா அவளை கல்யாணம் செயதுக்க போறவன் மேடம்“ சிவா கண்கலங்க.

“அப்போ நீங்க?“ கௌதமை பார்த்து கேட்க.

“அவ அண்ணன் மேடம் கௌதம் என் பெரு. காயுக்கு ஒண்ணுமில்லயே? உயிருக்கு ஆபத்து இல்லையே?“ கௌதமும் பதற்றம் குறையாமல் கேட்க,

“ரேப் அட்டெம்ப்ட் அதுக்கான காயங்கள் இருக்கு. வீக்கா இருக்காங்க… மத்தபடி ரேப் நடக்கல மேலும்…” டாக்டர் விளக்க,

சிவா குறுக்கிட்டான் “டாக்டர், அது பத்தி எனக்கு கவலை இல்லை டாக்டர். அவ எப்படி இருந்தாலும் எனக்கு அவதான் வைப்! அவ உயிருக்கு ஆபத்து இல்லையே? அவ எப்போ கண்விழிப்பா? அவளை சாதாரண மனநிலைக்கு கொண்டு வர என்ன செய்யணும் சொல்லுங்க ப்ளீஸ்“ குரல் உடைந்து மருத்துவரை கையெடுத்து கும்பிட்டு அழைத்துவங்கினான்.

கௌதமும் கண்கலங்கினான். அனால் சுதாரித்துக்கொண்டு நண்பனை தேற்ற முற்பட.

மருத்துவர் “மிஸ்டர் சிவா, என்ன இது! முதல்ல உணர்ச்சிவச படாதீங்க, அவங்க உயிருக்கும் பெண்மைக்கும் எதுவும் இல்லை சரியா. அவங்க வீக்கா இருக்காங்க. சில மருந்துகள் தரேன் இங்க ஒரு நாள் இருக்கட்டும் அப்புறம் நீங்க கூட்டிகிட்டு போகலாம். நீங்களே உடைந்து அழுதா அவங்க சுயநினைவுக்கு வந்தவுடன் எப்படி அவங்களை சமாதானம் செய்ய முடியும்?“

சிவா மெதுவாக தன்னை சமன் செய்கொண்டான்.

“நீங்க போங்க அவங்கள ரூம்க்கு ஷிபிட் பண்ணிடுவாங்க, நான் இங்கதான் இருப்பேன் நைட் டியூட்டி. எதுனாலும் நர்ஸ் கிட்ட சொல்லி அனுப்புங்க. மனச தளரவிடாதீங்க“ மெல்லிதாய் புன்னகைத்து அவர்களை அனுப்பிவைத்தார் மருத்துவர்.

அறையில் கிடந்த தன்னவளை நெருங்கி அவள் கையை பிடித்துக்கொண்டவன்
“சாரி காயு! உன்னை தனியா விட்டிருக்க கூடாது! ரெண்டாவது முறை உன்னை தொலைக்க பார்த்தேனே, மன்னிச்சுடு கண்ணா, இனி உன்னை விட்டு விலகவே மாட்டேன்“ அவள் கையை பிடித்துக்கொண்டு கண்கலங்க,

கௌதமோ அவளின் மறுபுறம் நின்றுகொண்டு “ஆமா காயு ஒரு அண்ணனா நான் என் கடமையை செய்யல உன்னை பாதுகாக்காம விட்டேனே! என்னை மன்னிச்சுடு கண்ணா“.

“என்னடா மாறி மாறி பாசத்தை கொட்டுறீங்க?“ மெல்லிய குரல் ஒலிக்க,

நண்பர்கள் இருவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.

மெல்லிய புன்னகையுடன் முகமெங்கும் காயங்களுடன் இதழ் கிழிந்து ரத்தம் உறைதிருக்க, கன்னங்கள் கீற பட்டு ரத்த கோடுகளோடு கண்கள் சிவந்து துவண்ட மலர்போல இருந்தவளை காண சகியாமல் சிவா கௌதம் இருவருமே மனமுடைந்து அழ,

“ஐயோ ஷேம் ஷேம் இப்படி அழுதா நல்லாவே இல்லை உங்க ரெண்டுபேருக்கும்“ புன்னகைத்தாள் காயத்ரி.

கண்களை துடைத்துக்கொண்டு கௌதம் “சாரி காயு! நானாவது உனக்கு துணையா வந்திரு…“

சொல்லிமுடிக்கும் முன்னே “அண்ணா உதயா!“ காயத்ரி கேட்க,

“ம்ம் அவ லட்சுமி வீட்ல விட்ருக்கோம். சொல்லிட்டோம்! நாளைக்கு போன் பண்ணித்தரேன் பேசு, இப்போ ரெஸ்ட் எடு“ கௌதம் அவள் தலையை மென்மையாக கோத,

“சாரி காயு!“ மறுபடி சிவா வாயெடுக்க.

“தேங்க்ஸ் சிவா!“ காயத்ரி சொல்ல, வாயடைத்துப்போய் சிவாவும் கௌதமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,

“எதுக்கு தேங்க்ஸ்?“ கௌதம் கேட்க,

“இவர்தான் அண்ணா போன்ல தைரியம் சொன்னார்… இவர் சொன்னதாலதான் நகத்தையும் பல்லையும் வச்சு அவனை கிழிச்சி தள்ளினேன்! அந்த பரதேசி*** எங்க அவனை என்ன செஞ்சீங்க?“ காயத்ரி கேள்வியாய் முடிக்க,

சிவா “அவனை பிடிச்சுட்டாங்க! ஆனா இன்னும் யார் என்னனு டீடெயில்ஸ் தெரியல“

“ம்ம்ம்“ என்றவள் கண்களைமூடி அமைதியானாள்.

அவள் பிழைத்தது தெய்வ அருள்தான். பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்களின் நினலயை நினைத்தவள் கண்கள் தானாக கலங்க கனத்த இதயத்துடன் மருந்தின் வீரியத்தில் உறங்கிப்போனாள்.