OMR 32
OMR 32
O.M.R – 32
நாராயணன் தன் தொண்டையை செருமிக் கொண்டு, “மாப்பிள்ளைக்குப் பெண்ணை பிடிச்சிருக்கு.. ஆனால்….”, என்று தன் பேச்சை நிறுத்த, சுப்பிரமணி, ஈஸ்வரி இருவரும் அவரைப் பதட்டத்தோடு பார்த்தனர்.
“பெண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கான்னு… மாப்பிள்ளை கேட்கறார்…”, என்று நாராயணன் சிரித்த முகமாக கூற, மீனாவின் தாய் ஈஸ்வரி முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.
“அட.. எங்க எல்லாருக்கும் மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கு…”, என்று சுப்பிரமணி சிரித்த முகமாகத் தலை அசைத்துக் கூற, அரவிந்த் தன் தந்தை நாராயணின் காதில் ஏதோ கிசுகிசுத்தான்.
அனைவரும் சற்று நேரம் அமைதியாக இருக்க,”மாப்பிள்ளைக்கு பொண்ணு கிட்ட தனியா பேசணுமாம்…”, என்று நாராயணன் அழுத்தமாகக் கூற, சுப்பிரமணியும், ஈஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சில நிமிடங்களுக்குப் பின், “எங்க ஊரில் இதெல்லாம்..”, என்று தயங்கியபடி சுப்பிரமணி பெண்ணின் தந்தையாக ஆரம்பிக்க, “இந்த காலத்து பசங்க பேசி முடிவு பண்ணட்டும்..”, என்று தோரணையாக கூறினார் தனம் மாப்பிள்ளையின் தாயாக.
“அண்ணா.. இந்த sixer உனக்குன்னு நினைத்து ஏமாந்திராத… மாப்பிள்ளை வீட்டு கெத்து…”, என்று அர்ச்சனா அரவிந்தின் காதில் கிசுகிசுக்க.., அரவிந்த் தன் தங்கையை ஆமோதிப்பது போல், மௌனமாக தலை அசைத்தான்.
ஈஸ்வரி சம்மதமாக தன் கண்களை மூடித் திறக்க, “நீங்க சொல்றதும் சரி தான் பேசட்டும்..”, என்று மெதுவாகக் கூறினார் சுப்பிரமணி.
“அப்ப சரி.. இரண்டு பேரும் அப்படியே சாமி கும்பிட்டுட்டு வாங்க…”, என்று நாராயணன் கூற, “இன்று எத்தனை முறை சாமி கும்பிடுவோமோ…”, என்று எண்ணியபடி மீனா எழுந்து கொண்டாள்.
மீனா அமைதியாக நடக்க, அரவிந்தும் எதுவும் பேசாமல் நடந்தான். அங்கு வீற்றிருந்த பிள்ளையாரை இருவரும் தரிசித்து விட்டு, மௌனமாக நடக்க, ஒரு தூணை கையால் காட்டி, “இங்க உட்கார்ந்து பேசுவோமா..?”, என்று அரவிந்த் மெதுவாகக் கேட்டு மீனாவின் பதிலுக்காக அவள் முகம் பார்த்தான்.
மீனா தலை அசைக்க இருவரும் அங்கு அமர்ந்தனர்.
மீனா அமைதியாக அமர்ந்திருக்க, “நீங்க உங்க பதிலைச் சொன்ன மாதிரி தெரியலியே..”, என்று அரவிந்த் மென்மையாக மீனாவின் முகம் பார்த்து கூற, மீனா எந்த வித தயக்கமுமின்றி அரவிந்தை நிமிர்ந்து பார்த்தாள்.
“இவர் என்ன கேட்கிறார்…?”, என்று சிந்தித்தபடி மீனா அரவிந்தை பார்க்க, “எனக்கு நிறையப் பேசி பழக்கம் இல்லை.. ஆனால் பேச வேண்டிய விஷயத்தை பேசனமுன்னு நினைப்பேன்.. உங்களுக்கு விருப்பமில்லைன்னா இந்தத் திருமண பேச்சை மேலும் வளர விடக் கூடாது….”, என்று அரவிந்த் அழுத்தமாக மீனாவின் முகம் பார்த்து கூற, அரவிந்தின் பேச்சை மீனா இடை மறித்தாள்.
