NN 6

சிவாவும் கௌதமும் “எஸ் அண்ட் ஜீ குரூப்ஸின் ” சம பங்கு தாரர்கள் ! படித்து முடித்த சிவா தன் நண்பன் கௌதமுடன் சேர்ந்து சாப்ட்வேர் கம்பெனி ஒன்றை துவங்கி அதனுடன் ஏற்கனவே அவனுக்கு சொந்தமான கம்பெனிகளையும் , கௌதமிற்கு சொந்தமான கம்பெனிகளையும் இணைத்து பெரிய “எஸ் அண்ட் ஜீ குரூப்ஸ் ” என்ற சாம்ராஜ்யத்தை உருவாக்கி நிர்வகிக்கின்றனர் !

மத்திய உணவு வேளையின் பின் , திவா என்கிற திவாகர் அவர்கள் அறைக்கு வந்து சேர்ந்தான் .

” மிஸ்டர் திவாகர் ! சைதன்யா குரூப்ஸின் கொட்டேஷன் தயார் செய்தது நீங்க தானே? அந்த வேல்யூ உங்களை தவிர யாருக்கு தெரியும் ?” என்று நேரடியாக அவனை பார்த்து கேட்டான் சிவா !

” சார் ! அது எனக்கும்.. ” என்று அவன் தயங்க

” ம்ம் என்ன! ” சிவா கோவமாய் சீற

” இல்லை சார் எனக்கும் , லயா மேடம்க்கு மட்டும் தான் தெரியும் ! , வேற யாருக்கும் தெரியாது ! அவங்க கிட்ட தான் அந்த விவரங்களை கௌதம் சாருக்கு மெயில் பண்ணிட்டு கொடுத்தேன். ” என்றான் திவாகர்

” சரி இதை பற்றி வெளியே யாருகிட்டயும் விவாதிக்க வேண்டாம். நீங்க போகலாம் ! ” என்றான் கெளதம்.

திவாகர் சென்றபின்.சிவா கௌதமை நோக்கி “காயத்ரி கனவுல வந்த பெண் அந்த லயாவாவும் இருக்கலாம். அவங்க புகைப்படத்தை எம்பிளாயி லிஸ்டலிருந்து டவுன்லோட் செஞ்சு வச்சுக்கோ ! ராத்திரி காயத்ரி கிட்ட காட்டி கனவுல வந்த பொண்ணு அவங்க தானா என்று கேட்போம் அதுக்கு அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிப்போம்” என்றான் சிவா.

“கெளதம் சரி நான் காலேஜ் கிளம்பறேன் ! “ என்று சிவா எழ.” இருடா ! காலைல ஒரு தரம் நீ போய்வந்து பாதி நாள் சிடு சிடுன்னு இருந்தது போதாதா?. இப்போ எதுக்கு திரும்ப? நான் போய் அவங்கள கூட்டிண்டு வரேன்.” கெளதம்.

“இல்லடா நானே கூட்டிண்டு வரேன் ! ” சிவா

“டேய் புரிஞ்சுக்கோ டா ! நான் போனால் லக்ஷ்மியை பார்க்கலாம்..” என்றான் கௌதம் வார்த்தைகளை மென்று முழுங்க ..
சிரித்துவிட்ட சிவா “அப்படி சொல்லுடா , சோழியன் குடுமி சும்மா ஆடுமா? வா சேர்ந்தே போகலாம். உன் கார் இங்கேயே இருக்கட்டும் ”

சிவாவுடன் கெளதம் உற்சாகமாக புறப்பட்டான் காரின் கதவை திறந்த கெளதம் ” டேய் என்னடா இது? டெட்டிய இப்போ ஆஃபீஸ்க்கும் கொண்டுவர ஆரம்பிச்சுட்டியா? அதுலயும் சீட் பெல்ட் போட்டு ,என்னமோ பொண்டாட்டி மாதிரி முன்னாடி சீட்டுல உட்கார வச்சுருக்கே ! ஓவரா பண்றே டா ! ” என்றான் .

