OVOV 18

அந்த இரவு நேரத்தில் நெஞ்சத்தை உறைய வைக்கும் போர்க்களம் போல் தோற்றம் அளித்தது அந்த பதிண்டா ரயில் நிலையம்.ஏறக்குறைய ரயில் நிலையமே முழுவதும் காலி ஆகி இருந்ததால் பொது பொது மக்களில் ஐந்து பேரை தவிர,வேறு யாரின் உயிரும் போகவில்லை.போலீஸ் கமாண்டோஸ் இருவர்  குண்டடி பட்டு விழுந்தனர்.

மெக்ஸிகோவில் மேஜர் அர்ஜான் குடும்பத்தை போட்டு தள்ளிய குழுவின் ஒரு வேர் தான் இன்று இந்தியாவில் பஞ்சாபிலும், தமிழ்நாட்டிலும் அதே மாதிரியான கட்டமைப்பை தான் நிறுவி கொண்டு இருந்தது.

’பணம் பாதாளம் வரை பாயும்’ என்னும் போது உயர்ந்த பதவியில் இருக்கும் போலீசார்,அரசியல்வாதிகள், தன்ராஜ் போன்ற வணிகர்கள் -பணத்திற்கு,மது ,மாது,பதவி வெறிக்கு அடிமையாகி இருந்த பலரை வைத்து அவன் போதை சாம்ராஜ்யமே உருவாக்கி இருந்தான்.

சமுதாயத்தில் உயர்ந்த பதவியில் இருப்பது அவன் மேல் துளியும் சந்தேகம் வர விடவில்லை.கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் “இவன் “தான் காபோஸ்/CAPOS இந்தியாவின் போதை மருந்து கூட்டத்தின் ஏக போக சக்கரவர்த்தி என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.அப்படி ஒரு திரை மறைவு ஆட்சி செய்து கொண்டு இருந்தான் “அவன்”.

பில்லியன் கணக்கில் பணம் கொட்டும் தொழில்.பணத்தால் அடிப்பது,பணம் தேவை இல்லை என்றால் இந்த சொர்ணாக்கா மாதிரி ஆட்கள் மூலம் பள்ளி செல்லும் பிள்ளைகள் ஆணோ, பெண் குழந்தையோ கடத்தி பாலியல் தொழிலுக்கு சப்ளை செய்வது.

ஆடைகளுக்கு catelogue இருப்பது போல் பள்ளி,கல்லூரிகளின் அருகே நின்று போட்டோ எடுத்து வைப்பது,அதை பார்த்து விட்டு ‘பார்ட்னர்ஸ் ‘கேட்கும் பிள்ளைகளை இலவசமாக ஹோட்டல் டெலிவரி செய்வது,பங்களா பரிசளிப்பது, வெளிநாட்டு வாங்கி கணக்கு ஓபன் செய்து பணத்தை போடுவது,குடும்பத்துடன் சுற்றுலா செல்ல எல்லா செலவையும் ஏற்பது,விரும்பிய இடத்திற்கு ட்ரான்ஸபெர் வாங்கி தருவது,இவர்களின் பிள்ளைகளின் படிப்பு,திருமண செலவை ஏற்பது என்று எந்த விதத்தில் இவன் பார்ட்னர்ஸ் கேட்கும் எதை வேண்டுமானாலும் தர “அவன்” தயங்கியதே இல்லை .

அதற்கு பதில் இவர்கள் செய்ய வேண்டியது இவர்களுக்கு எதிராக யார் நின்றாலும் அவர்களை காட்டி கொடுக்க வேண்டும்.இவர்களுக்கு எதிராக வரும் ரைட் பற்றி தகவல் கொடுக்க வேண்டும்.

இவர்களின் கடைகள்,வர்த்தக நிறுவனங்களில்,மால்களில், உணவகங்களில்  இந்த போதை மருந்தினை மறைத்து வைக்க வேண்டும்.விற்று கொடுக்க முன் வந்தால் அதற்கு தனி கவனிப்பு உண்டு.தன் சாம்ராஜ்யத்தை நிறுவ எந்தவிதமான அடிமட்ட வேலைக்கும் செல்ல “அவன்” தயங்கியதே இல்லை.எதிர்த்து போராடும் சீமா போன்ற அதிகாரிகளை உயிரோடு விட்டதும் இல்லை.

