NNA01

NNA01

நீயும் நானும் அன்பே…

என்னுரை…

1990களுக்கு பிறகான காலத்தில் துவங்கி 2006 வரையிலான காலம் வரை நடைபெற்ற சம்பவங்களாக இந்நாவல் புனையப்பட உள்ளது. 

முதன் முதலாக காதலை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு அதனை மையமாகக் கொண்ட களமாக “நீயும் நானும் அன்பே”, எனும் நாவலில், எனது பயணத்தை துவங்க இருக்கிறேன்.

எனது ஆறாவது படைப்பான இந்த நாவலின் நாயகனை, ரஜோ குணமுடையவனாகச் சித்தரித்திருக்கிறேன்.

ரஜோ குணத்தான், முன்கோபம், வேகம், வீரம், கடினத் தன்மை, உழைப்பாளி, பயமறியான், முரட்டு சுபாவம், எதையும் இலகுவாகக் கையாளும் தன்மையினாலான குணங்களைக் கொண்டு இருப்பான்.  இது ரஜோ குணத்தின் பொதுத்தன்மை.  இதன் கலவையாக நமது நாயகன் வலம் வர இருக்கிறான்.

இதுவரை வந்த எனது படைப்புகளில், சாந்த மற்றும் மந்த குணமுடையவர்களையே நாயகனாகக் கொண்டு நாவல் புனையப்பட்டிருந்தது.

எனது கடந்த நாவல்களில் இருந்து மாறுபட்ட குணமுடைய நாயகனுடன் இதில் பயணிக்க இருக்கிறேன்.

கருத்து சொல்லும் அளவிற்கு எந்த முயற்சியும் இதுவரை மேற்கொண்டதில்லை.  அதேபோல இந்நாவலிலும் கேட்டறிந்த விடயங்களின் தாக்கக்கங்ளை உள்ளடக்கிய சாதாரண நிகழ்வுகளைக் கொண்டே கதைக்களத்தைக் கொடுக்க இருக்கிறேன்.

இதுவரை வந்த எனது ஐந்து படைப்புகளுக்கும் தந்த ஊக்கத்தை, இந்த படைப்பிற்கும் தந்து, எமை உத்வேகத்தோடு வழிநடத்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இந்நாவலில் கதைமாந்தர்கள் சற்று கூடுதலாகவே இடையிடையே வந்து செல்வார்கள்.  அது கதைக்கு வேண்டி பயன்படுத்தப்படுகிறது.  தவிர்க்க இயலாததால் அவ்வாறு கையாளப்பட இருக்கிறது என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்… சரோஜினி

error: Content is protected !!