OVOV 17
OVOV 17
“அடப்பாவி கடன்காரா,கூவத்து எருமை மாடே, சொறி வந்த ஒட்டகச்சிவிங்கி, சிம்பன்சி நீ தானா…”என்று preethi கத்த ,
“கூல் டார்லிங்.மாமா திரும்ப வந்து உன் கூட வேர்ல்ட் வார் 3, காதல் யுத்தம் எல்லாம் போடறேன் “என்றவன், ஸ்பெஷல் squad முகமூடி,ஹெல்மெட் அணிந்து NSG 85 என்ற SNIPER /ஆட்டோமேட்டிக் துப்பாக்கி ஒன்றினை கைகளில் எடுத்து கொள்ள, அதை கண்டு ப்ரீத்தியும் ,காஜலும் விழித்தனர்.
சினிமாவில் கூட பார்க்காத கமாண்டோ கெட்அப் அது. நேஷனல் செக்யூரிட்டி கார்ட்(NSG COMMANDOS) போல் யார் அவர்கள் என்று அடையாளம் மற்றவர் தெரிந்து கொள்ள முடியாத வண்ணம், தலை முதல் கால் வரை எல்லாம் மறைத்து வைக்க பட்டு இருந்தது.
“சார் !ஆல் ஆர் இன் பொசிஷன் சார் .”என்றது அவன் கம்யூனிகேஷன் டிவைஸ் காதினுள்.
“ரூப் டாப் ?”என்றான் இவன்
“ஆல்பா SNIPER ஷாட் டீம் SECURED சார்.”
“வெளியே செல்லும் வாயில் ?”என்றான் இவன்
“பீட்டா டீம் COVERED சார்.”
“SSPக்கு துணை யாரு ?”என்றான் இவன்
“சார் ரயில்வே கார்ட்ஸ்(RPF) பொறுப்பு ஏற்று கொண்டு இருக்காங்க .”என்றான் வித்யூத் .
“குட்.மீடியாவுக்கு நியூஸ் போகலை தானே!”என்றான் இவன்.
“இல்லை சார் ஆல் இஸ் QUIET.மத்திய அமைச்சர் குருதேவ் பதிந்தாவிற்கு ஏதோ நிகழ்ச்சிக்கு வந்து இருக்கார்.மீடியா கவனம் எல்லாம் அவர் மேல.ஏதோ கட்சி மாற்றி அமைக்க பட போவதாய் பேச்சு இருக்கு.சோ இது பஞ்சாப் அரசியலில் பெரும் புயலை கிளப்ப போகும் என்று எல்லா மீடிய கவனமும் அவர் மேல் தான் இருக்கு.”என்றான் சரண்பால் .
“வரும் ட்ரெயின் எல்லாம்?”என்றான் இவன்.
“நம்ம கிட்டே இருந்து தகவல் வரும் வரை வேறு ரூட்டில் டிவேர்ட் செய்ய பட்டு இருக்கு சார்.மைண்டனென்ஸ் என்று தான் காரணம் சொல்லி இருக்கு.90 சதவீதம் பயணிகள் வெளியேறிட்டாங்க சார்.வி ஆர் குட் டு கோ.”என்றான் வித்யுத் .
அந்த அறையின் பின் புறம் இருந்த ஜன்னல் வழியாக எகிறி வெளியே குதித்தவன் திரும்பி,”ப்ரீத்தி பேபி!மாமா வரட்டா. சீக்கிரம் வந்து உன்னை கொஞ்சுறேன் பார்பி.”என்றவன் ப்ரீத்தி முறைக்கும் போதே ஒரு பிளையிங் கிஸ் ஒன்றை பறக்க விட்டு ,நெற்றில் கை வைத்து ஒரு சலூட் அடித்து விட்டுசென்றான் -ACP ,கமாண்டோ ஆன்டி ட்ரக் TASKFORCE ரஞ்சித் சாகர் -விஜய கருணாகரனின் தம்பி .
ப்ரீத்தியின் பேச்சை கேட்ட காஜல்,”அப்போ இவனை உனக்கு முன்பே தெரியுமா ப்ரீத்தி?”என்றாள் திகைப்புடன்.
“ஏன் தெரியாம,மதுரா பத்தி சொல்லி இருக்கேன் இல்லை. அவ ஹஸ்பண்ட் விஜய கருணாகரனின் தம்பி தான் இவன். பேரு ரஞ்சித் சாகர்.ACPன்னு ஷோ காட்டிட்டு சுத்தும் அராத்து. குரங்கு. அவ வீட்டுக்கு போகும் போது எல்லாம் இந்த கொரில்லாவும் இருக்கும்,எங்க ரெண்டு பேருக்கும் ஆகவே ஆகாது.
அவன் டாம் என்றால் நான் ஜெர்ரி.ரத்த களறியா இருக்கும் என்னை அவன் வச்சி செய்வான்.நான் அவனுக்கு ஆப்பு வைப்பேன்.கடைசியா இந்த லூசு எனக்கு லவ் லெட்டர் கொடுத்தான் என்று அவங்க அவங்க அண்ணன் கிட்டேயே மாட்டி விட்டேன்.செம்ம லெக்சர் நடத்தினார் பாருங்க கருணா ,நொந்து நூடுல்ஸ் ஆகி டெல்லி பக்கம் ஓடி போனவன் இப்போ தான் பார்க்கிறேன்.அன்னைக்கு செய்ததற்க்கு இப்படி இப்போ பழி வாங்கி இருக்கு அனகோண்டா.”என்று சிரித்த ப்ரீத்தி,
’மங்கூஸ் மண்டையா இருக்குடா உனக்கு .உன்னை கதற வைக்கிறேன் பாரு.’ என்று மனதிற்குள் கறுவி கொண்ட ப்ரீத்தி, அவன் பத்திரமாய் திரும்ப வர வேண்டுமே என்று கடவுளை பிராத்திக்க ஆரம்பித்தாள்.
