OVOV 24
OVOV 24
அர்ஜுனின் குடும்பம் மொத்தம் கையை பிசைந்து கொண்டு நிற்க,கோபத்தோடு ரெண்டு ரெண்டு படிகளாய் ஏறி செல்லும் வேகமே, அர்ஜுன் கோபத்தின் அளவை அங்கு உள்ளவர்களுக்கு சொல்லாமல் சொன்னது. போகும் அவனையும், ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்துவாறு அமர்ந்து இருக்கும் ப்ரீத்தியையும் பார்த்து தங்களுக்குள் பேசி கொண்டார்கள்.
அந்த ஜெஸ்ஸிகாவது தன்னை மணமகன் வீட்டில் பெண் பார்க்க கேட்டார்கள் என்ற அடிப்படையாவது தெரியும். இந்த ப்ரீத்திக்கு ஹர்பிர் எதையும் சொல்லாமல் அனுப்பி வைத்து இருக்க,வேலைக்கு என்று வந்த இடத்தில் ‘தங்கும் இடத்தை பற்றி தானே கேட்டோம் அதற்கா இத்தனை கோபம்?’ என்று யோசித்து விழித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.
கியான்தீப்பால் ஒரு அளவிற்கு மேல் எதையும் மொழி பெயர்க்க முடியவில்லை என்பது தான் உண்மை. சொந்த சகோதரனாய் இருந்தாலும் அது அவர்கள் ‘அந்தரங்கம்’. அதில் நுழைய அவனுக்கு தயக்கமாய் இருந்தது. மற்றவர்களுக்கு மொழி பிரச்சனை தடையாய் இருந்தது.அதையும் மீறி இளம் ஜோடிகளின் அந்தரங்கத்தில் நுழைய அந்த மூத்த தலைமுறையால் முடியவில்லை.
ஆனால் இவர்கள் அனைவரும் அறிய தவறிய ஒன்று அங்கு ப்ரீத்தியை பொறுத்தவரை “அந்தரங்கம் “என்ற ஒன்றோ,உறவு ,உரிமை என்ற ஒன்றோ கிடையவே கிடையாது என்பது.
அடிப்படையே இல்லாத மாளிகையை ஏதோ ஒரு நம்பிக்கையில் அவர்கள் கட்டி கொண்டு இருந்தார்கள். அது அர்ஜுன் என்ற மனிதனின் குணநலத்தின் மீது இருந்த உறுதியா இல்லை அவன் காதலின் ஆழத்தின் மீது இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையா என்பதற்க்கு காலம் தான் பதில் சொல்ல முடியும்.
அர்ஜுனை பொறுத்தவரை தனக்காக வந்த பிறந்து வந்த பெண் ப்ரீத்தி மட்டும் தான், தன்னில் சரி பாதி,தன்னை நிறைவு செய்யும் முழுமை அவள் மட்டும் தான் என்பது ஆழ பதிந்து விட்டது.இந்த உணர்வு எதனால் உருவானது என்று கேட்டால் அதற்கான பதில் அவனிடமே இல்லை.
“ப்ரோ…சாரி தெரியாம கேட்டுட்டேன் …நான் கேட்டது அதிகப்படி தான்…நான் ஊருக்குள் ஒர்கிங் வுமென்ஸ் ஹாஸ்டல் பார்த்துக்கறேன் …சாரி. இங்கே ஹாஸ்டல் எங்கே இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?அட்ரஸ் கிடைக்குமா இல்லை வேண்டாம் கூகிள்லில் பார்த்துகிறேன் …இங்கே ஓலா,uber டாக்ஸி இருக்கா?” என்று எழ போனவளை கையை பிடித்து இழுத்து அமர வைத்த தீப் அவளை முறைத்தான்.
“எங்க வீர்ஜி என்னை கழுத்தை நெரித்து கொல்லனும் என்று நினைக்கிறீங்களா… நான் உயிரோடு இருப்பதில் அப்படி என்ன பிரச்சனை உங்களுக்கு? என்னை நர பலி கொடுக்காமல் விட மாட்டிங்க போல் இருக்கே ஏற்கனவே பயங்கர கோபத்தில் இருக்கார்.நீங்க இப்படி பேசியதை மட்டும் கேட்டார் … ஹே பகவான்..
உங்க ரெண்டு பேரின் விளையாட்டுக்கு நான் வரலை அண்ணி …என்னை ஆளை விடுங்க…எவன் அந்த மனுஷன் கிட்டே வாங்கி கட்டிக்கிறது..மாதாஜி நீங்க தங்கும் ரூமை காட்டுவாங்க …டேக் ரெஸ்ட் பர்ஜாயீ.”என்றான் தீப் விட்டால் போதும் என்று எழுந்து ஓடாத குறையாய் ப்ரீத்தியின் அருகில் இருந்து எழுந்தவன் தன் அன்னைக்கு சைகை காட்டினான்.
ராஷ்மி அவளை புன்னகையுடன் அழைக்க,எழுந்து நின்றவள்,”தீப் அடிக்கடி பர்ஜாயீ என்று என்னை பார்த்து கூப்பிடுறீங்களே…அப்படி என்றால் என்ன?”என்றாள்.
தீப் கவனம் அவள் மேல் இருந்தால் தானே அவள் கேட்டது அவன் காதில் விழுந்து இருக்க…அவன் தான் அண்ணனின் கோபத்தை கண்டு நடுங்கி கொண்டு இருந்தானே அர்ஜுனுக்கு குடும்பத்தாரிடம் அவ்வளவு சீக்கிரம் கோபம் வராது.ஆனால் அப்படி வந்தால் அதன் விளைவு பயங்கரமாய் இருக்கும்.
என்ன செய்து அண்ணன் கோபத்தை தீர்ப்பது என்று யோசனையில் இருந்தவன், ப்ரீத்தி கேட்ட கேள்வியை கவனிக்கவில்லை.ஒருவேளை கவனித்து இருந்தால் பின்னால் எழ போகும் பல குழப்பங்களை தடுத்து இருக்கலாமோ?
தீப் பதில் சொல்லவில்லை என்றதும் ‘பர்ஜாயீ’ என்றால் ‘அக்கா’ என்று கூப்பிடுவது போல என்று ப்ரீத்தியாக நினைத்து கொண்டு ராஷ்மியை பின்பற்றி மாடி ஏறினாள்.
ஏனோ ஒவ்வொரு வார்த்தைக்கும் ‘கூகிள் ட்ரான்ஸ்லஷன்’ நாடவோ,’முப்பது நாளில் பஞ்சாபி எப்படி கற்பது’ என்று தெரிந்து கொள்ளவோ அவள் ஆர்வம் காட்டவில்லை.அவளை பொறுத்த வரை ‘இன்டர்நேஷனல் கம்யூனிகேஷன்’ மொழியான இங்கிலிஷ் இருக்கிறது.வேலை செய்யும் இடத்தில் அது போதும் …ஆறு மாதம் வேலை செய்ய வந்த இடத்தில் புது மொழி கற்கிறேன் என்ற ரிஸ்க் எடுக்க தயாராய் இல்லை.
வந்ததில் இருந்து எதையாவது பேசி கொண்டே இருக்கும் அமர்நாத் கூட மிகவும் அமைதியாய் தான் இருந்தார்இன்னும் அவர் ரயில் நிலைய மரணங்களின் தாக்குதலில் இருந்தே மீளவில்லை.
