OVOV 15

நடையா இது நடையா

ஒரு நாடகம் அன்றோ நடக்குது

என்று என்றோ பாடிய பாடலுக்கு அங்கு வித விதமாய், ரக ரகமாய், அடல்ட்ஸ் ஒன்லி அர்த்தம் கற்பித்து கொண்டு வந்தாள் அவள் .

“தீப்! டேய் தீப் .”என்று கியான்தீபை சுரண்டினார் அமர்நாத் .

“என்ன மாமா ?”என்றான் அவன் வந்தவளை கண்ட கடுப்பில்.

டேய் என் கண்ணுக்கு   திடீர் என்று ஏதோ ஆகி போச்சுடா. ஐயோ கண்ணு தெரில டா தீப் .”என்றார்  காதருகே .

“என்ன மாமா உளறிட்டு இருக்கீங்க ?”என்றான் தீப் அவர் புறம் திரும்பாமலே பூனை நடை நடந்து அவர்களை நெருங்கி கொண்டு இருந்த அவளை ஏகத்துக்கும் முறைத்தவாறே.

“ஐயோ கண்ணு தெரில டா தீப்”

“அது ஒண்ணும் இல்லை மாமா புதுசா வந்து இருக்கும் கண் நோய் அது .MMSD  லைக்கோஜெ பியா  என்று பெயர்.” என்றான் தீப் முகத்தை அப்பாவியா வைத்து கொண்டு.

“டேய் !என்னடா சொல்றே ?என்ன கண் நோய் டா அது.அது சிம்டம்ஸ் என்னடா ?”என்றார் அமர்நாத் பயத்துடன் .

“முதல் சிம்ப்டம் இதயம் தாறு மாறாய் துடிக்கும் .”

“ஆமா டா எனக்கும் துடிக்குது ”

“வியர்த்து கொட்டும் ”

“ஆமா டா வியர்த்து கொட்டுது ”

“அடுத்து மத்தவங்க குறிப்பாய் ஒரு பெண் போட்டு இருக்கும் டிரஸ் மட்டும் கண்ணுக்கே தெரியாது .”என்றான் தீப் சிரியாமல்.

அவன் சொல்ல வருவது புரியாமல் பேய் விழி விழித்த அமர்நாத், அவன் தன்னை ஓட்டுகிறான் என்பது புரிந்து விட அவனை முறைத்து,”இந்த MMSD லைக்கோஜெ பியா  “விரிவாக்கம் என்னவோ ?”என்றார் அவன் ஏதோ வில்லங்கமாய் சொல்ல போவதை கண்டு .

“அது மல்லிகா ஷெராவத்,முமைத் கான் ,சில்க் ஸ்மிதா,டிஸ்கோ ஷாந்தி ஜெ பியா .”என்றான் தீப் .

“ஜெ பியா என்றால் ?”என்றார் அமர்நாத் அவனை கண்களால் வருத்தவாறு .

ஜொள் பாக்டரி பிளீஸ் கிளோஸ்யா  மாமா ” என்றான் தீப் சிரியாமல் .

“உண்மைய தான் டா சொல்றேன். என் கண்ணுக்கு ஏதோ ஆகி போச்சு டா. அந்த பொண்ணு உடம்பில் இருக்கும் டிரஸ் கண்ணுக்கு தெரியலைடா”என்றார் அதிர்ந்தவராய் .

“அவ போட்டு இருந்தா தானே மாமா உங்களுக்கு தெரியும் அவளே கைக்குட்டையை  டிரஸ் என்ற பெயரில் போட்டுட்டு அண்ணாவை டார்கட் செய்ய வந்து இருக்கா .இதுல நீங்க வேற .”என்றான் தீப்

“என்னடா சொல்றே. கீழே இருக்கும் பெரியவர்களை தாண்டி எப்படி டா இப்படியே வந்தா ?”என்றார் அமர்நாத் வாயை பிளந்தவராய்

“உங்களுக்கு மாஜிக் காட்டவா மாமா ?”என்றவன் தன் மொபைல் போன் உயிர்ப்பித்து அதில் அந்த வீட்டில் பொறுத்த பட்டு இருக்கும் CCTV கேமராராவில் பதிவு ஆனா விடீயோவை ரிபிலே செய்தான் .

அதில் உள்ளே வரும் போது தலை முதல் கால் வரை போர்த்தி இருந்த இவள் ,மூன்றாவது மாடி ஏறும் போது ஏதோ பீச் உடை மாடல் ரேஞ்சுக்கு இருந்தாள் .

“என்னடா இது ?”என்றார் அமர்நாத் .

“வீர்ஜிக்கு இந்த மேடம் வலை விரிக்கறாங்க மாமா .ரொம்ப வருசமாய் இது ஓடுது .வீட்டிக்கருள் வரும் வரை அந்த கெட் அப் ,அண்ணாவை பார்க்க வரும் போது இந்த கெட் அப் .வீர்ஜி பத்தி தெரியாம விளையாடி பார்த்துட்டு இருக்கா இவள் போடும் வலைக்குள் எல்லாம் சிக்க அண்ணா என்ன பைத்தியமா .அவங்க சுறா என்பது தெரியாமல் விளையாடி பார்த்துட்டு இருக்கா .அந்த நல்ல மனிதன் ரணீத் ஜோகிக்கு போய் இப்படி ஒருத்தி பெண் .”என்று அலுத்து கொண்டான் .

“ஏண்டா இவளை அந்த அமனுக்கு தானே கட்டி வைக்க போவதாக கேள்வி பட்டேன் .இந்த குட்டியையும் அமன் கூட பார்த்து இருக்கேன் .இங்கே என்ன செய்யுது இது ?’என்றார் அமர்நாத் .

“யாரு அமன் வீர்ஜியா.அவர் ரொம்ப விவரமான ஆளு. பொண்ணுங்க கூட ஜோவியல்லா பழகுவார்.பார்ட்டி ,பப் என்று சுத்துவார் .ஆனா எல்லாத்திலேயும் ஒரு லிமிட் இருக்கும் .இவ கூடவும் அப்படி தான் சுத்திட்டு இருந்தார் .மேடம் அன்லிமிடெட் மீல்ஸ் ஆச்சே .ஓங்கி ஒண்ணு விட்டு இருப்பார் .அதான் இப்போ அர்ஜுன்ஜி பக்கம் காத்து வீசுது .இங்கே வீசிட்டு உடனே அங்கே அமன் வீட்டுக்கும் போகும். arjunஜி சுத்தம் கம்ப்ளீட் டீடோட்லர் என்று தெரியாதா ? “என்றான் கியான் .

