OVOV 21

‘சாகும் போது இப்படி தான் தேவதைகள் …. இல்லை …இது தேவதை இல்லை…அழகான தேவகுமாரன்….ஆணழகன் உம்மா கொடுத்து தான் உயிரை மேலே கொண்டு போவார்களா? இதுவரை இப்படி கேள்வி பட்டதே இல்லையே….இதற்காகவே பலமுறை சாகலாம் போல் இருக்கே.’என்ற நினைவோடு அந்த இதழோடு ஐக்கியமாகி போனாள் ப்ரீத்தி.

அவள் கரங்கள் தானாய் எழுந்து அவளை முத்தமிட்டு கொண்டு இருந்த அந்த தேவகுமாரனின் தோள்களை தழுவி கொண்டது.

அர்ஜுன் நிலையோ வார்த்தைகளால்   விவரிக்க முடியாததாய் இருந்தது.

ரஞ்சித்,வீரேந்தர்,சரண் அவர்கள் டீம் உடன் ஸ்டேஷன் மாஸ்டர் அறையை சூழ்ந்து கொள்ள வெளியே செல்ல,வித்யூத் எழுந்து நின்று இருந்தான். ரஞ்சித் கவுண்ட் டவுன் ஆரம்பித்து இருக்க,அர்ஜுன் தான் இருந்த அறையை விட்டு வெளியே எகிறி குதித்து, குட்டிக்கரணம் அடித்து,ஸ்டேஷன் மாஸ்டர் அறையை அடைந்து இருந்தான்.

பாத்ரூம் பக்கம் இருந்த ஜன்னல் வழியாக அவன் உள்ளே குதிப்பதற்கும், வித்யூத் கொலைக்காரனை சாய்ப்பதற்கும், ப்ரீத்தி எழுந்து நின்று போதை மருந்து பாக்கெட்டை தூக்கி அடிப்பதற்கும்,இவன் “ப்ரீத்தி”என்று கத்தி கொண்டு ப்ரீத்தி மீது பாய்வதற்க்கும் மிக சரியாய்  இருந்தது.

ப்ரீத்தி மேல் பாய்ந்து அவளோடு அர்ஜுன்  தரையில் சரிவதற்கும்,சொர்ணாக்கா சுட்ட தோட்டா இவர்களை உரசும் விதமாய் பறந்து சென்று  சுவற்றை துளைப்பதற்கும்,கீழே விழுந்த ப்ரீத்தியின் உதடுகளுடன் இவன் உதடுகள் அறிமுகம் ஆவதற்கும் “கன் டைம்” என்பார்களே அப்படி இருந்தது.

அர்ஜுன் தன் உயிர்க்கு ஆபத்து ஏற்பட்டாலும்,உயிரே போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன் தான் உள்ளே நுழைந்து இருந்தான்.

ஆனால் வினாடிக்கு குறைவான நேரத்தில் வித்யூத் மேல் தோட்டா படாமல் காக்க,ப்ரீத்தி போதை மருந்து பாக்கெட் ஒன்றினை கிழித்து சொர்ணக்காவின் முகத்தில் அடிப்பாள் என்றோ,அதனால் அந்த பெண்ணின் கை ப்ரீத்தியை நோக்கி திரும்பும் என்றோ எதிர் பராதவன், “ப்ரீத்தி”  என்ற அலறலுடன் பாய்ந்து விட்டான்.

அவன் குறி என்னவோ “Rambo” படம் மாதிரி ஆக்ஷன் sequence  போல், ப்ரீத்தியை தோட்டாவின் பாதையில் இருந்து காப்பது ஒன்று தான் என்றாலும், அர்ஜுன் தலைவிதி அதை ரஜினி-சௌந்தர்யா  “அருணாச்சலம்”  படத்தின் “எண்ணெய் சீன்” போல் மாற்றி விட்டது.

ப்ரீதியோடு தரையில் சரிந்தவன், அவள் தலை அடிபட கூடாது என்று இரு கரங்களாலும்  தலையை தாங்கி கொள்ள,அவன் ஆக்ஷன்னுக்கு எதிர்வினையாக ப்ரீத்தி தன்னிச்சையாய் தலையை திருப்ப,அவன் இதழ்கள் இளைப்பாறும் நந்தவனமாகி போனது ப்ரீத்தியின் உதடுகள்.

அந்த ரண களத்திலேயும் அர்ஜுன் ப்ரீத்திக்குள் ‘சம்திங் சம்திங் ‘ ஏற்படுத்தாமல் விட மாட்டேன் என்று காதல் தேவதை “தீயாய் வேலை”செய்ய, அங்கு எழுந்த தோட்டாக்களின் உறுமல்கள் ,அலறல்கள்,கட்டளைகள்,   இவை எதுவுமே தனி உலகில் சஞ்சரித்து கொண்டு இருந்த அவர்களுக்கு கேட்கவே இல்லை.

