காலையில் வயல்களின் சுற்றி அவன் ஓட்டம்.நினைவு தெரிந்த நாளாய் தாத்தா,அப்பாவுடன் அந்த வயல்கள் அவன் ஜாகிங் தடம்.அவனின் இன்னொரு காதல் அல்லவா விவசாயம்?
பசுமை புரட்சி/GREEN REVOLUTION -இந்தியாவில் முதன் முதலில் ட்ரையல் செய்யப்பட்ட மாநிலம் PUNJAB.
பசுமை புரட்சி கடனாய் வாங்கபட்ட அறிவு. இந்தியாவின் வாழ்க்கை முறைக்கோ, இயற்கைக்கோ, மண் வளத்திற்கோ ஒத்து போகாத முறை.
ஆனால், கோடிக்கணக்கான மக்கள் பட்டினியில் வாடி கொண்டு இருந்த போது, உணவு உற்பத்தியை பெருக்க வேறு வழி இல்லாமல் ஏற்று கொள்ளப்பட அரக்கன்.
செயற்கை உரங்களும், பூச்சிக்கொல்லிகளும், அதிக மகசூல் கொடுக்கும் வீரியம் மிக்க வேற்று நாட்டு விதைகளும் இந்த அரக்கனின் ஆயுதம். இந்த அரக்கனால் பஞ்சாப் மட்டும் அல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் உற்பத்தியில் சிகரம் தொட்டு இருந்தாலும், “இந்தியாவின் கோதுமை களஞ்சியம் “என்ற பெருமையை பஞ்சாப் பெற்றாலும்,அதற்கு அந்த மாநிலம் கொடுத்துவிட்ட விலை மிக அதிகம் என்றே சொல்ல வேண்டுமோ?
அந்த மாநிலம் மட்டும் தானா இல்லை ஒட்டுமொத்த இந்தியாவும் விஷத்தை தான் உணவாக உண்டு கொண்டு இருக்கிறோமா?
10,000 வருடமாய் விவசாயத்தில், மண்ணோடு மண்ணாய் வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு தெரியாத மண் வள சூட்சமத்தையா கண்ணாடி அறைக்குள் ஆராய்ச்சி செய்து செயற்கையை விற்பவர்கள் செய்து விட போகிறார்கள்?
பல வருடமாய் மண்ணில் ஊறி போய் இருக்கும் நம் மூதாதையர்கள் எந்த யூனிவெர்சிடியிலும், கல்லுரியிலும் விவசாயத்தை படித்தது இல்லை.
விவசாயம் விவசாயி கையில் இருந்த வரை உணவை மட்டும் அவர்கள் விளைவித்தார்கள்.உணவை மட்டும் தான் மக்களும் உண்டு கொண்டு இருந்தார்கள்.அதனால் தான் நம் தாத்தா பாட்டி எல்லா 80,90 இன்னும் சொல்ல போனால் செஞ்சுரியே அடித்து கொண்டு இருந்தார்கள்.
இந்த செயற்கை அரக்கன் பிடியில் இருந்து மண்ணை காக்க அர்ஜுன் குடும்பத்தால் உருவாக்க பட்டதே “கேத்தி வீரசாத் மிஷன்.”ஆர்கானிக் விவசாயத்தை மீண்டும் உயிர்த்தெழ செய்ய,பல ஆயிரம் வருடமாய் பாதுகாக்க படும் முன்னோர் அறிவை மீட்டு எடுக்கும் குழு.
பெண்களை முன் நிறுத்தி இயற்கையை காக்க அன்னையரை விட்டால் வேறு யாரால் முடியும் என்று “WOMEN ACTION FOR ECOLOGY “என்று ஆர்கானிக் சமையல் அறை,பூச்சிகள் பற்றிய அறிவு,பாரம்பரிய விதை,உணவு பழக்கவழக்கம் மீட்டு எடுப்பு ,மண் வளம் செழிக்க “குர் -ஜல் -அமிர்த் என்று பஞ்சகவ்யம்,வேம்பு,இலை தழை கொண்டு தயாரிக்க படும் மண் வளம் காக்கும் அமிர்தம் செய்முறை ,சிறு,குறு,நிலம் இல்லா விவசாயிகளுக்கு கடன் உதவி என்று எல்லா பக்கம் இருந்தும் இயற்கை விவசாய முறையை செயல் படுத்தி வந்தான் அர்ஜுன்.
தவிர மஹரிஷி என்ற மகேஷ் பாபு நடித்த தெலுங்கு படத்தில் வருவது போல் அவன் பள்ளி குழந்தைகள்,கல்லுரி மாணவர்கள்,சமூக வலைத்தள வட்டம் “activity/இன்டெர்னல்” மார்க்கில், எக்ஸ்கர்சன்னில் விவசாயம் கட்டாயமாய் உண்டு.
விவசாயம் மேல் விருப்பம் கொண்டவர்களை அந்த விவசாயத்தின் மேல் காதலில் விழ செய்யும் அளவிற்கு ட்ரைனிங்கும் உண்டு.
தவிர ரியல் எஸ்டேட் என்னும் இன்னொரு கொடூர கொள்ளிவாய் பிசாசிடம் இருந்து நிலங்களை மீட்டு,மீட்க பட்ட நிலங்களில் விவசாயம் செய்ய ஏற்பாடுகளும் செய்து தர படுகிறது.
இவர்கள் விளைவிக்கும் பொருளை மார்க்கெட் விலைக்கே வாங்கி விற்கும் “உழவர் சந்தை”,”நேஷனல் மார்க்கெட்” “விவசாயி மால்/ஸ்டால்”என்று பல புதுமையான விஷயங்களை புகுத்தி கொண்டு இருந்தான் அர்ஜுன்.
அர்ஜுன் தனது பத்தாவது சுற்றை முடித்த சமயம், வயல்வெளிகளுக்கு நடுவே இருந்த அவன் அலுவலகத்தில் இருந்து ஜன்னல் வழியே எட்டி பார்த்த அவன் தாத்தா உபிந்தர் பாட்டியா அவனை அருகே வரும் படி அழைத்தார்.
காலைவேளையில் அவர்கள் பண்ணையில் இருந்து பால், மற்ற பால் பொருட்கள் உற்பத்தி, சப்ளை மேற்பார்வை இடும் வேலை தாத்தாவினுடையது.
300 குறையாத சாஹிவால்,கிர் போன்ற இந்தியாவின் நாட்டு மாடுகள்.யப்பா அவற்றின் கம்பீரம்,அழகினை காண கண் கோடி வேண்டும்.
அத்தனை மாடுகள் ஒரே இடத்தில் அங்கு ஆர்கானிக் உணவுகள் மட்டுமே கொடுக்க பட்டு வளர்க்க படுகிறது.பஞ்சாபின் மிக சுத்தமான சுகாதாரமான “guru rakshaa பால் பண்ணை “என்ற ISO தர சான்று பெற்று,பால்,பாலை வைத்து செய்ய படும் பன்னீர்,சீஸ்,பால்கோவா,தயிர்,மோர் என்று அனைத்து பொருட்களும் அங்கு தயாரிக்க படுகிறது.
வயது 80 தொட்டாலும் இன்றளவும் விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பால் கறப்பதையும்,மேய்ச்சலுக்கு விளை நிலங்களுக்கு அழைத்து செல்ல படுவதையும்,சரிவிகித உணவு தர படுகிறதா,ஆர்டர் வந்த இடங்களுக்கு பொருட்கள் சரியாய் செல்கிறதா என்பதை எல்லாம் “ஜஸ்ட் லைக் தட் “என்று செய்து கொண்டு இருக்கிறார் அந்த 80 வயது இளைஞ்சர்
“ஹாய் தாத்தா …”புன்னகையுடன் வந்த பேரனை கண்குளிர பார்த்தார் உபிந்தர்.
அவருக்கு உதவியாய் இருந்த வீரேந்தர் மகன்கள் மூவர் வழக்கம் போல் ஓடியாடி தங்கள் வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.தந்தையை போல் அரசாங்க உத்தியோகம்,அழுக்கு படாத AC அறை உத்தியோகம் என்று போகாமல் அந்த பால் பண்ணையில் அவர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டு இருந்தனர்.
