OVOV 27

அர்ஜுன் வீட்டில் காலை உணவு தயாராகி இருக்க, ராஷ்மி அர்ஜுனை சாப்பிட அழைத்தது கொண்டு இருந்தார்.

“என்ன ஆச்சு இவனுக்கு…எவ்வளவு நேரம் தான் கூப்பிடறது.”என்று  ராஷ்மி கடுப்பாகி விட, அவருக்கு மேல் பயங்கர டென்ஷனில் இறங்கி கொண்டு இருந்த மகனின் முகம் அவருக்கு ஏதோ சரியில்லை என்பதை சொல்ல,என்னவென்று பார்வையில் கேட்டவருக்கு ப்ரீத்தியை கண் காட்டி ‘பிறகு சொல்றேன்’ என்றான்.

தீப் ப்ரீத்தியிடம் பேசி அவளை வயிரு குலுங்க சிரிக்க வைத்து கொண்டு இருந்தான்.

எல்லாம் அர்ஜுன் -அமன் மோதல் பற்றி தான்.

அமர்நாத் பைசாகி அன்று ஹார்ட் அட்டாக் வராத குறையாய்,  சினிமா ஹீரோயின் போல், “வீல் “அலற வைத்ததை தான் சொல்லி கொண்டு இருந்தான்.

சாதாரணமாய் ப்ரீத்தி புன்னகைத்தாலே, ‘குணா கமல்’ மாதிரி ரியாக்ஷன் கொடுக்கும் அர்ஜுன், ப்ரீத்தி வாய் விட்டு சிரிப்பதை கூட கண்டு கொள்ளாதவனாய்,  ஏதோ யோசனையோடு படிகளில் இறங்கி கொண்டு இருந்தவன் அப்படியே நின்று விட்டான்.

வீரேந்தர் போன் செய்து சொன்ன விஷயம் அப்படி பட்டது ஆயிற்றே.’

விஜிலாண்டி’ ப்ரீத்தியை தூண்டில் புழுவாக பயன் படுத்த ஆரம்பித்து விட்டதற்கான ஆரம்ப வேலைகள் மிக ஜரூராக நடந்து கொண்டு இருக்க,பின் இருந்து அதை செய்தவன் “அவன்”என்றே அறியாமல் அதை பற்றி கூறி இருந்தார் வீரேந்தர்.

ப்ரீத்தியின் துணிச்சல் பற்றி அர்ஜுனுக்கு சந்தேகம் இல்லை.

மற்றவர்கள் என்றால் தன் உயிரை பற்றி யோசிக்காமல் செயல் பட்டு விடுவாள் என்பதை தான் அவன் ரயில் நிலையத்திலேயே பார்த்து விட்டானே.

ஆனால் இதை ப்ரீத்தி எப்படி எடுத்து கொள்வாள் என்பதில் அவனுக்கு அதிக குழப்பம் இருந்தது.

வெளியே அந்த ரிவோல்வர் ரீட்டா,tomb ரைடர் லாரா கிராப்ட் மாதிரி துணிச்சல் இருந்தாலும்,அதையும் தாண்டி இளகிய மனதிற்கு சொந்தக்காரி தான் அவன் ப்ரீத்தி.

மாடி படியில் நின்றவன் சத்தமாக,”தீப்”என்று அழைக்க தீடிரென்று தன் அண்ணன் குரல் கேட்க,”

வீர்ஜி”என்றவாறு ஓடி வந்தான் தீப்.

அர்ஜுன் முகம் தெளிவில்லாமல் இருப்பதை கண்டு,”என்ன வீர்ஜி.என்ன ஏதாவது ப்ரோப்ளேமா?”என்றவனிடன் அர்ஜுன் ஏதோ சொல்ல அவன் திகைப்பதும் தெரிந்தது.

“இப்போ என்ன செய்வது வீர்ஜி?.நீங்க சொல்வதும் சரி தான்… அவங்க மனசு இளகியது தான்.” என்றான் தீப் கீழே ராஷ்மியுடன் பேசி கொண்டு இருந்த ப்ரீத்தி மேல் பார்வையை ஒட்டியவனாக .

“மறைச்சுடு… ஹால்,அவங்க ரூம்,கெஸ்ட் ரூம் எல்லா எல்லாவற்றிலும் இருக்கும் டிவியை.  வீட்டில் இருக்கிறவங்க காதிலும் போட்டு வை. பேச்சுவாக்கில் எதையாவது உளறிக் கொட்ட போறாங்க. “என்றான் அர்ஜுன் யோசனையுடன்.

“அவங்க போன் வீர்ஜி .”என்றான் தீப்.

“தேவை படாது.அவளுக்கு தான் பஞ்சாபி தெரியாது இல்லை …போனில் எல்லாம் நியூஸ் அதுவும் பஞ்சாபி நியூஸ் எல்லாம் பார்க்க மாட்டா …தவிர இது ஆல் இந்தியா அளவில் ஒளிபரப்பு ஆகவில்லை என்று தாயா/பெரியப்பா சொன்னார்.”என்றான் அர்ஜுன்.

அவன் சமயோஜிதம் கண்டு வழக்கம் போல் ஒரு பெருமை தீப் மனதில் எழ,அவன் சொன்னதை செய்ய விரைந்தான் தீப்.

ஆனால் பிளான் போட்ட சகோதரர்கள் அறியாத ஒன்று இனிமேல் தான் ப்ரீத்தி இந்தியாவிற்கே தெரிய வர போகிறார்கள் அதுவும் அன்றே  என்று.

அர்ஜுன் சொன்னது போல் தீப்,  ப்ரீத்தியை இருளில் வைக்க,வெளியுலகில் குறிப்பாக பதிண்டா அரசு மருத்துவ மனையில் என்ன நடக்கிறது என்று ப்ரீத்தி அறியாமல் இருக்க,  தீப் வேலை செய்து கொண்டு இருக்க ,அதை இரு கண்கள் பார்த்து கொண்டே இருந்தது.

Shinchan club - Shinchan club updated their profile picture.

சின்சான் போல் முகத்தை வைத்து கொண்டு,இடுப்பில் ஒரு கையும்,வாயில் லாலி பாப் ஒன்றும் சப்பி கொண்டு,  தீப் யாருக்கும் தெரியாமல் செய்வதாய் நினைத்து கொண்டு இருந்த வேலையை பார்த்து கொண்டே இருந்தது குழந்தை ஒன்று .

இவங்களுக்கு ஆப்பு வெளியே இல்லை, உள்ளேயே தான் இருக்கிறது என்பதை ஏனோ அர்ஜுனும், தீப்பும் அறியவில்லை.

தீப் பின்னாலேயே அலைந்து கொண்டு இருந்த அந்த சின் சான் அவன் மறைத்து கொண்டு இருந்த அனைத்தையும்,  மீண்டும் மறைவிடத்தில் இருந்து வெளியே எடுத்து கொண்டு இருந்தது.

இது எதையும் அறியாத தீப் அர்ஜுனுக்கு,  “டன்”என்று சைகை காட்ட இறங்கி வந்த அர்ஜுன் ஒகே என்பது போல் தலை அசைத்தான்.

“வா மா உட்கார்….”என்று ராஷ்மி ப்ரீத்தியை அங்கு இருந்த நீண்ட டைனிங் டேபிள் அமர வைக்க,அவளின் அடுத்த சீட்டில் அமர்ந்தான் அர்ஜுன்.

‘என்ன ஆச்சு! … போகும் போது நல்லா, ‘புன்னகை மன்னன்’ மாதிரி தானே போனான். வரும் போது,  ‘உர்ங்கோட்டனுக்கு கசின் பிரதர் ‘மாதிரி முகத்தை வச்சிட்டு வரான் …

என்னவா இருக்கும்! … பிசினெஸ் பிரச்சனையா?’ என்று தான் ப்ரீத்தியால் நினைக்க முடிந்தது.

டிபன் என்றதும் அந்த இடத்தில் வாண்டுகளின் சத்தம் அதிகமாகி இருந்தது.

மற்ற பெண்கள் குழந்தைகளை கவனித்து கொள்ள,ராஷ்மி அர்ஜுனையும், ப்ரீத்தியையும்  கவனித்தார்.

பரிமாறவா?… ஏதாவது உதவி செய்யவா?’ என்று கேட்ட ப்ரீத்தியை அவர்கள் எந்த வேலையையும் செய்ய விடவே இல்லை.

ப்ரீத்தியோ பரிமாறும் ராஷ்மியையோ, பறிமாற படும் உணவினையோ  கவனிக்கும் நிலையில் இல்லை.