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்.

இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும் என்ற திருக்குறளின் வார்த்தைக்கு வேறு அர்த்தம் கற்பிக்க அவள் இதழ் என்னும்  அமிழ்த சாகரத்தில் மூழ்கி கொண்டு இருந்தான்.

பெவிகால் கூட இல்லை -பெவிகுய்க் போடாத குறையாய் அவள் இதழை விட்டு பிரிவேனா என்று அர்ஜுன் அங்கே தன்னை மறந்து, அவளுடன் பால்வெளியை தாண்டி,திருவள்ளுவரின் இன்பத்து பாலில் திளைத்து கொண்டு இருந்தான்.

அவளுக்கு என்னவோ,ஏதோ என்று எழுந்த பயம் மறைந்த அந்த கணம் அவனுள் இருந்த “காதலன் “விழித்து எழுந்து, தன் காதல் நோய்க்கான தேடலை அவளிடம் செய்து கொண்டு இருந்தான்.

தன்னவளின் முதல் சபரிசம்,உதடுகள் மூலமாய் முதல் கூடு விட்டு கூடு பாயும் மந்திரம் அவனை பித்தாகி கொண்டு இருந்தது.

அவன் தொடுகையில் சிலிர்த்த அவள் பூவுடல், பெண்மையின் மென்மை, அந்த மென்மையின் கர்வங்கள்  அவனை திக்குமுக்காட வைத்து கொண்டு இருந்தது.

அதற்குள் சொர்ணக்காவின் காலில் சுட்டு அவரை தரையில் வீழ்த்தி, கதவை முழுதாய் உடைத்து கொண்டு ரஞ்சித், வீரேந்தர், சரண் முன்புறம் உள்ளே வந்து சொர்ணக்காவை சுற்றி வளைத்தனர். அர்ஜுன் வந்த வழியாக தீப்,அமர்நாத் அர்ஜுனை தேடி வந்தார்கள்.

அந்த அறையின் முன்புறம் வந்த ரஞ்சித்க்கும் மற்றவர்களுக்கும் ,ப்ரீத்தி,அர்ஜுன் டேபிள் திரையின் மறைவில்   இருந்த நிலைமை தெரியாமல் இருக்க, ஜன்னல் வழியாக உள்ளே வந்த தீப்,அமர்நாத் கண் முன்னே நடப்பதை நம்ப முடியாதவர்களாய்  திகைத்து நின்றார்கள்.

“டேய்…என்னடா நடக்குது இங்கே ?”என்று அதிர்ந்தவராய் கேட்டார் அமர்நாத்.

“ஷ் …அண்ணா அண்ணிக்கு ஏதாவது காயம் பட்டு இருக்கான்னு ஆராய்ச்சி செய்துட்டு இருக்கார். டிஸ்டர்ப் செய்யாதீங்க.”என்றான் தீப் அடக்கப்பட்ட புன்னகையுடன் திரும்பி நின்று .

“நல்லா செய்யறாண்டா உங்க அண்ணன் ஆராய்ச்சி…..”என்று   தலையில் அடித்து கொண்டார் அமர்நாத்.

“பின்னே இல்லையா என்ன? ph.d கூட செய்வார்.’காதல் மன்னன்’ கூட இல்லை ‘காதல் சக்கரவர்த்தி’ என்ற பட்டம் கொடுக்கும் அளவிற்கு அந்த மன்மதனுக்கே குருஜி அர்ஜுன்ஜி தான். .ரொமான்ஸ்க்கு டிக்ஷனரி. பாருங்க கிடைத்த கேப்பில் புல்டோசர்ரே ஓட்டிட்டு இருக்கார்.” என்ற தீபை கொலை வெறியுடன் பார்த்தார் அமர்நாத்.

” டேய் உன்னை …இது கடவுளுக்கே அடுக்காது சொல்லிட்டேன்.போய் அவனை எழுப்புடா”என்று அமர்நாத் அவனை தலையில் கொட்ட

“இருங்க மாமா…இதுல ஒண்ணை கவனித்தீர்களா?” என்றான் தீப் முகத்தை வெகு சீரியஸ்சாக வைத்து கொண்டு .

‘பயபுள்ள ஏதோ தத்துவத்தை,உலக தர்மத்தை கௌதம புத்தர் ரேஞ்சுக்கு சொல்ல போறான் போல் இருக்கே’ என்ற எண்ணத்துடன் அவன் அருகில் சென்ற அமர்நாத், “சொல்லு தீப்”என்றார் அமர்நாத்

“ஒருத்தங்க கிட்டே இன்ட்ரோ ஆகணும் என்றால் என்ன செய்வீங்க ஒரு “ஹாய்”, “ஹலோ” இல்லைனா ஒரு “ஹாண்ட் ஷேக்”   தான் செய்வாங்க …ஆனா என் அண்ணா “லிப் ஷேக்” செய்து புது ட்ரெண்ட் உருவாக்கி கொண்டு இருக்கார் அவரை டிஸ்டர்ப் செய்யாதீங்க மாமா.”என்று உயர்ந்த தத்துவ கருத்துக்களை அள்ளி விட்ட தீபை முறைத்த அமர்நாத்

“போகும் போக்கை பார்த்தால் இவனுங்க நம்மை வேற மாமா ஆகிடுவாங்க போல் இருக்கே.”என்று வாய் விட்டே புலம்பி விட்டார் .