“என்ன மாமா…பூமி அழிய போகுதா என்ன…நீர் ரொம்ப அமைதியாய் இருக்கீங்க.”என்றான் தீப் அவர் அருகில் சென்று அமர்ந்து.
“ச்சூ …ஸ்டேஷனில் செத்தவங்க முகமும் கண்ணு முன்னாலேயே இருக்குடா …எவ்ளவோ வளமான தேசம் இது.எத்தனை நதிகள்…மண் வளம்…கொட்டி கொடுப்பதால் இந்த அன்னைக்கு நிகர் யார்?
ஆனால் இப்போ இங்கே தேவை படுவது மனித வளம் தீப்.பல கிராமத்தில்,தெருவிற்கு தெரு,வீட்டுக்கு வீடு மூன்று பேர் கூட இந்த போதை மருந்தால் செத்துட்டு இருக்காங்க…அந்த பசங்களை பார்த்தா என் பொண்ணுங்க வயசை விட மிகவும் குறைவு..அதுங்களை போய் ஈவு இரக்கம் இல்லாமல் எப்படிடா நாசம் செய்ய மனம் வந்தது?…போதை மருந்து உடலில் கட்டி விற்கும் வயசா இது?கடவுளே…
நம்ம ப்ரீத்தி மட்டும் தன் உயிரையும் பணயம் வைத்து இந்த விசயத்தை போலீஸ் கிட்டே சொல்லாமல் எனக்கென்ன வந்தது என்று போய் இருந்தால் இந்நேரம் அந்த பசங்களை மேலும் நாலு பேர் சேர்ந்து…கடவுளே ..கடவுளே …”என்று தலையில் அடித்து கொண்டு புலம்பியவரின் கண்களில் கண்ணீரின் பளபளப்பு.
அந்த வீட்டினர் அவரை சூழ்ந்து கொண்டு ஆறுதல் தர,இது எதையும் அறியாதவளாய் வியப்புடன் ராஷ்மியுடன் மாடி ஏறி கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.
அந்த வீடு …தவறு பங்களா கலை நயத்துடன் கட்ட பட்டு இருந்தது.படிகள் கூட கலை நயத்துடன் தான் இருந்தது.படி ஏறும் இடங்களில் பஞ்சாப் இளவரசிகளின் படகு சவாரி ஓவியங்கள்,கூரையில் மாட்ட பட்டு இருந்த லஸ்தர் விளக்குகள்,விளக்குகளை ஏந்திய காரிகை பொம்மைகள் ஏதோ சினிமா பட செட் போல் இருந்தாலும் மனதிற்கு இதத்தை கொடுக்க தவறவில்லை.
சுவர் முழுக்க கேன்வாஸ் படங்கள்.
கால்கள் அந்த ஓவியங்களை தாண்டி நகராமல் நின்று விட, அதில் லயித்து நின்று இருந்த ப்ரீத்தியை நெருங்கினார் ராஷ்மி.
“என்ன கண்களை இங்கே அங்கே திருப்ப முடியவில்லையா… இது எல்லாம் அர்ஜுன் வரைந்தது தான்.பஞ்சாபின் புகழ் பெற்ற காதலர்கள்,அவர்களின் காதல் கதை தான் இது எல்லாம். எங்கள் பஞ்சாபி நாட்டுப்புற கதைகள் கேட்பவரை மூச்சடைக்க வைத்து விடும்…
காதல் …காதல் …காதல் மட்டுமே இவர்களின் வாழ்க்கை. அர்ஜுனுக்கு இசை,ஓவியம் என்றால் அத்தனை உயிர். இவங்க காதலின் மேல் அப்படி ஒரு ஈடுபாடு அவனுக்கு. “என்று உடைந்த ஆங்கிலத்தில் ராஷ்மி கூற ப்ரீத்தியின் கண்கள் விரிந்தன.
“இங்கு ஒவ்வொரு பெண்ணும் இது மாதிரி ஒரு காதலன்,கணவன் கிடைப்பானா என்று ஏங்காத நாளே இல்லை.இப்படி காதலுக்காக உயிரையே விடும் அளவு காதலிக்க படுவதும் ஒரு வரம் தான் ப்ரீத்தி….ஒரு நொடி அப்படி ஒரு காதலில் திளைத்து விட்டாலும் போதும் …வானத்தில் இருப்பதாய் சொல்லப்படும் சுவர்க்கம் பூமியில் கிடைத்து விடும் .” என்ற ராஷ்மியின் முகத்தில் அத்தகைய காதல் கிடைத்து விட்டதற்கான திருப்தி,ஒரு நிறைவை ப்ரீத்தியால் நன்கு உணர முடிந்தது.
‘ஒவ்வொரு வீட்டிலும் உள்ள அப்பா அம்மாக்களின் வாழ்க்கை சொல்லி விடுமே அவர்களின் காதல் கதையை. நம்ம பெற்றோரை விடவா சிறந்த காதலர்கள் இருந்து விட முடியும்? பெரியவர்கள் பார்த்து செய்த திருமணங்கள் தான் அவை என்றாலும் அதில் சொட்டும் காதல் தேனிற்கு எதை ஈடாக சொல்ல முடியும்?
இன்றும் பிள்ளைகள் அறியாமல் கண்களால் காதல் கவிதைகள் படைக்கும் அன்னையரின் முழுமைக்கு எங்கள் தந்தைமார்கள் அல்லவா காரணம் … வாழ்க்கையை காதல் கவிதையாய் மாற்றுவதும், நரகமாய் மாற்றி கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது என்று தங்கள் வாழ்க்கை மூலமே சொல்லி கொடுத்த காதலர்கள் இல்லையா நம் பெற்றோர் … ராஷ்மி ஆண்ட்டி அந்த வகை போல் இருக்கிறது …’என்ற நினைப்பை ப்ரீத்தியால் விளக்க முடியவில்லை.
அந்த ஓவியங்கள் பஞ்சாபின் புகழ் பெற்ற சோக காதல் கதைகளை துள்ளலுடன் சொல்லி கொண்டு இருந்தன.
ஹீர் ரஞ்சா -பஞ்சாபின் பிரபலமான ஐந்து சோகமான காதல் ஒன்றாகும். மற்ற நான்கு காதல்- மிர்சா சாஹிபா, சோஹ்னி மஹிவால் , சஸ்ஸி புன்னு, லைலா மஜ்னு போன்றோர் உடையது.
பஞ்சாபில் மேலும் ஐந்து பிரபலமான நாட்டுப்புறக் கதைகள் உள்ளன: மோமல் ரானோ , உமர் மார்வி , லீலா சனேசர், நூரி ஜாம் தமாச்சி மற்றும் தாஜ், ரோர் குமார் .
இந்த பத்து சோகமான காதல் காதல் பஞ்சாபில் பிரபலமானது. காதல் காவியத்தில் மிக முக்கிய இடம் பெற்றவை.
இந்த காதல் காவியங்கள் ,காதல் என்ற உன்னதத்தின் பெயரில் எல்லாவற்றையும்,தங்கள் வாழ்க்கை,உயிரை கூட தியாகம் செய்ய தயாராய் இருந்த ,காதலர்களின் துன்பகரமான அதே சமயம் மனதை தொடுகின்ற காவியங்கள் ஆகும்.