ராஜேஸ்வரி ட்ரெயின்னில் வருவது ப்ரீத்தி தான் என்று சொல்லி இருந்தாலும்,’அவ ஏன் பஞ்சாப் வரை வர போறா !’என்ற குழப்பத்துடன் தான் வித்யூத்திற்கு பதில் ரஞ்சித் சாகர் ப்ரீத்தி கம்பார்ட்மென்டுக்கு வந்தது.
அவளை கண்டதும் வழக்கம் போல் அவளை வெறுப்பேற்றி அவள் கோபத்தில் குளிர் காய்ந்தான் ரஞ்சித் சாகர்.அழகாய் மல்கோவா மாம்பழம் போல் இருக்கும் இவளை பார்த்தாலே வம்புக்கு இழுப்பதே இவன் வேலை.
(அவனுக்கு தோழியா,காதலியா யாரடி நீ பெண்ணே? )
ரஞ்சித் சட்டென்று பார்க்க தெலுங்கு பட ஹீரோ “bunny” என்று அழைக்க படும் “அல்லு அர்ஜுன்” மாதிரி இருந்தான்.ஐந்து அடி ஒன்பது அங்குல உயரம்.42-32-15 உடல் அமைப்பு.பிரவுன் நிற கண்கள்.பக்கா எலிஜிபிள் பேச்சிலர்.ஆனால் ப்ரீத்தி சொன்னது போல் நயாகரா நீர்வீழ்ச்சி .
அதிலும் ப்ரீத்தி என்றால் அமேசான் காட்டு மழை போல் அவளை வெறுப்பேற்ற என்றே அதிகமாய் வழியும் ஜொள்ளு .
(ஒருவேளை ரஞ்சித் ப்ரீத்தியை லவ் செய்யறானோ !எதற்கும் உஷாராய் இருப்போம் .)
ஏற்கனவே ப்ரீத்தி வாட்ஸாப்ப்பில் அனுப்பி இருந்த அடையாளமான தொப்பி காரனையும்,அவன் கூட கொரில்லாவுக்கு பேண்ட் ஷர்ட் போட்டது போல் வந்த காட்டான் மூவரையும் ரஞ்சித் படை கோழி அமுக்குவது அமுக்கி விட, ,அந்த தொப்பிக்காரன் இடத்தில் நின்றான் வித்யூத் .
ட்ரெயின் விட்டு இறங்க வேண்டிய பஸ்சேன்ஜெர் எல்லாம் இறங்கி வெளியேற,வாயில் அருகில் மப்டியில் நின்ற போலீசார் சாதாரண பயணிகளை வெளியே விட்டனர்.உள்ளே வந்த அனைவரின் மேல் கண் இருந்தாலும் இரைக்காக காத்து இருக்கும் சிங்கங்களாய் ரஞ்சித் கட்டளைக்காக காத்து நின்றார்கள் .
அதே சமயம் பதிண்டா ரயில்வே நிலையத்திற்குள் சில வினாடி தாமத்தில் வந்து நின்றது அந்த இரு பொலிரோக்கள். ஒன்றில் இருந்து அர்ஜுன் ,கியான் ,அமர் இறங்கி உள்ளே சென்று விட ,இன்னொன்றில் இருந்து இறங்கிய அமன்ஜீத் ,
“ஐம் ஹியர் ,மை வெஹிக்கிள் நம்பர் “என்று அவன் வந்த வண்டியின் மேக்,மாடல்,நம்பர் அனுப்பி விட்டு அங்கேயே காரின் மீது சாய்ந்து நின்றான்.
உள்ளே அர்ஜுன் நுழைவதற்கும் வெளியே ப்ரீத்தி ஜாஸ்மிந்தேர் வருவதற்கும் சரியாக இருந்தது.எதிரே வந்த அவனை கண்டு ஒருகணம் தயங்கி நிற்க,”அர்ஜுன் !”என்ற அழைப்பு தூரத்தில் வர அவன் அங்கே சென்று விட்டான்.
தன் தோளை குலுக்கி கொண்ட ஜெஸ்ஸி தன் ட்ராலி பாக், ஹாண்ட் பாக் விதம் மெல்ல நடந்தவள்,அதற்கு மேல் முடியாமல் சுவரில் சாய்ந்து தன்னை நிலைநிறுத்தி கொண்டாள்.
“‘என்னடா இது உலகத்தை யாரு இவ்வளவு ஸ்பீட்டா சுத்தி விடறது ?பூமி தண்ணீ போட்டுடுச்சா என்ன?”என்று சத்தமாகவே முனகினாள் ஜெஸ்ஸி .
அப்பொழுது அமன் அனுப்பிய மெசேஜ் வந்து சேர,வெகுவாய் கஷ்ட பட்டு கண்களை சுருக்கி வந்த மெசேஜ் படித்தவள்,அவன் எங்கு நிற்கிறான் என்று கண்ணை சுழற்ற,தூரத்தில் அவன் நிற்பது கண்டு அங்கே தள்ளாடியவரே சென்றாள்.
சுற்றும் முற்றும் எரிச்சலுடன் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த அமன்,ஒரு அழகன் இளம் பெண்,தள்ளாட்டதுடன் தன்னை நோக்கி வருவதை கண்டு புருவம் சுருக்கினான்.
“ப்ரீத்தி?”என்று சந்தேகமாய் அமன் கேக்க,தலையை மட்டும் ஆட்டிய அவள் அடுத்த கணம் மயங்கி சரிய அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டான் அமன்ஜீத் .