யார் யாரை சுட்டால் என்ன,அந்த அறையை விட்டு அப்புறப்படுத்தினால் என்ன,புலம்பினால் என்ன,’என் காது கேட்காதுன்னு” தீப் சொன்னது போல் “முத்த ஆராய்ச்சியில்” Ph.d செய்யாமல் நிறுத்த மாட்டேன் என்ற கொள்கையுடன் மீண்டும் மீண்டும் மீண்டும் அந்த தேனை பருகி கொண்டு இருந்தான் அர்ஜுன்.

அதற்குள் பூஜை வேலை கரடியாய் ரஞ்சித் குரல் பதற்றத்துடன், “ப்ரீத்தி ….ப்ரீத்தி ….ப்ரீத்தி “என்று கத்துவது கேட்க, முதலில் தன்னை மீட்டு கொண்ட அர்ஜுன், ப்ரீத்தி மேல் இருந்து எழுந்து அருகில் அமர்ந்தவன் அவளை கைகளில் அள்ளி கொண்டு,

“Kī tusī ṭhīka hō/உனக்கு ஒன்றும் இல்லை தானே ப்ரீத்தி ?”என்றான்  ப்ரீத்தியை கண்கள்   கொண்டு ஆராய்ந்தவனாய்.

(எவ்வளவு சீக்கிரம் கேட்டுட்டே கண்ணா)  

பதில் சொல்லும் பாஷையை மறந்தவளாய் அர்ஜுனை வைத்த கண் வாங்காமல், அவன் கை வளைவில் ஏதோ எக்ஸ்கர்சன் வந்தது மாதிரி சாய்ந்து அமர்ந்து அவனை பார்த்து புன்னகைக்க, அர்ஜுனின் இதயம் ஒருமுறை நின்று பிறகே துடிக்க ஆரம்பித்தது.

ஏற்கனவே சென்டிமீட்டர் அளவுக்கு தான் இடைவெளி இருக்க அதை இன்ச்  அளவிற்கு மாற்றிய ப்ரீத்தி, “பேச்சு வார்த்தைக்கு ” பதில் புதிதாய் “இதழ் யுத்தம்” ஆரம்பிப்பது போல்  அவனை நெருங்கி அவனை உற்று பார்த்து, ஒரு விரல் கொண்டு அவன் கன்னத்து குழியில் கை வைத்து அழுத்த அர்ஜுன் மூச்சு விடுவதையே நிறுத்தி விட்டான்.

“யு ….you …you  உனக்கு மனசுக்குள்ள கமல் ஹாசன் என்று நினைப்பா? “என்று தமிழில் குழலராய் கேட்க அவள் கேட்கும் மொழி புரியாது என்பது ஒரு புறம் இருக்க,அர்ஜுன் அதை கவனிக்கவே இல்லை.

அவன் கவனம் முழுவதும் தான் அவள் மேலயே அதுவும் ரோஜா,தேன் ,ஸ்ட்ராபெர்ரி,அமிழ்தம் எல்லாவற்றையும் உள் அடக்கிய அவள் இதழை மட்டுமே கவனித்து கொண்டு இருந்ததே.

“இவன் பேர் அர்ஜுன் தானே ….ப்ரீத்தி எதுக்கு அவனை கமல் ஹாசன் என்று சொல்றா?”என்று மிக முக்கிய டவுட் ஒன்றை அமர்நாத் எழுப்ப கடுப்பானான் தீப்.

“அது ஓல்ட் …இப்போ லேட்டஸ்ட் ட்ரெண்ட் விஜய் தேவர்கொண்டா தான் …யு ஹிம்? யு சி ஹிஸ் மூவி டூ மச்?” என்று ப்ரீத்தி கேட்க எழுந்த சிரிப்பை தீப் அடக்கி கொண்டான்.

“என்னடா முதலில் கமல் என்று சொன்னா ….இப்போ ஏதோ விஜய் என்று சொல்றா ….கீழே விழுந்ததில் மூளை குழம்பி போச்சா ?”என்றார் அமர்நாத் .

“பாபி/அண்ணி  வீர்ஜியை கலாய்ச்சிட்டு இருக்காங்க மாமா. இதோ பாருங்க.”கூகிள் ஆண்டவர் உதவியை நாட அது  கமல்,விஜய் தேவர்கொண்டா “லிப் லாக்” சீன்பக்கம் பக்கமாய்  காட்ட அமர்நாத் திரு திருவென விழித்தார்.