இந்த அமர காதலர்கள் காதலுக்காக உயிர் துறந்து இருந்தாலும், அங்கு அந்த கலையில் அர்ஜூனால் காதலை உயிர்ப்புடன் சொல்லி கொண்டு இருந்தார்கள் என்றே ப்ரீத்திக்கு தோன்றியது.
அந்த காதலர்களின் ஆலிங்கனம் நிழலை நிஜமாக்கி கொண்டு இருந்தது.
அத்தனை காதல்,அத்தனை பாவம்,அத்தனை உயிர்ப்பு,அத்தனை நுணுக்கம் அந்த ஓவியங்களில் .
சொட்ட சொட்ட காதல் பஞ்சாமிர்த கலவை இவர்கள் வாழ்க்கைகள்.காதலையே காதலிக்க சொல்லி கொடுக்கும் வாழ்க்கை பாடங்கள் இந்த காதலரின் வாழ்க்கைகள் .ஆயிரக்கணக்கான கவிஞ்சர்கள்,ஓவியர்கள்,நாட்டுப்புற பாடல்களை உருவாக்க அடித்தளமாய் இருந்த உன்னதங்கள்.
காதல் …காதல் …காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல் என்று
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற மன வைராக்கியத்தை போதிக்கும் நந்தவனங்கள்.காதல் உடலை பார்த்து வருவதில்லை அது இரு மனங்களின் சங்கமம் என்று கர்ஜிக்கும் உண்மை காதலின் கூக்குரல்
வாய் மொழிந்த வார்த்தையாவும்
காற்றில் போனால் நியாயமா?
பாய் விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா?
வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னை சேர்ந்திடும்
தேனிலவு நான் வாட
ஏனிந்த சோதனை
வானிலவை நீ கேளு
கூறும் என் வேதனை
எனைத்தான் அன்பே மறந்தாயோ…
மறப்பேன் என்றே நினைத்தாயோ…
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நான் உன் மார்பில் தூங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும்
பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ
நீ எனை தீண்டினால்
காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக் கூடும்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
என்ற ‘காதல் சக்ரவர்த்தி’ வாலி அவர்களின் வரிகளுக்கு,இளையராஜாவின் இசை bgm மாய் ப்ரீத்தி காதில் ஒலிக்க, அந்த பாடல் சொல்லும் ஆழந்த உணர்வினை அழகாய் பிரதிபலித்து கொண்டு இருந்தன அந்த ஓவியங்கள்.
காதலனின் வருகைக்காக காத்திருக்கும் பெண்ணின் ஏக்கம்,காதலிக்காக ஏங்கும் காதலன்,அவர்களின் ஊடல்,கூடல்,பிரிவு,தனிமை துயரம் என்று காதலர்களை அங்கு தூரிகையில் வாழ வைத்து இருந்தான் அர்ஜுன்.
‘பனைமரம் இத்தனை டாலேண்ட் உள்ள ஆளா ….யப்பா என்ன expression ஒவ்வொரு படத்திலும்….மனுஷன் காதலையே காதலிக்க வைத்து இருக்கார் …. என் இதயத்திற்கு டேஞ்சர் ஆன ஆளு தான் அர்ஜுன் நீ …
பத்து நவ்தால் பூட்டு போட்டாலும்,இதயத்தை பேங்க் லாக்கரில் வைத்து பாதுகாத்தாலும் கூட அதை கொள்ளை அடித்து விடுவாய் போல் இருக்கே…வேலை செய்ய வந்த இடத்தில் ….காதலிக்கும் வேலை கொடுத்து விடுவாய் போல் இருக்கே …ஓவியத்தில் இத்தனை காதலை சொல்லும் நீ உண்மையில் காதலித்தால் ….யாரோ அந்த லக்கி கேர்ள் …’ ‘என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்.
அங்கு படங்களில் உள்ள காதலை விட நிஜத்தில் ஒரு இதயம் அவளுக்காகவே துடிக்க ஆரம்பித்து விட்டதை ஏனோ ப்ரீத்தி அறியவில்லை.
அவளை அவள் அறையில் விட்டு,”திஸ் யு கமரா /யுவர் ரூம் …மீ ராஷ்மி …அர்ஜுன் மாதாஜி …நீட் எனி டெல் மீ …”என்று உடைந்த இங்கிலிஷ் உடன் சைகை பாஷையில் ராஷ்மி சொல்லி முடிக்க,புரிந்ததாய் தலை ஆட்டிய ப்ரீத்தியை இழுத்து அணைத்த அவர்,அவள் நெற்றியில் முத்தம் இட்டு
“Kisē vī cīja bārē citā nā karō arajuna sabha dā dhi’āna rakhēgā/எதை பற்றியும் கவலை படாதே…அர்ஜுன் எல்லாத்தையும் பார்த்துப்பான். இந்த வீட்டிற்கு வந்த உன் வரவு நல்வரவு ஆகட்டும் …என் மகன் ரொம்ப precious ..பார்த்துக்கோ ” என்றார் அவள் கன்னத்தை தொட்டவாறு.
“அர்ஜுன் சாப் ..ரொம்ப கோபத்தில் இருக்கார் …நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் மன்னித்து விடுங்கள் மேடம்.”என்றாள் ப்ரீத்தி.
“மேடம் நஹி …சாஸ் என்று கூப்பிடு …இல்லைன்னா ஆண்ட்டி என்று கூப்பிடு …அர்ஜுன் கோபம் எல்லாம் சின்ன குழந்தைங்க கோபம் போன்றது …என் மகன் என்பதற்காக சொல்லலை …ஜெம் ஆப் எ பெர்சன் என் மகன்…இது உன் வீடு மகளே …உனக்கு எந்த வித தயக்கமும் வேண்டாம்…உன் குடும்பத்திடம் எப்படி இருப்பாயா அந்த அளவுக்கு இங்கே பிரீயா இரு ..Cagī rāta atē miṭhē supanē mērī pi’ārī dhī/குட் நைட் …ஸ்வீட் ட்ரீம்ஸ் என் மகளே.” என்று உடைந்த ஆங்கிலத்தில் சொன்னவர், அவள் கன்னத்தை வழித்து முத்தம் ஒன்று கொடுத்து கீழே இறங்கி போனார்.
ராஷ்மிக்கு ஆங்கிலம் அதிகமாய் வராது.அவருக்கு மாட்டும் இல்லை அந்த வீட்டில் அனைவர்க்கும் ஆங்கிலம் என்றால் வேப்பங்காய் தான்.வீட்டில் கட்டாயம் பஞ்சாபியில் மட்டுமே பேசும் அளவிற்கு மொழி வெறி கொண்ட மக்கள் பஞ்சாபிகள்.
இதில் தீப் ஹோட்டல் நிர்வாகம் செய்வதால் வெளிநாட்டவரிடம் பேச வேண்டுமே என்று முயன்று,தட்டு தடுமாறி ஆங்கிலத்தில் பேசுவான் .ஆனால் அதுவே ஸ்டைலிஷா,ரொம்ப வேகமாய் பேசினால் குழந்தை அழுதுடும்.
“ஹ்ம்ம் நல்ல குடும்பம் தான் …வேலை செய்ய வந்தவளின் மேல் இத்தனை பாசமா?…அப்படியே SOFTY தான்.”என்று தனக்கு தானே சொல்லி கொண்டவள் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.