“என்னடா சொல்லவரே ?’என்றார் அமர்நாத் .

“DIVERSIFYING SOURCES என்ற பதம் கேள்வி பட்டு இருக்கீங்களா மாமா ? எல்லா பக்கமும் வலை போடுவது.யார் மாற்றங்களோ அவங்களை கவுக்கறது என்று இந்த  மேடம்  டாலி(dolly) வேலை பார்க்கிறாங்க. மாட்ட போகும் இளிச்சவாயன் அர்ஜுனா, அமன்னா என்று தான் தெரியலை. பாருங்க வேடிக்கையை .”என்றான் தீப் .

“இவ வலையில் சுறாவும் ,திமிங்கலமும் சிக்கிடும் என்று நினைக்கறே ? இவனுங்க இங்கே லாக் ஆவனுங்க என்று தெரியாம நான் வேற இவனுங்களுக்கு ரெண்டு பொண்ணை தமிழ்நாட்டில் பார்த்துட்டேனே. அந்த பொண்ணுங்க வேற ஜாக்கி சான், ப்ருஸ் லீ க்கு தங்கச்சிங்க என்று கேள்வி .”என்றார் அமர்நாத் .

(உமக்கு சங்கு கன்பார்ம் )

அசப்பில் பார்க்க பிருந்தா ப்ரெக்ஹ் என்ற இந்தி நடிகையின் சாயல் டாலியிடம். ஐந்து அடி ஏழு அங்குலம் .34-24-34. 56 கிலோ .grey நிற கண்கள் .மொத்தத்தில் முமைத் கான் ,சில்க் ஸ்மிதா ,டிஸ்கோ சாந்திகளின் கலவை அந்த ஹாட் பாம் .

ஒரு கஞ்சா தோட்டத்தையே  உடலாக கொண்ட ஹாட் காஷ்மீர் ஆப்பிள் அது. மலைகளின் வளைவு ,நெளிவுகள் ,மேடு பள்ளங்களை விட இவள் அழகு மிக ஆபத்தானது .படையப்பா படத்தில் ரஜினி சொல்லும் பெண்கள் வகையில் இது ப்ரசோதகம் + பயனாகம்  செய்த கலவை டாலி .

அந்த பாம் சேதாரபடுத்த ,சேதாரம் ஆக பிக்ஸ் செய்து இருக்கும் டார்கெட் அர்ஜுன்,அமன் என்ற  இரு ஆண் சிங்கங்களின் அந்தப்புரம். தீப் சொன்னது போல் இருவரில் யார் கிடைத்தாலும், இல்லை இருவருமே கிடைத்தாலும்  அவளுக்கு ஒகே தான். அர்ஜுன், அமன் இருவரும் கோடீஸ்வரர்கள், அதை விட ஆண் அழகன்கள்.ஷுட்டில் கார்க் பந்து போல், இங்கும் அங்கும் விளையாடி பார்ப்பது தான் இவள் வேலை .

அதற்குள் அவர்களை நெருங்கி இருந்தாள் அந்த டாலி

“ஹாய் அர்ஜுன் பேபி எப்படி இருக்கே. உன்னை பார்க்கணும் என்று தோணுச்சு .அப்பா கிட்டே சொன்னேன். உடனே கூட்டி வந்துட்டார் .”என்று அர்ஜுன் அருகே அவள் செல்ல அவனோ பத்தடி விலகி நின்றான் .

“அங்கிள் வந்து இருக்காரா dolly ?”என்றான் அர்ஜுன்

“ஹ்ம்ம் அவர் மட்டும் தான் விசாரிப்பியா அர்ஜுன். உன்னை பார்க்க தானே வேர்ல்ட் டூர் கான்செல் செய்துட்டு வந்தேன் உன்னை பார்த்தே பல மாசம் ஆச்சு. எவ்வளவூ இளைச்சி போய் இருக்கே, சரியா சாப்பிடுறது இல்லையா நீ. பாரு உன் ஆர்ம்ஸ் எல்லாம் எப்படி இருக்கும்.”என்றவள் அர்ஜுன் கையை பிடித்து கொண்டு அதை போமெரியன் நாய் குட்டி போல் தடவோ தடவு என்று தடவி கொடுக்க,அர்ஜுன் சிக்கி திக்கி தவிப்பதை பார்த்த தீப்பிற்கும்,அமர்நாத்துக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை .

“dolly !அப்பாவை பார்க்க போகலாம்.”என்று அவளிடம் இருந்து அர்ஜுன் விலக,சிணுங்கல் என்ற பெயரில் ஒரு கூத்தை அரங்கேற்ற அமர்நாத்துக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும் போல் இருந்தது.

“போ அர்ஜுன்.அப்பா எங்கே போகபோறார்.உன் கிட்டே பேசணும் என்று ஆசையா வந்து இருக்கேன்.வெயிட் கூடி இருக்கேனா,குறைந்து இருக்கேனா என்று தூக்கி பார்த்து சொல்லேன்.”என்று கை ரெண்டையும் டைட்டானிக் போஸுக்கு விரித்து,தலையை சாய்த்து ,உடலை நெளித்து அவள் அழைத்த விதம் சத்தியமாய் வெயிட் பார்க்க மட்டும் இல்லை .

அது மீளவே முடியாத புதை குழி. உலகத்தில் உள்ள அனைத்து ஆபத்தான விஷயங்களின் கலவை அவள்.அவள் உடல் மட்டும் அல்ல,அவள் எண்ணம் ,செயல் எல்லாம் அவளை மட்டுமே பிரதான படுத்தி இருக்கும் நச்சு பாம்பு அது.அதுவும் அழகான போதை ஏற்றி ஆளை கொள்ளும் பாம்பு .நினைத்தது நடக்க எந்த எல்லைக்கும் செல்ல துணியும் ராட்சசி அவள் என்ற உண்மை இதுவரை யாருக்கும் தெரியாது .

