odiumafull
odiumafull
ஓடி போகலாம் 1
மலேஷியா கோலாலம்பூர் நகரத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் ஷியாங் டுயாவிற்கும், நிஷா தேவிக்கும் திருமணம் அந்த ஆலயத்தை நடத்தி வரும் தந்தை பெர்னார்ட் நடத்தி வைத்தார்.
மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பூக்களை தூவி அவர்களை வாழ்த்தினர். மீடியா மக்கள் ஒரு புறம் அவர்களின் திருமணத்தை பதிவு செய்து, அதை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டு இருந்தனர் மக்கள் அனைவரும் காண.
ஆம்! மக்கள் அனைவரும் காணும் அளவுக்கு அவர்களின் குடும்பம் பிரபலம் அங்கே. ஷியாங் டுயாவின் தந்தை மிகப் பெரிய தொழிலதிபர்.
இவர்களின் தொழில் கேசினோ, பார் மற்றும் சினிமா படத்திற்கு செட் அமைத்துக் கொடுப்பது. இவர்களின் கேசினோ இல்லாத இடமே இல்லை, உலகத்தில் உள்ள அனைத்து மூலைகளிலும் அவர்களின் கேசினோ தான் இன்று டாப்.
ஷியாங் இதில் சினிமா செட் அமைத்துக் கொடுக்கும் வேலையிலும், சினிமாவில் கதாநாயகனாகவும் புகழ் பெற்றவன். பெண்கள் கூட்டம் எப்பொழுதும் அவனை சுற்றி இருக்கும், அவன் அதை சிரித்தபடியே கடந்து விடுவான்.
நிஷாவின் குடும்பம் மிக பெரிய ஜமீன்தார் குடும்பம் மலேசியாவில் தற்பொழுது, தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தில் இருந்து தப்பி இங்கே வந்தவர்கள் தான் இவர்கள்.
இங்கேயும், ஆங்கிலேயர்களின் ஆட்சி அப்பொழுது இருந்தாலும் சிறிது காலத்தில் அவர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க போராடி, அதன் பின் மலேஷிய தமிழர்கள் என்று அவர்களுக்கென்று பெயர் வரவும், அதன் பின் தான் நிம்மதியாக சுவாசித்தனர்.
அங்கே பதினைந்து சதவீதம் மலேஷிய தமிழர்கள் தான் இப்பொழுது, நிஷாவின் குடும்பம் ரியல் எஸ்டேட் பல செய்து அங்கே வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
இரு குடும்பத்துக்கும், இந்த இரண்டு வருடங்களாக தான் அறிமுகம் தொழில்முறை மூலம். அது இப்பொழுது பிள்ளைகளின் திருமணம் வரை கொண்டு வந்து இருக்கிறது.
அன்று காலையில் தான் மலேஷியா வந்து இறங்கிய நிஷாவிற்கு, இச்செய்தி அதிர்ச்சியை அளித்தது.
“அம்மா! என்னமா இது? அவங்களோட பிசினஸ் பண்ணுறது வேற, இப்படி கல்யாணம் பண்ணுறது வேற. பாட்டிக்கு தெரிஞ்சா முதல உங்களை தான் பிடிபிடின்னு பிடிப்பாங்க” என்று கூறிய மகளை பார்த்து சிரித்தார் ஜியா.
“ஐடியா கொடுத்ததே உங்க பாட்டி தான், நீ முதல குளிச்சிட்டு வா சடங்கு செய்யணும் உனக்கு இப்போ” என்று கூறிவிட்டு செல்லும் அன்னையை பார்த்து அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது.
தந்தை சிவலிங்க மூர்த்தியிடம் போய் இப்பொழுது இது வேண்டாம் என்றும் சொல்ல முடியாது, ஏனெனில் இதில் அவருடைய கௌரவமும் அடங்கி இருக்கிறது. சில பல மாதங்களுக்கு முன்னால் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், இந்த இரு குடும்ப தலைவர்கள் மீதும் ஊழல் வழக்கு போடபட்டு இருந்தது.
அதன் தாக்கம் குறைய தான், நிஷாவின் பாட்டி காமாட்சி தேவி இந்த யோசனை கூறியது. அதன் விளைவே இத்திருமணம், கண்துடைப்பிற்காக.
“பாட்டி! உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல, நீங்க தான் கல்யாணம் அதன் புனிதம் என்னன்னு எல்லாம் சொல்லிக் கொடுத்தீங்க. இப்போ நீங்களே, இப்படி சும்மா கொஞ்ச நாளைக்கு அவனை சகிச்சிகோ அப்படினு சொன்னா என்ன அர்த்தம்?” என்று தனக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என்பதை கூறினாள்.
“அடியே உன் மனசுல வேற யாரும் இருக்குறாங்களா! அப்படி எதுவும் இருந்தா சொல்லிடு இப்போவே, இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்” என்று அவர் சொல்லவும் அவள் அப்படி எல்லாம் யாரும் என் மனதில் இல்லை, ஆனால் திருமணம் இப்படி ஒரு காரணத்துக்காக வேண்டாம் என்றாள்.
“நீ ஏன் இதை இப்படி நினைக்கிற? இதான் கடவுள் உங்களுக்கு போட்ட முடிச்சு அப்படினு நினைச்சு, இந்த கல்யாணம் உண்மை அப்படினு நினை. நல்லபடியா அவன் கூட வாழ்ந்து ஜெய்ச்சு காட்டு முடிஞ்சா” என்று அவர் முடித்து விடவும், அவள் யோசிக்க தொடங்கினாள்.
“நாம ஏன் பாட்டி சொன்னது மாதிரி, இந்த கல்யாணத்தை அங்கீகரிச்சு அதை வாழ்ந்து ஜெய்ச்சு காட்ட கூடாது. அவன் படத்துல ஹீரோவா நடிச்சு இருக்கான் மட்டும் தான் தெரியும், அவனை பத்தி வேற எதுவும் தெரியாது நமக்கு”.
“செம திரில்லிங்கா இருக்கும் ஒவ்வொரு நாளும், அவனை பத்தி தெரிஞ்சுகிட்டு, நாம அவனுக்கு ஒவ்வொரு நாளும் நம்ம அன்பை செலுத்தலாம். அவனையும் நம்ம மேல அன்பு செலுத்த வைக்கலாம், கொஞ்சம் கஷ்டபடனும் பரவாலை, கஷ்டபட்டா தான் ஜெய்க்க முடியும்” என்று எண்ணிக் கொண்டு சந்தோஷமாகவே இந்த திருமணத்தை எதிர்கொள்ள தொடங்கினாள்.
சடங்கு செய்ய அங்கே பெரியவர்கள் கூடி இருக்க, கூடவே மணமகனின் தாயாரும் சில உறவு பெண்களும் அங்கே கூடி இருந்து அவளுக்கு கல்யாண சடங்கு செய்து அந்த விசேஷத்தை சிறப்பித்து அவளை ஆசிர்வதித்தனர்.
அன்று காலை சடங்கு முடிந்த பின், அவள் அயர்ந்து உறங்கி விட்டாள். அதன் பின் மாலை ஐந்து மணிக்கு அவளை எழுப்பிவிட்டு, சாப்பிட வைத்த பின் இரவு கிறிஸ்துவ முறைப்படி நடக்கும் திருமணத்திற்கு அவளை தயார் செய்ய தொடங்கினர்.
இங்கே இவள் கல்யாணத்திற்கு தயாராக, அங்கே ஷியாங் தன் தோழர்களோடு ஆடி பாடிக் கொண்டாடிக் கொண்டு இருந்தான், அவனின் பட வெற்றிக்காக.
“ஹே ஷியாங்! கம் ஆன் இட்ஸ் கெட்டிங் லேட், வீ் ஹவ் டூ கோ நௌ மேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் கல்யாணம் இவனுக்கு, அதை பத்தியே யோசிக்காம இங்க இப்படி ஜாலியா இருக்கான் பாரு” என்று அவனின் உயிர் நண்பன் டிசங் அவனை அழைத்துவிட்டு மனதிற்குள் புலம்பினான்.
“ஹே! ஐ நோ வாட் ஐ அம் டூயிங் மேன். இந்த கல்யாணமே ஜஸ்ட் ஒரு நாடகம் தான், இதை பத்தி நான் யோசிக்க என்ன இருக்கு?” என்று அவனை அறிந்தவனாக ஷியாங் பதில் கூறினான்.
டிசங், ஷியாங் இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரையும் எப்பொழுதும் சேர்ந்தே காணலாம், அப்படி இணை பிரியாத தோழர்கள் இவர்கள்.
சீன மொழி தான் இவர்களின் தாய் மொழி, அதில் தான் அதிகம் உரையாடுவது இருவரும். எப்பொழுதாவது ஆங்கிலம் சரளமாக வந்துவிடும், அந்த அந்த இடத்தை பொறுத்து.
இப்பொழுது கூட இந்த வெற்றி கொண்டாட்டம், அங்கே பிரபலமான இவர்களின் பார் ஒன்றில் தான் நடந்து கொண்டு இருக்கிறது. எகபட்ட பெண் ரசிகைகள், அங்கே இவனை சுற்றி வட்டம் அடித்தாலும் இவன் யாரையும் கண்டு கொள்வது இல்லை.
ஒரு சிரிப்பு சிரித்து, அங்கு இருந்து நைசாக கழண்டு கொள்ளுவான். இந்த வெற்றி கொண்டாட்டம் கூட, அவனை பொறுத்த வரை ஒரு பிசினஸ் போல தான்.
இதை வைத்து, அங்கே விழாவிற்கு வரும் இயக்குனர்களை பிடித்து கதை கேட்டு, அவனுக்கு பிடித்து இருந்தால் உடனே ஓகே செய்து, அடுத்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விடுவான்.
அத்தோடு நிறுத்தாமல், அந்த படத்தில் அமைக்கப்படும் செட் இவனின் கை வரிசையில் தான் இருக்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்டாக பத்திரம் பதிவு செய்து வாங்கி விடுவான்.
அவனிற்கு அவனது தொழில் முதல் குழந்தை போல் தான். அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை, அவன் நன்கு கற்று தேர்ந்து இருந்தான்.
டெங் லன் சீன நடிகர் போல் இருப்பவனை பார்க்க, எல்லோருக்கும் பிடிக்கும். அவனுக்கு பிடித்தது எல்லாம் தொழில், தொழில், தொழில் மட்டுமே. அதில் ஒரு சின்ன சறுக்கல் வந்தால் கூட, அவனால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
அப்படி சருகிய நாட்களில், கோபம் மட்டுமே அவனுடைய பிரதானம் முதலில். இரு வாரங்கள் முடிந்து தான் நிதானத்திற்கு வந்து, எங்கு தவறு செய்தோம் என்பதை யோசித்து அதன் பிறகு அதை சரிசெய்து விடுவான்.
இப்பொழுது இந்த கண்துடைப்பு திருமணம், அவனை பொறுத்த வரை அது விளையாட்டு விஷயம். படங்களில் நடிப்பது போல் நடித்துவிட்டு, அதன் பின் அவன் வேலையை பார்க்க செல்லலாம் என்று இப்பொழுது வரை நினைத்து கொண்டு இருக்கிறான்.
ஆனால் அங்கே நிஷா அவனை அப்படி விட போவது இல்லை என்று அவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. நண்பனுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான், திருமணத்திற்கு தயாராக.
“இது என்ன யார் வீட்டு கல்யாணமோ அப்படின்ற மாதிரி, நீ இவ்வளவு லேட்டா வருகிற. போகிறது உன் கல்யாணத்துக்கு, சீக்கிரம் கிளம்பி போகனும் அப்படினு தெரிய வேண்டாமா உனக்கு. இப்படி பொறுப்பில்லாமல் இருந்தால் என்ன அர்த்தம்?” என்று அவனின் தாத்தா சங் ஹுயா சிடுசிடுத்தார் அவனிடம்.
அவனோ அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், படு நிதானமாக கிளம்பி அங்கே வந்தான். அவனின் தந்தை ஹிங் ஜியான்க்கு அவனை பற்றி தெரியும் நன்றாக, எனவே தந்தையை கட்டுபடுத்த முயன்றார்.
“அப்பா! இப்போ அவன் கிட்ட எதுவும் வாய் கொடுக்காதீங்க, அப்புறம் கல்யாணம் வேண்டாம் அப்படினு போய் விட போறான். கல்யாணம் முடியட்டும் முதல அப்புறம் நிஷா பொண்ணே அவனை வழிக்கு கொண்டு வந்து விடுவாள்” என்று கூறிய பின் தான் சற்று நிதானித்தார்.
இருந்தாலும் பேரன் செய்த தவறை சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்று கூறி, அவன் அவர் மீது கோபப்படாதவாறு பார்த்துக் கொண்டார்.
இப்படி ஷியாங் இங்கே எதை பற்றியும் கவலை படாது கிளம்ப, அங்கே நிஷா சிறு பரபரப்புடன் மணமகளுக்கே உரிய கலக்கத்தோடு கிளம்பினாள்.
இரு வீட்டாரும், அங்கே ஆலயத்தில் கூட முதலில் மணமகன் ஷியாங் தன் கம்பீர நடையோடு அங்கே போடபட்டு இருந்த மேடை முன் போய் நின்றான்.
சிறிது நேரத்தில், மணமகளின் வரவு என்று சபையில் அறிவிக்க நிஷா தன் தந்தை கை பிடித்துக் கொண்டு மெதுவாக மேடை முன் வந்தாள். அவளின் தந்தை அவளின் கையை, மணமகன் ஷியாங்கிடம் தாரை வார்த்து கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.
தந்தை பெர்னார்ட், பைபிள் வசனம் கூறி மனதார கடவுளிடம் பிரார்த்தனை நடத்த ஜெபங்களை ஓத, அனைவரும் அவருடன் சேர்ந்து படித்தனர். அதன் பின் அவர் இருவரிடமும் திருமணத்திற்கு சம்மதம் கேட்க, இருவரும் சம்மதம் என்று கூறிய பின், மோதிரம் மாற்றிக் கொள்ள கூறினார்.
முதலில் ஷியாங் அவளுக்கு மோதிரம் அணிய, அப்பொழுது அவன் முகத்தை பார்த்த நிஷா அதிர்ந்தாள். எந்தவித உணர்ச்சியும் இல்லாமல், கல் போல் நின்று கொண்டு சொன்னதை செய்துக் கொண்டு இருக்கும் அவனை பார்த்து அதிர்ந்து தான் போனாள்.
“சுத்தம்! நிஷு பேபி இவன் கூட ஓடி போக பிளான் போட்டியே, இவனை முதல உன்னை பார்க்க வை அப்புறம் பிளான் பண்ணு” என்று மனசாட்சி செய்த கிண்டலில் சிலிர்த்து விட்டாள்.
“இந்த நிஷு தோற்க மாட்டா, ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பு செலுத்த தான் போறோம். அதுக்கு முன்னாடி இவன் கூட இன்னைக்கு நைட்டே ஓடி போக போறேன்”.
“டேய் ஷிபாங்! ஹையோ இல்லை ஷீஃபாங்கா? ச இப்படி பேர் கூட வாய்ல நுழைய மாட்டேங்குது. இது சரிப்படாது, இனி உன்னை மியாவ் அப்படினு தான் கூப்பிட போறேன்” என்று மனதிற்குள் இத்தனையும் நினைத்து விட்டாள் சில மணித்துளிகளில்.
அடுத்து, அவன் கை பிடித்து மோதிரம் அணியும் பொழுது, அவள் போடவே முடியவில்லை என்பது போல் அவனின் கையில் சற்று அழுத்தம் கொடுத்து கொடுத்து,. அவனுக்கு வலியை உண்டாக்கி விட்டாள்.
அதில் அவன் சற்று கடுப்பாகி, அவளை அப்பொழுது தான் நிமிர்ந்து பார்த்தான். பார்த்தவன், அவள் கண்களில் வழியும் குறும்பை கண்டுகொண்டான்.