கதவை திறந்து உள்ளே சென்ற ப்ரீத்தி மீண்டும் திகைத்து தான் போனாள்.ஒரு 5 ஸ்டார் executive ரூம் ரேஞ்சுக்கு இருந்தது அந்த அறை சகல வசதிகளுடன்.பாத்ரூம் அது சின்ன நீச்சல் குளத்தை ஒத்து இருந்தது.மெழுகுவர்த்தி ஒளியில்,ஜக்குஸியில் ரோஜா இதழ்கள் மின்ன,ஷாம்பு,சோப்பு,புது டவல்,பாத்ரோப் என்று அவளை மீண்டும் திகைக்க வைத்தது.
‘ஏதோ ஹாஸ்டெலில் கொசு கடியில்,ஒரே ரூமை ஷேர் செய்யணும் போல் இருக்கே என்று நினைத்தா பனை மரம் செம்ம ரூமை தான் ஏற்பாடு செய்து இருக்கு….கடுவான் பூனை….ஓரங்கொட்டான் ….பிபி வந்த காட்ஜில்லா ….அந்த பக்கம் கத்திட்டு இந்த பக்கம் என்னமாய் ஒரு ரூம் கொடுத்து இருக்கு ….உன் கேரக்டர்ர புரிஞ்சிக்கவே முடியலை …. பாஸு “நடு அறையில் நின்று உரக்கவே சொன்னாள் ப்ரீத்தி.
பத்து நிமிடம் சுற்றி, சுற்றி பார்த்தும் அந்த அறை அவளுக்கு அலுக்கவேயில்லை. அங்கும் உள்ள ஓவியங்கள் அது அர்ஜுனின் கைத்திறமை என்று சான்று அளித்து கொண்டு இருந்தது.
“ஒகே …ஒகே …பார்த்த உடன் எல்லாம் லவ்வில் விழ முடியாது …மிஸ்டர் அர்ஜுன் ஜி …இப்போ தொல்லை செய்யாமல் போங்க ..உங்களை பத்தியே மூன்று மணி நேரமாய் நினைச்சிட்டு இருக்கேன் …எங்க லிட்டில் ஹார்ட்டுக்கு நல்லதில்லை … “என்று உரக்க சொல்லி கொண்டவள் தன் நினைப்பு அவனை சுற்றியே போவதை கண்டு அதை மீட்க தன் ட்ராவல் பாகில் இருந்த பொருட்களை எல்லாம் அந்ததந்த இடத்தில் வைக்க ஆரம்பித்தாள்.
விட்டு இருந்தால் ராஷ்மியோடு மற்ற பெண்கள் எல்லோரும் சேர்ந்தே அவளுக்கு உதவி இருப்பார்கள் தான்.அவர்கள் அன்பை மறைத்து காட்ட தெரியாத வெகுளிகள்.உதவி என்று கேட்கா விட்டாலும் தானாய் முன் வந்து அனைத்தையும் இழுத்து போட்டு செய்து விடுவார்கள்.நமக்கு தான் அந்த அன்பை கண்டு கண் விழி பிதுங்கி விடும் .எங்கே ப்ரீத்தி தவறாய் நினைத்து விட போகிறாளோ என்று மற்றவர்கள் கீழே நின்று விட,ராஷ்மி அறை வாயிலோடு நின்று விட்டார்.
ஹண்டபாக்கில் இருந்த போன் எடுத்தவள் அதில் அவள் தாய்,ஹர்பிர் அங்கிள் இடம் இருந்து ஐம்பது மிஸ் கால் இருக்க,ஒவ்வொருத்தரையாக அழைத்து பேசினாள்.
“மாம் …சான்ஸ் இல்லை …ஏதோ பைவ் ஸ்டார் EXECUTIVE ரூம் லெவெலுக்கு ரூம் கொடுத்து இருக்காங்க…செல்பி அனுப்பறேன் பாரேன்…”என்று பேசியவள் ரயில் நிலையத்தில் நடந்தது எதையும் சொல்லலை.
எதுக்கு எங்கோ இருக்கும் அன்னை அந்த இரவில் தன் சாகசத்தை கேட்டு இதயத்தை பிடித்து கொண்டு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகணும் என்ற ரொம்ப நல்ல எண்ணம் தான்.முடிந்து போன ஒன்றை ஏன் மீண்டும் நினைவு படுத்தி கொண்டு …
ஆனால் அது விடாது கருப்பு என்று அவளுக்கு யார் சொல்வது?
“ராஷ்மி மேடம் கிட்டே போனை கொடு ப்ரீத் …நானும் பேசிடுறேன் .. அப்போ தான் மரியாதையா இருக்கும்…ஹர்பிர் அங்கிள் சொன்னார்…ஊருக்குள் மரியாதையான குடும்பம் ப்ரீத்…நம்ம ஊரில் “தலைக்கட்டு” குடும்பம் என்று சொல்வோமே அது மாதிரி…அந்த ஊரின் அக்கம் பக்கம் எல்லாத்துக்கும் முன்னே நிற்பவர்களாம்…பார்த்துக்கோ…உன் குரங்கு தனத்தை எல்லாம் மூட்டை கட்டி அதன் மேல் ஒரு பாறாங்கல்லை வைத்து அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் போட்டுடு….” “என்றார் மிருதுளா.
“ஒகே ஒகே மா …புரியுது …நைட் டைம் பாரு softy ..இன்னேரம் போய் படுத்து இருப்பாங்க.நாளை காலை எப்போ பிரியா இருப்பாங்களோ அவங்க கிட்டே கேட்டுட்டு கொடுக்கறேன்… அவங்க பிசினெஸ் வுமன் போல் இருக்கு …போன் அழைப்பு வந்துட்டே இருக்கு …நீ என்னை பத்தி கவலை படாமல் உன் ஆத்துக்காரர் கூட டூயட் பாடு பேபி…”என்றவள் அவர் திட்ட ஆரம்பிக்க புன்னகையுடன் அதை ஏற்று கொண்டாள்.
“அம்மா ராஷ்மி ஆண்ட்டி மகன் அர்ஜுன் சார் தான் என் பாஸ் …யப்பா மனுஷன் என்னமா வரையரார் தெரியுமா…போட்டோ அனுப்பறேன் பாரேன்….சான்ஸ் இல்லை மா …அப்படியே உயிரோடு அந்த பெண்கள் கண்ணில் காதல் தெரியுதும்மா …ஆனா என்ன ஒண்ணு கோபம் அதிகமாய் வரும் போல் இருக்கு ….தங்க ஹாஸ்டல் எங்கே என்று தான் கேட்டேன்…
அதுக்கு ஒரு கதகளி ஆடினார் பாருங்க…எனக்கு அல்லு உட்டுடுச்சு…ஆனா அந்த பக்கம் அப்படி கத்திட்டு இந்த பக்கம் எப்படி ரூமை கொடுத்து இருக்கார் பாருங்க…சுத்தமா அவர் கேரக்டர் புரிஞ்சுக்க முடியலை….தலை சுத்துது…”என்றாள் ப்ரீத்தி.