தன் தேவை தீர்ந்த உடன் யாரையும்,எவரையும் குப்பையாக தூக்கி போட அவள் தயங்கியதே இல்லை.காதல் என்ற முகமூடி அணிந்து உடைத்த ஆண்களின் இதயம் ஏராளம்.அது ஒரு பொழுது போக்கு அவளுக்கு என்று கூட சொல்லலாம் .

அவள் பார்க்கும்,பார்த்து விரும்பும் எதுவும் அவள் கை சேர வேண்டும்.கை சேரும் வரை ஓயமாட்டாள்.அவள் மட்டுமே பிரதானம் .

நெருங்கும் லிமிட் எல்லாம் அவள் தாண்டி அருகே வர ,அதே சமயம் ஆபத்பாந்தவனாய் அர்ஜுன் போன் அலற,அழைப்பது அங்கேயே இருந்த தீப் தான் என்பது புரிந்தாலும் ,”ஹலோ ஹீலோ லைன் சரியாய் கேட்கலை .இதோ வரேன் அம்மா.”என்று பேசியவாறே அவளை விட்டு கீழே இறங்கி விட்டான் .

“அர்ஜுன் “என்று அவள் குழைந்து நெளிந்து ,ஒரு மாதிரியான குரலில் கூப்பிட ,கேட்க அங்கு அவன் இல்லை.காரை எடுத்து கொண்டு வீட்டை விட்டே சென்று விட்டான் அர்ஜுன் .

மாடியில் இருந்து அர்ஜுனை துரத்தி கொண்டு வந்தவளை பின் தொடர்ந்து வந்த தீப் ,அமர்நாத் கீழே வந்து அவளை பார்க்க மீண்டும் அடக்க ஒடுக்கத்திற்கு மறு பெயராய் ,புடவையில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தவளை கண்டு அமர்நாத் மீண்டும் நெஞ்சை பிடித்து கொண்டார் .

“என்னடா இது ?’என்றார் அமர்நாத் .

“சொன்னேன் இல்லை .”என்றான் தீப்

அதே சமயம் அமர்நாத்தை நிமிர்ந்து பார்த்த அந்த dolly நாக்கால் தன் உதட்டை ஈரப்படுத்தி காட்டியவாறு அவரை நோக்கி ஒரு கண் அடிக்க அவருக்கு வேர்த்து கொட்ட ஆரம்பித்தது .விட்டால் போதும் என்று அந்த மனுஷன் அங்கிருந்து உசைன் போல்ட் ரேஞ்சுக்கு ஓடி போனார் .

ரணீத் சட்டென்று பார்ப்பதற்கு குல்ஷன் குரோவர் மாதிரி இருந்தார்.45-50 வயதிற்குள் இருக்கலாம்.குர்தா பைஜாமாவில் ,தங்க பிரேம் கண்ணாடி அவரின் மதிப்பை மேலும் உயர்த்தி காட்டியது.தாடி ,கண்ணாடி ,குர்தா பைஜாமா என்று தொண்டு பழமாய் இருந்தார்.

“என்ன செய்யறது ஜி …உங்க வழிகாட்டுதல் படி ஸ்கூல் ,காலேஜ் ,அனாதை இல்லம் எல்லாம் நடத்திட்டு வரேன் .டைம் போதவில்லை .”என்றார் ரணீத் ஜெஸ்ஸிகா தன்வி-அமன் அம்மாவின் தூரத்து உறவு .

“ஒரே ஊரில் தான் இருக்கோம் என்று பெயர்.எங்களை எல்லாம் மறந்துட்டே இல்லை.அடிக்கடி வந்துட்டு போ ரணீத்.”என்றார் ராஷ்மி .

“என்ன பெஹன் …உங்களை எல்லாம் பார்க்கமா என்னால் மட்டும் இருக்க முடியுமா என்ன .இதோ என் வாழ்க்கையே நீங்கள் கொடுத்தது தானே.இலவச ஸ்கூல் ,காலேஜ் ,தொண்டு நிறுவனம் நடத்த வழி என்ன என்று புரியாமல் தவித்து நின்ற போது ஜிஜாஜி மட்டும் இல்லை என்றால் இன்று இத்தனை பசங்க வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்து இருக்க முடியுமா என்ன ?ஊருக்கு நல்லது என்றதும் நான் ஜெஸ்ஸிகாவின் தூரத்து உறவு என்பதை கூட மறந்து உதவிய உங்களை எல்லாம் எப்படி மறப்பேன்.இன்னொரு முறை எப்படி சொல்லாதீங்க.”என்றார் ரணீத் .

“ஆமா ஆன்ட்டி.உங்கள் அனைவரின் வழிகாட்டுதல் தான் மெக்ஸிகோவில் நடந்த கலவரத்தில் தப்பி வந்த எங்களுக்கு பற்றுக்கோல் போல் இருந்தது.பணம் கொட்டி கிடந்து என்ன பயன் ஆன்ட்டி .அதை எங்கே ,எப்படி யாருக்கு உதவ கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொன்ன வழியில் தான் செய்து கொண்டு இருக்கிறார் அப்பா.அம்மா இறந்த துக்கத்திற்கு நீங்க எல்லாம் இல்லை என்றால் எங்களின் கதி.நினைத்து பார்க்கவே முடியலை .உங்களையும் அங்கிள்லையும் தான் “ஹெல்பிங் ஹாண்ட்ஸ் /helping hands “குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்க சொல்கிறோம் நீங்க தான் ஒத்துக்க மாட்டேன் என்கறீங்க . உங்களை எப்படி மறப்போம் ஆன்ட்டி.”என்று பேச்சில் தேன் ,ஜாம் எல்லாம் வழிய பேசியது சாட்சாத் டாலியே தான் .

DOLLY நடிப்பது உண்மை என்றாலும் அவள் சொல்லிய தகவல்கள் அனைத்தும் உண்மை .மெக்ஸிகோ கலவரத்தில் தான் ஜெஸ்ஸிகா ,ரணீத் குடும்பம் சிக்கியது .இவர்கள் குடும்பம் அங்கு மெக்ஸிகோ அரசியலில் மிக பெரும் பெயர் பெற்றது. படிப்பிற்காக ஜெஸ்ஸிகா இந்தியாவில் இருக்க,மெக்ஸிகோவில் இவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் கருவறுக்க பட்டது அரசியல் ,போதை மருந்து கார்டெல் குழுக்களால். போதை மருந்து கார்டெல் விசாரித்து கொண்டு இருந்தது ஜெஸ்ஸிகாவின் அப்பா மேஜர் அர்ஜான்.