இதழ் கடையோரம் அவன் சிரித்த சிரிப்பில், ஓரக்கண்ணால் அவனை பார்த்துக் கொண்டு இருந்த அவனின் சரிபாதி மயங்கி போனாள்.
“சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கான், அப்புறம் ஏன் அவன் அப்படி இறுக்கமா இருந்தான் அப்போ? எதோ சரியில்லையோ” என்று அவள் எண்ணி முடிப்பதற்குள் அவன் அடுத்து செய்த செயலில் அதிர்ந்து போனாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில், அவளின் உதட்டை இவன் உதட்டோடு பொருத்தி முத்தம் தந்து, அவளின் விரிந்த கண்ணை பார்த்து கண்ணடித்து மேலும் மயக்கினான்.
மங்கையவள், அதில் சற்று அதிர்ந்தாலும் தன் மணாளனின் குறும்பில் மயங்கி தான் போனாள். இப்படி இவள் மயங்கி இருப்பதை அறிந்தாலும், அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் அன்று இரவே பங்காக் செல்ல விமானம் ஏறி அமர்ந்தான்.
அவ்வளவு சீக்கிரம் அவன் தனியாக ஓடி போக அவனின் சரி பாதி விடுவாளா என்ன, பின்னாடியே அவனோடு ஓட அவனருகில் வந்து அமர்ந்தாள்.
தொடரும்..
ஓடி போகலாம் 2
நிஷா அரக்க பறக்க மலேஷியா klia ஏர்போர்ட் வந்து செக் இன், இமிகரேஷன் எல்லாம் முடித்துக் கொண்டு வேகமாக அவள் ஏற வேண்டிய விமானத்தில் ஏறி அமர்ந்தாள்.
பக்கத்தில் அமர்ந்து இருந்த அவளின் மணாளன் ஷியாங், இவளை அங்கே அப்பொழுது எதிர்பார்க்கவில்லை. மோதிரம் மாற்றும் நேரம் தான் இவளை கவனித்து பார்த்து இருந்தான், அதன் பின் அவளின் குறும்பு புரிந்து அவள் எதிர்பாராத நேரம் முத்தம் கொடுத்தான் அவளின் இதழில்.
அதுவும் முத்தம் கொடுக்கும் எண்ணம் அதுவரை இல்லாமல் இருந்தவன், அவளின் குறும்புதனத்தில் கொடுக்க எண்ணி கொடுத்தானா, இல்லை அவளின் செர்ரி உதடை சுவைக்க எண்ணி முத்தம் கொடுத்தானா என்பதை அவனும் அறியவில்லை.
ஆனால் இந்த குறுகிய நேரத்திற்குள் அவளின் முகம் அவனின் மனதில் அப்பட்டமாக பதிந்து இருப்பதை, அவனால் அதிர்ச்சியோடு அதை உள் வாங்க முடிந்தது.
அவனின் போன் அலறிய பின் தான், இன்னும் தன் செல்பேசியை ஸ்விட்ச் ஆப் செய்யவில்லை என்பதை உணர்ந்தான். உடனே யார் என்று பார்த்தவன், அவனின் தாத்தா தான் அழைத்து இருந்தார்.
“அறிவுகெட்டவனே! என்னதான் இது கண்துடைப்பு கல்யாணம் அப்படினாலும் அது நமக்கு மட்டும் தான். மீடியாகாரன், இந்த கல்யாணத்தை உலகம் முழுதும் பரப்பிட்டான்”.
“கல்யாணம் முடிஞ்ச கையோட, தனியா கிளம்பி போனால் எல்லோரும் என்ன நினைப்பாங்க? கொஞ்சம் கூட அறிவே இல்லை உனக்கு, எல்லாத்தையும் நானே சொல்லிக் கொடுக்கணுமா என்ன?” என்று சிடுசிடுத்தார்.
“என்ன தான் பிரச்சினை உங்களுக்கு? ஏன் இப்படி என் உயிரை வாங்குறீங்க?” என்று அவருக்கு மேல் இவன் கத்தினான்.
“உன் உயிரை வாங்கி நான் என்ன செய்ய போறேன்? உன்னை மாதிரியே இருப்பா போல உன் பொண்டாட்டி, அவளும் எங்க போறா அப்படினு சொல்லாம, கிளம்புறேன் பை சொல்லிட்டு கிளம்பி போய்ட்டா”.
“இந்த காலத்து பிள்ளைங்க ரொம்ப மோசம், எப்போ தான் எங்க பேச்சை கேட்பீங்களோ? முதல உன் பொண்டாட்டியை தேடி கண்டுபிடிச்சு, அவ கூட ஹனிமூன் போன மாதிரி பில்ட் அப் பண்ணு புரியுதா!” என்று சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு போனை வைத்தார்.
அதற்குள் விமான பணிப்பெண் வந்து, அவனின் செல்பேசியை அனைத்து வைக்குமாறு கூறவும் அவன் உடனே முதல் வேலையாக அதை செய்து முடித்தான்.
அவளை அவன் பார்க்க அவளோ அவனை பார்க்காது, கையோடு கொண்டு வந்து இருந்த பொன்னியின் செல்வன் கதையை படித்துக் கொண்டு இருந்தாள்.
இதுவரை அவனின் பார்வைக்காக, அவனின் ஒற்றை சிரிப்புகாக தவமாக காத்து கொண்டு இருந்த பெண்களையே பார்த்து பழகியவன், முதல் முறையாக ஒருத்தியை திருமணம் புரிந்து அவளுக்கு முத்தமும் கொடுத்து, அதில் அவள் மயங்கி இருந்ததையும் பார்த்துவிட்டு இப்பொழுது அதற்கு நேர்மாறாக இவனை யார் என்றே தெரியாது என்பது போல் அமர்ந்து இருந்தவளை பார்த்து எரிச்சல் வந்தது.
“பாவி! நானாவது சொல்லிட்டு வந்தேன் ஷுட்டிங் போறேன் அப்படினு, இவ கிளம்புறேன் மட்டும் சொல்லிட்டு எங்க போறேன் அப்படினு சொல்லாம வந்து இருக்கா”.
“இவளை தண்ணி தெளிச்சு விட தான் ஒரு வேளை, இவங்க வீட்டுல என்னோட இவளை கோர்த்து விட்டாங்களா?” மனதிற்குள் அவளை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டு இருந்தான்.
இதை தானே நிஷாவும் எதிர்பார்த்தாள், அவளைப் பற்றி மட்டுமே அவன் நினைக்க வேண்டும் என்று. அதற்கு தானே அவள் ஒவ்வொரு காயாக, நகர்திக் கொண்டு இருக்கிறாள்.
இங்கு நிஷாவோ அவன் அருகில் அமர்ந்து கொண்டு, தன் பாட்டி கூறியதை தான் நினைத்துக் கொண்டு இருந்தாள்.
“இங்க பாரு நிஷா உனக்கு அவர் மேலயும், அவருக்கு உன் மேலயும் அன்பு மட்டும் இருந்தா போதாது, புரிதல் வேண்டும். கணவன்,மனைவி உறவுகுள்ள அன்பு மட்டும் இருந்தா பத்தாது, ஒருத்தருடைய மரியாதையை எங்கும் விட்டுக் கொடுக்காமல் இருக்கவும் தெரியணும், விட்டுக் கொடுத்து வாழவும் தெரியணும்”.
“சில திருமணங்கள் ஜெய்கிறது இல்லை, காரணம் அங்க புரிதல் இல்லை. உன் திருமணம் ஜெய்க்கணும் அப்படினா நீயும் உன் சரிபாதியை புரிஞ்சிக்கனும், உன் சரிபாதியும் உன்னை புரிந்து வைத்து இருக்கணும்” என்று அவள் பாட்டி கூறியதை தான் தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அவளை பொறுத்தவரை ஒரு தடவை தான் தன் திருமணம், அதை வாழ்ந்து ஜெய்க்க தன்னால் ஆன எல்லா முயற்சியும் செய்து விடுவது.
அதற்கு முதல்படியாக தான் அவள் அவன் தாத்தாவை, அவனிடம் அப்படி பேச வைத்தது. அவனும் அதற்கு ஏற்றார் போல், இவளை தான் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தான்.
“இவன் கூட ஓடி போக எவ்வளவு பண்ண வேண்டி இருக்கு, அதுவும் கல்யாணம் பண்ணிகிட்டு ஓடி போக ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கு. ஆண்டவா! எங்களை நீ தான் காப்பாத்தனும்” என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டு இருந்தாள்.
கண் மூடி வேண்டுதல் வைத்துக் கொண்டு, அலைச்சல் காரணமாக சரியாக தூங்காததால் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள் நிஷா. உறங்கும் பொழுது, அவளின் சோர்ந்த முகம் அவளின் களைப்பை அப்பட்டமாக எடுத்து காட்டியது அவனுக்கு.
“பாவம் காலையில் தான் இந்தியாவில் இருந்து வந்தா சொன்னாங்க, இப்போ உடனே பங்காக் கிளம்பியகனுமா. இவ இப்போ எதுக்கு அங்க போறா? என்ன வேலை செய்றா இவ முதல?”.
“ச! நான் எதுக்கு இவளை பத்தியே நினைக்கிறேன்! ஜஸ்ட் இது கண் துடைப்பு கல்யாணம் தானே, இனி இவளை நினைக்காம நாளைக்கு ஷுட்டிங் ல செட் சரியா போட்டுக் கொடுக்கிறதை பத்தி யோசிக்கணும்” என்று எண்ணிக் கொண்டே அடுத்து அடுத்து செய்ய வேண்டியதை பட்டியலிட தொடங்கினான்.
சிறிது நேரத்தில் அவனுக்கும் கண்கள் தூக்கத்துக்கு செல்ல தொடங்கவும், அப்படியே அவள் மேல் சரிந்து தூங்கிவிட்டான். தன் மேல் எதோ பாரம் அழுத்துவதை உணர்ந்தவள், அரை தூக்கத்தில் விழித்து பார்த்தவள் அவனின் மணாளன் அவள் மீது சரிந்து உறங்குவதை பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டே தூக்கத்தை தொடர்ந்தாள்.
விமானம் தரை இறங்கிய பின் எல்லோரும் இறங்கிய பின்னர், மெதுவாக இவர்கள் இறங்கினர். அவளிடம் எங்கே தங்கி இருக்கிறாள் என்று இவன் கேட்க நினைக்க, அவளோ அவனுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கொடுக்காமல் அவள் பாட்டுக்கு முன்னே நடந்து சென்றாள்.
இவனும் அவளின் இந்த அலட்சியத்தில் அவளை கண்டுகொள்ளாமல், தன் உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினான். அங்கே இவனுக்காக காத்துக் கொண்டு இருந்த காரில் இவன் ஏறவும் வண்டி நேராக பட்டாயா நோக்கி சென்றது.
அங்கே வழக்கம் போல் அவன் தங்கும் ஹார்ட் ராக் ஹோட்டலில் வண்டி நின்றது. வெயிட்டர் அவனின் உடமைகளை எடுத்துக் கொண்டு உள்ளே வர, இவன் ரிசப்ஷன் முன் நின்று எப்பொழுதும் அவன் தங்கும் சூட் ரூம் கேட்டான்.
“சாரி சார்! தட் ரூம் இஸ் ஆல்ரெடி புக்ட் அண்ட் அவர் கெஸ்ட் இஸ் ஸ்டேயிங் தேர்” என்று அந்த ரிசப்ஷன் பெண்மணி கூறவும் அதிர்ந்தான்.
“வாட்! லுக் மிஸ் ஐ அம் தி பெர்சன் புக்ட் திஸ் சூட் லாஸ்ட் வீக் இட்செல்ப். பிளீஸ் செக் இட் புரோபர்லி, அண்ட் லெட் மீ நோ” என்றவன் பொறுமையாக காத்து இருந்தான்.
அவனின் ராசியான சூட் அது, சீசன் நேரம் வேறு என்று போன வாரமே முன் பதிவு செய்துவிட்டு இருந்தான். இப்பொழுது அந்த அறை இல்லை என்றால், அவன் கோபம் கொள்ளாமல் என்ன செய்வான்.
“சாரி சார்! அவர் கெஸ்ட் மிஸ் நிஷா புக்ட் தி சூட் பிஃபோர் யூ சார். கேன் ஐ அரேஞ்ச் சம் அதர் சூட் பார் யூ” என்று கேட்டவுடன் அவனுக்கு பிபீ ஏறாத குறை தான்.
அவனின் நண்பனும், அவனின் வலது கையுமான நண்பன் டிசங்கிற்கு அழைத்தான் ஷியாங். அவனிடம் அந்த அறையை எப்படியாவது அவனுக்கு மாற்றி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டு இருந்தான்.
“டேய்! ஏற்கனவே பேசிட்டேன் டா அந்த பொண்ணு கிட்ட. அந்த பொண்ணுக்கு அது தான் ராசியான சூட்டாம், விட்டுக் கொடுக்க மாட்டேன் சொல்லிடுச்சு. வேணும்னா, நீ அங்க ரூம்க்கு போய் திரும்ப அந்த பொண்ணுகிட்ட பேசி பாரேன்” என்று கூறிவிட்டு செல்லை அணைத்தான்.
எரிச்சலில் இருந்தவன், நேராக அந்த சூட் அறைக்கு முன் நின்று பெல்லை அழுத்தினான். கதவை திறந்த நிஷாவை பார்த்தவன், சத்தியமாக அவளை அங்கே அவன் எதிர்பார்க்கவில்லை.
“என்ன வேணும்?” என்று அவள் கேட்டதற்கு, அப்பொழுது அவனின் வாய் தன்னை போல் நீ தான் வேண்டும் என்றது.
“வாட்!” என்று அவள் சற்று பலமாக அதிர்ந்த பிறகு தான், அவன் சொன்னதின் பொருளை உணர்ந்து தன்னையே கடிந்து கொண்டான்.
“சாரி! இந்த சூட் ரூம் எனக்கு வேண்டும். எனக்கு இது தான் ராசியான சூட், பிளீஸ் எனக்கு இதை கொடுத்திட்டு, நீ வேற சூட் எடுத்துக்கோ” என்று பவ்யமாக அவன் கேட்கவும் அதை விட பவியமாக அவள் முடியாது என்று கூறியதோடு, அறை கதவை சாற்ற போனாள்.
அவன் அவள் கதவை சாற்ற விடாமல் செய்துவிட்டு, அவளை இடித்துக் கொண்டு உள்ளே வந்து கதவை அடைத்தான்.
“Mrs. ஷியாங் நமக்கு தான் இன்னைக்கு கல்யாணம் முடிஞ்சதே அதுவும் இப்போ நமக்கு ஃபர்ஸ்ட் நைட் ஆச்சே, எதுக்கு தனி தனி ரூம் நாம ஒன்னாவே இருக்கலாம்” என்று கூறிவிட்டு, அவள் எதிர்பாராத நேரத்தில் அவளை இழுத்து அணைத்து இதழில் முத்தம் பதித்தான்.
அதிர்ச்சியில் கண்களை ஸாசர் போல் விரித்து, அவனை அவள் பார்க்க அவனோ முத்தம் கொடுப்பதில் தீவிரம் காட்டினான்.
அவனின் இந்த அதிரடியில், அவள் மூளை சிறிது நேரம் மரத்து போய் இருந்தது. சட்டென்று சுதாரித்து அவனிடம் இருந்து விலகி, தன்னை பிரித்து எடுத்தாள்.
“இடியட்! கட்டின பொண்டாட்டியா இருந்தாலும், அவளுக்கு சம்மதமா அப்படினு கேட்டுட்டு தான் செய்யணும். டேய் மியாவ்! முதல நீ என்னை புரிஞ்சிக்க டிரை பண்ணு,அப்புறம் தொடலாம்”.