“இவ்வளவு நேரம் பிடிச்சிருக்கா.. பிடிக்கலையான்னு தெரியலை.. ஆனால் இப்ப பிடிச்சிருக்கு..”, என்று அரவிந்தின் முகம் பார்த்து தெளிவாகக் கூறினாள் மீனா. அவள் கூறுவது புரியாமல், அரவிந்த் மீனாவை அமைதியாகப் பார்க்க, “வாழ்க்கையில் முடிவை நீங்க எடுத்தாலும், என் கருத்துக்கும் மதிப்பு கொடுப்பீங்கன்னு நம்பறேன்..”, என்று மீனா மென்மையாக ஆனால் அவள் குரலில் எந்தவித பிசிரின்றி தெளிவாகக் கூறினாள்.
அவள் எதிர்பார்ப்பை எந்தவித ஒளிவு மறைவின்றி நேரடியாகக் கூறிய மீனாவை அரவிந்திற்கு இன்னும் பிடித்தது.
அரவிந்த் தெளிவான முகத்தோடு, “கல்யாணத்திற்கு நாள் பார்க்க சொல்லுவோமா..?”, என்று கண்சிமிட்டி கேட்க, இத்தனை நேரமாக வராத வெட்கம் இப்பொழுது மீனாவைச் சூழ, தலை குனிந்து சம்மதமாகத் தலை அசைத்தாள்.
“என்கிட்டே சொல்லலைனா எனக்குப் புரியாது..”, என்று அரவிந்த் பிடிவாதமாக கூற, மீனா வெட்கப் புன்னகையோடு அரவிந்தை தலை நிமிர்ந்து பார்த்தாள்.
“அட.. நான் இவ்வளவு பேசுவேனா…? இப்படி எல்லாம் கூட பேசுவேனா..?”, என்று அரவிந்த் தன்னை பற்றி நினைக்க.., நமக்கும் அதே சந்தேகம் வருகிறது.
பெண்களால் ஆண்கள் மாறுவதும் ஆண்களால் பெண்கள் மாறுவதும் இயற்கை தானே!!!!
அரவிந்த், மீனா இருவரும் தங்கள் பெற்றோரை நோக்கி வர, அவர்கள் முகம் அவர்கள் மனநிலையைப் பெற்றோர்களுக்கு தெளிவாகக் கூறியது.
“நிச்சயத்திற்கும், கல்யாணத்துக்கும் நல்ல நாள் பார்ப்போம்…”, என்று நாராயணன் சிரித்த முகமாகக் கூற, ” நாம நாள் பார்த்த பிறகு, எங்க ஊரில் மண்டபம் பார்க்கணும்.. “, என்று சுப்பிரமணி கூறினார்.
“நிச்சயத்தை உங்க ஊரில் வைத்துக் கொள்ளலாம்… கல்யாணத்தை இங்க தான் வைக்கணும்.. எங்க சொந்த பந்தமெல்லாம் இங்க தான் இருக்கிறாங்க.. முதல் நாள் reception … மறுநாள் கல்யாணம்…”, என்று தனம் கண்டிப்பாகக் கூற, “கல்யாணத்தைக் கூட, உங்க வசதிக்காக இங்க வைத்துக்கலாம்.. ஆனால், கல்யாணத்துக்கு முன்னாடி reception வைக்கிறேதெல்லாம் எங்க ஊரில் பழக்கம் இல்லை.. பெண் கழுத்தில் தாலி ஏறிய பிறகு தான் ஜோடியா நிற்கணும்..”, என்று சுப்பிரமணி அழுத்தமாகக் கூறினார்.
“இந்த அளவுக்குக் கூட நம்பிக்கை இல்லைனா.. அதெப்படி…”, என்று தனம் தொடங்க, தனத்தைக் குறுக்கிட்ட நாராயணன், “இல்லை.. கல்யாணத்தை இங்க வைத்துக்கலாம்.. மற்றபடி.. உங்க வசதி…”, என்று நாராயணன் சமாதானமாக கூறினார்.
ஈஸ்வரி திருப்தியாகத் தலை அசைக்க, “எங்க ஊரில் நடந்தா இந்நேரம் பெண் பார்க்கவே கூட்டம் கலை கட்டிருக்கும்…”, என்று சுப்பிரமணி மனத்தாங்கலாக்க கூறினார். தனம் ஏதோ பேச தொடங்க, நாராயணன் கண்ணசைத்து அமைதியாக இருக்கும் படி செய்கை காட்டினார்.
