NN 9

காலையில் கௌதமிற்கு நினைவு வர, நடந்ததைச் சிவா மெல்ல அவனுக்குச் சொன்னானே தவிர மறந்தும் ஏன் அவன் அங்குச் சென்றானென்று கேட்கவில்லை.

கௌதம் தானே அதைச் சொல்ல முற்படும்பொழுது “அப்புறம் பேசிக்கலாம் கெளதம் நீ ரெஸ்ட் எடு” என்று அவனை அமைதிப்படுத்தினான்.

ஒருவாரம் அவனை மாறி மாறி சிவா உதயா காயத்ரி என்று ஹாஸ்பிடலில் கவனித்துக் கொண்டனர்.

வீடு திரும்பிய கெளதம் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே “என்னடா இது தலையில் கட்டு, கையில் கட்டு? இப்படிக் கட்டுக் கட்டா போட்டு வச்சுருக்காங்க ? கொஞ்சமும் பொருந்தவே இல்லை எனக்கு. என் கெத்து என்ன ஆகும் ? ” என்று புலம்பச் சிவா அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

” ஏன்டா இப்படிச் செஞ்சே முட்டாள் ! ஏண்டா தனியா போனே ! எவ்ளோ பயந்தேன் தெரியுமா? முட்டாள் முட்டாள் ” என்று சொல்லிக்கொண்டே சிவா அணைப்பை மேலும் இறுக்கினான்.

” நீ என் உயிரின் பாதி டா ! இடியட் ! :” என்று அவன் உணர்ச்சிவசப்பட்டான்.

” அப்போ காயத்ரி ? ” என்றான் கெளதம் நக்கலாய்.

“அவளும் தான் ! ” என்றான் சிவா சிரித்துக் கொண்டான்.

“அப்போ உன் உயிரின் ஒரு பாதி நான் மறுபாதி காயத்ரியா? சூப்பர் நீ பொழச்சுப்பே தம்பி ! ” என்று சிரித்துக்கொண்டே கூறிய கெளதம், மேலும் “டேய் ஒருவாரம் பெட்ரெஸ்ட், ஹாஸ்பிடல், மருந்து மாத்திரைன்னு சுத்த போர். வெளில போலாமா லாங் டிரைவ் ? டிஸ்கோ ? ” என்று கேட்க

மெல்ல புன்னகைத்த சிவாவோ “ஹே இப்போதான் டிஸ்சார்ஜ் ஆகி வந்துருக்கே ரெஸ்ட் எடுடா. அப்புறமா எங்கயான டூர் போகலாம் ! ஓகே ? ” என்றான்

” டேய் எனக்கு என்னடா? நான் தெம்பாதான் இருக்கேன் ! ஏதோ டாக்டர் ரெண்டு கட்டு போட்டா நான் நோயாளியா? “
என்று புன்னகைத்த கௌதம் “சரி வா நாம இப்போ வீடியோ கேம் விளையாடலாமா ? ” என்று கேட்க,

” க்ரேசி! கைல கட்டு போட்டுச் சாப்பாடே சாப்பிட முடியாம இருக்கு, இதுல வீடியோ கேம்ஸ்? முதல்ல கண்ட்ரோலர் பிடிக்க முடியுமா உன்னால? ” என்று படபடத்த சிவா மேலும்

“கௌதம் பேச்சை மாத்தே நீ ஏன் அன்னிக்கி தனியா போனே? என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல ? “ என்று முகம் வாடினான்.

“இல்லைடா அன்னிக்கி நான் நெஜமாவே உடம்பு முடியாமத்தான் கிளம்பினேன் அப்போ திவா போன் பண்ணி லயா என்கிட்டே பேசணும்னு சொல்றான்னு சொன்னான்‌. நானும் அவ உண்மைய நாம கண்டுபிடிக்கும் முன்னாடி தானே ஒத்துக்கப் போறதா நெனச்சு போனேன்.