“வெளியே இந்த சோபாவே மெத்தை மாதிரி ஜம்முனு தான் இருக்கு, இங்கேயே படுத்து தூங்கு. உள்ள பெட்ரூம் வந்தா, அடி பின்னி எடுத்து விடுவேன் பார்த்துக்கோ” என்று மிரட்டிவிட்டு சென்றவளை பார்த்து முதல் முதலாக அவளை இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.
எத்தனையோ பெண்கள் இவனை சுற்ற, எந்த பெண்ணையும் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் இருந்தவன், இப்பொழுது மனைவியை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினான்.
நிஷாவோ, அவன் கொடுத்த முத்தத்தில் மயங்கி அதையே நினைத்துக் கொண்டு, அவனோடு தனியாக ஓடி போக அடுத்த திட்டம் தீட்ட தொடங்கினாள்.
தொடரும்..
ஓடி போகலாம் 3
காலை ஆறு மணியளவில் நிஷாவின் செல்பேசி அலறிய அலரலில் தான் ஷியாங் கண் விழித்தான். அலரும் பாடல் அப்படிப்பட்டது, அவள் எழுவதற்காக செட் செய்யப்பட்ட பாடல் அது.
அதை அவன் அணைக்காமல் விட்டதால், அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் அலறியது.
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததமா பெண்கள் எல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
இந்த பாடலை அவன் இப்பொழுது தான் கேட்கிறான், அவனுக்கு தெரிந்ததெல்லாம் ராப் மியுசிக், லைட் மியூசிக் வகையறா மட்டுமே.
உள்ளே மாஸ்டர் பெட்ரூமில் படுத்து இருந்தவள், அதன் சத்தத்தில் மெதுவாக ஆடிக் கொண்டே வந்தாள் அந்த இசைக்கு ஏற்ப. அவளின் ஆட்டத்தை பார்த்தவனுக்கு, அவள் குடித்து இருக்கிறாளோ என்று ஐயம் ஏற்பட்டது.
உடனே அதை தெளிவுபடுத்த, மெதுவாக அவள் அருகில் சென்று சற்று மோந்து பார்க்க, அவள் குடித்தற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
“குடிக்க எல்லாம் இல்லை, இந்த பாட்டுக்கு இப்படி ஆடலை அப்படினா தான் தெய்வ குத்தம் ஆகிடும்” என்று சொல்லிக் கொண்டே அலாரத்தை அணைத்துவிட்டு தன் உடமைகளை எடுத்துக் கொண்டு குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.
“ச நிம்மதியா தூங்க கூட முடியல, சீக்கிரம் ஷுட்டிங் ஸ்பாட் எங்க அப்படினு கேட்டு உடனே அங்க போகனும்” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டான்.
அரை மணி நேரத்தில் குளித்து வெளியே வந்தவள், பரபரவென்று கிளம்ப தொடங்கினாள். அவளின் பரபரப்பை பார்த்து அலட்டிக் கொள்ளாமல் அவன் மெதுவாக கிளம்ப தொடங்கினான்.
அவனின் நிதானத்தை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். ஒரு தாளில் சீக்கிரம் சந்திக்கலாம் மியாவ் பேபி என்று எழுதி ஆங்கிலத்தில் எழுதி வைத்துவிட்டு அங்கு இருந்து புறப்பட்டாள்.
அவள் சென்ற சில மணி துளிகளில் அவன் தயாராகி தன்னுடைய அசிஸ்டன்ட்டும், நன்பனுமான டிசங் வரவிற்காக காத்து இருக்க தொடங்கினான். அவனின் கண்ணில் அப்பொழுது அவள் எழுதி வைத்து இருந்த தாள் படவும், எடுத்து படிக்க தொடங்கினான்.
அதில் அவனை அவள் மியாவ் என்று குறிப்பிட்டதை பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
ஏனோ, இதுவரை இவனை சுற்றி வந்த பெண்களையே பார்த்து பழகியவன் முதல் முறையாக இவன் ஒருத்தியை நினைக்க தொடங்கி இருக்கிறான்.
டிசங் வரவும், அவனோடு உரையடியபடியே கோரல் ஐலண்ட் வந்து இறங்கியவன் அங்கே இருந்த குழுவை பார்த்து, கேள்வியாக நண்பனை ஏறிட்டான்.
“இந்த படம் ஆக்ஷன் படம், ஸ்டண்ட் எல்லாம் வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டர் தான் இதை பண்ணுறாங்க. சோ அந்த டீமும், கேமரா டீமும் புதுசு”.
“எல்லாம் செக் பண்ணி தான் வரவழைச்சு இருக்கேன், வா” என்று அவனை அழைத்துக் கொண்டு ஸ்பீட் போட் ஒன்றில் ஏறினான்.
அது நேராக கடல் நடுவே உள்ள ஒரு மேடை அருகே கொண்டு வந்து நிறுத்தியது. அவனை அழைத்துக் கொண்டு உள்ளே அந்த மேடையின் ஒரு அறைக்குள் சென்றான் டிசங்.
“இவர் தான் பீட்டர் மாஸ்டர், வெளிநாட்டு ஹாலிவுட் ஸ்டண்ட்ஸ் ல பாதி இவர் தான் பண்ணி இருக்கார். இவரும், கேமரா டீமும் சேர்ந்து தான் இன்னைக்கு ஷாட் எடுக்க போறாங்க” என்று ஷியாங்கிற்கு அறிமுகப்படுத்தினான்.
முதல் ஷாட்டே பரா ஸ்லைடிங் செய்து லேண்டாகும் காட்சி தான். அங்கே இவன் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தனர் ஒரு குழு, அவனுக்கு தேவையான பாதுகாப்பை செய்ய ஒரு குழு மறுபுறம் என்று இருந்தனர்.
“ஓகே சார்! ஷாட் ரெடி, நாம ஷூட் எடுக்கிற ஸ்பாட் போகலாமா?” என்று அந்த குழுவில் ஒருவர் கேட்கவும், ஷியாங் சரி என்றான்.
அங்கே சென்றவன், அங்கே சத்தியமாக நிஷாவை அவன் எதிர்பார்க்கவில்லை. அவள் இங்கு என்ன செய்கிறாள்? என்ற கேள்வி வண்டாய் அவனை குடைந்து கொண்டு இருந்தது.
“ டிசங்! இவ இங்க என்னடா செய்ரா?” என்று கேட்டான்.
“டேய்! இவ்வளவு நேரம் நான் சொன்னதை நீ அப்போ காதுல வாங்கலையா! உன் ஒய்ஃப் தான் இந்த படத்திற்கு காமேராமென், செம டேலண்டெட்”.
“இந்த படத்திற்கு அவங்க டூ மண்த்ஸ் முன்னாடியே கமிட் ஆகிட்டாங்க. நிஷாதேவி, கேமராமேன் சொன்னா வெளிநாட்டு ல, இந்தியாவில தெரியாத ஆளே இல்லை”.
“இப்படி ஒரு டேலண்டெட் லேடி உன் ஒய்ஃப் அப்படினு தெரிஞ்சதுக்கு அப்புறம் ரொம்ப பெருமையா இருக்கு டா” என்று நண்பன் சொல்லிவிட்டு சென்ற பிறகு அவன் அவளை தான் கவனித்துக் கொண்டு இருந்தான்.
அவ்வளவு சுறுசுறுப்புடன் பம்பரமாக அங்கே வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள். அங்கு இருக்கும் ஒவ்வொருவரையும் அவள் மரியாதை கொடுத்து நடத்தும் பாங்கில் அவனுக்கு அவள் மேல் ஒரு மரியாதை வந்தது.
அங்கே இண்டூ மார்க் போட்ட இடத்தில் வந்து நின்றவுடன், அங்கே நிஷா கையில் சிறு பேனா போல் இருக்கும் ஒன்றை கொண்டு வந்தாள்.
“சீன் என்னன்னு சொல்லி இருப்பாங்க தானே, அந்த ஃபீல் கொண்டு வாங்க முகத்துல. இது பேனா கேமரா, உங்க ரைட் சைட் ல மாட்ட போறேன் சரியா கீழே லேண்டாகும் பொழுது, இந்த கேமராவை பாருங்க சரியா” என்று அவள் ஒவ்வொன்றையும் எடுத்து சொல்லிக் கொண்டு இருந்தாள்.
அவனோ, அதை எல்லாம் கவனியாமல் அவள் பேசும் உதட்டை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான். ஏனோ அவளுக்கு முத்தம் கொடுத்த பின், சாசர் போல் விரிந்த அந்த கண்களும், அதன் பின் மயங்கி கண்ணை மூடி அதை அனுபவித்த அந்த பாவமும், அவன் மனதில் அழுந்த பதிந்து விட்டு இருந்தது.
திரும்பியும், அதை கான வேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும் எதோ ஒன்று அவனை அதை செய்ய விடாமல் தடுத்து கொண்டு இருந்தது. இப்படி அவன் எண்ணங்கள் பயணிக்க, அவன் தலை அசைத்த விதத்தை வைத்து அவன் புரிந்து கொண்டான் போலும் என்று எண்ணி ஷாட் ரெடி என்று விட்டு கேமரா முன் அமர்ந்தாள்.
அதற்குள் அங்கே ஸ்பீடு போட் டிரைவருக்கு சிக்னல் கொடுக்கவும், அவர் கொடுத்த டேக் ஆபில் தான் அவன் சுயநினைவுக்கு வந்தான். மேலே பறக்க பறக்க, கீழே சுற்றிலும் தண்ணீர் இருக்க அவனுக்கு முதலில் மயக்கம் வரும் போல் இருந்தது.
அதன் பின் நிதர்சனம் உணர்ந்து, அவன் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் பொழுது அவள் கட் என்று கூறிவிட்டாள். லேண்டாகி அவன் இறங்கிய பின், அவள் செய்த முதல் வேலை அவனை அங்கு இருந்து அப்புறப்படுத்தியது தான்.
“இந்த சீன் சார்க்கு செட் ஆகாது, டூப் போட்டுக்கலாம் கூட்டிட்டு போங்க” என்று அவள் கூறியதை கேட்ட டிசங் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றான்.
எத்தனையோ படங்களில் நடித்து இருக்கிறான் ஷியாங், எதிலும் இதுவரை டூப் போட்டு நடித்தது இல்லை. முதல் முறையாக இப்படி ஒரு விமர்சனம் வரவும், அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பது கூட தெரியவில்லை அவனுக்கு.
ஆனால் இதை கேட்ட ஷியாங், தன்னை அவள் குறைத்து எடை போட்டு விட்டாள் என்றே எண்ணினான். ஏனோ, அவள் முன் இப்படி ஒரு விஷயம் அவன் நினைத்து கூட பார்க்கவில்லை.
“இங்க பாரு, ஸ்டார்டிங் எல்லோருக்கும் அப்படி தான் இருக்கும். பழகிடுச்சி அப்படினா, தே வில் என்ஜாய் இட்”.
“நானும் பழகிற வரைக்கும் ஸ்டார்டிங் இப்படி தான் இருக்கும். பழகிட்டா அப்புறம் சீன் ஈசியா உள்வாங்கி நடிக்க முடியும்”.
“ சரி எங்கிட்ட இவ்வளவு பேசுறியே, நீ போ ஒரு தடவை பரா சைலிங். உன் முகம் கொடுக்கிற ரியாக்ஷன் என்னன்னு நான் பார்க்கிறேன்” என்று சவால் விட்டான்
அவளோ சிரித்துக் கொண்டே, முன்னேறி சென்றாள். அவளின் முக பாவங்களை திரையில் காண, அவன் அங்கே அந்த திரைக்கு முன் அமர்ந்தான்.
அவள் பாரா சைலிங்க் ஏற அங்கே மேலே எழும்ப எழும்ப உற்சாகத்துடன் சத்தம் கொடுத்துக் கொண்டே அவள் இயற்கையை ரசித்த விதம் அவன் மனதைக் கவர்ந்து இழுத்தது.
திரையில் அவளின் உற்சாகத்தை பார்த்தவன், ஏனோ அவளோடு இதை சேர்ந்து செய்தால் என்ன என்று தோன்றியது. தோன்றிய வேகத்தில் அது மறைந்தும் போனது, அங்கே அடுத்து நடந்த கூத்தில்.
“நல்லா டிப் பண்ணி தூக்கி விடுங்க அவரை, அப்போ தான் இந்த சீன் இன்னும் பெர்பெக்ட்டா அமையும்” என்று அவள் சொல்லிக் கொண்டு இருந்ததை பார்த்து தான் அதிர்ந்தான்.
“என்னை இவ இன்னைக்கு வச்சு செய்ய பிளான் போட்டா போலயே! ஆண்டவா! என்னை நீங்க தான் காப்பாத்தணும்” என்று வேண்டிக் கொண்டே அந்த சீன்னை நடித்துக் கொடுத்தான்.
நடித்துக் கொடுத்தான் என்பதை விட, உழைத்து கொடுத்தான் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு அவள் படுத்தி விட்டாள் அவனை, கேமராவில் சரியாக வந்த பின் தான் விட்டாள் அவனை.
“டேய்! என்னதான் நல்லா எடுத்து இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா டா. இப்படி படுத்தி வைக்குறா, இன்னும் என்ன செய்ய காத்து இருக்கா அப்படின்னு தெரியலையே” என்று நண்பனிடம் புலம்பி தள்ளி விட்டான் ஷியாங்.
இதுவரை அவன் எந்த ஒரு ஷுட்டிங்க்கும் இப்படி கஷ்டப்பட்டது இல்லை, காரணம் அவனின் டைரக்டர்கள் எல்லாம் இவனுக்கு இலகுவாக இருப்பது போல் தான் காட்சியை அமைத்து கொடுப்பார்கள்.
முதல்முறையாக இந்த டைரக்டர் இவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார் என்றால், அந்த படம் உலகளவில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஒரே காரணம் தான் என்பதை அவனும் அறிந்தான் இன்றைய நாளில்.
மூன்று சண்டை காட்சிகள் தான், ஆனால் அதை மிக மிக தத்ரூபமாக எடுக்க வைத்து திரையில் அழகாக காட்டிய அவளின் திறமையை எண்ணி வியந்தே போனான்.
“ஹ்ம்ம்! இதுக்கே நான் இவ்வளவு கஷ்டபட வேண்டி இருக்கு. இன்னும் இவ கூட வாழ்ந்து பார்த்தா, நல்லவேளை இது கண்துடைப்பு கல்யாணம் தான்”.
“ஆனா! அவ கூட ப்ரெண்ட்டா இருக்கணும், நிறைய ரசிக்க கத்துக்கலாம்” என்று எண்ணிக் கொண்டான்.
இங்கே அவன் மனதில் ஒரு தோழியாக அவள் கால் பதித்து விட்டாள். இனி அடுத்து அவள் என்ன செய்ய போகிறாள்?
தொடரும்..
ஓடி போகலாம் 4
அங்கு சரோஜா தேவி போல் அந்த கால நீள உடை அணிந்து, தலையில் தொப்பி அணிந்து கொண்டு அவள் தங்கி இருந்த அறையில் இருந்த அவள் பாட்டி காமாட்சி தேவியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“பாட்டி! இந்தியாவில் இருந்து நேரா இங்க தான் வரீங்களா? என் கிட்ட சொல்லவே இல்லை நீங்க, ஆமா எப்போ வந்தீங்க?” என்று நிஷா கேள்வியை அடுக்கினாள்.
“நல்லா இருக்கீங்களா பாட்டி, வீட்டுல எல்லோரும் எப்படி இருக்காங்க?” என்று அவரை கேட்டுவிட்டு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான் ஷியாங்.
அவனை ஆசிர்வதித்து, தன் நலத்தை பற்றி கூறிவிட்டு அவனையும் விசாரிக்க தொடங்கினார் காமாட்சி.