அதன் முதல் கட்டம் தான் அந்த சொர்ணக்காவை காக்க அனுப்பப்பட்ட Sicarios எனப்படும்  கொலையாளி- அமெரிக்கன் 180 என்ற முழுவதும் ஆட்டோமேட்டிக் முறையில் இயங்கும் சப்மெஷின் கன்- ஒரு தடவையில் 275 புல்லட் போட கூடிய ,ஒரு நிமிடத்திற்கு 1200 ரவுண்ட்ஸ் சுட கூடிய அந்த துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான்.

யார் இருந்தால் என்ன செத்தால் என்ன,நாட்டில் ரத்த ஆறே ஓடினால் என்ன என்று இருக்கும் சில பல நல்ல உள்ளங்களின் உதவியால் நாட்டையே அரித்து கொண்டு இருக்கும் “அவன்” கட்டளைக்கு ஏற்ப கொலையாளி  அந்த ரயில் நிலையத்தை யுத்த களமாய் மாற்றி இருந்தான்.ஏறக்குறைய 3000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மருந்துகள் ஆயிற்றே!

போதை மருந்து எடுத்து போகும் நபர் அறியாமல் அவர்கள் பின்னே Sicarios கொலையாளிகள் அனுப்பப்படுவார்கள். அவர்கள் பத்திரமாய் சேரும் இடம் சேரும் வரை அவர்களே அறியாத கண்காணிப்பு உண்டு.இந்த விதமான பாதுகாப்பு அமைப்பை வீரேந்தரோ,ரஞ்சித் எதிர்பார்த்து இருக்கவில்லை.

துணைக்கு வந்த அந்த கொலையாளியும் சுட ஆரம்பித்த பிறகு தான் அங்கு ஒரு கமாண்டோ படையே குவிந்து இருப்பதை கண்டான்.அது வரை ரயில்வே போலீஸ் இருவரை தான் சமாளிக்க வேண்டி இருக்கும் என்று நினைத்து இருந்த அவனுக்கு,தான் அவசர பட்டு விட்டோம் என்பது புரிந்தது போனது.

போன முறை 2700 கோடி அளவிற்கு போதை மருந்து கை மாறும் போது கூட ரஞ்சித் குழு பிடிக்கும் போது சூழ்நிலை சரியில்லை என்பதால் உடன் சென்ற கொலையாளி  கூட்டத்தோடு கூட்டமாய் வெளியேறி விட்டான்.பிடி பட்ட ஆளை சிறைச்சாலையில் வைத்து இவர்கள் போட்டு தள்ளியது வேறு.அப்படி தான் “அவன்” கட்டளை இட்டு இருந்தான். அப்படி ஒருவன் பின்னால் பாதுகாப்பிற்கு இருக்கிறான் என்பதே ரஞ்சித் குழுவிற்கு தெரியாத அளவிற்கு போன முறை நடந்தது.

போலீஸ் எண்ணிக்கை குறைவாய் இருந்தால்,துப்பாக்கிகளை பிரயோகிக்க தயங்க வேண்டாம்.அதுவே எண்ணிக்கை அதிகம் என்றால் கையில் சிக்காமல் அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும்.

ஆனால் இந்த முறை ரஞ்சித் தன் குழுவை மறைவாக வைத்து இருந்ததால் அங்கு இருந்த கமாண்டோ படையின் எண்ணிக்கை  Sicarios  எனப்படும் அந்த கொலையாளி குழு ஆளுக்கு தெரியாமல் போனது.

