OVOV 25
OVOV 25
அன்றைய காலை பலருக்கு அதிக தலைவலியை கொடுத்தது என்றால் மிகையல்ல.விடிந்த பொழுது நன்றாகவே விடிந்தது தான். ஆனால் அந்த நாள் ப்ரீத்தியை ஒட்டுமொத்த மீடியாவின் முன் நிறுத்தும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
வீரேந்தர்,ரஞ்சித் ப்ரீத்தியை மூடி மறைக்க பார்க்க, அவளோ இந்திய அளவில் பேச பட போகிறாள் என்பது அறியாமல் அந்த நாளினை எதிர் கொள்ள ஆரம்பித்தார்கள் அவர்கள்.
தவிர அதுவரை பஞ்சாபில் மறைமுகமாய் செயல்பட்டு போதை மருந்து கூட்டத்தின் தலைவனுக்கு ஒருவன் ஆப்பு வைத்து கொண்டு இருப்பதும்,வெளியே தெரியாமல் போலீஸ்க்கு உதவி கொண்டு இருப்பதும் தெரிய வந்தது.
உள்ளே வந்த டாக்டர்,நர்ஸ்,போலீஸ் எழுப்பிய பிறகே அதுவரை அங்கு இரவு டூட்டியில் இருந்தவர்கள் விழித்தனர்.
‘என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டோம்… அசதி போல ..’என்பது தான் அவர்களின் என்னமாய் இருந்தது. யாருக்கும் தாங்கள் மயக்க மருந்து கொடுக்கபட்டதால் தூங்கி இருப்போம் என்ற எண்ணமே இல்லை.
இரவு பணியாளர்கள் விடை பெற்று சொல்ல,காலை பணி ஏற்றவர்கள் தங்கள் வேலையை தொடர ஆரம்பித்தார்கள். சொர்ணக்காவின் உடல் நிலை பற்றி அறியவும்,விசாரணை நடத்த முடியுமா என்று கேட்க சரணும்,வீரேந்தரும் கூட ஆறு மணிக்கு எல்லாம் ஹாஸ்பிடலுக்கு வந்து இருந்தனர்.
சொர்ணாக்கா அறைக்குள் நுழைந்த நர்ஸ் அவரின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்து இருப்பதை கண்டு பதட்டத்துடன், “code BLUE “என்ற அவசர அழைப்பு பட்டன் அழுத்த,அடுத்த நொடி சில நர்ஸுகளும்,டாக்டர் யோஜித்தும் உள்ளே வந்தனர்.
இதயம் துடிக்க வைக்க எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தும்,adrenelin ஊசி போட்டும்,இதயத்தை பிடித்து அழுத்தியும் கூட அவளின் உயிரை காக்க முடியவில்லை.
வெளியே வீரேந்தர்,சரண் காத்து நிற்க,”சாரி அங்கிள் …தூக்கத்திலேயே உயிர் பிரிந்து இருக்கு.”என்றான் யோஜித்.
“ஹௌ ஹௌ ….நேத்து கூட ஷி வாஸ் ஒகே என்று தானே சொன்னே யோஜித்”என்றார் வீரேந்தர் கோபத்துடன்.
“நான் என்ன செய்யட்டும் அங்கிள்…அந்த அம்மா உடல்,வயசு, உள்ளே போன போதை மருந்தின் வீரியம் அப்படி…சாதாரண அளவை விட நூறு மடங்கு போதை மருந்து உடலில் ஏறி இருக்கு. அதுவும் pure கோகைன் அது. …இத்தனை மணி நேரம் உயிரோடு இருந்ததே அதிசயம் தான்…”என்றான் யோஜித்.
“எனக்கு ஆட்டோபிஸி/autopsy ரிப்போர்ட் எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ கொடு யோஜித்.”என்றார் வீரேந்தர்.
“எஸ் அங்கிள் …”என்றான் யோஜித்.
“பெரியப்பா அப்போ ப்ரீத்தியை விசாரிக்க வேண்டி வருமோ… எதிர்க்கட்சி இதை பெரிசு படுத்தாம விடுவாங்களா…நேத்து அந்த ஐந்து பேர் உயிர் இழப்புக்கே “ஆட்சி சரியில்லைன்னு” ஒவ்வொரு நியூஸ் சேனல்லும் டிபேட் என்ற பெயரில் பத்து பேரை கூப்பிட்டு வச்சு கழுத்தை பிளேடு இல்லாமல் அறுக்கறாங்க …இதுல இதுவும் சேர்ந்தா…”என்றான் சரண் கடுப்புடன்.
“ப்ரீத்தியை ஏன் விசாரிக்கணும்?” என்றான் யோஜித் -தன் நண்பனின் காதலியை,வருங்கால மனைவியை எதற்கு விசாரிக்கணும் என்று சொல்கிறார்கள் என்பது புரியாமல்
“இல்லை இந்த பெண் மேல் போதை மருந்து பாக்கெட் அடித்ததே ப்ரீத்தி தான்.ஒரு ராணுவ வீரரை காக்க தான் அப்படி செய்தால் என்றாலும் , அவளுக்கும் இந்த கேஸேசுக்கும் தொடர்பு உண்டு .ப்ரீத்தி பெயர் எங்கேயுமே நாங்க வெளி சொல்லலை தான்….வீட்டில் வைத்து விசாரிக்கலாம் சரண்…அவசரம் ஒன்றும் இல்லை…செத்தது என்ன பெரிய தியாகியா என்ன? ….”என்றார் வீரேந்தர்.
“விஷயம் தெரியாமல் சிலர் கத்தறாங்க என்றால்,சாவையும் வைத்து அரசியல் நடத்த சில உயர்ந்தவர்கள் தயங்க மாட்டாங்க தான். ஒரு பக்கமா இவங்களே விற்பாங்க…இல்லைன்னா ரெய்டு வரும் தகவல் பார்ட்டிக்கு சொல்லிடுவாங்க…இன்னொரு புறம் மேடை போட்டு “நாடு சீர் அழிகிறது”என்று மைக் பிடித்து கத்துவங்க …வழக்கமாய் நடப்பது தானே.”என்றான் சரண்.
“யெஸ் உண்மை தான்…தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற திமிர்…அப்படியே பத்து லாரி, இருபது பஸ் எறிவது போல்,சில வம்பர்கள் கூட்டம் சோசியல் மீடியாவில்,அப்படி போஸ்ட் போடுவாங்க பாரு…அப்படீங்களா…உங்களுக்கு துணை நாங்க இருக்கோம் என்று இருபது லூசுங்க அதுக்கு கமெண்ட் வேற செய்வாங்க…
உண்மையில் இதுங்க எல்லாம் நாட்டிற்கு எது நல்லது என்று யோசிக்காத மூடர் கூடம்.தங்களின் வருமானம் போகுது என்று உண்மையை மறைத்து அப்படியே கலங்கரை விளக்கம் மாதிரி வரும் பாரு போஸ்ட்..இழுத்து வச்சி நாலு அறை அறையனும் போல் அப்படி ஒரு கோபம் வரும்.”என்றான் யோஜித்.
” என்ன இந்த தடவை எலெக்ஷன் நேரம்…இந்த கட்சியாவது போலீஸ் செயல் பாட்டில் தலையிட மாட்டாங்க.முழு சுதந்திரம் கொடுத்து இருக்காங்க .ஆனா அடுத்து உள்ள பல கட்சி ஆட்க பினாமி பெயரில் வித்துட்டு இருக்காங்க என்று ரஞ்சித் ரிப்போர்ட் சொல்லுது.