சற்று நேரம் எதையும் பேசாத மிருதுளா,”தப்பு உன் மேல் தான் இருக்கும் என்று தோன்றுகிறது…லூசா நீயி வேலைக்கு வரும் பெண்ணையே முதல் வகுப்பு பிளேன்ட்ரெயின் டிக்கெட் கொடுத்து அழைத்து கொள்ளும் குடும்பம் தானா உன்னை ஹாஸ்டலில் தங்க வைப்பாங்க என்று கொஞ்சம் கூட மூளை என்ற ஒன்றை பயன்படுத்தி யோசிக்க மாட்டாயா…அவர் உனக்கு இந்த அறையை தயார் செய்து இருப்பார் ..நீ பெரிய இவ மாதிரி ஹாஸ்டல்,வேலையாள் தங்கும் இடம் என்று உளறி வைத்து இருப்பே…அவர் பாதுகாப்பின் மேல் அக்கறை மேல் சந்தேகம் கொள்வது போல் பேசினால் உன்னை கொஞ்சுவாங்களா என்ன?”என்று பிடிப்பிடியென மிருதுளா பிடிக்க இது எல்லாவற்றிலும் ப்ரீத்தியின் மூளையில் பதிந்தது ஒரே வார்த்தை மட்டும் தான்.
அந்த வார்த்தை மனதில் ஏற்படுத்திய பிம்பம் மட்டும் தான் -அர்ஜுன் கண்களில் காதலுடன் அவளை கொஞ்சுவது போன்ற ஒரு மாயை.குப்பென்று வியர்த்து விட முகம் சிவந்து போனது ப்ரீத்திக்கு .
‘நல்லவேளை அது வீடியோ கால் இல்லை …இல்லைன்னா softy என்னை ஆய்ந்து இருக்கும்….’என்று மனதிற்குள் நினைத்து கொண்ட ப்ரீத்தி,”ஆமா மா …உளறி வைத்து இருக்கேன் போல் இருக்கு…அதான் சார் அப்படி கோவிச்சிட்டார் போலெ இருக்கு ….இந்த கோணத்தில் நான் யோசிக்கலை மா…”என்றாள்.
‘ஆமா அப்படியே அந்த கிரேக்க சிற்பம் என்னை யோசிக்க விட்டான் பாரு ….அப்படி கண்களால் விழுங்கினால் ஒரு மனுசிக்கு மூளை என்ற ஒன்று குழம்பி போகுது இல்லை …விட்டால் இழுத்து வைத்து “லிப் லாக்”நடு ஹாலில் செய்து இருப்பான் போல் ஒரு அப்படி ஒரு லுக் விட்டதில் நம்ம மூளை டிஸ்க் ப்ரை ஆகுதில்லை…”என்றது அவள் மனம்.
‘கரெக்ட் வெலிட் பாயிண்ட்…அவனுக்கு மந்திரம் தெரியும் போல் இருக்கு …மந்திரவாதி ….பார்த்தே மயக்கிடுவான் …அவனே கிட்டே வந்தால்..ஹ்ம்ம் நோ யோசிக்காதே …’என்று மூளை கட்டளை இட ,அந்த பக்கம் மிருதுளா கோனார் நோட்ஸ் எடுப்பதில் இறங்கி இருக்க,’ஹ்ம்ம் ‘சரி சரிம்மா ‘என்று சொல்லி கொண்டு இருந்தவளின் நினைவோ அர்ஜுன் பார்வையை மீண்டும் மீண்டும் நினைத்து கொண்டு இருந்தது .
தன் தலையை உலுக்கி தன்னை நிலை படுத்தி கொண்டவள்,”பணம் திரட்டியாச்சா…அப்பாவோட அந்த இம்சை சகோதரி என்ன சொல்லுச்சு…வந்து இருக்குமே …”என்றாள் ப்ரீத்தி.
“இவர் போனை தான் நான் சென்னையில் ஷாப்பிங் போகும் போதே சுட்டுட்டேனே…சுவிட்ச் ஆப் செய்து ஒளித்து வைத்துட்டேன்.வெளி உலக தொடர்பே இல்லாமல் ஆக்கியாச்சு ….அந்த பிசாசு கூட்டம் டாடி மத்த நண்பர்களிடமும் விசாரித்து இருக்குங்க.உங்க அப்பா ஊருக்கு போகிறோம் என்று இவர்களிடம் சொல்லி இருப்பார் போல் இருக்கு …
இங்கே தான் இருக்கோமா என்று இங்கே சொந்தங்களிடம் விசாரித்து இருக்காங்க …அதான் அதுங்க இங்கே வருவதற்குள் நாளை காலை தாத்தா,பாட்டி,நான்,டாடி எல்லாம் டூருக்கு கிளம்பறோம்….உனக்கு ஜாதகத்தில் தோஷம் இருக்கு …அதான் ஒரு பூஜை போட்டால் என்று பாட்டி கிளப்பி இருக்காங்க …எப்படியும் ஒரு மாசம் அங்கே இங்கே என்று மன ஆறுதல் என்று இழுத்துட மாட்டேன்…”என்றார் மிருதுளா.
“softy …எண்ணமா பிளான் போடுறே நீ …இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை…RAW ஏஜென்சி ஆளாய் இருந்து இருக்க வேண்டியது…ஜூஸ்டு மிஸ்ஸு…”என்றாள் ப்ரீத்தி பெருமையுடன்.
“RAW எல்லாம் ஜுஜுபி…நம்ம ரேஞ்சுக்கு ஒரு CIA,மொசார்ட் தான் சரி…வாட் டு டூ…உலகத்திற்கு லாசு …”என்றார் மிருதுளா இல்லாத காலரை தூக்கி விட்டு.
“இது உனக்கே ஓவர்ரா இல்லை ….?”என்றாள் ப்ரீத்தி.
“ஹே போடி …பெண்ணை பெத்த எல்லா அம்மாவும் பெண்ணுக்கு என்றால் அந்த இன்டெலிஜென்ஸ் ஏஜென்சியை விட அதிகமாய் வேலை செய்வோமடீ ….அதுவே அவளுக்கு ஒன்று என்றால் உலகின் மிக கொடூரமான தீவிரவாதியாய் மாறவும் தயங்க மாட்டோம்….இது எல்லாம் உனக்கு இப்போ புரியாது …ஒரு பெண்ணை பெத்து வளர்த்து ஆளாக்கும் ஒவ்வொரு அம்மாவும் ஆயிரம் சாணக்கியங்களுக்கு சமம் …இந்திய குடும்பங்களில்,இல்லறத்தில் தோற்று கொண்டே ஜெயிக்கும் இல்லத்தரசிகள் நாங்க டீ …சரி சரி ….போய் படு ….குட் நைட் …”என்றார் மிருதுளா.
‘யப்பா நம்ம softiக்கு பிபி ஏத்தி அது கையில் இருந்து திட்டு வாங்கிட்டு படுத்தா தான் நிம்மதியா தூங்கவே முடியும் ..இன்னைக்கு கோட்டா ஒகே …’ என்று எண்ணியவள் ,
“லவ் யு softi …மிஸ்ஸு யு செல்லம்” என்று வாட்ஸாப்ப் மெஸ்ஜ் அனுப்பியவள்,சில பல செல்பிகளையும் குரங்கு போல் முகத்தை வைத்து அஷ்ட கோணலாய் நின்று அனுப்பி வைத்தாள்.
அவர் ப்ரீதிக்கே மம்மி ஆச்சே…அடுத்த நொடி விதவிதமாய் மீம்ஸ் அவளை கலாய்த்து வந்து கொண்டே இருந்தது.