ப்ரீத்தி எடுத்து அனுப்பிய போட்டோக்களை,விடீயோவை  ஆராய்ந்த  ரஞ்சித் அந்த நான்கு பைகளிலும் இருக்கும் போர்டுகள் மதிப்பு அதிகம் என்பதாலும்,மூன்று பிள்ளைகளின் உயிர் சம்பந்தப்பட்டது என்பதாலும் வழக்கத்தை விட அதிகளவு ஆட்களை ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்தான்

ஒருபுறம் வீரேந்தர் தலைமையில் பஞ்சாப் RPF எனப்படும் ரயில்வே PROTECTION போர்ஸ்,இன்னொரு புறம் ரஞ்சித் கமாண்டோ படை, நடுவே அந்த சொர்ணக்காவும் ,மூன்று பிள்ளைகளும், அந்த துப்பாக்கிக்காரனும் என்று துப்பாக்கி குண்டுகள் வெடித்து கொண்டு இருந்தன.

நடுவே இருந்தது அந்த பிள்ளைகள் மட்டும் அல்ல ஸ்டேஷன் மாஸ்டர் அறையும்,உள்ளே ப்ரீத்தி ,காஜல் ,பெண் போலீஸ் என்று மூன்று பெண்களும் ,இரு குழந்தைகளும் கூட தான் .

தாங்கள் இருந்த அறையின் வாயிலில் அந்த சொர்ணாக்காவின் திமிர் பேச்சை  கேட்டு ஜெர்க் ஆன, இரு பெண்களும் அடுத்த நொடி கதை செவிடாக்கும் துப்பாக்கி குண்டுகள் முழங்குவதை கண்டு உறைந்து போனார்கள்.குழந்தைகளுடன் ஓட முயன்ற காஜலை இழுத்து கீழே தள்ளிய ப்ரீத்தி அவளை முறைத்தாள்.

“துப்பாக்கி சத்தம் கேட்டா அடுத்த கணம் தரையோடு தரையாய் விழணும்.அப்போ தான் உசைன் போல்ட்டுக்கு தங்கச்சி என்று ஓட கூடாது.கீழே விழுந்த உடன் பின்னால் ,முன்னால் பார்த்துட்டு,துப்பாக்கி வெடிக்கும் சத்தம் வரும் திசைக்கு எதிர் திசைக்கு ஊர்ந்தே செல்ல வேண்டும்.நேரே எழுந்து ஒடினே உனக்கு தான் சங்கு.”என்றாள் ப்ரீத்தி.

“எனக்கு தெரியாது.”என்றாள் காஜல் பயத்துடன்.

“உன்னை சொல்லி குத்தம் இல்லை.வெளிநாடுகளில் பள்ளிகளில் தீவிரவாத தாக்குதல்,நெருப்பு பிடித்தால்,பூகம்பம் வந்தால் என்று ட்ரில் இருக்கும்.அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் எப்படி கையாள வேண்டும் என்ற ஒத்திகை பள்ளிகளுக்கு கட்டாயம் உண்டு.தீவிரவாதிகளின் முக்கிய இலக்குகளே இது மாதிரி பொது இடங்கள்,பள்ளிகள்,கல்லுரிகள்,மால் என்னும் போது, இங்கு  அது போன்று ட்ரில் வேண்டும் என்று பெற்றோர்கள் பள்ளிகளை கேட்காதது வெட்கக்கேடே காஜல். பிள்ளைகளின் மார்க்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர்களும்,பள்ளிகளின் அவர்களின் உயிர்களுக்கு மதிப்பு கொடுப்பது இல்லை.

அதே மாதிரி அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை கட்டாயமாக்க பட வேண்டும்.ஒரு ஆக்ட்டிவிட்டி செய்தால் மார்க் என்று சொல்லும் பள்ளிகள் இந்த கலை கற்றால் மட்டுமே மார்க் என்று சொல்வது இல்லை.வாயை பார்க்காதே.அப்படியே குழந்தைகளை அணைத்து கொண்டு தவழ்ந்து வா.ம்ம்ம் சீக்கிரம் வா.”

தொடர்ந்து கேட்ட குண்டுகளின் சத்தம்,அடிபட்ட பொது மக்கள், கமாண்டோஸ்  அலறல் என்று ரத்தத்தை உறைய செய்யும் திக் திக் நொடிகள் அவை.