அவங்க கையில் ஆட்சி வந்தால் பஞ்சாப் மட்டும் இல்லை ஒட்டுமொத்த இந்தியாவும் குட்டி சுவர் ஆகி விடும்..அந்த லேடி பிடிபடும் போதே முழு போதையில் இருந்து இருக்காங்க என்று மாற்றி தான் ரிப்போர்ட் எழுதணும்.”என்றார் வீரேந்தர்.
“cctv பூட்டேஜ் ரிலீஸ் செய்ய சொல்லி வேற ஆர்ப்பாட்டம் நடக்குதே …இரவு முழுவதும் பதிண்டா ரயில் நிலைய கொள்ளை அதனால் ஏற்பட்ட மரணம் என்பதை தீசிஸ்/ஆய்வு கட்டுரை மாதிரி , கதை எழுதும் எழுத்தாளர்களையே தோற்கடிக்கும் விதமாய் என்னமாய் திரைக்கதை,வசனம்,பாக்கிரவுண்டு மியூசிக் எல்லாம் அதகள படுத்துது ஒவ்வொரு மீடியாவும்.”என்றான் யோஜித் இரவு முழுவதும் நியூஸ் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆனவனாய் .
“அது பிரச்சனை இல்லை ….முதல்வர் நம்ம பக்கம்.அது மாநில பாதுகாப்பு அப்படி இப்படின்னு சமாளிச்சுடுவார்…”என்றார் வீரேந்தர்.
ஒரு நொடி யோசித்த யோஜித்,”இல்லை சார் ….ப்ரீத்தி அடித்த போதை மருந்து ஓவர் டோஸ் ஆகி இவங்க இறந்தாங்களா என்று எனக்கு டவுட் இருக்கு …autopsy முடிந்ததும் எல்லாம் தெரியும் அப்போ சொல்லலாம் என்று நினைத்தேன்…”என்று இழுத்தான் யோஜித்.
“என்ன யோஜித் …இது கொலை என்று சஸ்பெக்ட் செய்யறீயா என்ன?”என்றான் சரண் .
இருக்கும் பிரச்சனையில் இது வேறா என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவர்களால். இதுக்கே மீடியாவில் மீம்ஸ்,போஸ்ட்ன்னு வச்சி செய்துட்டு இருக்காங்க உண்மை அறியாத பொது மக்கள்.இதில் கையில் சிக்கிய முக்கிய குற்றவாளி கொலை என்றால்
“ஆமா அண்ணா …இங்கே தலைமை நர்ஸ் கிட்ட தட்ட இருபது வருடமாய் வேலை செய்யறாங்க.அவங்க செல்ல பெயரே ‘ஆந்தை’ என்று என்று தான் பழைய டீனே சொல்லுவார்.நைட் டூட்டி என்றால் அவங்க தூங்கியதே இல்லை …அந்த அளவிற்கு அவங்க வேலையில் அவங்க பெர்பெக்ட் மெஷின் என்று தான் சொல்லணும்.
ஆனா அவங்களே தூங்கிட்டு இருந்தாங்க அதுவும் தரையில் படுத்து …நெற்றி வேறு புடைச்சி இருக்கு ….இவங்க மட்டும் இல்லை காலை டூட்டிக்கு வந்து எழுப்பும் வரை கிளீனிங் செய்யும் வேலைக்காரங்க வரை எல்லாம் தூங்கிட்டு இருக்காங்க …இங்கே காவலுக்கு இருந்த ரெண்டு போலீஸ் உட்பட…”என்றான் யோஜித் தன் குறுந்தடியாய் தடவியவாறு.
“என்னது காவலுக்கு இருந்த போலீஸ் தூங்கிட்டு இருந்தார்களா?” என்றான் சரண் கோபத்துடன்.
அமைதியாய் இருக்கும் படி சைகை காட்டிய வீரேந்தர்,”என்ன சொல்ல வரே யோஜித் …”என்றார் வீரேந்தர் -தன் சந்தேகம் சரியாய் இருந்து விட கூடாது என்ற வேண்டுதலுடன்.
“ஐ சஸ்பெக்ட் யாரோ இவங்க எல்லாரையும் மயக்க மருந்து கொடுத்து மயங்க வைத்து இருக்காங்க.”என்றான் யோஜித்.
“வாட் …இது எப்படி பாசிபல்? ஒருத்தர் கூடவா அவனை பார்த்து இருக்க மாட்டாங்க …அப்படி யாரும் எதாவது சொன்னார்களா என்ன ?”என்றான் சரண்.
“ஒவ்வொருத்தரிடம் அருகில் சென்று தான் மயக்க மருந்து ஸ்பிரே செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லையே …”என்றார் வீரேந்தர்.
அவர் சொல்ல வருவது என்ன என்பது விளங்கி விட,”இங்கே பொது காற்று சுத்திகரிப்பு யூனிட் இருக்கா யோஜித்?”என்றான் சரண்.
“யெஸ் ஏர் யூனிட் இருக்கு…ஒவ்வொரு தளத்திற்கும் தனி தனி யூனிட். அதில் மயக்க மருந்தை கலந்தால் கூட போதும் தான். செக்யூரிட்டி வர சொல்றேன் அவங்க உங்களை அங்கே அழைத்து போய் காட்டுவாங்க…cctv வீடியோ கூட காட்ட சொல்றேன்…”என்றான் யோஜித்.
அடுத்த நொடி அவன் அழைப்பை ஏற்று அங்கே வந்த ஹெட் செக்யூரிட்டி “தரம்சிங்“ விஷயத்தை கேள்விப்பட்டும்,எந்த பதட்டமும் இல்லாமல்,”ஒகே சார்”என்றான்.
“இந்த அளவிற்கு தான் செக்யூரிட்டி இருக்குமா?… ரொம்ப கேர்லெஸ் தரம்சிங்.”என்றார் வீரேந்தர்.
“சார்…அந்த குரூப்பால் எத்தனை பேர் பாதிக்க பட்டார்களோ!….எத்தனை குடும்பம் அழிந்ததோ!… அதில் எத்தனை பேருக்கு இவங்களை எல்லாம் கூண்டோடு கொன்றால் கூட பகை தீராதோ!…கொலை செய்யணும் என்று முடிவு செய்து விட்டவனை யாராலும் தடுக்க முடியாது தான் .”என்று முனகினான் தரம்சிங்.
“வாட் டூ யு மீன் பை தட்?”என்றார் வீரேந்தர் கோபத்துடன்.
“செத்தது நல்லவ இல்லை…”என்ற தரம்சிங் தோளை குலுக்கி, “இந்த பக்கம் வாங்க…”என்று முன் செல்ல,
“என்ன இப்படி பேசறார்?”என்றான் சரண்.
“எக்ஸ் ஆர்மி மேன்…நாட்டு பற்று அதிகம் உள்ளவர்.எது நியாயமோ அதை மட்டும் பேசுவான்…என் தோழன் தான் ..அவன் நடவடிக்கையே அப்படி தான் இருக்கும்….”என்றான் யோஜித் கையை பிசைந்து கொண்டு.
“நான் autopsyக்கு போறேன் அங்கிள். ஏதாவது தேவை என்றால் தரம்சிங் கிட்டே சொல்லுங்க. இல்லைன்னா எனக்கே கால் பண்ணுங்க.”என்ற யோஜித் விடை பெற, அதற்குள் சரண் தங்கள் போரென்சிக் டீம் ஆட்களை வரும் படி கட்டளை இட்டு இருந்தான்.