“யூ டூ ப்ருடஸ் …?”என்றாள் ப்ரீத்தி .
“போய் தூங்குடீ ….டெங்கு வந்த நூடுல்ஸ் …நாளைக்கு வேலைக்கு போகணும்.முதல் நாளே மதியம் ரெண்டு மணிக்கு போய் நிக்காதே …அலாரம் வச்சிட்டு படு …”என்று அவர் மெசேஜ் அனுப்ப,
‘நம்மை இந்த அம்முஸ் சரியாய் தான் புரிஞ்சி வைத்து இருக்கு …ப்ரீ குட்டி நாளையில் இருந்து ‘நானும் வேலைக்கு போறேன் …நானும் வேலைக்கு போறேன்’ என்று அலப்பறை பண்ற மொமெண்ட் ….அர்ஜுன மகாராஜா வேற பொசுக்குனா கண்ணால் ak 47 வச்சி சுட்டுட்டு போகுது…முதல் நாளே வேலைக்கு லேட்டா போய் நின்னு அந்த எரிமலையை சொறிஞ்சு வைக்காதே ….’என்று தனக்கு தானே பேசி கொண்டவள் அலாரம் வைத்து விட்டு,
சூடான நீரில் குளித்து முடித்து ,கண்கள் சொருக அரை அடி புதைந்த மெத்தையில் படுத்தவளை உறங்க விடுவதில்லை என்று முடியவே செய்து விட்டான் அர்ஜுன்.
பால்கனி கதவு திறந்து இருக்க அதன் வழியாக வந்து சேர்ந்தது flute ஒன்றால் கசிந்த இசை.யார் இந்த நேரத்தில் என்று எழுந்து போய் பார்த்த ப்ரீத்தி அங்கு கைபிடி சுவரில் அமர்ந்து புல்லாங்குழல் வசித்து கொண்டு இருந்த அர்ஜுனை சத்தியமாய் எதிர் பார்த்திருக்கவில்லை.
ரெண்டு அறைக்கும் பொதுவான பால்கனி இருக்கும் என்று கனவா கண்டாள் ப்ரீத்தி.
‘இவன் என்னை ஒரு வழியக்காமல் விட மாட்டான் போல் இருக்கே…ஐயோ …ஐயோ எனக்கு பிடிச்ச பாட்டை வேறு வாசித்து தொலைக்கிறானே…’என்று நினைத்தவள் திரையின் மறைவில் நின்று இசையோடு அர்ஜுனையும் அணுஅணுவாய் தனக்குள் நிறைத்து கொண்டு இருந்தாள் ப்ரீத்தி அவளே அறியாமல்.
இசையால் ஹீர் என்ற பெண்ணை கவர்ந்த ரஞ்னா போல் அங்கே ஒருத்தியை கவர்ந்து கொண்டு இருந்தான் அர்ஜுன்.
கண்ணை மூடி அர்ஜுன் இசையில் ப்ரீத்தி லயித்து நிற்க,பேசி பேசியே டயர்ட் ஆகி ஜெஸ்ஸி ஹாஸ்பிடலில் உறங்க ஆரம்பித்து இருந்தாள்.அவளுக்கு துணையாய் அமன்ஜீத் அங்கேயே தங்கி விட்டான்.ஓவர் நைட் எதற்கும் அபிசேர்வேசன் இருக்கட்டும் என்று யோஜித் சொல்லிவிட ஜெஸ்ஸி அங்கேயே தங்க வைக்க பட்டாள்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து செய்தவன், தன்வி அனுப்பி இருந்த உணவை உண்டு விட்டு அங்கு இருந்த சோபாவில் படுத்தவன் அடுத்த நொடி உறங்கி இருந்தான்.
என்றுமே எதற்காகவும்,யாருக்காகவும் தன் luxury எல்லாம் விட்டே கொடுக்காதவன்,அன்று தன் தோழிக்காக அங்கேயே தங்க முடிவு எடுத்ததும்,அந்த சாதாரண அறையில் ஒரு சோபாவில் படுக்க முன் வந்தது தன்விக்கே பயங்கர திகைப்பை ஏற்படுத்தியது.
காதல் என்ற மகத்தான ஆற்றல் உலகையை கலக்கி வரும் போது …அமன்ஜீத் என்ற இரும்பு அங்கு இளக ஆரம்பித்து இருந்தது.
மூன்று மணி நேரம் கழித்து
நேரம் -2 am
அந்த இரவில் அந்த ஹாஸ்பிடலும் அதன் சுற்றுப்புறமும்,அந்த வெராண்டாவும் ஏதோ பேய் படம் ஹோச்பிடலை கதைக்களமாய் எடுப்பதற்கு ஏதுவாய் நெஞ்சில் திகிலை கிளப்பி கொண்டு இருந்தது.
வாட்ச்மன்கள் தங்கள் ரவுண்ட்ஸ் முடித்து விட்டு உறக்கத்தில் ஆழ்ந்து இருக்க,ஸ்டாப் நர்ஸ்கள் அமர்ந்த வாக்கிலேயே ரவுண்ட்ஸ் முடித்து உறங்கி கொண்டு இருக்க,இரவு டூட்டி டாக்டரும் புது நோயாளிகள் யாரும் வராததால் ac அறையில் உறக்கத்தில் இருக்க என்று தூங்கி வழிந்து கொண்டு இருந்தது அந்த ஒட்டுமொத்த ஹாஸ்பிடலும்.
யோஜித் டூட்டி முடிந்து சென்று இருக்க, டாக்டர் ஆப்ரஹாம் டூட்டியில் இருந்தார்.
ஒரு வித அசாத்திய மௌனம் நள்ளிரவுக்கே உரித்தான ஒரு அமானுஷயம். நிச்சயம் ராகவா லாரன்சுக்கு பிடித்த சிச்சுவேஷன்.
அந்த ஹோச்பிடலின் பின் புறம் வந்து நின்றது அந்த கார்.அதில் இருந்து இறங்கிய அவன் டாக்டர் உடையில் அதுவும் அறுவை சிகிச்சை போது டாக்டர்ஸ் அணியும் scrubs எனப்படும் பச்சை நிற உடையில் இருந்தான் இருந்தான்.சட்டென்று பார்ப்பவர்கள் அவன் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வருகிறான் என்று என்னும் படியான சந்தேகம் ஏற்படுத்தாத உடை.
சுற்றும் முற்றும் பார்த்தவன் அந்த இரவு காற்றின் வாசத்தை ஒரு நொடி ஆழ்ந்து சுவாசித்தான்.தன் பாக்கெட்டில் இருந்து கை குட்டை எடுத்தவன் அதை முகத்தை சுற்றி கட்டி,அதன் மேல் அறுவை சிகிச்சையின் போது அணியும் மாஸ்க் அணிந்து கொண்டான். ஒருவேளை மாஸ்க் அவிழ்ந்தாலும் கைக்குட்டை முகத்தை மறைத்து விடும் என்று இந்த ஏற்பாடோ
அவன் நடையில் அத்தனை நிதானம்.முகத்தில் அத்தனை சாந்தம்.
அவன் செய்ய போவது கொலை. ஆனால் அதை செய்ய போகும் பதட்டம் சத்தியமாய் அவனிடம் இல்லை என்று சொல்ல வேண்டும்.அவன் செயலில் எந்த தடுமாற்றமும் இல்லை.