“என்ன தாத்தா என்ன சொல்லறாங்க உங்க பேரனுங்க.”என்ற படி ஜன்னல் சட்டத்தில் ஏறி அமர்ந்தான் அர்ஜுன்.
“உன் ட்ரைனிங் ஆச்சே. எனக்கு வேலையே இல்லாம செய்யறானுங்க. என்னமோ இன்டர்நெட் விற்பனையாம்,பால் ATM, flavoured பால் -சாக்லேட், பிஸ்தா பால்,பாதம் பால் அப்படி இப்படின்னு நிறைய ஐடியா அலசி ஆராய்ந்து கொண்டு இருக்கானுங்க.
கருப்பட்டி கோவா,நாட்டு சக்கரை கோவா,பால் பவுடர் சொல்லிட்டு இருக்கானுங்க. இத்தோடு நிற்க கூடாது தாத்தா என்னன்னவோ செய்யணும் அதை பத்தி அண்ணாவிடம் பேசணும் என்று சொல்லிட்டு இருக்கானுங்கோ.”என்றார் தாத்தா அங்கு வேலையில் ஈடு பட்டு இருக்கும் தன் மற்ற பேரன்களை பெருமையுடன் பார்த்தவாறு பெருமையுடன்.
“ஒரு வேலையில் ஈடுபட்டால் அடுத்து என்ன,அதோடு வேறு என்ன எல்லாம் செய்யலாம் என்று கற்று கொடுத்ததே நீங்க தானே தாத்தா. அதான் உங்க பேரன்களும் உங்க வழியில் சிந்திக்கறாங்க.
குட்டை போல் தேங்கி நிற்காமல் புதிது புதிதாய் யோசித்து சிந்து நதி போல் ஓடி கொண்டு இருக்கிறார்கள்.”என்றான் அர்ஜுன் அண்ணன், தம்பிகள் பற்றிய பெருமையுடன்.
மற்ற எல்லா பேர பிள்ளைகளையும்,குடும்பத்தினரும் மேலும் மேலும் தாங்களும் வளர்ந்து,சுற்றத்தையும் வளர வைக்க ஆவண செய்யும் தன் ஆசை பேரன் அர்ஜுனை கண்டவர் முகம் கனிந்தது.
அவன் தலையை ஆதுரமாய் வருடி விட்டவர் ,”அர்ஜுன் ….உனக்கு ப்ரீத்தியை ரொம்ப பிடித்து இருக்கா கண்ணா ?”என்றார் சட்டென்று.
அவர் கேள்வியில் ஒரு கணம் திகைத்த அர்ஜுன்,அடுத்த நொடி புன்னைகையுடன் தன் தாத்தாவை பார்க்க இயலாதவனாய் வேறு எங்கோ பார்க்க ஆரம்பித்தான்.
“வீரா சொன்னான் …அந்த பொண்ணு தன் உயிரை பற்றி கூட கவலைப்படாமல் ரயில் நிலையத்தில் அவங்களுக்கு எப்படி எல்லாம் உதவியது என்று …நம்ம வீட்டுக்கு,உனக்கு ஏத்த பொண்ணு ப்ரீத்தி தான் அர்ஜுன்…”என்ற உபிந்தர் அவன் தலையில் கை வைத்து ஆசீர்வதிப்பது போல் நின்றார்.
“ஆனா உன் கோபத்தை கொஞ்சம் குறைச்சுக்கோ கண்ணா …திருமண ப்ரோபோசல் வேண்டாம் என்று சொல்லிட்டு வேலை பார்க்க வந்து இருக்கு … அந்த பிள்ளையாய் சம்மதிக்கும் வரை கொஞ்சம் பொறுத்துக்கோ கண்ணா.
இது பெண் பிள்ளை மனசு சம்பந்த பட்டது இல்லையா ,கொஞ்சம் பார்த்து பக்குவமாய் தான் நடக்கணும் தம்பி. நம்ம வீட்டிலும் பெண் பிள்ளைங்க இருக்குங்க .அவர்களுக்கு பிடிக்காத எதை யார் செய்தாலும் நாம் பொறுப்போமா …அது எப்பவும் உன் மனசில் இருக்கணும்
நம் வீட்டு பெண்களுக்கு ஒன்று என்றால் நாம் எப்படி துடிப்போமோ அப்படியே தான் மற்ற வீட்டு பெண்களையும் நாம் நினைக்க வேண்டும் கண்ணா. அப்படி பெண்களை தேவதைகளாய் பார்ப்பவன்,அவர்கள் வளர உதவுபவன்,அவர்கள் சிறகு விரிக்க துணையாய் தோள் கொடுப்பவன் மட்டுமே உண்மையான, முழுமையான ஆண்மகன் தம்பி …புரியுதா கண்ணா?’
அது மனசு கோணமா நடத்துக்கோ சரியா …இந்தா கண்ணா …”என்றவர் ஒரு புத்தகத்தை கொடுக்க,அது என்ன என்று பார்த்த அர்ஜுன் கண்களை விரிந்தது.
“முப்பது நாளில் தமிழ் கற்பது எப்படி?”என்று அந்த புத்தகத்தின் அட்டை அவனை பார்த்து சிரித்தது.
“எல்லோர்க்கும் முன்னாடி கொடுத்த நீ சங்கட படுவாய் என்று தான் இங்கே நீ வர காத்து இருந்தேன் …நேத்து அமிர்ஸ்டார் பக்கம் போனேன்…அப்போ உனக்காக வாங்கி வந்தேன்..
எனக்கும் உன் பாட்டிக்கும் கூட ஒரு புக் வாங்கி இருக்கேன்…அந்த பிள்ளை சங்கட பட கூடாது இல்லையா …நானும் கத்துகிறேன் .சரி கண்ணா கிளம்பு .” என்றவரை வேலை விஷயமாய் யாரோ பார்க்க வர கிளம்பினார் அந்த உண்மையான மனிதன் .
பெண்ணை போற்றி புகழும் ஒரு குடும்பத்தின் ஆணி வேர்.
கையில் இருந்த புத்தகத்தை பார்த்து சிரித்த வாறு மீண்டும் வயல் வெளிகளில் நடந்து கொண்டு இருந்த அர்ஜுனை
“அர்ஜுன்”அவன் அப்பா யதுவீர் அழைக்க, வயல் வெளியில் சொட்டு நீர் பாசன கருவியை சரி செய்து கொண்டு இருந்த அவரிடம் சென்றவன்,தாத்தா கொடுத்த பூக்கை தன் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட்டில் மறைத்தான்.
வயல் வெளிகளில் நீர் சரியாக பாய்கிறதா,மண் புழு உரம் சரியாய் தயாரிக்க படுகிறதா என்று சரி பார்ப்பது யதுவீர் வேலை.
காலை தன் தந்தையுடன் கிளம்புபவர் நடை பயிற்சி முடித்து விட்டு வயல் வெளிகளை சுற்றி பார்த்து கொண்டு இருப்பார்.
காய்கறிகள் மார்க்கெட்டுக்கு செல்ல லோட் சரியாய் இருக்கிறதா என்று சரி பார்ப்பார்.
“சொல்லுங்க அப்பா “என்றவாறு தான் தன் முன்னே நின்ற மகனை கண்ட யதுவீர் முகத்தில் அவனை பற்றிய பெருமை பிரகாசித்தது.
“இந்த தடவை மகசூல் வழக்கத்தை விட மிக அதிகம் கண்ணா.ஊடு பயிர் முறை,மண் புழு உரம்,குர் ஜெல் அம்ரித் மண்ணின் வளத்தை அதிகரித்து உள்ளது.இன்னும் 1000 பாக்கெட் மண் புழு உரம் தேவை என்கிறார்கள்.5 கிலோ10 கிலோ என்பதற்கு பதில் லாரியில் லோட் அடிக்க முடியுமா என்று பக்கத்து ஊரில் இருந்து கேட்டு இருக்காங்க.”என்றார் யதுவீர்.
“ஹ்ம்ம் …அக்கம் பக்கத்து ஊரில் சொல்லி வைத்து இருக்கேன். பெரியம்மாவும்,சித்தியிடமும் பேசி இருக்காங்க .அவங்க கிட்டே சொல்லிடுறேன் அவர்களிடம் பேசிய ஆட்களை நாளை முதல் வேலைக்கு வர சொல்லும் மாறு. எப்படியும் இன்னும் 50 பேர் வேலைக்கு வருவாங்க.”என்றான் அர்ஜுன்.