அரவிந்த், மீனா இருவரும் கண்களால் வேறு உலகில் சஞ்சரிக்க, “அட.. அண்ணா.. இவங்க பேசறதை பார்த்தா உன் கல்யாணமே சந்தேகமா இருக்கிற மாதிரி தெரியுது.. உனக்கு ஏதாவது தெரியுதா..?”, என்று அர்ச்சனா அரவிந்தின் காதில் கிசுகிசுக்க, “எதிர் பக்கம் இருக்கிற உங்க அண்ணியை மட்டும் தான் தெரியுது…”, என்று அரவிந்த் மீனாவைப் பார்த்தபடி அர்ச்சனாவின் காதில் கிசுகிசுத்தான்.
“அண்ணா.. இதெல்லாம் ஓவர் டா…”, என்று அர்ச்சனா அரவிந்திற்கு மட்டும் கேட்கும் விதமாக முணுமுணுக்க, “ஓய்.. நானா பெண் பார்க்க கூட்டிட்டு வரச் சொன்னேன்.. நீங்கத் தானே கூட்டிட்டு வந்தீங்க.. இப்ப ஓவர் ன்னு சொன்னால் என்ன அர்த்தம்…?”, என்று அரவிந்த் வியாக்கியானம் பேசினான்.
“இனி இவனிடம் பேசி பயனில்லை..”, என்றெண்ணி அர்ச்சனா தன் கவனத்தைப் பெரியவர்களின் பக்கம் திருப்பினாள்.
அவர்கள் பேசி முடித்து வீட்டிற்குக் கிளம்ப, அர்ச்சனா மீனாவிடம் ஏதோ கிசுகிசுத்தாள்.
பின் அரவிந்த், மீனா இருவரும் கண்களால் விடை பெற்றனர்.
மீனா சிரித்த முகமாக நடந்து செல்ல, “மாப்பிளை அப்படி என்ன பேசினார்..?”, என்று கேட்கும் ஆவல் ஈஸ்வரிக்கு எழும்பியது. “க்ரிஷ் இருந்தால் கேட்டிருப்பான்..”, என்ற எண்ணம் தோன்ற அமைதியாக ஈஸ்வரி தன் மகளோடு நடந்து சென்றார்.
நாம் அரவிந்தின் வீட்டின் மனநிலையைத் தெரிந்து கொள்ள, நாம் அவர்களோடு பயணிப்போம்.
தனம் தன் கணவர் நாராயணனிடம், “நீங்க நடந்துகிறது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலை.. நாம மாப்பிள்ளை வீடா..? அவங்க மாப்பிள்ளை வீடா…?”, என்று வேகமாகப் பயணித்து கொண்டிருந்த காரில் சாய்ந்தமர்ந்து கோபமாக கேட்க, நாராயணன் அமைதியாக அமர்ந்திருந்தார்.
“மாப்பிள்ளை வீடுன்னா.. இரண்டு கொம்பா முளைச்சிற்கு..?”, என்று அர்ச்சனா ஆதங்கத்தோடும், ஆச்சரியத்தோடும் கேட்டாள். “ம்.. அது உனக்குன்னு ஒரு மாப்பிள்ளை வீடு வரும்.. அப்பத் தெரியும்…”, என்று சலிப்பாக கூறினார் தனம்.
“எல்லாரும் அப்படி இருந்தால், நாமும் அப்படி இருக்கணுமா…?”, என்று அர்ச்சனா தன்மையாக வினவ, “அப்படி இல்லைனா, மாப்பிள்ளைக்கு என்ன குறையோன்னு கேட்கிற சமுதாயம் இது…”, என்று அழுத்தமாகக் கூறினார் தனம்..
“அப்படி எல்லாம் இல்லை தனம்.. காலம் மாறிடுச்சு.. பெண்ணைப் பார்த்தேயில்லை.., தன்மையா தெரியுது.. அவங்க அம்மாவும் தான்.. தாயைப் போல பிள்ளை.. நூலைப் போல் சேலை… அந்தப் பெண் அவங்க அம்மா மாதிரி தெரியுது.. பெண்ணோடு அப்பாவும்.. ஊர்க்காரர்… மனதில் பட்டத்தை பேசுறார்… அவ்வளவு தான்… “, என்று நாராயணன் பொறுமையாக கூற, அர்ச்சனா, “அம்மா.. எனக்கும் அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு…”,என்று தன் தாயின் கன்னத்தை கொஞ்சியபடி கூறினாள்.
இத்தனை பேச்சிலும் கலந்து கொள்ளாமல் அதே காரில் பயந்தித்தபடி அரவிந்த் சத்தமில்லாமல் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்ப்போம்.