சொர்ணாக்கா இருந்த தளம் சீல் வைக்கப்பட்டு அங்கே யாரும் நுழையாத வண்ணம் காவல் போடப்பட்டது.
வீரேந்தர்,சரண் பின்னால் வருகிறார்களா இல்லையா என்று கூடப் பாராமல் முன்னே சென்று கொண்டு இருந்த தரம்சிங்கைத் தொடர்ந்து சென்ற சரண்,வீரேந்தரோடு அந்த ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்த ரஞ்சித் ஆட்களும் சேர்ந்து கொண்டனர்.
விஷயம் கேள்விபட்டு அவன் ஆட்களை கடித்து குதறி இருந்தான் ரஞ்சித். அவனே உணவு, உறக்கம் இல்லாமல் ரா பகலாய் பஞ்சாப் என்ற ஒட்டுமொத்த மாநிலத்தை ரவுண்ட்ஸ் அடித்து,பதுக்கி வைக்க பட்டு,மாநிலத்திற்கு உள்ளே,வெளியே மாற்ற படும் பொருட்களை,ஆட்களை தினம் தினம் பிடிக்க அலைந்து கொண்டு இருக்கிறான். சரியாய் அவன் தூங்கியே பல வாரம் ஆகி இருந்தது.
இதில் அவர்கள் காவலையும், “ஜஸ்ட் லைக் தட்” என்று ஒருத்தன் மீறி,உள்ளே புகுந்து போட்டு இருக்கிறான் என்றால்….
ஆஃபீஸ்ர் மரணத்தில் தொடங்கி, accident என்று மூடபட்டு இருந்த ஐந்து வருட கேஸ் தூசி தட்டி நோண்ட, அது கூவத்தை விட அவர்களை புரட்டி போட்டது.
தங்கள் கட்டு காவலையும் மீறி அவர்கள் கண்காணிப்பின் கீழே ஒரு கொலை நடந்து இருப்பதை ரஞ்சித்,வீரேந்தரால் தாங்கவே முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டுமோ!.
அவர்களின் திறமைக்கு விடப்பட்ட சவால்.
அறைகூவலாகவே தோன்றியது அந்த மரணம்.
இந்த அளவிற்கா அந்த கூட்டத்தின் தலைவன் திறமையானவன்?
அந்த அளவிற்கா அவன் வேர்கள் பாய்ந்து இருக்கிறது?
ஒரே நாளில் தன்னை பற்றிய உண்மை வெளி வர கூடாது என்று, “லூஸ் எண்ட்ஸ்/loose ends ” என்று சொல்லபடும் அவனை கை காட்டும் அனைத்தையும் போட்டு தள்ளுகிறான்.
தலை வலி தான் அவர்களுக்கு மிஞ்சியது.
ஹாஸ்பிடல் பின்புறம் இரவு பெய்த மழையில் எந்த தடயமும் அவர்களுக்கு வெளியே கிடைக்கவில்லை.
அந்த ஏர் யூனிட் சோதித்ததில், icu தளத்திற்கு செல்லும் ஏர் யூனிட் அருகே மட்டும், மயக்க மருந்தினை செலுத்த பயன்படுத்த பட்ட ஒரு பாட்டில் தடம் மட்டும் தூசியில் பதிந்து இருந்தது.
“இங்கே cctv கேமரா பிக்ஸ் செய்யலையா தரம்சிங்?”என்றான் சரண்.
“சார்!… இந்த ஹாஸ்பிடல் இந்த அளவிற்கு இருக்க யோஜித் தன் சொந்த பணத்தை யூஸ் செய்துட்டு இருக்கார். இதுல இது குப்பை கொட்டும் இடம். இங்கே மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து வைப்பாங்க.
தவிர இந்த பக்கம் ஒரு கேமரா வைக்கலாம் என்று யோஜித் சார் கேட்டதற்கு இந்த பகுதி MLA ,தேவையில்லை என்று சொல்லிட்டார். இதற்கு எல்லாம் நிதி ஒதுக்க முடியாதாம். இந்த பகுதியில் பாத்ரூம் போக தான் ஒதுங்குவாங்களாம். அதை எல்லாம்… அவர் இன்னும் பச்சையாய் சொன்னார் சார்.” என்றான் தரம்சிங் கடுப்புடன்.
அறிவு இல்லாதவனை எல்லாம் எது முக்கியம், எது முக்கியம் இல்லை என்று புரியாத கூமுட்டையை எல்லாம் மக்கள் தேர்ந்து எடுப்பதால், பாதிப்பு அடைவது என்னவோ மக்களை பாதுகாக்க இரவு பகல் பாராமல் ஓடும் இவர்கள் தான்.
ஒட்டுமொத்த ஹாஸ்பிடல் கவர் செய்யும் விதமாய் இருந்து இருக்கும் அங்கு ஒரு கேமரா அமைக்கபட்டு இருந்தால்.
maintanence என்று கொடுக்கபடும் பணத்தை வைத்து பளபளா என்று புது டைல்ஸ் ஓட்ட, சுவத்துக்கு சுண்ணாம்பு அடித்து விட்டால் அது தான் renovation /சீரமைப்பாம்.
வீரேந்தருக்கு பற்றி கொண்டு வந்தது.
அவர்கள் அலுவலகத்திலேயே இந்த கூத்து தான் நடந்து கொண்டு இருந்தது.
20 லட்சம் சீரமைப்புக்கு என்று ஒதுக்கபட்ட நிதியை பெரிய அதிகாரிகளின் பாத்ரூமிற்கு டைல்ஸ் ஒட்டியே நாசம் செய்தார்கள். இது பஞ்சாபில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடக்கும் கூத்து தான் என்பது தான் வேடிக்கையே.
ஆனால் கீழ்மட்ட அரசு அதிகாரிகளின் இல்லங்கள் பல சாக்கடைக்கு அருகில் இருந்தாலும் ,குழந்தைகள் வெளியே விளையாடும் பொது அவர்கள் தலையில் விழும் அளவிற்கு மோசமான ஹவுசிங் போர்டு குவார்ட்டர்ஸ் இருந்தாலும் அதை எல்லாம் சரி செய்ய மாட்டார்கள்.
இதோ ஒரு பெரிய அறிவாளியின் கண்டுபிடிப்பு ஒரு கொலையாளிக்கு எந்த அளவிற்கு பயன்பட்டு உள்ளது என்று நினைத்து அவரால் குமுற மட்டுமே முடிந்தது.
அடுத்து யோஜித் புண்ணியத்தால்,அவன் பணத்தால் பிக்ஸ் செய்யபட்டு இருந்த cctv கேமரா, அவர்கள் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்தது.
தலைமை நர்ஸ் உட்பட பலர் அந்த தளத்தில் சட்டென்று தரையில் விழுந்தார்கள். அது மயக்க மருந்தின் வேலை என்று புரிந்து போனது.
சொர்ணகாவின் அறை வாயில் காவலர்களும் மயங்கி கீழே விழ,அடுத்த நொடி மின்னல் போல் ஒருவன் டாக்டர் உடையில் அந்த அறைக்குள் நுழைவதை காட்டியது cctv வீடியோ .கிட்ட தட்ட அரை மணி நேரம் கழித்து அவன் வெளியே வருவதையும்
கொலை செய்ய வந்தவனுக்கு எதற்கு அரை மணி நேரம் பிடித்தது என்று அவர்களுக்கு புரியவில்லை. அரை மணி நேரம் அந்த அறையில் அவனுக்கு என்ன வேலை?
autospy ரிப்போர்ட்,லேப் அறிக்கை சொர்ணாக்கா கன்னத்தில் அறைய பட்டதற்கான தடத்தையும்,உதடு கிழிந்து இருப்பதற்கான ஆதாரத்தையும், ரத்தத்தில் அதிகளவு போதை மருந்தோடு, adrenelin என்ற மருந்தும் கலந்து இருப்பதை சொன்னது.