தி அட்லாண்டிக் என்ற பத்திரிகையின் அறிக்கை படி இது போன்ற ட்ரக் கார்டெல் கையால் இறந்த மக்களின் எண்ணிக்கை மட்டும் 50,000 என்ற அதிர்ச்சி தகவல் உண்டு.குறைந்த பட்சம் 49-60,100 என்ற எண்ணிக்கையில்  தான் பிணங்கள் கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்

 

ஒருவனை சந்தேகித்து விட்டால் இந்த குழுக்கள் ஒருவனின் முகநூல் ,ட்விட்டர் என்று எல்லா சோசியல் மீடியாவை ஹாக் செய்து நண்பர்கள் ,உறவினர் லிஸ்டில் உள்ள அனைவரையும் ஒட்டுமொத்தமாய் பார்சல் செய்து விடுவார்கள் .இவர்களை பற்றிய தகவல்கள் யாருக்கு எல்லாம் பகிர்ந்து இருக்கும் என்று சொல்ல முடியாது இல்லையா .அதனால் 49,60,100 என்று ஒரு ஆளிற்கு நெருங்கிய அனைவரும் பரலோகம் அனுப்பி வைக்க படுவார்கள்.ஒட்டுமொத்த கிராமத்தை எல்லாம் போட்டு தள்ளி இருப்பதும் நடந்து உள்ளது .

இதை எல்லாம் தடுக்க  மெக்ஸிகோ ப்ரெசிடெண்ட் ‘பெலிப்பினோ டேவிட் ‘உத்தரவின் பேரில் அமைக்க பட்ட கமாண்டோ படையின் தலைவர் தான் ஜெஸ்ஸிகா தன்வியின் தந்தை மேஜர் அர்ஜான் பிராங்கிளின் டிசோசா .

பதவி கிடைத்த உடனே அர்ஜான் கஞ்சா செடிகளை அழிப்பதும் ,மெத்தேன் லேப் வெடிக்க செய்வதும் ,வங்கிகள் ,தொண்டு நிறுவனம் என்ற பெயரில் வெள்ளையாக்க படும் இந்த குழுக்களின் பணத்தினை முடக்குதல் ,ஆயுதங்களை அழித்தல் ,என்கவுண்டர் செய்தல் என்று சூறாவளியாய் சுழன்றதில் பலத்த சேதாரம் இந்த கிரிமினல் குழுக்களுக்கு .

அமைதியாய் இருப்பார்களா ஷைத்தான்கள் ?retaliation /பதிலடி கொடுத்ததில் அர்ஜான் இறந்து போனார் .

மெக்ஸிகோ ட்ரக் கார்டெல் என்பது பிச்சுவா பக்கிரி,ப்ளடு கோயிந்தன் ,சோடாபாட்டில் ரவி எல்லாம் வைத்து ஸீன் போடுவது இல்லை. சின்ன ராணுவத்தையே வைத்து கொண்டு போதை மருந்து ஆட்சி செய்யும் குழுக்கள்.இவர்கள் பயன்படுத்தும் சிறிய வகை ஆயுதமே கை அடக்க ராக்கெட் லாஞ்சரில் தான் ஆரம்பிக்கும்.

 

இதில் Halcones எனப்படுவது தெருவில் இவர்களுக்கு போலீஸ் நடமாட்டத்தை சொல்லும் உளவாளிகள் .பத்துக்கும் ,இருபதிற்கும் ஆளை போலீஸ் வருவதை காட்டி கொடுக்கும் அடிமட்ட படை.

Sicarios என்பது படுகொலை செய்ய தயங்காத குழு .பணம் கேட்டு ஆட்கடத்தல் செய்வது ,திருட்டு ,பாதுகாப்பு கொடுக்கிறோம் என்ற பெயரில் தண்டல் வசூலிப்பது எல்லாம் இவர்கள் வேலை .தெருவையே யுத்தபூமியாய் மாற்றி ,வெடுகுண்டுகள் வெடிக்க வைப்பதில் கில்லாடிகள் .பதினான்கு -பதினாறு மணி நேரம் தொடர்ந்து GUN FIGHT நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் உண்டு .

 

Tenienteஎன்பது தலைவனுக்கு அடுத்த கட்ட லீடர் பொறுப்பு.

காபோஸ் CapoS எனப்படுபவன் தான் ஒட்டுமொத்த போதை மருந்து தொழிலுக்கும் தலைவன் .

Sicarios என்பது படுகொலை செய்ய தயங்காத குழு வால் அர்ஜான் ஒட்டுமொத்த குடும்பமும் ,ரணீத் ஒட்டுமொத்த குடும்பமும் தீர்த்து கட்டபட்டது .அவர்கள் கையில் இருந்து தப்பியது ஜெசிகா தன்வியும் ,ரணீத் ,டாலி மட்டுமே .

தப்பி வந்தவர்கள் விஷயத்தை கூற, குருதேவ் ஜெஸ்ஸிகாவை காப்பாற்ற ,அவளை நாடுகடத்த முயன்றதை முறி அடிக்க அவசர அவசரமாய் மணந்து கொண்டார் .ஏற்கனவே வெளியே சொல்லாமல் அவள் மேல் காதலாய் இருந்த ஜெஸ்ஸிகா உடனே சம்மதித்து விட்டார் பின்னர் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை அர்ஜுனையும் அமன்ஜீத்தையும் எதிரிகளாக்கி இருக்க ,இரு குடும்ப பகையில் ஒருவன் குளிர் காய்ந்து கொண்டு இருந்தான்.

பத்து வருடத்திற்கு முன் தான் ரணீத் பஞ்சாபில்,இலவச பள்ளி ,காலேஜ்,அனாதை இல்லம் கட்ட அங்கு உள்ள அரசியல் வாதிகளிடம் பெர்மிஸ்ஸின் கேட்க,வெளிநாட்டுக்காரன் இங்கு எல்லாம் செய்ய கூடாது என்று போர் கொடி தூக்க பட்டது.ரணீத் மெக்ஸிகோ குடி உரிமை வேண்டாம் என்று சொல்லி இனி இந்தியா தான் தனது தாய் நாடு என்று குடியுரிமை பெற்று இருந்தார் .