அட.. மீனாவிடம் whatsapp இல் message செய்து கொண்டிருக்கிறான்..!!! இந்த வேலையின் பெருமை அர்ச்சனாவையே சேரும் என்று அர்ச்சனா தன் அண்ணனை நோட்டமிடும் விதத்திலேயே நமக்குத் தெரிகிறது..
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா
இவன்தானா இவன்தானா
மலர் சூடும் மணவாளன் இவன்தானா
என்ற பாடல் வரிக்கு ஏற்றார் போல் அரவிந்த் மீனாவின் நாட்கள் இனிதே தொடங்கியது.
இரவு 9 : ௦௦ மணி:
நரேன் அரவிந்திற்கு call செய்ய, call waiting என்று வந்தது. விஜய்க்கு வேலை சம்மந்தமாக நரேன் அழைக்க அப்பொழுதும் call waiting என்று வர.., “அட.. நம்மளை தவிர எல்லாரும் busy போல…”, என்று தனக்கு தானே முணுமுணுத்துக் கொண்டு கண்ணுறங்கினான் நரேன்.
committed vs singles இவர்களின் இரவுக்குப் பல வேறுபாடுகள் இருப்பது நமக்கு தெரியாதா?
மறுநாள் காலை,
அரவிந்த் தன் ஸிஸ்டெமில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க, அப்பொழுது உள்ளே நுழைந்த நரேன் அரவிந்தின் நாற்காலியை தன் பக்கம் திருப்பி, அரவிந்தை மேலும் கீழும் பார்த்தான்.
“என்ன டா பார்க்கிற…?”, என்று அரவிந்த் தன் வேலையை விடுத்து நரேனை பார்த்துக் கேட்க, “நேத்து ஏன் வரலை..?”, என்று நரேன் அரவிந்தின் சிஸ்டம் அருகே மேலே ஏறி அமர்ந்து கேலியாக கேட்டான்.
அரவிந்த் மெலிதாக புன்னகைக்க, “உன் call waiting எல்லாம் போகுது.. என்ன மச்சான்.. ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கே..”, என்று ஆராயும் பார்வையில் நரேன் அரவிந்தின் முகம் பார்த்து கூறினான்.
“முதலில் login பண்ணு… அப்புறம் பேசலாம்… “, என்று அரவிந்த் புன்னகையோடு தன் சிஸ்டம் பார்த்து கூற, ” அது தான் தினமும் login பண்றோமே.. நீ முதலில் விஷயத்தைச் சொல்லு.. நீ வெட்கப்படுற மாதிரி எனக்கு தெரியுது..”, என்று நரேன் அரவிந்தை தன் பக்கம் திருப்பி கேள்வியாக நிறுத்தினான்.
“டேய்…”, என்று அரவிந்த் கடுப்பாக கூற முயற்சித்துத் தோற்று போக, “பார்த்தியா.., நான் தான் செல்றேனே நீ வெடக்கப்படுறன்னு..”, என்று நரேன் அரவிந்தின் நாற்காலி அருகே நின்று சிரித்தமுகமாக கூறினான்.
அரவிந்த் தன் மொபைலை எடுத்து மீனாவின் புகைப்படத்தை காட்டி, “கல்யாணம் fix ஆகிருச்சு.. இவங்க தான் போதுமா..?”, என்று அரவிந்த் சிரித்தமுகமாக கூற நரேன் தன் கண்களைச் சுருக்கி புகைப்படத்தைத் தீவிரமாக பார்த்தான்.
நரேன் அமைதியாக இருக்க, “நம்ம விஜய்க்கு cousin sister “, என்று அரவிந்த் கூற நரேன் தீவிரமாக சிந்தித்தான்.
” நான் இவங்களை அன்று பார்க்கும் பொழுதே யோசித்தேன்.., ஏதோ பார்த்த முகம் போல இருக்குதேன்னு….”,என்று நரேன் யோசனையாகக் கூற, அரவிந்த் அமைதியாக அமர்ந்திருந்தான்.
“எனக்கு இவங்களை நல்லா தெரியும்..”, என்று நரேன் தன் தலை அசைத்துக் கூற, “யாரை..?”, என்று மீரா நரேன் கையில் வைத்திருந்த மொபைலை எட்டிப் பார்த்தாள்.