“எங்கே டீ ?”என்ற காஜலின் வாயில் காத்து மட்டுமே வந்தது.

“எந்நேரமும் அவங்க இந்த அறைக்குள் நுழைய வாய்ப்பு இருக்கு காஜல்.எழுந்திரு.பின்னால் ஒரு பாத்ரூம் இருக்கு அங்கே போகலாம்.ஹர்ரி அப்.”என்று காஜலை இழுக்காத குறையாய் இழுத்து சென்ற ப்ரீத்தி,அந்த பாத்ரூமை கண்களால் ஆராய்ந்து பார்த்தாள்.

அந்த பாத்ரூம் மேல்புறம் பரண் போன்ற அமைப்பும் அதில் தேவை அற்ற பொருள்களும் போட்டு வைக்க பட்டு இருந்தது.

ஒரு பெண் போலீஸ் இவர்கள் உடன் இருந்தாலும்,அவர் கையில் இருந்த துப்பாக்கியுடன் சேர்ந்து அவர் கைகளும் நடுங்கி கொண்டு இருந்தது.அவர் வேலைக்கு சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆகி இருந்தது.கமிஷனர் அலுவலகத்தில் டீ,காபி வாங்கி கொடுத்து,அரட்டை அடித்து கொண்டு இருந்த அவரை ‘இரு பெண்களின் காவலுக்கு’என்று அழைத்து வரும் போதே அவருக்கு அடிவயிறு கலங்கியது.

‘யப்பா!குரு.காப்பாத்துப்பா.’என்று அவர் வேண்டுதலுக்கு அர்த்தம் இல்லாமல் போனது.’ரிவோல்வர் ரீட்டா’ வேலை எல்லாம் வராமல், ACP சார் திரும்பும் வரை துணை என்ற வேலை நினைத்து அவர் சந்தோசபடுவதற்கும் துப்பாக்கி வெகு அருகில் சுடும் சப்தம் கேட்டு உறைந்து நின்றார்.அவரையும் இழுத்து கீழே தள்ளி,சைகையில் தவழ்ந்து வர சொன்னாள் ப்ரீத்தி.

அருகில் இருந்த அறைக்கு சென்று அங்கு இருந்து நாற்காலி ஒன்றை எடுத்து வந்த ப்ரீத்தி,அந்த பெண் போலீசுக்கு மேலே ஏறும் படி சைகை செய்தாள்.அவரும் நாற்காலி மீது ஏறி,தம் பிடித்து மேல ஏற,அவரை ஏற்றி விட்ட ப்ரீத்தி,குழந்தைகள் ஒவ்வொன்றாய் அவரிடம் தூக்கி கொடுக்க வாங்கி கொண்டாள். அடுத்து காஜலை மேலே ஏற உதவினாள்.

காஜல் மேலே ஏறி அமர்ந்து கொள்ள,”காஜல்!குழந்தைங்க அழ போறாங்க.அவங்க வாயில் ரப்பர் வை.துளி சத்தம் கூட வர கூடாது புரிந்ததா.உன் பின்னால் இருக்கும் அட்டை பெட்டிகளை உங்களுக்கு முன்னால் நகர்த்தி வச்சி அதன் பின் மறைந்து உட்காருங்க.”என்றாள் ப்ரீத்தி கீழ் நின்று.

“நீ மேல வா ப்ரீத்தி .”என்றாள் காஜல் .

“நீ பத்திரமாய் இரு காஜல்.ரஞ்சித் போன ஜன்னல் பக்கம் தான் கமாண்டோ ஆஃபீஸ்ர்ஸ் குண்டு அடிபட்டு விழுந்து இருக்காங்க. உதவிக்கு யாரும் வந்தா மாதிரி தெரியலை.பிளட் லாஸ் அதிகமாய் இருக்கும்.போய் உதவினா அவங்க உயிரை காப்பாத்த முடியும்.”கோல்டன் ஹௌர்”என்று மருத்துவத்தில் சொல்லபடும் அதிமுக்கிய தருணம் இது.முதல் உதவி செய்தால் உயிர் பிழைப்பாங்க. என்னால் ஏதாவது செய்ய முடியுதான்னு போய் பார்க்கிறேன்.நீ குழந்தைகளை பார்த்துக்கோ.”என்றாள் ப்ரீத்தி நிதானமாய்.