“இவங்க படத்தை எல்லாம் ஓவர்ரா பார்ப்பீங்களா… என்று கேட்டு ஓட்டிட்டு இருக்காங்க மாமா.”என்றான் தீப்.

“யாரை கேட்டு நீ …யு மேன் என்னை இங்கே தொட்டே …இது என் லிப்ஸ் …பார்க்க அப்படியே கிரேக்க சிற்பம் மாதிரி இருக்க  (ஐந்து விரல் காட்டி ) 6 பேக்ஸ் arnold போல் வைத்து இருந்தீன்னா, பார்க்க மான்லியா இருந்தா இப்படி உம்மா கொடுப்பியா சொல்லு …”  என்று தமிழில் உளறி கொட்ட முழுதாய் புரியவில்லை என்றாலும் ,”கிரீக்,6 பேக்ஸ் arnold, மேன்லி என்ற வார்த்தை எல்லாம் ஓரளவு புரிய என்ன சொல்கிறாள் என்பதும் அவர்களுக்கு புரிந்தது.

அர்ஜுன் முகத்தில் மிக அழகாய் ஒரு மந்தகாச புன்முறுவல் எழுந்தது. தன் மனதுக்கு இனியவள் தன்னை கவனித்ததோடு இல்லாமல் தன்னை ,”கிரேக்க சிற்பம்,6 பேக் ஆர்னோல்ட், மேன்லி என்று புகழ்ந்தால் எந்த காதலனுக்கு தான் பிடிக்காது?. தினம் யோகா,உடல் பயிற்சி,கடின உழைப்பு அவனை செதுக்கி வைத்து இருந்தது.

“முகத்தை பாரு க்ரீன் சாண்ட், அமுல் பேபி, மைதா மாவு மூஞ்சி இதை வச்சிட்டு பீரங்கிக்கு அண்ணன் மாதிரி என் மேல் விழுந்து வைக்கறீயே …உனக்கு என்ன என்ன அனகோண்டாக்கு கசின் பிரதர் என்ற நினைப்பா? அப்படியே இழுத்து வச்சி நாலு இச்சு வைத்தேன்ன்னு வச்சிக்க lkg புள்ள நீ பயந்துடுவே…” என்று போதை மருந்தின் தாக்கத்தில் ஏதோ உளறி கொண்டு இருந்தாள் .

கண்ட்ரோல் இல்லாமல் உளறி கொட்டிட்டு இருக்கோம் என்று புரிந்தாலும்,அவளால் நிறுத்த முடியவில்லை. அந்த மயக்க நிலையிலும் அவன் தன்னை எல்லை மீறி அணைத்து இருக்கிறான்,முத்தம் இட்டு இருக்கிறான் என்பது புரிந்தாலும் அதனால் வர வேண்டிய கோபம் வராமல் போக அதன் காரணமும் அவளுக்கு புரியாமல் போனது .

தங்க மகன் இங்கு சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்

ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்

கட்டும் ஆடை என் காதலன் கண்டதும்  நழுவியதே

வெட்க தாழ்ப்பாள் அது  வேந்தனை கண்டதும் விலகியதே 

ரத்த தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா

என்று சத்தமாய் அவள் பாட அதை கேட்டு எட்டி பார்த்த ரஞ்சித் அவளை நோக்கி வந்தவன் அவளை அர்ஜுன் கைகளில் இருந்து பிரித்து, தன்புறம் திருப்பி விட,கை பொம்மை தட்டி பறிக்க பட்டால் குழந்தை முகம் எப்படி சுணங்கி போகுமோ அப்படி மாறியது அர்ஜுனுக்கு.

ப்ரீத்தி தள்ளாட அவள் கன்னத்தை மெல்ல தட்டிய ரஞ்சித்,”ஸ்வீட்டி …ஆர் யு ஒகே ….”என்று பதட்டத்துடன் கேட்க கோபத்தில் சிவந்தது அர்ஜுன் முகம்.

“டேய்…..சிங்கம் ……..”என்றவள் அவனுக்கு ஒரு சலூட் வைத்து, “ஒரு டவுட் சிங்கம் …..நீ ஏன் இவளோ அ-சிங்கமாய் இருக்கே” என்று கலாய்க்க ரஞ்சித் முகமும் போன போக்கை பார்த்த அர்ஜுனுக்கு அவனை ஏதோ கலாய்த்து இருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது .

“டேய் சிங்கம் சூர்யா …..நான் உன் கிட்டே சொல்லி இருக்கேன் ல என் ட்ரீம் பாய் …ஹ்ம்ம் மேன் …இங்கே தான் டா இருக்கான் ………..ஷ் யாருன்னு சொல்ல மாட்டேன் …சொல்லவே மாட்டேன் ……..”என்று உளறியவள் ,

கிரேக்க வீரனோ, கிரேக்க வீரனோ

கிரேக்க வீரனோ ,என் ராஜ ராஜனோ

கண்ணுக்குளே இன்னும் இருக்கானே

பிலிம் ஸ்டார்ரூம்  , கெத்து வீரரும்

உற்று பார்க்கும் இளைஞ்சன் அவன் தானே

ட்ரீம் பாய் …

ரூபமோ சந்திரன் பார்வையோ சூரியன்

ட்ரீம் பாய் …

ஊர் எது பேர் எது சொல்லவே  இல்லையே

என்ன சொல்லுவேன் எப்படி சொல்லுவேன்

சிகரம் போல் சிறந்தவன் என் மன்னனே 

இமைகள் மூடினால் ,விழிகள் திரும்பினால்

எதிரில் வந்து அவன் தான் நிக்கிறானே

எவ்வளவோ ஆசையாய் இருக்குதே நேரினில் பார்த்திட

யாரோ அவனிடம் சொல்வதுஎன்னையே சந்திக்க 

நடையில் உள்ள வீரம் பார்த்து சிங்கம் கூட விலகி போகும்

சிரிப்பில் உள்ள அழகை பார்த்து வாடைக்காற்றும் உருகி போகும்

ஸ்டைலிலிலே அவனை போல யாரும் இல்லை

என்னை விரும்பிய ஆண்கள் யாரையும் எனக்கு பிடிக்கவில்லையே வாட் டு டூ ?

நான் விரும்பிய ஒரே ஆண்மகன் இங்கு தான் எங்கேயோ இருக்கானே

என்றுஹை பிட்சில் அர்ஜுனை பார்த்தவாறே பாடி வேறு வைத்தாள்.

பாடல் என்ன சொல்கிறது என்று புரியாவிட்டாலும் அவளின் முக பாவம், சைகை ,குரலின் குழைவு அர்ஜுனுக்கு தன்னை பத்தி தான் ஏதோ பாடுகிறாள் என்பது மட்டும் புரிந்தது.மந்தகாசமான புன்னகை முகத்தை மேலும் முகத்தை ஒளிர செய்ய ,தன் டிரேட் மார்க் தலை கோதி விட்டவனின் முகம் சிவந்து போனது.

வீரேந்தர், சரண்  சொர்ணக்காவை ஹாஸ்பிடலுக்கு அனுப்பி , அவளுடன் வந்த மூன்று பெண்களை போலீஸ் ஸ்டேஷன்னுக்கு விசாரணைக்கு,காஜல் குழந்தைகளை முஃடியில் இருந்த பெண் போலீஸ் உடன் வீட்டுக்கு அனுப்பி விட்டு ப்ரீத்தியை காண உள்ளே வந்தவர்கள் அவள் இருக்கும்  நிலையை கண்டு அதிர்ந்தார்கள்.

உள்ளே வந்த தன் ஆட்களிடம் ரஞ்சித் ஏதோ சைகை காட்ட,வெளியே நின்று இருந்த அவர்கள் கார் நோக்கி ஓடியவன் மெடிக்கல் கிட் ஒன்றை எடுத்து வந்தான்.

அதற்குள் போலீஸ் உடையில் அருகே வந்த வீரேந்தர்,சரண்னை கண்டவள்,”டேய் சிங்கம் …இது யார்டா தங்க பதக்கம் சிவாஜி ,வேட்டையாடு விளையாடு கமல் மாதிரி.?”என்று அவன் தோளில் சாய அர்ஜுன் பிபி எக்குத்தப்பாய் எகிற ஆரம்பித்தது.

ஒரே சமயத்தில் வானத்திலும் அகல பாதாளத்திலும் அர்ஜுனை தள்ளி தள்ளி விளையாடி கொண்டு இருந்தாள் ப்ரீத்தி .ரஞ்சித் அவளிடம் பழகும் விதமும், ஒரே மொழி அவர்கள் இருவரையும் இணைப்பதை கண்டு பொறாமை எக்குத்தப்பாய் எகிற ஆரம்பித்தது.

“ஏதோ கருகும் வாசனை வரலை தீப் ?”என்றார் அமர்நாத்

சட்டென்று ப்ரீத்தி அருகே அமர்ந்தவாறே தலையை மட்டும் திருப்பி அவரை ஒரு நொடி இமைக்காமல் பார்த்த அர்ஜுன் பார்வையை கண்டவர் அசடு வழிந்தார்.

“தேவையா மாமா உங்களுக்கு இது?என்றான் தீப்

“என்னடா செய்யறது உங்க அண்ணன் விடலை பையன் மாதிரி அந்த தமிழ்நாட்டுகாரனை பார்த்து பொங்கிட்டு இருக்கானே ….டன் கணக்கில் ஜெலுசில் தான் வாங்கி வைக்கணும் போல் இருக்கு.”என்றவரை பார்த்து பல்லை கடித்தான் தீப்.