“சும்மா.. நல்லா தெரியுமுன்னு கதை விட வேண்டியது.. ஒரு நாள் பார்த்ததுக்கு இந்த built – up .. சரி இவங்க போட்டோவை ஏன் பார்த்துட்டு இருக்கீங்க..?”, என்று மீரா கேள்வியாக நிறுத்த, “அரவிந்தோட would be .. “, என்று மீராவை பார்த்து நரேன் கூறினான்.
“Really .. So beautiful ..”, என்று மீரா சிரித்தமுகமாக கூற, லாவண்யாவும் இவர்கள் அருகே வந்த அந்தப் புகைப்படத்தை பார்த்தாள்.
“இப்ப beautiful ன்னு சொல்ல வேண்டியது… அன்னைக்கு இவங்க அழகா இருக்காங்கன்னு இடித்து கீழே தள்ள வேண்டியது..”,என்று நரேன் மீராவை பார்த்து நக்கலாகக் கூறினான்.
“ஆமாம்.. நான் இடித்து கீழே தள்ளி அவங்க மண்டையை உடைத்தேன்.. “, என்று மீரா கடுப்பாக நரேனின் முகம் பார்த்து கூற, “அடப்பாவுமே.. நான் பார்த்த அன்னைக்கி கையை தானே உடைத்தீங்க.. மண்டையை உடைத்தது எப்ப…? அது இன்னொரு நாளா..?”, என்று நரேன் தீவிரமாக கேட்க , மீரா அவர்கள் அருகே இருந்த notepad யை எடுத்து நரேனை அடித்தாள்.
“No violence …”, என்று நரேன் மீராவின் கையில் இருந்த notepad யை வாங்க முயற்சித்தான்.
அரவிந்த் சிரித்த முகமாக இவர்களைப் பார்க்க, திடீரென்று ஞனோதயம் பெற்றவளாக மீரா அரவிந்தின் பக்கம் திரும்பினாள். “இதெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமோ…?”, என்று மீரா அரவிந்தை சந்தேகமாக பார்த்தபடி கேட்டாள்.
அரவிந்த் புன்னகையோடு தன் தலையை மேலும், கீழும் அசைக்க, நரேன் அரவிந்தை அதிர்ச்சியாகப் பார்த்தான்.
“டேய்.. நேத்து தானடா பேச ஆரம்பிச்ச.. ?”,என்று நரேன் அதிர்ச்சியில் இருந்து வெளியே வராதவனாகக் கேட்க, அரவிந்த் புன்னகைத்தான்.
“இதுக்கு தான் அமைதியா இருக்கிறவங்களை நம்பவே கூடாது…”,என்று லாவண்யா அவள் பங்கிற்கு தன் நாற்காலியில் சாய்ந்தமர்ந்து கூற, “photo share பண்ணேன்.. அப்படியே பேச்சு வந்தது.. அப்படியே சொன்னங்க…”, என்று அரவிந்த் மெதுவாகக் கூற, அங்கு “ஓ….ஓ… ஓஹோ… ஹோ.. ஓ .. ஓ…” , என்று சத்தம் எழும்ப அரவிந்த் வெட்கப் புன்னகையோடு தன் சிஸ்டம் பக்கம் திரும்ப முயற்சித்தான்.
“அரவிந்த் எங்க escape ஆக பார்க்கறீங்க..? நாளைக்கு Lunch Treat .. அதுவும் உங்க better half வரணும்… “, என்று மீரா தன் இடுப்பில் கை வைத்து தீவிரமாக கூற, “கரெக்ட்.. மீரா சொல்றது தான் சரி.. “,என்று நரேன் மீராவை விடத் தீவிரமாக கூற அரவிந்த் அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தான்.
“அது எப்படி டா… ஒருத்தன் கிட்ட treat கேட்கும் பொழுது மட்டும் ஒற்றுமை ஆகிடறீங்க…?”, என்று அரவிந்த் தீவிரமாக கேட்க, “அது அப்படி தான்..”, என்று கூறி மீராவும் நரேனும் High Five செய்தனர்.
“சரி நான் கேட்டு சொல்றேன்…”, என்று அரவிந்த் தன் நாற்காலியில் சாய்ந்து நிதானமாக கூற, “வாய்ப்பேயில்லை.. கூட்டிட்டு வரீங்க..”, என்று மீராவும், லாவண்யாவும் கண்டிப்பாக கூற, அரவிந்த் சம்மதமாக தலை அசைத்தான்.
மொபைல் எடுத்துக் கொண்டு, அரவிந்த் வெளியே செல்ல, அவர்கள் மூவரும் அரவிந்தை பார்த்து சிரித்தனர்.