சத்தியமாய் சரண்,வீரேந்தர் விழி பிதுங்கி போனார்கள்.
“adrenelin அது என்ன செய்யும் யோஜித்?”என்றான் சரண்.
“adrenelin இதை epinephrein என்றும் அழைப்பார்கள் அண்ணா. நம்ம சண்டை இடும் போதோ,இல்லை ஆபத்து என்ற வேளையில் மட்டும் இல்லை ரெகுலர் எக்சர்சைஸ் செய்யும் போதும் இந்த ஹார்மோன் மூளை சுரக்க வைக்கும்.
ஒரு ஆபத்தான சூழ்நிலையில் fight-or-flight response -எதிர்த்து நிற்பது இல்லை அங்கு இருந்து ஓட வைப்பதற்கு இந்த ஹார்மோன் தான் காரணம். இந்த மருந்து அதிகளவு பயத்தையும் உருவாக்கும்.தவிர மெமரி அதிக படுத்தும்.இது செயற்கை முறையில் தயாரிக்க படுகிறது.
மயக்கத்தில் இருப்பவர்களை, இதய துடிப்பு நின்றவர்களின் இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க பயன்படுத்துவார்கள் அண்ணா.நான் கிளம்பும் போது அந்த லேடி ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாங்க. கொல்ல வந்தவனுக்கு அவங்களை எழுப்ப வேண்டியதாய் இருக்கலாம் …”என்றான் யோஜித்.
“தேங்க்ஸ் யோஜித்.”என்று கூறி கிளம்பியவர்கள் விஷயத்தை ரஞ்சித் இடம் சொல்ல,சற்று நேரம் யோசித்தவன்,
“அந்த செக்யூரிட்டி ஆஃபீஸ்ர் சொன்னது போல் இது அந்த கூட்ட தலைவனால் செய்யபட்டது போல் தோன்றவில்லை அங்கிள்…
உள்ளே வந்தவன் கிட்ட தட்ட அரைமணி நேரம் உள்ளேயே இருந்து இருக்கான். adrenelin கொடுத்து மயக்கத்தை தெளிவித்து இருக்கான்…சோ அங்கே அவன் செய்தது interrogation அங்கிள்…. vigilantism “என்றான் ரஞ்சித்.
“அப்படி என்றால் …”என்றான் சரண்.
“போலீசான நாம் அதை செய்தால் அது என்கவுண்டர்… இதுவே அநீதியை எதிர்த்து பொது மக்கள் செய்தால் அதன் பெயர் vigilantism … அமெரிக்காவில் இது மிக பிரபலம்.
இந்த vigilantis பொதுவாக அரசாங்கத்தை சட்டத்தை,காவல் துறையை போதிய வலு இல்லாத ,திறமை இல்லாத ஒன்றாகவே பார்ப்பார்கள்.
ஹிந்தியில் நசருதீன் ஷா, அனுப்பம் கெர் நடித்த, “a wednesday” தமிழில் ‘உன்னை போல் ஒருவன்’ என்று கமல் நடித்து ரீமேக் ஆன படம்.
அதில் வருவது தான் vigilantism. பொது மக்கள் சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டு அவர்களே போலீஸ்,வக்கீல்,நீதிபதியாகி தண்டனை கொடுப்பது.”என்றான் ரஞ்சித்.
“யெஸ் … புரியுது….அக்ஷய் குமார் நடித்த “gabbar is back” (விஜயகாந்த் நடித்த ரமணா ஹிந்தி ரீமேக் ) என்ற படம் கூட ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளை கொல்வது போல் வரும் …பார்த்து இருக்கேன்.”என்றார் வீரேந்தர்.
“யெஸ் யெஸ் இந்தியாவில் அது போல் நிறைய படங்கள் வந்து இருக்கு… தமிழ்,ஹிந்தியில் 80,90களில் அது எல்லாம் மிக பிரபலம். ரமணா,இந்தியன்/ஹிந்துஸ்தானி, அடங்க மறு,நான் சிகப்பு மனிதன், rang de basanti, நேபாளி, போன்ற நிறைய படங்கள் வந்து இருக்கு.
ஆனால் நம்ம மக்கள் அதை படமாய் மட்டுமே தான் எடுத்து கொண்டார்கள். அதை எல்லாம் பாடமாய் எடுத்து கொண்டு தெருவுக்கு நாலு பேர் கத்தியுடன் எல்லாம் அலைந்தது இல்லை…. ஆனால், வெளிநாட்டில் இது எல்லாம் சர்வ சாதாரணம்.
அந்த மைண்ட் செட் நம்ம மக்களிடம் இல்லை. மிஞ்சி போனால் தங்கள் குடும்பத்தை அழித்தவர்களை கொன்று விட்டு போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்து விடுவார்கள்.
இப்படி ஹை லெவல் பிளான் போடுவது எல்லாம் அதிகமாய் பொது மக்கள் செய்தது இல்லை அங்கிள்…சோ உங்க ஊரில் போதை மருந்துக்கு எதிராய் நம்மளையும் தாண்டி இன்னொருவன் தனி ஆளாய் வேட்டை ஆடி கொண்டு இருக்கிறான் போல் இருக்கிறது .”vigilanti justice“என்று சொல்வார்கள்.”என்றான் ரஞ்சித்.
“mardaani என்ற ஹிந்தி படத்தில் இந்த டயலாக் வரும் –
Yeh India hain. India mein agar pachaas log kanoon apne haath mein le, aur kissi ko maare, toh isse encounter nahin, public outrage kehte hain/
இது இந்தியா.இந்தியாவில் 50 பேர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு ஒருவரைக் கொன்றால், அதற்கு பெயர் என்கவுண்டர் இல்லை. அது பொதுமக்களின் ஆத்திரம்/outrage என்று அழைக்கப்படுகிறது.இதை இங்கே ஒருத்தன் செய்து கொண்டு இருக்கிறான் என்று சொல்றீங்களா?”என்றான் சரண்.
“ரொம்ப வருடமாகவே நடப்பது போல் தான் தோன்றுகிறது அண்ணா .. இந்த போதை மருந்து கடத்தலின் கூட்டத்திற்கு வக்கீல் ஒருவனை சந்தேகித்தோம். அவனை ஒரு வாரமாய் காணவில்லை என்று கேஸ் பதிவாகி இருக்கு….
எங்க கையில் சிக்கிய ஒருவனை விசாரிக்கும் போது சில வருடங்களாவே அவர்களின் ஆட்கள் பலர் காணாமல் போவதாய் சொன்னான்… அப்போ இதை இவர்கள் கூட்டமே செய்வதாய் தான் நினைத்தோம் … இப்போ இது வேற மாதிரி போகுதுன்னு புரியுது.”என்றான் ரஞ்சித்.