அவள் உடல் நெருப்பாய் கொதித்து கொண்டு இருக்க அவள் இருக்கும் நிலை கண்டு அதிர்ந்து போனான்.சட்டென்று அவளை தன் காரில் ஏற்றியவன்,அவள் பைகளை பின் சீட்டில் போட்டு விட்டு,வெகு வேகமாய் அவன் காரை இயக்கினான் .
கைகள் காரினை ஓட்ட ,கண்கள் நொடிக்கு ஒரு தரம் மயக்கத்தில் இருந்த அவளை காண ,ப்ளூடூத் மூலமாய் தன் நண்பன் யோஜித் அழைத்தவன்,”எங்கேடா இருக்கே “என்று எரிந்து விழுந்தான் .
“ஹாஸ்பிடலில் தான் இருக்கேன்.”என்றான் யோஜித் – பதிண்டா அரசாங்க ஹாஸ்பிடல் டீன்.
“ஒரு பேஷண்ட் கூட்டிட்டு வரேன் யோஜித்.பேமிலி பிரென்ட் ஹெவி பிவேர்ரா இருக்கு டா.ஐ அம் ஆன் தி வே.”என்றான் பதட்டத்துடன் .
அடுத்து தன் அன்னைக்கு அழைத்து விஷயத்தை சொல்ல ,அவரும் திகைத்து போனவராய் கிளம்பி வந்தார்.ஜெஸ்ஸியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து விட்டு தாயும் மகனும் சிகிச்சை அறைக்கு வெளியே காத்து நின்றனர்.
அதே சமயம் ரயில்வே நிலையத்தில் அர்ஜுனை கண்டு அழைத்தது சரண்.அவனை நோக்கி சென்ற அவர்களை ஒரு முறை முறைத்த சரண்
“இங்கே என்ன செய்யறீங்க?ஊர் சுத்த நேரம் காலம் இல்லையா உங்க மூவருக்கும்?கெட் அவுட் நொவ் “என்றான் முஃப்டியில் இருந்த அவன் .
அங்கே இருக்கும் ஆபத்தை உணராமல்,எந்நேரமும் எவ்வித அசம்பாவிதம் நடக்க கூடிய சூழலில் தன் குடும்பம் வந்து நிற்பதை கண்டு கோபம் எக்கசக்கமாய் எகிறியது. .ஏற்கனவே சரண் டென்ஷன் பார்ட்டி .இப்போ கேட்க வேறு வேண்டுமா?
“படிஜா!ப்ரீத்தி இந்த ட்ரெயினில் தான் வரா.அவளை பிக் அப் செய்ய தான் வந்தோம்.”என்றார் அமர்நாத்.
“எந்த ப்ரீத்தி?’என்றான் சரண்,வேலை டென்ஷனில் தம்பிக்கு பார்த்து இருக்கும் பெண் என்பதை முற்றிலும் மறந்தவனாய்.
“என்ன சரண் நீ?நம்ம அர்ஜுனுக்கு பார்த்து இருக்கும் பெண். தமிழ்நாட்டில் இருந்து வராங்க என்று நேற்று தானே சொன்னேன். நீ கூட அந்த பெண்ணின் விருப்பம் இல்லாமல் போட்டோ பார்க்க கூடாது என்று சொன்னியே மறந்து போச்சா ?”என்று அமர் கேட்ட உடன் தான் தன் தம்பிக்கு வந்த ப்ரோபோசல் பற்றியே ஞாபகம் வந்தது.
ஏதோ நியாபத்திற்கு வர, சட்டென்று எந்த அறை வாயிலில் நின்றானோ அந்த அறைக்குள் ஓடினான் சரண்.என்ன ஆச்சு அவனுக்கு என்று புரியாமல் பின்னால் சென்ற மூவரும்,அந்த அறை முழுவதும் மப்டியில் குவிந்து இருந்த போலீஸ் கண்டு ஜெர்க் ஆகி நின்றார்கள்.
“என்னடா நடக்குது இங்கே ?’என்றார் அமர்நாத்.
“எங்களுக்கு மட்டும் தெரியும் பாருங்க.”என்றான் கியான்.
அதற்குள் சரண் குரல் அந்த அறையில் கர்ஜனையாக ஒலிக்க ஆரம்பித்தது.
“எங்கே அந்த பஸ்சேன்ஜெர் லிஸ்ட்.”என்று அவன் கத்த,அவன் கையில் அந்த லிஸ்ட் கொடுக்க பட,லிஸ்ட்டை வெகு வேகமாய் திருப்பியவன்,ப்ரீத்தி என்ற பெயரையும் ,கோச் நம்பரையும் பார்த்தவன்,அதில் இருந்த போட்டோ காட்டி,”இது தான் பிரீத்தியா?’என்றான் அர்ஜுனிடம்.
சரண் காட்டிய போட்டோவில் இருந்தது ப்ரீத்தி ஜெகன்நாதன். அவளை கண்டதும் மூவரின் தலை “ஆம் “என்பது போல் ஆட, தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான் சரண். அதுவரை கட்டளைகளை பிறப்பித்து கொண்டு இருந்த SSP வீரேந்தர் பாட்டியா அவர்களின் தாயா/ பெரியப்பா அவர்களின் அருகே வந்தார்.
“என்ன சரண்.என்ன பிரச்சனை?ஹே அர்ஜுன்! இங்கே என்ன செய்யரே நீ?’என்றார்.