அவள் முகம் அர்ஜுன் முகத்தை விட்டு நீங்குவேனா என்று அடம் பிடித்து கொண்டு இருந்தது. பின்னே அவன் முகம் சுணங்கி அமர்ந்து இருக்கும் போது அவள் கவனம் இங்கு,  அங்கு திரும்புமா என்ன?

“அர்ஜுன்!… முதலில் சாப்பிடு. ” என்று ராஷ்மி அதட்டவும் தான், தன் யோசனையில் இருந்து மீண்ட அர்ஜுன், தன் முகத்தையே கேள்விக்குறியாய் பார்த்து கொண்டு இருக்கும் ப்ரீத்தியை  பார்த்ததும், அவன் முகம் மீண்டும் புன்னகையை தத்து எடுத்தது.

‘என்ன?’ என்ற ப்ரீத்தியின் கண்களில் இருந்த கேள்விக்கு ‘ஒன்றும் இல்லை’ என்று தலை அசைத்தவன் அவள் கவனத்தை திசை திருப்ப சட்டென்று அவளை பார்த்து கண் அடித்தான்.

“ஸ்ஸ்ஸ் “என்று மூச்சு ஒரு நொடி உள் இழுத்த ப்ரீத்தி,  அமர்ந்த நிலையிலேயே உறைந்து விட்டாள்.

அவன் கண்கள் என்னும் புவி ஈர்ப்பு விசையில் அவள் மனம் என்னும் கோளானது சிக்கி கொள்ள மீள முடியாமல் அவனை சுற்றியே இருந்தது.

அவள் நிலையை நன்கு அறிந்த அர்ஜுன் அவள் மேல் வைத்த கண் எடுக்காமல் அவளையே பார்த்து கொண்டு இருக்க, இப்பொழுது அவளின் காந்த ஈர்ப்பு விசையில் விழுவது அவன் முறையானது.

உணவிற்குப்பதில் அங்கு பரிமாற பட்டு கொண்டு இருந்தது பார்வைகள்.

கெமிஸ்ட்ரி,பயாலஜி,மேக்னடிஸம்/காந்தவியல் என்று எல்லாமே அங்கு எக்குத்தப்பாய் தன் வேலையை காட்டி கொண்டு  தங்களுக்கு என்று காதல் பால்வெளி, தனி தீவில்  சஞ்சரித்து கொண்டு இருந்தன அந்த ஜோடி புறாக்கள்

என்றும் சூரியனின் ஒளியை

விட பிரகாசமாய்,

ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின்

சக்தி கொண்டதாய்

மின்னும் இந்த காதல்

மேன்மையானது …

இதம் அளிப்பது.

சமுத்திரங்களையே  நிரப்பி  விடும்

அளவு கொண்டது

கப்பல்களையே புரட்டி விடும்

புயல் காற்றின்

 வேகத்தை விட   ஆற்றல்

மிக்கது இந்த காதல்

என்றாலும்

மனதிற்கு அமைதியை தருவது .

ஆச்சரியமும் ஆர்வமும்

பெருக செய்பவை

ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆனாலும்,

புரிந்து கொள்ள முடியாத புதிர்!

அறிவொளி தேடல்களை

மிஞ்சும் அற்புதம்.

காதலர்கள்   கண்களில்

தெரியும் இந்த காதல்

அகலமான, ஆழமான தெய்வீகம்!.

மென்மையான ரோஜா பூக்களின்

சாராம்சம்!

போர்க்கள வீரர்களின் சக்தி!

காதல் தேவதை வீனஸ் போல்

ஆடை நேர்த்தியானது,

ஆயிரக்கணக்கான ஆத்மாக்களால்

நிரப்பப்பட்டவை,

ஆர்வத்துடன், ஏக்கத்துடன், ஆசையுடன்.

அழகால் நிரப்பப்பட்டது

என்னில் நிரப்பப்பட்டது

உன் காதலே.

என்று என்றோ படித்த கவிதைகள் தான் அந்த நொடி ப்ரீத்திக்கு  நினைவிற்கு வந்தது.

அர்ஜுன் மனதில் எதை பற்றியோ குழப்பம், பதட்டம் இருக்கும் வரை ப்ரீத்தியால் வேறு எதை பற்றியும் நினைக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ‘அவன் முகம் வாடி போனால், தன் மனம் ஏன் அத்தனை கலங்குகிறது?’ என்று அவளுக்கு புரியவில்லை.

ஏதோ பிசினெஸ் பிரச்சனை என்று அவள் நினைத்து சமாதானம் ஆக,பிரச்சனை அவளை சுற்றி தான் அந்த கணம் பஞ்சாப் முழுதும் அறியும் வண்ணம் நெருப்பு பற்றி கொண்டு இருக்கிறது என்று ப்ரீத்தி அறியவில்லை.

அறியும் போது ?

பெருமூச்சு ஒன்று ப்ரீத்தியே அறியாமல் வெளியேற,அவள் கவனம் ராஷ்மி பரிமாறி கொண்டு இருந்ததன் மேல் திரும்பியது.

அவள் முன் வைக்க பட்டு இருந்த தட்டின் அளவே தாம்பாள தட்டினை விட பெரிதாய் இருக்க,அதில் அடுக்கி வைக்க பட்டு இருந்த ஐட்டங்கள் அவளை விழியை விரிய வைத்தது.

Big Non Veg Hind Kesari Thali In Nashik | बाहुबली, रावणनंतर आता चर्चा 'हिंदकेसरी थाळी'ची

பறப்பன,ஊர்வன,ஓடுவன,நீந்துவன  என்று எல்லா வகையான   அசைவ உணவுகளும் மலை போல் குவிந்து இருந்தது அவள் தட்டில்.

அதில் அவளை அதிகம் மிரட்டியது ஒரு கோழி அளவிற்கு பெரிதாய் இருந்த மிக பெரிய பொறித்த நண்டு, கால்களுடன் திமிங்கலத்தை போல் ‘பெப்பரப்பா’ என்று தட்டில் அமர்ந்து இருந்த விதம் தான்.

DELICIOUS CRAB PEPPER SOUP - YouTube

அடுத்த நொடி தன் நாற்காலியை வெகு வேகமாய் தள்ளியவள், சடாரென்று எழுந்து பின்புறமாய் நடக்க முயல,  அங்கு தரையில் குழந்தைகள் கொட்டி வைத்து இருந்த வெண்ணையில் கால் வழுக்கி சரிந்தாள்.

பஞ்சாபிகள் வீட்டில் எப்பொழுதும் வெண்ணை புதிதாக கடைந்து அதனுடன் குங்குமப்பூ, சக்கரை போட்டு சாப்பிடுவது என்பது வழக்கம்.

‘பிரெஷ் மக்கான்/FRESH MAKKAN” என்று அழைப்பார்கள்.

‘அந்த வெண்ணை கடையும் ஒலி பஞ்சாப் வீடுகளில் நாள் தோறும் காலை முதல் மாலை வரை கேட்டு கொண்டே இருக்குமாம். அந்த கடையும் ஒலியுடன், பெண்களின் வளையல் ஒலியும் சேர்ந்து கொள்ள அதன் ஒலிக்கு ஈடு இணை இல்லையாம்.” என்கிறது நாட்டுபுற பாடல் ஒன்று.

Pin on Punjabi life: A Glimpse

உணவு தயாரிக்க, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள, ஐ ஆம் வெண்ணை பாய் ‘அப்படியே சாப்பிடுவேன்’ என்று சக்கரை,குங்குமப்பூ போட்டு சாப்பிட,முகத்தில் மஞ்சளுடன் பூசி கொள்ள, தலைக்கு தடவி கொள்ள என்று எல்லாத்துக்கும் வெண்ணை தான் பஞ்சாபிகளுக்கு.

வெண்ணை  கடைய வைக்க பட்டு இருக்கும் பானைகளின் அளவை பார்த்தாலே நமக்கு தலை சுத்தி போக வைக்கும் அளவிற்கு அத்தனை பெரிசு.

Churning (butter) - Wikiwand

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பொருள். அவ்வளவு வெண்ணை சாப்பிடுவதால் தான் கொழுக்கு மொழுக்கென்று பஞ்சாபி குழந்தைகள் பார்த்ததும் கொஞ்ச தூண்டுகிறது.