“இந்த லேடியை போட்டு தள்ளியது ஏன் அந்த கூட்டமாகவே இருக்க கூடாது…இது எல்லாமே என்னவோ கதை போல் இருக்கு…நம்ப முடியவில்லை ரஞ்சித்… பாசிபிலிட்டி இல்லை என்றே தோன்றுகிறது…
நம்ம மக்கள் அந்த அளவிற்கு வெறி பிடித்தவங்க இல்லை.தான் உண்டு தன் குடும்பம் உண்டுன்னு போகும் ரகம். ஏதாவது நடந்தால் பத்து நாள் சோசியல் மீடியாவில் கூவிட்டு அவங்க வேலையை பார்க்க போயிடு இருப்பாங்க.இது தான் ரியாலிட்டி..
மாதக்கணக்காய்,வருடக்கணக்காய் எல்லாம் களத்தில் இறங்கி வேலை செய்வது,போராடுவது எல்லாம் பொது மக்களால் முடியாத ஒன்று ரஞ்சித்.
அவனவனுக்கு குடும்பத்திற்காக உழைப்பதற்கே நேரம் போதவில்லை.இதில் சட்டத்தை கையில் எடுப்பது எல்லாம் ….சுத்த ஹம்பக் .”என்றார் வீரேந்தர்.
“புரியுது அங்கிள்… ஆனால் ஒவ்வொருத்தனும் எந்த குடும்பத்திற்காக இரவு பகல் பாராமல் தங்களையே மெழுகாக்கி உழைக்கிறார்களோ, அந்த குடும்பமே அழிந்து இருந்தால்!… இல்லாமல் போய் இருந்தால்!.. அப்போ?… அதுவும் இது போதை மருந்து சாம்ராஜ்யம். இதனால் பாதிக்கப்பட்டவனாய் அவன் ஏன் இருக்க கூடாது? …
தன் குடும்பம் அழிய எது மூல காரணம் என்று தேடுபவனாய் இருக்க போய், இன்னும் எத்தனை கொடூரங்களை எல்லாம் பார்த்தானோ! …சட்டத்தை கையில் எடுத்து இருக்கிறான் என்றே தோன்றுகிறது …க தை போல் தெரியலாம் …
ஆனால் தார்மீக கோபம்,வெறி என்பது எல்லோருக்கும் பொது தானே அங்கிள். ஒவ்வொரு மனிதனுக்கும், “tipping point “என்று ஒன்று உண்டு தானே!.
ziddi என்ற சன்னி தியோல் நடித்த படத்தில் “Jaanwar ko maarne ke liye jaanwar banna padta hai” (To kill a beast, one has to become a beast)/
ஒரு மிருகத்தைக் கொல்ல, ஒருவர் மிருகமாக மாற வேண்டும்.”என்ற வசனம் ஒன்று வரும் அங்கிள்…சோ இந்த மிருகங்களை ஏன் ஒருத்தன் வேட்டையாட ஆரம்பித்து இருக்க கூடாது?….சாத்தியக்கூறுகள் அதிகம் அங்கிள்.”என்றான் ரஞ்சித்.
“நீ பேசுவதை பார்த்தால் அந்த vigilanti செல்லும் வழி உன்னால் ஏற்க முடிவது போல் அல்லவா இருக்கிறது?”என்றார் வீரேந்தர்.
“இதில் எனக்கு பிடிக்கிறது பிடிக்கவில்லை, சட்டத்தை தனி மனிதன் ஒருவன் கையில் எடுப்பதை ஆதரிக்கிறேன், ஆதரிக்கவில்லை என்பதற்கே இடம் இல்லை அங்கிள்…
இன்றைக்கு பத்து வயது சிறுவன், ஐந்து வயது குழந்தையிடம் தவறுகிறான்…சொந்த அப்பா,பெரியப்பா,சித்தப்பா,மாமா என்று தெரிந்த உறவுகளே மிருகம் ஆகி போகின்றன.பள்ளிகல்லுரி,பொது இடம்,வேலை செய்யும் இடம் என்று எங்குமே நிம்மதியுடன்,பாதுகாப்புடன் பெண்கள் இருக்கிறார்களா என்றால் விடை ….
டாய்லெட் போகும் போது கூட அங்கு கேமரா இருக்குமோ என்று சோதிக்கும் பெண்கள் அதிகம் அங்கிள்…சோ இத்தனை குற்றம்,கொடூரங்கள் சர்வசாதாரணம் ஆகி வரும் போது இருபது முப்பது வருடம் கழித்து தண்டனை என்றால் ,எவனுக்கு மிதப்பாய் இருக்காது?”என்றான் ரஞ்சித்
“அதற்காக ….?”என்றார் வீரேந்தர்
“உலகத்திலேயே மிக பெரிய ஆயுதம் எது தெரியுமா அங்கிள்? ….பயம் …அதிலும் மரண பயம்…உயிர் பயம்….தவறு செய்தால் அடுத்த நொடி மரணம் அதுவும் துடி துடித்து ,அணுஅணுவாய் மரணம் என்ற பயம் இருந்தால் எவனுக்காவது தவறு செய்ய தோன்றுமா?
அந்த மரண பயத்தை விதைத்து கொண்டு இருக்கிறான் இவன். போதை மருந்து விற்றால் மரணம் இலவசம் என்றால் எவன் தான் விற்க துணிவான்?”என்றான் ரஞ்சித்.
“அதற்கு தான் சட்டம்,போலீஸ் …”என்ற சரணை இடை மறித்த ரஞ்சித்,
“சினிமாவில் ஒரு டைலொகு சொல்வார்கள் நம்மை கிண்டல் அடிக்க…எல்லாம் முடிந்த பின் போலீஸ் கடைசியாய் வரும் என்று ….அது உண்மை தானே அண்ணா…உங்க தாத்தா பாட்டி தலைமுறை இருந்த மாதிரி இந்த தலைமுறை இல்லை.
குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துட்டு கையில் போனையும்,டிவி ரிமோட் கொடுத்துட்டு நாம ஒரு போனோடு இருக்கோம்.
இன்ஸ்டன்ட் காதல்,இன்ஸ்டன்ட் திருமணம்,இன்ஸ்டன்ட் டைவோர்ஸ் எல்லாம் சர்வ சாதாரணம்.பத்து வயசு பையன் போர்னோகிராபி பார்க்கிறான் அங்கிள்.குடும்ப உறவு,சமூக கோட்பாடு எல்லாம் அழிஞ்சிட்டே வருது.இது செயின் ரியாக்ஷன் .
எங்கோ ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் வழிகாட்டியாய் இருக்க தவறுவது இன்னொரு குடும்பத்தை சிதைக்கிறது அங்கிள் …சோ நம்ம சட்டமோ,ஜெயிலோ இதற்கு பயன் படாது. அடிப்படையே ஆட்டம் கண்டு கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை.
சமூகமே அவலத்தை நோக்கி போகும் போது அங்கே ஏற்படும் மரண பயம் ஒன்று மட்டும் தான் தவறே நடக்காமல் தடுக்கும் என்பது அவன் கொள்கை போலெ இருக்கிறது.“என்றான் ரஞ்சித்
அதற்குள் சரண் வாக்கி டாக்கி ஒலியெழுப்ப அதை அட்டென்ட் செய்தவன் ,”வாட்.”என்று அலறினான்.
“என்ன சரண்?”என்றார் வீரேந்தர்.
“பாயல் மரணத்தில் அவளுக்கு போதை மருந்து விற்றவனை கஸ்டடியில் வைத்து இருந்தோம் இல்லையா அவன் செத்துட்டானாம்.”என்றான் சரண்.
“வாட்?”இந்த முறை அலறுவது வீரேந்தர் முறையானது.
“எப்படி ஏற்பட்ட மரணம்?”என்றான் ரஞ்சித்.