” டேய் காயத்ரியோட டெட்டி டா ! கார்த்தாலே அவ வீட்லேந்து கொண்டு வந்தது ” என்று சொல்லிக்கொண்டே ” நீ வண்டி ஓட்டுடா “என்று சொல்லி, டெட்டியை அனைத்து கொண்டு முன் சீட்டில் அமர்ந்தான் .

“உன்னை பார்த்தல் தொழிலதிபர் மாதிரியா இருக்கு ? அதுவும் கம்பெனி பார்க்கிங் லாட்டை கூட இன்னும் நாம தாண்டலடா கொஞ்சம் அடக்கி வாசி ” என்று சிரித்தபடி வண்டியை கிளப்பினான்.

” எல்லாம் தெரியும்! ” என்று அவனை வாயை மூடு போல் செய்கை செய்து புன்னகைத்தான் சிவா.

அங்கு கல்லூரி முடிந்து கேன்டீனில் காயத்ரி லட்சுமி உதயா ஸ்ரீவத்ஸ் அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் .

அப்போது அங்கே வந்த சுப்பு ஆர்வமாய் “ஹேய் கைஸ் ! தெரியுமா ? ஷீத்தல் வீட்டு கோழி முட்டை போட போகுதாம்” என்றான்

ஸ்ரீவத்ஸ் ” என்ன சொல்றே ? ”

சுப்பு ” டேய் இப்போதான்டா அவ போன்ல பேசி கிட்டு இருந்தா! ”

ஸ்ரீவத்ஸ் ” என்னனு ? ”

சுப்பு ” கோயி பாத் நஹி அப்படின்னு ஹிந்தில சொன்ன டா! ”

ஸ்ரீவத்ஸ் ” இதுல எங்கடா கோழி முட்டை போட்டுதுன்னு வந்தது ? ”

சுப்பு ” அவ என்ன சொன்ன ? கோயி பாத் நஹி! அப்படினா என்ன? கோழி குளிக்காம அதாவது முழுகாம இருக்குன்னு சொன்ன டா! அப்போ அது முட்டை போட போகுதுன்னு தானே அர்த்தம் ! ” என்று முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு சொல்ல .

ஸ்ரீவத்ஸ் ” உன்ன கொன்னுடுவேன் டா! ” என்று அவனை துரத்த .

சுப்புவோ ” டேய் ஜோக் சொன்ன சிரிக்கணும் அடிக்க கூடாது” ன்னு ஓட ! அங்கே ஒரே ரகளைத்தான் .

காயத்ரி என்னை காப்பாத்து என்று அவள் கையை பற்றி கொண்டு சுப்பு கேட்கும் போதே தன்னை யாரோ துளைப்பது போல் பார்ப்பதை உணர்ந்த காயத்ரி , திரும்பி பார்க்க .

கண்ணால் எரிப்பது போல் முறைத்துக்கொண்டு அங்கே வந்துகொண்டு இருந்தான் சிவா! அவன் பின்னாடியே பாவமாய் கெளதம் .

“சிவா சார் ! வாங்க வாங்க” என்று ஸ்ரீவட்சன் இருக்கையை விட்டு எழ.

சட் என்று முகத்தை சாதாரணமாய் மாற்றிக்கொண்டான் சிவா , ஆனால் அவன் பார்வை மட்டும் காயத்ரியின் கையை பிடித்துக்கொண்டு இருந்த சுப்புவின் கையிலிருந்து கொஞ்சமும் விலகவில்லை .

பின்பு சுப்புவின் பஸ் ஹார்ன் அடிக்க ” என் பஸ் கெளம்பப்போகுது ! பை கைஸ்! பை சிவா சார் ! பை கௌதம் சார் ! ” என்று விடைபெற்றான்.

லட்சுமியோ சுப்பு சொன்ன ஜோக்கை மறுபடி சொல்ல கெளதம் உரக்க சிரிக்க, சிவாவோ என்னமோ யோசனையாய் இருந்தான்.