ஹாஸ்பிடலின் பின் புறம் அமைக்க பட்டு இருந்தது ICUவிற்கான காற்று சுத்திகரிப்பு அறை AHU எனப்படும் AIR HANDLER UNIT இருந்த அறையினை சாவி கொண்டு திறந்தவன் அதில் தன் கையில் இருந்த கண்ணாடி குடுவையை இணைத்து விட்டு அந்த அறையை மீண்டும் சாவி கொண்டு பூட்டி ஹாஸ்பிடலின் பின் பக்க படிக்கட்டு மூலமாய் மூன்றாம் தளத்திற்கு ஏற ஆரம்பித்தான்.
அவனை தடுக்கவோ,அவன் எதிரிலோ யாரும் வரவில்லை.அவனும் எந்த தயக்கமும் இல்லாமல் மிக நிதானமாய் ஏறி சர்வீஸ் டோர் வழியாக ICUவிற்குள் நுழைந்தான்.
அந்த ICUவில் CCTV கேமரா பிக்ஸ் ஆகி இருந்தாலும்,அதன் “BLIND SPOT”எது என்பது அவனுக்கு மிக நன்றாகவே தெரிந்து இருந்தது.அதாவது காமெராவால் கவர் செய்யா முடியாத பகுதி “BLIND SPOT “என்பார்கள்.அதை தனக்கு சாதகமாய் பயன் படுத்தி கொண்ட அவன் அந்த தளத்தில் இருந்த ஒரு அறையின் முன் வந்து நின்றான்.
அந்த அறைக்கு காவல் இருந்த இரு போலீசார் ஆழந்த உறக்கத்தின் பிடியில்.உபயம் இவன் காற்று சுத்திகரிப்பு மெஷின் உடன் அவன் இணைத்து இருந்த மயக்க மருந்தான குளோரோபார்ம்/chloroform. இவன் அந்த தளத்தை அடைவதற்குள் அந்த மயக்க மருந்து அதன் வேலையை காட்டி இருந்தது.
அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே போக அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது சொர்ணக்காவே தான்.அவரின் சார்ட் எடுத்து பார்த்தவன் அடுத்த நொடி தன் scrubs உள்ளே இருந்த ஊசி ஒன்றை அவரின் ஐவி எனப்படும் ட்ரிப்சில் செலுத்தி விட்டு அவள் படுக்கைக்கு அருகே இருந்த ஸ்டூலினை எடுத்து போட்டு அவளை பார்த்தார் போல் அமர்ந்தான்.
அவன் உள்ளே செலுத்திய மருந்து வேலை செய்ய ஐந்து வினாடியில் கண் திறந்தாள் அவள்.கண்கள் இன்னும் மயக்கத்தில் இருக்க,தான் எங்கே இருக்கிறோம் என்பதை அவள் புரிந்து கொள்ள அவளுக்கு நேரம் கொடுத்தவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.
“நான் எப்படி இங்கே வந்தேன் …?”என்றாள் அவள்.
“ஓஹ் தமிழா …”என்றவன்,”போதை மருந்தை நுரையீரலுக்கு போனா ஹாஸ்பிடல்லில் தான் சேர்ப்பாங்க.5 ஸ்டார் ஹோட்டலில்லா சேர்ப்பாங்க மேடம்?”என்றான் வெகு நக்கலாய் அவன் உடைந்த தமிழில்.
“எனக்கு எதுவும் தெரியாது …”என்றாள் அவள்
“உனக்கு ஏதாவது தெரியுமா தெரியாதா என்று நான் கேட்கவே இல்லையே மேடம் …தெரிந்ததை சொல் என்று தான் சொல்கிறேன்…”என்றான்.
“அதான் எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்றேன் இல்லை …”என்றாள் அவள் குரலை உயர்த்தி.
“ஹலோ என்னை என்ன போலீஸ் என்று நினைச்சுட்டியா…நான் போலீஸ் இல்லை ..போலீஸ் என்றால் உன்னை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போய் விசாரிப்பாங்க…கோர்ட்டில் ஆஜர் படுத்தி தண்டனை வாங்கி தருவாங்க …ஆனா நான் தான் போலீஸ் கிடையாதே ..
இது என் வழக்கு மன்றம்.இங்கே நான் தான் போலீஸ்,ஜட்ஜ் ,வக்கீல் எல்லாம்.உன் ட்ரிப்சில் சொருகி இருக்கும் இது என்ன தெரியுமா..ஹை போடென்ட் போதை மருந்து…இது மீண்டும் உன் ரத்தத்தில் கலந்தால் உனக்கு நரகம் பிரியா கிடைக்கும் ….சோ இதை நான் போட கூடாது என்றால் உண்மைகளை சொல்லு.”என்றான் அவன்.
“என்ன மிரட்டி பார்க்கிறியா…என் வக்கீல் கிட்டே சொன்னேன் …உன்னை..”என்றாள் அவள் கோபத்துடன்.
“யார் வக்கீல் இம்தியாஸ் தானே..ஓஹ் உனக்கு விஷயமே தெரியாதா…போன வாரமே அவனை கிளோஸ் செய்துட்டேன் …அவனை காணோம் என்று அவன் பேமிலி போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து இருக்காங்க …
போலீஸ்சும் தேடுது, தேடுது தேடி கொண்டே இருக்காங்க …தவிர அவன் கூட இருந்த அல்லக்கை ஒரு ஆறு…இல்லை ஏழு …இல்லை ஆறு தான்..அவங்க எல்லாத்தையும் குருவி சுடுவது மாதிரி ,மானை வேட்டையாடுவது மாதிரி வேட்டை ஆடியாச்சு …ஒருத்தனும் உயிரோடு இல்லைங்க மேடம் …
ஸோ அவங்க கதி உனக்கு வேண்டாம் என்றால் கேட்கும் கேள்விக்கு பதில் வேண்டும். ஓஹ் நம்பலையா…இதோ அவங்க செத்ததற்கான சான்று ..”என்றவன் தன் மொபைல் எடுத்து படத்தை காட்ட அது கணக்கில் அடங்கா பிரேதங்களை காட்ட அதில் இருக்கும் அனைவரும் இவர்கள் ஆட்களே என்று அடையாளம் அறிந்து கொண்ட சொர்னாக்காவின் இதயம் ஒரு நொடி நின்று துடிக்க ஆரம்பித்தது.
பயத்தில் தானாய் தலை ஆடியது அந்த பெண்மணிக்கு.
“யார் இதன் பின் இருக்கா ?”என்றான் அவன்
“பேர் எல்லாம் தெரியாது..அவரை “காபோஸ்”என்று தான் தன்ராஜ் கூப்பிடுவார்.”
“தன்ராஜ் யாரு ?”
“மருந்து கடை தன்ராஜ்… இங்கே பஞ்சாபில் தான் மெயின் மருந்து கடை வைத்து நடத்திட்டு இருந்தார். சீமா சோரீ என்ற அரசாங்க அதிகாரியை சுட்டு கொன்றவர் .என் வீட்டுக்காரர் …”என்றாள் அந்த பெண்மணி.
“நீ தமிழ்நாடு தானே…தன்ராஜ் எப்படி உனக்கு கணவன்? ஓஹ் அந்த தன்ராஜுக்கு நீ மனைவியா….இல்லை வேறு ஏதாவதா? …ஏனென்றால் இங்கே ஒரு குடும்பம் அவனுக்கு இருக்கே ….ஓவர் குடியில் ட்ரெயின் ஏறி செத்தவன் தானே “என்றான் அவன்.