அவன் பெரியம்மாவும் சித்தியும் தான் அவர்கள் ஒட்டுமொத்த தொழிலுக்கு தேவையான ஆட்களை நியமிப்பது,சம்பளம் கொடுப்பது,வேலையாட்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை,காப்பீடு என்று பார்த்து கொள்வது.
“கிரண் முப்பது பிஹாரி பசங்க இருக்காங்க.வேலை கிடைக்குமான்னு கேட்டான்.ஏற்கனவே வெளிமாநிலத்துக்கு காரங்க அதிகமாய் வருவதாக,நமது மக்களுக்கு வேலை இல்லாமல் போவதாய் போன மீட்டிங்கில் ராதாகிஷோர் பெரிய பிரச்சனை கிளப்பினார்.”என்று இழுத்தார் யதுவீர்.
“அவருக்கு அரசியல் ஆசை.தான் மட்டும் தான் ஜனங்களின் ரட்சகன் என்று ஷோ காட்டணும்.ஆனா வேலைக்கு வாங்கடா என்றால் ஒருத்தனும் வர மாட்டானுங்க.கஞ்சா,அபின்னு போதையில் மிதந்துட்டு இருப்பானுங்க .
இவங்களும் வேலை செய்ய மாட்டாங்க,வயித்துக்கு பொழைப்புக்கு வேலை என்று வரங்கவளையும் தடுப்பாங்க …வேன்,ஆட்டோ எல்லாம் ஏற்பாடு செய்து இருக்கோம்.மருத்துவ பரிசோதனை,காப்பீடு என்று எல்லாத்தையும் ஏற்பாடு செய்யறோம்.சத்தான உணவு வேற இங்கேயே செஞ்சி கொடுக்கிறோம் .
மத்த இடங்களை விட ரெண்டு மடங்கு அதிக சம்பளம்,நமக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று செய்தாலும் ….சுஷாந்த் போய் பேச சொல்றேன்.அவன் தான் ராதாகிஷோர் போன்ற ஆட்களுக்கு சரியான பதில் சொல்வான்.அவர் ஊரு மொத்தத்தையும் போதையில் மிதக்க விடுவாராம்….நம்ம வேலையும் கெடுப்பாராம் ….வேலையும் வேண்டும் என்று லூசுத்தனமாய் கத்துவாராம் “என்றான் அர்ஜுன் கடுப்புடன்.
“அந்த ஆள் பத்தி தான் தெரியுமே அர்ஜுன்.”என்றார் யதுவீர்
“நீங்க விவசாய சங்க தலைவர் பதவியை விட்டு கொடுத்தே இருக்க கூடாது அப்பா.விவசாயம் பத்தி ஏக் தோ தெரியாதவன் எல்லாம் தலைவன் பதவியில் அமர்ந்துட்டு உயிரை எடுக்கறாங்க …”என்றான் அர்ஜுன்
“விடு அர்ஜுன்.சுஷாந்த் போய் பேசட்டும்…தானாய் வழிக்கு வருவார். இதை பேசி உன்னை காலையில் டென்ஷன் ஆக்க கூப்பிடலை
கண்ணா ..உனக்கு ப்ரீத்தியை ரொம்ப பிடிச்சி இருக்குன்னு தெரியுது …நேத்து கடைக்கு போனேன் …உனக்காக வாங்கி வந்தேன் …”என்றவர் இன்னொரு புத்தகத்தை தர அர்ஜுன் அசடு வழிய ஆரம்பித்தான்.
அதுவும் முப்பது நாளில் தமிழ் கற்பது எப்படி என்ற RAPIDEX கோச்சிங் புக் அது.
“ஒண்ணும் இல்லை அர்ஜுன்…நமக்கு பிடித்தவங்களுக்காக எதை வேண்டும் என்றாலும் செய்யலாம்… நீங்க ரெண்டு பெரும் புரிஞ்சி கொள்ள மொழி தடையாய் இருக்க கூடாது இல்லை …அந்த பெண்ணிற்காக அவங்க பேசும் மொழி கத்து கொள்வது தவறில்லை…எனக்கும் உங்க அம்மாவும் படிக்கச் கூட ஒரு புக் வாங்கி இருக்கேன். …சரி கண்ணா கிளம்பு ..”என்று யதுவீர் சொல்ல வீட்டிற்கு வந்தவனை வீட்டின் வாயிலில் நின்று தடுத்தார் அமர்நாத்.
“அர்ஜுன் …காலம் முழுக்க உனக்கும் ப்ரீத்திக்கும் நடுவே தீப் எல்லாவற்றையும் மொழி பெயர்த்துட்டே இருக்க முடியாது கண்ணா ….இந்த பிடி ….தமிழ் கற்பது எப்படி என்று புக் வாங்கி வந்து இருக்கேன் …படி ..”என்றவர் வயல்களை நோக்கி செல்ல அவர்களின் அன்பை நினைத்து புன்னகையுடன் உள்ளே சென்றான் அர்ஜுன்.
உள்ளே லெமன் ஜூஸ் குடிக்க அர்ஜுன் வந்து அமர,அவன் ஜூஸ் எடுத்து கொண்டு வந்த சரண் மனைவி ஜோனகிஷா
“அர்ஜுன் தப்பா நினைச்சுக்காதே …நேத்து ராத்திரி உங்க அண்ணா ரொம்ப லேட்டா தான் வந்தார் …இன்னைக்கு காலையில் சீக்கிரம் கிளம்பிட்டார் …உன் கிட்டே பேசணும் என்று சொன்னார் …டைம் இல்லை …அதான் என்னையே கொடுக்க சொல்லிட்டார் …நாங்களும் படிக்கச் ஒரு புக் வாங்கியிருக்கோம் “என்று தமிழ் கற்பது எப்படி என்ற புத்தகத்தை நீட்ட அர்ஜுனுக்கு புரை ஏறியது.
குடித்து கொண்டு இருந்த கோப்பையை கீழே வைத்த அர்ஜுன் அதற்கு மேல் முடியாதவனாய் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.
அவன் சிரிப்பு சத்தம் கேட்டு வெளி வந்தனர் குடும்பத்தினர்.
என்ன என்று ராஷ்மி அவனை பார்வையாலேயே கேட்க எழுந்து நின்ற அர்ஜுன் தன் ஸ்போர்ட்ஸ் உடையில் இருந்து புக் புக்காய் எடுத்து வைக்க,அவனை சுற்றி மினி புத்தகடையே உருவாகி இருக்க அதை கண்டு அங்கு இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
மாடி படியில் இறங்கி வந்து கொண்டு இருந்த தீப்பும் சிரிக்க ஆரம்பிக்க அவனுக்கு பின் வந்த ப்ரீத்தி,என்ன என்று கேட்க,தீப் விளக்கி கூற ப்ரீத்தி திகைத்த நின்றாள்.
வேலை பார்க்க வந்த பெண்ணிடம் பேச ஒட்டுமொத்த குடும்பமும் தமிழ் கற்க புக் வாங்கி இருப்பதை அதுவும் ரெண்டிரெண்டு செட் என்ற அன்பை கண்டு உறைந்து நின்றாள்.
“அவர்களாவது பரவாயில்லை பர்ஜாயீ …நான் ஒரு புது TAB வாங்கி தமிழ் கற்க என்று இருக்கும் எல்லா ஆப் டவுன்லேட் செய்து அண்ணா கிட்டே கொடுக்கலாம் என்று வாங்கி வந்தேன்.”என்ற தீப் கையில் இருந்த TAB காட்ட ப்ரீத்திக்கு தலை சுற்றி போனது.
என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்.
இவளை பஞ்சாபி கற்க சொல்லி இருந்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருந்து இருக்கும். அவளின் பாஸ் உடன் சேர்ந்து ஒட்டுமொத்த குடும்பமும் தன்னோடு பேச தமிழ் கற்க முன் வரும் அந்த அன்பை கண்டு ஸ்தம்பித்து போய் நின்றாள் என்று சொன்னால் சரியாய் இருக்குமோ.
அதற்குள் ராஷ்மி ப்ரீத்தியை பார்த்து விட,”ஹாய் ப்ரீத்தி …குட் மார்னிங் …ஹவுஸ் ஸ்லீப்?என்றார்.