“லூசா நீ? அங்கே என்ன படமா காட்டறாங்க? மெசின் கன் வச்சி சுடறாங்க. உனக்கு என்ன  ஐயன் மேன் என்று நினைப்பா, இல்லை குண்டு படாமல் இருக்க கேப்டன் அமெரிக்காவா ? சுட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பாங்க.அர்ஜுனுக்கு யாரு பதில் சொல்வது.யம்மா தாயே நீ முதலில் மேல வா. உனக்கு அர்ஜுன் பத்தி தெரியலை தெய்வமே.எனக்கு பேய் ஓடிடுவான்.உனக்கு புண்ணியமாய் போகட்டும்.மேல வந்துடுஉனக்கு ஏதாவது ஒன்று என்றால் அர்ஜுன் தாங்க மாட்டான்.ப்ளீஸ் சொல்வதை கேளு.”என்றாள் காஜல் பயத்துடன்.

“உள்ளே மறைந்து உட்கார் காஜல்.சத்தம் வர கூடாது.”என்ற ப்ரீத்தி காஜல் எவ்வளவோ அழைத்தும் கேட்காமல்,அந்த அறை கதவை மூடி தாள் இட்டு விட்டு, ரஞ்சித் எகிறி குதித்த அந்த உயரமான ஜன்னலை ஒரே ஜம்பில் எகிறி குதித்து வெளியே சென்றாள்.

துப்பாக்கிகள் முழங்கி அப்பொழுது தான் நின்று இருந்தன எங்கும் மனதை உறைய வைக்கும் நிசப்தம்.அந்த இரவில் ஏதோ போர்க்களத்திற்குள் புகுந்த எபெக்ட்.காற்றில் கந்தக வாசம். கூடவே கண்ணீர் புகை குண்டுகளின் நெடி,துப்பாக்கி குண்டுகள் துளைத்து சிதறி இருந்த கண்ணாடிகள் என்று கலவர பூமியாய் காட்சி அளித்தது அந்த ரயில் நிலையம்.

இறந்து கிடந்த பொது மக்களின் உடல்கள்.அவர்கள் உடலில் இருந்து வெளியேறி கொண்டு இருக்கும் ரத்தம் ஒரு சிறு ரத்த ஆற்றினையே உருவாக்கி இருந்தது.

சத்தம் எழுப்பாமல் வெளியே குதித்த ப்ரீத்தி ,மெல்ல பூனை நடை நடந்து அந்த அறை ஒட்டி பின் புறம் நடந்து மற்றொரு புறம் எட்டி பார்த்தாள்.

அந்த ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு சற்று தூரம் தள்ளி இருந்த அறையில் இருந்து இங்கு நடப்பதை,உயிரை கையில் பிடித்து கொண்டு பார்த்து கொண்டு இருந்த அர்ஜுன் கண்கள் காண்பதை நம்ப முடியாமல் விரிந்தன.

“மாமா!”என்றான் குரலே எழும்பாமல் அமர்நாத் சட்டையை இழுத்தவனாய்.

“என்ன அர்ஜுன் “என்றார் அவர் அதற்கு மேல் குரல் உள்ளே சென்றவராய்.

என்கவுண்டர் ,ஸ்கெட்ச்,டாஸ்க் போர்ஸ் மிஷன் எல்லாம் அவர்கள் சினிமாவில் பார்த்ததோடு சரி.இப்பொழுது கண் முன்னே துப்பாக்கிகள் குண்டு மழை பொழிய,கண்ணீர் புகை குண்டுகள் வீசுவதை எல்லாம் கண்டவர் உறைந்து போய் நின்றார்.

“மாமா !ப்ரீத்தி.”என்றான் அர்ஜுன்.