மனைவியா என்ற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.என்ன என்று சொல்வாள்?
“தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் போதை மருந்து விற்பனை செய்ய கடை வைத்து இருக்கார்….அங்கே லோக்கல்ல்ல யாரு விக்கறாங்க என்று விசாரித்து என்ணாண்டா வந்தார் …சின்ன புள்ளைகளை வைத்து கடத்தினா தெரியாதுன்னு சொன்னாரு …அவர் சொன்னாக்கா மூணு ஸ்கூல் பொண்ணுங்களை கடத்தினோம்.”என்றாள் அவள்.
“போதை மருந்து எங்கே இருந்து வருது ?”என்றான் அவன்.
“அமெரிக்காவுல மெக்ஸிகோன்னு ஒரு நாடு இருக்காம் …அங்கே இருந்து கேரளாவுக்கு வந்துக்கோம் …அங்கே இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் …இன்னொன்னு இந்த பஞ்சாபு பக்கத்துல பாகிஸ்தான்காரன் இருக்கான் ..அவனுக்கு ஆப்கானு ஒரு நாடு இருக்காம் .அங்கே இருந்து ஒரு வழியாவும் …இன்னொன்னு பெங்கால் வழியா உள்ளுக்கா வரும் அகதிகள் கொண்டு வருவாங்க.”என்றாள் அவள்.
“ஸோ நீங்க பணம் சம்பாதிக்க ஒட்டுமொத்த நாட்டினை நாலா பக்கம் இருந்தும் அழிக்க நீங்க தயங்கவேயில்லை அப்படி தானே …யார் குடும்பம் அழிந்தால் என்ன,யார் பிள்ளை குட்டி செத்தால் என்ன …நீங்க நல்லா இருக்கணும் அதானே…சின்ன பிள்ளைங்களை சிதைக்க கூட நீங்கி தயங்கவே இல்லை …யார் அவன் யார் காபோஸ் ?’என்றான் அவன் கோபத்துடன்.
“தன்ராஜுக்குமே தெரியாது …அந்த ஆளு இந்த ஊரில் பெரிய பதவியில் இருக்கானாம் …யாருமே அவன் முகத்தை பார்த்தது இல்லையாம் …”இருளின் இளவரசன்/prince of darkness “என்று தான் அந்த மெக்ஸிகோ நாட்டில் அவனை கூப்பிடுவாங்களாம் …அங்கே ஏதோ ஒரு ராணுவ அதிகாரி குடும்பத்தையே போட்டு தள்ளினவனாம் …”என்றாள் அவள்.
“அவனை எப்படி சந்திப்பது?”என்றான் அவன்.
“யாருமே சந்தித்தது இல்லை ..எல்லாமே போன் வழி தான் பேசுவானாம் …”என்றாள் அவள்.
“அவனை பற்றி வேறு என்ன தெரியும்?”என்றான் அவன்.
“அவன் ஒரு பெண்ணை தேடிட்டு இருக்கான்னு தன்ராஜ் சொல்லிட்டு இருந்தான் ….அவ பேரு ஸுல்பா.”என்றாள் அவள்.
“யார் இந்த ஸுல்பா?’என்றான் அவன்.
“அவர் கையில் சாகாமல் தப்பி போன ஒரே மெக்ஸிகோ பெண்.அவரை அடையாளம் காட்ட கூடிய ஒருத்தி அவள் மட்டும் தானாம் …இப்போ இந்தியாவில் தான் எங்கோ இருக்கிறாள்…அவளை தான் தேடிட்டு இருக்கார் அவர் .”என்றாள் அவள்.
“போதை மருந்தை எங்கே எல்லாம்,எப்படி எல்லாம் விக்கறீங்க?”என்றான் அவன்.
“சினிமா தியேட்டர்,ஸ்கூல்,காலேஜ் அருகே இருக்கும் கடைகள்,பாஸ்ட் புட்டு கடை, பள்ளிகூடம் போற பசங்களை வைத்து, மருந்து கடை , ஐஸ் கிரீம் வண்டி,பெட்ரோல் பங்கு ,இங்கே ஒரு அரசியல்வாதி மகனின் ஹோட்டல் ஒன்று இருக்கு …இப்படின்னு நிறைய ரூட்டு. .”என்றாள் அவள்.
“சோ ஒரு வழியில் விற்காமல் எல்லா வழியிலும் விக்கறீங்க …நீங்க எல்லாம் நடு தெருவில் நிற்க வைத்தே கல்லால் அடித்து கொள்ள பட வேண்டியவர்கள்.”என்றான் அவன்.
“சும்மா கூவாதே …யார் தான் காசு வரும்னா தப்பு செய்யாம இருக்காங்க …அரசியல்வாதி தொடங்கி, கல்யாணம் ஆன பொம்பளைங்களே இதை விற்கறாங்க …மால் வாங்க பணம் பின்ன எப்படி வரும்?அவங்களே புது புது கஸ்டமர் பிடிச்சின்னு வராங்க …
முடியாதவங்க தங்க பசங்க ,அக்கா தங்கையை எங்க கிட்டே விக்கறாங்க …இந்த புள்ளைங்களும் புது டிரஸ்,வெளிநாட்டு சாக்லேட்,போதை மருந்து கிடைக்குதேன்னு வருதுங்க …இல்லைனா காதல் என்ற பெயரில் எவனாவது இழுத்துட்டு வந்து எங்க கிட்டே வித்துட்டு போறாங்க.
…இதுங்க லூசு மாதிரி அமர காதல் ,தெய்வீக காதல் என்று அவனுங்க எதுக்கு கூட பழகரானுக என்று கூட புரிஞ்சுக்க முடியாத கூமுட்டைகளாய் இருந்து வாழ்க்கையை இழக்குதுங்க …நாங்க என்னவோ வீடு புகுந்து பொண்ணுகளை கடத்தினது மாதிரி பேசுறே … “என்று பேசியவளின் கண்கள் அடுத்த நொடி சொருக ஆரம்பித்து இருந்தது.
அவள் பேசியதை சகிக்க முடியாதவனாய் ஊசி முழு டோஸ் ட்ரிப்பில் ஏற்றி இருந்தான்.ஏற்கனவே ப்ரீத்தி அடித்த போதை மருந்தினால் முடியாமல் இருந்த அவள் உடல்நிலை இந்த அளவுக்கு அதிகமான போதை மருந்தினை ஏற்க முடியமால் மெல்ல தன் செயல் பாடுகளை நிறுத்தி கொள்ள,துடி துடித்து போனது அவள் உயிர்.
“உன்னை விட மாட்டேன் காபோஸ் ….உலகில் நீ எந்த மூலையில் இருந்தாலும் யாரின் பாதுகாப்பில் இருந்தாலும் உன் மரணம் என் கையால் தான் .”என்றவன் மீண்டும் நிதானமாய் அங்கு இருந்து கிளம்பினான்.
காற்று சுத்திகரிப்பு அறையில் இருந்த அந்த கண்ணாடி குடுவையை எடுத்து கொண்டவன்,தன் காரினை கிளப்பி,மீதம் இருந்த அந்த இரவின் இருளில் கலந்து மறைந்தான்.
பயணம் தொடரும் …