வித விதமாய் ரணீத் கெஞ்சியும் எந்த அரசியல்வாதியும் சம்மதிக்க வில்லை என்ற போது குருதேவ் ,யதுவீர் குடும்பம் முதல் முறையாய் இணைந்து ஊருக்கு நல்லது என்று  ரணீத்திற்கு   உதவியது .

அவரும் நேர்மையாக,கணக்குளை சரியாய் வைத்து ,நியாமாய் நடந்து இந்திய அரசாங்கத்தின் கையால் சிறந்த சேவகர் விருதை வருடா வருடம் பெற்று வருகிறார்.எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் இன்னும் அதே ரணீத் என்ற நல்ல மனிதனாய் இருப்பவரை யாருக்கு பிடிக்காது .

இப்படி உயர்ந்த மனிதரின் மகள் தான் தவறான பாதையில் சென்று விட்ட டாலி .சிறு வயதில் கலவர வக்கிரங்களை ,உயிர் இழப்புகளை நேரில் கண்ட பிஞ்சு உள்ளம் நஞ்சாகி போனது.அந்த வயதில் எது நல்லது ,எது கெட்டது என்று புரிய வைக்க வேண்டிய அன்னை கண் முன் சிதைக்க பட்ட கொடூரம் கண்ட அந்த மொட்டு,மற்றவர்களை கருக்கும் காட்டுதீயாகி போனது காலத்தின் கொடுமையே.ரணீத் காதல் மனைவி இழந்த துயரம் மறக்க தன்னை போது சேவையில் ஈடுபடுத்தி கொண்டு விட்ட அவர் தன் மகளை கவனிக்க தவறினார் .

பட்டர் பிளை எபெக்ட் என்று இதை தான் கூறுவார்கள் .எங்கோ யாரோ பேசும் ஒரு சொல்,எடுக்கும் ஒரு முடிவு,சூழ்நிலைக்கு ரியாக்ட் ஆகும் விதம் ஏதோ ஒரு மூலையில் யாரின் வாழ்க்கை பாதையை மாற்றி விடும் வல்லமை பெற்றது. இங்கு இணைந்து கொண்டு இருக்கும் எல்லோர் வாழ்வும் அப்படி பிணைக்க பட்டு இருப்பவையே

அதே சமயம் பதிந்தாவின் அருகே இருந்த “குரு கிருபா “என்று இருந்த  மாளிகையின் மாடியில் இருந்து இறங்கி வந்தார் குருதேவ் ரப்தார் பாட்டியா.அமன்ஜீத் அப்பா.மத்திய அமைச்சர் .

பார்க்க சாட்சாத் அமிதாப் பச்சன் போல் இருந்தார் அவர் .

எதிரே துளசி,கணேஸ்வர பூஜை முடித்து கையில் ஆரத்தி தட்டுடன் வந்த தன் மனைவி Jessica thanvi மேல் காதலாய் படிந்தது அவர் பார்வை . மனைவி காட்டிய ஆரத்தியை கண்களில் ஒற்றி கொண்டவர் ,நேர பூஜை அறைக்கு சென்று விழுந்து வணங்கி ,தன் பிராத்தனைகளை வைத்து விட்டு டின்னிங் ஹாலுக்கு வந்தார் .

அவர் வரும் அந்த ஐந்து நிமிடத்திற்குள் அவருக்கு பிடித்த உணவு வகைகளை அங்கு எடுத்து வைத்து இருந்தார் .கூப்பிட குரலுக்கு ஓடி வர 10 வேலையாட்கள் இருந்தாலும் ,குருதேவ் வரும் நாட்களில் ஜெஸ்ஸிகா மட்டுமே சமைப்பார் .

மத்திய அமைச்சர் என்பதால் அவரும் டெல்லி ,அம்ரிஸ்டர் ,சண்டிகர் என்று பறந்து கொண்டே இருப்பார் .வாரத்திற்கு ஒருமுறையாவது நிச்சயம் பதிந்தாவில் இருக்கும் தன் வீட்டிற்கு ஓடி வந்து விடுவார்.ஜெஸ்ஸிகா கையால் சாப்பிட்டால் தான் அவருக்கு நிம்மதி .

உதட்டில் புன்னைகையுடன் ,கண்களில் கணவருக்காக காதலுடன் ,முகத்தில் இல்லறத்தில் ஏற்பட்ட பூரிப்பாலும் மலர்ந்து இருந்த  தன்வி முகத்தை ஆசை தீர பார்த்தவர் பின்னால் இருந்து அவரை அணைத்து கொண்டு ,”தேங்க்ஸ் தன்வி “என்றார்.

“இதயம் தன் துடிப்பிற்கு எல்லாம் நன்றி சொல்லுமா ?”என்றார் தன்வி கணவன் மார்பில் பின்னால் சாய்ந்து .

“இந்த இதயம் என் இதய தேவதைக்கு சொல்லும் .நன்றி என்ற ஒரு சொல் மட்டும் போதாது தான்.”என்றார் தன்வியின் உச்சியில் தன் தாடையை பதித்தவாறு .

“மினிஸ்டர் சார் .உங்களுக்கு பசி மயக்கத்தில் ஏதோ ஆகி போச்சு.உட்காருங்க சாப்பிடுங்க.”என்றார் தன்வி.

“ஹ்ம்ம் சாப்பிட தான் வேண்டும் …ஆனா எங்கே ராணியின் கருணை தான் இந்த ராஜா மேல் படவே மாட்டேங்குதே”என்றவர் பேச்சில் சிவந்து போன தன்வி,”சே என்ன பேச்சு இது.இந்நேரம் உங்க மகனுக்கு திருமணம் நடந்து இருந்தால் நமக்கு பேரன் பேத்தியே இருக்கும் .இந்த வயசில் போய் போங்க என்ன பேச்சு  “என்றவர் அவர் பிடியில் இருந்து விலக முனைய அவரை விடுவிக்காத குருதேவ்.

“அது என்னடி பேரன் பேத்தி எடுத்துட்டா மட்டும் நீ என் மனைவி இல்லை என்றாகி விடுமா இல்லை உன் மேல் எனக்கான காதல் குறைந்து விடுமா ? இது காதல் மேரா பியாரி.அது என் கடைசி இதய துடிப்பு உள்ள வரை குறையாது .