இதை பார்த்து கொண்டிருந்த நிஷாவோ, காதுகளில் புகை வரும் அளவிற்கு அவளின் பாட்டியை முறைத்துக் கொண்டு இருந்தாள். அதற்குள் அவன் வேலை சற்று இருப்பதால் விடை பெறுகிறேன் என்று கூறிவிட்டு வெளியேறினான், அவளை கண்டுகொள்ளாமல்.
“பாட்டி! என்னது இது? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, நீங்க பாட்டுக்கு அவனோட கொஞ்சி குழாவிகிட்டு இருக்கீங்க” என்று அவரிடம் சிடுசிடுத்துக் கொண்டு இருந்தாள் நிஷா தேவி.
“நிஷா நீ ஒன்னு புரிஞ்சிக்க, அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை. அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம கொடுத்து தான் ஆகனும், அதே மாதிரி நீ வந்த உடனேயே நீ வாங்க பாட்டி அப்படினு கூப்பிட்டியா முதலில்” என்று பதிலுக்கு அவளை பார்த்து கேட்டார்.
தன் தவறை உணர்ந்தவள் உடனே மன்னிப்பு கேட்டாள் அவரிடம். பேத்தி எப்பொழுதும் இப்படி கிடையாது என்று அவர் நன்கு அறிவார். இன்று அவளின் முகத்தில் தெரிந்த களைப்பும், கடுகடுப்பும் அவள் அவளாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்.
அதன் விளைவாக இன்று பேத்தியிடம் மனம் விட்டு பேச எண்ணினார். அவளும் வேலை இனி இல்லை என்பதால், தன் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள பாட்டியிடம் கேட்க எண்ணினாள்.
“எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு டா நிஷா. நீ மாப்பிள்ளையை விரும்புற தானே, இல்லை கட்டாய கல்யாணம் அப்படினு கஷ்டபட்டு இந்த பந்தத்தில் இருக்க நினைக்கிறியா?” என்று கேட்டார்.
“பாட்டி! நான் இப்போ என் மனசுல இருக்கிறதை சொல்லுறேன், அப்புறம் என் குழப்பம் என்னனு உங்களுக்கே புரியும்” என்று கூறிவிட்டு அவரின் முகத்தை பார்த்தாள்.
அவரோ, நீ சொல்லு பிறகு என்னவென்று நான் சொல்லுகிறேன் என்பது போல் பார்வை பார்த்தார். அதன் பிறகு, சொல்ல தொடங்கினாள்.
“பாட்டி, கிட்டத்தட்ட நான் இந்த ஃபீல்டு ல ஒரு மூணு வருஷமா இருக்கேன். எத்தனையோ பேரோட சேர்ந்து வேலை பார்த்து இருக்கேன், ஆனா அப்போ எல்லாம் தோனாத ஒன்னு இப்போ இவரை பார்த்த பிறகு சம்திங் ஐ ஃபீல் ஸ்ட்ரேஞ்”.
“கூடவே சேர்ந்து வாழனும், ஓடி போகனும் போல இருக்கு. ஆனா நிறைய விஷயங்கள் எங்களுக்குள்ள ஒத்தே போகல, பட் ஸ்டில் ஏதோ ஒன்னு ஐ அம் இன் லவ் வித் ஹிம் அப்படினு தோணுது பாட்டி” என்று அவள் கூறியதை கேட்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.
“சரி இந்த அஞ்சு நாளுக்குள்ள அப்படி என்ன சண்டை உங்களுக்குள்ள?” என்று கேட்டது தான் தாமதம் உடனே அத்தனையும் கொட்ட தொடங்கினாள்.
அன்று ஷுட்டிங் ஸ்பாட் சென்றவன், டைரக்டரை பார்த்து பேசி சற்று இலகுவாக காட்சிகள் நடிக்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். அவரும் இவனிடம் சரி என்று கூறிவிட்டு, அன்றைய ஆக்ஷன் பகுதி பற்றி ஸ்டண்ட் மாஸ்டரிடம் விரிவாக பேசிக் கொண்டு இருந்தார்.
அதற்குள் கேமராமேன் வந்துவிட்டார் என்று தகவல் அவருக்கு வரவும், உடனே அந்த சண்டை காட்சிகளை விளக்கி கூறினார் நிஷாவிடம்.
“சார்! என்னது இது? இதை யாரு மாத்தினாங்க? நேத்து டிஸ்கஸ் பண்ண ஸ்டண்ட் என்னாச்சு?” என்று விடாமல் கேள்விகளை வீசினாள் நிஷா அந்த ஸ்டண்ட் மாஸ்டரிடம்.
“டைரக்டர் தான் சொன்னார் நிஷா மேடம், ஸ்டண்ட் ஹீரோக்கு ஈஸியா வைக்கணும் அப்படினு. ஆனா டைரக்டர்க்கு கூட இதுல உடன்பாடு இல்லை, ஹீரோ ரொம்ப கம்பெல் பண்ணி கேட்டதால சரின்னு சொல்லி இருக்கார்”.
“இதுல நாம என்ன பண்ண முடியும் மேடம், அதுவும் ஹீரோ பெரிய இடத்து பையன் வேற” என்று ஸ்டண்ட் மாஸ்டர் சொல்லிவிட்டு நகர்கையில் அவள் தடுத்தாள்.
“நாம நேத்து டிஸ்கஸ் பண்ண ஸ்டண்டே பண்ணலாம், நான் டைரக்டர் கிட்ட பேசிக்குறேன்” என்று கூறிவிட்டு அவள் நேராக டைரக்டர் முன் போய் நின்றாள்.
அவரிடம் அவள் என்ன சொன்னாளோ, உடனே காட்சிகள் மாற தொடங்கியது. எடுத்த எடுப்பிலேயே ஹீரோவை கடல் தண்ணீருக்குள் தள்ளி விடும் காட்சி தான்.
தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று அவனிடம் சொல்லாமல் அவனை தள்ளி விட்டு இருந்தனர். அதன் பின் கடல் கீழே அவன் எதிர்பாராத அளவில், காட்சிகள் மாறி மாறி அவனே எதிர்பார்க்காத வகையில் சண்டையிட தொடங்கினான்.
அதை கேமராவில் பார்த்துக் கொண்டு இருந்த நிஷா இதை தானே எதிர்பார்த்தேன் என்பது போல், அதில் சில விஷயங்களை சரி செய்துவிட்டு எல்லாம் முடித்துக் கொண்டு அவன் இங்கு வரும்முன் அவள் சிட்டாக பறந்து விட்டாள்.
இதை கேட்டுக் கொண்டு இருந்த அவளின் பாட்டி, அவளை முறைத்துக் கொண்டே சிரித்தார்.
“என்ன பாட்டி! முறைச்சிகிட்டே சிரிக்கிறீங்க, என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?” என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு கேட்டாள்.
“நீ மாப்பிள்ளையை கீழே தள்ளி விட சொன்னதே தப்பு, இதுல எங்க உன்னை தள்ளி விட்டுடுவாரோ அப்படினு பயந்து தானே அங்க இருந்து உடனே எஸ் ஆகி போன” என்று பாட்டி பாய்ண்ட்டை பிடித்துக் கொண்டு கேட்கவும், அவள் மாட்டிக் கொண்ட உணர்வுடன் முழித்தாள்.
“என்ன முழிக்குற? நான் சொன்னது சரி தான” என்று அவர் கேட்கவும் அவள் நாலா பக்கமும் மண்டையை உருட்டினாள்.
“ஆனா அவன் அடுத்து சும்மா இல்லை, தேடி வந்து இழுத்துட்டு போய் தள்ளி விட்டுட்டான், இடியட்” என்று உதட்டை பிதுக்கவும் அவர் அப்படி ஒரு சிரிப்பு சிரித்தார்.
“இதாவது எனக்கு நீச்சல் தெரிய போய் தப்பிச்சேன், ஆனா அடுத்து ஹனிமூன் கூட்டிட்டு போறேன் சொல்லிட்டு அவன் என்னை தலை கீழா தொங்க விட்டுட்டான் தெரியுமா?” என்று மேலும் உதட்டை பிதுக்கவும் அவர் சிரித்தார்.
“சரி! சரி! எனக்கு அவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்ததுல அலுப்பா இருக்கு, நான் தூங்க போறேன்” என்று சொல்லிவிட்டு அவர் அங்கு இருந்து எழுந்து செல்லுமுன் நிஷா தடுத்தாள்.
“கேட்கணும் நினைச்சேன் பாட்டி, அது என்ன சரோஜா தேவி கெட்டப் போட்டு இருக்கீங்க, எதுக்கு?” என்று கேட்டாள்.
“ம்க்கும்! நீ எல்லாம் சினி ஃபீல்டு ல இருக்க அப்படினு சொல்லிக்காத. இதுக்கு பேர் ஃபேஷன், இது கூட தெரியல உனக்கு. ஊருல இருந்து கிளம்பும் பொழுதே, இப்படி ப்யூட்டியா தான் கிளம்பி வந்தேன் டார்லிங்” என்று குளிர் கண்ணாடியை சரி செய்து கொண்டு சென்ற பாட்டியை பார்த்து நன்றாக சிரித்தாள்.
அவள் பாட்டி அவளுக்கு முதன் முதலில் சொல்லிக் கொடுத்த கதையே, மகாபாரத கதை தான். அதுவும் போரில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் சொன்னது தான் முதலில் கூறினார்.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
இதை தான் அவளுக்கு திரும்ப திரும்ப போதித்தார். அதனால் தான் அவளால் இன்று இவ்வளவு தூரம், பிடிக்காத திருமணத்தை பிடித்த திருமணமாக மாற்ற அவளால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டு இருக்கிறாள்.
இப்பொழுது அவள் பாட்டி வந்தது கூட, அவளுக்கு உதவ தான். நேற்றே அவள் இதை பற்றி ஃபோனில் இவரிடம் பேசி இருந்தாள். ஆனால், அவர் இப்படி நேரில் வந்து அவளுக்கு அதிர்ச்சி அளிப்பார் என்று அவள் நினைக்கவில்லை.
சிறிது நேரத்தில் அங்கே வந்த ஷியாங், அவளை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்து குளியலறைக்குள் சென்றான்.
“இந்த மியாவ் எதுக்கு இப்படி நக்கலா சிரிச்சிட்டு போறான்? சம்திங் நாட் ரைட்!” என்று தனக்குள் யோசித்துக் கொண்டு இருந்தாள்.
ஒரு வாரத்திற்கு முன் நடந்த சம்பவம் அவளின் கண் முன் காட்சியாக விரிய தொடங்கியது. அதே காட்சி ஷியாங் மனகண் முன்னேயும் விரிந்தது.
அன்று தேடி வந்து இவளை தண்ணீருக்குள் தள்ளி விட்ட ஷியாங், அடுத்து அவன் செய்த முதல் வேலை சற்று ரொமான்டிக் ஆக்ஷன் படமாக மாற்றி அமைக்க சொல்லி டைரக்டரிடம் சொன்னது தான்.
“இரு டி இனி நான் உனக்கு ஆட்டம் காட்டுறேன், இந்த ஷியாங்கை சாதாரணமா எடை போட்டுட, வெயிட் அண்ட் வாட்ச் பேபி! ரொமான்டிக் பாய் இஸ் பேக்” என்று சூளுரைத்துக் கொண்டு சென்றான்.
அறையில் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டு இருந்த நிஷாவிற்கு ஒரே யோசனையாக இருந்தது. சிறிது நேரத்திற்கு முன் தான் டைரக்டர் இவளுக்கு போன் செய்து விஷயத்தை கூறி இருந்தார்.
“என்னமோ பிளான் பண்ணிட்டான், ஆனா என்னனு தான் தெரியல! சரி காலையில் பார்த்துக்கலாம்” என்று நினைத்து உடனே படுத்து உறங்கினாள்.
மறுநாள் இவன் வருமுன், அவள் செட்டில் அமர்ந்து இருந்தாள். அந்த 3D ஸ்டுடியோ தியேட்டரில் தான் செட் அமைத்து இருந்தார்கள் இம்முறை.
இன்று ரொமான்டிக் காட்சி, ஹீரோ ஹீரோயின் மத்தியில். சில எஃபெக்ட்ஸ்காக மட்டுமே பட்டயாவில் இந்த இடத்தை தேர்ந்தெடுத்து இருந்தனர்.
அன்று அவன் கண்ணுக்கு கண்ணாடி கூலர்ஸ், க்ரே கலர் கோட் சூட் என்று கம்பீரமாக அந்த அரங்கிற்குள் நடந்து வந்தான்.
டக்குனு டக்குனு டக்குனு பார்க்காத
பக்குண்ணு பக்குன்னு ஆக்காத
கிக் ஒன்னு கிக் ஒன்னு இருக்குது பார்வையில என்று மனதிற்குள் அவனுடன் டூயட் பாடிக் கொண்டு இருந்தவள், அங்கே அவனை ஒரு யுவதியுடன் சேர்ந்து பார்த்ததில் அட்டென்ஷன் போசிற்கு திரும்பி, என்னவென்று பார்க்க தொடங்கினாள்.
அது ஒரு ரொமான்டிக் காட்சி, மிகவும் தத்ரூபமாக ஒருவரை ஒருவர் அனைத்து கொண்டு, அந்த 3D படங்களை பார்த்துக் கொண்டும், முத்தம் கொடுத்துக் கொண்டும் இருக்க வேண்டும்.
இவளுக்கு அந்த இடத்தில் இருக்க பிடித்தம் இல்லை, ஆனால் டைரெக்டர் இருந்து எல்லாவற்றையும் படமாக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லி இருந்ததால், வேறு வழியின்றி அங்கேயே அமர்ந்து இருந்தாள்.
அங்கே ஷியாங், இவளை வெறுபேற்ற வேண்டி அந்த யுவதியுடன் மிகவும் ஒட்டி நின்று, அவளை அணைத்துக் கொண்டே இவளை ஒரு பார்வை பார்க்கவும், காதுக்குள் இருந்து இவளுக்கு புகைச்சல் சும்மா ராக்கெட் வேகத்தில் கிளம்பியது.
அடுத்தது முத்தக் காட்சி எனவும், டைரக்டர் ஆக்ஷன் சொல்ல, இவள் கட் சொல்லிவிட்டு நேராக அவனிடம் சென்று நின்று, முறைத்துக் கொண்டு இருந்தாள்.
“பேபி! பிளீஸ் டேக் திஸ் சீன் மச் ப்யூட்டிஃபுல் ஓகே” என்று சிரித்துக் கொண்டே அவளை வம்பு வளர்க்கவும், இவள் யாரும் எதிர்பாராத நேரத்தில் அவனை இழுத்துக் கொண்டு செட்டை விட்டு வெளியேறினாள்.
தொடரும்..
ஓடி போகலாம் 5
வெளியே அவனை இழுத்துக் கொண்டு வந்தவள், யாரும் தங்களை கவனிக்காத இடமாக அழைத்துக் கொண்டு வந்து இருந்தாள் அவனை.
“ஹே! என்னது இது? கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா, இல்லையா உனக்கு?” என்று திட்ட தொடங்கினாள்.
அவனோ, அவள் என்ன கூறுகிறாள் என்று தெரியாமல் முழித்தான். தமிழில் அல்லவா விடாமல் திட்டிக் கொண்டு இருக்கிறாள், அதனால் அவள் என்ன கூற வருகிறாள் என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தான்.
ஆனால், தன்னை திட்டுகிறாள் என்ற அளவில் மட்டும் புரிந்தது அவனுக்கு அவளின் உடல் மொழியில். ஆகவே, இப்பொழுது சீன மொழியில் இவன் பதிலுக்கு பேச தொடங்கினான்.
“அது எப்படி திட்ட மட்டும், இப்படி வண்டி வண்டியாக உன் மொழியில் திட்ட வருது. ஆனா நீ திட்டும் பொழுது, அந்த கண்ணு சும்மா சூப்பரா நர்த்தனம் ஆடுது, அதை விட அந்த உதடு சும்மா கடிச்சு தின்னனும் போல இருக்கு” என்று சீன மொழியில் அவன் பேச, இப்பொழுது அவள் திருதிருத்தாள்.