அந்த வீட்டு  சின்சான் கூட்டம் , வாயிக்குள் மட்டும் சாப்பிட்டு இருக்காமல் , தரைக்கும் சற்று ஊட்டி விட்டு இருக்க, அவர்களின் தாய்மார்கள் அதை துடைப்பதற்குள்,  அதில் கால் வைத்து இருந்த ப்ரீத்திக்கு வழுக்கி விட்டது.

கால் வழுக்கி,  பிடிமானம் இல்லாமல் பின்னால் சாய்ந்தவளை ஏந்தி கொண்டது இரு வலிய கரங்கள்.

‘ஐயோ அம்மா! … மண்டை காலி …’ என்ற பயத்துடன் பின்புறமாய் சரிந்தவள் சென்று விழுந்தது அர்ஜுன் கைகளில், மடியில், நெஞ்சில் தான்.

இதற்கு தரையே எவ்வளவோ மேல் என்று எண்ணும் விதமாய் அங்கே 1000 வாட்ஸ் மின்சாரமே உடலில் பாய்ந்தது போல் உணர்ந்தாள் ப்ரீத்தி.

ஏறக்குறைய அவனை அணைத்த நிலை.

முழு உடலும் அவன் மடியில் இருக்க, அர்ஜுன் கைகள் அவளை தாங்கி இருந்தது.

விழும் வேகத்தில் ப்ரீத்தி அர்ஜுனை அத்தனை இறுக்கமாய் அணைத்து இருக்க, அவன் உதடுகள் அவள் கன்னத்தில் உரசி இறங்கியது.

ப்ரீத்தி பின்புறம் சரியும் போதே அவளை தாங்கி இருந்தவன்,அவள் தலை அந்த பளிங்கு டைனிங் டேபிள் மேல் மோதி விட கூடாதே என்று அவள் விழுந்த வேகத்திலேயே தன் மார்பில் இழுத்து அணைத்து இருந்தான்.

எல்லாமே உறைந்து போனது.

என்னுடனே பேசி

கொண்டு இரு  

உன் இதழ்களால்

என் இதழோடு

சூரியன் ஒளியிழந்து

போகும் வரை,

பால்வெளிகளில் நாம்

தொலைந்து போகும் வரை,

காலம் தன் ஓட்டத்தை

நிறுத்தும் வரை,

எத்தனை கனிகளை

சுவைத்து இருப்பேன்

ஆனால் இதற்கு ஈடு

எங்கு தேடுவேன்?

உன் ஒற்றை ஸ்பரிசத்தில்

வீழ்ந்த நான் இன்னும்

எழ முடியாமல் 

என்னுடனேபேசி கொண்டு இரு  –

உன் இதழ்களால் என் இதழோடு   

ப்ரீத்தி கரங்கள் அர்ஜுன் கழுத்தில் மாலையாய் படிந்து இருக்க, அவன் கரங்கள் அவள் முதுகை வருடியவாறு இடையில் இறங்கி இருக்க, அந்த அணைத்த நிலையில் ரெண்டு இதயங்களின் துடிப்பும் ஒன்றாய் மாறி இருந்தது.

அவனுக்கான ப்ரீத்தியோக வாசம் ப்ரீத்தியின் சுவாசம் உணர்ந்த நொடி அவள் உடல் அவன் கைகளில் சிலிர்த்தது.

அவள் சிலிர்ப்பை உணர்த்த அவன் கரங்கள் அவள் இடையை இறுக்கியது.

“ப்ரீத்தி! ….ப்ரீத்தி! …என்னமா! …” யாரோ எங்கோ இருந்து அழைக்கும் குரல் கேட்டும் ப்ரீத்தியால் தன்னை சட்டென்று மீட்க முடியவில்லை.

“ப்ரீத்தி!…” என்ற ராஷ்மி குரல் மிக அருகில் கேட்க    சட்டென்று தன்னை சுதாரித்தவள் அர்ஜுன் மடியை விட்டு எழுந்து நின்றாள்.

‘ஐயோ!…  இவர்கள் எல்லாம் என்ன நினைப்பார்கள்!…  நடு ஹாலில் என்ன வேலை செய்து வைத்தேன்..’  என்று ப்ரீத்தி தன்னையே சாடி கொள்ள, அவர்களுக்கு அது வித்தியாசமாய் தெரியவில்லை என்பது அவளுக்கு புரியாமல் போனது.

“எங்காவது அடி பட்டு இருக்கா பாரு ப்ரீத்தி.” என்பது தான் அவர்களின் முதல் கேள்வியாக  இருந்தது.

“கீழே வெண்ணை கொட்டி கிடக்கு … அது கொட்டிய உடன் துடைக்க வேண்டும் என்று கூடவா தெரியாது.?” என்று உறுமினான் அர்ஜுன் .

ஒரு புறம் கீழே வெண்ணை கொட்டிய அந்த பிள்ளைக்கு மனதிற்குள் நன்றி சொல்லி கொண்டு இருந்தான் அந்த கள்வன்.

அவளை தன் கரங்களில் வைத்து கொள்ள அவனுக்கு என்ன கசக்கவா போகிறது.

அந்த நொடி தன் குடும்பத்தின் அக்கறை மேல் கூட அவனுக்கு கோபம் தான் வந்தது.

இல்லை என்றால் அந்த மென்மையை, பெண்மையை,பெண்மையின் சிகரங்களை,பள்ளத்தாக்குகளில் அவன் பயணம் இன்னும் நீண்டு கொண்டே போய் இருக்கும் அல்லவா?

‘அவள் தான் என் கை அணைப்பில் இருக்கிறாள் என்று தெரிகிறது தானே! இவங்களை இப்போ யார் பதறி அடித்து ஓடி வர சொன்னது?

அவள் என்ன தரையிலா இருந்தாள் ?

என் மடியில்,என் நெஞ்சில் தானே இருந்தாள்.’ என்று அவன் மனதிற்குள் புலம்பி கொண்டு இருந்தான்.

ஒருவேளை அவளை தாங்கி பிடிக்க அங்கு தான் இல்லாமல் போய் இருந்தால், அவள் விழுந்த வேகத்திற்கு தலை பளிங்கு டேபிள் மேல் பட்டு நிச்சயம் உடைந்து இருக்கும் என்றே அவனுக்கு தோன்றியது.

அவள் விழுந்த வேகத்தில், அவனே தன் நாற்காலியோடு ஒரு அடி பின்னே நகர்ந்த விதத்திலேயே புரிந்தது அவள் எத்தனை போர்சாக விழுந்து இருக்கிறாள் என்பது.

“ஏன்மா! இப்படி கேர்லெஸ்ஸா இருக்கீங்க?.எத்தனை முறை சொல்வது குழந்தைங்க கையில் வெண்ணை திங்க கொடுத்தால்,  ஒரு கண் அவர்கள் மேல் இருக்கட்டும் என்று …

போன தடவையே வெண்ணையை,  பெரியவர் உட்காரும் நாற்காலியில் மறைத்து வைத்து … என்ன ஆனது தெரியும் தானே! ..” என்றார் ராஷ்மி .

அந்த வீட்டு வாண்டுகள் பத்தும் சரியான குரங்கினம்.

ஏதாவது ஒரு வால் தனம், குறும்பு செய்யாமல் அவர்களின் பொழுது போகாது.

இப்போ ப்ரீத்திக்கு மட்டும் ஏதாவது ஆகி இருந்தால்! … நினைவே அவர்களுக்கு பயத்தை உண்டாக்கியது.

“ஏன் பர்ஜாயீ!… அப்படி பதறி அடித்து எழுந்தீங்க …பாருங்க.  அண்ணா முகம் இன்னும் உங்களுக்கு என்ன ஆகி இருக்குமோ என்ற ஷாக்கில் இருந்து தெளியவே இல்லை.”என்றான் தீப்.

ராஷ்மி,  அர்ஜுன், ப்ரீத்தி இருவருக்கும் தண்ணீர் கொடுக்க, “வாட் ப்ரீத்தி?.”என்றார்.

“ஆண்ட்டி மீ வெஜிடேரியன் ….நான் வெஜ் சாப்பிட மாட்டேன்.”என்றாள் ப்ரீத்தி தயங்கி தயங்கி.

தீப் அதை மொழி பெயர்க்க,  அப்பொழுது தான் அவர்கள் செய்த தவறே அவர்களுக்கு புரிந்தது.

சைவ மானிடம், அசைவ நண்டினை வைத்தால் அதுவும் காட்ஜில்லா சைஸ் நண்டு ஒன்றை வைத்தால்,  குழந்தை பயந்து,பதறி நான்கு அடி தள்ளி போகும் தான்.