“தெரியலை …போரென்சிக் ஆட்கள் ஸ்டேஷனில் சோதித்து கொண்டு இருக்காங்க …டெட்பாடி போஸ்ட் மாட்டதிற்கு இங்கே தான் வந்துட்டு இருக்கு.”என்றான் சரண்.
“ஓவரா கவனிச்சிடீங்களா அண்ணா?”என்றான் ரஞ்சித் யோசனையுடன்.
“அதெல்லாம் இல்லை ரஞ்சித்….எங்க பாயல் இறந்தததும் என்கவுண்டர் செய்துடலாமுன்னு தான் நினைச்சோம்…நீ சொன்னியே “tipping point “/தடுமாறும் இடம், ஒரு நொடி அந்த லெவெலுக்கு தான் சென்றோம்.நாங்க தூக்கி வளர்தவ ஆச்சே!… ஆனா செய்யலை… உயிர் போகும் அளவிற்கு எல்லாம் !கவனிக்கலை….”என்றார் வீரேந்தர்.
“வாஸ்தவம் தான்… இந்த ஹாஸ்பிடலில் ஒரு பிசாசு லேடி டாக்டர் இருக்கு…. ஹியூமன் ரைட்ஸ் அது இதுன்னு போன தடவை அக்கியூஸ்ட்டை இங்கே மெடிக்கல் செக் அப் கொண்டு வரும் போதே தயத்தக்கான்னு குதிச்சுது..அதற்காகவே ஒரு வாரமாய் கையே வைக்கலை ….”என்றான் சரண்.
“அப்போ இது எப்படி ….?”என்றான் ரஞ்சித்
பதில் இல்லாமல் விழித்தனர் காவலர்கள் இருவரும்.
யோஜித் ‘இன்னைக்கு யார் முகத்தில் விழித்தோம் ‘என்று தன்னை தானே நொந்து கொண்டவனாய் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சென்றான்.
“குருவி சுடுவது போல்”என்று ஒரு பதம் பயன் படுத்துவார்கள்.அது போல் முகம் தெரியா அவன் விட்டு செல்லும் பிரேதங்களை பரிசோதிப்பதே காலையில் இருந்து வேலை என்றால் அவனுக்கு எப்படி இருக்கும்.
ஹோட்டலில் இறந்த அதிகாரி,ரோட்டில் இறந்த பெண் என்று ஒரே நாளில் அங்கே பல autopsy /பிரேத பரிசோதனை நடந்து கொண்டு இருந்தது.
பிரேத பரிசோதனை மற்றும் லேப் அறிக்கை அது கொலை என்று உறுதி செய்தது.
இந்த முறை “ஸ்லோ பாய்சன்” வகையான neurotoxin,நரம்புகளை பாதிக்கும் விஷம் பயன்படுத்த பட்டு இருப்பதை உறுதி படுத்தியது.
“வாட்!… விஷமா?”என்று அதிர்ந்தார்கள் காவலர் மூவரும்.
“யெஸ் அதுவும் ஸ்லோ பாய்சன் வகை.”என்றான் யோஜித் ரிப்போர்ட்டை பார்த்து கொண்டே
“என்ன விளையாடுறியா யோஜித்?… ஸ்லோ பாய்சன் பத்தி எல்லாம் கதையில் தான் படித்து இருக்கோம். நம்ம இந்திய மக்களுக்கு கத்தி,பிஸ்டல்,பூச்சி மருந்து இந்த லெவெலில் தான் இருக்காங்க… விட்டா அவங்களை ஹாலிவுட் டான் ரேஞ்சுக்கு சொல்லிட்டு இருக்கே…”என்றான் சரண்.
“நீங்க அப்டேட் இன்னும் ஆகணும் அண்ணா .எதையும் கத்து கொடுக்க வரைமுறை இல்லாமல் நூறு வெப்சைட் உண்டு.ஸ்லோ பாய்சன் வகை கதை இல்லை… உண்மை… இதில் பதினேழு வகை உண்டு.பாம்பில் இருந்து எடுப்பது,செடியில் இருந்து எடுப்பது,காளானில் இருந்து எடுப்பது என்று இதில் பல வகை உண்டு அங்கிள்.
நேஷனல் பாய்சன் இன்பர்மேஷன் சென்டர் /national poison information centre,டிபார்ட்மென்ட் ஆப் பார்மகாலஜி /pharmacology டெல்லியில் செயல் பட்டு வருகிறது.வருடா வருடம் இதை பற்றி அறிக்கை எல்லாம் பப்ளீஸ் செய்யறாங்க.சோ இது கதை இல்லை.”என்றான் யோஜித்.
“அப்போ இது எந்த வகை ஸ்லோ பாய்சன்?”என்றார் வீரேந்தர்.
“இது இண்டஸ்ட்ரியல் கிரேடு வகை கெமிக்கல்.சுலபமாய் வாங்க முடியாது …அரசு கட்டுபாடு உண்டு …”என்றவன் அந்த கெமிக்கல் பெயரை சொல்லி,
“இது ஆர்கானிக் வகை. மெர்குரி குடும்பத்தை சார்ந்தது. தண்ணீர் போல் நிறம் இருக்காது.இது உடலில் கலந்ததற்கான சிம்டம் மாசக்கணக்கில் கூட வெளியே தெரியவே தெரியாது.0.1மில்லி கூட அதிக விஷத்தன்மையை கொண்டது.இதன் தாக்கம் பற்றி நிறைய ஆய்வு தகவல்கள் உண்டு.”என்று ரிப்போர்ட் கொடுக்க தலை சுற்றி நின்றார்கள் அவர்கள்.
“இதற்கான காலகெடு ஐ மீன் எப்போ ஒருத்தர் விஷம் கொடுக்கபட்டார் என்று சொல்ல முடியுமா?”என்றான் ரஞ்சித்.
“முடியாது சார் ….ஒரு வாரத்திற்கு முன்பும் கொடுக்க பட்டு இருக்கலாம்.ஒரு மாதத்திற்கு முன்னும் கொடுக்க பட்டு இருக்கலாம்…ஒரு வருஷத்திற்கு முன்பும் கொடுக்க பட்டு இருக்கலாம் .உள் இருந்தே அரிக்கும் கேன்சர் மாதிரி வெளியே சிம்ப்டம் எதுவுமே காட்டாமல் உடலை அரித்து விடும் விஷம். உண்மை சம்பவம் இது.ஒரு ஆராய்ச்சியாளர் இந்த விஷம் 0.1 மில்லி போட்டு இருந்த க்ளோவ்ஸ் மேல் பட்டே 10 மாதம் கழித்து இறந்து போனார்.”என்றான் யோஜித் இன்டர்நெட் பார்த்தபடியே .
“அப்போ சிம்ப்டம்ஸ் இருக்கவே இருக்காதா?”என்றான் சரண் கேட்டதை நம்ப முடியாதவனாய்.
“இருந்து இருக்கலாம் … ஆனால் யாருக்கும் தெரிஞ்சி இருக்காது. அந்த ஆள் செம்ம குடிகாரன் வேற … அவன் குழறி பேசுவதை,நடப்பதை போதை என்று கூட இருப்பவர்கள் நினைத்து இருப்பார்கள். பேச்சு குழறுதல்,பாலன்ஸ் இல்லாமல் நடப்பது, வலி இவர்களுக்கு தெரியவே தெரியாது .pain resistance என்று சொல்வார்கள்…மறதி,கோமா ,மரணம்.”என்று யோஜித் அடுக்கி கொண்டே போக திகைத்தனர் காவலர்கள்.