“எருமைமாடே! இங்கிலீஷ் ல பேசி தொலை டா” என்று இப்பொழுது ஆங்கிலத்தில் சிடுசிடுத்தாள்.
“நீ மட்டும் இவ்வளவு நேரம் என்னை உன் தாய் மொழியில் தான திட்டின, அதான் நானும் உன்னை கடுபடிக்க என் தாய் மொழியில் பேசினேன்” என்றான்.
இவளுக்கு அவன் அப்படி என்ன பேசி இருப்பான்? என்று மனதிற்குள் வண்டாக குடைய தொடங்கியது. காரணம் அவன் பார்த்த பார்வை அப்படி, ஆளை முழுங்குவது போல் அப்படி ஒரு பார்வை பார்த்தான்.
“சரி! அப்படி என்ன சொன்ன உன் மொழியில், அதை கொஞ்சம் எடுத்து சொல்லு” என்று அவள் கூறவும், அவன் பதிலுக்கு என்ன சொல்லி நீ என்னை திட்டினாய் என்று கூறு, அதன் பின் கூறுகிறேன் என்று விட்டான்.
அவ்வளவு சீக்கிரம் அவன் அதை சொல்லிவிடுவானா என்ன அவளிடம். எத்தனை முறை, ஷுட்டிங் இடத்தில் என்னை டிரில் வாங்கி இருப்பாள், இனி அவள் போக்கில் சென்று அவளுக்கு ஆட்டம் காட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
“இப்போதைக்கு இவன் சொல்லுற மாதிரி தெரியல, சரி சொல்ல வந்ததை சொல்லிடுவோம்” என்று எண்ணிக் கொண்டு அவள் என்ன செய்ய வேண்டும் என்று கூறினாள்.
“ஆக்ஷன் பார்ட் நடிச்சோமா, கதைக்கு தேவையான இடத்தில் இத்துணுண்டு ரொமான்ஸ் முகத்தில் லைட்டா காட்டினோமா அப்படினு போய்கிட்டே இருக்கணும்”.
“அதை தவிர்த்து, இந்த முத்தம் கொடுக்கிறது, கட்டி பிடிக்கிறது எல்லாம் இருக்க கூடாது. மீறி நீ இதை பண்ணினா, அடுத்த நிமிஷம் உங்க அப்பா கிட்ட சொல்லி உன் லைசன்ஸ் கேன்சல் பண்ணிடுவேன், ஜாக்கிரதை” என்று மிரட்டிவிட்டு சென்றவளை பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.
அங்கே செட்டிற்குள் நுழைந்தவன், டைரக்டரிடம் என்ன சொன்னான் என்று தெரியவில்லை, திடீரென்று அவர் பேக் அப் என்று சொல்லவும் எல்லோரும் கிளம்ப தொடங்கினர்.
இவளோ, அவனை புரியாத பார்வை பார்க்க அவனோ அவளை பார்த்து கண்ணடித்து விட்டு தன் நண்பன் டிசங்கை அழைத்து கொண்டு சென்றான்.
“டேய்! என்னடா இது? அவளை எப்படி இந்த செட் ல இருந்து கழட்டி விடுறது அப்படினு நேத்து தான் பிளான் போட்டோம். நீ இன்னைக்கு நடந்துக்குற விதத்தை பார்த்தா, அப்படி தெரியலையே” என்று சந்தேகத்துடன் கேட்டான் டிசங்.
“ஹனிமூன் பேக்கேஜ் ஜெண்டிங் ல ஒன்னு புக் பண்ணு டா, அவளுக்கு வேற பிளான் வச்சு இருக்கேன் நான். ரெண்டு டிக்கெட் இன்னைக்கு நைட் கோலாலம்பூர்க்கு, எடுத்துடு மறக்காம” என்றுவிட்டு விசில் அடித்துக் கொண்டே அவனின் காரில் ஏறி பறந்தான்.
“இவன் என்னமோ பிளான் பண்ணிட்டான் போலயே, சரி எவ்வளவோ பார்த்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா” என்று எண்ணிக் கொண்டே அவளும் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திவிட்டு, கிளம்பினாள்.
அவள் தங்கி இருந்த ஹோட்டல் வந்தவள், வெளியே ரிசெப்ஷனில் அவளின் பெட்டியுடன் நின்று இருந்த அவளின் மியாவ் அவளை வரவேற்றான்.
“ஹனி! ஹனிமூன் டிரிப் முடிஞ்சு நாம ஷுட்டிங் வச்சுக்கலாம் என்ன” என்றவனை பார்த்து பல்லை கடித்தாள்.
“இன்னும் ஒரு அஞ்சு சீன் தான் ஃபைட்டிங் சீன், அப்புறம் மத்தது எல்லாம் டைரக்டர் பார்த்துக்குவார், சேஇப்போ அதை முடிச்சிட்டு அப்புறம் இதை பார்த்துக்கலாம்” என்றவளை பார்த்து சிரித்து, அவளை தன் அருகே இழுத்துக் கொண்டான்.
“உன்னை ரேப் பண்ணிடுவேன் அப்படினு பயமா டார்லிங், அதான் யோசிக்கிற போலயே” என்று அவள் காதருகில் கிசுகிசுக்கவும் இவள் முறைத்தாள்.
“மண்ணாங்கட்டி! ரேப் பண்ணுற மூஞ்சியை பாரு! பக்கத்தில் கண்ணடிச்சு வந்தாலே, பத்தடி தள்ளி போற ஆசாமி நீ, இதுல ரேப் பண்ணிட்டாலும்” என்று தமிழில் புலம்பி தனக்குள் நொடித்துக் கொண்டவளை புரியாமல் பார்த்தான்.
“ஒன்னும் இல்லை எனக்கு என்ன பயம், போகலாம்” என்று ஆங்கிலத்தில் சிரித்துக் கொண்டே சொல்லி அவனோடு கிளம்பினாள்.
“பையபிள்ளை என்னமோ பிளான் பண்ணிட்டான், வச்சு செய்ய போறான் போலயே. சரி எதுனாலும் பார்த்துக்கலாம், நமக்கா சமாளிக்க தெரியாது” என்று எண்ணிக் கொண்டே அவனோடு ஜெண்டிங் செல்ல பயணமானாள்.
ஜென்டிங், கோலாலம்பூரில் இருந்து மூன்று மணி நேர பயணம். நம் ஊர் கொடைக்கானல் போல், அதுவும் ஒரு சிறு மலை பிரதேசம். அங்கே பிரசித்தி பெற்றது என்னவென்றால், உலகிலேயே அதிக அறைகள் கொண்ட ஹோட்டல், கேசினோ, சிறு தீம் பார்க், பன் சிட்டி, சினிமா தியேட்டர், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், நிறைய வித்தியாசமான ரெஸ்டாரன்ட் மற்றும் குளு குளு ஸ்னோ வேர்ல்டு எல்லாம் ஒரே இடத்தில்.
இந்த மலை மேல் செல்ல கேபிள் கார் பயன்படுத்தலாம், இல்லையென்றால் கார் மூலம் ரோடு வழியாக செல்லலாம். கேபிள் கார் வழியாக செல்ல ஷியாங் ஏற்பாடு செய்து இருந்தான், அதுவும் இரவு பயணம் செய்ய.
பட்டையாவில் இருந்து பங்காக் வந்து, அங்கு இருந்து விமானம் மூலம் கோலாலம்பூர் வந்து இறங்கிய பின், அவன் ஏற்பாடு செய்து இருந்த கேரவன் வந்து சேர்ந்தது.
வரும் வழி முழுவதும், அவன் வேலைகளில் பிஸியாக இருக்க, அவளோ களைப்பில் உறங்கி இருந்தாள். கார் சரியாக அந்த கேபிள் கார் இடத்தில் நிற்கவும் தான், இவன் அவளை எழுப்பி விட்டான்.
எத்தனையோ கேபிள் கார்களில் அவள் ஏறி இருக்கிறாள், இதில் என்ன பெரிய பிரமாதம் என்று என்று எண்ணிக் கொண்டே அவள் அவனோடு அதில் ஏறி அமரவும், அது நகர்ந்த சிறு நிமிடத்தில் அவள் பரவசமானாள்.
சிறு சிறு மழைத்துளிகள் அந்த கண்ணாடியில் விழ, வெளியே ஆங்கு ஆங்கு மின்மினி பூச்சுக்கள் பறக்க, மலை மீது ஏறும் பொழுது வெளியே தெரிந்த காட்சியில் பரவசமானாள்.
“நல்ல வேளை இவன் கூட்டிட்டு வந்தான், இல்லைனா மிஸ் பண்ணி இருப்போம் இந்த பயணத்தை. இவன் இடம் அப்படினு தான் வர அவ்வளவு யோசிச்சேன், ஆனா இங்க இம்புட்டு அழகா இருக்கும்ன்னு நினைக்கல” என்று எண்ணிக் கொண்டே, அவனிடம் நன்றி உரைக்க திரும்பியவள் அவனின் பார்வையில் முதல் முறையாக தடுமாறினாள்.
“என்ன இப்படி பார்கிறான்!” என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது, அவன் இவளை ஒட்டி நெருங்கி அமர்ந்தான்.
இவள் திடுக்கிட்டு என்ன என்று கண்களால் கேட்க, அவனோ அவளின் கண்களுக்குள் மூழ்கி, அவளையும் அவனின் கண்களோடு உறவாட வைத்துக் கொண்டு இருந்தான்.
கண்கள் ஒன்றொன்றை கவ்விக் கொள்ள, அவள் இதழ்களில் அவன் இதழ் கொண்டு மூடி அதில் தேன் குடித்தான். இந்த மோன நிலை எவ்வளவு தூரம் நீண்டதோ, அதற்குள் ஒரு சிறு சத்தத்துடன் கேபிள் கார் நிற்கவும் தான் இருவரும் தங்கள் நிலையில் இருந்து மீண்டனர்.
வேகமாக துடிக்கும் இதயத்தை சரி செய்ய அவள் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோற்றுக் கொண்டு இருந்தது. அவனை திரும்பி பார்க்க, அவன் தீவிரமாக விவாதித்து கொண்டு இருந்தான் இங்கு உள்ள ஊழியார் ஒருவரிடம்.
“பாவி! இந்த படபடப்பு எல்லாம் நமக்கு தான் போல. இவன் எப்படி இவ்வளவு சாதாரணமா இருக்கான்?” என்று எண்ணிக் கொண்டே அவனை கவனிக்க, அவன் சரியாக அந்நேரம் பார்த்து இவளுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தான் யாரின் கவனத்தையும் கவர முடியா வண்ணம்.
இவள் தான் யாரும் பார்த்தார்களா என்று படபடப்புடன் சுற்றும் முற்றும் பார்த்து, தன்னை சரி செய்து கொண்டாள்.
“ரூம்க்கு தான வருவ, அப்போ கவனிக்கிறேன் டா உன்னை” என்று எண்ணிக் கொண்டே பல்லை கடித்தாள்.
அதற்குள் ஹோட்டல் ரிசப்ஷன் வரவும், அங்கு இருந்த கலைநயம் கண்டு வியந்தாள். அதை எல்லாம் ரசித்துக் கொண்டு இருக்கும் பொழுது, இவன் இவள் ரசிப்பை கண்டு மெதுவாக அவளிடம் வந்து எப்படி இருக்கிறது என்று கேட்டான்.
“சூப்பரா இருக்கு! அப்படியே இங்க ஒரு ஃபைடிங் சீன் வச்சா செமையா இருக்கும். அதுவும், இந்த தொங்குற விளக்கு ல ஹீரோ பிடிச்சுகிட்டு பறந்து பறந்து வில்லனை அடிச்சா செமையா இருக்கும்”.
“டைரக்டர் கிட்ட சொல்லி, பேசாம லாஸ்ட் ஃபைட்டிங் சீன் இங்கேயே வச்சுக்கலாம். நீங்க என்ன சொல்லுறீங்க?” என்று ஆர்வமுடன் அவள் அவனிடம் கேட்க, அவன் மனமோ அதிர்ந்து அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.
பின்னே இந்த செட்டிங் அமைப்பை அவன் அல்லவா ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து வடிவமைத்தான். அதற்கு பல வசவுகள் அவன் தந்தையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது வேறு அப்பொழுது கண் முன்னே விரிந்து, அவனை டென்ஷன் படுத்தியது.
“இங்க எல்லோரும் வந்து போற இடம், என் அப்பா அப்படி எல்லாம் பெர்மிஷன் தர மாட்டாங்க. ரூம் சாவி கிடைச்சிருச்சு, அதுக்கு முன்னே உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்” என்று கூறிக் கொண்டே அவளை கையோடு உள்ளேயே அமைந்து இருக்கும் தீம் பார்கிற்கு அழைத்து சென்றான்.
உள்விளையாட்டு அரங்கம் கண்ணை பறித்தது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்தோஷமாக விளையாட அமைத்து இருந்த அந்த பார்க்கை பார்த்து வியந்தாள்.
ரைட் ஏற அவளுக்கு மிகவும் பிடிக்கும், அவனை பார்க்க அவனோ அவளுக்காக அப்பொழுது அந்த இரவு நேரத்தில் அதை இயக்க அங்கு உள்ள பணியாளர்களிடம் உத்தரவு பிறப்பித்து கொண்டு இருந்தான்.
தன் மனதை படித்து, உடனே அதை செயலாக்கும் அவனை கண்டு அவளுக்கு அவன் மீது முதல் முறையாக மரியாதை வந்தது. இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆளுபவன், நடிகன் என்று அவனுக்கு இருக்கும் திறமையை கண்டு அவளுக்கு இவன் தன் கணவன், என்னவன் என்று மனம் பெருமிதத்தில் மிதந்தது.
அங்கு இருந்த எல்லா ரைடுகளிலும், ஏறியவள் இறுதியாக இருந்த ஒரு ரைடில் ஏற கால் வைக்கவும் அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அந்த ரைட் பற்றிய விபரத்தை இவன் சொல்லவில்லை, அங்கு இருந்த ஊழியரிடம் கூட சொல்ல கூடாது என்று கட்டளையிட்டு இருந்தான்.
ஆகையால் அதை பற்றி முழுமையாக தெரியாமல், இவள் ஏறி அமரவும் இவனுக்கு குஷியாக இருந்தது. அவள் ஏறி அமர்ந்த பின், அந்த ஊழியர் அவளின் பத்திரத்தை உறுதி படுத்திக் கொண்டு அதை இயக்கினார்.
முதலில் சந்தோஷமாக அனுபவித்தவள், அடுத்து அந்த ரைட் தலை கீழாக நிற்கவும், அந்த கட்டிடம் அதிற கத்த தொடங்கினாள். சிறிது நேரத்தில் ரைட் ஒரு முடிவிற்கு வரவும், அதிலிருந்து இறங்கியவள் அவனை பார்த்து முறைத்துக் கொண்டே வந்தாள்.
அவனோ, எப்படி இருந்தது? என்று கேட்க இவள் பதிலுக்கு ங்கொய்யால என்று திட்டிவிட்டு அவனிடம் இருந்து சாவியை பறித்துக் கொண்டு, ஊழியர் காட்டிய வழிகாட்டி மூலம் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவளின் ங்கொய்யால என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல், அவன் கூகிளில் தேட அதற்கு மிருவின் விளக்கம் தான் அதிகம் இருந்தது. இவன் என்னவென்று புரியாமல், அவளிடமே கேட்க அவர்களின் அறைக்கு விரைந்தான்.
தொடரும்..
ஓடி போகலாம் 6
அறைக்குள் வந்த நிஷா, அங்கே அந்த அறையின் அளவை பார்த்து அதிர்ந்து விட்டாள். அதுவும் கட்டிலில் இருவர் ஒட்டி படுக்கும்படியான அமைப்பில் இருந்ததை பார்த்து, அவளுக்கு டென்ஷன் ஏறியது.