“சாரி.”பல குரல்கள் ஒரே சமயத்தில் அங்கு ஒலிக்க,அடுத்த நொடி அங்கு இருந்த அசைவம் எல்லாம் அப்புற படுத்தப்பட்டது.

“இட்ஸ் ஒகே …நீங்க சாப்பிடுங்க …நான் சாப்பிட மாட்டேன் தான் அதுக்குன்னு நீங்க உங்க சாப்பாட்டில் இருந்து எழுந்து கொள்ளணும் என்றெல்லாம் இல்லை.

.ஐயோ ஆண்ட்டி!…  நீங்க சாப்பிடுங்க.அதற்கு எல்லாம் எனக்கு ஒன்றும் இல்லை. ஸ்கூல்,காலேஜ் சமயத்தில் ப்ரெண்ட்ஸ் கொண்டு வந்து சாப்பிடுவாங்க.”என்றாள் ப்ரீத்தி.

“இல்லை மா …பரவாயில்லை …நாங்க பிறகு சாப்பிட்டு கொள்கிறோம்.ரொம்ப சாரிமா…கேட்க மறந்து போய்ட்டோம் .

நாளையில் இருந்து தனி பாத்திரம்,தனி ரூமில் உனக்காக சமைக்க சொல்லிடறேன்.” என்றார் ராஷ்மி.

“ஐயோ ஆண்ட்டி!… அப்படி எல்லாம் எதுவும் வேண்டாம் .என் அப்பா அம்மாவே சாப்பிடுவாங்க.தனியாய் எல்லாம் செய்ய மாட்டாங்க.

ப்ளீஸ்!…  என்னை சங்கட படுத்தாதீங்க…ப்ளீஸ்    சாப்பிடுங்க…’என்ற ப்ரீத்தி பேச்சை கேட்டு சாப்பிட அமர்ந்தவர்கள் மீண்டும் சமையல் அறைக்குள் சென்ற அசைவத்தை மட்டும் வெளியே எடுத்தே வரவில்லை.

ப்ரீத்தி மீண்டும் ஏதோ சொல்ல போவதற்குள்,அங்கு இருந்த குழந்தைகள் எகிறி குதித்து,

“மம்மா …பப்பா …..,தாத்தா, பெரியப்பா எல்லா  டிவியிலும்  தெரியறாங்க.”என்று கோரஸாக கத்தினார்கள்.

அர்ஜுன்,தீப்  எதை மறைக்க முயன்றார்களோ அதை அந்த வீட்டு வாண்டு படை மீண்டும் வெளி கொணர்ந்து விட்டது.

டிவியில் நியூஸ் சேனல் ஓடி கொண்டு இருக்க அதில் பேட்டி என்ற பெயரில் வீரேந்தரையும்,சரணையும்  மீடியா நோண்டி கொண்டு இருந்தார்கள்

.டிவி சத்தம் அதிக படுத்தப்பட ,வீட்டினர் அனைவரும் டிவி முன் குழுமி விட, அர்ஜுன் தடுப்பதற்குள்  ப்ரீத்தியும் அங்கு சென்று இருந்தாள் .

அங்கு பிளாஷ் நியூஸ் ஓடி கொண்டு இருந்தது.

சேனல் மாற்றி மாற்றி கடைசியாய் ஆங்கில  நியூஸ் சேனல் ஆன, “தல்வார் /போர் வாள்” என்ற பெயர் உள்ள சேனல்  ஓட வைத்தனர் குழந்தைகள்.

சில மணி நேரத்திற்கு முன் பதிவு செய்ய பட்டு இருந்த அந்த பேட்டி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு ஆகி கொண்டு இருந்தது.

அதாவது இந்த பேட்டி முடிந்ததும், வீரேந்தர் அர்ஜுனை அழைத்து இதை பற்றி சொல்லி இருக்கிறார். இந்த பேட்டியை ப்ரீத்தி பார்த்து விட கூடாது என்று தான் “டிவி ரிமோட்களை ” தீப் மறைத்து வைத்தது.

“டிவி ரிமோட் “என்றால் பிள்ளைகள் மத்தியில் அது மூன்றாம் உலக போர் அளவிற்கு சென்சிடிவ் விஷயம் ஆயிற்றே!.

அதுவும் அவங்க தலை சின் சான் வரும் போது ரிமோட் ஒளித்து வைக்க நினைத்தால் முடியுமா?

மறைத்து வைத்த ரிமோட் எல்லாம் எடுத்து எல்லா டிவியையும் ஆன் செய்து, எல்லா சானெலிலும் அவங்க தாத்தா பெட்டியையே வைத்தார்கள்  அந்த குழந்தைகள்.

சொர்ணகாவை நேரிடையாக கொன்றது ப்ரீத்தி இல்லை என்றாலும் அவள் பிடிபட காரணம் ப்ரீத்தி என்பது நிச்சயம்.

ப்ரீத்தியை நிலை குலைய வைக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தது நடக்க ஆரம்பித்தது.

“சார்!… உங்க கஸ்டடியில்  இருந்த ரெண்டு பேர் ஒரே நாளில் இறந்து இருக்காங்க .அதுக்கு உங்க பதில் என்ன.?” என்றான் அந்த தல்வார் நியூஸ் சேனல்லின் ரிப்போர்ட்டர்.

“அவங்க எப்படி இறந்தாங்க என்று விசாரணை நடத்திட்டு இருக்கோம். அதை பற்றி மேல பேச முடியாது.”என்றார் வீரேந்தர்.

“சார்! நேத்து ட்ரெயின் ஸ்டேஷன் நடந்தது கொள்ளையர்கள் கைவரிசை இல்லை.  அது போதை மருந்துக்கு எதிரான ஒரு, ‘ஸ்ட்ரிங் ஆபரேஷன்/string operation’ என்று கேள்வி பட்டோம். அது உண்மையா சார்.” என்றான் அவனே தொடர்ந்து.

மத்த நியூஸ் சானெல்களுக்கு இது புது செய்தியாய் இருக்க அங்கு பரப்பரப்பு தொற்றியது.

“நோ கமெண்ட்ஸ்.”என்றார் வீரேந்தர்.

“சார்! அந்த ஸ்டேஷன் பிடிபட்ட பெண் இன்று காலையில் மர்மமான முறையில் இறந்து இருக்காரே!…நேத்து அட்மிட் செய்யும் போதே அந்த பெண் தன் உயிர்க்கு போராடி கொண்டு இருந்ததாகவும், அந்த பெண்ணை பிடிக்க காரணமாய் இருந்தது இன்னொரு பெண் என்பதும் உண்மையா?” என்றான் அவனே தொடர்ந்து.

எதை மறைக்க வீரேந்தர்,சரண் முயன்றார்களோ அதை வெட்ட வெளிச்சமாக்கி கொண்டு இருந்தான் அந்த ரிப்போர்ட்டர்.

மீண்டும் அந்த கூட்டத்தில் சலசலப்பு.வீரேந்தர்,சரண் பல்லை கடித்தார்கள்.

“தவறான தகவல். அந்த பெண்ணை எங்கள் போலீஸ் டீம் தான் பிடித்தார்கள். வேறு யாரும்  இதில் ஈடு பட்டு இருக்கவில்லை.”என்றார் வீரேந்தர்.

“சார்! அப்போ அப்போ அது ஸ்ட்ரிங் ஆபரேஷன் தான் இல்லையா?”என்றனர் மீடியா வீரேந்தர் பேச்சை வைத்தே அவரை மடக்கி.

“நோ கமெண்ட்ஸ்.”

“சார்!.. இன்னைக்கு காலை இங்கே ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்த பெண் ஒருத்தருக்கு ஒரு பார்சல் வந்ததாமே அதில் கோகெய்ன்,அபின் எல்லாம் இருந்தது என்ற தகவல் வந்தது உண்மையா சார்?”

“சார்!.. மத்திய அமைச்சர் ஒருவரின் மகன் நடத்தும் ஹோட்டல் ஒன்றில் அரசு அதிகாரி இறந்து இருக்கிறார் … அதற்கும் இந்த பெண் மரணதிற்கும் கூட தொடர்பு உண்டாமே ?”