நானும் என் தனிமையும் அடிக்கடி பேசி கொள்வோம்

நீ என்னுடன் இருந்து இருந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என்று

இதை கேட்டு இருந்தால் ,நீ ரசித்து சிரித்து இருப்பாய்

எங்கு இருந்து நாம் சேர்ந்தோம் .

நம் பாதைகளின் பயணம் ஒன்றாய்

உன் கைகளில் மட்டுமே அன்பே என் மனமும் உடலும் உருகுவது

இது இரவு தானா இல்லை காற்றில் அலைந்தாடும் உன் குழல்களா ?

இது சந்திர ஒளியா இல்லை என் இரவுகள் உன் ஒற்றை பார்வையில் ஒளிர்கிறதா?

இவை நட்சத்திரங்களா இல்லை உன் ஆடைகளா ?

என்னை உரசி செல்லும் இது காற்று தானா இல்லை உன் மேனியின் சுகந்தமா /

காற்றில் என் காதில் ஒலிப்பது என்ன  நீ பேசிய ரகசிய மொழியா?

உன்னால் ஏற்பட்ட இந்த விந்தைகளை பற்றி தான் யோசித்து கொண்டு இருக்கிறேன் .

நீ இங்கே இல்லையே என்ற குறை என்னை உருகுலைகிறது

உன் மேல் காதல் கொண்டு விட்ட இந்த மனமோ நீ இங்கு எங்கோ அருகில் தான் இருக்கிறாய் என்று சொல்கிறது .

நீ உடல் நான் நிழல்

நீ இல்லை என்றால் நான் இங்கு இல்லை

என் காதல் நீ தான்

நீ இருக்கும் இடத்தில் இருப்பதே என் சொர்க்கம்

விதியால் நாம் சந்தித்தோம் என்னுயிரே

எந்த பாதை நாம் சென்று இருந்தாலும்

நம் சந்திப்பு நடந்தே இருக்கும் என்னுயிரே

என் உதவியற்ற இந்த நிலை உனக்கு புரியவில்லையா?

நீ அருகில் இல்லாத இரவின் தனிமை கொடுமை

நீ இல்லாமல் நான் துடிப்பதை சொல்ல வேண்டும் ஆனால் யாரிடம் சொல்ல ?

நமக்கு தடையாக இருப்பதை கடந்து வருவோம்

நமக்குள் மட்டுமே இந்த காதல் இருக்க வேண்டுமா என்ன ,இந்த உலகம் அறிய அதை சொல்வோம்

ஆம் நாங்கள் காதலிக்கிறோம் ,காதலிக்கிறோம்

“என்று மனம் நிறைந்து குருதேவ் கவிதை சொல்ல  ,அவர் கை வளைவில் சாய்ந்து நின்று அதை ரசித்து கொண்டு இருந்தார் அவர் காதல் மனைவி Jessica thanvi.

எவ்வளவூ நேரம் அவர்கள் அப்படியே நின்றார்களோ ,”ஹ்ம் ஹூம் “என்ற கனைப்பு ஒலி அவர்களை நிஜ உலகத்திற்கு அழைத்து வர ,அங்கு அவர்கள் காதலை ரசித்தவாறு நின்று இருந்தான் அவர்கள் காதலின் பரிசான அவர்கள் மகன் அமன்ஜீத் .

ஜெஸ்ஸிகா முகம் சிவந்தவராய் உணவினை எடுத்து வைக்க சென்று விட ,மகனை ஆரத்தழுவி அவன் உச்சியில் முத்தமிட்டார் குருதேவ் .

“எப்படி கண்ணா இருக்கே !”என்றார் மகனை அங்குலம் அங்குலமாய் பார்வையிட்டு .

“போன வாரம் பார்த்த போது எப்படி இருந்தேனோ இப்பவும் அப்படியே தான் இருக்கேன் டாட் .”என்ற அமன் ,”ஆனா மம்மி தான் உங்களை காணாமல் உருகி ,இளைத்து போனாங்க.”என்றான் .

“டேய் சும்மா இருக்க மாட்டே .”என்றார்  தன்வி புன்னைகையுடன் .

“டாட் நான் சொல்வது உண்மையா பொய்யா என்று நீங்களே அம்மாவை தூக்கி பார்த்து சொல்லுங்க .”என்றான் அமன் .

“கரெக்ட்.”என்ற குருதேவ் ஜெஸ்ஸியை இரு கைகளால் தூக்கி ,”யெஸ் அமன் யு ஆர் கரெக்ட்.ஏன் தன்வி சரியாய் சாப்பிடுவதில்லையா நீ ?”என்றார் தன்வியை கைகளில் தாங்கிய படி .

“உங்க ரெண்டு பேருக்கும் விளையாட நான் தான் கிடைச்சேனா இன்னைக்கு .இறங்குங்க ….இறங்குங்க .உங்க பி.ஏ ,பாடி கார்ட் எல்லாம் பார்க்கறாங்க .இறக்குங்க .”என்றார் தன்வி.

“ஏன்டா அமன் என் மனைவியை நான் தூக்கினா அவனுகளுக்கு என்னடா வந்தது ?வீட்டில் போய் அவங்களும் அவங்க மனைவியை தூக்கட்டுமே யார் வேண்டாம் என்றது .?”என்றார் குருதேவ் .

‘யாரு நாங்க தூக்க மாட்டோம் என்றா சொல்றோம் ! வீட்டுக்கு போய் மூணு மாசம் ஆகுதியா மினிஸ்டர் .நீர் ஊர் சேவை செய்ய , ஊர் ஊராய் போகும் போது என் பொண்டாட்டியை நான் அப்படியே தூக்கிட்டாலும் ….இந்நேரம் டைவோர்ஸ் செய்து இருப்பா .என் முகமே அவளுக்கு மறந்து போய் இருக்கும் யா .வயித்து எரிச்சலை ஏன்யா கொட்டுறீர் ?’என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்த வாறு வெளியே இளித்து கொண்டு நின்றார் குருதேவ் பி .ஏ க்ரிஷ் .