அடுத்த சில நொடிகளில் ஸ்ரீவட்சனும் “நானும் கிளம்பறேன் அடுத்தது என் பஸ் தான்! லட்சுமி கிளம்பலாமா ” என்று எழ

கௌதமின் முகம் வாடி போனதை கண்ட உதயா ” நான் லக்ஷ்மியை டிராப் பண்றேன் ஸ்ரீவத்ஸ்! நீ கிளம்பு ! அவ வீடு என் வீடு பக்கத்துல தானே இருக்கு. நாங்க இன்னிக்கி ஷாப்பிங் போகலாம்னு பிளான் பண்ணோம்! ” என்றாள்

“அப்போ சரி ! பை எவெரிபடி ! ” என்று ஸ்ரீவத்சன் விடை பெற. கெளதம் முகம் மலர்ந்து உற்சாகமானான் .

கெளதம் லக்ஷ்மியுடன் சிறிது நேரம் இருக்க விரும்புகிறான் என்று சிவாவிற்கு புரியாமல் இல்லை . அதனால் அவனும் எதுவும் மறுத்து பேச வில்லை .

ரியர் வியூ கண்ணாடியில் சிவா பின் இருக்கையில் அமர்திருந்த காயத்ரியை பார்க்க அவன் கண்ணை திருப்பிய பொழுது அவள் அதன் வழியே அவன் கண்ணையே பார்த்து கொண்டு அமர்திருப்பதை எதிர்பார்க்காமல் திகைத்தான் !

அவனின் நீல விழிகள் அவளின் கரு விழிகளை சந்தித்த மறுநொடி அவள் முகத்தில் காலையில் வந்தது பதற்றம் மறுபடி தொற்றி கொண்டது . முகம் சிவந்தவள் வெளியே வேடிக்கை பார்ப்பதுபோல் முகத்தை திருப்ப . அவளின் தவிப்பை பார்த்தவனின் மனத்திலோ மழை பெய்தது போல் ஒரு இதமான உணர்வும். முகத்தில் குறும்பும் படர்ந்தது!

வேளச்சேரி ஃபினிக்ஸ் மாலில் , காரை பார்க் செய்த்துவிட்டு. அவர்கள் முதலில் மூன்றாவது தளத்திற்கு சாப்பிட சென்றனர்.

உதயா , லட்சுமி மற்றும் கெளதம் மூவரும் பூரி வாங்கி கொள்ள காயத்ரி பன்னீர் தோசையும் சிவா காளான் தோசையும் வாங்கிக்கொண்டனர் .

சாப்பிட துவங்கிய சிறிது நேரத்தில் சிவா ” காயு நான் கொஞ்சம் பன்னீர் தோசை டேஸ்ட் பண்ணலாமா ? நீ என் முஷ்ரூம் தோசை எடுத்துக்கோ ” என்று அவள் பதிலுக்கு காத்திராமல் பாதி பாதி தோசைகளை பகிர்ந்தான் . அவளும் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட , லக்ஷ்மியும் உத்யாவும் வாயை மூடி சிரித்திக்கொண்டே இருந்தனர் !

“என்ன சிரிப்பு சொன்னா நானும் சிரிப்பேன் “என்று கெளதம் கேட்க .

” காயு யார் கூடவும் பகிர்ந்து சாப்பிட்டு நாங்க பார்த்ததே இல்ல ! அவ ரொம்ப எச்சில் அது இதுன்னு பார்ப்பா ! சிவா அண்ணா கூட மட்டும் எப்படின்னு அதிசயமா இருக்கு ” என்றாள் லட்சுமி !

இதை கேட்ட காயத்ரிக்கு மறுபடி வெட்கம் தொற்றி கொள்ள சிவாவும் குறும்பாய் அவளை பார்க்க ! அவளுக்கு புரைக்கேறி விட்டது ! சிரிப்பை அடக்கிவாறே உதயா தண்ணீரை அவளிடம் நகர்த்தினாள் !

பிறகு அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காயத்ரி முகத்தை நிமிர்த்தவே இல்லை !