லயா பணத்துக்காகத்தான் ஜெ.சி குரூப்ஸ்க்குக் கொட்டேஷனை கொடுத்ததை ஒத்துக்கிட்டா, ஆனா அங்க யார்கிட்ட கொடுத்தான்னு கேட்டதுக்குச் சொல்லாம தயங்கினா.

அவ உண்மைய சொல்லலைனா போலீசுக்கு போவேன்னு சொல்லி மிரட்டப் ஃபோன் எடுத்தேன் ஆனா அந்தத் திவாகரும் லயாவும் கட்டையால தீடீர்ன்னு தாக்க அத தடுக்கப் போய்தான் கைல தலைலன்னு வீரக்காயம்” என்று வெற்று புன்னகையைச் சிந்தினான்.

“சரி சிவா அவங்கள என்னதான்டா செஞ்சே? “

“ரெண்டு நாள் நம்மாளுங்க விட்ட விடுல தானா உண்மைய சொல்லிட்டாங்க. ஜெ சி குரூப்ஸ்ல இருக்குற மேனேஜர் தான் இவங்கள பணத்தாசை காட்டி இப்படிச் செய்யத்தூண்டியது.

காட்டிக்கொடுத்தா கொன்னுடுவேன்னு மெரட்டி வச்சிருக்கான் அதான் அன்னிக்கி பதட்டத்துல அடிச்சுபோட்டு இருக்காங்க.

இப்போ லயா, திவா அந்த மேனேஜர் எல்லாரையும் உள்ள போட்டாச்சு. பிளஸ் இந்தக் கூத்து எதுவுமே ஜெ.ஸி. குரூப் முதலாளிக்குத் தெரியாது. எல்லாம் மேனேஜர் கைவண்ணம்” என்று சிவா முடிக்கவும்

கீழிருந்து உதயா “அண்ணா உன்ன பாக்க லட்சுமி வந்துருக்கா” என்று கத்தவும் சரியாக இருந்தது.

“டேய் டேய் ! லக்ஷ்மிடா ! ” என்று பதறி அடித்து கெளதம் தன் ரூமிற்கு ஓடினான். அப்படியே கட்டிலில் படுத்து எதோ மிகவும் உடம்பு முடியாமல் அனத்துவதுபோல் அனத்த ஆரம்பிக்க, தான் விரும்பும் பெண்ணின் முன் நடிக்கக் கெளதம் தயாரானதை உணராதவன் அல்ல சிவா. அவனைப் பார்த்து மெல்ல புன்னகைத்தபடியே “மேல வரச் சொல்லு மா என்று குரல் கொடுத்தான் சிவா.

அங்குப் பதட்டத்துடன் வந்த லக்ஷ்மியை பார்க்க சிவாவிற்குப் பாவமாகத்தான் இருந்தது. ஆனால் கௌதமின் காதலுக்குத் தன்னால் ஆனதைச்செய்ய முடிவெடுத்த அவன், லக்ஷ்மியை பார்த்து “வா மா கெளதம் அவன் ரூம்ல படுத்துண்டு இருக்கான் வா” முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு அவளைக் கௌதமின் அறைக்கு அழைத்துச் சென்றான்.

சிவாவும் தன் நடிப்புக்கு தோதாய் நடப்பதை உணர்த்த கெளதம் பெருமூச்சு விட்டு, முனகிக் கொண்டி இருந்தான் “அம்ம்மா… அம்மா ! ” என்று

அவனருகில் மெதுவாய் தயங்கி தயங்கி சென்ற லட்சுமி “கெளதம் ! கெளதம் நான் லட்சுமி வந்துருக்கேன் ! ” என்றாள் அன்பாய்

மெல்ல விழி திறந்த கெளதம் முகத்தைப் பாவமாய் வைத்துக் கொண்டு லட்சுமி என்றான் ஏக்கமாய்

” சாரி கெளதம் எனக்கு இன்னிக்கிதான் உதயா சொன்னா! பைக் ஆக்சிடென்ட் ஆச்சுன்னு ! எனக்கு இதயமே நின்னுடும் போல இருந்துது தெரியுமா? பாத்து வண்டி ஓட்டக் கூடாதா? ஏன் இப்படிப் பண்றீங்க ? ரொம்ப வலிக்குதா ?” என்று தழுதழுத்த குரலில் லட்சுமி வருந்தினாள்.