“பாவி! உலகத்திலே பெரிய ஹோட்டல் சொன்னான், இப்படித்தான் எல்லா ரூமும் வச்சு இருக்கான் போலயே. வரட்டும், வேற ரூம் ல போய் தூங்கு அப்படினு துரத்தி விடுறேன்” என்று எண்ணிக் கொண்டே அவள் திரும்ப, அங்கே கையை கட்டிக் கொண்டு கதவில் சாய்ந்து நின்று இருந்தான் ஷியாங்.
“இந்த போஸ்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை, எல்லா வில்லத்தனமும் பண்ணிட்டு ஹீரோ மாதிரி சீன் வேற. இருடி! உனக்கு ஆப்பு வைக்கிறேன் இப்போ” என்று தனக்குள் கூறிக் கொண்டு, அவனை பார்த்து முறைத்தாள்.
“ஹே! சாரி நிஷ்!” என்றவனை கொலைவெறியோடு பார்த்தாள் இப்பொழுது.
“ங்கொய்யால! நிஷ், புஷ்ன்னு பெயரை சுருக்கி கூப்பிட்ட தொலைச்சிடுவேன்” என்று கத்தினாள்.
தான் கேட்க வந்த கேள்வி, அப்பொழுது நியாபகம் வரவும் உடனே அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்று கேட்டான்.
“இட் இஸ் அ குட் ஃபார்ம் ஆப் கொய்யாக்கா. காட் இட் மிஸ்டர் மியாவ்! நௌ கெட் அவுட் ஃப்ரம் ஹியர், லீவ் மீ அலோன் பிளீஸ்” என்று அவள் கூற அவனோ அவளை இடிதுக் கொண்டு உள்ளே வந்து, தன் உடையை கழட்ட தொடங்கினான்.
இவளோ, அவன் உடையை கழட்ட தொடங்கவும் இன்னும் டென்ஷனானாள். சட்டென்று வேறு புறம் திரும்பி நின்று கொண்டவள், அவனை நன்றாக மனதிற்குள் திட்டிக் கொண்டு இருந்தாள்.
“இந்த பரபரப்பு அளவுல, நிறைய ரூம் வச்சு கட்டுறது சாதாரண விஷயமில்லை. இந்த சின்ன ரூம் ல கூட, ஹோட்டல்க்கு தேவையான எல்லா அம்சமும் அடங்கி தான இருக்கு”.
“அதுவும் ஸ்டார் ஹோட்டல் ல என்ன எல்லாம் இருக்குமோ, அது எல்லாம் இங்க இருக்கு தானே” என்று மெதுவாக அவன் இந்த அறைக்கு தான் அவளின் கோபம் என்று ஊகித்து, அதை பற்றி எடுத்துக் கூறினான்.
அவன் கூறிய பிறகு தான், அங்கு இருந்த அத்தனை அம்சமும் அவள் கண்ணில் பட்டு, கருத்தில் பதிந்தது. அது மட்டுமா, கீழே ரிசப்ஷனில் பார்த்தாளே உலகிலேயே மிக பெரிய ஹோட்டல் என்றும், ஸ்டார் வரிசையில் கின்னஸ் பரிசு வாங்கிய ஹோட்டல் இது தான் என்று.
கண்டிப்பாக இதற்கு பின், நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது, அது மட்டுமின்றி அதில் இவனின் பங்கும் இருக்கிறது என்று தெரிந்த பின், ஏனோ அவளால் அப்பொழுது பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
அப்பொழுதே எதற்காக பெருமிதம் படுகிறோம் என்று உணர்ந்து இருந்தால், அடுத்து வந்த நாட்களில் அந்த பிரச்சினையை தவிர்த்து இருப்பாள். விதி யாரை விட்டது, விதி வலியது.
“சாரி! எனக்கு இந்த கட்டிலை பார்க்கவும் கொஞ்சம் டென்ஷன் ஆகிடுச்சு, வேற ஒன்னும் இல்லை. அப்புறம் எனக்கு வேற ரூம் வேணும், சாவி தரீங்களா வேற ரூமோடது” என்று தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதோடு, வேறு அறை வேண்டும் என்று கேட்டாள் அவனிடம்.
அவனோ, நமட்டு சிரிப்புடன் அவளை பார்த்து சிரிக்க தொடங்கினான்.
“என்ன சிரிப்பு?” என்று அதற்கு சிடுசிடுக்க தொடங்கினாள்.
“இல்லை நாம வந்தது ஹினிமூன் கொண்டாட, ஆனா நீ வேற ரூம் வேணும்னு கேட்டா எப்படி?” என்று கூறிக் கொண்டே அவளை அவன் நெருங்க, அவளோ அவன் கூறிய விதத்தில் சிலை போல நின்றாள்.
அவனோ, அவளின் அருகே நெருங்கி வந்தவன் அவளுடன் சற்று விளையாடி பார்க்க எண்ணி, அவள் தோள்களை பிடித்து தன்னுடன் சேர்த்து அனைத்துக் கொண்டு, அவளின் இதழை மென்மையாக தன் விரலால் வருடிக் கொண்டு இருந்தான்.
அவளோ, அவனின் இந்த நெருக்கத்தில் தடுமாறி கொண்டு நின்றாள். அவனோ, மேலும் நெருங்கி அவன் இதழை காதருகில் கொண்டு சென்று காற்று ஊதி அவளுக்கு கூச்சத்தை கொடுத்தான்.
அவளோ அதில் மேலும் சிலிர்த்து தடுமாறியதோடு அல்லாமல், கண்களை மூடி அவனின் அந்த நெருக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தாள் கண்களை மூடி.
“இப்போ கட்டில் ல படுக்கிறது, உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே பேபி” என்று காதில் ரகசியமாக அவன் கேட்டபின் தான், அது வரை இருந்த மோன நிலையில் இருந்து விடுபட்டாள் நிஷா.
அவனை தள்ளி விட்டு, இவள் வேகமாக கட்டிலில் ஏறி படுத்துவிட்டாள். அவளின் வேகத்தை பார்த்து, இவன் சிரித்து விட்டான்.
“ரெபிரஷ் பண்ணிட்டு வந்து படுத்துக்கோ baby, naan வெளியே போய்ட்டு வரேன்” என்று அவளுக்கு தனிமை கொடுத்துவிட்டு இவன் வேறு ஒரு வேலையாக வெளியேறினான்.
வெளியே அவன் சென்ற பிறகு, இவள் எழுந்து அமர்ந்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டு இருந்தாள். அவள் கை தன்னைப்போல் காது அருகே சென்றது, அவன் ஏற்படுத்திய கூச்சத்தை உணர.
முகம் சிவந்து கொண்டது அவளரியாமல், அந்த அளவு அவன் ஏற்படுத்திய நெருக்கம் அவளை பாதித்து இருந்தது.
“பாவி! எல்லாத்தையும் இவன் பண்ணிட்டு ஜாலியா இருக்கான், என்னால தான் அதுல இருந்து விடுபட முடியல. கல்யாணத்தில் இருந்தே இவன் அப்போ அப்போ இப்படி ஷாக் கொடுக்கிறான், ராஸ்கல்” என்று அவளை புலம்ப விட்டுக் கொண்டு இருந்தான் மியாவ்.
அவனோ, வேறு ஒரு அறையில் அவன் நண்பன் டிசங்கை வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தான்.
“டேய்! அறிவில்லையா டா உனக்கு? நான் என்ன சொன்னா, நீ என்ன செய்து வச்சு இருக்க?” என்று எரிச்சல் பட்டுக் கொண்டு இருந்தான்.
“ஹே ஷியாங்! நீ உன் வைஃபை விரும்பிற தானே, அப்புறம் எதுக்கு டா நான் அப்படி ஒரு ஏற்பாடை செய்யணும்?” என்று கேட்டான்.
“ டோண்ட் பி ஸ்டுபிட் டா! இது காண்ட்ராக்ட் கல்யாணம் எத்தனை நாள் இது நிலைத்து இருக்கும் தெரியாது, அப்புறம் ஐ டோண்ட் லைக் ஹேர்”.
“ஜஸ்ட் ஐ வாஸ் பிளேயிங் வித் ஹெர், ஷீ இஸ் நாட் அ குட் பேர் பார் மீ (நான் அவளுடன் சற்று விளையாடினேன், அவள் எனக்கு பொருத்தம் இல்லை)” என்று கூறியவனை இப்பொழுது வெட்டவா, குத்தவா என்பது போல் பார்த்தான் அவனின் நண்பன்.
“டேய்! நீ ஒரு இடியட் டா. எந்த பொண்ணுகிட்டயாவது இப்படி நீ விளையாடி இருக்கியா, இல்லை அவங்களை தான் உன் பக்கத்தில் வர விட்டு இருக்கியா?”.
“ஐ திங்க் யூ ஆர் இன் லவ் வித் ஹெர், பிளீஸ் எல்லாத்தையும் போட்டு குழப்பிகாத” என்று ஒரு நல்ல நண்பனாக எடுத்து கூறினான்.
அவனோ நண்பன் கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாமல், தன் குழம்பிய சிந்தனையோடு அவனின் அறைக்கு வந்து சேர்ந்தான். அங்கே நிர்மலமான உறக்கத்தில் இருந்த அவனின் மனைவியை பார்த்து, தனக்குள் கேட்டுக் கொண்டான், டூ ஐ லவ் ஹெர்? என்று.
அவனால் அதற்கு சரியான விடையை அந்த குழப்பத்தில் எடுக்க முடியவில்லை. தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து அவளருகில் வந்து படுத்தவன் உடனே உறங்கி விட்டான்.
அவன் உறங்கிவிட்டதை அறிந்து, மெதுவாக கண்களை திறந்து அவனை பார்த்தவள், அவனை பார்த்து முறைத்துக் கொண்டே ரசித்தாள்.
“இன்னும் தெளியல போலயே மியாவ் செல்லம், நாளையில் இருந்து தெளிய தெளிய அடிக்கிறேன், அப்போ தெளிஞ்சிடும் நீ என்னை லவ் பண்ணுறது”.
“இப்போ மை டர்ன் ஸ்டார்ட்ஸ், இனி நீ தப்பிக்க முடியாது டா மியாவ்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அவளும் உறங்கினாள்.
எப்பொழுதும் போல், சீக்கிரம் எழுந்தவன் அவன் படுத்து இருந்த நிலையை பார்த்து அதிர்ந்து விட்டான். அவள் மேல் கையை படர விட்டு, காலை தூக்கி அவள் காலின் மேல் போட்டு படுத்து இருந்தான்.
“ ஓ ஷிட்! எப்படி இப்படி படுத்தேன் தெரியல! ராட்சசி சும்மாவே வச்சு செய்வா, இப்படி படுத்து இருந்தது தெரிஞ்சா இன்னும் நல்லா செஞ்சிடுவாளே” என்று அலறிக் கொண்டு இருந்தான் மனதிற்குள்.
இப்பொழுது அவன் எண்ணம் முழுவதும், அவளின் தூக்கத்தை கலைக்காமல் எப்படி எழுந்து கொள்ளுவது என்பது தான்.
“கணக்கு பாடம் கூட எனக்கு இப்படி கஷ்டமா இல்லை, இவளை படிக்கிறது தான் எனக்கு கஷ்டமா இருக்கு. எந்நேரம் எப்படி ரியாக்ட் செய்வானே தெரிய மாட்டேங்குது” என்று புலம்பிக் கொண்டே, ஒரு காலை மெதுவாக நகர்த்த தொடங்கினான்.
அதற்குள் அவளுக்கு லேசாக தூக்கம் களைய, இவன் அரண்டு போனான். இவன் பயந்தது போல் அல்லாமல், அவள் சாதாரணமாக இவனுக்கு குட் மார்னிங் சொல்லிவிட்டு, அந்த பக்கமாக திரும்பி மீண்டும் உறங்க தொடங்கினாள்.
அவளிடம் இருந்து விடுபட்டால் போதும் என்ற எண்ணத்துடன், அவன் ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். குளித்து முடித்து அவன் அறையில் இருந்து வெளியேற நினைக்க, இன்னும் அவள் அசந்து தூங்குவதை பார்த்தவன் என்ன நினைத்தானோ, ரூம் சர்விஸ் க்கு கால் செய்து தேவையான உணவை ஆர்டர் செய்துவிட்டான்.
அதன் பின் சிறிய தாளில், அவன் இருக்குமிடம் எழுதி வைத்து விட்டு அறையில் இருந்து வெளியேறினான். அவன் வெளியேறிய அடுத்த நிமிடம், அவள் எழுந்து அமர்ந்து தான் குட் மார்னிங் சொன்ன பிறகு அவன் முகம் போன போக்கை நினைத்து சிரித்து கொண்டாள்.
அவனுக்கான இன்றைய திட்டம் என்ன என்பதும், அவள் முடிவு செய்து விட்டாள். குளித்து முடித்து வந்தவள், ரூம் சர்விஸ் என்று கதவை தட்டவும், லென்ஸ் வழியாக பார்த்துவிட்டு கதவை திறந்தாள்.
அவர்கள் வைத்துவிட்டு சென்ற பிறகு, கணவன் தனக்கு பிடித்த காலை உணவான தோசையை ஆர்டர் செய்து இருப்பதை பார்த்து, மனதிற்குள் அவனை கொஞ்சிக் கொண்டாள்.
அவன் இருக்கும் இடம் அறிந்த பின், சாப்பிட்டு முடித்துவிட்டு தன் செல்பேசியில் ஒருவருடன் விவாதித்துக் கொண்டு இருந்தாள். நீண்ட பேச்சிற்கு பிறகு, அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ இவளுக்கு ஒரே குஷியாகி விட்டது.
கால்கள் தரையில் படாமல், அவளுக்கு வானத்தில் நடப்பது போல் ஒரு பிம்பம். ஸ்கை கேசினோ என்று சூதாட்ட இடத்தில் தான் அவன் இருக்கிறான் என்பதை அறிந்து, அவள் கால்கள் எட்டி அங்கே நடைபோட்டது.
அவன் இருக்கும் இடம் அறிந்து, அங்கே சென்றவள் அவனை தன்னுடன் ஒரு இடத்திற்கு வருமாறு அழைத்தாள். அவனோ சற்று வேலை இருப்பதாக கூறி, அவளிடம் இருந்து நழுவ பார்த்தான்.
“நான் ஆசையா உங்க கூட அந்த ஸ்கை ஸ்னோ ல விளையாடலாம் அப்படினு கூப்பிட்டேன், நீங்க இப்படி வர மாட்டீங்க அப்படினு நினைக்கல. என்ன பண்ணுறது, நமக்குள்ள எதுவுமே ஒத்து வரல, அதான் இப்படி” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அங்கு இருந்து கிளம்ப எத்தனிக்க அவன் தடுத்தான்.
“ஹே சாரி! நிஜமா ஒர்க் அதிகம், ஒரு ஹாஃப் அன் ஹவர் வெயிட் பண்ணு, நாம போகலாம்” என்று அவளின் சோர்ந்த முகத்தை காண பிடிக்காமல் அவளுடன் வர சம்மதித்தான்.
“வாராய் நீ வாராய்” இது தான் நிஷாவின் மனதில் அப்பொழுது ஓடிக் கொண்டு இருந்தது.
அங்கே ஸ்னோ வேர்ல்டு உள்ளே நுழையவும், அங்கே இருந்த வித்தியாசத்தை பார்த்து அவன் அதிர்ந்து மனைவியை பார்த்தான். அவளோ அவனை பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.
“பாவி! கடைசி என்னை தொங்க விட்டு அடி வாங்க வைக்கிறதுல இவளுக்கு என்ன ஒரு சந்தோஷம், ங்கெய்யால!” என்று இப்பொழுது அவளின் வார்த்தை அவனின் வாய்க்குள் சர்வ சாதாரணமாக வந்தது.
தொடரும்..