எதையும் பேசாத சரண் பாசஞ்சர் லிஸ்ட் பேப்பரை அவரிடம் கொடுத்து சர்க்கிள் செய்ய பட்டு இருந்த ட்ரெயின் பெட்டியின் எண்,கோச் நும்பர்,பயணிகளின் பெயரை சுட்டி காட்டி,”இந்த பொண்ணு தான் அமர் மாமா அர்ஜுனுக்கு பார்த்து இருக்கும் பொண்ணு.தமிழ்நாட்டில் இருந்து வந்து இருக்கும் ப்ரீத்தி.”என்றான்.
“வாட்”என்ற வீரேந்தர் லிஸ்டை உற்று பார்த்து அதிர்ந்து போனார்.
“அப்போ இந்த ப்ரீத்தி?’என்றார் சரண் இடம்.
“நமக்கு துப்பு கொடுத்ததும்,அர்ஜுனுக்கு பார்த்து இருக்கும் ப்ரீத்தியும் ஒரே பெண் தான் தாயா.இப்போ என்ன செய்வது ? .”என்றான் சரண்.
சட்டென்று அவருக்கும் டென்ஷன் ஏறி போனது.திரும்பவும் லிஸ்டில் இருந்த ப்ரீத்தியின் புகை படத்தை பார்த்தவர் அதற்கு அடுத்து இருந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போனார்.
“ஹே இது நம்ம காஜல் “என்றார் திகைப்புடன்.
அவர் கையில் இருந்து லிஸ்ட் வாங்கி பார்த்த சரண் அதிர்ந்து போனான்.
அவர்கள் வீடு பெண்கள் தான் போதை பொருள் கடத்த படுவதாக துப்பு கொடுத்த பெண்கள் என்பதையும்,அவர்களை தான் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க வேண்டும் என்பதையும்,கோர்ட்டில் தண்டனை வாங்கி கொடுக்க இவர்களின் சாட்சி மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்தவர்வர்கள் நொந்து போனார்கள் .
சொர்ணாக்கா சொன்ன தொப்பிக்காரனை தூக்கி சென்று அரை மணி நேர விசாரிப்பிலேயே அவன் மெக்ஸிகோ ஆப்பிரிக்கா ,உகாண்டா ,பாகிஸ்தான் என்று சர்வதேச அளவில் ஆட்களை, தாலிபான் ,isis தீவிரவாத குழுக்களுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி கை காட்ட ஒட்டுமொத்த பஞ்சாப் போலீஸ் உயர் அதிகாரிகள் திகைப்பில் இருக்க,அந்த சர்வதேச ட்ரக் கார்டெல் (drug cartel)எதிராக தங்கள் வீட்டு பெண்கள் நின்று இருக்கிறார்கள் என்ற உண்மை வெளியே தெரிந்தால் என்ன ஆவது என்று திகைத்து போனார்கள்.
இவர்கள் இருவரின் முகமும் பேய் அறைந்தது போல் இருக்க ,”வீர்ஜீ!என்ன ஆச்சு?எதுக்கு இவ்வளவு கவலையா இருக்கீங்க?” என்றான் அர்ஜுன்.
ட்ரெயினில் வரும் ப்ரீத்தி,சென்னையில் உள்ள தன் தோழி ACP ராஜேஸ்வரி மூலம் அவள் பயணம் செய்யும் கோச்சில் போதை மருந்து கடத்தப்படும் தகவல் கொடுக்க,பஞ்சாப் முதல் அமைச்சர் தலைமையில் அமைக்க பட்டு இருக்கும் போதை தடுப்பு படை அங்கே ஒரு ஆபரேஷன் ஏற்பாடு செய்து இருப்பதையும்,இந்த போதை கார்டெல் குழுவின் வேர்கள் சர்வதேச அளவில் பரவி இருப்பதையும்,இதற்கு சாட்சி ப்ரீத்தி என்று சரண் சொல்லி முடிக்க,
“எங்கே ப்ரீத்தி?’என்றான் arjun குரலில் இரும்பின் கடினத்தோடு. அதுவரை அவன் இருந்த தோரணையே முற்றிலும் மாறி போனது தன் மனம் கவர்ந்தவளுக்கு ஒன்று என்றதும் .
“ஷி இஸ் சேப் நௌ வித் ஸ்பெஷல் கமாண்டோ மிஸ்டர் ரஞ்சித் சாகர்.”என்றார் வீரேந்தர்.
“உடனே அவளை இங்கு இருந்து கூட்டிட்டு போகணும் தாயா.” என்றான் அர்ஜுன் எக்கு போன்ற குரலில்.
அவர்கள் பேசுவதை கவனிக்காத அர்ஜுன் ,தன் மொபைல் எடுத்து காஜலுக்கு அழைத்தான்.
“ஹெலோ காஜல் Tusī kivēṁ hō?Kī tusīṁ surakhi’ata hō(எப்படி இருக்கே ,எந்த ஆபத்தும் இல்லை தானே!)Thā’i’ā, vīrajī ithē hai.Asīṁ tuhāḍē la’ī hāṁ(தயா!,வீர்ஜி! எல்லாம் இங்கே தான் இருக்கோம்.எதற்கும் பயப்படாதே )”என்று அவன் பஞ்சாபியில் பேச,
“வாட்?”என்று கூவியது ஒரு குயில் அந்த போனில்.அந்த குரலை கேட்டு அர்ஜுன் இதயம் சில பல வினாடிகள் தன் துடிப்பையே நிறுத்தி விட்டு பின்னர் வெகு வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
அவன் இதயம் அந்த குரலுக்கு சொந்தக்காரி தான்,தன் மற்றொரு உயிர் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ!
ஒரு கணம் நம்பரை சரி பார்த்த அர்ஜுன்,”காஜல்!”என்று அவன் அழைக்க,
“ஷி இஸ் பீடிங் கிட்ஸ்.(குழந்தைகளுக்கு உணவு ஊட்டி கொண்டு இருக்கிறாள்)who is this?”என்றாள் எதிர்முனையில் இருந்த ப்ரீத்தி.