“அப்போ அதான் அடிக்கும் போது நெஞ்சை நிமிர்த்து நின்று இருந்தானா?… திமிர் என்று நினைத்து இன்னும் கொஞ்சம் பூஜை வைத்தோம் …”என்றான் சரண்.
“நீங்க கையையே வைக்கலை என்றாலும் அவன் expiry தேதி கொடுக்கபட்ட ஆள்… பிழைத்தே இருக்க மாட்டான் .”என்றான் யோஜித். .
(இப்படி ஒரு slow பாய்சன் இருப்பது உண்மை… சமுதாயத்திற்கு,பொது மக்களுக்கு இதன் பெயர் அவசியம் அற்றது என்பதால் பெயர் குறிப்பிடப்படவில்லை)
இங்கே காலை பொழுது இவர்களுக்கு இப்படியாக விடிய அர்ஜுன் என்ற காதலனுக்கு அது ஒரு அழகான உதயமாய் இருந்தது. வழக்கம் போல் காலை ஐந்து மணிக்கே உறக்கம் தெளிந்து விட பக்கத்து அறையில் தன் மனம் கவர்ந்தவள் இருக்கிறாள் என்ற எண்ணமே அவன் முகத்தில் மந்தகாச புன்னகையை ஏற்படுத்தியது.
நேற்று இரவு உறக்கம் வரவேயில்லை.இசையின் துணையோடு காதலை ரசித்து கொண்டு இருந்தான் அர்ஜுன்.கண் மூடி படுத்தாலும் அதற்குள் வந்து நின்று உறங்க விடாமல் சிரித்து கொண்டு இருந்தால் ப்ரீத்தி.எப்போ உறங்கினான் என்று கேட்டால் அவனுக்கே தெரியவில்லை.
காரணம் இல்லாமல் சிரிக்க வேண்டும்,கத்த வேண்டும், குதித்து ஆடி பாட வேண்டும் என்று எல்லாம் தோன்றியது அவனுக்கு.காதல் என்ற நோய் முற்றி கொண்டு இருப்பதற்கான அறிகுறியோ! …
“உள் இருந்தே கொள்ளும் வியாதி! “என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள். காதலும் ஒரு வகையான ஸ்லோ பாய்சன் தானோ!. ஆனால் அதற்கான மருந்தை காதலனிடமோ, காதலியிடமோ.இருக்க வைக்கும் விந்தையான விஷயம் தான் காதல்.
எத்தனையோ இதயங்களை தாக்கி,அவர்களை மாற்றி தான் மட்டும் மாறாமல் இன்றும் அதே கெத்தோடு வாழ்ந்து வரும் காதலுக்கு இணை தான் ஏது ?
காலை கடன்களை முடித்து,அவனின் அவன் காலை வழக்கங்களில் ஒன்றான தற்காப்பு கலைகளான takewando,கராத்தே,தாய்லாந்து நாட்டின் muai தாய் போன்றவவற்றினை செய்து பார்த்தவன் ரெண்டு மணி நேரம் கழித்து உடல் கெஞ்சிய பிறகேதன் பயிற்சியை நிறுத்தினான்.
இந்த தற்காப்பு கலைகளை மும்பை தீவிரவாத தாக்குதலின் போது நான்கு வெளிநாட்டவரை காப்பாற்றிய மெஹுல் வோரா /mehul vora என்ற தற்காப்பு பயிற்சியாளரிடம் பயின்றான்.
பெண்களுக்கு,பள்ளி குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி என்பது சுவாசம் என்பது எத்தனை முக்கியமோ அவ்வளவு முக்கியம் என்பது அர்ஜுன் கருத்து.
போர்க்களத்தில் போரிடும் வீர சிங்கங்கள் இருக்கும் மாநிலம் அல்லவா1 தற்காப்பு கலையில் பஞ்சாபிகளின் காதல் மிக பிரசித்தம்.
பெண்களுக்கு பஞ்சாபில் மட்டும் அல்ல இந்திய அளவில் தன் சொந்த செலவில் இலவச தற்காப்பு பயிற்சி அகாடமி குறைந்தது நூறாவது ஆரம்பிக்க வேண்டும் என்பதே அவன் லட்சியங்களில் ஒன்று.
அவன் நேரடி கண்காணிப்பில் பஞ்சாப் பள்ளிகளில் பெண்களுக்கு இலவச வகுப்புகள் மாலையிலும்,வார இறுதிகளில் நடை பெற்று வருகிறது. பெண்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்கள் ஒரு அகாடமி ஆரம்பிக்கவும் தேவையான உதவியினை பேங்க் லோன் மூலம் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறான்.
கிரேக்க சிற்பம் -ப்ரீத்தி இவனுக்கு வைத்த பெயர் மிக சரியே என்பது போல் எகின் வார்ப்பாய் இறுகி இருந்தது அவன் உடல்.
அதில் துளிர்த்து இருந்த வியர்வை துளிகள் GIAN LORENZO BERINNI என்ற சிற்ப கலைஞ்சர் பளிங்கினால் செய்து இருந்த MARS/போர் கடவுளின் கடவுளின் சிலைக்கே உயிர் வந்தால் இப்படி தான் இருப்பாரோ என்று எண்ணும் விதமாய் இருந்தான் அர்ஜுன்.
அந்த தோள்களின் திண்மையும்,மார்பின் இறுகிய தன்மையும் நிச்சயம் இரும்பால் செய்ததோ அவன் உடல் என்ற ஐயப்பாட்டை தோற்றுவித்தது.
காலில் கேன்வாஸ் ஷூ,ட்ராக் ஷூட் அணிந்தவன்,தன் அறையை விட்டு வெளியே வந்து,ப்ரீத்தி அறை வாயிலில் ஒரு நொடி நின்றான்.
கை தானாய் எழும்பி அவள் கதவை தட்ட முயல கடைசி நொடியில் தலையை குலுக்கி கொண்டவனாய் கீழ் இறங்கி பின் பபுற கதவை திறந்து கொண்டு வயல் வெளிகளின் மத்தியில் அவன் ஜாகிங்/காலை ஓட்டத்தை ஆரம்பித்தான்.
கண் விழிக்கும் போது முதலில் காண விரும்பும் முகம்,இரவு கண் மூடும் போது கடைசியாய் காண விரும்பும் முகம் அவளுடையதாக மாறி போன விந்தை அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
அதுவும் அவளின் அந்த ரோஜா நிற இதழ்கள் வேற கிளோஸ் அப் ஷாட்டில் வந்து அவனை படுத்தி எடுத்தது .
‘பாஸ் …உங்களுக்கு கிளோஸ் அப் ஷாட்டில் தெரிந்தது அது மட்டும் தானா?’என்று தலை சாய்த்து ப்ரீத்தி கேட்பது போல் ஒரு காட்சி விரிய
“ஹே ரோஸ் கார்டன்!… ஓட விடுடீ…இப்படி நட்ட நடு வயலில் லூசு மாதிரி சிரித்து கொண்டு நிற்க வைக்காதே.மானம் போய்டும் ஐயோ படுத்தறாளே!.”என்று உரக்கவே சொன்னவன், தன் ஓட்டத்தை தொடர்ந்தான்.
அவன் அறியாத ஒன்று ,”ஐயோ கொல்றானே! “என்ற இன்னொரு முனகலும் எழுந்ததை தான்.