அதற்குள் மெடிக்கல் கிட் வந்து விட,இவர்கள் நார்க்கோடிக்ஸ் பிரிவு என்பதால் எந்த நேரம் எந்த ரெய்டு நடக்கும் போது “ஓவெர்டோஸ்” மரணம் நடக்கும் என்பது சொல்லமுடியாததால் எப்பொழுதும் கைவசம் ஆன்டி நார்க்கோடிக்ஸ் மருந்துகள் இவர்களிடம் இருக்கும்.

அந்த மெடிக்கல் கிட் வந்து விட, அதை திறந்த ரஞ்சித் அதில் இருந்து opioid எனப்படும் போதை மருந்துகளான oxycodone, hydrocodone, fentanyl, and tramadol, heroin போன்றவற்றினை எடுத்து கொண்டால் ஏற்படும் விளைவுகளை போக்க கொடுக்கப்படும் naloxone,NARCAN,Evzio எனப்படும் மருந்தினை இன்ஜெக்ஷன் மூலம் ப்ரீத்தியின் புஜத்தில் செலுத்தினான்.

opioid எனப்படும் வகைகள் அதிகமாய் விபத்து,ஸ்போர்ட்ஸ் இஞ்சூரி,ஆபரேஷன் போன்ற சமயத்தில்   வலிநிவாரணியாக பயன்படுபவை.வலி மறக்க என்று இவை அதிகளவில் பயன் படுத்தும் போது உயிருக்கே எமனாய் மாறி விடுகிறது .

இவை அதிகமாய் மூளை சிந்தனை,சுவாசத்தை கட்டுப்படுத்தும் பகுதியை பாதிப்பதால் வலியே இல்லாத பிரேமை,வானத்தில் பறப்பது போன்ற உணர்வு,சுயகட்டுப்பாடு இழத்தல் எல்லாம் நடக்கும் .

naloxen ஊசி போடப்பட்ட உடன் 1-5 நிமிடங்களில் செயல் பட ஆரம்பிக்கும்.20-90 நிமிடங்களுக்கு இதன் வீரியம் இருக்கும்.அதன் பிறகு செகண்ட் டோஸ்,மருத்துவ கண்காணிப்பு தேவை படும்.

மருந்துகள் போட்டாலும் அவ்வளவு சுலபத்தில் போதை பொருட்கள் உடலை விட்டு வெளியேறாது என்பதால் மருத்துவ கண்காணிப்பு தேவை படும்.மருந்து உள்ளே சென்ற உடன் எரிச்சல்,கோபம் ,வாந்தி,பேதி எல்லாம்,அதிகளவு தாகம், வியர்த்து கொட்டுதல் எல்லாம் ஏற்படும்.

ரஞ்சித் கை காட்ட வளைந்து நெளிந்து ஆடி கொண்டு இருந்த ப்ரீத்தியை அழுத்தி பிடித்து ஆடாமல்,அசையாமல் பிடித்து கொண்டான் அர்ஜுன்.

ரஞ்சித் ஊசி கையில் போட அவள் கத்திய கத்தில் அர்ஜுன் காது கொய்ங் என்ற சவுண்ட் தான் வந்தது.

“ஊசி …….எவளோ பெரிய ஊசி ……….ஊசி போட்டாங்க ….டேய் ரஞ்சித் குரங்கே …”என்று அவனை மொத்தி எடுத்தாள் ப்ரீத்தி.

மேகத்தில் பார்ப்பது போல், குழப்பான மனநிலையில், கண்ட்ரோல் எல்லாம் இழந்து

தம் மருதம் மித்து ஜாயே கம்

,போலே சுப ஷியாம் …..     

ஹரே கிருஷ்ணா ஹரே ராம்.

என்று பாடி கொண்டு இருந்தவளை அர்ஜுன் அமுக்கி பிடிக்க, ரஞ்சித் ஊசியினை போட  “withdrawal symptom”ஆரம்பமாக   அவளை தாங்கி கொண்டான் அர்ஜுன்.

ப்ரீத்தியின் நிலை கண்டு கலங்கி நின்ற ரஞ்சித் இடம் அவன் ஆட்கள்,”சார் CM இஸ் வைட்டிங் பார் debriefing/ரிப்போர்ட் கேட்டு முதலமைச்சர் காத்து இருக்கிறார்.”என்று சொல்ல ப்ரீத்தியை அந்த நிலையில் விட்டு செல்ல அவனால் முடியவில்லை.