“குட் மார்னிங் ஆண்ட்டி ..ஹாட் ஏ குட் ஸ்லீப் ..”என்றவள் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருக்கும் அர்ஜுனை கண்டவள்,’ஆரம்பிச்சுட்டான் …பார்வையாலே விழுங்குவதை …’என்று நினைத்தவள்,
“குட் மார்னிங் சார்.”என்றாள்.
ஒரு நொடி கண்ணை அழுந்த மூடி திறந்த அர்ஜுன்,”நோ சார் …மீ அர்ஜுன் …கால் அர்ஜுன்.”என்றான் அவள் கண்களை ஊடுருவியவாறு.
‘ஏன் டீ இப்படி படுத்தறே…சார்ன்னு கூப்பிட்டு தூர நிறுத்தாதே …உன் அருகில் இருக்கணும்டீ .”என்றவன் பார்வை அவள் மேல் வெகு ஆழமாய் பதிந்தது.
‘இவள் அணியும் உடைக்கே அழகு சேர்ப்பவள் …ஒட்டுமொத்த அழகை வைத்து இப்படி சாக அடிக்கிறாளே …ஏன் டீ இவ்வளவு அழகாய் பிறந்து தொலைச்சே …
ஐயோ! அப்படி உத்து உத்து பார்க்காதே …உடம்பெல்லாம் என்னவோ ஆகுது …’என்று மனதிற்குள் புலம்பியவனின் கண்கள், அவளை மேல் இருந்து கீழ்,கீழ் இருந்து மேலாக பார்த்து வைக்க ப்ரீத்திக்கு என்னென்னவோ ஆனது.
கண்களால் அங்கு ஒரு வாள் சண்டையே நடத்தி கொண்டு இருந்தார்கள் அவர்கள் இருவரும்.காயம் அதிகம் தான் என்றாலும் காதலில் கண் ஏற்படுத்தும் பாதிப்புகள் சுகமானது தானே
“வா மா உட்கார்.”என்று ப்ரீத்தியை அழைத்து கை பிடித்து ராஷ்மி அவளை சோபாவில் அமர வைக்க, அர்ஜுன் பார்வை கொடுக்கும் இன்ப அவஸ்தையில் இருந்து தப்பித்தால் போதும் என்று சோபாவில் அமர்ந்தாள் ப்ரீத்தி.
அவளை சோதிக்க என்றே அந்த சோபாவிற்கு அடுத்து இருந்த சோபாவில் அமர்ந்தான் அர்ஜுன்.
இருவரின் கால்களும் சென்டிமீட்டர் இடைவெளியில் உரசும் நிலையில் அமர விழித்துவாறு அமர்ந்த ப்ரீத்தியை கண்டு மெல்லிய புன்னகை அர்ஜுன் முகத்தில் உதயமானது .
அவ்வளவு பெரிய ஹாலில் அத்தனை சோபாக்கள் போட பட்டு இருக்கும் போது உரசி கொண்டே தான் அமர்வேன் என்று பிடிவாதமாய் இருக்கும் அவனை என்ன செய்வது என்றே ப்ரீத்திக்கு தெரியவில்லை.
யார் சற்று நகர்ந்தாலும் கால்கள் உரசி விடும் நிலை.
அவன் நகரவில்லை என்றால் என்ன தான் நகர்ந்து அமர முடியும் என்ற நினைவே ஏனோ ப்ரீத்திக்கு இல்லை.
‘ஐயோ சிரிக்காதேடா! …’என்று மனதிற்குள் புலம்பிய ப்ரீத்தி, அந்த ஹால் பார்ப்பது போல் அர்ஜுனை தவிர மற்ற அனைத்தையும் பார்த்து வைக்க,அர்ஜுனோ அவளின் அழகை மிக அருகில் இருந்து பருகி கொண்டு இருந்தான்.
அந்த சுடிதார் அவள் அங்கங்களில் அழகாய் பொருந்தி இருக்க, அர்ஜுன் கண்களுக்கு விருந்தாகி போனது.தலை முதல் கால் வரை அவளை அணுஅணுவாய் ரசித்து கொண்டு இருந்தான் அந்த காதலன்.
அளவுக்கு மிஞ்சினால் எதுவும் திகட்டி விடும். ஆனால் காதலோ ,காதலியின் அழகோ பார்ப்பதற்கு, ரசிப்பதற்கு காதலனுக்கு என்றுமே திகட்டுவது இல்லை தானே.
‘யப்பா!.. பார்க்க பார்க்க இவள் அழகு என்ன இப்படி அதிகமாகி கொண்டே போகுது! …
ஹே பகவான்! இவ்வளவோ அழகை கொடுத்து என்னை ஏன் இப்படி சோதிக்கறே … உதட்டை வேற இப்படி கடிக்கறாளே! …’என்று நேற்று அருந்திய அமிர்தம் மீண்டும் தேவை தான் உயிர் வாழ என்று ஏங்க ஆரம்பித்தது அவன் உடல்,பொருள்,ஆவி அனைத்தும்.
‘ஐயோ எல்லோரும் இங்கே இருக்காங்க …கொஞ்சமாவது மண்டையில் ஏதாவது இருக்கா பாரு ….
ஆளு தான் ஊருக்கே ராஜா …பார்க்கும் பார்வையை பாரு ரோமியோ …
தேக்கு மரம்! …கண்ணை கொஞ்சம் அங்கே இங்கே திருப்பு …உள்ளே எரிமலையை கிண்டி விடறானே …
யப்பா சாமி!…. ‘என்ன பார்வை உந்தன் பார்வை’ என்று பாட வச்சிடுவான் போல் இருக்கே …’மனதிற்குள் அவன் ஒவ்வொரு அசைவுக்கும்,பார்வைக்கும் கவுண்டர் ஓடி கொண்டே இருந்தது ப்ரீத்தி மனதில்.
சட்டென்று அவனுக்கு நினைவுக்கு வந்தது அவன் தமிழ்நாட்டு தோழன் ஒருவன் ஷிம்லாவில் பாடி அவன் கேட்டு இருந்த தமிழ் பாடல் ஒன்று தான்.
“என்ன சாங் இது?ரொம்ப நல்லா இருக்கு.”என்றான் அர்ஜுன்.
“இது உலகம் சுற்றும் வாலிபன் என்ற MGR நடித்த படத்தில் ஒரு பெண்ணை வர்ணித்து படுவது அர்ஜுன்.”என்றவன் அதற்கு ஹிந்தியில் விளக்கம் அளித்து இருக்க,அந்த பாடல் அர்ஜுனுக்கு பிடித்து போனது.
ஏனோ ப்ரீத்தியை பார்க்கும் போது அந்த பாடல் அதன் அர்த்தம் அவளுக்கு எத்தனை பொருத்தமாய் இருக்கிறது என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
ஊடல் அவளது வாடிக்கை
ஊடல் அவளது வாடிக்கை
என்னை தந்தேன் காணிக்கை
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்.
கண்களால் அங்கு ஒரு காதல் கவிதை இருவரால் வரைய பட்டு கொண்டு இருக்க ,ராஷ்மி குரலில் கலைந்தனர் இருவரும் .
ராஷ்மி குரலுக்கு சமையல்கார பெண்மணி பீங்கான் டம்ளர்ரில் டீ எடுத்து வந்து கையில் கொடுக்க,அதை ராஷ்மி ப்ரீதியிடம் நீட்ட அந்த டம்ளர் சைஸ் பார்த்தே ப்ரீத்திக்கு மூச்சடைத்தது.
“டீ யு ட்ரிங்க்?வாண்ட் காபி ?”என்றார் ராஷ்மி.
“டீ ஒகே ஆண்ட்டி.”என்றவள் அதை வாயில் வைக்க அடுத்த நொடி அவள் முகம் அஷ்டகோணலாய் ஆனது.
அது இஞ்சி டீ.
அதுவும் பால் விடாத,காரம் மிகவும் அதிகமாய் இருந்த டீ .
பஞ்சாபிகள் இஞ்சி டீ விரும்பி குடிப்பார்கள்.
அதுவும் அவர்கள் உண்ணும் வெண்ணெய் அளவு,உணவு மலை செரிக்க வேண்டும் என்றால் இஞ்சி இல்லாமல் முடியாது.