ஓடி போகலாம் 7
ஸ்னோ வேர்ல்டு உள்ளே எடுத்த சண்டை காட்சியில், அடி சற்று பலம் தான் ஷியாங்கிற்கு. இதை அவன் எதிர்பார்த்து தான் தப்பிக்க நினைத்தது, ஆனால் அவளா விடுவாள் பிடித்து அவனை முடித்து கொடுக்க வைத்துவிட்டு தான் அடுத்த வேலையே பார்த்தாள் நிஷா.
“ராட்சசி! இவளை எல்லாம் நல்லா தலை கீழா தொங்கட்டும் அப்படினு அந்த ரைடோட சேர்த்து தொங்க விட்டு இருக்கணும், என்னமா பிளான் பண்ணி எக்ஸிகுட் பண்ணி இருக்கா”.
“முதல இவளை பேக் பண்ணி அனுப்பனும் ஊருக்கு, தொங்க விட்டே நம்மளை காமெடி பண்ணிகிட்டே இருக்கா குட்டி பிசாசு” என்று பொருமிக் கொண்டு இருந்தான் ஷியாங்.
அவன் எண்ணம் அவளுக்கு சென்று அடைந்ததோ என்னவோ, அவளே இவனிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டாள். அவள் புறப்பட்டு செல்ல போகிறாள் எனவும், முதலில் அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை.
ஆனால் அவள் சென்ற ஒரு நாளிலே அவனால் அங்கு இருக்க முடியவில்லை. உடனே கார் எடுத்துக் கொண்டு கோலாலம்பூர் வந்து அடைந்தான்.
“அட! அட! அதுக்குள்ள உன் வேலை எல்லாம் முடிந்ததா பேராண்டி! ஆச்சர்யமா இருக்கே!” என்று அவனின் தாத்தா அவன் வந்த உடனே கேலி பேசவும், இவன் காண்டானான்.
அவனின் முக பாவத்தை பார்த்த அவனின் தந்தை, என்ன புரிந்து கொண்டாரோ தன் தந்தையை அடக்கிவிட்டு அவனை உள்ளே அனுப்பினார். உள்ளே அவனின் அறைக்கு வந்தவன், அங்கே இருந்த மாற்றத்தை பார்த்து வியந்தான்.
“நாம ரூம் மாறி வந்துட்டோம் போலயே! இல்லையே என்னோட ஃபேவரைட் ஃபோட்டோ இங்கே தான இருக்கு, வேற ரூம் ல இது கிடையாதே!” என்று யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான், அங்கே இருந்த குளியலறை கதவை திறந்து கொண்டு நிஷா வெளியே வந்தாள்.
அவளை சற்றும் அங்கே எதிர்பாராதவன், இன்ப அதிர்ச்சியில் திளைத்து கொண்டு இருந்தான். அவளோ, அவன் முன் நின்று அவனை பார்த்து சிரித்து வரவேற்றாள்.
“நம்மளை பார்த்து தான் சிரிச்சாளா, இல்லை நம்ம பிரம்மையா?” என்று அவன் யோசித்து கொண்டு இருக்கும் பொழுதே, அவள் அவனை பார்த்து இப்பொழுது முறைக்க தொடங்கினாள்.
“அதானே! முறைச்சுகிட்டு இருக்கிறவளை போய் சிரிச்சா அப்படினு நினைக்கலமா டா நீ” என்று தன்னையே திட்டிக் கொண்டு அவளை பார்த்து என்னவென்று கேட்டான்.
“என்னை பத்தி ரொம்ப நல்ல அபிப்ராயம் வச்சு இருக்கீங்க போலயே! இனி இருக்கு உங்களுக்கு, நாளைக்கு பெர்ஜயா ஸ்குயர் ல ஷுட்டிங், இந்த தடவை பிடிச்சு கீழே தள்ளி விட்ருவேன் ஜாக்கிரதை!” என்று மிரட்டிவிட்டு சென்றவளை விநோதமாக பார்த்தான் ஷியாங்.
“நான் பாட்டுக்கு உள்ளே வந்து நிக்க தான் செய்றேன், இவ வந்த உடனே இப்படி முறைச்சிகிட்டு போறா, நாம எதும் தப்பா பேசிட்டோமா?” என்று சத்தமாக முணுமுணுத்துக் கொண்டு இருந்தவனை பார்த்து சிரித்தது அவனது மனசாட்சி.
“என்ன சிரிப்பு வேண்டி இருக்கு உனக்கு?” என்று இப்பொழுது அதனிடம் சிடுசிடுத்தான்.
“இல்லை, நீ மைண்ட் வாய்ஸ் நினைச்சு கொஞ்சம் சத்தமா அவளை பத்தி சொன்னியா, அதான் எனக்கு செம சிரிப்பா வருது” என்று அது கூறவும் தான், அவள் எதற்காக முறைத்தாள் என்று புரிந்து போனது.
“ஆஹா! நாமளே நம்ம வாயால கெட்டோம் போலயே! சரி இப்போ அவ கிட்ட போய் எப்படி இதை புரிய வைக்கிறது?” என்று யோசித்தவன் மூளையில் அவளது பாட்டி நியாபகம்.
“ம்ம்.. ஐடியா கிடைச்சிடுச்சு, மை கேம் ஸ்டார்ட்ஸ் நௌ டார்லிங்” என்று வில்லன் சிரிப்பு சிரித்தான்.
அதன் பிறகு குளித்து முடித்து வந்து சாப்பிட்டு முடித்துவிட்டு, ஆபிஸ் வேலைகளை பார்க்க தொடங்கினான். அதன் பிறகு காலையில் எடுத்த முடிவின் படி, அவளின் பாட்டிக்கு அழைத்து பேசினான்.
ஒரு ஒருமணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, அவர் இங்கே வருவதாக கூறவும், அப்பொழுதே அவரின் வசதிக்கு எந்த தேதி சரி வரும் என்று கேட்டுக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் டிக்கெட் பதிவு செய்தான்.
இதை எதுவும் அறியாத நிஷாவோ, அடுத்து அவனுக்கு எவ்வாறு அவளை புரிய வைப்பது என்ற யோசனையில் இறங்கினாள்.
“எவ்வளவு கிட்ட நெருங்கி போனாலும், அவனுக்கு என்னோட கோப முகம் தான் தோணுது. இதை எப்படி சரி செய்ய போறேன், ஆண்டவா! எதாவது ஒரு நல்ல வழி காட்டுங்களேன்” என்று புலம்பிக் கொண்டு இருந்தாள்.
“இதை பத்தி பாட்டி கிட்ட பேசினா என்ன? ஆனா இப்படினு கேட்டா மூஞ்சியில் காரி துப்பாத குறையா திட்டி தீர்த்து வச்சிடும் கிழவி. நம்ம சாதாரணமா பேசி கேட்போம், முகத்தில் எதையும் காட்டாம இருக்கணும்” என்று எண்ணிக் கொண்டு உடனே வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச தொடங்கினாள்.
வீடியோ காலில் பேத்தியின் அழைப்பு வரவும், அவர் புன்னகைத்து எடுத்து பேச தொடங்கினார். சிறிது நேரம் அவரிடம் பேசிய நிஷாவின் மனது சற்று லேசாகியது. ஆனால் அங்கே அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, பேத்தியின் குழப்பத்தை தீர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து மறுநாளே புறப்பட்டு விட்டார்.
மறுநாள் காலை அங்கே பெர்ஜயா ஸ்குயர் மாடியில், ஹெலிகாப்டர் மூலம் கம்பீரமாக இறங்கி வந்த ஷியாங்கை அழகாக படம் எடுத்துக் கொண்டு இருந்தாள் நிஷா.
அந்த படத்தின் முதல் சீன் அது தான், அவனின் கம்பீரம் குறையாமல் இருக்க வேண்டி, அவனின் உடை முதல் இறங்க வேண்டிதலை அலங்காரம் வரை எல்லாம் அவள் தான் பார்த்து பார்த்து செய்து இருந்தாள்.
“இவளுக்கு என்ன ஆச்சு? இப்படி நம்மளோட ஒவ்வொரு விஷயத்திலும் இன்னைக்கு இம்புட்டு அக்கறை எடுத்துக்கிறா! என்ன விஷயமா இருக்கும்!” என்று யோசித்துக் கொண்டு இருந்தாலும், அவன் நடிக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் நன்றாகவே நடித்துக் கொடுத்தான்.
எல்லாம் முடித்துக் கொண்டு, அவன் கிளம்பும் பொழுது அங்கே ஒரு சைனா ரசிகை பெண் இவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய கையோடு, உரசிக் கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டு இருந்ததை பார்த்து காதில் புகை வராத குறை தான் நிஷாவிர்க்கு.
அவள் உடனே அவன் அருகே சென்று, அவன் கையை பிடித்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு, அந்த பெண்ணிடம் ஹி இஸ் மைன் என்று சொல்லாமல் சொல்லி அவனை அழைத்துக் கொண்டு அந்த மாடியில் இருந்து கீழே லிஃப்ட் மூலம் இறங்கினாள்.
இவன் வருகையை அறிந்து, நிறைய அவனின் ரசிகைகள் அவன் கீழே இறங்கிய பின் அவனை சூழ்ந்து கொண்டனர், நிஷாவை இடித்து வெளியே தள்ளி விட்டு. அவனோ, அவளின் முக பாவனையை கவனித்து, அவளை பார்த்து சிரித்தான் ரகசியமாக.
“வீட்டுக்கு தான வருவ டா, உன்னை அங்க தொங்க விடுறேன்” என்று கருவிவிட்டு வீட்டுக்கு சென்றாள்.
நிஷா சென்றதை அறிந்து, அங்கு இருந்து உடனே கிளம்ப வேண்டிய அவசியத்தை உணர்ந்து, தன் பாடிகார்ட்ஸ்க்கு கண்ணை காட்ட, அவர்கள் அவனை பத்திரமாக அழைத்து சென்றனர்.
அங்கே பாட்டியை பார்த்த அதிர்ச்சியில் இருந்த நிஷாவை பார்த்து முறைதுவிட்டு, இவன் பாட்டியிடம் நலம் விசாரித்துவிட்டு சென்றான்.
நடந்ததை எண்ணி பார்த்த இருவரும், நித்ரா தேவி அழைக்க தூக்கத்தின் பிடிக்கு சென்றனர். மறுநாள் எழுந்து வந்த இருவரும் கண்டது, அங்கே இரு குடும்பங்களின் தகராரை தான்.
“இப்போ என்ன பிரச்சினை? பெருசுங்களோட இதே வேலையா போச்சு, போய் என்ன பிரச்னை என்னனு கேட்போம்” என்று எண்ணிக் கொண்டே சென்றவளுக்கு அவர்கள் பேசிக் கொண்டதை கேட்டதும், தலை சுற்ற தொடங்கியது.
“பாவிகளா! நானே அவனுக்கு என்னை பிடிச்சு இருக்கு, அது தெரியாம இருக்கானே, கொஞ்சம் தெளிய வைக்க வேலை எல்லாம் பார்த்தா, இதுங்க மொத்ததுக்கு வேட்டு வைக்குறாங்க” என்று பொருமிக் கொண்டு இருந்தாள் மனதிற்குள்.
அவள் ஷியாங்கை பார்க்க, அவனோ அங்கே வந்து இருந்த அவனின் அத்தை பெண் லுலியுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தான்.
“இங்க இவ்வளவு பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு, இவன் அங்க அவ கூட அப்படி என்ன டிஸ்கஷன் ல இருக்கான்?” என்று எண்ணிக் கொண்டே அவர்கள் அருகே சென்றாள்.
அங்கே சீன மொழியில் பேசிக் கொண்டு இருந்த இருவரையும் கண்டு விழித்தாள். ஆனால், அவர்களின் உடல் மொழியில் அவள் கண்டது அவர்கள் பேசிக் கொண்டு இருப்பது இந்த திருமணம் குறித்து தான் என்று புரிந்து போனது.
“இங்க என் பொலைப்பு சிரிப்பா சிரிக்குது, உங்களுக்கு என்ன இவளோட பேச்சு. இப்போ என் கூட வாங்க, நாம போய் அவங்களை சமாதானப்படுத்தலாம்” என்று கூறி அவனை இழுத்துக் கொண்டு அங்கே சென்றாள்.
“இங்க பாருங்க அப்பா, எனக்கு கல்யாணம் எல்லாம் ஒரு முறை தான். இவர் தான் என்னோட புருஷன், இதுல நீங்க ரெண்டு பேரும் தலையிடாதீங்க”.
“தயவு செய்து இங்க இருந்து கிளம்புங்க எல்லோரும், எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துப்போம்” என்று அழுத்தமாக அவள் கூறவும், அவர்கள் பேச்சை நிறுத்தினர்.
பின்பு ஷியாங்கின் தந்தை அவளை பார்த்து பேச தொடங்கினார்.
“இது காண்ட்ராக்ட் கல்யாணம் நிஷா, அதுக்கு ஆயுசு கொஞ்ச நாளைக்கு மட்டும் தான். அதுவும் நேத்தோட முடிஞ்சது, இனி என் பையனுக்கு நான் பெரிய இடத்தில் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணலாம் நினைக்கிறேன்”.
“அதனால பிரச்சினை பண்ணாம நீங்க விலகுறது தான் சரி, இதுக்கு என் பையன் சம்மதிச்ச பிறகு தான் நான் பேச வந்து இருக்கிறேன். சரி அவன் கூட இத்தனை நாள் இருந்தியே, என்னைக்காவது ஒரு நாள் அவன் பயமில்லாமல் இருந்து இருக்கானா உன் கூட”.
“எப்போ நீ அவனை தொங்க விட்டு ஃபைட் சீன் வைப்பியோ அப்படினு ஒரு பயத்தில் தானே இத்தனை நாள் இருந்து இருக்கான். இதை மறுக்க முடியுமா உன்னால, இப்போ இதுக்கு பதில் பேசு மா” எனவும் அவள் கண்களில் கண்ணீர் விழுந்து விடுமோ என்ற பயத்தில், பல்லை கடித்துக் கொண்டு அப்படியே நின்று இருந்தாள்.
மனதில் முழுவதும், அவன் தன்னை பிரிய சரி என்று சொன்னது மட்டுமே உறுத்திக் கொண்டு இருந்தது. அவன் தந்தை கூறியது போல், ஒவ்வொரு நாளும் அவனை அப்படி ஒரு பயத்தில் வைத்தது நிஜம் தான், ஆனால் அது அவன் படம் சரியாக வர வேண்டும் என்பதற்காக அவள் எடுத்து இருந்த ஒரு சின்ன நடவடிக்கை அவ்வளவு தான்.
இன்று அதுவே அவளை விட்டு பிரிய அவன் எடுத்து இருந்த முடிவு, அவளை கலங்க வைத்தது. இன்று அவனிடம் காதலை, அன்பை எல்லாம் சொல்லி அவனோடு ஓடி போக துடித்துக் கொண்டு இருந்தது எல்லாம் இப்படி கானல் நீராக போகும் என்று கனவில் கூட அவள் நினைத்தது இல்லை.
ஒன்றும் பேசாமல், தன் பெட்டியை எடுத்துக் கொண்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல் வெளியேறிவிட்டாள் நிஷா சிறிது அழுகையுடன்.
தொடரும்..
ஓடி போகலாம் 8
வீட்டை விட்டு வந்து இன்றோடு ஐந்து மாதங்கள் கடந்து இருந்தது. அங்கு இருந்து வந்து, அவள் பாட்டியிடம் மட்டுமே பேசி இருந்தாள், தன்னை இனி சிறிது நாளைக்கு யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று.
அதன் பிறகு, அந்த படத்தின் எடிட்டிங் வேலைகள் மட்டும் பார்த்துக் கொடுத்துவிட்டு வந்து இருந்தாள். படமும் ரிலீசாகி வசூலில் ஷியாங் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை குவித்தது.