“அங்கிள் !ஜெலுசில் வேண்டுமா ?’என்றான் அமன் கண் அடித்து

“நீங்க வேற தம்பி “என்று அவர் தலையை சொரிய

“என்ன அங்கிள் எப்போ தானே ஏன் வயித்து எரிச்சலை கொட்டறீங்க என்று சொன்னீங்க ?’என்றவன் பேச்சை கேட்டு அவர் ,ஒருவேளை மனதிற்குள் பேசுவதாய் நினைத்து நாம் தான் உளறிட்டோமே என்று பயந்தவர் ,”சார் நான் வெளியே வெயிட் செய்யறேன் “என்று ஓடி போனார் .

” தன்வி !நீயும் என் கூடவே வந்துடேன் “என்றார் குருதேவ் அதற்கு பதில் வராது என்று தெரிந்தும் .

மௌனமாய் பறி மாறிய தன்வியின் பார்வை அமன் மீது படிந்தது .அந்த கேள்வியே தன் காதில் விழாதவன் போல் அவன் சாப்பிட்டு கொண்டு இருந்தான் .

அமன் தன் தன் தாய்க்கு நியாயம் கிடைக்காமல் பதிண்டா நீங்க மாட்டான் .மகன் போராட்டம் தனக்கானது என்பதால் தன்வியும் அங்கிருந்து நகர மாட்டார் .குருதேவும் ஒவ்வொரு முறை வரும் போதும் இதே கேள்வியை கேட்டு பதில் வராமல் போக பெருமூச்சு விடுவார் .

அதுவரை அங்கு இருந்த சூழ்நிலை மாறி விட்டதை உணர்ந்த தன்வி அதை மாற்றும் விதமாய் ,”ஹே அமன்! உன் நண்பன் அந்த கபீர் எங்கேடா போனான் .ரெண்டு நாளாய் பார்க்கவே முடியலை .”என்றார் .

” வைசாகிக்கு ஊருக்கு போன அந்த எருமை வண்டியை ஓவர் வேகத்தில் ஒட்டி ஸ்கிட் ஆகி கை கால் உடைந்து ஹாஸ்பிடலில் படுத்து இருக்கான்.” என்றான் அமன்

“ஆமா!  இது எங்களுக்கு தெரியாதாகும்.அவனை அப்படி சொல்ல சொன்னதே நான் தானே.”என்றார் ஜெஸ்ஸி வாய்க்குள் முணுமுணுப்பாக .

“வாட் மாம் ?’என்றான் அமன் .

“தமிழ்நாட்டில் இருந்து என் தோழியின் மக ப்ரீத்தி  இங்கே திருமணம் ஒன்றுக்கு வாரா. அவளுக்கு பிளைட் டிக்கெட் ஏற்பாடு, ஸீவ் செய்ய அவனை தான் சொல்லி இருந்தேன் அவ அம்மா போன் செய்து மக பலைட் ஏறிட்டா என்று சொல்றாங்க.இவன் எப்போ டிக்கெட் எடுத்தான், அந்த பொண்ணு எப்போ விமானம் ஏறுச்சு என்று எந்த தகவலும் இல்லை அதான் கேக்கலாம் என்று .”என்றார்

“யெஸ்  சொல்லி இருந்தான். அமர்நாத் அங்கிள் தானே நமக்கு டிக்கெட்ஸ் எல்லாம் புக் செய்வார் .அவரிடம் சொல்லிட்டேன்.அவர் பார்த்துப்பார்  நைட் வந்துடுவாங்க “என்றான் அமன் அதில் அதிக ஆர்வம் காட்டாமல் .

“எந்த தோழியை பற்றி சொல்ற ?”என்றார் குருதேவ் தன் மனைவிக்கு தோழி அதிலும் தமிழ்நாட்டில் தீடிர் என்று எந்த தோழி முளைத்தாள் என்று யோசனையாகி போனார் .

“உங்களுக்கு அவளை தெரியாது குரு.என் சின்ன வயசு தோழி அவ.இப்போ அவ மருமகளுக்கு பிரசவம் என்று வெளிநாடு போறாளாம்.மகளை பார்த்துக்க முடியுமா என்று கேட்டா .நானும் சரி என்று சொல்லிட்டேன் . நம்ம கூட தான் ஆறு மாசம் தங்க போறா.”என்று கஷ்ட பட்டு கதை ,திரைக்கதை ,வசனம் எல்லாம் ரெடி செய்து நடித்த அவர் , மகனை பார்க்க அவனோ நண்டு தான் அதி முக்யம் என்று அதன் காலை பதம் பார்த்து கொண்டு இருந்தான் .

அர்ஜுன் வீட்டிற்கு செல்ல வேண்டிய ப்ரீத்தி ஜஸ்மிந்தேர் எதற்காக பஞ்சாப் வருகிறாளோ அதையே  ப்ரீத்தி ஜெகன்நாதனின் கதையாக சொல்லப்பட்டது விதியின் விளையாட்டு தான் போலே .

“ஏன் அமன் அதான் கபீர் ஹாஸ்பிடலில் இருக்கானே உனக்கும் பி.ஏ தேவை படுமே! ப்ரீத்தி கூட mba முடிச்சிட்டு நம்ம ஹர்பிர் அங்கிள் கிட்டே தான் வேலை பார்த்துட்டு இருந்தா. அவளை உனக்கு பி .ஏ வாய் வைத்து கொள்ளேன் .”என்றார் ஜெஸ்ஸி .

“யுவர் விஷ் மாம். பட் எந்த ஸ்பெஷல் டிரீட்மென்ட் வேலை என்று வரும் போது எதிர்பார்க்காதீங்க .உங்களுக்கே தெரியும் நான் என்னிடம் பணிபுரியும் நம்ம ரிலேஷன் யாருக்கும் எந்த சலுகையும் கொடுத்தது இல்லை .வீணா பிரச்சனை வரும்.என் வேலை பாதிக்கும்.சோ கீப் தட் இன் மைண்ட் அண்ட் இன்போ ஹர் அல்சோ .” என்றான் அமன்ஜீத்   “என்றான் அவன் உணவில் குறியாக .

ஜெஸ்ஸி அவன் தொழிலில் முடிவுகளை எடுப்பார் என்பதால் அவர் சொன்ன எதையும் அவன் சந்தேகிக்கவில்லை.  அவர் வேலைக்கு ஆளை அழைத்து வரவில்லை .அவனுக்கு இதய ராணியையும் , அந்த வீட்டிற்கு இன்னொரு மகளை அழைத்து வந்து கொண்டு இருக்கிறார்.