சிறிது நேரத்தில், உள்ளே நுழைந்த அரவிந்த், “அடுத்த வாரத்தில் ஒரு நாள் Lunch க்கு வெளியே போவோம்…”, என்று மெதுவாகக் கூற, நரேன், மீரா, லாவண்யா, மூவரும் சம்மதமாக தலை அசைத்தனர்.
அப்பொழுது யாழினி உள்ளே நுழைய, அனைவரும் தங்கள் ஸிஸ்டெதை பார்த்தபடி தங்கள் வேலையைத் தொடங்கினர்.
அவர்கள் அனைவரையும் பார்த்த யாழினி, “குமார் இன்னும் வரலையா…?”,என்று தன் கண்களைச் சுருக்கி வினவ, நரேன் யாழினியை பார்த்து, “இன்னும் வரவில்லை..”,என்று மெதுவாகக் கூறினான்.
“என்ன பண்றீங்க நீங்க..? வரலைனா என்ன ஏதுன்னு கேட்க மாட்டிங்களா.. நம்ம வேலையை மட்டும் பார்த்தா போதாது.. Team Members கிட்டயும் வேலையை வாங்கணும்.. அதுவும் முக்கியம்.. “, என்று யாழினி தீவிரமாக கூற, நரேன் அமைதியாகத் தலை அசைத்தான்.
“யாழனியிடம் பேச வேண்டும்… Marriage Leave கேட்கணும்.. எப்படியும் யாழினிக்கு தெரியும்…,என்று மீனாவின் பேச்சில் தெரிகிறது…”, என்ற யோசனையோடு தன் வேலையில் மூழ்கினான் அரவிந்த்.
யாழினி என்ன சிந்திக்கிறாள் என்று நமக்குத் தெரியவில்லை.. அனைவரும் மும்முரமாக வேலையில் மூழ்கிவிட, நாம் சுப்பிரமணியத்தின் மனநிலையை அறிய திருநெல்வேலி நோக்கிப் பயணிப்போம்.
சுந்தரேஸ்வரர் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருக்க, சுப்பிரமணி அவர் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
ஈஸ்வரி, சிவகாமி அவர்கள் அருகே கீழே அமர்ந்திருந்தார்.
சுப்பிரமணி பேசட்டும், என்று சுந்தரேஸ்வர அமைதியாக அமர்ந்திருக்க, “மாப்பிளை.., பார்க்க ஜோரா ராஜா கணக்கா இருக்காரு.. நல்ல மனுசனா தான் தெரியுது.. அது தான் பேசி முடிச்சிட்டோம்..”,என்று சுப்பிரமணி மெதுவாகக் கூற, ஈஸ்வரி சந்தோஷமாக தன் கணவன் பேசுவதை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார்.
“நான் மீனா கிட்ட பேசிட்டேன்.. மீனா சந்தோஷமா இருக்கா.. ரொம்ப நல்ல செய்தி…”,என்று சுந்தரேஸ்வரர் சந்தோஷமாக பெருங்குரலில் கூற, சிவகாமி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஆனால்.., மாப்பிள்ளை அம்மா ரொம்ப தோரணையா பேசுறாங்க.. கல்யாணத்துக்கு முன்னாடி reception வைக்கனுமுனு சொன்னாங்க… நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்..”, என்று சுப்பிரமணி சுந்தரேஸ்வரரை பார்த்தபடி தயக்கமாக கூற, “தம்பி.. நீ சொன்னது தான் சரி.. பெண் கழுத்தில் தாலி ஏறிய பிறகு தான் மாப்பிளை உறுதி… கடைசி நிமிடத்தில் கூட, எத்தனைக் கல்யாணத்தில் பெண் மாப்பிளை மாறி இருக்கு… “,என்று சிவகாமி சத்தமாகக் கூறினார்.
ஈஸ்வரி மற்றும் சுந்தரேஸ்வரர், ” சிவகாமியின் பேச்சில் ஏதேனும் உள்ளர்த்தம் உள்ளதா..,”., என்ற எண்ணத்தோடு சிவகாமியை கூர்ந்து பார்த்தனர்
மீனா அரவிந்த் கல்யாண கனவில் மூழ்க, விஜய், யாழினி தங்கள் காதல் கைக்கூடும் என்ற நம்பிக்கையோடு தங்கள் நாட்களை நகர்த்த.., இறைவனின் சித்தம் என்னவோ…?
பயணம் தொடரும்….