“மேரா நாம் அர்ஜுன்(என் பெயர் அர்ஜுன் ).காஜல் சோட்டா பாரா(காஜலின் தம்பி ).” என்றான் அர்ஜுன்.
“ஹே காஜல்!உங்க தம்பி அர்ஜுன் தான் லைன்னில் இருக்காங்க.உன் கிட்டே பேசணுமாம்.”என்று ப்ரீத்தி தமிழில் பேச,
“என்னன்னு கேளு ப்ரீத்தி.”என்றாள் காஜல்
“ஏய் அவங்க பஞ்சாபியில் பேசுறாங்கய்யா.எனக்கு பஞ்சாபி ஏலியன் லாங்குஏஜ் மாதிரி தான் இருக்கு. பிம்பிளிகா பியாபி …நிம்டா குஜ்ராஸ் தெள்மீ …அர்த போஸ்….ஹி ஹி பாஹுபலி எபெக்ட் தான் வருது உங்க தம்பி பேசறதை கேட்டா”என்ற ப்ரீத்தியின் தலையில் காஜல் கொட்டு ஒன்றை வைக்க,ப்ரீத்தி சிணுங்கிய சிணுங்களில் இங்கே அர்ஜுன் இதய துடிப்பு எகிறியது.
“ஸ்பீக்கர்ரில் போடுடீ.அவனுக்கு இங்கிலிஷ் பேசிக் வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சம் புரியும்.பேச தான் வராது.” என்ற காஜல்,”ப்ரீத்தி ஸ்பீக்கர்ரில் போட்டதும்,”என்ன அர்ஜுன் !”என்றாள்.
“என்னவா ?எருமை ….வெளியில் எந்த நிலைமை இருக்குன்னு தெரியுமா?வரும் போது அமைதியா வர மாட்டிங்களா?எவன் எப்படி போனா உங்களுக்கு என்ன “என்று பஞ்சாபியில் பொரிய அவன் குரலில் இருந்த கோபம் ப்ரீத்தியினுள் ஒரு வித நடுக்கத்தை ஏற்ப்டுத்தியது.
பாஷை புரியவில்லை என்றாலும் குரலின் தோனி அவன் கோபத்தை போன் வழியே அவளை அடைந்து இருந்தது.
“நான் என்னடா செய்தேன்?செய்தது எல்லாம் உன் பியாரி,உன் ஓட்டி (மனைவி )ப்ரீத்திஜீ தான்.உள்ளே வந்தவர்களை பார்த்ததும்,தன் கையில் தான் போன் இருக்கு, அதுல பாலன்ஸ் இருக்கு,போலீஸ் எனக்கு மட்டும் தான் தெரியும் என்று கால் போட்டு ஒட்டுமொத்த கமாண்டோ படை இறக்கியது உன் ஆளு.
என்னை ஏன்டா கடிக்கறே? நானே என் புருஷன் வீட்டில் என்ன சொல்லி சமாளிக்கறதுன்னு மண்டையை பிச்சிட்டு இருக்கேன்.இதற்குள் பத்து தடவை போன் பண்ணிட்டார்.ட்ரெயின் லேட்டா வருதுன்னு கப்ஸா விட்டு சமாளிச்சிட்டு இருக்கேன் .
என்னை கொலைக்காரி ஆக்காதே. உன் ஆளு பேசுறதை கேட்டுட்டு தான் இருக்கா.அவ கூடயே பேசிக்கோ.எனக்கும் இதுக்கும் எந்த லிங்க் கிடையாது.”என்றாள் காஜல்
“என்னடி?”என்றாள் காஜலின் முறைப்பை கண்டு
“ஹ்ம்ம் என்ன வெண்ணைடீ….அர்ஜுன் என்னை திட்டறான் நீ செய்த வேலைக்கு.வரும் போது அமைதியா வர மாட்டிங்களா என்று கடிகறான்.நீயாச்சு உன் கர்வாலா (கணவன் )ஆச்சு.” என்றாள் காஜல் எரிச்சலுடன்.
‘கர்வாலா !அப்படி என்றால் என்ன?’என்று ஆஜர் ஆகி கேள்வி கேட்ட மனசாட்சியை தலையில் தட்டி உள்ளே அனுப்பி விட,அது தான் செய்த தவறு என்று புரியாமல் போனது ப்ரீத்திக்கு. ஒருவேளை அப்படி என்றால் என்ன என்று கேட்டு இருக்க வேண்டுமோ !
இல்லவே இல்லாத ஒரு பந்தத்தை அங்கு உருவாக்கி கொண்டு கொண்டு இருந்தார்கள் ப்ரீத்தி ,அர்ஜுனை சுற்றி இருந்தவர்கள். இவள் தான் தனக்கு பார்த்து இருக்கும் பெண் என்று ஏற்கனவே மனதை தொலைத்து இருக்கும் இவன் உண்மை தெரிந்தால் என்ன செய்வான்?வேலைக்கு என்று வந்து இருப்பவள் இவனின் குணம்,அன்பு கண்டு காதலிக்க தொடங்கிய பிறகு உண்மை தெரிய வந்தால் என்ன செய்வாள் ?
அமன்ஜீத் ,ஜெஸ்ஸி உண்மை தெரிய வந்தால் என்ன செய்வார்கள்?நடுவே ரஞ்சித் சாகர் வேறு அட்வான்ஸ்ட் துப்பாக்கியுடன் களம் இறங்கி இருக்கான்.