“நடத்து!” என்று சிவாவின் காதில் முணுமுணுத்தான் கெளதம் .சிவாவிற்கு உள்ளே மனம் சிறகடித்தாலும் , வெளியே ஒன்றுமே நடக்காதது போல் சாதாரணமாய் இருந்தான்

சாப்பிட்ட பின் உதயாவும் லக்ஷ்மியும் துணி கடைக்கு செல்லவேண்டும் என்று சொல்ல, அனைவரும்அங்கு சென்றனர். அவர்கள் இருவரும் குர்தாக்களை பார்த்துக்கொண்டு இருந்தனர் ! காயத்ரியோ எங்கயோ வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க சிவாவும் அவளுடன் நின்றிருந்தான் .கௌதமும் தனக்கு சட்டை வாங்க சென்றுவிட்டான்.

இதை கவனித்த உதயா”காயு! ஏண்டி அங்க நிக்குறே ! வாடி ” என்று அவளையும் அழைக்க .

” உதயா வேணாம் , நான் பணம் கொண்டு வரலடி . அப்புறம் வாங்கிக்கிறேன் எனக்கு தேவைன்னு ஒன்னும் இல்லை இப்போ ! ” என்று அவளிடம் கிசு கிசுத்து கொண்டிருதாள் .

அருகில் வந்த சிவா என்ன என்று கேட்க . ” அண்ணா ! இந்த லூசு பணம் கொண்டுவரலையாம் அதனால் வேணாமாம் ! என்றாள் மேலும் ” கெளதம் இருக்கான்ல லூசாடி நீ அவன் இருக்கும் பொழுது நாம ஏண்டி பர்ஸை திறக்கனும்? ” என்று சிரித்தாள் .”சொன்ன கேளு உதையா ! “என்று காயத்ரி மறுக்க .

” ஏன் நான் தரமாட்டேனா? நான் உன் அன்னான் இல்லையா ? போ ! நீ வா காயு ” என்று சொன்னவன் காயத்ரியின் கை பற்றி அழைத்து சென்றான்.

” சொன்ன கேளுங்க சிவா ! ப்ளீஸ் எனக்கு என்னமோபோல இருக்கு ! எனக்கு இப்போ தேவைன்னு ஒன்னும் இல்லை நான் அப்புறம் வாங்கிக்கறேன்! ” என்று கெஞ்சினாள் .

” நீ யாருடா எனக்கு துணி வாங்கித்தர ? அப்படின்னு கேக்கிறியா இல்லை எனக்கு துணி வாங்கித்தர உனக்கு உரிமை இல்லைடா ! அப்படின்னு சொல்றியா ! ” என்று சிவா கோவமாய் அவளை முறைக்க

“சிவா கை வலிக்குது ப்ளீஸ் ! ” என்று அவள் சொல்லவே தான் அவள் கையை இருக பற்றி இருப்பதை உணர்ந்தவன் பிடியை சற்று தாளர்தினான் ” நான் அப்படி எல்லாம் உங்களை அந்நியமாய் நினைக்கலே ! இப்போ என்ன நானும் ஏதாவது வாங்கணும் அவ்ளோதானே? வாங்க ” என்று சிரித்துக்கொண்டே அவளும் அவனுடன் நடந்தாள்.

“இப்போ எதுக்கு சிரிக்கிறே? “என்று அவன் இன்னும் கடு கடுக்க.

” உங்க முகத்துக்கும் அழகான அந்த நீல கண்களுக்கும் இந்த கோவம் கொஞ்சம் கூட ஒத்து போகலை ! அதான் ! ” என்று உதட்டை கடித்து கொண்டாள்.

அவளையே குறு குறுவென பார்த்தவன் ” நல்லது ! டிரஸ் பாக்கலாம் வா ! ” என்றான் குரலில் சிறிது சந்தோஷத்துடன் .

எந்த உடையாய் எடுத்தாலும் காயத்ரியோ தனக்கு இந்த கலர் பொருந்தாது அந்த கலர் பொருந்தாது என்று தயங்கி கொண்டு இருக்க.