‘அயோ!… பயர் சர்வீஸ்சுக்கு யாராவது போன் செய்யுங்கபா …’என்று கதறும் நிலையில் இருந்தாள் ப்ரீத்தி.
அவளையே பார்த்து கொண்டு இருந்த அர்ஜுன் அவள் நிலை சட்டென்று புரிந்து விட, அடுத்த நொடி அவள் கை பிடித்து அந்த கப்பை வாங்கி கொண்டவன்,தான் அருந்தி கொண்டு இருந்த சக்கரை போட்ட லெமன் ஜூஸினை அவள் வாயில் புகட்ட ஆரம்பித்தான்.
பாதி கிளாஸ் அவள் குடிக்கும் வரை அவன் விலகவில்லை.
இஞ்சி டீயின் காரத்தை விட அவன் விரல் பட்ட கன்னம்,தலை எல்லாம் தாறுமாறாய் எரிய ஆரம்பித்து இருந்தது ப்ரீத்திக்கு.
அவன் கை சென்ற இடம் எல்லாம் விவரிக்க முடியாத தீ ஒன்று பற்ற,நெருப்பே இல்லாமல் அந்த பெண்மை உருக ஆரம்பித்து இருந்தது.
“என்ன!..”
“என்ன ஆச்சு! ” என்று பல குரல்கள் பஞ்சாபியில் அக்கறையுடன் வினவ, அர்ஜுன் அவர்களை முறைதான்.
“நம்ம குடிக்கும் அளவிற்கு காரம் அவங்களுக்கு ஒத்துக்குமா என்று யோசிக்க மாட்டிங்களா?”என்றான் கடுப்புடன்.
“ஐயோ!… தம்பி மன்னிச்சுக்கோங்கோ …பாப்பா, நம்ம பக்கம் இல்லை என்று மறந்து போச்சு ..”என்றார் வேலைக்கார பெண்மணி .
“இரும்மா இதை சாப்பிடு …” என்று பிரிட்ஜில் இருந்து குளிர்ச்சியான கீர் எடுத்து வந்து ராஷ்மி தர, அதை அவர் கைகளில் இருந்து பிடுங்காத குறையாய் வாங்கிய அர்ஜுன், ப்ரீத்திக்கு ஊட்டி விட, ப்ரீத்தியின் கண்கள் அர்ஜுனை விட்டு அகலவில்லை.
“மார்னிங் இனி ஜூஸ் மட்டும் கொடுங்க மா … டீயோ காபியோ டிகாஷன், சக்கரை,பால் எல்லாம் தனி தனியே கொண்டு வாங்க.
ப்ரீத்தியே அவங்களுக்கு பிடித்த விதமாய் கலந்துக்கட்டும் …இப்போ ஒகே தானே?” என்றவன் தலையில் அடித்து கொண்டு, சைகை பாஷையில் கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும், ‘O’ என்ற எழுத்து போல் காட்டி கேட்க ப்ரீத்தியின் தலை தானாய் ஆடியது .
மொழி புரியாவிட்டால் என்ன அந்த துடிப்பு,தவிப்பு,அந்த பதட்டம் அவளுக்கு புரிய பாஷை தேவை இல்லை தானே!…
தான் துடித்ததை விட, அர்ஜுன் துடித்தது தான் ப்ரீத்தி மனதில் அழமாய் பதிந்து போனது.
இது தான் அவன் இயல்பு.
தன்னை கவர வேண்டும் என்று எதையும் அவன் செய்யவில்லை.
ஆணழகன்,முக நூல்,சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான followers கொண்டவன்.
பஞ்சாபின் பழமையான கோடீஸ்வர குடும்பம்.
down to earth என்று மனிதர்களை மனிதர்களாய் மட்டுமே பார்க்கும் இயல்பு கொண்டவன்.
பல கன்னிகளின் கனவு நாயகன் என்று அவன் முக நூல் பக்கம் பார்த்ததுமே தெரிந்து போனது.
ப்ரீத்தி தான் அர்ஜுன் முகநூல்,ட்விட்டர் எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து விட்டாளே!.
‘மற்றவர்கள் அனுமதி’ என்று கடிக்க தான் சரண் என்ற அண்ணன் அவளுக்கு இல்லையே!.
அவளை தடுக்க யார் இருக்கிறார்கள்!. தடுத்தாலும் அதை எல்லாம் கேட்கும் ரகமா என்ன ப்ரீத்தி?
தானாய் இருந்தே, அவன் ப்ரீத்தியை கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறான்.
தான் சமாளித்து கொண்டதை பல முறை உறுதி செய்த பிறகே அவன் இருக்கையில் அவன் அமர்ந்ததை கண்ட ப்ரீத்தி அடுத்த நொடி ஷாக் அடித்தது போல் திணற ஆரம்பித்தாள்.
அவள் குடித்து இருந்த டீ கப்பை எடுத்து,அவள் லிப்ஸ்டிக் படிந்து இருந்த இடத்தில் வாய் வைத்து அந்த டீயை குடித்து கொண்டு இருந்தான் அர்ஜுன்.
அப்போ தான் ப்ரீத்திக்கும் உரைத்தது தான் குடித்த லெமன் ஜூஸ் அவன் வாய் வைத்து குடித்து கொண்டு இருந்தது என்பது.
“இட்ஸ் மைன் …” என்று ப்ரீத்தி கிளாஸ் காட்டி சொல்ல,அவள் சொல்வது புரிந்து விட அர்ஜுன் முகம் மீண்டும் மந்தகாச புன்னகையை தத்தெடுக்க ப்ரீத்தி கண்களை ஊடுருவி பார்த்தவாறே, மீண்டும் கப்பில் பதிந்து இருந்த அவள் இதழ் பதிவில் வாய் வைக்க ப்ரீத்திக்கு உடல் சிலிர்த்தது.
‘இதற்கு இவன் என் உதட்டிலே …’என்ற மனதை ,
“அவன் உன் இதழில் … ஹ்ம்ம் சொல்லுமா …. உன் இதழில் நச்சுன்னு ஒரு இச்சு வைத்து இருக்கலாம் என்று சொல்றியா? …’என்றது மூளை.
அர்ஜுன் அப்பொழுது ரயில் நிலைய லிப்ஷேக் பற்றி நினைக்க, அவன் உடலில் அதே சிலிர்ப்பு ஒன்று ஓடியது.
“யெஸ் மைன்…ஒன்லி மைன்…”என்ற அர்ஜுன் குரல், அவளை தீண்ட, அவன் எதை, ‘தன்னுடையது’ என்று சொல்கிறான் என்று ப்ரீத்திக்கு முகம் சிவந்தது.
‘ஐயோ என்ன இவன் சினிமா ஹீரோயின் மாதிரி வெட்கம் எல்லாம் பட வைக்கிறான்.கன்னம் எல்லாம் சூடாகி போனது போல் இருக்கு….
ப்ரீத்தினா கெத்துனு சுத்திட்டு இருந்தேன் … இப்படி என்னை மொத்தமாய் புரட்டி போட்டுட்டியே பனை மரம்…. ‘ என்று மனதிற்குள் அவனை தாளித்து கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.
அவனோ அவள் இதழையே உரிவது மாதிரி அத்தனை நிதானமாய், ரசித்து, ருசித்து அந்த டீ கப்பில் இருந்து குடிக்க, ப்ரீத்திக்கு என்னென்னவோ ஆனது.
தொடாமலேயே ஒருவரை நிலை குலைய வைக்க முடியும்,முத்தமிடாமலே முத்தம் வைக்க முடியும் என்று அர்ஜுன் அங்கே புகுந்து விளையாடி கொண்டு இருந்தான்.
அதற்கு மேல் அதை தாங்க முடியாத ப்ரீத்தியை காப்பாற்ற வந்தவர் மாதிரி வந்த ராஷ்மி,
“சாரி கண்ணா! … நோ ஐடியா …” என்று ராஷ்மி கை பிடித்து மன்னிப்பு கேட்க, ப்ரீத்திக்கு தான் ஒருமாதிரி ஆகி போனது.
“இட்ஸ் ஒகே ஆண்ட்டி …”என்று அதை புன்னைகையுடன் அவள் கடக்க, ராஷ்மிக்கு அவளை இன்னும் பிடித்து போனது.