“உன்கிட்ட சொல்லி உன்ன கஷ்ட படுத்த வேணாம்னுதான் சொல்ல வேணாம்னு சொன்னேன். நீ தாங்க மாட்டேன்னு எனக்கு தெரியும் லச்சு என்று எடுத்து விட்டான் கெளதம்.

லக்ஷ்மியின் பின்னால் நின்றிருந்த சிவா கௌதமை பார்த்து, சோகமாய் வயலின் வாசிப்பது போல் காற்றில் வயலின் வாசித்து சிரித்துக் கொண்டு இருந்தான்.

அவனைப் பார்த்து முறைத்த கெளதம் “சிவா ! நீ ரெஸ்ட் எடு அதான் லட்சுமி இருக்காளே என்று சிவாவை பார்த்து சொல்லிவிட்டு, லக்ஷ்மியை பார்த்தவன்

“லட்சுமி இன்னிக்கி என்கூடவே இருப்பே தானே என்று ஏக்கமான குரலில் கேட்டான்.

லட்சுமி சரி என்று தலையை அசைத்தாள்.நடப்பதை அறியாமல், அவனுக்கு மதிய உணவு ஊட்ட காயத்ரி வந்து கொண்டிருந்தாள்.
அவன் கையில் அடிபட்டிருப்பதால் சிவா, உதயா, காயத்ரி என்று மாறி மாறி அவர்களின் பணிவிடையில் திளைத்துக் கொண்டிருந்தான்.

காயத்ரியை படியிலியே நிறுத்தி அவளிடம் எதோ சொல்லி அனுப்பி வைத்த சிவா, அவளிடமிருந்து உணவை வாங்கிக்கொண்டு கௌதமின் அறைக்குச் சென்றான்.

“கெளதம் கெட் அப். லஞ்ச்” என்று உள்ளே நுழைந்த சிவா, கௌதமை பார்த்துக் கண்ணடிக்க.

ஒரு கையை மட்டும் ஊன்றி எழமுடியாமல் நிஜமாகவே தவித்த கெளதம் ஆதரவாய் தாங்கி எழுப்பி உட்கார உதவினாள் லட்சுமி. அவளின் முதல் தொடுகையில் நிஜமாகவே திக்கு முக்காடி போனான் கெளதம்.

தட்டுடன் அவன் அருகில் அமர்ந்து அவனிற்கு ஊட்ட சிவா கை எடுக்கும் பொழுதே, அவன் செல் சினுங்க

“கெளதம், அர்ஜென்ட் கால்” என்று சொல்லி “லட்சுமி நீ அவனுக்கு ஊட்டி விட்டுட்டு, மெடிசின்ஸ் அந்த டேபிளில் இருக்கு கூட ப்ரெஷ்கிரிப்சன் இருக்கு பார்த்து கொடுத்திடு” என்று சொல்லி அங்கிருந்து மொபைலில் “எஸ் சார் டெல் மீ ” என்று பேசி கொண்டே விரைந்தான்.

சற்று நேரம் தட்டையும், பாவமாய் முழிக்கும் கௌதமயும் மாறி மாறி பார்த்த லக்ஷ்மி தயங்கி அவனுக்கு ஊட்ட முற்பட,

அவள் தயக்கத்தை புரிந்து கொண்ட கௌதம் “ஹே பரவால்ல நானே சாப்படறேன் நீ கஷ்டப்படாதே ” என்று சொல்ல

லக்ஷ்மியோ “இல்ல பரவால்ல” என்று அவனுக்கு மெதுவாக ஊட்டி விட ஆரம்பித்தாள். கௌதமின் மனமும் வயிறும் மெல்ல நிரம்ப ஆரம்பித்தது.