விடியற்காலையில் உறக்கம் களைந்து விட, பனி மூடிய வயல் வெளிகளும்,இளங்காலை பொழுதும் இளையராஜா ம்யூசிக்கில்
புத்தம் புது காலை பொன் நிற வேளை
என் வாழ்விலே தினம்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
பூவில் தோன்றும் வாசம் அது தான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அது தான் தாளமோ
மனதின் ஓசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்
வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்தோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசை பாடுது வழிந்தோடிடும் சுவை கூடுது
என்ற அழகான பாடல் மனதை வருட பால்கனியில் நின்று தான் mp3 பிளேயர்ரில் பாக்கிரௌண்ட் மியூசிக் ஓட ,பஞ்சாப் வயல் வெளிகளோ பனி சூழ்ந்த,மலர்கள் பூத்து குலுங்கும்,விடியற்காலை இளம்சூரியனின் ஒளியில் கண்ணுக்கு முன் மாயத்தையே சிருஷ்டித்து கொண்டு இருந்தது.
concrete jungle நடுவே வாழ்ந்த ப்ரீத்திக்கு அந்த இடம் கடவுள் என்ற கலைஞ்சனின் அதி உன்னத படைப்பினை ரம்யமாய் அவள் கண்களுக்கு விருந்தாக்கி கொண்டு இருந்தது.
சில் என்று உடலை தழுவிய பனி காற்று,இரை தேடி செல்லும் பறவைகளின் சங்கீதம்,பூத்து குலுங்கும் மலர்கள்,மெல்லிய இசையுடன் வாய் காலில் ஓடும் தண்ணீர் .விவரிக்க வார்த்தைகள் இனி தான் தேட வேண்டுமோ.
‘இயற்கையை விட சிறந்த மருத்துவன்’ வேறு யாருமே இருக்க முடியாது தான்’ என்று இயற்கை அன்னையின் அழகை பாடல் முடிந்த பின்னரும் அந்த மாஜிக்கில் இருந்து வெளியே வர முடியாமல் மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்த ப்ரீத்தியின் காதுகளில் விழுந்தது “ஹுஹா “என்ற சத்தம்.
‘என்னடா இது! ….’என்று அதிர்ந்த ப்ரீத்தி சத்தம் வந்த திசையை நோக்கி செல்ல,அதே பால்கனியில் நடந்து செல்லஅர்ஜுன் அறை வாயிலில் தயங்கி நிற்க அதுவே காலியாக இருந்தது.
‘இங்கே யாருமே இல்லையே! ‘என்று யோசித்தவள் காதில் அதற்கும் அடுத்த அறையில் இருந்து சத்தம் வர மெல்ல திறந்து இருந்த இன்னொரு கதவை எட்டி பார்க்க, சுவாசிக்கவும் மறந்தவளாய் தான் காண்பது என்ன என்று புரியாமல் கண்ணை கூட சிமிட்ட மறந்தவளாய் நின்றாள் ப்ரீத்தி.
அவள் இதயம் துடிப்பதையே நிறுத்தி விட,மூச்சு விடவும் மறந்து போனாள் ப்ரீத்தி.
அவள் கண்கள் கண்டது தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்த அர்ஜுனை தான்.அதுவும் வெற்று மார்புடன்.
“ஜோதா அக்பர்’ படத்தில் வரும் சண்டை பயிற்சி சீன் ரிபிளே மாதிரி தோன்றியது. என்ன அங்கே ஹிருத்திக் வாள் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பான்.இங்கே அர்ஜுன் கராத்தே,டேக்வாண்டோ,தாய் முய் என்று தற்காப்பு கலையை ஏதோ பாலே நடனம் மாதிரி வளைந்து, நெளிந்து, குனிந்து,நிமிர்ந்து,காற்றில் பறந்து என்று ப்ரீத்தியை உறைய வைத்து கொண்டு இருந்தான்.
சட்டென்று ப்ரீத்தியை அங்கு யாராவது பார்த்து இருந்தார்கள் ஏதோ மேடம் டுசாட்ஸ் மெழுகு பொம்மை என்று நினைத்து இருப்பார்கள்.அர்ஜுனை கண்ட உடன் அவள் மூளை என்ற CPU தன் வேலையை நிறுத்தி விட்டு இருந்தது.
ஏ சண்டக்காரா!
குண்டு முழியில
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது
குத்துச்சண்டை
இத்தோட நிப்பாட்டுப் போதும்
முத்தச்சண்டை!
என்னோட நீ போட வேணும்…’ என்று காதில் இருந்த MP3 பிளேயர் வேற பாட்டை ஓட விட, தன் இதழை கடித்து நின்றாள் ப்ரீத்தி.
“அனிமல் மேக்னடிஸம்/animal magnetism” என்று காந்தஈர்ப்பு இருப்பு விசையில் ஒரு மனிதனின் ஆகர்சனத்தை சொல்வார்கள். அர்ஜுனிடம் அது மிக அதிகமாய் இருப்பதாய் தான் தோன்றியது.
‘ஹே லூசு!… ஜிம்மில் எக்சர்சைஸ் செய்வதை பார்த்ததே இல்லையா நீ?’என்று மூளை மீண்டு வந்து கடிக்க,
‘அங்கே எக்சர்சைஸ்,டிபென்ஸ் ப்ராக்டிஸ் செய்தவங்க யாரும் அர்ஜுன் இல்லையே!… ‘என்று இதயம் கவுண்டர் கொடுக்க, மூளை மீண்டும் உறைந்தது.
‘ஹே நீ போகும் வழி சரியில்லை… வேலை செய்ய வந்த இடத்தில் இது எல்லாம் ஓவர்…’
‘வேலை தானே!….அதானே செய்யறேன்…. சைட் அடிப்பதும் ஒரு வேலை தானாம். இப்போ தான் புது சட்டம் கொண்டு வந்து இருக்காங்களாம்.
சொன்னாங்க. அதுவும் கிரேக்க சிற்பம் மாதிரி இருக்கான்… இருக்கார்… உனக்கு தான் தெரியும் இல்லை…எந்த அளவுக்கு எனக்கு அந்த ஜோதா அக்பர் வாள் பயிற்சி சீன் பிடிக்கும் என்று… அதை விட இந்த லைவ் ஷோ ….hmmm’ என்று இதயம் புலம்ப,
‘அடச்சீ! …நயாகரா வாட்டர் பால்ஸ் கிளோஸ் பண்ணு … நானே முழுகிடுவேன் போல் இருக்கு …’ என்றது மூளை.
அவன் பயிற்சி முடிந்து ஸ்போர்ட்ஸ் உடை அணிந்து கண்ணை விட்டு மறைய,அவன் நிச்சயம் ஜாகிங் போகிறான் என்று புரிந்து விட,மீண்டும் செடி மறைவில் நின்று ஓடும் அவனையே பார்த்து கொண்டு நின்றாள் அவள்.
அவள் அதுவரை தன்னை தான் கண்களால் விழுங்கி கொண்டு இருக்கிறாள் என்பதை அறியாத அர்ஜுன்,ப்ரீத்தியை நினைத்தவாறே வீட்டை சுற்றி இருந்த வயல் வெளிகளில் ஓடி கொண்டு இருந்தான்.
நான் உன்னிடம் காதலை சொல்ல தவிக்கிறேன்
நீ என்னிடம் காதலை மறைக்க தவிக்கிறாய்
என்ற தபு சங்கரின் கவிதைக்கு அங்கு உயிர் கொடுத்து கொண்டு இருந்தனர் அவர்கள் இருவரும்.
பயணம் தொடரும் …