“சார்! வேலைக்காக ஊரு விட்டு ஊரு வந்து இருக்கும் ஒரு பெண் இந்த போதை மருந்து கூட்டத்தை கூண்டோடு ஒழிப்பதாய் சவால் விட்டு இருக்கிறார்ராமே …அது உண்மையா …யார் அந்த பெண்?” என்றான் அந்த தல்வார் நியூஸ் சேனல்லின் ரிப்போர்ட்டர்

‘இங்கே இருந்துடா இப்படி எல்லாம் கேள்வி எடுக்கறீங்க? … அவ இங்கேயா அப்படி எல்லாம் சபதம் எடுத்தாள்?’ என்பது தான் அர்ஜுன்,வீரேந்தர் மைண்ட் வாய்ஸ் ஆக இருந்தது.

“சார் CCTV பூட்டேஜ் வெளிவிடுவீர்களா .?”

“சார்!..  இந்த ரயில் நிலைய மரணம் இந்த அரசும்,காவல் துறையும்   சரியாய் செயல் படவில்லை என்று கூறுகிறதா?”

கேள்வி என்ற பெயரில் போலியான சில ஆதாரங்களை மட்டும் வைத்து கொண்டு அவர்களை படுத்தி எடுத்தார்கள் நிருபர்கள்.

அதுவும் அந்த தல்வார் நியூஸ் சேனல் ரிபோர்ட்டோர் இதில் சம்பந்தப்பட்டவர்களை பல்லை கடிக்க வைத்து கொண்டு இருந்தான்.

இந்த பெட்டியை பார்த்து கொண்டு இருந்த ஒருவன் தன் கையில் இருந்த கிளாஸ் ஒன்றை விசிறி அடித்து உடைக்க ,இன்னொருவன் முகத்தில் வெற்றி புன்னகை உதயமானது.

“ப்ரீத்தி செக் மேட் டார்லிங்CHECK MATE DARLING ….

உன்னை வைத்தே அந்த காபோஸ் உயிர் எடுக்கிறேன்.

நீ பொறந்தோமா ,வாழ்ந்தோமா வேளை வந்ததும் செத்தோமா என்று இருக்கும் சாதாரண பெண் இல்லை. அந்த சக்தியின் சொரூபம்.

பெண் என்பவள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு நீ உதாரணம்.

ட்ரெயின் ஸ்டேஷனில் செயல் பட்ட விதம் ,ஹாஸ்பிடலில் ஜெஸீக்காக உன் உடல் நிலையும் பொருட்படுத்தாமல் நீ வந்து நின்று அவளுக்காக பேசிய விதம்,உன் திருமணத்தை நிறுத்த நீ செய்த எல்லாத்தையும் தெரிந்து கொண்டேன்.

உன்னை வைத்து தான் இனி என் ஆட்டம் ப்ரீத்தி…

நீ தான் ரயில் நிலையத்தில் அவன் ஆட்கள் பிடிபட காரணம் என்பது தெரிய வந்தால்,  காபோஸ் உன்னை விட போவதில்லை.

உனக்கு ஏதாவது என்றால் அர்ஜுன் சும்மா இருக்க போவதில்லை….சோ எப்படி பார்த்தாலும் வெற்றி எனக்கே எனக்கே பேபி .

பெண்ணின் கடைக்கண் பார்வைக்கே உலகத்தையே மாற்றி விடும் தன்மை கொண்டவர்கள் காதலில் விழுந்து விட்ட ஆண்கள். அதுவே காதலித்த பெண்ணிற்கு ஒன்று என்றால் சும்மாவா இருப்போம்? …. கேம் ஆன் ப்ரீத்தி/GAME ON PREETHI

உன்னையும் விட போவதில்லை ஜெஸ்ஸி …அர்ஜுன்,அமன் முடிந்தால் உங்கள் காதலிகளை காப்பாற்றுங்கள்   “என்றான் விஜிலாண்டி தன் அறையில் நின்று உரக்கவே .

அந்த மனிதனின் முகத்தை அந்த நொடி யாராவது பார்த்து இருந்தால் பயத்தில் அலறி இருப்பார்கள்.

கண்கள் சிவந்து,உடல் முறுக்கேறி,முகம் கற்பாறையாக இறுகி பார்க்கவே ப்ரளயகால ருத்திரன் போல் நின்று இருந்தான் அவன்.

அவன் முன் நிறைய போட்டோக்கள் பரப்பி வைக்க பட்டு இருந்தது.அதில் பலவற்றில் X குறி போட பட்டு இருந்தது சொர்ணாக்கா உட்பட.

அதே நேரம் அர்ஜுன் வீட்டில் ,ப்ரீத்தியோ சொர்ணாக்கா மரணம் என்ற செய்தியில் உறைந்தவள் அதில் இருந்து வெளி வரவில்லை.

இந்த விஷயம் மீடியாவில் பெரிதாய் ஒளிபரப்பு ஆகிறது என்பதை கூறி ப்ரீத்தியை டிவி பக்கமே போகாத வண்ணம் பார்த்து கொள்ளுமாறு தான் வீரேந்தர் அர்ஜுனுக்கு அழைத்து சொல்லியது.

தன் தாயிடம் எப்படி இதை விளக்கி கூறி மற்றவர்களையும் டிவி பார்க்க கூடாது என்பதை எப்படி சொல்வது என்று அவன் யோசித்து கொண்டு இருக்கும் போதே தான் அவன் மூளையை முற்றிலும் செயல் இழக்க செய்யும் விதமாய் ப்ரீத்தி அவன் மேல் விழுந்தது.

அவன் அவளின் அருகாமையில் தொலைந்து போக,அந்த வீடு நண்டு சிண்டுகள் டீவியை ஆன் செய்ய,  அதில் அவர்களுடைய பெரியப்பாவும்,தாத்தா,அப்பாவும் தெரிய குழந்தைகள் ஊரையே கூட்டி விட்டார்கள்.

‘எல்லோரும் என்ன பார்க்க இத்தனை ஆவலாய் போகிறார்கள்!’ என்று பின்னால் சென்ற ப்ரீத்தி,  சொர்ணாக்கா மரணம் கேள்வி பட்டு ஷாக் அடித்தது போல நின்றாள்.

எது நடக்க கூடாது, ப்ரீத்தியை இந்த விஷயம் தெரியாதவளாய் இருட்டில் வைத்து இருக்க அவர்கள் போட்ட பிளான் எல்லாம் சொதப்பி விட்டது.

“ப்ரீத்தி! … இட்ஸ் நத்திங் …மூச்சு விடு …BREATH …”என்று அர்ஜுன் அவள் கன்னத்தை தட்ட, ராஷ்மி தண்ணீர் எடுத்து வந்து தர,  அதை அவளுக்கு முகத்தில் அடித்தும் , புகட்டியும் அவள் உறைந்து போன நிலையை மீட்டான் அர்ஜுன்.

“ஐ கில்டு ஹேர்…ஐ ஆம் ரெஸ்பான்சிபிள் பார் ஹேர் டெத் ….நான் தான் அவளை கொன்று விட்டேன்.அவள்  மரணத்திற்கு நான் தான் காரணம் ..”என்றாள் ப்ரீத்தி வேதனையுடன்.

“இல்லை நீ கொல்லவில்லை …அவள் தீயவள்.நீ காப்பாற்றிய மூன்று பெண்களை பற்றி மட்டும் நினை …நீ கொல்லவில்லை …”என்று arjunஅவள் தோளை பற்றி உலுக்க அழுகையுடன் அவன் தோளில் அடைக்கலம் ஆனாள் ப்ரீத்தி.

“நோ கிரை ….ப்ளீஸ் பேபி …நோ க்ரை …இட்ஸ் ஒகே …”என்று அவளை அணைத்த அர்ஜுன்,  அவள் காதில் சொல்லி கொண்டு இருக்க, அவன் கைகள் அவள் முதுகை வருடி விட,ஒரு தாய் குழந்தையை தாலாட்டுவது போல் நின்ற வாக்கிலே அவளை நெஞ்சில் சாய்த்து அசைந்தான் அவளை தாலாட்டும் விதமாய்.

ப்ரீத்தி துணிச்சலான பெண் தான் என்றாலும்,மீடியா அவள் தான் சொர்ணாக்கா இறக்க காரணம் என்ற ரேஞ்சுக்கு ஊர் முழுவதும் சொல்லி வைக்க அந்த அதிர்ச்சியை அவளால் தாங்க முடியவில்லை என்று தான் சொல்லணுமோ.

தீப் ஓடி சென்று டீவியை ஆப் செய்ய, அவளை அணைத்தவாக்கில் சோபாவில் அமர்ந்தான் அர்ஜுன்.