கீழே சென்ற சிவாவோ, குதித்து ஆடிக்கொண்டே, டைனிங் டேபிள் அருகே சென்று அமர்ந்தான் என்ன சிவா ஒரே சந்தோஷமா இருக்கீங்க ? சக்ஸஸ் ? ” என்று கேட்ட காயத்ரியை நோக்கி, இரு கை கட்டை விரல்களையும் உயர்த்திக் காட்டினான்.

” எனக்கு ஒரே பசி சாப்பிடலாமா? வா காயு ! ” என்று அழைக்க அவளும் தனக்கு உதயாவிற்குச் சிவாவிற்கு என்று பரிமாற ஆரம்பிக்க ஹே ! நோ ! கௌதமுக்கு மட்டும் எல்லாரும் ஊட்டி விடறீங்க. நான் மட்டும் என்ன லூசா ? எனக்கு ஊட்டி விடு காயு ! ” என்று அவளையே குழந்தைபோல் பார்த்தான் சிவா.

உதயா சிரித்துக் கொண்டே ம்ம் நான் ஒருத்தி இங்க இருக்கேன் அண்ணா. என்ன இது? ” என்று பொய் கோவம் கொள்ள,

“சிவா ! விளையாடாதீங்க! சாப்பிடுங்க! ” என்று மேலும் பரிமாறினாள் காயத்ரி.

” எனக்கு வேணாம் ! ஊட்டினா ஊட்டு இல்ல லீவ் இட் ! ‘ என்று கோவமாய் அவன் எழுந்து செல்ல, அவன் கையைப் பற்றி இழுத்து இருக்கையில் அமர வைத்தாள் காயத்ரி.

” இப்போ என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ கோவம் ! கௌதம் அண்ணாக்கு அடிபட்டு இருக்கு அதானே ஊட்டி விட்றோம்! உங்களுக்கு என்ன நல்லாத்தானே இருக்கீங்க அதான் கேட்டேன்” என்றாள் அவளும் கோவமாய்.

“ஒ அப்போ எனக்கும் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருந்தா ஊட்டி விடுவியா? சரி நான் போயி எங்கயான இடிச்சுக்குறேன்” என்று அவன் மறுபடியும் எழுந்தான்.

“சிவா… சிட் டௌன் என்று அவன் தோளை பிடித்து அழுத்திய காயத்ரி, முணுமுனுத்துக் கொண்டே சாம்பார் சாதம் பிசைந்து, ஊட்டி விட, அவன் வாயருகில் உணவை கொண்டு செல்ல, அவள் கையைப் பிடித்த சிவா “இப்படித் திட்டிக் கிட்டே ஊட்டி விட்டா உடம்புல ஒட்டாது ! என் பாட்டி சொல்லி இருக்காங்க.சிரிச்சுகிட்டே ஊட்டு ! ” என்று உத்தரவிட்டான்.

அவளோ கடுப்பாய் ஈஈ என்று பல் தெரிய கிண்டலாய் சிரித்துக் கொண்டே மறுபடி ஊட்ட முயல ஐயோ! அம்மா ! இப்படிப் பயமுடுத்தினா எப்படி நான் சாப்டுவேன் ! ஆசையா பாசமா கொஞ்சி கொஞ்சி ஊட்டு என்றான் அதிகாரமாய்.

உதயாவால் இதையெல்லாம் பார்த்துச் சிரிப்பை அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கத் தொடங்கி விட்டாள். இப்பொழுது நிஜமாகவே சிரித்து விட்ட காயத்ரி,

“சரி சரி ஆ காட்டு பாப்போம் என் பட்டுல ! குட்டில ! செல்லம்ல! ஆ காட்டு கண்ணா ! ” என்று அன்பாய் ஊட்ட, சிவாவோ குழந்தையைப் போல் அவள் கையால் உண்ண ஆரம்பித்தான்.