“வா ப்ரீத்தி ….வீட்டை சுற்றி காட்டுகிறேன்.டிபன் அதற்குள் ரெடி ஆகி விடும் கண்ணா ..”என்றவர் அவளை கை பிடித்து அழைத்து செல்ல,அவர்களுடன் ஜோனகிஷா, அர்ஜுன் பெரியம்மா,அத்தை,அக்கா,தங்கை,அவர்களின் பிள்ளைகள் என்று நண்டு,சிண்டு புடை சூழ ஏதோ அரண்மனையை சுற்றி பார்க்கும் ராணி போன்ற பீல்லை ப்ரீத்தியால் விளக்கவே முடியவில்லை.
ராஷ்மி தவிர வேறு யாருக்கும் இங்கிலிஷ் தெரியவில்லை.
எல்லோரையும் அறிமுக படுத்தி வைக்க, எக்ஸாம் படிக்கச் கூட தான் இத்தனை கஷ்டப்படவில்லை என்றே தோன்றியது.
பஞ்சாபி பெண்களை பற்றி சொல்லவும் வேண்டுமா?
பாதாமில் செய்த வெண்ணை சிற்பம் போல், அவர்களுக்கே உரித்தான எனர்ஜி உடன்,கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் அன்பை மட்டுமே பொழியும் தேவதைகள் அல்லவா?
அவர்களுக்கே உரித்தான ஆரா,சந்தோசம்,ஆர்ப்பரிப்பு ப்ரீத்திக்கு மிகவும் பிடித்து போனது .
“எல்லோர் பெயரையும் இப்போவே தெரிஞ்சக்கணும் என்று ட்ரை செய்யாதீங்க பர்ஜாயீ …மூளை குழம்பிடும்.”என்று அவர்கள் பேசுவதை ப்ரீத்திக்கும்,ப்ரீத்தி கேட்கும் கேள்விகளை அவர்களுக்கும் ட்ரான்ஸ்லட் செய்து கொண்டு இருந்தான் தீப்.
அந்த வீட்டை, தவறு மாளிகையை சுற்றி பார்க்கவே பல நாள் தேவை படுமோ என்று ப்ரீத்தி சீரியஸ்சாக யோசிக்கும் நிலையில் இருந்தாள்.
ஒவ்வொரு இடத்திலும் கலை ரசம் சொட்டியது. பஞ்சாபிகளின் வீரத்தை பறைசாற்றும் விதமாய் பல தலைமுறைகளின் எச்சம் அந்த வீட்டில் இருந்தது.
“வாவ் beautiful …gorgeous …”என்று அங்கு உள்ள படங்களை,வீட்டை சுற்றி அமைக்க பட்டு இருந்த தோட்டத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை ப்ரீத்திக்கு.சுற்றி நான்கு புறமும் இடம் விட்டு தோட்டம் அமைக்க பட்டு இயற்கை கொல்லாமல் அதோடு பின்னி பிணைந்தது போன்ற வீடு.
அந்த வீட்டில் இருப்பவர்களின் மனது போலவே அந்த வீடும் பறந்து விரிந்து அவளை கவர்ந்து கொண்டு இருந்தது.
ஒரு எனர்ஜி,liveliness/உயிர்ப்பு அந்த வீட்டில் இருப்பதாக அவளுக்கு தோன்றியது.
“யெஸ் ரொம்ப beautiful …gorgeous” என்ற மெல்லிய குரல் காதின் அருகே கேட்க அது வரை தோட்டத்தையும் அதில் சிறு பிள்ளைகளின் சந்தோசம் போல், இளம் கன்னியரின் தெவிட்டாத சிரிப்பு போல் பூத்து குலுங்கி கொண்டு இருந்த மலர்கள் அந்த காலை வேளை காற்றில் நடனம் ஆடி கொண்டு இருக்க, மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.
வெகுவாய் நெருங்கி நின்று கொண்டு இருந்த அர்ஜுனை கண்டவளின் இதயம் வெகுவாக துடிக்க,இவன் சொல்லும் ‘அழகு எது?’ என்று ப்ரீத்திக்குள் பெரிய பட்டிமன்றமே நடந்தது.
அருகே மற்றவர்கள் இருக்கும் போது என்று ஒரு சிணுக்கத்துடன் ப்ரீத்தி கண்களை சுழற்ற,அங்கு ஒரு நாடகமே நடந்து கொண்டு இருந்தது.
‘’அப்போ அருகே யாரும் இல்லை என்றால் பரவாயில்லையா உனக்கு?’என்றது மூளை.
‘நீ வேற நடு நடுவே வந்து …’என்றது மனது
‘பின்னே டீனேஜ் பிள்ளை மாதிரி இப்படி எல்லாம் வளைந்து நெளிந்தால் …எனக்கு ஹார்ட் அட்டாக் வ்ருதில்லை ..ப்ரீத்தியா இதுன்னு கேட்க தோணுது இல்லை …எத்தனையோ பேர் ப்ரொபோஸ் செய்தும், ‘சாரி’என்று கடந்து விடும் நீயா! இப்படி அவன் ஒற்றை பார்வைக்கு,அவன் வசிய குரலுக்கு திணறுகிறாய் என்று இருக்கு ‘என்றது மூளை.
‘அவர்கள் யாரும் அர்ஜுன் இல்லையே!..’என்றது இதயம்.
‘உனக்கு என்னவோ ஆகி போச்சு …நீ எப்படியோ போ .’என்றது மூளை கடுப்பாகி.
காதல் என்று வந்து விட்டால் அங்கு இதயங்கள் தான் அரசாளும் என்று லாஜிக் பார்க்கும் மூளைக்கு யார் தான் சொல்வது.
ஒரு நொடி,ஒரு தீண்டல்,ஒரு பார்வை போதும் இதயங்கள் இடம் மாற என்று புரியாத மூளை, அவளை தாளித்து கொண்டு இருந்தது.
ஈர்ப்பு,காதல் என்ற ஒன்று வந்து விட்டால் மூளை சொல்லும் எதையும் தான் மனது கேட்பதே இல்லையே!.
மூளை அமைதியாகி விட,மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பர்கள் என்று கண்களை சுற்றி ஒட்டிய ப்ரீத்தி விழிகள் வியப்பில் அகன்றன.
அர்ஜுனையும்,அவளையும் சுற்றி,நெருங்கி யாருமே இல்லை.எல்லோரும் தொலைவில் நின்று இருந்தார்கள்.
அதுவரை அவளிடம் வெண்கல கடையில் யானை புகுந்தது மாதிரி பாஷை புரியவேயில்லை என்றாலும் பேசி கொண்டு இருந்த பெண்கள் கூட்டம், சட்டென்று தரையில் இல்லவே இல்லாத குப்பையை பெருக்குவது,படியவே படியாத தூசு துடைப்பது,ஏற்கனவே ஊற்ற பட்ட செடிகளுக்கு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது என்று இவர்கள் பக்கம் பார்க்காமல் மிகவும் சின்சியர் வேலை பார்க்க ப்ரீத்தியால் விழிக்க மட்டுமே முடிந்தது.
“இன்னும் காரம் இருக்கா?”என்று தொண்டையில் கை வைத்து அர்ஜுன் கேட்க,ப்ரீத்தி இல்லை என்று தலை ஆட்ட
“என்றுமே இல்லாமல் …டுடே டீ பகுத் டேஸ்டி …”என்றவன் ப்ரீத்தி திகைத்து விழிக்கும் போதே அவளை பார்த்து கண் சிமிட்டியவன் அவளை இடிக்காத குறையாய் உரசி கொண்டு அவளை கடந்து மேல் ஏறி சென்றான்.
மாடி படி ஏறி செல்லும் அவனையே வைத்த கண் வாங்காமல் ப்ரீத்தி பார்த்து கொண்டு இருக்க,உச்சி படிக்கு சென்றவன் திரும்பி அவளை ஒரு நொடி பார்த்துவிட்டு புன்னகையுடன் தன் அறைக்கு சென்று விட்டான்.
‘படு பாவி …பாஷை புரியவில்லை என்றாலும் இதில் எல்லாம் உன்னை அடிச்சுக்கவே முடியாது… டீ பகுத் அச்சாவா உனக்கு! ….ஏன் நாங்க சொல்ல மாட்டோமா லெமன் ஜூஸ் கூட சும்மா ரம்,ஜின்னு,பீர்,வோட்கா அடித்த மாதிரி சும்மா கிக்கா இருந்துச்சுன்னு ..’ என்று மனதிற்குள் பேசி கொண்ட ப்ரீத்தி,மற்றவர்கள் வந்த பிறகும் கூட மாடியில் பதிந்த அவள் பார்வையை மீட்க வில்லை.