“நீ சரிவர மாட்டே காயு .. இரு” என்று சிவா தானே லைட் பிங்க் நிறத்திலும் , சிவப்பு நிறத்திலும் டாப்ஸ்களையும் , நீல ஜீன்ஸும் தேர்வு செய்து கொடுத்தான். ” போட்டு காட்டு சீக்கிரம் ! ” என்று துரத்தாத குறையாய் . துணி மாற்றும் அறைக்கு அவளை துரத்தினான் . அனைத்தயும் கவனித்த லக்ஷ்மியும் உதயவும் ’ சிவா அண்ணா மாதிரி ஆளுதான் அவளுக்கு சரி ! என்று தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டனர்.

அவளும் அவனுக்கு அவைகளை போட்டு காட்ட ” சூப்பர் ! மூன்றையும் வாங்கிக்கோ ! நான் வரேன் இரு ” என்று சொல்லி அவனும் ஆண்கள் பிரிவுக்கு சென்றான் . சிறிது நேரத்தில் அவனுக்கும் அதே லைட் பிங்க் மற்றும் சிவப்பு நிறத்தில் ட்ஷிர்ட்களும் , நீல ஜீன்ஸ்ஸும் எடுத்து கொண்டு வந்து ”

“மேட்சிங் ! மேட்சிங் !” என்று உற்சாகமாய் சிரித்தான் குழந்தை போல !

இதை பார்த்த கௌதமோ , லட்சுமி என்ன எடுத்தாள் என்று எட்டி பார்த்தான். அவள் கையில் நீலம் மற்றும் மஞ்சள் கலரில் குர்த்தாக்கள் இருக்க , அவனும் தன் கையில் இருந்த வெள்ளை சட்டைகளை வைத்து விட்டு அதே மஞ்சள் மற்றும் நீல கலர்களில் ட்ஷிர்ட்களை எடுத்து கொண்டான். இதை கண்ட உதயாவோ கௌதமின் காதில் ” அடங்க மாட்டியா நீ ! சொந்தமா யோசிடா தடியா ” என்று தலையில் அடித்து கொண்டாள் சிரித்தவாறே.

லக்ஷ்மியை அவள் வீட்டில் இறக்கி விட்டு தங்கள் வீட்டிற்கு சென்றனர்.

பெண்கள் வீட்டினுள் முதலில் செல்ல , காரில் இருந்து டெட்டி , டிரஸ் கவர்கள் என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு சிவாவும் கௌதமும் பின் தொடர்ந்தனர் .

கெளதம் சிவாவிடம் ரகசியமாய் ” என்ன சாருக்கு வீரம் வந்துருச்சு போல இருக்கே ! ஹோட்டல்ல ,டிரஸ் கடைல ஒரே கலக்கல் தான் போ ! ஒரே நாளில் இவ்ளோ ஸ்பீடா ரெடி ஆயிட்டே மாப்பிளே !” என்று கிண்டல் செய்ய .

“டேய் ! ஏன்டா ! எனக்கே எப்படி இவ்வளவு துணிச்சல் வந்ததுன்னு தெரியல நீ வேற !” என்று சிரித்துக்கொண்டான்.

சிறிது நேரம் கழித்து கௌதமும் சிவாவும் உடைகளை மாற்றிக்கொண்டு , முதல் தளத்தில் உள்ள ஹாலில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்தனர் . அப்பொழுது அங்கே வந்த காயத்ரி..

“சிவா! என் டெட்டி உங்க கிட்ட இருக்கே , தரீங்களா?” என்று கேட்க , “இந்த லெவல் முடிச்சுட்டு தரவா?” என்று விளையாடி கொண்டே பதிலளிக்க , அவள் அங்கேயே அமர்ந்து கொண்டு அவர்கள் விளையாடுவதை பார்த்து கொண்டு இருந்தாள். சிறிது நேரத்தில் உதயவும் வந்து அமர்ந்து கொண்டாள்!

விளையாட்டு சுவாரசியமாய் அரைமணிநேரம் தொடர்ந்தது !

தனது மொபைல் போனில் கெளதம் அந்த மேனேஜர் லயாவின் புகைப்படத்தை எடுத்து காயத்ரியிடம் காட்டி, அவள் கனவில் வந்தது இவளா என்று கேக்க , அவ்ளோ அவள்தான் என்பதை உறுதி செய்தாள் .