உண்மை தெரியாத இருவருக்குள்ளும் காதலை ஏற்படுத்தியே தீர்வது என்று காதல் தேவதை குறியாய் இருக்க,இவர்களை பிரித்தே தீர்வது என்று விதியும் முடிவெடுத்து மோதி கொண்டு இருந்தது அமன்ஜீத், ரஞ்சித் சாகர்,ஜெஸ்ஸி,டாலியை வைத்து.
இது எதையும் அறியாத ப்ரீத்தி,அர்ஜுனை கடித்து குதறும் கடுப்பில் இருந்தாள் ப்ரீத்தி,அர்ஜுன் காஜலை கடித்து குதறியதை கேட்ட உடன் .
“ரியல்லி !ரொம்ப சந்தோசம்.ஊருக்கே நல்லது செய்து உங்க தொம்பி, தங்க கம்பி மட்டும் “நீங்க நல்லா இருக்கனோம் நாடு முன்னேற”என்று மத்தவங்க பாராட்டணும்.இதுவே மத்தவங்க செய்தா சர்ஜி ஒத்துக்க மாட்டாங்களா!.
லிஸ்ட் போட்டு அடுக்கினியே உங்க தொம்பி செய்த நல்லதுகளை.இது எல்லாம் அவர் மட்டுமே செய்யணும் என்று கவர்ன்மெண்ட் ஆர்டர் போட்டு இருக்காங்களா என்ன?ஏன் பெண் என்றால் கண்ணுக்கு எதிரே நடக்கும் தப்பை பார்த்துட்டு, எனக்கு என்ன வந்ததுன்னு கண்ணை மூடிட்டு போயிட்டே இருக்கணுமா?”என்று ப்ரீத்தி ஆங்கிலத்தில் பொரிய,அர்ஜுன் காதில் புகை வந்தது .
அவன் மட்டும் அல்ல ,அர்ஜுன் ஸ்பீக்கர்ரில் ஆன் செய்து இருந்ததால் அனைவர்க்கும் அது கேட்டது.
“அப்படி சொல்லவில்லை ப்ரீத்திஜி !எங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யுங்க என்று தான் சொல்றேன்.”என்றான் அர்ஜுன் பஞ்சாபியில்
(உன் மரியாதையில் தீயை வைக்க ….அங்கே அந்த ரஞ்சித் கட்டி பிடி வைத்தியமே செய்துட்டு இருக்கான் .நீ இப்போ தான் ஜி என்றே .உன்னை -என்று கோபத்தில் பொரிந்தது காதல் தேவதை .)
காஜல் அதை மொழி பெயர்க்க,”அப்போ இது வரை நீங்க செய்த எல்லாத்துக்கும் உங்க வீட்டில் இருக்கிறவங்க கிட்டே சொல்லிட்டு தான் செய்தீர்களா?அப்புறம் எதற்கு நீங்க ஜெயில் சென்றதற்கு எல்லாம் உங்க அண்ணா சரண் உங்களை திட்டிட்டே இருக்கார் ?
அவர் சொன்னார் என்பதற்காக எல்லாம் நீங்க நல்லது செய்வதை நிறுத்திடீங்களா என்ன அர்ஜுன்?நான் ஒண்ணும் ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு துப்பாக்கி எடுத்துட்டு ஓடலை ,பேட்மேன் மாதிரி கட்டிடம் விட்டு கட்டிடம் குற்றவாளிகளை துரத்திட்டு போகலை.
இருந்த இடத்தில இருந்து “சட்டம் தன் கடமையை செய்யட்டும் “என்று துப்பு தான் கொடுத்தேன்.இதற்கு உங்க கிட்டே எதற்கு பெர்மிஸ்ஸின் வாங்கணும் என்று சொல்றீங்க?இந்திய நாட்டின் குடிமகளாய் என்னால் செய்ய முடிந்ததை தான் செய்தேன் .”என்றாள் ப்ரீத்தி.
தீப் அதை மொழி பெயர்க்க ,அர்ஜுன் கண்கள் அகல விரிந்தது. ஒரு காலத்தில் சரணிடம் அவன் சொல்லிய வார்த்தைகள் இன்று ப்ரீத்தி வாயிலாய் திரும்ப கேட்பதை கண்டு அவன் உதடுகள் புன்னகையை தத்து எடுத்தது.
இரும்பு மனிதர்களாய் இருக்கும் சரண்,வீரேந்தர் உதட்டில் கூட இதை கேட்டு புன்முறுவல் வந்தது.
“இதுவரை ஒரு இம்சையை வைத்து தான் சமாளித்தோம். அதற்கே ஜெயில் ,கோர்ட் எல்லாம் ஏறியாச்சு.இதுல அமர் எங்கே இருந்துயா அச்சுஅசல் அர்ஜுன்,பெண் பால் போலெ பிடிச்ச.இனி பஞ்சாப் குற்றவாளிகளை கடவுள் தான் காப்பாத்தணும் போல் இருக்கு.”என்றார் வீரேந்தர் பஞ்சாபியில்.
சட்டென்று அனைவரும் சிரித்து விட,காஜல் ப்ரீத்திக்கு அவளின் தாயா /பெரியப்பா சொன்னதை மொழிமாற்றம் செய்ய ,இப்பொழுது சிரிப்பது ப்ரீத்தியின் முறையானது .
“சோ அர்ஜுன் உன்னை போல் நட்டு போல்ட் கழன்ற கேஸ் இன்னொன்றும் இருக்கு போல் இருக்கே.நாடு சுத்தமாயிடும்.” என்றான் சரண் புன்னகையுடன் .