அதில் அவளுக்கு சந்தோஷமே, ஆனால் அந்த சந்தோஷத்தை பகிர கூட முடியாத அவளின் நிலையை தான் அடியோடு வெறுத்தாள். இப்பொழுது அவள் இருப்பது பட்டாயாவில் உள்ள கோரல் ஐலன்ட் எனும் சிறு தீவுக்குள்.
அங்கே உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கிக் கொண்டு, தனக்கு பிடித்த வேலையான போட்டோகிராபியை புரோபஷனாக செய்து கொண்டு இருந்தாள். அங்கே வருபவர்கள் எல்லாம் சாகச விளையாட்டுகள் பல விளையாடி, அங்கு இருக்கும் கடல் நீரில் குளித்துவிட்டு மறுபக்கம் இருக்கும் ஊருக்கு சென்றுவிடுவர்.
இந்த தீவில் கடை நடத்துபவர்கள், சாகசம் புரிபவர்கள் மட்டும் அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி தங்கி வருகின்றனர். ஒரே ஒரு ரிசார்ட் இங்கே, கடல் அருகே ஏகாந்தமாக ரசிப்பவர்கள் மட்டுமே வருவார்கள்.
விலையும் சற்று அதிகம் மற்ற ரிசார்ட்களை விட, ஆகையால் எண்ணிக்கையும் கம்மி தான் இங்கே. இவள் இங்கே வருபவர்களை வித விதமாக எடுத்து, அவர்களுக்கு பிடிக்கும் படத்தை பிரசுரித்து கொடுப்பாள்.
தொழிலாக இப்பொழுது இதை செய்து வந்தாலும், சில இயற்கை காட்சிகளை குறும்படமாக எடுத்து அதை தன்னுடைய வலைதளத்தில் பதிவிட்டும் வருகிறாள்.
அப்படித்தான் அன்று ஒரு புதுமண ஜோடிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தவள் வட்டத்தில் அவளின் மியாவ் விழுந்தான். பிரம்மை என்று அதை ஒதுக்கி தள்ள நினைக்க, அது உண்மை என்று அவன் அருகில் ஒரு இளம் சீன பெண்ணுடன் உரசிக் கொண்டு வந்ததும் இல்லாமல், அவனின் டிரேட்மார்க் புன்னகையுடன் வலம் வந்ததில் உண்மை என்று புரிந்தது.
கடைசி போட்டோஷூட் முடிந்து, அந்த ஜோடிகளிடம் டோக்கன் ஒன்றை கொடுத்துவிட்டு, அறை மணி நேரம் கழித்து வாங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டு, அவளின் மியாவ் கண்ணில் படாமல் செல்ல வேண்டும் என்று வேகமாக அந்த இடத்தை காலி செய்தாள்.
விரைவாக அந்த ஜோடிகளுக்கு புகைப்படத்தை தயார் செய்து கொடுத்துவிட்டு, உடனே அங்கு இருந்து தான் தங்கி இருந்த ரிசார்ட் நோக்கி ஓடினாள். அவளின் அறைக்கு முன் நின்று கதவை திறந்த நொடி, அவளோடு சேர்ந்து பின்னாடியே அவளின் மியாவும் உள்ளே நுழைந்து கதவை அடைத்தான்.
இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அதிர்ந்து நின்றவள் என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியாமல் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“நிஷ்! உன்னை பார்த்த பிறகு இப்போ தான் ரிலிப்பா இருக்கு எனக்கு. எப்படி இருக்க? ஓகே நீ பாட்டுக்கு சொல்லாம வந்துட்ட, எனக்கு இப்போ ஹெல்ப் வேணும் டைவர்ஸ் பாத்திரத்தில் சைன் பண்ணி கொடு இப்போ”.
“என்னோட பியான்ஸி வெளியே வெயிட் பண்ணுரா, அவ கூட அவுட்டோர் ஷூட் வந்து இருக்கேன். சீக்கிரம் சைன் பண்ணி கொடுத்தா நான் பாட்டுக்கு போய்கிட்டே இருப்பேன்” என்றவனை இப்பொழுது வெறித்து பார்த்தாள்.
இறுதியில் தன்னை நிரந்தரமாக விளக்கி வைக்க, தன்னை தேடி வந்துவிட்டான். இதற்கு பயந்து தானே, அவள் விலகி வந்தது, இப்பொழுது அவளுக்கு என்ன செய்வது என்று கூட தெரியவில்லை. கண்கள் லேசாக இருட்டிக் கொண்டு வர மயங்கி விழுந்தாள்.
“டேய் லூசு! அவ கிட்ட என்னடா சொல்லி தொலைச்ச? பாரு மூணு மணி நேரமா மயக்கத்தில் இருக்கா” என்று சிடிசிடுத்தார் அவனின் தாத்தா.
“ம்ச்! தாத்தா, சும்மா அவளை கோபப்படுத்தி பார்க்க நினைச்சு, டைவர்ஸ் கொடு அப்படினு சொன்னேன், இப்படி ஆகும்ன்னு நினைக்கல தாத்தா” என்று வருந்திக் கொண்டு இருந்தவனை பார்த்து முறைத்தார்.
“ம்க்கும்! இப்போ வருத்தப்பட்டு என்ன செய்ய? சரி, இனி அவ எழுந்துக்கும் பொழுதாவது, உன் காதலை சொல்லிட்டு சேர்ந்து வாழ வழியை பாரு டா” என்று சொல்லிவிட்டு உடனே அவர் வெளியேறினார்.
ஹாஸ்பிடலில் அனுமதித்து மூன்று மணி நேரத்திற்கு மேலானது. இன்னும் கண் முழிக்காமல் இருக்கிறாள் என்றால், அவள் எந்த அளவு தன்னை நேசித்து இருக்கிறாள் என்று புரிந்து கொண்டு இருந்தான்.
“பேபி! ஐ அம் சாரி மா. உனக்கு நியாபகம் இருக்கா, நம்ம ஃபர்ஸ்ட் மீட்டிங் இன் ஏர்போர்ட். எப்படி மறக்க முடியும்? அதானே இந்த கல்யாணத்துக்கு முதல் அச்சாரமே”.
“ஆமா! நம்ம ஏர்போர்ட் மீட்டிங் தான், இந்த கல்யாணத்திற்கு காரணம் பேபி. இந்த கல்யாணம் பத்தி முதல நான் பேசினது உங்க பாட்டி கிட்ட தான்” என்று கூறியவன் அவளை முதன் முதலில் சந்தித்த நிகழ்வை நினைவு கூர்ந்தான்.
இந்தியாவில் மும்பையில் ஷுட்டிங் முடித்து, ஷியாங் கோலாலம்பூர் செல்ல இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் செக் இன் முடிந்து காத்து இருந்தான். அவன் பிரஸ்டிஜ் லௌன்ச் ஏரியாவில் காத்து இருக்க, அதே இடத்திற்கு கோபமாக வந்த நிஷாவை சுவாரசியமாக பார்க்க தொடங்கினான்.
“இங்க பாரு எனக்கு ஆக்ஷன் ஃபில்ம் மட்டும் தான் புக் பண்ணனும் இனி, ரொமான்ஸ் படம் அப்படினு ப்ளூ பிலிம் எடுக்கிற டைரக்டர்ஸ் தான் அதிகம்”.
“எனக்கு இரிட்டிங்கா இருக்கு, கொஞ்சம் கூட சென்ஸ் இல்லாத ஆட்கள் கூட எல்லாம் இனி ஒர்க் பண்ண முடியாது என்னால. இனி புக் பண்ணுறதுக்கு முன்னாடி, எனக்கு அந்த படத்தோட ஸ்கிரிப்ட் அனுப்பிட்டு அப்புறம் புக் பண்ணு புரியுதா?” என்று தன் அசிஸ்டன்ட்டிடம் எகிறி விட்டு போனை வைத்தாள்.
அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து அவள் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த ஷியாங்கிற்கு, அவளிடம் சற்று விளையாடி பார்த்தால் என்ன என்று தோன்றியது.
அவள் பேசிய ஆங்கிலம், ஒவ்வொரு முறையும் பேசும் பொழுது அவள் பிடிக்கும் அபிநயம் எல்லாம் அவள் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது அவனுக்கு. ஆகையால், அவளிடம் வம்பு வளர்க்க எண்ணி என்ன செய்ய என்று தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தான்.
அந்த வாய்ப்பு அதுவாகவே அப்பொழுது அமைந்து தொலைத்து, அவளிடம் முழுவதுமாக சரண்டராக வைத்தது.
“ஹல்லோ! உங்களுக்கு தனியா சொல்லுவாங்களா, ஃப்ளைட்க்கு போர்டிங் சொல்லிட்டாங்க, கிளம்புங்க” என்று அவன் கவனிக்காமல் விட்டதை சுட்டிக் காட்டி முன்னே சென்றாள்.
முன்னே சென்றவளை தொடர்ந்து சென்றவன், அங்கே ஃப்ளைட்டில் அவள் அருகில் தான் இவனுக்கு சீட் இருக்கவும், சந்தோஷமாக அமர்ந்தான்.
“தாங்க்ஸ் மேடம்! ஐ வாஸ் லாஸ்ட் இன் மை தாட்ஸ், சோ டிட் நாட் நோட்டீஸ் அபவுட் போர்டிங். அனிவேஸ், தாங்க்ஸ் அ லாட் மேடம்” என்று ஆங்கிலத்தில் அவன் அவளிடம் மரியாதையாக பேசவும், ஏனோ அவளுக்கு அப்பொழுது அவனின் அந்த அணுகுமுறை பிடித்து இருந்தது.
எங்கோ போற மாரியாத்தா, என் மேல ஏறாதா என்பது போல் அவள் யார் மீதோ இருந்த கோபத்தை அப்பொழுது, அங்கே இருந்த அவனின் மீது காட்டி இருந்தாள்.
நியாமாக அவளின் செயலுக்கு அவனுக்கு அவள் மீது சற்று எரிச்சல் வர வேண்டும், ஆனால் அவனோ அதை காட்டாமல் நன்றி உரைத்தது தான் அவளுக்கு அவனின் மீது மதிப்பு வந்தது.
அதன் பிறகு, அவன் மெதுவாக பேசி அவளின் விபரத்தை வாங்கியவன், அடுத்து செய்தது தன் படத்தில் அவளை கேமராமேனாக போட வைத்தது தான். அவள் அந்த பிராஜக்டில் சைன் பண்ணியதும் தான், அவனுக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
அதன் பிறகு, சில விஷயங்களில் இரு குடும்பத்தார் மீதும் வழக்கு ஒன்று ஓடி கொண்டு இருந்து, அது மக்களால் கவனிக்கப்படுகிறது எனவும் அதை இவன் தனக்கு சாதகமாக ஏற்படுத்திக் கொண்டான்.
அவள் பாட்டியிடம் பேசி, அவர் மூலமாக திருமணத்திற்கு நாள் குறித்தான். அவளை சரிகட்ட பாட்டி இருக்கிறார் என்ற தைரியத்தில் எல்லாம் செய்தான், நண்பன் டிசங்கிற்கு கூட தெரியாமல்.
ஆம்! அவள் தான் வேண்டும் என்று முடிவு எடுத்த பின், எங்கேயும் எந்த ஒரு விஷயமும் வெளியே செல்ல கூடாது என்பதில் கவனம் வைத்து, அடி மேல் அடி வைத்து செயல்பட்டது இந்த திருமணம்.
இதை எல்லாம் நினைத்துக் கொண்டும், அவன் செய்த விஷயங்களை எல்லாம் மயக்கத்தில் இருந்த நிஷாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.
“அப்போவே, நீ என்னை விரும்பி இருக்க அப்படிதான மியாவ்” என்று நிஷா மெதுவாக வாய் திறக்கவும், அவன் சடாரென்று அவளை கூர்ந்து பார்த்தான்.
“நீ மயக்கத்தில் இல்லையா அப்போ, இவ்வளவு நேரம் நான் பேசினது எல்லாம் கேட்டியா!” என்று அவன் கேட்கவும், அவள் சிரித்தாள்.
“உனக்கு மட்டும் தான் ஷாக் கொடுக்க தெரியுமா, எனக்கும் தெரியும்” என்று கூறி சிரித்தாள்.
“அடிப்பாவி! இதுக்கு அந்த டாக்டரும் கூட்டா!” என்று கேட்கவும், அவள் சிரித்தாள் அவனின் முக பாவனையில்.
“நிஜமாவே நான் மயங்கி விழுந்துட்டேன், இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் முழிப்பு வந்தது. தாத்தா வேற உங்க கிட்ட கோபமா பேசிக்கிட்டு இருந்தாங்க வேற, அதான் நான் அப்படியே மெயின்டெய்ன் பண்ணிட்டேன்” என்று கூறி கண்ணடித்தாள்.
அதில், அவன் சிரித்து அவளை அணைத்து அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தான்.
“இப்போ சொல்லுங்க, உங்களுக்கு அப்போவே அவ்வளவு லவ்வா என் மேல. எனக்காவது ஒரு தடவை தான் கல்யாணம் நம்ம லைஃப் ல, சோ இதை நிரந்தரமாக்கி அம்புட்டு லவ்வையும் உங்க மேல கொட்டனும் ஆப்படின்ற ஆசையில் தான் நெருங்கினேன் உங்க கிட்ட”.
“ஆனா! எப்படின்னு தெரியல உங்களை, உங்க மனரிசம் எல்லாம் அம்புட்டு பிடிச்சது எனக்கு. என்னை அறியாமல், உங்களை நல்லா சைட் அடிக்க ஆரம்பிச்சேன்”.
“மியாவ்! இதான் உங்களுக்கு நான் வச்ச பெயர்” என்று அவள் கூறவும், அவன் அதற்கு காரணம் கேட்டான்.
“உங்க பெயரை இதோட லிங்க் பண்ணி பாருங்க, உங்க பெயர் வாய்ல நுழையல அதான் இப்படி” எனவும் அவன் முறைத்தான்.
“ஈசியா வாய்ல வர பெயரா பார்த்து என் தாத்தா எனக்கு பெயர் வச்சா, உனக்கு வாய்க்குள்ள நுழையல யா! இரு இப்போ நுழையும் பாரு, என் பேர் உனக்கு” என்று கூறி அவளின் இதழ்களை சிறை செய்தான்.
அவனின் அந்த மென் தீண்டலில், உடல் சிலிர்த்து அவனோடு ஒண்டினாள் நிஷா. சிறிது நேரத்தில், இதழ்களுக்கு அவன் விடுதலை அளிக்க, அவள் அவனை அடித்தாள்.
“அன்னைக்கு அப்போ ஏன் டா இதை சொல்லல? நான் எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா?” என்று அன்றைய நினைவில் அழுகை வந்தது அவளுக்கு.
“சாரி! சாரி! உங்க பாட்டி தான் வாய்யே திறக்க கூடாது அப்படினு கட்டி போட்டு இருந்தாங்க என்னை. இப்போ கூட அவங்க தான் பிளானை எக்சிகுட் பண்ண சொன்னாங்க”.
“உணகும், எனக்கும் எந்த அளவு லவ் ஸ்ட்ராங்கா இருக்கு அப்படினு இந்த பிரிவு சொல்லி கொடுக்கும் சொன்னாங்க தெரியுமா? உன்னை, நீ இல்லாம நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்றவணை இப்பொழுது அவள் அனைத்து கொண்டாள், தானும் மிஸ் செய்ததாக.
அதற்குள் வெளியே பெரியவர்களின் பேச்சு குரல் கேட்க, மறுபடியுமா என்று இருவரும் அலறினர்.
“மியாவ்! ஓடி போகலாமா?” என்று அவள் கேட்க, சிரித்துக் கொண்டே போகலாம் என்று கூறி இருவரும் தேனிலவு கொண்டாட ஸ்விஸ் சென்றனர்.
நாமும் நம் வேலையை பார்க்க ஓடி போகலாம்.
முற்றும்..