சிவாவும் தனது அறைக்கு சென்று டெட்டியை கொண்டுவந்து அவளிடம் கொடுத்தான். அவன் டெட்டியயும் தன் கையில் வைத்து கொண்டு இருந்தான் . அதை பார்த்த கௌதமோ ” தோ பாருடா ரெண்டு குழந்தைகளும் பொம்மை வச்சு விளையாடுறாங்க! ” என்று நக்கலடிக்க . “ஆமா கெளதம்! ரெண்டு பேர் பல்லையும் தட்டி தொட்டிலில் போடணும்” என்றாள் உதயா அவள் பங்கிற்கு .

கௌதமோ சிவாவின் காதருகே ” என்னடா தொட்டிலில் எப்போ நீ உன் பாப்பாவை போடுவேன்னு நான் காத்துகிட்டு இருக்கேன் , இவ என்னடா உன்னையே தொட்டிலில் போட சொல்லுறா ? ” என்று சில்மிஷமாய் கிசு கிசுத்தான்.

இதைக்கேட்டு முகம் சிவந்தவனோ “சீ ! என்ன பேசறே ? லூசாடா நீ ! அவளே குழந்தை டா ! அங்க பாரு ! ” என்று அவளை காட்ட .

முட்டிவரை நீண்ட நைட் கவுன் அணிந்து, கையில் அவள் உயரத்துக்கு கரடி பொம்மை வைத்துக்கொண்டு ,முன்னும் பின்னும் ஆடிய படி உதயவுடன் சிரித்து சிரித்து பேசி கொண்டு, குழந்தை போல் தான் இருந்தாள் !.

” நான் இங்க இருந்தா சரி வராது ,நான் தூங்க போறேன் ! நீ என்னமோ சொல்லி நல்ல பையன கெடுக்கறே ! “என்று பொய்யாக கோவித்து கொண்டவன்.

” நாளைக்கி கால்லேஜ் இல்லையா? தூங்க போங்க ரெண்டு பெரும் ! ம்ம்ம் ! “ என்று அவர்களையும் சிவா அதட்ட ..

” சிவா அண்ணா ! நீங்களே நாளைக்கும் எங்களை காலேஜ்ல விடறீங்களா? ப்ளீஸ் ! ” என்று உதயா கேட்க ..சிவாவோ காயத்ரியை ” உன் விருப்பம் என்ன ” என்று கேட்பது போல் பார்த்தான். அவள் முகத்திலோ ஒரு மாறுதலும் இல்லை ! ” ஏன் பஸ் என்னாச்சு? அதுல போங்க ” என்று அவன் உதயாவை கேட்டு கொண்டே மறுபடியும் காயத்ரின் முகத்தில் மாறுதல் இருக்கா என்று பார்க்க ,

அவள் முகம் மெதுவாக இறுகியது ‘ஹையா ! இதானே எனக்கு வேணும், என்கிட்டயேவா ? ’ என்று நினைத்தவன் ” சரி சரி கொண்டு பொய் விடறேன் இப்போ சீக்ரம் போய் தூங்குங்க இப்போவே மணி 11:30 ஆச்சு ” என்றான் .

கௌதமும் அவனை போன்றே ” ஆமா போங்க ம்ம் குட்நைட் குழந்தைகளா ! ” என்று கிண்டலாய் கூறினான் .

எனோ சிவாவிற்கு உறக்கம் வரவே இல்லை , கெளதம் சொன்னது அவன் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது புது புது ஆசைகள் மனதில் எழ ! ” இல்ல இல்ல ,அப்படிலாம் யோசிக்க கூடாது ! ” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு காயத்ரியின் டெட்டியை இருக்க கட்டிக்கொண்டான். ஆம் அவன் வேண்டும் என்றே டெட்டியை மாற்றி தன் பொம்மையை அவளிடம் கொடுத்திருந்தான். அசதியாய் இருந்த அவளோ பொம்மை மாறியதை உணராமல் அதை கட்டிக்கொண்டு உறங்கிவிட்டாள்.