அவர்களும் அதை கவனித்தாலும் கவனிக்காத மாதிரியே நடந்து கொண்டார்கள் என்பது தான் ஹைலைட்.
பல முறை தீப் அவர்கள் கேட்ட கேள்வியை திரும்ப திரும்ப கேட்க வேறு வேண்டி வந்தது,ப்ரீத்தியின் கவனம் அவர்கள் பேசுவதில் இருந்தால் தானே!… அவள் தான் அவளின் கிரேக்க சிற்பத்தை எதிர்நோக்கி வழி மேல் விழி வைத்து காத்து கொண்டாட இருக்கிறாளே!
மற்றவர்களிடம் பேசுவது போல் நின்றாலும், அவள் அடி பார்வை நொடிக்கு ஒரு தரம் மாடியை தான் பார்த்து கொண்டு இருந்தது.
‘இவன் இப்போ இப்போ குளிக்க போகலை என்று எவன் தான் அழுதா! …அதான் பாலில் முக்கிய பளிங்கு கிரேக்க சிற்பம் மாதிரி இருக்கான் இல்லை. ….
எருமை!… எருமை!… …கொஞ்சம் சைட் அடிக்கலாம் என்று பார்த்தா தண்ணீர் பஞ்சம் இருக்கும் நிலைக்கு குளிக்க போகிறேன் என்று உயிரை எடுக்கிறான்.’ என்றது அவனை ஒரு நொடி கூட கண் பார்வையில் இருந்து விலகி போவதை விரும்பாத அவள் மனம்.
‘நீ தண்ணீர் பஞ்சத்திற்காக ரொம்ப தான் அக்கறை படறேமா .”என்றது மூளை
அவன் குளித்து முடித்து வெளியே வருவதற்கும் ,அவன் செல் அழைப்பதற்கும் சரியாய் இருந்தது.
அவன் எடுப்பதற்குள் நின்று விட,காலர் ஐடி பார்த்தவன் முப்பதிற்கும் குறையாமல் தன் பெரியப்பா,அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்து இருப்பதை கண்டு புருவம் சுருக்கினான்.
வீட்டில் அத்தனை பேரிடமும் செல் இருக்க, இவர்கள் ஏன் தன் நம்பரை மட்டும் இத்தனை தடவை அழைத்து இருக்கிறார்கள் என்று குழம்பி போனான் .
அவன் அழைப்பதற்குள், அவன் பெரியப்பாவிடம் இருந்தே அழைப்பு வர,அதை ஏற்றவன்,
“என்ன பெரியப்பா! .. ஏதாவது பிரச்சனையா என்ன?”என்றான் வீட்டிற்கு தெரியாமல் அழைத்து இருக்கிறார்கள் என்றால், ஏதோ பிரச்சனை என்பதை அவன் கூறிய அறிவு புரிந்து கொண்டது.
எதிர் முனையில் அவர் பேச பேச அர்ஜுன் திகைத்து நின்றான்.
அதே சமயம் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி கொண்டு இருந்தாள் ஜெஸ்ஸி.
உடலில் சோர்வு இருந்தாலும் அவளின் வாய் மட்டும் ஓயவில்லை.காலை கண் விழித்த நொடி வரை அவள் வாய் பேசுவதை நிறுத்தவேயில்லை.
அதிகம் பேசுவதை விரும்பாதவன் அமன்ஜீத்.
ஆனால், அந்த நொடி ஜெஸ்ஸியின் பேச்சு அவனுக்கு பிடித்தே இருந்தது.பல முறை அவன் உரக்கவே சிரித்து விட,காலை டிபன் எடுத்து வந்த தன்வி கூட அவன் சிரிப்பை வியப்புடன் பார்த்து கொண்டு இருந்தார்.
அமன்ஜீத் பில் செட்டில் செய்து விட்டு வர போக,தன்விக்கு அனைத்தையும் பேக் செய்ய உதவி கொண்டு இருந்தாள் ஜெஸ்ஸி.
அப்போ உள்ளே நுழைந்த நர்ஸ் ஒருவர்,”எக்சிகியூஸ் மீ … இதில் யாரு ப்ரீத்தி?” என்றார்.
“எஸ் ஐ ஆம் ப்ரீத்தி. என்ன வேண்டும்?”என்றாள் ஜெஸ்ஸி.
“மேடம்! உங்களுக்கு இந்த பார்சல் ரெசெப்ஷனில் உங்களுக்காக வந்து இருந்தது. நீங்க டிஸ்சார்ஜ் ஆக போவதாக சொன்னாங்க. அதான் நீங்க கிளம்பும் முன்பே உங்களிடம் இதை கொடுத்து விடலாம் என்று…” என்றவர் ஜெஸ்ஸியிடம் ஒரு பார்ஸலை கொடுத்து விட்டு வெளியேறினார்.
“யாரு ஜெஸ்ஸி?” என்றார் தன்வி.
“நோ ஐடியா ஆண்ட்டி…” என்ற ஜெஸ்ஸி, அந்த பார்ஸலை பிரிக்க,அந்த பார்சல் உள்ளே ஒரு பேப்பரும்,கூடவே கோகெய்ன் பாக்கெட் சிலவும் இருக்க பெண்கள் இருவரும் அதிர்ந்து போனார்கள்.
“என்ன ஜெஸ்ஸி இது ?”என்றார் தன்வி தன் நெஞ்சில் கை வைத்து
‘யார் வேலை இது! … இந்த பார்சல் எதுக்கு எனக்கு கொடுத்து இருக்காங்க ?’என்று யோசித்த ஜெஸ்ஸி, அந்த பேப்பரை பிரித்து பார்க்க ,
“save zulba” என்ற சிகப்பு நிற எழுத்துக்கு கீழ் பல அட்ரஸ் பிரிண்ட் ஆகி இருந்தது.
பில் செட்டில் செய்து விட்டு உள்ளே வந்த அமன்ஜீத் அங்கே இருந்த சூழ்நிலையை கண்டு திகைத்தான்.
அடுத்த நொடி அவன் கைகளை தன செல் எடுத்து வீரேந்தர்ருக்கு அழைக்க, அப்பொழுது தான் அங்கு இருந்து சரண் உடன் கிளம்பிய அவர் ஜீப் ஒரு u டர்ன் போடு மீண்டும் ஹாஸ்பிடல்லுக்கே வந்து நின்றது.
வெகு வேகமாக உள்ளே வந்தவர்கள் ஜெஸ்ஸி இருந்த அறையை ஐந்தே நிமிடத்தில் சென்று அடைய, அவர்களை வரவேற்றது பர்ஸலில் இருந்த கோகெய்ன் பாக்கெட்களும்,பேப்பரில் இருந்த அட்ரஸ் தான்.
“யாருமா zulba?”என்றார் வீரேந்தர் ஜெஸ்ஸியிடம் .
“தெரியல அங்கிள்.எனக்கு அந்த பெயரில் யாரையும் தெரியாதே! …இங்கே அமன் மட்டும் தான் பழக்கம் அங்கிள்.”என்றாள் ப்ரீத்தி.
“இந்த அட்ரஸ் எல்லாம்?”என்ற சரண் கேள்வி உதட்டை பிதுக்கி தெரியாது என்று தலை அசைத்தாள்.
உங்க ரெண்டு பேருக்கும் இது என்ன என்று தெரியுமா?” என்றார் வீரேந்தர் அமன்ஜீத்,தன்வியை பார்த்து.
அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.கண்ணை கட்டி காட்டில் நடு இரவில் விட்டது போல் இருந்தது அவர்களுக்கு.
“நர்ஸ் ஒருவர் தான் எடுத்து வந்து கொடுத்தார்.”என்றார் தன்வி.
அமன் பின் தொடர ஜெஸ்ஸியை அழைத்து கொண்டு நர்ஸ் அறைக்கு சென்றவர்களிடம் தன்னிடம் பார்சல் கொடுத்த பெண்ணை அடையாளம் காட்ட, அவரை விசாரித்ததில் அவர் ஹாஸ்பிடல் வாட்ச்மன் பக்கம் கை காட்டினார்.