“”சிரித்தது போதும் தாயா.இவங்களை இங்கே இருந்து எப்படியாவது யார் கண்ணிலும் படாமல் அழைத்து போகணும். இவ்வளவு நேரம் இவங்களை இங்கே வைத்து இருப்பதே இவங்க மேல் சந்தேகத்தை கிளப்பும்.இறங்கிய உடன் இவங்களை கார் ஏற்றி அனுப்ப வேண்டியது தானே!”என்றான் அர்ஜுன்.
“இப்படி எல்லாம் நடக்கும் என்று நாங்க மட்டும் கனவு கண்டோமா என்ன?இன்டர்நேஷனல் drug கார்டெல் எதிராக சாட்சியாய் நமது வீட்டு பெண்கள் இருப்பார்கள் என்று நினைத்து பார்த்தோமா?”என்றார் வீரேந்தர் தலையை உலுக்கி கொண்டவராய்
“சாட்சிக்கு ஆள் வேண்டுமே என்று ரஞ்சித் சொன்ன உடன் அவங்களை ஸ்டேஷன் மாஸ்டர் ரூமில் வைக்க முடிவு செய்தோம்.இங்கே எல்லாம் முடிந்ததும் அப்படியே interrogationனுக்கு பேக் செய்துடலாம் இவங்களை என்று ரஞ்சித் சொன்னதை கேட்டோம்.”என்றான் சரண் தலையை கோதியவாறு
“ரொம்ப நல்லா இருக்கு சார் உங்க எண்ணம்.ஐ லைக் இட்.நீங்க ப்ரோமோஷன் வாங்க பலியாடு நாங்க தான் கிடைத்தோமா என்ன ?ஏதோ clue கொடுத்தாங்களா,அதை வைத்து பிடித்தோமோ என்று இல்லாம கேஸ் ஸ்டராங் ஆக்கறேன் என்று எங்களையே தூக்கி baitடா பயன் படுத்துவீங்களா என்ன ?எப்படி எல்லாம் செய்தீங்க கண் முன் நடக்கும் அநியாயத்தை ,குற்றத்தை பற்றி போலீஸ் கிட்டே சொல்ல யாருமே வர மாட்டாங்க.”என்றாள் ப்ரீத்தி கோபத்துடன்.
“ஏய் ரஞ்சித் ,ரஞ்சித் …லைன்னில் இருக்கியா ஊசி போன போண்டா, அடேய் !மங்கூஸ் மண்டைகாரா,தகரடப்பா வாயா ,”என்று ப்ரீத்தி தமிழில் கத்த,ஒன்றும் புரியாமல் என்ன என்று கேட்டவர்களுக்கு ,ரஞ்சித்-ப்ரீத்தியும் பெவிகால் போட்டு ஒட்டிய பிரன்ட்ஸ்,குடும்ப நண்பர்கள் என்று காஜல் கூற ,அர்ஜுன் முகம் சுணங்கியது.
“சொல்லு பேபி.எதுக்கு என் பட்டர் பாப்கார்ன் வெடிக்குது?”என்ற ரஞ்சித் பேச்சு ஏற்க்கனவே எரிய ஆரம்பித்து இருந்த பொறாமை என்ற நெருப்பில் பெட்ரோல் கொட்ட ஆரம்பித்தது .
“டேய் !சொறி வந்த காட்ஜில்லா இது எல்லாம் உன் வேலை தானா?எதுக்கு ஸ்டேஷன் மாஸ்டர் ரூமிற்குள் அனுப்பறே என்று அப்பவே டவுட் பட்டேன்.அப்படியே எங்களை பாக் செய்யாமல் இங்கே எதுக்குடா வைத்து இருக்கே?”என்று பொரிந்து தள்ளினாள் ப்ரீத்தி .
“நீ என்பதால் தான் உன்னை சாட்சி ஆக்க முடிவு செய்தேன் ப்ரீஸ்.உன்னை பத்தி எனக்கு தெரியாதா என்ன?பிற்காலத்தில் கோர்ட் ,சாட்சி என்று ஏற வேண்டி வந்தால் ,யார் மிரட்டினாலும்,துப்பாக்கியையே நெற்றியில் வைத்தாலும் திடமாய் நிற்கும் என் வீர தமிழச்சி,புலியை முறத்தால் அடித்த வீர மாநிலத்தில் பிறந்த உன்னை விட்டால் வேறு யாரு இருக்கா சொல்லு “என்றான் ரஞ்சித்.
“டேய்!லூசு விட்டா விஜய சாந்தி ரேஞ்சுக்கு எனக்கு எதற்கு பில்ட் அப் கொடுக்கறே! நான் வீர தமிழச்சி.புலியை முறத்தில் தொறத்தி அடிச்சேன்.அதை நீ பார்த்தே!நீ இப்போ என் கையில் கிடைச்சே துரத்தி துரத்தி நான் அடிக்கும் அடியில் நீ எலும்பும் தோலுமாய் ஆகிடுவே.கோர்ட் ,கேஸ்ன்னு மக்கள் வரிப்பணத்தை குற்றவாளிகளுக்காக செலவு செய்யும் பெருந்தன்மை உனக்கு இருக்கலாம்.heinous crime என்று சொல்லப்படும் கொடூரமான குற்றம் செய்தவர்களை சூட் அட் சைட் என்று போட்டு தள்ளுவதை விட்டு,எங்களை ஏண்டா பலியாடு ஆக்கி நோகாமல் நொங்கு எடுக்கறே.”என்றாள் ப்ரீத்தி.
“நீ சொல்வதை போல்,சினிமாவில்,கதையில் காட்டுவது போலெ எல்லாம் குருவி சுடுவது போல் எல்லோரையும் போட்டு தள்ள முடியாதும்மா ப்ரீத்தி.”என்றார் வீரேந்தர்.
ரஞ்சித் ப்ரீத்தி உரையாடலை காஜல் மொழி பெயர்த்து இருக்க ,அதை கேட்ட வீரேந்தர் டென்ஷன் ஆகி போனார்.