அவன் கண்கள் சிறிது கலங்கி இருப்பதைக் கண்ட காயத்ரி “காரமா இருக்கா ? நெய் விடவா ? ” என்று பதற,
“இல்லமா ரொம்ப வருஷம் ஆச்சு எனக்கு இப்படி யாரவது ஊட்டி விட்டு. கடைசியாய் என் அம்மா ஊட்டி விட்டது ஞாபகம் வந்துடுத்து” என்று சொல்லி திரும்ப ‘ஆ’ என்று வாயை திறந்தான்.

இப்பொழுது காயத்ரியின் கண்களும், உதயாவின் கண்களும் சிறிது கலங்கின “சரி சாப்பிடும்பொழுது பேச கூடாது” என்றவள் மேலும் அவன் உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்க்க,
“இந்தக் குட்டி பையன் சிவாவை இப்போ பார்த்தா யாராவது ஒரு பெரிய கம்பெனியின் முதலாளின்னு சொல்வாங்களா ? ” என்று சொல்லி கொண்டே ஊட்ட.

சிவாவோ ” நோ வே ! அது வேற சிவா இது வேற சிவா ! இந்தச் சிவா என் மனசுக்கு நெருக்கமானவர்கள் பார்க்க மட்டுமே!” என்று சொல்லி அவளைப் பார்த்துக் கண் அடிக்க, அவள் கை தடுமாறியதை கண்டு சிரித்துக் கொண்டான்.

உதயாவோ “காயத்ரி பேசாம அண்ணாவை உன் இடுப்புல எடுத்து வச்சு, தோட்டத்துல வேடிக்கை காட்டி ஊட்டி விடு” என்று நக்கல் அடிக்க,

“வாவ் ! சூப்பர் ஐடியா !” என்று சிவா எழுந்து அவளை நெருங்க,
“ஐயோ, என்ன இது என்னைவிட இவ்ளோ உயரமான குழந்தையை எப்படி நான் தூக்க முடியும் ? ” என்று சொல்லி அவள் நகர,

அவள் காதருகே சென்ற சிவா எல்லா முடியும் ! மனசு தான் வேணும் ! ” என்றான் அவள் மட்டுமே கேட்கும் படி ஹஸ்கி வாய்ஸில். அவள் விக்கித்து நின்றுவிட்டாள்.

மெல்ல விலகி நின்ற சிவா “சரி சரி இன்னிக்கி நான் சேர்லேயே உட்கார்ந்துக்கறேன், ம்ம் ஊட்டி விடு என்று வாயை திறந்தான்.

அவன் கண்களைப் பார்க்காமல் ஊட்டி முடித்தவள், ஏதோ கொரித்து விட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள். சிவாவும் ஏதும் நடக்காதது போல் ஹாலில் அமர்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்தான்.

Rephrase From Here

சற்று நேரத்தில் கீழே வந்த லக்ஷ்மியோ நாணத்தில் சிவந்து உதயாவிடம் நான் நாளைக்கி வரேண்டி. உன் அண்ணா சாப்பிட்டார் மாத்திரை கொடுத்துட்டேன் என்று சொல்லி நிற்காமல் ஓடிவிட்டாள்.

அவள் சென்றபின் கீழே வந்த கௌதமோ ஓடி வந்து சிவாவை கட்டிக்கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தான்.

“ஹே! இட்ஸ் மீ சிவா! நான் லட்சுமி இல்ல டா. லூசு பயலே” என்று கன்னத்தை துடைத்துக் கொண்டே சிவா சிரிக்க

“டேய் ! சிவா ! லட்சுமி ஓகே சொல்லிட்டாடா என்று குதித்துக் குத்தாட்டம் போட, ஹே எப்படி? சோ ஹாப்பி டா!” சிவாவும் கௌதமும் ஆட விஷயம் அறிந்த உதயாவும் அவர்களுடன் குதித்துக் கொண்டாட, சத்தம் கேட்டு காயத்ரி கீழே வர, கெளதம் அவளிடம் தான் லட்சுமியிடம் அவன் காதலை சொன்னதையும், அவள் உடனே அதை ஏற்றுக் கொண்டதையும் சொல்லி குதிக்க அவளும் அவர்களுடன் ஜோதியில் ஐக்கியம் ஆனாள்.