அவருடன் சென்று வாட்ச்மேனை விசாரிக்க,கேட் அருகே நின்ற போது ஒரு குழந்தை அதை இங்கே கொடுக்க சொன்னதாக கூறினார்.
“என்ன விளையாடுறியா? … இதுக்குள் என்ன இருக்குன்னு தெரியுமா? அதை போய் ஒரு குழந்தை உன் கையில் கொடுத்தது என்று பொய்யா சொல்றே?”என்று சரண் கை ஓங்க,
“சார்!… குருஜி மேல் சத்தியமாய் நேற்று இரவு ஒரு பதினோரு மணிக்கு ஒரு குழந்தை தான் சார்… இந்த பார்சல் கொடுத்து,’ப்ரீத்தி வீரத்திற்கு என் பரிசு.’ என்று சொல்லி கொடுத்தது சார்.
ராத்திரி வேளை என்பதால் காலையில் கொடுத்துக்கலாம் என்று நானே வச்சிக்கிட்டேன் சார் .காலை இங்கே நிறைய பிரச்சனை நடந்து போச்சு சார்… தரம்சிங் சார் எங்க எல்லோரையும் லெப்ட் ரைட் வாங்கிட்டார்….அதான் உங்களுக்கே தெரியுமே! …
யாரோ வந்து போலீஸ் பாதுகாப்பில் இருந்த பெண்ணை போட்டுட்டாங்க என்று ஒரே பிரச்சனை … இப்போ தான் சார் கொஞ்சம் பிரீயா இருந்தேன்…
‘கொடுக்க மறந்துட்டேனே!’ என்று நர்ஸ் அம்மா கொடுத்துட்டு வந்தேன் சார். மன்னிச்சுக்கோ சார் …” என்றார் வாட்ச்மேன்.
“அந்த குழந்தை எந்த பக்கம் இருந்து வந்துச்சு.வெளியே இருந்தா ,இல்லை ஹாஸ்பிடல் உள் இருந்தா?”என்றார் வீரேந்தர்.
“ஹாஸ்பிடல் உள்ளாக்க இருந்து தான் சார் குழந்தை வந்தது.கொஞ்ச நேரம் இங்கே பார்க்கில் விளையாடிட்டு இருந்துச்சு.அவங்க அப்பா கூட அந்த புள்ளை மேல ஒரு கண்ணும்,செல் மேல ஒரு கண்ணும் என்று இருந்தார் சார்.
அவர் ஏதோ கால் பேசும் போது தான் சார் இந்த பொண்ணு அந்த புதர்க்கு முன் போய் நின்னுச்சு… லூசு மாதிரி புதரை பார்த்து பேசிட்டு இருந்துச்சு.ஒரு செகண்ட் புதருக்குள் போச்சு.
நான் கூட எவனோ பொறுக்கி புள்ளை கிட்டே சிலுமிசம் செய்யறானோ என்று கிட்டே போகலாம் என்று நினைச்ச போது தான், அந்த பாப்பா இந்த பார்ஸலை கையில் எடுத்து வந்து என்னிடம் கொடுத்துச்சு சார் ..”என்றார் வாட்ச்மேன்.
“ஒரு குழந்தை பார்சல் அதுவும் நடு இரவில் கொடுத்தால் அது உனக்கு ஏதோ தப்பாய் படலையா?… உடனே உன் ஹெட் கிட்ட ரிப்போர்ட் செய்யணும் என்று தோன்றலையா? … இடியட்.”என்றான் சரண் எரிச்சலுடன்.
“சார் பாப்பா என்னத்தை சார் அப்படி கொடுத்திருக்க போகுது! …பச்சை புள்ள என்ன மால் எல்லாமா கையில் கொடுக்க போகுது ?”என்றார் வாட்ச்மன் அது தான் உண்மை என்பதை அறியாதவராய்
‘குழந்தை என்னத்தை செய்ய போகுது!’ என்ற எண்ணத்தை உடைக்கவே அதுவும் பஞ்சாபில் சிறார்களை வைத்து தான் கடத்துகிறார்கள் என்பதை இப்படியும் வெளிச்சப்படுத்தி இருக்கிறான், ‘அவன்’ என்பது புரிந்து போனது காவலர்களுக்கு.
அதற்கு மேல் வாட்ச்மேனை விசாரிப்பதில் உபயோகம் இல்லை என்றதும் தரம்சிங்கிடம் விஷயத்தை சொல்ல ,அவனோடு cctv வீடியோ ரெகார்ட் ஆகி இருந்ததை எடுத்தார்கள்.
அந்த குழந்தை விளையாடுவது தெரிந்தது.
புத்தரின் அருகே சென்று நின்று பேசுவதும் ,ஒரு நொடி புதருக்குள் காணாமல் போவதும், அடுத்த நொடி அந்த பார்ஸலை வாட்ச்மேனிடம் கொடுப்பதும் பதிவாகி இருந்தது.
ஆனால் அந்த புதருக்குள் நின்றவன் யாரு என்பது மட்டும் அவர்களால் பார்க்க முடியவில்லை.
ஒருவேளை அந்த MLA லூசுத்தனமாய் அங்கே ஒரு கேமரா வருவதை தடை செய்யாமல் இருந்து இருந்தால் அவன் யார் என்று தெரிந்து இருக்குமோ!.
‘OUT OF THE BOX THINKING’ என்பது எல்லா துறைக்கும் அதி முக்கிய தேவை என்று அறியாத ,எல்லாவற்றிக்கும் தான் மட்டுமே காரணமாய் இருக்க வேண்டும் என்று நினைத்த சுயநலவாதியின் முடிவு, அவர்களை எப்படி எல்லாம் படுத்தி எடுக்கிறது என்று நொந்து போன வீரேந்தர் அங்கு இருந்த டேபிள் மீது ஓங்கி குத்தினார்.
அங்கு அவர்கள் யோசிக்க தவறியது ஒன்று உண்டு.
‘அவன்’ வீரத்திற்கு பரிசு” என்று அனுப்பியது எந்த ப்ரீத்திக்கு என்பதை.
நேற்று இரவு வரை இன்னொரு ப்ரீத்தியும் அங்கே தான் இருந்து இருக்கிறாள் என்ற உண்மை ஏனோ அவர்களுக்கு மறந்து போனது.
தவிர அவன் ரெண்டில் ஒரு ப்ரீத்தியை bait/துண்டிப்புழுவாக பயன்படுத்த துணிந்து விட்டான் என்பதும் அவர்களுக்கு புரியவில்லை.
அவர்கள் முன்னே ஒரே நாளில் பல பிரச்சனைகள் எழுந்து நிற்க அதில் “ப்ரீத்தி” அடிபட்டு போனாள்.
பெயர் குழப்பத்தால், டிக்கெட் மாறியதால் ரெண்டு ப்ரீத்திகளும் இடம் மாறி இருப்பதை போல், மீண்டும் ஒரு பெயர் குழப்பம் ஏற்பட்டு இருந்தது.
ஒருபுறம் கஸ்டடி மரணம், இன்னொரு புறம் ஹாஸ்பிடல் கொலை, அடுத்த பக்கம் தோண்ட தோண்ட வந்து கொண்டு இருக்கும், ‘ accident’ வழக்குகள், மீடியா, அரசியல்வாதிகள் பிரஷர், இவற்றை மோப்பம் பிடித்து விட்ட மீடியா என்று அவர்கள் காலை முதல் பம்பரமாய் சுழற்ற பட்டு,எல்லா பக்கமும் அடி வாங்கி கொண்டு இருந்தார்கள்.
ப்ரீத்தியை சுற்றி மாய வலை இல்லை சுருக்கு கயிறு ஒன்று நெருங்கி கொண்டு இருந்தது.
உபயம் -விஜிலாண்டி.
இதில் சிக்க போவது எந்த ப்ரீத்தி?
வீரேந்தர் அர்ஜுன் திகைக்கும் விதமாய் அப்படி என்ன சொன்னார்?
இன்னும் என்ன எல்லாம் திகைப்புகள்,அதிர்ச்சிகள் கொடுக்க போகிறான் அந்த பஞ்சாப் ARROW -விஜிலாண்டி?
பயணம் தொடரும் …