“நான் எல்லோரையும் போட்டு தள்ள சொல்லவில்லை சார். கொடூர குற்றம் புரிந்தவர்கள் மனிதர்களே இல்லை என்னும் போது அவர்களுக்கு மனிதர்களின் ஹியூமன் ரைட்ஸ் எப்படி கொடுக்க முடியும் சொல்லுங்க?மனசாட்சிக்கு பயந்து ,ஒழுங்காய் குடும்பம் ,குழந்தை ,குட்டி என்று இருக்கும் சாதாரண மனிதனுக்கு இல்லாத ஹியூமன் ரைட்ஸ் ,இந்த கேடு கெட்ட ஜென்மங்களுக்கு எதற்கு?இது சோசியல் மீடியா உலகம் சார்.ஒருத்தன் தன் வீட்டில் தும்மினால் கூட அதை தெரிந்து கொள்ள முடியும்.விசாரணை என்ற பெயரில் இவனுங்களுக்கு எல்லாம் பிரியாணி போடுவது வேஸ்ட் .இவனுங்களையே போட்டு தள்ளணும்.”என்றாள் ப்ரீத்தி.
“சட்டத்தில் அதற்கு எல்லாம் இடம் இல்லை பர்ஜாயீ (தம்பியின் மனைவி ).”என்றான் சரண்.
“delyaed justice denied justice சார்.நியாயம் கிடைக்க இருபது வருடம் ஆனால் அது எதற்கு யூஸ் சொல்லுங்க?.ஒரு பத்து பேரை போட்டு தள்ளுங்க.இந்த மாதிரி குழந்தைங்க கிட்டே நெருங்கவே பயப்படுவானுங்க.”என்றாள் ப்ரீத்தி .
“இது பத்தி எல்லாம் பேசினா வருடம் முழுக்க கூட பேசிட்டே தான் இருக்க வேண்டி வரும்.இப்போதைக்கு vigilantism நிஜ வாழ்க்கைக்கு சரி வருமா இல்லையா என்பது எல்லாம் இப்போ பேசி ஆக போவது ஒன்றும் இல்லை .இவங்களை இப்போ இங்கிருந்து வெளியே அழைத்து போகணும்.அது மட்டும் தான் முக்கியம் .”என்றான் அர்ஜுன்.
“இப்போ எதுவும் செய்ய முடியாது அந்த லேடி ட்ரெயின் விட்டு கீழே இறங்க வெயிட் செய்யறோம் .”என்று ranjith சொல்லி கொண்டு இருக்கும் போதே,”டார்கெட் கெட்டிங் டவுன்.”என்ற vidhyuthஅறிவிப்பு வாக்கி டாகியில் வந்தது.
சட்டென்று அவர்கள் அனைவரின் பார்வை அனைத்தும் அந்த பஸ்ட் கிளாஸ் கோச் வாயிலை பார்க்க அதில் இருந்து இறங்கிய அந்த பெண்மணி அந்த பெண்களை இழுக்காத குறையாய் இழுத்து கொண்டு நடந்தார்.அவர் ஒவ்வொரு பிளாட்போரம் முன்னேற அதுவரை அங்கு நின்ற போலீஸ் ஆஃபீஸ்ர் ஒவ்வொருவராய் அவரை பின் தொடர ஆரம்பித்தனர்.
கருடன் தன் சிறகுகளை மூடுவதை போல் அவரை சுற்றி வளைக்க ஆரம்பித்தனர்.அவரும் மெதுவாக தொப்பி அணிந்து நின்ற வித்யூத் அருகே சென்றார்.அவன் அருகே சென்றவர் ,”மழை ரொம்ப பெய்யுது “என்றார்.
அது கோட் வர்ட் என்பதை அறிந்து திகைத்தார்கள் அங்கு இருந்த போலீஸ்.பதில் வராது போகவே அந்த பெண்மணிக்கு சந்தேகம் அதிகமாகி விட அங்கிருந்து பெண்களை வெகு வேகமாய் இழுத்து கொண்டு நகர முயல,”டேக் ஹர் டவுன்.” என்ற ரஞ்சித் கட்டளை அந்த ஸ்டேஷன் முழுவதும் சிம்ம கர்ஜனையாய் ஒலிக்க ஆரம்பித்தது.
அதை கேட்டு அங்கு இருந்த கமாண்டோ படையினர் முன்னேற துவங்க,தான் கட்டி இருந்த புடவையின் மறைவில் இருந்து துப்பாக்கி ஒன்றை எடுத்த அந்த பெண்,அந்த சிறுமிகளை தனக்கு கேடையமாக பிடித்து கொண்டு
,”வாங்க டா…என்ன இன்னும் ஆளை காணோமே என்று பார்த்தேன்…ஒரு அடி முன்னே வைத்தீங்க இதுகளை போட்டு தள்ளிடுவேன்.”என்று காது கிழிய அவள் கத்திய வேளை ,இன்னொரு கோச்சில் இருந்து பை மாட்டி இறங்கிய ஒருவன் தன் கையில் இருந்த AK 47 வைத்து கமாண்டோ நோக்கி சுட ஆரம்பித்தான்.
அந்த பெண் மட்டுமே இருக்கிறாள் என்று நினைத்து இருந்த பஞ்சாப் போலீசிற்கும்,ரஞ்சித்தின் அதிரடி படையினருக்கும் இந்த புது ஆள் அதிர்ச்சியை அளித்தான்.பத்து நிமிடங்களுக்கு குறையாமல் அங்கு கேட்டது துப்பாக்கி குண்டுகளின் முழக்கமே.
பயணம் தொடரும்…