மறுபுறம் ராஷ்மி அமர, அவள் கால் அருகே தீப் அமர,மற்றவர்கள் சூழ்ந்து நிற்க, அவள் கரங்களை பிடித்து கொண்ட தீப் அர்ஜுன் பேச பேச அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்தான்.

“லுக் ப்ரீத்தி …லுக் அட் மீ …எங்க ராணி மெய் பஹ்கோ மாதிரி துணிச்சலான பெண் என்று உங்களை நினைத்து இந்த குடும்பமே பெருமை பட்டு கொண்டு இருக்கிறோம்.  …

உன்  கண்ணீருக்கு, அந்த பெண் அருகதை அற்றவள்.சின்ன பிள்ளைகளின் உடலை விற்று பிழைக்கும் ஈன பிறவி அது.

அது எல்லாம் உயிரோடு இருந்தால் தான், உலகத்திற்கு கெடுதல்…உன்னால்  அந்த சின்ன பெண்கள் மட்டும் இல்லை ,பஞ்சாபின் நிறைய குடும்பங்கள் காக்கக் பட்டு இருக்கிறது ப்ரீத்தி …

யோசித்து பார்.  நீ மட்டும் போதை மருந்து கடத்துகிறார்கள் என்று உயிரை பற்றி கூட யோசிக்காமல் தகவல் கொடுக்காமல் இருந்து இருந்தால்,  இந்நேரம் அந்த போதை வஸ்துக்கள் எத்தனை குடும்பத்தில் மரணத்தை ஏற்படுத்தி இருக்கும் இன்று என்று உனக்கு தெரியுமா ?அதை எல்லாம் நீ தடுத்து இருக்கே …

தவிர அந்த ராணுவ வீரர் உயிரையும் காத்து இருக்கே …இவங்க எல்லாம் வாழ வேண்டியவங்க ப்ரீத்தி ….

தவிர அந்த பெண்ணை எவனோ ஒருத்தன் கொன்று இருக்கான் …அதற்கு நீ எப்படி காரணம் ஆவாய் சொல்லு.”என்றான் அர்ஜுன்.

அவர்கள் மாற்றி மாற்றி அவளை சமாதானம் செய்ய ,ப்ரீத்தி தன்னை மீட்டு கொண்டாள்.

“வா மா.  அந்த கேடு கெட்டவளை நினைத்து எல்லாம் நீ உன் மனசை வருத்திக்காதே … வந்து சாப்பிடு.” என்றார் ராஷ்மி.

“இல்லை ஆண்டி என்னால் சாப்பிட முடியும் என்று தோணலை …ஜூஸ் மாதிரி ஏதாவது கொடுங்க …ரொம்ப சாரி ஆண்ட்டி …”என்ற ப்ரீத்தியின் தலையை தடவி கொடுத்த ராஷ்மி, அவளுக்கான ஜூஸ் எடுத்து வர சென்றார்.

அழுகை முழுவதும் நின்று விட்டாலும்,  அவள் முகம் தெளியாததை கண்ட அர்ஜுன்,  அவளை மீண்டும் தன் மேல் சாய்த்து கொள்ள,அவன் நெஞ்சில் சாய்ந்த ப்ரீத்திக்கு அவன் இதய துடிப்பு போதுமான அமைதியை கொடுத்தது.

ஆண்மகன் ஒருவன் மேல் கை அணைப்பில் முழுவதுமாய் சாய்ந்து இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் மிக இயல்பாய் இருந்தது அவர்கள் அமர்ந்து இருந்த நிலை.

எத்தனை பிரச்சனை வந்தாலும் எத்தனை சங்கடம் வந்தாலும் அர்ஜுன் போன்ற ஒருவர் -அது காதலனோ, அப்பாவோ, அண்ணனோ, தோழனோ, கணவனோ யாரோ ஒருத்தர், ஒவ்வொரு பெண்ணிற்கும் பின்புலத்தில் இருந்து விட்டால் போதும் என்ற உணர்வு எழுந்தது ப்ரீத்திக்கு.

அவள் அமைதியை கெடுக்க விரும்பாதவனாய் அவள் உச்சியில் தலை சாய்த்து அர்ஜுன் அமர்ந்தான்.

இவர்கள் இங்கே அமைதியை தத்து எடுத்து இருக்க,மிக வேகமாய் சென்று கொண்டு இருந்த போலீஸ் ஜீப்பினுள் வீரேந்தர்,சரண் அமைதியை தொலைத்து இருந்தார்கள்.

அவர்கள் பின் இருக்கையில் அமர்ந்து இறந்தவனின் முகம் சங்கடத்தில் இருப்பதை காட்டியது.

அவன் ஒரு ரிப்போர்ட்டர்.

பெயர் திலீப் மிட்டல்.

பஞ்சாபின் புகழ் பெற்ற பழமையான “தல்வார்” என்ற பத்திரிகையின் நிருபர், உரிமையாளர் நவஜீத்தின் மகன்.

தல்வார் என்றால் பஞ்சாபி மொழியில் “வாள்” என்று அர்த்தம்.

எழுத்து மிக கூர்மையான ஆயுதம் என்பதை,நாட்டில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்கும் வாள் என்று பொருள்.

பேட்டியில் அவர்களை அதிகம் கடுப்பு ஏற்றியது இவன் தான். அதுவும் அர்ஜுன் குடும்பத்தின் உறவினன் வேறு.

பேட்டி முடிந்த உடன் கிளம்ப முயன்ற இவன் தோளில் கை போட்டு தள்ளி கொண்டு வந்தான் சரண்.

“என்ன பாஜி!.. .கேள்வி எல்லாம் ரொம்ப ஷார்ப்பா இருக்கு …?”என்றார் வீரேந்தர் நக்கலாக.

திலீப்  வயதில் சிறியவன் தான் என்றாலும் அவனை நக்கல் அடிக்கவே, “பாஜி “என்று அழைத்து இருந்தார் வீரேந்தர் பேய் அடி ஒன்றை அவன் முதுகில் கொடுத்தவாறு.

‘யப்பப்பா! சாதாரணமாய் இவர் அடிப்பதே உலக்கை அடி மாதிரி இருக்கே! இன்னும் கோபத்தில் அடித்தால் ரெண்டு டன் வெயிட் இருக்குமோ..

ஹோச்பிடலில் மகனும் அப்பாவுமாய் சேர்ந்து என்னை சேர்க்காமல் விட மாட்டார்கள் போல் இருக்கே …சிங்கத்தை ரொம்ப அதிகமாய் சொரிந்து விட்டோமோ! ..’என்று மிகவும் தாமதமாய் யோசித்தான் மிட்டல்.

“பின்ன என்ன “தல்வார்” என்று பத்திரிகை,நியூஸ் சேனல்லுக்கு பெயர் வச்சிட்டு இத்தனை ஷார்ப் இல்லை என்றால் எப்படி?” என்றான் சரண் அதே நக்கலுடன்.

“டேய்!.. என்ன ஓவர் ரா கேள்வி எல்லாம் கேட்கிறே?….உன் குரங்குத்தன வேலை எல்லா என்னிடம் வச்சிக்கிட்டே … பிச்சுப்புடுவேன் …”என்றார் வீரேந்தர்.

“நான் ரிப்போர்ட்டர் …நியூஸ் …”என்று அவன் சின்ன பிள்ளை போல் சிணுங்கலாய் பதில் சொல்ல

“எது டா ரிப்போர்ட்டர் வேலை? எங்களுக்கு தலைவலி வர வைக்கிறதா? …பெரிய பருப்பு மாதிரி, நொண்டி நொண்டி கேள்வி கேட்டுட்டு இருக்கே!…அதான் பெரியப்பா நோ கமெண்ட்ஸ்ன்னு சொல்லிட்டே இருக்கார் இல்லை …

எத்தனை விஷயம் எங்கள் மூலம் உனக்கு உதவும் படி ஹெல்ப் செய்து இருக்கோம் எங்க வீட்டு பையன் என்று … உனக்கு நாங்க ஹெல்ப் செய்யணும், எஸ்க்க்க்ளுசிவ் உனக்கு கொடுக்கணும் .நீ மட்டும் எங்களுக்கு உதவ மாட்டியா என்ன ?”என்றான் சரண் கடுப்புடன்.

“இங்கே பாரு மிட்டல் பையா …நம்ம வீட்டு ஆளுங்க இதில் இருக்காங்க. குறிப்பாய் நம்ம வீட்டு பொண்ணு. அவங்களை காக்க தான் சிலதை வெளி உலகம் தெரியாமல் மூடி மறைக்கிறோம் புரிஞ்சுக்கோ ..”என்றார் வீரேந்தர் அவனை தாளித்தது போதும் என்று தன்மையாக .