“டேய் இருக்கும் நிலை புரியாம நீ வேற.போய் கூப்பிடலாம் டா. அதற்கு தானே வந்து இருக்கோம்.போகும் போக்கை பார்த்தா நாமளே உயிரோடு வெளியே போவோமான்னு தெரியலை.” என்றார் அவர் புலம்பலாய்.

“மாமா.”என்று சத்தமாய் அர்ஜுன் அழைக்க,”இவன் வேற …என்னடா.”என்று அவனை நோக்கி அவர் திரும்ப, இவன் எதை கை காட்டறான் என்று திரும்பி பார்த்த அமர்நாத்தும் ,தீப்பும் அதிர்ந்து போயினர்.

அர்ஜுன் கை காட்டிய திசையில் ப்ரீத்தி நான்கு காலில் பூனை போல் தவழ்ந்து போய் கொண்டு இருந்தாள்.

அந்த ஸ்டேஷன் மாஸ்டர் அறையின் முன் பக்கம் அந்த சொர்ணாக்கா,அந்த துப்பாக்கிகாரன்,மூன்று பிள்ளைகளை கேடயமாக வைத்து நிற்பதும்,அந்த அறைக்கு ஒரு பக்கத்தில் குண்டடி பட்டு வீரர் இருவர் விழுந்து கிடப்பதும் ,அவர்களை நோக்கி தான் ப்ரீத்தி செல்வதும் என்று கண் முன்னே விரிந்த காட்சியில் மூச்சு விடவும் மறந்து நின்று இருந்தனர் மூவரும் .

இவர்களிடம் எதையோ சொல்ல வந்த அர்ஜுன் பெரியப்பா கூட முகம் வெளுத்து அப்படி எதை இவர்கள் பார்க்கிறார்கள் என்று எட்டி பார்க்க அவரும் திகைத்து நின்றார்.

இவர்கள் மூவரும் இங்கு இருந்து ‘வேண்டாம் ,வேண்டாம்”என்று கைகளை ஆட்டி சைகை காட்ட அதை கவனிக்காத ப்ரீத்தி, அடிபட்டு இருந்த வீரர்களை நோக்கி தவழ்ந்து சென்றாள்.

எந்த நொடியும் முன் பக்கம் நின்று இருக்கும் துப்பாக்கிக்காரன் இந்த புறம் திரும்ப நேரலாம் என்ற கத்தி மேல் நடக்கும் நொடிகள் அவை.

அவர்கள் எது நடக்க கூடாது என்று நினைத்து பயந்தார்களோ அது நடந்தது.அந்த கொலையாளி ப்ரீத்தி இருந்த பக்கம் திரும்பினான்.திரும்பியது அவன் மட்டும் அல்ல.அவனோடு சேர்ந்து அவனின் துப்பாக்கியும் தான்.கண் சிமிட்டும் நிமிடம் மட்டுமே மீதம்.வாழ்வா,சாவா என்ற கடைசி நொடி ப்ரீத்திக்கு அது.

“bebo!…பியாரி…ப்ரீத்தி! நோ நோ…ப்ரீத்தி.”என்று பதை பதைப்போடு,இதயத்தில் எழுந்த வலியோடு,அடிவயிற்றில் இருந்து குரல் எழுப்பி அலறிய அர்ஜுன் குரல் அந்த ட்ரெயின் ஸ்டேஷன் முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்தது.

அந்த அறையில் இருந்த ஜன்னல் வழியே எகிறி வெளியே குதித்து ப்ரீதியிடம் செல்ல முயன்ற அர்ஜுனை பிடித்து இழுப்பதற்குள் அங்கு இருந்தவர்களுக்கு உயிர் போய் உயிர் வந்தது.

அங்கு ப்ரீத்தியின் உயிர்க்கு எந்த வினாடியும் ஆபத்து முற்றி விட்ட நிலை.அடுத்த ரவுண்டு 247 குண்டுகள் கொண்ட அந்த மெஷின் கன் ப்ரீத்தியின் உயிரை குடிக்க அவள் புறம் தன் பார்வையை திருப்பியது.

பயணம் தொடரும்…