அவன் தயங்குவதை கண்ட வீரேந்தர்,”சார் யு கோ ஹெட்/நீங்க கிளம்புங்க.எங்க வீட்டு பெண்.நாங்க பார்த்துக்க மாட்டோமா.தயங்காதீங்க.”என்றார்

“சார் உங்க அனுபவம் என் வயசு சார். பார்மாலிட்டி எல்லாம் வேண்டாம். ஜஸ்ட் கால் மீ ரஞ்சித்.”என்ற ரஞ்சித் சாகர்,”பார்த்துக்கோங்க சார்.”என்றான்

அது அவசியமே இல்லை என்பது அவனுக்கே தெரிந்து தான் இருந்தது.மிக பெரிய அதிகாரியான வீரேந்தர், சரண் ப்ரீத்திக்கு விசிறி கொண்டு இருக்க,தீப் ஓடி சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, அமர்நாத் கைக்குட்டை வைத்து அவள் நெற்றி வியர்வையை துடைத்து கொண்டு இருக்க,அர்ஜுனோ ஒரு படி மேல் சென்று அவள் எடுத்து கொண்டு இருந்த வாந்தியினை கைகளால் ஏந்தி கொண்டு இருந்தான்.

ப்ரீத்தி போதை மருந்து கடத்தல் பற்றி தகவல் கொடுத்த உடனே,அவள் ஏன் திருமணத்தை நிறுத்தி விட்டு பஞ்சாப் வருகிறாள் என்பதை அறிந்த உடன் அவன் டீம் அர்ஜுன் குடும்பத்தை பற்றி ஒட்டுமொத்த தகவல் சேகரித்து விட்டார்கள்.

அதிலும் அர்ஜுன் என்ற மனிதனுக்கு ரஞ்சித் விசிறி என்று சொல்லும் அளவுக்கு ஆகி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

தனி ஒரு மனிதன் நினைத்தால் கூட மற்றவரின் வாழ்வில் மாற்றத்தினை ஏற்படுத்தி விட முடியும் என்று செயலால் நிரூபித்து கொண்டு இருந்தான் அர்ஜுன். குறைந்த செல்வதில் lkg முதல் காலேஜ் வரை தரமான கல்வி நிறுவனம்,கைம்பெண் மறு திருமணம்,பெண்கள்,குழந்தைகளுக்கான இலவச கராத்தே ஸ்கூல்,பதிண்டா சர்வதேச எல்லை கோட்டுக்கு அருகே இருப்பதால் இறந்த ஆர்மி வீரர்களின் குடும்பத்திற்கான டொனேஷன் ஆப் இந்திய ராணுவத்துடன் இணைந்து நடத்துதல்,ரத்த தான முகாம் ,ஆர்கன் டொனேஷன் ,இயற்கை விவசாய மேலாண்மை,போதை மறுவாழ்வு மையம் என்று வெளியே தெரிந்தது இவை மட்டும் தான்.

வெளியே தெரியாமல் அர்ஜுன் செய்து கொண்டு இருக்கும் நல்ல காரியங்களின் பட்டியல் இன்னும் வெகு நீளம் என்பது ரஞ்சித்துக்கு தெரிந்தே இருந்தது.

அர்ஜுன் என்ற ஒருவன் அந்த மாநிலம் முழுவதையும் தத்து எடுத்து இருந்தான் என்று சொன்னால் கூட மிகையாகாது தான்.

பஞ்சாபின் ஒவ்வொரு ஊரிலும் எந்த மூலையில் மக்களுக்கு எது தேவை என்றாலும் அங்கு உள்ள அர்ஜுனின்  “குரு கோவிந்த் -பகத் சிங் ” அறக்கட்டளை  முன்னால் நின்று செய்து கொண்டு இருக்கிறது என்ற தகவலும் ரஞ்சித்துக்கு தெரியும்.

“அறக்கட்டளை” என்ற பெயரில் மற்றவர்களிடம் இருந்து பணம் வசூலித்து விட்டு,சொந்த பணத்தில் தான் தான் என்னவோ உலகத்தையே காப்பது போல் ஸீன் போட்டு அரசியலில் குதிக்க நினைக்கும் பலரை போல் இல்லை.

பாதிக்கு பாதி அர்ஜுன் குடும்பத்தின் சொந்த பணம்,சொந்த நிலம்,குடும்பத்தின் 80% வருமானம் மட்டுமே பயன்படுத்த படுகிறது. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று நினைக்க வைக்கும் கதைகளிலும் ,சினிமாவில் மட்டுமே காட்ட படும் உன்னத மனிதர்கள் இன்று தன் முன்னே நிஜத்தில் என்ற பெருமை ரஞ்சித் முகத்தில் வெளிப்பட்டது.

“ஒகே சார் .ஐ டேக் மை லீவ்.”என்ற ரஞ்சித் ,ப்ரீத்தி அருகே மீண்டும் அமர்ந்து,”ஸ்வீட்டி டேக் கேர் டா.நிச்சயம் வந்து பார்க்கிறேன்.”என்று அவள் கை பிடித்து சொல்ல அர்ஜுன் தோளில் தலை வைத்து சாய்த்து மயக்கத்தை சமாளித்து கொண்டு இருந்த ப்ரீத்தி,”கிளம்புடா இம்சை சிங்கம்.”என்றாள் .