“ஓஹ்!… இது தான் உங்க இன்டெராகேசன் முறையா? …ஒரு போலீஸ் அப்படியே எனக்காக பாசமாய் பரிந்து பேசுவது போல் பேசுவது. இன்னொருத்தர் என்னை பயமுறுத்துவது என்று,  “good cop,bad cop” விளையாட்டா?

தாயா,வீர்ஜி இதை எல்லாம் எத்தனையோ இங்கிலிஷ் படத்தில்,டிவி ஷோவ்வில் பார்த்துட்டேன்…”

அவர்களை விட நக்கலாய்  மொழிந்தவன் அடுத்து சொன்னதை கேட்டு காவலர்கள் இருவரும் திகைத்து போனார்கள்.

“நம்ம வீட்டு ஆளுனா யார் அர்ஜுன் அண்ணா வருங்கால மனைவி ப்ரீத்தி அண்ணி தானே!…” என்றான் மிட்டல் ஏதோ காலை டிபன் இது தானே என்ற தொனியில்.

ஜீப்பில் சாய்ந்து நின்று இருந்த காவலர்கள் இருவரும் அடுத்த நொடி விரைத்து நிமிர்ந்தார்கள்.

“டேய்!… உனக்கு எப்படி?”என்றான் சரண்.

“உங்க கிட்டே பேசணும் என்று நானே நினைத்துட்டு இருந்தேன் பெரியப்பா… இங்கே வேணாம் …வண்டி எடுங்க.”என்ற மிட்டல் விஷயம் மிக பெரியது என்று சொல்லாமல் சொல்ல,  அடுத்த நொடி அந்த ஜீப் அங்கு இருந்து வெளியேறியது.

வண்டி ஒட்டியவாறு அதை நினைத்து பார்த்த சரண்,வயல் வெளி ஓரமாய் வண்டியை நிறுத்த, அங்கு அவர்களை சுற்றி யாருமே இல்லை என்றதும் இறங்கி நின்று ஜீப்பில் சாய்ந்தவாறு பேச ஆரம்பித்தார்கள் அவர்கள்.

அதே சமயம்அந்த வழியாக தன் பைக்கில் சென்று கொண்டு இருந்த ரஞ்சித் இவர்களை பார்த்து விட்டு இவர்கள் அருகே தன் வண்டியை பார்க் செய்து விட்டு இறங்கி வந்தான்.

“ஹாய் ரஞ்சித்.”என்றார் வீரேந்தர்.

“ஹாய் அங்கிள் ..என்ன இந்த பக்கம்?”என்றான் தன் ஹெல்மட்டை கழற்றியவாறு.

“ஒண்ணும் இல்லை ….சார் தான், “தல்வார்”பத்திரிகை ரிப்போர்ட்டர் …ரொம்ப தலைவலி பார்ட்டி …அதான் தள்ளிட்டு வந்து கொஞ்சம் கவனிச்சிட்டு இருக்கோம் …”என்றார் வீரேந்தர்

“ஹ்ம்ம் பார்த்தேன் …சார் ரொம்ப தான் கிளறிட்டு இருக்கார் …சொல்லுங்க சார்வாளை பார்சல் செய்துடறேன் “என்றான் ரஞ்சித் புன்னகையுடன்.

“தாயா! …இது எல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்…நான் ஒரு மீடியா… என்னை அவர் பார்சல் செய்யறேன் என்று சொல்லறார்…நீங்க சிரிச்சிட்டு இருக்கீங்க…”என்றான் தீலிப் வந்த புதியவனும் காவல் துறையை சேர்ந்தவன் என்பதை புரிந்து கொண்டு.

அவன் முக அமைப்பு அவன் பஞ்சாபி இல்லையென்று சொல்லாமல் சொல்லி விட, அங்கு வேறு மாநில காவல் துறைக்கு என்ன வேலை என்று மிட்டல் முகம் யோசனையை தத்து எடுக்க, ரஞ்சித் கவர் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அறிந்த வீரேந்தர்,

“மிட்டல்!… இவர் யாருன்னு உனக்கு தெரியாதில்லை …இவர் ப்ரீத்தியின் அண்ணியின் கசின். ப்ரீத்தியை விட்டு போக வந்து இருக்கார்.ப்ரீத்தி சுற்றி பிரச்சனை என்றதும்,  எங்களுடனே நம்ம வீட்டில் தான் தங்கி இருக்கார்.”என்றார் நிலைமையை சமாளிக்க.

“ஓஹ்! …ஹலோ பாஜி! ..நைஸ் டு மீட் யு …அண்ணி மிகவும் துணிச்சலான பெண். ஆனால் அதுவே அவங்களுக்கு பிரச்சனையை எல்லா பக்கமும் இருந்து கொண்டுட்டு வருது.

அர்ஜுன் அண்ணா கூடவே இருக்கார் என்றாலும் நீங்க உடன் இருப்பதும் அவங்களுக்கு பாதுகாப்பு தான்.” என்றான் மிட்டல் ரஞ்சித் கையை குலுக்கியவாறு.

ரஞ்சித் முகத்தில் எதையும் காட்டவில்லை என்றாலும் ஒரு கணம் மிட்டல் அறியாதவாறு வீரேந்தர் மீது பார்வை செலுத்தியவன்,  மீண்டும் மிட்டல் பக்கம் கை நீட்டி,

“பிளேசர் இஸ் மைன் ப்ரோ.”என்றான்

ரஞ்சித்தின் உண்மை பதவி பற்றி வெளியே தெரியாமல் காக்க,பஞ்சாபில் முதல் அமைச்சர்,மத்திய சர்க்கார் கூட்டில் ஒரு தனி படை,போதை மருந்து கூட்டத்தை சுற்றி வளைத்து டின் கட்டி கொண்டு இருக்கிறது என்பது வெளியே தெரிய கூடாது என்பதற்காக, ரஞ்சித்தை அவர் ப்ரீத்தியின் கசின் என்று சொல்லி வைக்க,அது அர்ஜுனுக்கு அவர் வைத்த ஆப்பாக மாற போவதை பாவம் அவர் அறியவில்லை.

பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வீரேந்தர் வைக்க போக,நெருப்பே இல்லாமல் ஒருவன் பற்றி எரிய போகிறான்,.உலகில் மிக மோசமான நெருப்பான பொறாமை என்னும் தீயில் என்று அவர் அறியவில்லை.

திலீப்  அறியாதது அவன் கேட்ட “ஸ்ட்ரிங் ஆபரேஷன்” ஹெட் அங்கு வந்த புதியவன் தான் என்பதை

ரஞ்சித்தும் பார்க்க லவர் பாய் மாதிரி இருந்தானே ஒழிய,  மிக பெரிய மிஷன் எல்லாம் செய்பவன் போல் திலீப்புக்கு தோன்றவில்லையோ என்னவோ!

ஆளை பார்த்து எதையும் எடை போட கூடாது என்பதை அவன் அறியவில்லையா என்பது சந்தேகமே

“என்ன ரஞ்சித் இந்த பக்கம்.?”என்றார்.

“அதான் எல்லா ஆக்ஷனும் இங்கே நடக்குதே அதான் கிளம்பி வந்தேன்.பார்ஸலை லேப்க்கு அனுப்பிடீங்களா?”என்றான்.

“ம்ம் அனுப்பியாச்சு …அதே தான் …”என்றார் வீரேந்தர்.

“எதே தான் பெரியப்பா?.”என்றான் திலீப் வாய் முழுக்க பல்லாய்.

‘நியூஸ் மாட்டினால் சும்மா இருப்போமா? …நாங்க யாரு மீடியா இல்லை’ …என்ற பாவனையில் அவன் நிற்க,

‘நாங்க யாரு போலீஸ் இல்லை’ என்ற தோரணையில் நின்றார்கள் மற்ற மூவரும்.

அதற்கு மேல் திலீப் இருக்கும் போது பேசுவது ஆபத்து என்று புரிந்து விட,அவனை முதலில் விசாரித்து விட்டு அனுப்ப முடிவு செய்தார் வீரேந்தர்.

“சொல்லு …உனக்கு எப்படி ப்ரீத்தி இதில் இன்வோல் ஆகி இருப்பது தெரியும்?” என்றார் வீரேந்தர் உறுமலாய்.