அதற்கு கபீர்ருக்கு accident என்ற பொய் சொல்லி அவனை ஊரை விட்டே பேக் செய்து விட்டார் என்பதை அமன்ஜீத் அறியவில்லை .அவனை பொறுத்த வரை வந்து கொண்டு இருப்பது ஒரு பணியாளே .

“அப்போ நைட் போய்ட்டு பிக் அப் செய்துடு அமன் .”என்ற அவர் எழ ,

“வாட் !கம் அகைன் மாம் .”என்றான்

“நைட் வரும் ப்ரீத்தியை போய் பிக் அப் செய்து இங்கே கூட்டி வா அமன் .”என்றார் ஜெஸ்ஸி .

“மாம் சென்ட் சம்ஒன் எல்ஸ் .”என்றான் அமன் .

“கண்ணா அவ என் தோழியின் மக. நீ போய் கூட்டி வருவது தான் முறை .வேலைக்காரர்களை அனுப்பினா என் தோழி அவ மக என்னை பத்தி என்ன நினைப்பாங்க .ப்ளீஸ் கண்ணா கோ .”என்றவர் இது தான் ப்ரீத்தி நம்பர் கால் செய்து பேசி எப்போ வரா என்று கேட்டுக்கோ”என்றவர் நோட் பாட்டில் எழுதப்பட்டு இருந்த போன் நம்பரைஅவனிடம் கொடுத்து விட்டு கை கழுவ சென்றார் .

கை கழுவும் இடத்தில் ,அமன் அருகில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட குருதேவ் ,”ஜெஸ்ஸி பார்த்து பொய் சொல்லுமா .உன் ரீல் அறுந்துட போகுது.”என்றார் மெல்லிய குரலில்

கை கழுவி கொண்டு இருந்த ஜெஸ்ஸி தூக்கி வாரி போட நிமிர்ந்து ,”நீங்க என்ன சொல்றீங்க “என்று திணறினார் .

“சின்ன வயசுல நீ இருந்தது மெக்ஸிகோவில் .படித்தது எல்லாம் அங்கே தான் .காலேஜ் படிக்கச் தான் நீ இங்கே வந்ததே .அப்படி இருக்கும் போது இந்தியாவில் உனக்கு யாரு சின்ன வயசு தோழி இருக்க முடியும் .அதுவும் உயிர் தோழி .சின்ன வயதில் நீ இந்தியா வந்ததே இல்லை என்று எல்லோருக்கும் தெரியும் ஸ்கிரிப்ட் சரியில்லை டைரக்டர் மேடம் .பார்த்து செய்யுங்க உங்க மகன் ஷார்ப் .உங்க ஸ்க்ரீன் பிளே பிளாப் ஆகிட போகுது .”என்றார் குருதேவ் அடக்கி வைக்க பட்ட புன்னகையுடன் .

அந்த வயதில் அசடு வழிய நின்ற மனைவியை காண அவருக்கு சிரிப்பை கட்டு படுத்த முடியவில்லை .

“என்ன மேட்டர் “என்றார் குருதேவ் ஜெஸ்ஸிகாவை தன் ஆபீஸ்  அறைக்கு அழைத்து சென்றவர் .

அங்கே ப்ரீத்தி அமன்னுக்கு பார்த்து இருக்கும் பெண் என்பதையும் ,அவள் பிரச்னையும் ஜெஸ்ஸிகா சொல்லி முடிக்க ,வெகு நேரம் யோசனையில் இருந்தார் குருதேவ் .

“இது சரி வரும் என்று தோணலை பியாரி .உண்மையை சொல்லி அமன்னிடம் அந்த பெண்ணை அறிமுகம் செய்வதே நல்லது என்று தோணுது மா .இந்த வேலை நாடகம் எல்லாம் ஒர்க் அவுட் ஆகும் என்று தோணலை .ஆறு மாதம் அடுத்த வீட்டு பெண்ணை இங்கே வைத்து இருப்பதும் சரியில்லை .”என்றார் குருதேவ் ஜெஸ்ஸிகா கையை பிடித்து கொண்டு .

“ஆமா உங்க மகனிடம் போய் ‘நான் பெத்த மகனே இது தான் உனக்கு பார்த்து இருக்கும் பொண்ணு .தாலியை கட்டு என்றதும் ,அம்மா !உங்கள் வாக்கு எனக்கு வேதம் .’என்று பாய்ஞ்சி தாலியை கட்டிட்டு தான் மறுவேலை பார்ப்பான் பாருங்க .அவனும் அவன் கொள்கையும் .இத்தனை வருடம் கிடைக்காத உரிமை ,மரியாதை இனி மேல் தான் எனக்கு  கிடைக்க போகுதாகும் .என்னை அர்ஜுன் குடும்பம் ஏத்துக்கும் வரை இவன் திருமணம் செய்ய மாட்டானோம்.பைத்தியக்காரன் ச ப்போஸ் இவனுக்கு அறுபது வயது ஆனா பிறகு தான் வராங்க,இல்லை வரவே இல்லை என்றால் இவன் அப்படியே இருப்பதற்கா இவன் பெற்று எடுத்தேன் ?”என்றார் கண்களில் நீர் வழிய .

மகனின் உரிமை போராட்டத்திற்காக ,தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்திக்காக மன வைராக்கியத்துடன்  அந்த ஊரை விட்டு தன் நகராத தன் மனைவி தான் ,தன்னால் மகன் வாழ்க்கை இல்லாமல் நின்று விட கூடாதே என்று இத்தனை பிளான் போடுவதை கண்டு குருதேவ் மனம் கலங்கினார் .

பணம் ,வீடு, செல்வாக்கு ,பதவி எல்லாம் இருக்க , எதை வேண்டும் என்றாலும் வாங்கும் சக்தி கொண்டவர் அவர் என்றாலும் அவர் சக்தியை மீறிய ஒன்றை தான் மனைவி கோருவது.அதை எப்படி வாங்கி தருவது என்று அவருக்கு விளங்கவில்லை .இது உணர்ச்சிகளின் போராட்டம் .இங்கு இரு பக்கமும் இருப்பது நல்ல மனிதர்கள்.இரு பக்கமும் தவறு இருக்கிறது தான்.மோதுவது குடும்பங்கள் என்னும் போது அதில் ஏற்படும் மரணவலி கொஞ்சம் நஞ்சம் அல்ல

பயணம் தொடரும்.