“பை ஸ்வீட்டி.”என்று ரஞ்சித் கிளம்ப அவனுடன் வாசல் வரை வீரேந்தர்,சரண் வர,”சார் யு கேர்ரி ஆன் …”என்றான் ரஞ்சித் அவஸ்தையுடன் -அவ்வளவு பெரிய அதிகாரி தன்னை அனுப்புவதற்காக வாசல் வரை வருவது அவனால் ஏற்க முடியாத ஒன்றாய் இருந்தது .

“ப்ளீஸ் ரஞ்சித்.எங்க ப்ரீத்தியே உங்களை “சிங்கம்”என்று அஜய் தேவ்கன் நடித்த படம் போல் போற்றி புகழ்ந்துட்டு இருக்காங்க. நாங்களும் உங்க திறமை,சின்சரிட்டி ,இந்த துறை மீது உங்களுக்கு இருக்கும் பற்று நேரிடையாக பார்த்தோம்.”என்றார் வீரேந்தர் அவன் தோளில் பேய் அறை ஒன்றை கொடுத்து.

“எஸ் யெஸ் …ஐ ஆல்சோ சா தி பிலிம் ..டமில் மொழில ஹிஸ் நேம் …சூரி ….நோ சூர்யா ஆக்டேட் இல்லை …சிங்கம் 1,2,3?”என்றான் சரண் .

தன் தலையில் கை வைத்து பரிதமாய் நின்ற ரஞ்சித் முகம் போன போக்கை பார்த்து வீரேந்தர்,சரண் இருவரும் முழிக்க,”வாட் ரஞ்சித் ?”என்றார் வீரேந்தர் .

“நீங்க சொல்ற சிங்கம் சூர்யா,அஜய் தேவ்கன் சிங்கம் இல்லை ப்ரீத்தி சொல்வது.”என்று இழுத்தவன், தன் மொபைல் எடுத்து கூகிள் ஆன் செய்து எதையோ தேடி ஒரு விடியோவை ஒட்டி காட்ட அதில் ரஜினி காந்த் வாய்ஸ்சில்

“தி நேம் இஸ் சிங்கம் இன்ஸ்பெக்டர் சிங்கம்    ….

ஸ்டாப் இந்த நேம் ஆப் லா ….

ஹாவ் நோ பியர் வென் சிங்கம் இஸ் ஹியர்”

என்று ஒரு கார்ட்டூன் கேரக்டர் பேசி கொண்டு இருக்க,

“இந்த சிங்கத்தை வைத்து தான் என்னை ஓட்டிட்டு இருக்கா.” என்று சொல்ல திகைத்து விழித்த வீரேந்தர்,சரண் அடுத்த நொடி தங்கள் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தார்கள்.

“ப்ரீத்தியை சுலபமா நினைச்சிடாதீங்க சார்.அருந்த வாலு அது. ஒட்டுமொத்த நக்கலை குத்தைகைக்கு எடுத்து வைத்து இருக்கும் சின் சான் அது.நம்மை டென்ஷன் ஏத்திட்டு அவ கூல்லா போய்டுவா.நமக்கு தான் பிபி ஹார்ட் அட்டாக் எல்லாம் வரும்…”என்றான் ரஞ்சித் புன்னகையுடன்.

“ஆனா பெரியவங்க மேல் ரொம்ப மரியாதை வைத்து இருக்கா போல் இருக்கே.உள்ளே வந்த என்னை கண்ட உடன் ஏதோ சொல்லி சலூட் வைத்தாள் தானே.”என்றார் வீரேந்தர்

எழுந்த சிரிப்பை அடக்கி கொண்ட ரஞ்சித்,”சார் உங்களையும் அவ ஓட்டிட்டு தான் சார் இருந்தா.’தங்க பதக்கம்’ என்ற படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் ரொம்ப விறைப்பா ,டிரஸ்க்கு மட்டும் இல்லை தனக்கே கஞ்சி போட்டா மாதிரி இருப்பார். உங்களை அதை வைத்து தான் ஓட்டினா.சரண் ப்ரோ உங்களை “வேட்டையாடு விளையாடு’ கமல் ஹாசன் என்று கிண்டல் செய்யுது அந்த சுண்டெலி.”என்று போட்டோ காட்ட ஒரு நொடி விழித்த அவர்கள் மறுநொடி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.

கண்ணில் நீர் வரும் வரை சிறிது முடித்து,”ஐயோ ஐ காண்ட் லாப் எனிமோர்.”என்றார் வீரேந்தர்.

“அர்ஜுன் பாவம்.”என்றான் சரண்.

பயணம் தொடரும் …