“பெரியப்பா!…. சில வருடமாய் …இன்னும் சொல்ல போனால் ஐந்து,  ஆறு வருடமாய் நான் போடும் நியூஸ் எல்லாம் ஒருத்தன் கொடுக்கும் துப்பு அடிப்படையில் தான். நீங்க கூட பல முறை என் சோர்ஸ் என்ன என்று கேட்கும் போது எல்லாம் பதில் சொல்லாமல் நழுவேன் …” என்றான் மிட்டல்.

“ஹ்ம்ம்! …சீமா கேஸ், ரதிமோல்…டிசோஸா …பாயல் …ஹதீம்,சுக்ஹராஜ்  கேஸ்கள் எல்லாமா?”என்றார் வீரேந்தர் யோசனையுடன்.

“ஆமா போலீஸ் துறையே அடுத்து என்ன என்று முழிக்கும் போது நீ மட்டும் “நடந்தது என்ன?” என்று நியூஸ் போட்டு அலசினாய் இல்லை.”என்றார் வீரேந்தர் தன் கன்னத்தை தடவிய படி.

“ஹ்ம்ம் இன்னும் கூட …..ஆமா பெரியப்பா …அது எல்லாம் ஒருத்தன் கால் செய்து சொன்னது தான் …எந்த அளவிற்கு எல்லாம் அந்த மரணத்திற்கு எல்லாம் அவன் தான் காரணமாய் இருக்கும் அளவிற்கு …

அவனே கொன்று விட்டு, அவனே எங்களுக்கு நியூஸ் கொடுக்கிறான் என்ற சந்தேகம் எனக்கு இருந்துட்டு இருந்தது…இன்று அந்த லேடி இறந்ததும் கூட கால் செய்து அழைத்து,  ரயில்வே நிலையத்தில் நடந்ததை புட்டு புட்டு வைத்தான் …

எப்படி ப்ரீத்தி அண்ணி தகவல் கொடுத்தாங்க, COMMANDO டீம் உடன் நீங்கள் சேர்ந்து ஒரு ஸ்ட்ரிங் ஆபரேஷன் ஏற்பாடு செய்தீர்கள், எப்படி ப்ரீத்தி அண்ணி ஐடியா கொடுத்தாங்க…எப்படி ஒரு ராணுவ வீரரை காப்பதினாங்க …எப்படி அந்த லேடி செத்தாங்க என்பது வரை மட்டும் இல்லை ப்ரீத்திக்கு அவன் அனுப்பிய கிபிட் வரை சொன்னான்.”என்றான் மிட்டல்.

“என்னது அவன் அனுப்பிய கிப்ட் நம்ம ப்ரீத்திகா? …நான் அமன்ஜீத் வீட்டிற்கு வந்து இருக்கும் அந்த ஜெஸ்ஸிக்கு தான் என்று தானே நினைத்தேன்.”என்றார் வீரேந்தர்.

சரணும் “அதானே! “என்று விழிக்க,

“இல்லை அவனுக்கு ப்ரீத்தி மேல் செம மரியாதை இருக்கு.ராணி ஜிந்த் கவுர் போல் அத்தனை வீரம்,துணிவு,தெளிவான சிந்தனை என்று அப்படி புகழ்ந்து இருந்தான்.

தவிர எப்படி அவன் கொன்றதற்கு, ‘ப்ரீத்தியை அறிவாளி போல் விசாரிக்க போகிறீர்கள்’ என்று செம்ம கிண்டல் வேறு.எல்லா நியூஸ் சேனல்ளுக்கும் இந்த பெண் மரணத்தை சொன்னவன், என்னிடம் மட்டும் தான் அர்ஜுன்,ப்ரீத்தி என்ற பெயரை சொல்லி இருக்கான் பெரியப்பா.”என்றான்.

என்ன சொல்வது என்று விளங்காமல் திகைத்து நின்றார்கள் அவர்கள்.

“அது மட்டும் இல்லை மெக்ஸிகோ நாட்டில் “காபோஸ்”என்று அழைக்க பட்ட ஒருவன் எப்படி இந்தியாவில் தன் போதை மருந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறான் என்பதையும் ,அவர்கள் ஆட்களை அவன் கொன்று வருவதையும் சொன்னான்….

அது மட்டும் இல்லை அந்த காபோஸ் பஞ்சாப் அரசியலில் எப்படி எல்லாம் நுழைந்து இருக்கிறான் என்றும் விளக்கினான் …இந்த விஷயத்தை எல்லாம் நான் வெளியே சொல்லவே இல்லை பெரியப்பா.”என்றான் மிட்டல்.

“வாட் பஞ்சாப் அரசியலில் காபோஸ் நுழைந்து இருக்கிறானா?  …வாட் எப்படி ?” என்றான் ரஞ்சித் திகைப்புடன்.

அவர்கள் விசாரணையில் இது எதுவும் தெரிய வரவில்லையே என்ற குழப்பம் அவன் மனதில் எழுந்தாலும்,  வழக்கம் போல் அவன் முகம் உணர்ச்சிகளை காட்டவில்லை.

“காபோஸ்” என்ற பெயர் மெக்ஸிகோ போன்ற போதை மருந்து அதிகம் புழங்கும் நாடுகளில் உள்ள கூட்ட தலைவனுக்கு வைக்கும் பெயர்.

அங்கு அரசியலை நிர்ணயிக்கும் அளவிற்கு அந்த கூட்டம் மிக அதிக பண பலம், ஆள் பலம் உள்ளது.

எலெக்ஷன்னில் இவர்கள் பணம் எக்கச்சக்கமாய் புழங்கும்.ஹவாலா போன்றவை சர்வ சாதாரணம்.

அதே போன்ற ஒரு கட்டமைப்பு, இந்திய அரசியல் பின்னணி என்பதெல்லாம் இவர்கள் விசாரணையில் வெளிவரவே இல்லை என்று சொல்ல வேண்டும்.

“காபோஸ்”என்ற பெயரே இந்தியாவில் ஒரு கட்டுக்கதை, லெஜெண்ட்,திசை திருப்ப புனைய பட்ட கதை என்று தான் நினைத்து கொண்டு இருந்தார்கள். ஒரு தனி ராணுவமே வைத்து ஆட்சி செய்வார்கள்.grenade லாஞ்சர், ராக்கெட், புளுடோனியம் அணுகுண்டு கடத்தல்,மெஷின் கன்,கன்னி வெடி/land மைன் எல்லாம் சர்வ சாதாரணம்.

“செஸ் பீஸ் மாதிரி ஸ்ட்ராஜெடிக் பொசிஷன் /STRATEGIC POSITION எல்லாவற்றிலும் அவன் ஆட்கள் இருக்கிறார்கள் அண்ணா …இது நம்ம வீட்டில் இருந்தே தொடங்குது …”என்றான் அவன் மிடறு விழுங்கியவனாய் .

“வாஹட்! ….என்ன சொல்றே …”என்றார் வீரேந்தர் அவன் தோளை பிடித்து உலுக்கி 

“ஆமா பெரியப்பா …யார் எனக்கு தகவல் கொடுக்கிறானோ …அந்த விஜிலாண்டி காபோஸ் நெருங்கிய ஆள் ஒருவனை விசாரித்து இருக்கான் …அப்போ தான் இந்த விஷயமே வெளி வந்து இருக்கு.

அதாவது கிட்டத்தட்ட 27-30 வருடமாய் அவன் எல்லோரையும் ஆட்டி படைத்து இருக்கிறான்…. நம்ம ரேஷ்மா அத்தையை கொன்றது கூட அந்த காபோஸ் தானாம்.”என்று மிக பெரிய வெடிகுண்டு ஒன்றை வெடிக்க வைக்க பேச்சு மூச்சு விடவும் மறந்தவர்களாக உறைந்து நின்றார்கள் சரணும்,வீரேந்தரும்

ஒரு போதை மருந்து கூட்ட தலைவனுக்கும் இறந்து போன தங்கள் சகோதரி,மத்திய அமைச்சர் குருதேவ்வின் முதல் மனைவியான ரேஷ்மா மரணத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

அவர்மழை நாள் ஒன்றில் மாடி படியில் கால் வழுக்கி விழுந்து அல்லவா உயிர் இறந்தார்.

காக்கி சட்டை போட்ட நாள் முதலாய் தன் உணர்ச்சிகளை வெளி காட்டி இராத வீரேந்தர் முதல் முறையாய் உணர்ச்சி வசப்பட்டு தனக்கு மகன் முறை வரும் மிட்டல் மேல் பாய்ந்து இருந்தார்.

பயணம் தொடரும்…

error: Content is protected !!